பீஜேயின் தன்னிலை விளக்கம்

பீஜேயின் தன்னிலை விளக்கம்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தனிப்பட்ட மனிதன் செய்யும் தொழில், வியாபாரம் குறித்து யாரும் கேள்விகேட்க உரிமை இல்லை. ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் தொழில் பற்றி மக்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்று கருதும் போது விளக்கம் அளிக்கும் கடமை பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உள்ளது என்று நான் கருதுகிறேன். இதனால் எனது தொழில் விரிவாக்கம் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது உடல்நிலை பாதிப்பு அடைந்து வெளியூர் பயணங்கள் செல்ல முடியாமல் போனதால் எனது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கவும் பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் நானும் எனது பிள்ளைகளும் சேர்ந்து மூன்மார்ட் - moon mart என்ற பெயரில் 400 சதுர அடியில் மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றை மண்ணடியில் வாடகைக் கட்டடத்தில் துவக்கினோம். மக்களின் அமோக ஆதரவின் காரணமாக வாடிக்கையாளர் பெருகியதால் பக்கத்தில் உள்ள இடத்தையும் இணைத்து 700 சதுர அடியில் விரிவாக்கம் செய்தோம்.

இந்த நிறுவனத்துக்கு அதிக முதலீடு இல்லாததாலும் சிறிய கடை என்பதாலும் எந்த பித்னாவும் வரவில்லை. பித்னாவுக்கு வழியும் இல்லை.

மேலும் ரியல் எஸ்டேட் அல்லது பிற சேவை நிறுவனங்கள் நடத்தினால் ஜமாஅத்தின் பெயர் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கும். எங்கள் நிறுவனத்தில் அதற்கு இடமில்லை. வாடிக்கையாளர்கள் எங்கள் வியாபார நேர்மைக்காக மட்டுமே வாடிக்கையாளர்களாக உள்ளனர். தவ்ஹீத் சகோதார்களை விட மற்ற சகோதரர்களும், போரா ஜமாஅத்தினரும், முஸ்லிமல்லாத மக்களும் தான் அதிக அளவில் வாடிக்கையாளராக உள்ளனர். விலைகுறைவு, தரமான பொருட்கள் என்பதற்காகவே வாடிக்கையாளர்களாக உள்ளனர். எனவே ஜமாஅத் சகோதரர்களை தனது வியாபாரத்துக்கு நான் பயன்படுத்திக் கொண்டேன் என்று யாரும் கூற முடியவில்லை.

மண்ணடி பகுதியில் அதிக வாடிக்கையாளர்கள் குவியும் ஒரே நிறுவனமாக மூன் மார்ட் வளர்ந்துள்ளதால் எல்லா நேரமும் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்களுக்கு ஏற்படும் வசதிக் குறைவைக் கவனத்தில் கொண்டு கடையை விரிவாக்கம் செய்ய நாங்கள் முயற்சித்து வந்தோம்.

அந்த முயற்சியின் விளைவாக டிசம்பர் முதல் தேதியில் இருந்து பிராட்வே சாலையில் 2400 சதுர அடிபரப்பளவு கொண்ட வாடகைக் கட்டடத்துக்கு  moon mart மூன் மார்டை மாற்றுகிறோம்.

அதுபோல் 3500 சதுர அடியில் அமைந்த மற்றொரு வாடகைக் கட்டடத்தில் இன்னொரு  நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் துவக்கவுள்ளோம்.

இப்போது பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பெரிய அளவில் தொழில் செய்வதற்கு என்னிடம் பொருளாதார வசதி இல்லை என்பது பல சகோதரர்களுக்குத் தெரியும்.

நான் எனது அறிமுகத்தைப் பயன்படுத்தி ஜமாஅத் சகோதரர்களிடத்தில் கடன் வாங்கி இருப்பேனோ அல்லது பங்குதாரர்களைச் சேர்த்து தொழிலை விரிவாக்கி இருப்பேனோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

எனது தொழில் விரிவாக்கத்துக்காக நான் ஜமாஅத் சகோதார்களிடமோ மற்றவர்களிடமோ எந்தக் கடனும் வாங்கவில்லை. யாரையும் பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. கடன் வாங்குவதையும் பங்கு சேர்வதையும் நான் தவிர்ப்பதுடன் அதையே ஆலோசனையாக மற்றவர்களுக்கும் கூறிவருகிறேன். எனவே இந்த ஜமாஅத்தின் அறிமுகத்தை எனது தொழில் வளர்ச்சிக்கு நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியானால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதியை முறைகேடாக நான் பயன்படுத்தி இருக்கலாமோ? அல்லது ஜமாஅத் நிதியில் கடன் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வரலாம். ஜமாஅத்தின் நிர்வாக நடைமுறையை அறிந்தவர்கள் இப்படி நினைக்க மாட்டார்கள். ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைவர் அல்லது பொதுச் செலாளர் நிதியைக் கையாள முடியாது. நிர்வாகக் குழுவின் ஆலோசனைப் படி பொருளாளர் தான் கையாள முடியும்.

நிர்வாகச் செலவுகளுக்குக் கூட 5000 ரூபாய்தான் தலைவர், பொதுச் செயலாளர் செலவிட முடியும். 25 ஆயிரம் வரை செலவிடுவது என்றால் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் ஆலோசித்துத் தான் செலவிட முடியும். அதற்கு மேல் செலவிடுவது என்றால் நிர்வாக குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்ற பின்பே செலவிட முடியும்.

இப்படிப்பட்ட நிர்வாகம் உள்ள ஜமாஅத்தில் நானோ மற்ற எந்த நிர்வாகியோ கடனாகக் கூட பணத்தை எடுக்க முடியாது.

எனது தொழில் விரிவாக்கத்துக்கு எந்த தனிநபரின் உதவியையும் நான் நாடவில்லை. எந்தச் செலவந்தரிடமும் கடனும் பெறவில்லை. பார்ட்னராகவும் சேர்க்கவில்லை. ஜமாஅத்தில் இருந்து கடனாகவும் பெறவில்லை.

யாருக்கும் தெரியாமல் ஜமாஅத் பணத்தை எடுத்துக் கொள்ளவும் இல்லை. எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஜமாஅத்தின் பணம் என் கட்டுப்பாட்டிலோ கைவசத்திலோ இல்லை. ஜமாஅத் பணத்தை அமானிதமாக சில நேரம் என்னிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது வாங்கிக் கொள்வார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றை எனது சொந்த ஊருக்கு அருகில் வாங்கிப் போட்டு இருந்தேன். தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலை போடப்பட்டு சாலையில் அந்த இடம் வருவதால் அந்த இடத்தின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து அல்லாஹ் பரக்கத் செய்துள்ளான்..

இஸ்மாயீல் சலபி என்பவர் எனது சொத்து குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார் அதற்கு மிக விரிவாக நான் பதில் அளித்தேன். அந்தப் பதிலில் அந்த இடத்தைப் பற்றி முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன். அந்த ஆக்கத்தை வாசிக்க http://onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/  என்ற இணைப்பைப் பார்க்கவும்.

எனது ஒரே சொத்தான அந்த நிலத்தை உடனடியாக விற்று கடையை விரிவாக்கம் செய்ய அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.

15 நாட்களுக்கு முன்னர் அந்தச் சொத்தை தொண்டி தவ்ஹீத் சகோதரர்கள் வழியாக விற்றேன். தொண்டியில் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம்.

அந்தப் பணத்தையும் தற்போது நடத்திவரும் மூன் மார்ட் நிறுவனத்தின் சரக்குகளையும் சேர்த்துத் தான் தற்போது எனது நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளேன்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இயக்கத்தை தமது ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சந்தேகப்படும் வகையில் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை தருகிறேன்.

November 24, 2013, 11:24 AM

துஆ மட்டும் போதும்

 துஆ மட்டும் போதும்

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்கு கேன்ஸர் நோய் தாக்கியுள்ளது என்பதை நான் கொள்கைச் சகோதரர்களுக்கு தெரிவித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் கேன்சர் பாதித்த பகுதிகளில் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வெட்டி எடுப்பது மட்டுமே ஒரே வழி என்றும் ஆங்கில மருத்துவர்கள் ஒருமனதாகக் கூறினார்கள்.

என் மீது அன்பு வைத்திருந்த கொள்கைச் சகோதாரர்கள் மட்டுமின்றி கொள்கையில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட முறையில் என்மீது மதிப்பு வைத்திருந்த சகோதரர்களும் ஆங்கில மருத்துவம் தான் சரியானது எனவும் வலியுறுத்தினார்கள். அமெரிக்கா போகலாம். லண்டன் போகலாம். சிங்கப்பூர் போகலாம் எல்லா செலவுகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பல சகோதரர்கள் முன்வந்தனர். ஏழை எளிய மக்கள் கூட எனது நிலத்தை விற்றுத் தருகிறேன்; நகையை அனுப்புகிறேன் என்றெல்லாம் எனக்கு உறுதுணையாக நின்றார்கள்.

என் உறவினர்களில் எவ்வளவு செய்வதற்கு தகுதிபடைத்தவர்கள் உள்ளனர். மனமகிழ்வோடு செலவு செய்ய அவர்கள் தாயாராக இருந்தனர்.

அவர்களின் அன்பு என்னை நெகிழ வைத்தது என்றாலும் அந்த உதவிகளை நான் கன்னியமான முறையில் மறுத்து விட்டேன். எனது மருத்துவ வகைக்காக பணமாகவோ பொருளாகவோ எந்த உதவியும் யாரிடமும் நான் பெறவில்லை. அதை நான் விரும்பவில்லை.

அறுவை சிகிச்சை செய்வதற்கு நான் உடன்படாததற்கு இரணடு காரணங்கள் இருந்தன.

எனது குடும்பத்தில் சிலருக்கு கேன்சர் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் அதிகமாகப் பரவி அவர்கள் மரணித்ததைக் கண்டதால் ஏற்பட்ட மனக்குழப்பம் ஒரு காரணம்.

அறுவை சிகிச்சை என்றால் அதைப் பலரும் அறியும் நிலை ஏற்பட்டு எனக்கு உதவ முன்வருவார்கள்., என்னைக் கேட்காமலே எனக்கு உதவுவார்கள். அடிக்கடி நோய் விசாரிப்பார்கள். மருத்துவமனையில் அத்கிமானோர் குழுமி நோயையும் ஒரு பந்தாவாகக் காட்டும் நிலை ஏற்படும் என்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதும் கூடுதல் காரணம்.

எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போம் என்று மாற்று மருத்துவ முறைகளைப் பல மாதங்கள் கடைப்பிடித்து வந்தேன்.

ஆனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதுடன் கேன்சர்கட்டியின் அளவு தாறுமாறாக அதிகரித்தும் வந்தது. விசாரிப்பவர்களிடம் நன்றாக உள்ளது என்று சொல்லி அவர்கள் எனக்காக கவலைப்படுவதைத் தவிர்த்து வ்ந்தேன்.

ஆனால் அதன் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உண்ர்ந்த போது எனக்கு ஏற்பட்டுள்ள வகை கேன்சருக்கு மாற்று மருத்துவம் இல்லை என்று எனக்கு தாமதமாகத் தோன்றியது.

எனவே அறுவை சிகிச்சை செய்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால் இதை ஒருவருக்கும் சொல்லாமல் செய்தால் தான் மேலே சொன்ன விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்று கருதி என் மனைவி என் கடைசி மைத்துனன் தவிர யாருக்கும் சொல்லாமல் பிரபலமில்லாத ஒரு மருத்துவமனையில பிரபலமான டாக்டர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்காக அட்மிட் ஆனேன்.

ராஜபாளயம் நிகழ்ச்சியை நேற்று முடித்து விட்டு புறப்பட்டு இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஆப்ரேஷன் செய்து கொண்டேன்.

காலை 11.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை நான்கு மணி நேரம் ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. அல்ஹ்மது லில்லாஹ்.

மாநில நிர்வாகிகளுக்கோ, உறவினர்களுக்கோ, வேறு நண்பர்களுக்கோ இதை நான் தெரிவிக்கவில்லை. என்னைப் பார்க்க வருவதற்காக அவர்கள் செலவு செய்து வருவதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை நான் அறிவேன் மேலும் மருத்துவ மனையில் கூட்டமாக குழுமி அது ஒரு செய்தியாகவும் பரபரப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதாலும். ஒருவருக்கும் சொல்லவில்லை

ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் தான் மாநில நிர்வாகிகளுக்கும் உறவினர்களுக்கும் நல்லபடியாக சிகிச்சை முடிந்ததைத் தெரிவித்தேன்.

துன்பம் நேரும் போது மற்றவர்களின் ஆறுதலை அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இயல்பாகவே எனக்கு துன்பங்கள் நேரும் போது யாரும் அனுதாபம் காட்டினால் அது குறித்து அக்கறை காட்டினால் அது எனக்கு ஆறுதலைத் தருவதற்கு பதிலாக சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தி விடும். இதன் காரணமாகவே நான் இது போன்ற விசாரணைகளை விரும்புவதில்லை.

எது நடந்தாலும் நானே இலேசாக எடுத்துக் கொள்ளும் போது ஆளாளுக்கு ஏன் பயம் காட்டுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. எனவே தான் நான் ஒருவருக்கும் சொல்லாமல் என் சொந்தச் செலவில் யாருடைய உதவியையும் தயவையும் நாடாமல் நானே அல்லாஹ்வின் அருளால் என் பிரச்சனைக்கு என்னால் இயன்ற தீர்வைக் கண்டுள்ளேன்.

ஆப்ரேஷன் முடிந்து நான் மனஉறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இதனால் தான்  நானே உட்கார்ந்து இதை கம்போஸ் செய்து நானே இணைய தளத்தில் ஏற்ற முடிந்தது.

இதை நான் அனைவருக்கும் தெரிவிக்கக் காரணம் மாநில நிர்வாகிகளிடமும் என் குடும்பத்தாரிடமும் ஏன் ஒருவருக்கும் சொல்லவில்லை என்று யாரும் கேட்டு அவர்களைத் தவறாக நினைத்து விடக் கூடாது என்பது தான். அவர்களுக்கே நான் சொல்லாத போது அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

ஆங்கில மருத்துவர்கள் இதன் மூலம் பூரண குணமடைய 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மனிதர்கள் தான்.

அவர்கள் கூறுவது போல் குணமடைய உங்கள் அனைவரின் துஆ மட்டும் போதும். நான் வேண்டுவது உங்கள் துஆவை மட்டும் தான்

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

May 13, 2013, 11:49 PM

யாரையும் அழைக்கவில்லை

யாரையும் அழைக்கவில்லை

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மே மாதம் வசதியான ஒரு நாளில் எனது இரண்டாவது மகனுக்கு இன்ஷா அல்லாஹ் திருமணம் நடக்கவுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது முதல் மகனுக்கும் எனது மகளுக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் குறித்து பின்னர் கேள்விப்பட்ட நண்பர்களும் எனக்கு அறிமுகமானவர்களும் தங்களை மட்டும் அழைக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.

நான் ஒருவருக்கும் சொல்லவும் இல்லை. அழைக்கவும் இல்லை. மாநில நிர்வாகிகள் கூட வர வேண்டாம்; துஆச் செய்தால் போதும் எனக் கூறியதை அவர்களுக்கு விளக்க வேண்டியதாகி விட்டது.  

மற்ற அனைவருக்கும் சொல்லி விட்டு எனக்கு மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டனர்.

வழக்கம் போல் பித்னா கூட்டம் பீஜே மகன் திருமணம் படுஆடம்பரமாக ஊரை அழைத்து விருந்து போட்டு நடந்தது என்று பரப்பி விட்டார்கள். இதை நான் எதிர்பார்த்ததால் ஆதாரத்துக்காக திருமணத்தை வீடியோவில் பதிவு செய்து வைத்திருந்தேன். பல மாதங்களுக்குப் பின் அதை வெளியிட்ட பின்னர் வாயடைத்துப் போனார்கள்.

அந்த வீடியோ இதுதான்

http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/pj_illa_thirmnam/

அது போன்ற நிலையைத் தவிர்க்கவே இந்த மடல்.

எனது இரண்டாவது மகனின் திருமணம் தொண்டி தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

பத்திரிகை மூலமோ ஊர் ஊராக பயணம் செய்தோ நான் யாரையும் அழைக்கவில்லை. இரத்த சம்மந்தமான உறவுகளுக்கு மட்டும் தொலைபேசி மூலம் தெரிவிக்கவுள்ளேன்.

மிகமிக எளிமையாகவும், குறைந்த செலவிலும் பந்தா பகட்டு எதுவும் இல்லாமலும் இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

எனது மகனுக்காக துஆச் செய்தால் போதும். யாரும் வரவேண்டியதில்லை என்று அறிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

April 30, 2013, 5:23 PM

பி.ஜே மற்றும் அல்தாபிஃபி ரகசியமாக சு�

பி.ஜே மற்றும் அல்தாபிஃபி , தம்மாம் , ஜித்தாஹ்  , ஹைதராபாத் ஆகிய இடங்களில் ரகசியமாக சுற்றி திரிந்தார்களா ? 22-2-2013 வெள்ளிமேடை


Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

February 22, 2013, 2:01 PM

பீ.ஜேஅவர்களின்நூல்களுக்குத் தடையா

பீ.ஜே.நூல்களுக்குத் தடையா

 

சவூதி அரேபியாவிலும் இன்னபிற அரபு நாடுகளிலும

பீஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கத்துக்கு தடை!

பீ.ஜே.யின் நூல்களுக்கும் தடை!

சவூதி அரேபியாவில் பீ.ஜே. நுழையத் தடை!

சவூதி உலமாக்கள் விவாதத்துக்கு அழைத்த போது பீ.ஜே பின் வாங்கி விட்டார்!

என்றெல்லாம் சில மதனிகளும் பணத்துக்காகவே தவ்ஹீதைச் சொல்லும் போலி உலமாக்களும் மக்கள் மத்தியில் திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படிக்க September 30, 2009, 12:52 PM

யார் அமெரிக்க கைக்கூலி

யார் அமெரிக்க கைக்கூலி  ASSALAAMU ALLAIKUM. ANNAN PJ AVARGALE, "NEEGAL C.I.A. AND RAW AMAIPAI SERTHAVAR ATHANAAL THAN NEENGAL MUSLIMGAL MATHIYIL OREE PRACINAIYAI UNDU PANOOGIREERGAL. MELUM OTRUMAI ENBATHU PARLU ATAHI MUSLIMGAL MATHIYIL SAAGADIKKUM PJ UNMAYIL AMERICA ULAVUTHURAIYAI SERTHAVAR ENBATHIL SANTHEGAME ILLAI" ENDRU YOOSUF AL QARLAAWIYIN PAKTHARGAL UNGAL MEETHU SETRAI POOSA MUYATCHI SEIGIRAARGAL INSHA ALLAH ETHIR KAALATHIL IHWAAN AND YOOSUF AL QARLAAWIYIN MAARKA MURANGALAIYUM WEBSITEYIL PATIYAL PODAVUM.UNGAL UDAMBAI PAARTHU KOLUNGAL, ALLAH UNGALUKKU ARULPURIVAANAAGA WASSALAM KM இந்தியாவில் அமெரிக்காவை முதல் எதிரியாகக் கருதி அமெரிக்காவுக்கு

தொடர்ந்து படிக்க September 28, 2009, 2:43 PM

சீடி மூலம் லாபம் சம்பாதித்தீர்களா

 அஸ்ஸலாமு அல்லைக்கும், அண்ணன் பி ஜெ அவர்களே பாக்கர ரூபா 50 விற்றது தவறு என்று கூறுகிறீர்கள் அனால் அவர் விற்று உங்கள் மகன் முஹம்மதுக்கு தான் 10 கொடுத்தார் என்று சி டி இல கூருகிராரு உன்மையா???? WASSALAM KM vaalaikumusalam முஹம்மத் மிடியா தொடர்பான தொழில் செய்கிறார். சீடி காப்பி செய்ய ஐந்து ரூபாய் கட்டணம். (இடவாடகை, ஊழியர் சம்பளம், மின் கட்டணம், கம்யூடர் தேய்மானம் இவற்றைக் கருத்தில் கொண்டால் இதற்குக் குறைவாக செய்ய முடியாது.) வேறு இடத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு பலமுறை கூறியும் அவர் தான் மறுத்தார். ஐந்து ரூபாய் பதிவுக்கட்டணம் சிடி விலை எட்டு ரூபாய். 13 ரூபாய் அடக்கத்துக்கு ஐமபது ரூபாய் பின்னர் 35 ரூபாய் அதிகம் இல்லையா? இல்லை. ஏனெனில் எந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினாலும் கேமரா பேட்டா உள்ளிட்ட அனைத்தையும் அவர்களிடமே வாங்கி விடுவார். அந்தச் செலவும் இல்லை. இப்படி இருக்க 50 ரூபாய்க்கு சிடி விற்றது நியாயமில்லை என்பதற்கு இது பதிலாகுமா?.

September 28, 2009, 12:29 PM

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை பீஜே பிரித்த

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றாக இருந்தது. அதை பீஜே வந்து பிரித்து விட்டார் என்று இஸ்மாயீல் ஸலஃபி எழுதி இருந்தார். இலங்கை தவ்ஹீத் இயக்கங்கள் பற்றிய முழு விபரம் என்னிடம் இல்லாததால் நான் அதற்கு பதில் எழுதவில்லை. நான் இலங்கை செல்வதற்கு முன் அவர்கள் எத்தனை பிரிவுகளாக இருந்தனர் என்பதை இலங்கை முர்ஷித் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அதை நன்றியுடன் இங்கே வெளியிடுகிறோம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இலங்கையில் தவ்ஹீத் அமைப்புகளின் பிரிவினைக்கு யார் காரணம்?

தொடர்ந்து படிக்க January 4, 2010, 12:14 AM

பீஜே அவர்களின் தாயார் மரணித்த போது

 அஸ்ஸலாமு அல்லைக்கும், பி. ஜே. அவர்களே இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள ஒரு வியாபாரி கூறினார் 01. எல்லோரின் ஜனாஸாவை விரையில் எடுக்க சொல்லும் பி.ஜே, அவரின் உம்மாவின் ஜனாஸாவை மட்டும் ஒன்றரை நாட்கள் வைத்தது சரியா விளக்கம் தரவும். 02. மேலும் சுனாமி பணத்தையும் நீங்கள் சுருட்டியதாக உங்கள் மீது அபாண்டமாக பலி போடுகிறார்களே இவர் போன்றவர்களுக்கு விரிவான பதில் தரவும்

WASSALAM

இறந்தவரின் ஜனாஸாவை உடனே எடுக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. அதனால் நானும் அவ்வாறு சொல்லவில்லை. ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூல் இனைய தளத்தில் உள்ளது. பார்த்துக் கொள்ளவும். சுனாமி விஷயமாகவோ வேறு எந்தப் பண மோசடி சம்மந்தமாகவோ என் மீது எவரும் எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியாது. அவ்வாறு உங்களிடம் கூறியவருக்கு முதுகெலும்பு இருந்தால் என் முன்னிலையில் கூறட்டும். அல்லது அதற்கான ஆதாரத்தை எழுதி அனுப்பட்டும். நானே இந்த இணைய தளத்தில் வெளியிடுகிறேன். சுனாமி கணக்கை முழுமையாக உணர்வில் வெளியிட்டுள்ளோம்.

September 28, 2009, 12:15 PM

பீஜேயா பீஇசட்டா

பீஜேயா பீஇசட்டா மதிப்பிற்குரிய அண்ணன் பி ஜைனுல்லாபிதீன் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வ. ப.) உங்கள் பெயர் என்ன? ஜைனுல் (அதாவது ஜீமா? ஜேயா?)

தொடர்ந்து படிக்க September 28, 2009, 11:43 AM

பீஜே அவர்களின் மகன் விஷயமாக‌

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) அண்ணன் பி.ஜே அவர்களுக்கு, தங்கள் மகன் முஹம்மது ஒரு மாற்று மத பல் டாக்டர் பெண்ணை காதலித்ததாகவும், அதற்கு அந்த பெண்ணை நீங்கள் த.த.ஜ. வின் செல்வாக்கை வைத்து மிரட்டினீர்களாம்.

தொடர்ந்து படிக்க September 28, 2009, 11:41 AM

திருவிதாங்கோடு பள்ளிக்கு

திருவிதாங்கோடு பள்ளிக்கு திருவிதாங்கோடு குத்பிய்யத் ஓதும் பள்ளிவாசலுக்கு கமாலுத்தீன் மதனி சவூதியில் பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பீஜே அவதூறாகக் கூறிவிட்டார் என்பது உண்மையா

தொடர்ந்து படிக்க September 28, 2009, 11:40 AM

ஜெயலலிதாவை பீஜே சந்திக்கிறாரா?

ஜெயலலிதாவை பீஜே சந்திக்கிறாரா? சில ஊடகங்களில் மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்க பீஜே ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து சில சகோதரர்கள் என்னை தொடர்பு கொண்டு விபரம் கேட்டு வருகின்றனர். இது எவ்வித அடிப்படையும் இல்லாத கற்பனையாகும்.

தொடர்ந்து படிக்க June 24, 2010, 7:21 AM

உங்கள் ஆக்கங்களை பயன்ப்டுத்துவது தவ

உங்கள் ஆக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமா பெருமை அடிக்கும் நோக்கம் அல்லது புகழுக்காக இல்லாமல் உங்கள் ஆக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாமா? மேலும் இஸ்லாமிய பார்வையில் அறிவு என்பது இறைவனின் உடமை. தான் நாடுவோருக்கு அதை வழங்குகிரான்.அதை நீங்களும் உங்கள் ஆக்கம் என்று பெருமைப்படுவது thavaruthaaneஉங்கள் மூலமாக இறைவன் மக்களுக்கு வழங்கும் அறிவை தங்குதடை இன்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதுதானே முறை.?

தொடர்ந்து படிக்க March 5, 2010, 7:42 AM

பீஜே அவர்கள் பள்ளிக்கு போவதில்லை

பீஜே பள்ளிக்கு போவதில்லை நீங்க வீட்டில் இருக்கும் போது பாங்கு சொல்லியும் ஐந்து வேலை தொழுகைக்கு செல்வது கிடையாது. மார்க்க பிரச்சாரம் செய்ய கூடிய நீங்கள்

தொடர்ந்து படிக்க September 28, 2009, 11:46 AM

பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்

பெரியார் அப்துல்லாஹ்வுக்கு மடல்

பெரியார் அப்துல்லாஹ்வை விமர்சிக்கலாமா? தனியாக சுட்டிக் காட்டலாமே என்றும் சிலர் இப்போது வாதிடுகின்றனர். ஆனால் பகிரங்கமாக ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் என்னைப் பொய்யனாக்கும் வகையில் கருத்துக் கூறுகிறார். என்னிடம் பேட்டி அளித்து விட்டு அதை எழுத்து மூலமாகவும் ஒப்புக் கொண்டு விட்டு மறுக்கிறார். இதன் பின்னரும் நான் மவுனமாக இருந்தால் நான் அவர் அளிக்காத பேட்டியை கற்பனையாக வெளியிட்டதாக ஆகிவிடும் என்றால் நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் யார் மீது வேண்டுமானாலும் பொய்யை கூற அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். அவர் பகிரங்கமாக என்னைப் பொய்யன் என்று கூறி இருக்கும் போது நான் பொய்யன் இல்லை என்பதையும் அவர் தான் பொய்யர் என்பதையும் நானும் பகிரங்கமாகத் தான் கூற வேண்டும். இதைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க June 16, 2010, 11:02 AM

பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பண�

 பள்ளிவாசல் கட்டுவதாகக் கூறி பீஜே பணமோசடி செய்தாரா?

இலங்கையில் வெளிநாட்டு உதவி பெறும் நிறுவனமான ஷபாப் இயக்கத்திடம் தமிழ்நாட்டில் ஒரு பள்ளி வாசல் கட்டப்போவதாக பீஜே நான்கு லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சென்று பள்ளி கட்டாமல் மோசடி செய்து விட்டார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நான் எந்தக் காலத்திலும் பள்ளிவாசல் கட்டுவதற்காக யாரிடமும் எந்த நிதியும் பெற்றதில்லை என்று கூறிய பிறகும் அதே அவதூறை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

இது குறித்து இலங்கையில் யார் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்களோ அவரிடமே கேட்டால் அதன் உண்மை நிலை தெரிந்து விடும். ஆனாலும் அதைச் செய்யாமல் தொடர்ந்து இதையே பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதற்காக பணம் வாங்கி விட்டு மோசடி செய்தவர் ஹாமித் பக்ரி தானே தவிர நான் அல்ல.

இது குறித்து இலங்கை மவ்லவி ரஸ்மின் அவர்கள் பணம் கொடுத்ததாக கூறப்படும் ஷபாப் இயக்கத்தின் தலைவர் ரஷீத் மவலவி அவர்களிடம் விளக்கம் கேட்ட போது ஷபாப் இயக்கத்தின் அவர் அளித்த் பதிலை இங்கே வெளியிடுகிறோம்.

அந்த உரையாடல்

May 27, 2010, 5:09 AM

நீங்கள் மட்டும் தொப்பி அணியலாமா

நீங்கள் மட்டும் தொப்பி அணியலாமா

தொப்பி அணிய ரசூல்(ஸல்) சொன்னதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸ் கூட இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டதைப் பார்த்தேன். ஆனால் தாங்களே தொப்பி அணிந்து இருக்கிறீர்கள். இது எதற்கு? முஸ்லிம் என்று தெரியத் தானே? அப்போ தொப்பி உங்களுக்கு ஒரு மறைமுக கண்ணியத்தை அளிக்கிறது. இதை பற்றி தங்கள் கருத்து என்ன?

 

தொடர்ந்து படிக்க February 20, 2011, 10:16 PM

34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்

34 வது புத்தகக் கண்காட்சி ஓர் விளக்கம்

34 வது புத்தக கண்காட்சியில் மூன் பப்ளிகேசன் பெயரில் ஸ்டால் போட்டு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஏன் போடவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கேள்விகள் எழுப்புவது நல்லது தான். ஆனால் இந்தக் கேள்வி சென்ற வருடமும் எழுப்பப்பட்டு அதற்கு தக்க பதில் சொல்லப்பட்டது. ஏனெனில் சென்ற வருடமும் மூன் பப்ளிகேசன் சார்பில் தான் ஸ்டால் போடப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போடப்படவில்லை.

தொடர்ந்து படிக்க January 15, 2011, 1:25 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top