முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-3
முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-3
முக்கிய குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழு ஓய்வில் இருப்பதால் கள்ளப் பேர்வழிக்குரிய பதிலை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். அவர் கூறும் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு நான் எழுதியதை பீஜேயிடம் வாசித்துக் காட்டி விட்டு அவர் சார்பில் வெளியிடுகிறேன். –சையதுஇப்ராஹீம். டி.என்.டி.ஜே.மாநிலச் செயலாளர்
மடமை ஒன்பதும் அதற்கான மறுப்பும்
மேற்படி குழுமமும், அபூசுமய்யாவும் கள்ளப்பேர்வழிகள் தான் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக ஒரு உதாரணத்தை பீஜே குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு மறுப்பு எழுதப் புகுந்த கள்ளப் பேர்வழி தனது கள்ளத் தனத்தை தானே வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் உளறிவிட்டு அல்லாஹு அக்பர் அல்ஹம்து லில்லாஹ் என்று போட்டு தனக்குத் தானே பெருமைப்பட்டுள்ளார். எதிரியின் வாதத்தை முறியடிக்கும் வகையில் அற்புதமான வாதத்தை எடுத்து வைத்த பின் இவ்வாறு கூறினால் அதில் அர்த்தம் இருக்கிறது. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உளறிவிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி பெருமைப்படுவது வெட்கக் கேடானது.
பீஜே ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லாமல் உங்கள் இன்பாக்ஸில் இந்தச் செய்தி உள்ளதா என்று செக் பண்ணிக்கொள்ளுமாறு கள்ளப் பேர்வழி கூற ஆளாளுக்கு எங்கள் இன்பாக்ஸில் உள்ளது என்று எடுத்துக் காட்ட ஒரே கோமாளிக் கூத்தாடியுள்ளனர்.
பீஜே கேட்ட கேள்விக்கும் இன்பாக்ஸில் தேடுவத்ற்கும் என்ன சம்மந்தம் என்று கூட இன்பாக்ஸ் ஏமாளிகள் யோசிக்கவில்லை.
முதலில் பீஜே என்ன கேட்டார் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
அபூ உமய்யா பீஜேக்கு அனுப்பியதை வெளியிட்டு விட்டு இதில் இருந்து நான் கேட்கும் கேள்வி இது தான் என்று குறிப்பிட்டார்.
பீஜே கேட்ட கேள்விக்கு ஆதாரமாக அபூ உமய்யாவின் மடலை ஆதாரமாகக் காட்டவில்லை. மாறாக அபூ உமய்யா கேட்ட கேள்விக்கு கள்ளப் பேர்வழி அளித்த பதிலைத் தான் பீஜே ஆதாரமாகக் காட்டியுள்ளார். அந்தப் பதிலும் அனைத்து இன்பாக்ஸிலும் உள்ளது.
அ- அபூ உமய்யா குழுமத்துக்கு ஒரு ம்டல் அனுப்புகிறார்.
ஆ- உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று அபூஉமய்யாவுக்கு குழுமத்தில் இருந்து பதில் வருகிறது.
இ- மட்டுறுத்திய அந்த் மடல் கள்ளப் பேர்வழியின் பதிலோடு வெளியிடப்படுகிறது.
ஈ- குழுமத்துக்கு நான் அனுப்பிய மடலை மட்டுறுத்திவிட்டு அபூ சுமய்யாவின் பதிலோடு எப்படி வெளியிடப்பட்டது என்று அபூ உமய்யா கேட்கிறார்.
உ- இதற்கு கள்ளப் பேர்வழி சொன்ன பதிலில் தான் கள்ளப் பேர்வழியின் சாயம் வெளுக்கிறது. அதைத் தான் பீஜே ஆதாரமாகக் காட்டி கேள்வி எழுப்பினார்.
கள்ளப் பேர்வழி அளித்த பதிலை கீழே தந்துள்ளேன்.
கள்ளப்பேர்வழியின் பதில்
அஸு to tamilmuslimbro.
show details Jan 16
குழுமத்தில்மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? எனக்கு உங்கள் மடல் வராமல்நான் எப்படி உங்களுக்குப் பதில் அளித்திருப்பேன்? நீங்கள் எனக்கும் சிசிபோட்டு அனுப்பியிருப்பீர்கள்என நினைக்கிறேன்.
குழுமத்தின்விதிமுறைக்கு எதிரானதாக உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டதன் விளக்கம், நீங்கள் குழும மாடரேட்டர்களிடம் தான் கேட்க வேண்டும். அநியாயமாக உங்கள்மடல் காரணமின்றி மட்டுறுத்தப்பட்டால், உங்களுடன் நானும் அதனை எதிர்ப்பேன்.
எனக்குநீங்கள் சிசி போட்டு அனுப்புவதால், குழுமத்தில் மட்டுறுத்தப்பட்டாலும் அதுஒரு பிரச்சனையாக இராது. அத்தோடு உங்கள் மடல் அனைத்தையும் மட்டுறுத்தாமல்அனுமதிக்க வேண்டிய உத்தரவாதம் என்னால் தரவும் இயலாது. அதனைக் குழுமமாடரேட்டர் தான் தர வேண்டும்.
- அபூ சுமையா
இந்தத் திருட்டுக் கும்பலை நம்பக் கூடியவர்கள் மேற்கண்ட கள்ளப் பேர்வழியின் பதிலைக் கவனியுங்கள்.
குழுமத்துக்கு அபூ உமய்யா அனுப்பிய மடல் தனக்கு வந்து சேர்ந்தது என்று மேற்படி கள்ளப் பேர்வழி மேற்படி பதில் மூலம் ஒப்புக் கொள்கிறாரா? இல்லையா?
அந்த மடலை குழுமத்துக்கும் அனுப்பி விட்டு எனக்கும் நீங்கள் காப்பி அனுப்பியிருப்பீர்கள் என்று கள்ளப் பேர்வழி மேற்படி பதிலில் சொல்லி இருப்பது தெரிகிறதா?
கொஞ்சமாவது நேர்மை உணர்வு உள்ளவர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். ஒருவர் உங்களுக்கு மெயில் அனுப்புகிறார். பிறகு அதை மறுக்கிறார் என்றால் அதை உங்களால் உடனே நிரூபிக்க முடியும். இந்த நாள் இந்த நேரம் எனக்கு நீங்கள் அனுப்பிய மெயில் இதோ என்று எடுத்துக் காட்ட முடியும்.
ஆனால் இந்தக் கள்ளப் பேர்வழி பயன்படுத்திய வாசகத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் எனக்கு சிசி அனுப்பி இருப்பீர்கள் இப்படி அனுப்பி இருப்பீர்கள் என்று ஊகமாகக் கூறுவது கயமைத் தனமாகத் தெரியவில்லையா?
அடுத்து பாருங்கள்! இதை அபூ உமய்யா ஏற்கவில்லை. அவர் அறிவுப்பூர்வமாக மிண்டும் கேள்வி கேட்கிறார்.
அபூ உமய்யா பதில்
சகோதரர் அபூ சுமைய்யா அவர்களுக்கு,
\ குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? எனக்கு உங்கள்மடல் வராமல் நான் எப்படி உங்களுக்குப் பதில் அளித்திருப்பேன்? நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள்என நினைக்கிறேன்\
நீங்கள்எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்றுயூகத்தின் அடிப்படையில் கூறுகின்றீர்களே! இது எவ்விதத்தில் நியாயம்? நான்உங்கள் தொடர்பான மெயில்களை டி.எம்.பி.க்கு மட்டுமே அனுப்பியிருக்கும்நிலையில் நான் உங்களுக்கு சிசி போட்டிருப்பேன் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
அடுத்து, குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? என்றுஎன்னிடத்தில் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். நான் உங்களை நோக்கி கேட்கவேண்டிய கேள்வியை நீங்கள் முந்திக்கொண்டு, என்னை நோக்கிஎழுப்பியுள்ளீர்கள். அதற்குரிய பதில் உங்களுக்குத்தான் தெரியும். ஏனெனில்நான் இது வரை உங்களது மெயில் ஐ.டி.க்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒருமெயிலும் அனுப்பியிராத நிலையில் உங்களது மேற்கண்ட பதில் எனக்கு மிகுந்தஆச்சரியத்தை எற்படுத்துகின்றது. யாரிடத்தில் இருந்து மெயில் வந்துள்ளதுஎன்பது கூடவா தெரியாமல் இருக்கின்றீர்கள்.
இப்படிஆளுக்கு ஆள் அபூ உமையா எனக்கு ஒரு சிசி போட்டுவிட்டார் என்றுகிளம்பிவிட்டால் என்னவாகும்? என்று சற்று யோசித்து பருங்கள். நான்யாருக்கும் மெயில் அனுப்பாத நிலையில், எனக்கு நீங்கள் மெயில்அனுப்பினீர்கள் என்று ஆளுக்காள் கூறுவார்களேயானால் அது பல விபரீதங்களைஏற்படுத்தும்.
நிரூபித்தே ஆகவேண்டும்!
நீங்கள்எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்\ என்றுயூகமெல்லாம் வேண்டாம். நான் உங்களுக்கு சிசி போட்டுஅனுப்பியிருந்திருந்தால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதாவது நான்எனது மெயில் ஐ.டி.யிலிருந்து உங்களுக்கு சிசி போட்டு அனுப்பியதாக கூறும்மெயிலை எனக்கு ஃபார்வேடு செய்து நீங்கள் நான் அனுப்பியதாக கூறும் மெயிலைநிரூபிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நான் அனுப்பிய மெயிலைகுழுமத்தினர் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி அதற்கு நீங்கள்பதிலளித்தபின் வெளியிடுகிறார்களா? அப்படியென்றால் அபூசுமைய்யா தான்டி.எம்.பி.குழுமமா? எனது இந்த நியாயமான சந்தேகத்தையும் நிவர்த்தி செய்யநீங்களும் குழுமத்தினரும் கடமைப்பட்டுள்ளீர்கள்.
1.நான் உங்களுக்கு சிசி போட்டேன் என்பதை நீங்கள் நிரூபியுங்கள். (நிச்சயமாக நீங்கள் நிரூபிக்க முடியாது. ஏனெனில் அது உங்களது யூகம்)
2. நீங்கள் நிரூபிக்காத பட்சத்தில், அபூசுமைய்யாவும் குழுமத்தில் ஒருவராக இருக்க வேண்டும்
3.அல்லதுகுழுமத்திற்கு வரக்கூடிய உங்களது தொடர்பான மெயில்களை குழுமமே உங்களுக்குமுதலில் அனுப்பி, ஒருபக்க சார்பாக குழுமத்தினர் நடந்திருக்க வேண்டும்
இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.
எனது மேற்கண்ட சந்தேகங்கள் அனைத்திற்கும் டி.எம்.பிகுழுமத்தாரும் அபூசுமைய்யா வும் பதிலளிப்பார்களா?
நாம் அனைவரும் உண்மையை விளங்க நேர்வழிகாட்டும் அருளாளான் அருள் புரிவானாக! ஆவலுடன், அபூஉமைய்யா
(அபூஉமய்யா எழுதிய மறுப்பில் முக்கிய பகுதி மட்டும் மேலே காண்பது. இரண்டாம் தொடரில் முழுமையாக உள்ளது)
அபூ உமய்யாவின் இந்தக் கேள்வியை மட்டும் பீஜே ஆதாரமாகக் காட்டவில்லை. கள்ளப் பேர்வழி இதற்கு அளித்த பதிலிலையும் சேர்த்தே ஆதாரமாக்கியுள்ளார்.
அந்தப் பதில் இது தான்.
கள்ளப் பேர்வழியின் பதில்
அன்புச் சகோதரர் அபூ உமையாவுக்கு,
முதலில் என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.
உங்கள்மடல் மட்டுறுத்தப்பட்டதாக குழும மாடரேட்டரிடமிருந்து மடல் வந்திருக்க, உங்களின் அந்த மட்டுறுத்தப்பட்ட மடலுக்கு நான் எப்படி பதில் போட்டேன்என்று நீங்கள் கேட்டதால், ஒருவேளை குழுமத்துக்கு அனுப்பிய அதே வேளையில்எனக்கும் நீங்கள் சிசி(இங்கு சிசி என்பதில் பிசிசியும் உட்படும்)போட்டிருக்கலாம். ஆகவே, குழுமம் மட்டுறுத்தினாலும் எனக்கு அதுகிடைத்திருக்கும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு கூறியிருந்தேன்.
ஆனால்அதனைத் தாங்கள் மறுத்து விட்ட நிலையில், என் கருத்தை நான் திரும்பப்பெற்றுக் கொள்கிறேன். குழுமத்தில் அனுமதிக்கப்படாத ஒரு மெயில் எனக்குக்கிடைத்தது எனில், அதற்கு இது ஒன்றே சாத்தியம் என்று கருதியதாலேயே அவ்வாறுகுறிப்பிட்டுருந்தேன். ஆனால், குழும மாடரேட்டர்களே எனக்கு நேரடியாகஅனுப்பி தந்திருக்கலாம் என்று மற்றொரு சாத்தியத்தையும் நீங்கள்குறிப்பிட்டது சரியான சந்தேகமே. இதுவரை குழும மாடரேட்டர்களிடமிருந்துஎனக்கு அவ்வாறான ஒரு மடல் கிடைக்கப்பெறாததால் நான் அந்த வழியில்சிந்திக்கவில்லை.
அனுமானத்தின்அடிப்படையில் நான் கூறியது தவறு தான். என்னை மன்னியுங்கள். நீங்கள் எனக்குசிசி போட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்டதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
அத்தோடு, இதுவரை எந்த ஒரு மடலும் எனக்கு இக்குழும மாடரேட்டர்களிடமிருந்து தனியாககிடைக்கப்பெறவில்லை என்பதையும் இங்கு உறுதி கூறுகிறேன்.
இன்பாக்ஸில் தேடுவோரே மேலே நாம் எடுத்துக் காட்டியவை இன்பாக்ஸில் உள்ளதா என்று ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து பார்த்து ரசியுங்கள்.
கள்ளப் பேர்வழியின் இரண்டு பதில்களும் குழுமம நடத்துபவர்களே கள்ளக் கும்பல் தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
குழுமத்துக்கு அனுப்பியது மட்டுறுத்தப்படுகிறது.
மட்டுறுத்திய அந்த மடல் கள்ளப் பேர்வழிக்கு அனுப்பப்படுகிறது.
கள்ளப் பேர்வழி அதற்கு பதில் எழுதியவுடன் விதிமுறைக்கு உட்பட்டதாக ஆகின்றது.
இதில் இருந்து இந்தக் குழுமத்தை நடத்துபவர் கள்ளப் பேர்வழி தான் என்பதில் சந்தேகம் இல்லை. யாரோ எழுதியதை நம்பி பீஜே ஏமாறவில்லை. மூளையற்ற கள்ளப் பேர்வழி உளறி மாட்டிக் கொண்டதில் இருந்து இது நிரூபணமாகிறது.
எனவே மேற்படியாரை கள்ளப் பேர்வழி என்று பீஜே குறிப்பிடுவது முற்றிலும் சரியானது தான். அல்லாஹு அகபர். அலஹம்து லில்லாஹ்.
இந்த இடத்தில் இன்பாக்ஸில் தேடிப்பார்க்குமாறு கள்ளப் பேர்வழி கூறியதையும் நான் விளக்கும் அவசியம் உள்ளது.
இன்பாக்ஸ் பூச்சாண்டி:
குழுமம் மூலமாக அனுப்பப்பட்ட அபூஉமைய்யாவின் மெயில் உங்களது இன்பாக்ஸில் இதே இழையில் உள்ளதா? என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று இந்த கள்ளப் பேர்வழி செக்பண்ணச் சொல்ல உடனே பலர் ஆமாம்! எங்களுடைய இன்பாக்ஸிலும் மட்டுறுத்தியதாக அபூஉமைய்யா சொன்ன மெயில் உள்ளது என்று அதனை ஸ்கிரீன் ஷாட் செய்து, ஏதோ மிகப் பெரிய ஆதாரத்தைக் காட்டுவது போல காட்டி தாமும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றியுள்ளனர். இந்த கள்ளப் பேர்வழியும் “ஸ்கிரீன் ஷாட்”செய்து பூச்சாண்டி காட்டியுள்ளார்.
தான் அனுப்பிய மெயிலை முழுவதுமாக மட்டுறுத்தி விட்டார்கள் என்று அபூஉமைய்யா ஒரு போதும் கூறவில்லை. தான் மெயில் அனுப்பிய உடன் மட்டுறுத்தல் நாடகம் நடத்திவிட்டு, அபூசுமைய்யாவின் பதிலோடு தான் தனது மெயிலையும் சேர்த்து வெளியிடுகின்றனர் என்பது தான் அபூஉமைய்யா அவர்களின் குற்றச்சாட்டு. மட்டுறுத்திவிட்டு பின்னர் கள்ளப் பேர்வழியின் பதிலோடு வெளியிட்ட்து ஏன் என்று அபூ உமய்யா கேட்டபோது மட்டுறுத்தியதை கள்ள்க் குழுமமே ஒப்புக் கொண்டு விட்டது. எனவே இன்பாக்ஸில் இருப்பதால் மட்டுறுத்திவிட்டு பின்னர் வெளியிட்டனர் என்ற குற்றச் சாட்டுக்கு எப்படி மறுப்பாகும்? மட்டுறுத்தி விட்டு பின்னர் நாங்கள் வெளியிடவில்லை என்று கள்ளக் குழுமம் தெளிவாக அறிவிக்கத் தயாரா?
இந்த குற்றசாட்டைக் கூட விளங்காத அரைவேக்காடுகள் எனது இன்பாக்ஸிலும் உள்ளது, எனது இன்பாக்ஸிலும் உள்ளது என்று உளறிக் கொண்டுள்ளனர். தனது மெயில் இன்பாக்ஸில் இல்லை என்று அபூஉமைய்யா எந்த இடத்திலும் கூறவே இல்லை. எனது மெயிலுடன் அபூசுமைய்யாவின் பதிலுடன் வெளியிடப்படுவது ஏன் என்பது தான் அபூஉமைய்யாவின் குற்றச்சாட்டு.
கள்ளக்குழுமத்தின் மற்றுமொரு கள்ளத்தனம்:
அபூசுமைய்யாவிற்கோ, அல்லது மேற்படி கள்ளக்குழுமத்திற்கோ கேள்வி கேட்டு எழுப்பப்படும் மெயில்களில், தங்களுக்குப் பாதகமாக வரும் மெயில்களை மட்டுறுத்திவிட்டு அதற்குத் தகுந்தாற் போல பதில்களைத் தயார் செய்து பின்னர் வெளியிடுகின்றனர்.
யாரேனும் ஒரு அப்பாவி இவர்களுக்கு எதிராக, ஒரு கேள்விகேட்டு இரவு பத்து மணிக்கு மெயில் அனுப்புகின்றார் என்று வைத்துக் கொள்வோம். மட்டுறுத்தும் மடையர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு “உங்களது மெயில் (கள்ளக்)குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதால் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்ட அப்பாவிக்கு பதிலை அனுப்பி விடுகின்றனர். நமது மெயிலைத் தான் மட்டுறுத்தி விட்டார்களே என்று கேள்விகேட்ட அப்பாவி அமைதியாகி விடுவார். ஆனால் இந்தக் கள்ளக் குழுமத்தினரோ மட்டுறுத்தப்பட்ட மெயிலுக்கு கள்ளப்பேர்வழி மூலம் பதிலைத் தயாரித்து விட்டு, பிறகு இரவு இரண்டு மணிக்கு கள்ளப் பேர்வழியின் பதிலோடு வெளியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் இன்பாக்ஸில் இரண்டு மெயிலும் இருக்கும். அப்பாவி அனுப்பிய மெயில் “ஷோ டீடைல்ஸ்”(showdetails) சென்று பார்த்தால், அவர் உங்களுக்கு இரவு பத்து மணிக்கே அனுப்பி வைத்து விட்டாதாகக் காட்டும், அவர் அனுப்பிய நேரம் இரவு பத்து மணி தான்!. ஆனால் உடனே அது வெளியிடப்படாமல் மட்டுறுத்தும் மடையர்களால் மட்டுறுத்தப்பட்டுவிட்டு அதை பலமணி நேரமல்ல, பல நாட்கள் கழித்து, எடுத்துக் காட்டிற்கு ஒரு பத்து நாட்கள் கழித்து வெளியிட்டாலும், நீங்கள் பத்து நாட்களுக்கு முன்பு அனுப்பியதை அப்போதே வெளியிட்டதாகத் தான் காட்டும். இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தக் கள்ளக் குழுமத்தினர் நாம் அனுப்பும் மெயில்களை மட்டுறுத்திவிட்டு எப்போது அனுமதிக்கின்றார்களோ அந்த நேரம் எவருடைய இன்பாக்ஸிலும் காட்டப் படாதவாறு செட்டிங் செய்துள்ளனர். இவர்கள் எப்போது வெளியிடுகின்றார்களோ அந்த நேரத்தைக் காட்டாமல், அப்பாவிகள் மெயில்கள் அனுப்பிய நேரத்தையே காட்டும் வகையில் அமைத்துள்ளதால தான் இன்பாக்ஸ் தேடல் கட்டளை.
இந்த உண்மையைக் கண்டுபிடித்துதான் அபூஉமைய்யா அவர்கள் கேள்வி கேட்டவுடன், ஆடிப்போன கள்ளக்குழுமம் அபூஉமைய்யா அனுப்பிய மெயில் இன்பாக்ஸில் உள்ளதா? இல்லையா? என்று கேள்வியெழுப்புகின்றனர். இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட ஒரு மெயிலை மட்டுறுத்திவிட்டு, இப்போது ஒரு வருடம் கழித்து வெளியிட்டாலும், அதே மெயில் ஒரு வருடத்திற்கு முன்பே அனுப்பப்பட்டது போல தான் காட்டும் என்பதை இன்பாக்ஸ் பூச்சாண்டி காட்டுபவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கள்ளப்பேர்வழி எதை இன்பாக்ஸில் செக் பண்ணும்படி கூறினாரோ, அதையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அதை அபூஉமைய்யா அனுப்பிய நேரம் 10.20pm (ஜனவரி-13),
மட்டுறுத்தியதாக அபூஉமைய்யாவுக்கு கள்ளக்குழுமம் பதில் அனுப்பிய நேரம் 12.08am(ஜனவரி-14).
அபூஉமைய்யாவின் மடல் வெளியிடப்பட்டதாக காட்டும் நேரம் 10.20pm(ஜனவரி-13).
இதை நன்கு கவனத்தில் வைய்யுங்கள்.
அபூஉமைய்யா 10.20pm க்கு அனுப்பிய மெயிலை, 10.20pmக்கே இவர்கள் வெளியிட்டு விட்டார்கள் என்பது உண்மையானால் 112நிமிடங்கள் கழித்து (12.08am க்கு) மட்டுறுத்திவிட்டதாக மூளை உள்ள எவனாவது சொல்வானா?
இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?
யாருடைய மெயிலை எவ்வளவு காலம் கழித்து இவர்கள் வெளியிட்டாலும் இவர்கள் வெளியிடும் நாளையும், நேரத்தையும் காட்டாமல் மெயில் அனுப்பியவருடைய நேரத்தை காட்டும் வகையில் செட்டிங் செய்துள்ளனர்.
குழுமத்தில், ஒரு செய்தி வெளியிடும் நேரம் தெரியாது, எப்போது செய்தி குழுமத்திற்கு அனுப்பப்பட்டதோ அந்த நேரத்தைத் தான் அது காட்டும் என்று கள்ளக்குழுமம் வாதிட்டால், வெளியிடும் நேரத்தைக் காட்டாத இன்பாக்ஸை ஆதாரமாகக் காட்டுவது வடிகட்டிய அயோக்கியதனம் இல்லையா?
அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அகபர்
யாரைப் பற்றி கள்ளப் பேர்வழிகள் என்று பீஜே கூறுகிறாரோ அதற்கான ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறாரோ அந்தக் கள்ளக் குழுமத்தில் பீஜே சேர்ந்து தனது கருத்தைக் கூறவேண்டும் என்றும் கள்ளக் குழுமம் அழைப்பு விடுக்கிறது. இவர்களுக்கு மூளையும் இல்லை. வெட்கம் மானம் போன்ற உயர் பண்புகளும் இல்லை. தங்களை யாரும் ஏமாற்றக் கூடாது என்று கருதுபவர்கள் கள்ளக் குழுமத்தில் தொடர்பு வைக்க வேண்டாம் என்று கூறும் பீஜே இவர்களின் கள்ளக் குழுமத்தில் சேர வேண்டுமாம். ஏன் புளுகு மூட்டையில் பங்காளியாவதற்கா?
மடமை பத்து
//இவரது அறியாமையை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு இதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.//- சகோ. பிஜே
எதுஎன் அறியாமை என்பதைச் சொல்லி, இவ்வாறு எழுதினால் ஒரு அர்த்தமிருக்கிறது.உங்களை விடவோ, அல்லது உங்கள் அளவுக்கோ நான் மார்க்கத்தை அறியாதவன் தான்என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அதே சமயம் உலககல்வியில்? அதில் நீங்கள் அறியாமை மிகுந்தவர் என நீங்கள் எழுதுவதைப்போன்று எழுதி உங்களை நகையாட எனக்கு விருப்பமில்லை. நம் இருவரின் கருத்துப்பரிமாற்றங்கள் தனிப்பட்ட மடலில் நடக்கவில்லை என்பதை மட்டும் எப்போதும்தாங்கள் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.
7. உங்கள் கருத்து/நிலைபாடுகள் மீதான என் கேள்விகளில் எனக்கு அறியாமை உள்ளதா? அல்லது நீங்கள் என் மீது வைத்த முதல் விமர்சனத்துக்கு நான் கொடுத்த மூன்றுபதில்களில் அறியாமை உள்ளதா? என் அறியாமைகள் என்னென்ன?
பத்தாவது மடைமைக்கு மறுப்பு
இவர் கேள்வி கேட்கும் இலட்சணத்தை பீஜே முன்பே தோலுரித்துக் காட்டியுள்ளார். அதே கேலிக் கூத்து தான் இந்தக் கேள்வியிலும் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட் அறிஞர் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் பேசுவார் என்று அறிவித்தால் அதன் பொருள் என்ன? அந்த உரையில் அதை விரிவாக விளக்குவார் என்பது தான் பொருள். மூளையுள்ள யாரும் இப்படித் தான் புரிந்து கொண்டு முழு உரையையும் கேட்பார்கள்.
இந்தத் தலைப்பில் இன்னார் பேசுவார் என்று அறிவித்தவுடன் ஒருவர் எழுந்து எவை மூட நம்பிக்கை? எத்தனை மூடநம்பிக்கை? அனைத்துமே மூடநம்பிக்கையா? மூட நம்பிக்கை அல்லாதவைகளும் உள்ள்னவா? அவை யாவை? உங்களிடம் மூடநம்பிக்கை இல்லையா? என்று கேட்டால் அவனை மடையன் என்று தான் அனைவரும் கருதுவோம். மூட் நம்பிக்கை பற்றி பேசத் தான் அந்தப் பேச்சாளர் எழுந்து நிற்கிறார்; அவர் பேசுவதைக் கேள் என்று அனைவரும் அந்த மடையனுக்குப் பதில் சொல்வோம்.
கள்ளப் பேர்வழியின் அறியாமையை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு இது என்று பீஜே குறிப்பிடுகிறார் என்றால் அது பற்றி விளக்கமாக எடுத்து வைக்கப் போகிறார் என்பது தான் பொருள். கள்ளப் பேர்வழியின் ஒவ்வொரு அறியாமையையும் தோலுரித்துக் காட்டப் போவதாக பீஜே தனது முன்னுரையில் கூறுகிறார் என்றால் கள்ளப் பேர்வழி என்ன செய்ய வேண்டும்? தான் கூறிய படி கள்ளப் பேர்வழியின் அறியாமையை பீஜே எடுத்துக் காட்டுகிறாரா என்று தொடர்”முடியும் வரை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அதில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும்.
தலைப்பைச் சொன்ன உடன் என்னென்ன அறியாமை என்று கேட்டதன் மூலம் அறியாமையின் ஒட்டுமொத்த வடிவமாக கள்ளப் பேர்வழி தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார் என்பது உறுதியாகிறது.
கள்ளப் பேர்வழியின் ஒவ்வொரு அறியாமையாக பீஜே எழுதுவார். அதற்காகத் தான் அந்த அறிவிப்பே வெளியிட்டிருக்கும் போது எதில் அறியாமை உள்ளது? என் அறியாமைகள் என்னென்ன? என்று கேட்கிறார். அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? இப்போதே ஏராளமான அறியாமைகளை அம்பலப்ப்டுத்தி விட்டார். ஒவ்வொரு அறியாமையாக அம்பலமாகிக் கொண்டு வரும். இன்ஷா அல்லாஹ்.
பதினோராவது மடமை
//குறிப்பாகததஜ அனுதாபி என்ற பெயரில் உண்மையில் நம் சகோதரர்கள் யாராவது இவர்கள்குழுமத்தில் விவாதம் நடத்தி இருந்தால் அவர்கள் எனக்கு தங்களின் முழுவிபரத்தைத் தக்க ஆதாரத்துடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//- சகோ. பிஜே
என்ன ஒரு கண்ணியமான அணுகுமுறை. அல்ஹம்துலில்லாஹ். இதைப் போன்ற உங்களின் பழைய அணுகுமுறை தொடர அல்லாஹ்விடம் மனமார துஆ செய்கிறேன்.
8. இவரை, "ததஜ அனுதாபி ஒழுங்கானவனாக இருக்க முடியாது. அவன் ஆர்.எஸ்.எஸ்காரனாகவோ அல்லது கிறிஸ்தவனாகவோ தான் இருப்பான். ததஜவுக்குக் கெட்டப்பெயர்உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இவ்வாறானஅடையாளம் தெரியாத பெயரில் இருக்கிறான். இவனைக் கழிசடையாகவும்இழிபிறவியாகவும் கருதி நாம் ஒதுக்கி விடவேண்டும். இவனைக் கண்டுபிடிக்கதக்கவர்களை நாடியுள்ளோம். விரைவில் இவனுடைய முகமூடி கிழிக்கப்படும்" என்றுநீங்கள் ஏன் எழுதவில்லை? இது தான் உங்களின் நடுநிலையா? ஒருவேளை ததஜஅனுதாபி உங்கள் சகோதரராக(ததஜவைச் சேர்ந்தவராக) இருந்து விட்டால், நம்மைநாமே கேவலப்படுத்திப் பேசியதாக ஆகி விடும் என்ற முன் ஜாக்கிரதையால் கவனமாகஅவரிடம் அவரின் அடையாளங்களை அனுப்பக் கேட்டுள்ளீர்களா? இதே முறையில்என்னைக் குறித்த கேள்வியை அமீன் என்றொருவர் உங்களிடம் வைத்த உடன், "சகோதரர் அபூ சுமையா தன் விவரங்களை எனக்கு அனுப்பி வைத்தால் அவரின்கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்" என நாகரீகமாக ஏன் நீங்கள்பதிலளிக்கவில்லை? ததஜ இயக்கத்தினருக்கு ஒரு நீதி, ததஜவில்இல்லாதவர்களுக்கு ஒரு நீதியா? ததஜ இயக்கத்தினர்களை மட்டும் தான் உங்கள்சகோதரர்களாக கருதுகின்றீர்களா?
//அப்படி அனுப்பவில்லை என்றால் ததஜ அனுதாபி என்பதும் செட்டப்களில் ஒன்று நிரூபிக்க முடியும்.//- சகோ. பிஜே
இந்தஒரு வரியை மட்டும் மையமாக வைத்தே உங்களிடம் சவாலிட என்னால் முடியும்.இதற்காகவே சகோதரர் ததஜ அனுதாபி அவர்களிடம் ஒரு கோரிக்கை: ததஜவைச்சேர்ந்தவராக நீங்கள் இருந்த போதிலும் நடுநிலையாக சில விஷயங்களை நீங்கள்ஏற்றுக் கொள்வீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அந்த அடிப்படையில்உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். தாங்கள் தயவுசெய்து உங்களின்விவரங்களைச் சகோதரர் பிஜே அவர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடாது.அவர்எப்படி "ததஜ அனுதாபி" என்ற ஐடி செட்டப் என நிரூபிக்கிறார் என நாம்பார்ப்போமே?. சகோதரர் பிஜே எந்த அளவுக்கு அதீத கற்பனையில் மூழ்கியுள்ளார்என்பதற்கு இந்த வரி ஒன்றே சான்று.
9. ததஜ அனுதாபி தன் விவரத்தை அனுப்பி வைக்கவில்லையேல், "ததஜ அனுதாபி" என்றஐடிக்குச் சொந்தக்காரர் ததஜ சகோதரர் அல்ல என்பதும் அவர் ஒரு செட்டப்என்பதும் எப்படி ஆகும்? அதனை உங்களால் நிரூபிக்க முடியும் என்று வேறுஉறுதியாக கூறியுள்ளீர்கள். ததஜ அனுதாபி என்பவர் ததஜ சகோதரராகவே இருக்க, அவர் செட்டப் என்று உங்களால் எப்படி நிரூபிக்க முடியும்? சகோதரர் பிஜேஅறிவுப்பூர்வமாகவேனும் இதனை விளக்குவார் என நம்புகிறேன்.
"அறியாமை"எனறொரு சொல்லை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் சகோதரர் பிஜே சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பதினோராவது மடமைக்கு மறுப்பு
ததஜ அனுதாபி என்பவராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அபூ உமய்யாவாக இருந்தாலும் அவர்களால் குழப்பம் ஏற்படுமானால் அந்தக் குழப்பத்தை தீர்ப்பதற்காக தன்னைப் பற்றி அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்துமாறு கோரப்படும் போது அனைவரும் தன்னை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அனைவருக்கும் ஒரே அளவு கோல் தான்.
ததஜ என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைக் குறிக்கும் சொல்லாகும். தவ்ஹீத் அனுதாபி என்று ஒருவர் கூறிக் கொண்டால் அதற்குப் பலவிதமான வியாக்கியானம் கொடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனுதாபி என்றால் அந்த ஜமாஅத்திற்கு அனுதாபியாக இருக்க வேண்டும். அந்த ஜமாஅத்தின் எதிரிகளுக்கு அனுதாபியாக நடப்பவர்கள் ஒருக்காலும் ததஜ அனுதாபியாக மாட்டார்கள்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் இணையதளம் மூலம் பதில் சொல்லும் முழுப் பொறுப்பும் பீஜேக்கு அந்த ஜமாஅத்தால் வழங்கப்பட்டுள்ளது. பீஜே அளிக்கும் பதில்கள் உணர்வு வார இதழிலும் எடுத்தாளப்படுகிறது. ஜமாஅத்தின் சார்பில் எதிராளிகளுக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ள பீஜே, ததஜ அனுதாபி என்பவர் தன்னைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்.
ததஜ அனுதாபி என்று யாராவது இருந்தால் அவர் தன்னை எனக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று பீஜே கேட்கும் போது உடனே அவர் தன்னை இனம் காட்ட வேண்டுமா? இல்லையா?
அதே நேரத்தில் ததஜ அனுதாபி தன்னைப் பற்றி பீஜேக்கு சொல்லக் கூடாது என்று கள்ளப் பேர்வழி கட்டளை பிறப்பிக்கிறார்.
ததஜ மீது அனுதாபம் உள்ளவர் ததஜவின் கோரிக்கையை ஏற்க வேண்டுமா? ததஜ எதிரியின் கோரிக்கையை ஏற்க வேண்டுமா?
ததஜவின் எதிரி வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ததஜ அனுதாபி கூறுகிறார் என்றால் இவர் எப்படி ததஜ அனுதாபியாக இருக்க முடியும்?
கள்ளப் பேர்வழியின் கட்டளைக்கு அடிபணிந்து தான் யார் என்பதை மேற்படி அனுதாபி வெளிப்படுத்த மறுக்கிறார் என்றால் அவர் எப்படி ததஜ அனுதாபியாக இருக்க முடியும்?
கள்ளப் பேர்வழிக்கு பீஜே அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுள்ளார். வழக்கம் போல் கள்ளப் பேர்வழி விவாதத்துக்கு அறை கூவல் விடுவதும் யாராவது அறை கூவலை ஏற்றுக் கொண்டால் இடையில் விலக மாட்டேன் என்று உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்பதும் இந்தக் கள்ளப் பேர்வழியின் வழக்கம். அதாவது இவருடன் விவாதம் செய்ய ஒப்புக் கொண்டவர்கள் இடையில் ஓடி விடுவதாகவும் இவர் மட்டும் நின்று தாக்குப் பிடிப்பதாகவும் காட்டிக் கொள்ளவே இந்த உதார்.
குழுமமே கள்ளக் குழுமமாக உள்ளதால் இஷ்டப்படி மட்டுறுத்தலாம் என்பதால் இப்படிச் சவடால் விட்டு வந்தார்.
இப்போது பீஜே வேறு கிரவுண்டுக்கு அவரை இழுத்து வந்து விட்டார். மட்டுறுத்தும் மடத்தனம் இங்கே வேகாது. பீஜேயைப் பொருத்தவரை ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் பின்வாங்க மாட்டார் என்பதால் மேற்படியார் உதறல் எடுத்து நான் பதில் எழுதுவதா வேண்டாமா என்று கருத்துக் கணிப்பு நடத்தினார். கருத்துக் கணிப்பு அடிப்படையில் எந்த முடிவை எடுப்பது என்பதற்காக தன் சார்பில் ஒரு நடுவரை நியமிப்பதாக அறிவித்தார் இந்தக் கள்ளப் பேர்வழி. அந்த நடுவர் யார் தெரியுமா? ததஜ அனுதாபி தான் அந்த நடுவர்.
கள்ளப் பேர்வழி தனது நடுவராக ததஜ அனுதாபியை நியமித்துக் கொள்கிறார் என்றால் அவர் எப்படி ததஜ அனுதாபியாக இருக்க முடியும்? பீஜேக்கோ, எந்த மாநில நிர்வாகிக்குமோ ததஜ அனுதாபி யார் என்பது தெரியாத நிலையில் அவரைப் பற்றி கள்ளப் பேரவழிக்கு நன்றாகத் தெரிந்துள்ளது; அதுவும் கள்ளப் பேர்வழியின் நலம் நாடுபவராகத் தெரிந்துள்ளது என்றால் அது யாராக இருந்தாலும் அவர் ததஜ அனுதாபி அல்ல. அனுதாபி என்பது அவரது செயல்பாட்டால் நிரூபிக்கப்பட வேண்டும். அனுதாபி என்று சொல்லிக் கொள்வதால் அல்ல.
கள்ளப் பேர்வழி கேட்டுள்ள கேள்விகளுக்கு ததஜ அனுதாபி பெயரில் அளித்துள்ள பதில்கள் கள்ளப் பேர்வழியின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் கோமாளித்தனமாக அமைந்துள்ளன. தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏற்கனவெ அளிக்கப்பட்டுள்ள பதிலை எடுத்துக் காட்டினால் கூட போதும். கள்ளப் பேர்வழி வாய் திறக்க முடியாது.
ஆனால் கள்ளப் பேர்வழி ஆசைப்படுவது போல் உளறி விட்டு நான் தோற்று விட்டேன் என்று கள்ளப் பேர்வழியின் விருப்பத்தை நிறைவேற்றுபவர் ஒருக்காலும் ததஜ அனுதாபியாக இருக்க முடியாது என்பதை மூளையுள்ள யாரும் புரிந்து கொள்ள முடியும்.
கள்ளப் பேர்வழியைக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தது போல் ததஜ அனுதாபியை ஏன் விமர்சனம் செய்யவில்லை என்றும் கள்ளப் பேர்வழி கேட்கிறார்.
கள்ளப் பேர்வழியைப் போல் ததஜ அனுதாபி என்பவரும் பீஜேயைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத் பற்றிவிமர்சனம் செய்தால் கள்ளப் பேர்வழி குறித்து பீஜே எழுப்பிய கேள்விகளை மேற்படி அனுதாபி விஷயத்திலும் எழுப்பி அடையாளம் காட்டி விட்டு விமர்சனம் செய் என்று கேட்கும் அவசியம் ஏற்படும். அந்த அவசியம் இதுவரை ஏற்படவில்லை.
ததஜ அனுதாபி என்பவர் ததஜ சகோதரராகவே இருக்க அவர் செட்டப் என்று உங்களால் எப்படிக் கூற முடியும் என்று கள்ளப் பேர்வழி கேட்கிறார். அதற்கான காரணங்களை மேலே கூறியுள்ளேன். ததஜ சகோதரர் என்று இவரிடம் காட்டிக் கொள்வதால் மட்டும் ஒருவர் ததஜ அனுதாபியாக இருக்க முடியாது. சில பேர் ததஜவில் பொறுப்பு வகிக்கும் போது ஒரு நிலை எடுப்பதையும் பொறுப்பு இல்லை எனும் போது கழுத்தறுப்பு வேலை செய்வதையும் நாம் கண்டு வருகிறோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை விட மேற்படி அனுதாபி கள்ளப் பேர்வழியின் அனுதாபியாக இருக்கிறார் என்பதைக் கள்ளப் பேர்வழியே போட்டு உடைத்து விட்டார். இது கள்ளப் பேர்வழிக்கே தெரிகிறது. பிறகு என்ன ஆதாரம் தேவை?
பன்னிரண்டாவது மடமை
//என்சார்பில் நான் பதிலளிக்க எனது முழு நேரத்தையும் ஒதுக்கியுள்ள நிலையில் எந்த அனுதாபியும் ததஜ சார்பில் பேசும் தேவை எதுவும் இல்லை.//- சகோ. பிஜே
10. "உங்கள் சார்பில் பதிலளிக்கத்தான் நீங்கள் நேரம் ஒதுக்கியுள்ளீர்கள். அப்படியிருக்க, யாரும் ததஜ சார்பில் பேசும் தேவை இல்லை"என்றுகூறியுள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? உங்கள்சார்பாக பேச நீங்கள் யாருக்கும் அனுமதியளிக்காத போது, உங்கள் சார்பாகயாருக்கும் பேச அதிகாரம் இல்லை என்பது நியாயமானது. ஆனால், உங்கள் சார்பாகபேச நீங்கள் நேரம் ஒதுக்கியதற்காக, ததஜ சார்பாக யாரும் பேச வேண்டிய தேவைஇல்லை என்றால்.....அதன் அர்த்தம் என்ன? "சகோதரர் பிஜே தான் ததஜ, ததஜஎன்றால் பிஜே!" என்றா கூற வருகிறீர்கள்? அப்படியல்ல, ததஜ சார்பில் பேசும்உரிமை உங்களுக்கு இருக்கிறது, அந்த உரிமையில் தான் அவ்வாறு கூறினீர்கள்எனில், அதே உரிமை ததஜவில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளதே? அல்லது ததஜசார்பாக நீங்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று ததஜவில் ஏதாவதுஉள்முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளனவா? ததஜவின் உள்முடிவுகளைக் குறித்துக்கேள்வி கேட்கும் உரிமை ததஜவில் இல்லாத எனக்கு இல்லை என்பது தெரியும்.ஆனால், இவ்வாறு நீங்கள் வெளிப்படையாக எனக்குரிய பதிலில் கூறியுள்ளநிலையில், என் கேள்விக்கு விளக்கமளிக்கத்தான் வேண்டும்.
பன்னிரண்டாவது மடமைக்கு மறுப்பு
இவருக்கு இயக்கங்களின் விதிகளோ சட்டதிட்டங்களோ தெரியவில்லை. சிமி இயக்கத்தின் சார்பில் அதன் பொறுப்பாளராக இருந்தால் தான் இந்தக் கள்ளப் பேர்வழி பதில் சொல்ல முடியும். உறுப்பினராக இருந்தால் பதில் சொல்ல முடியாது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு உறுப்பினரும் பதில் சொல்ல அதிகாரம் பெற்றிருக்கவில்லை. எந்த இயக்கத்திலும் அதன் உறுப்பினர்கள் அனைவரும் பதில் சொல்ல அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அல்லர்.
ஒரு இயக்கத்தின் சார்பில் பதில் அளிப்பது என்றால் அதற்கான பொறுப்பு அந்த இயக்கத்ட்யின் சார்பில் அவர் மீது சுமத்தப்பட்டிருக்க வேண்டும். மாநில நிர்வாகம் அனுமதித்தால் தவிர அவ்வாறு யாரும் இயக்கத்தின் சார்பில் பதில் கூற முடியாது.
தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் இதற்கான அனுமதியை பீஜேக்கு வழங்கியுள்ளது. அனுமதி மட்டும் வழங்கவில்லை. மாறாக ஊக்குவிக்கவும் செய்கிறது. பீஜே அளிக்கும் பதிலை எடுத்து உணர்வில் வெளியிடும் அளவுக்கு அவரது பதிலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
ததஜவில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் ததஜ சார்பில் பதில் அளிக்கும் அதிகாரம் இல்லவே இல்லை. ததஜ தலைமை அந்த உரிமையை வழங்கினாலே தவிர.
எனவே ததஜ அனுதாபி என்பவர் ததஜகாரராகவே இருந்தாலும் தலைமையில் அனுமதி பெறாமல் ததஜ சார்பில் பேசுவது அமைப்பின் பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதாகும்.
பதிமூன்றாவது மடமை
/எனவே அப்படி உண்மையிலேயே ததஜ அனுதாபி இருந்தால் அவர் தன்னை அடையாளம் காட்ட வேண்டும். இன்னும் சிலரும் அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் பற்றி ஒவ்வொன்றாகத் தெரிவிப்பேன்.//- சகோ. பிஜே
கண்டிப்பாக.உங்களின் இந்தக் கோரிக்கையில் நியாயமுள்ளது. ஆனால் அதே சமயம், அபூசுமையாவிடம் கேட்டது போன்று, "அவன் கிறிஸ்த்தவனாகவோ ஆர்.எஸ்.எஸ் காரனாகவோதான் இருப்பான்; நிச்சயமாக ஒழுக்கமற்றவன் தான்; பொம்பளை பொறுக்கி, பணமோசடி செய்தவன், கழிசடை, இழிபிறவி ஆகிய காரணத்தால் தான், தன் அடையாளத்தைவெளிப்படுத்தாமல் எழுதுகிறான். அவனைக் கண்டுபிடிக்க தக்கவர்களைநாடியுள்ளோம்; விரைவில் அவன் முகமூடியைக் கிழிப்பேன்" என்று அறிவித்துவிட்டு, அதன் பின் "அவர் தன்னை யார் என அடையாளம் காட்ட வேண்டும்" எனகோரிக்கை வைக்காதது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
"ததஜஅனுதாபி", "அபூ சுமையா" இந்த இரண்டில், "சுமையாவின் தந்தை" என்று என்மகளின் பெயரால் நான் என்னை அடையாளம் காட்டியே எழுதுவது சகோதரர் பிஜேவுக்குஎன்னை நான் மறைப்பதாம். அதே சமயம், "ததஜ அனுதாபி" என்பது "அபூ சுமையா"வைவிட அதிகமாக ஏற்றுக் கொள்ளத்தக்க அடையாளமோ? நான் நினைத்திருந்தால், இதைப்போன்று என் எந்த அடையாளம் தெரியாத வகையில் ஒரு பொதுப்பெயரைப் போட்டு என்கேள்விகளை எழுதியிருக்க முடியும். அப்படி செய்யாத என் விவரத்தைக்கேட்பதற்கு மட்டும், "இழிபிறவி, கழிசடை, பொம்பளை பொறுக்கி...." என்பதுபோன்ற அத்தனை அடைமொழிகளும் உளவுத்துறைகளும்!! என்ன ஒரு நடுநிலை!
பதிமூன்றாவது மடமைக்கு பதில்
கள்ளப் பேர்வழியைப் போல் பீஜேயுடன் அல்லது தவ்ஹீத் ஜமாஅத்துடன் மோத வருவோர் முகமூடி போட்டுக் கொண்டு வந்தால் அப்போது தான் அவரது அடையாளத்தைக் கேட்க முடியும். பீஜேயுடன் அல்லடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் மோதாதவர்களின் அடையாளத்தைத் தேடும் அவசியம் பீஜேக்கு இல்லை. கள்ளப் பேர்வழி போல் மேற்படி அனுதாபியும் பீஜேயுடன் மோதினால் ஒளிந்து கொண்டு மோதாமல் நேரடியாக மோது என்று பீஜே கேட்டிருப்பார். கள்ளப்பேர்வழி போல் நடக்காத ஒருவரை கள்ளப் பேர்வழியை நடத்துவது போல் நடத்துவது நியாயம் இல்லை.
பதினான்காவது மடமை
11. அபூ சுமையா மீது மட்டும் உங்களுக்கு ஏன் இத்தனை கோபம்? உங்களின் சொத்தில்உரிமை கொண்டாடினேனா? அல்லது உங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டேனா? நமக்கிடையில் கொடுக்கல் வாங்கல் தகராறு உள்ளதா? ஒருவேளை இதெல்லாம்இருந்திருந்தால் கூட, நான் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தாத சொற்களை என்மீது நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? கேள்வி கேட்டவரின்அடையாளத்தைப் பெற, இவ்வாறெல்லாம் கேவலமான சொற்களைப் பயன்படுத்தித் திட்டிவிட்டு, அதன் பின்னர் அவரின் விவரத்தைக் கேட்கலாம் என்பதற்குஇஸ்லாத்திலிருந்து ஒரே ஒரு ஆதாரத்தை உங்களால் காண்பிக்க இயலுமா
பதினான்காவது மடமைக்கு மறுப்பு
வழக்கம் போல் கள்ளக் குழுமத்தில் கேட்பது போல் சம்மந்தமில்லாத கேள்விகளைத் தான் இங்கேயும் கேட்டுள்ளார்.
தனது சுய நலன் அடிப்படையில் தான் இவர் எந்த முடிவும் எடுக்கும் பழக்கமுடையவர் என்பது இவரது இந்தக் கேள்வியின் மூலம் தெரிகிறது. பீஜேயைப் பொருத்த வரை தவ்ஹீத ஜமாஅத்தைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் பாதிப்பையும் நட்டத்தையும் ஏற்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் எந்த முடிவும் எடுப்பதில்லை.
மக்களை ஏமாற்றுவோரை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.. எந்த வகையிலும் மக்களை ஏமாற்றுவோரை அம்பலப்படுத்தாமல் விடக் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.
அதே உணர்வு தான் இந்தக் கள்ளப் பேர்வழியை நாங்கள் எதிர்ப்பதற்கும் காரணம்.
தானே கள்ளக் குழுமத்தை நடத்திக் கொண்டு, அதற்குச் சம்மந்தமில்லாதது போல் வேடம் போட்டுக் கொண்டு, பல கள்ளப் பெயர்களில் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றும் பித்தலாட்டக்காரர் இவர் என்பது தான் நமது கோபத்துக்குக் காரணம்.
பதினான்காவது மடமை
//எனவே மேற்படி குழுமத்துடன் இணைந்துள்ள சகோதரர்கள் எனக்கு நான் கேட்ட விபரங்களை அனுப்பினால் என்னுடன் உள்ள தகவலுடன் அவற்றையும் இணைத்துக் கொள்வேன். pjtntj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி உதவுங்கள்.//- சகோ. பிஜே
12. அத்தோடு, கத்தர் ததஜ செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் கத்தர் அவ்காஃப்மற்றும் அதன் தமிழ்துறை பொறுப்பாளர்கள் மீது பரப்பிய அவதூறுகளுக்கானசான்றுகளையும் இந்த முகவரிக்கு அனுப்பித் தரட்டுமா? அதனைக் குறித்துநீங்கள் வாயே திறக்காதது ஏன்? குறைந்தபட்சம், "அதற்கான ஆதாரத்தை அனுப்பு; அவர் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்போம்" என்று மட்டுமாவதுவெளிப்படையாக அறிவிக்க உங்களால் முடியாதது ஏன்?
பதினன்காவது மடமைக்கு மறுப்பு
இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம்.
கத்தார் மஸ்வூது அவதூறு பரப்பினால் என்றால் எங்கே அவதூறு பரப்பினார்? அவர் எழுதிய மெயிலைப் பரப்பியது கள்ளக் குழுமம் தான். அந்தக் கள்ளக் குழுமத்தை நடத்தும் இந்தக் கள்ளப் பேர்வழி தான் பரப்பியவர். ஆகப் பரப்பும் வேலையைச் செய்தவர் மசூது அல்ல. தன் மனதில் பட்டதை கள்ளப்பேர்வழியின் கள்ளக் குழுமத்திற்கு அனுப்பினார். அதைப் பரப்பியது கள்ளக் குழுமமும், அதை நடத்தும் கள்ளப்பேர்வழியும் தான்.
மஸ்வூது கூறுவது அவதூறு என்றால் அதைப் பலருக்கும் பரப்பியவர் தான் முதல் குற்றவாளி. இது உலக நாடுகள் முழுவதும் உள்ள சட்டம்.
இந்த இடத்தில் கள்ளக் குழுமம் நடத்துவோரின் இன்னொரு கயமைத்தனத்தையும் நாம்சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இந்தக் கள்ளக் குழுமத்துக்கு தனது மனதில் பட்டதை எழுதக் கூடியவர்களை மேற்படி கள்ளக் குழுமம் நடத்துவோர் நாளை மிரட்டுவார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. அப்பாவிகள் எழுதுவதை கள்ளப் பேர்வழியே பரப்பிவிட்டு அந்த அப்பாவிக்கு எதிராகப் புகார் கொடுப்பேன் என்று மிரட்டுவதில் இருந்து இந்தக் கள்ளக் குழுமத்தில் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கள்ளப் பேர்வழி மீது உள்ள வழக்கு என்ன? ஏன் தலை மறைவாக வேண்டும்? குற்றப் புலனாய்வுத்துறையின் தேடுதல் பட்டியலில் கள்ளப் பேர்வழியின்பெயர்இருப்பது ஏன்? கள்ளப் பேர்வழியின் ஒரிஜினல் பெயர் என்ன? இப்பொது ஒளீந்து கொண்டிருப்பது எந்தப் பெயரில்? அனைத்தையும் போட்டுக் கொடுக்கட்டுமா என்றெல்லாம் பீஜே கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். எப்போது எங்கே எப்படி தெரிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பும் போது உரிய நேரத்தில் உரிய வகையில் செய்ய வேண்டியதை பீஜே செய்வார்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
29.01.2010. 17:43

