Navigation



முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்-2

முகவரியற்றவர்களின் வரட்டு வாதங்கள்

தொடர் 2

அபூஸுமய்யா கள்ளப் பேர்வழி தான் என்பது அவரது வார்த்தைகளில் இருந்தே நிரூபணமாவதை இப்போது பார்ப்போம்.

இவர்களின் குழுமத்தில் உறுப்பினராக உள்ள அபூ உமய்யா என்பவர் தன்னுடைய அனுபவத்தை ஆதாரத்துடன் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதில் இருந்து உண்மையை அறிந்து கொள்ளலாம்.

அபூஉமய்யா அம்பலப்படுத்துகிறார்

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர் பீ.ஜே, அவர்களுக்கு,

நான்கடந்த சில நாட்களாகத் தான் டி.எம்.பி குழுமத்தில் உறுப்பினராக இணைந்தேன்.ததஜ விற்கு ஆதரவாக எழுதப்படும் எழுத்துக்கள் மட்டுறுத்தல் என்றவிளையாட்டின் மூலம் மட்டுறுத்தப்படுவதும் பின்பு அதற்குரிய சால்ஜாப்புபதிலோடு குறிப்பிட்ட மெயில்களையும் வெளியிடுவது தான்இவர்களுடைய வேலை என்பதை சில நாட்களிலேயே கண்டு கொண்டேன்.

குறிப்பாகஅபூசுமைய்யா குறித்து அனுப்பப்படும் மெயில்களை அவரது பதிலோடு சேர்த்துத் தான்வெளியிடுவார்கள். ஆனால் நமக்கோ முதலில், உங்களது மெயில் குழுமவிதிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதால் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று பதில்அனுப்பி வைப்பார்கள். பிறகு குழும விதிமுறைகளுக்கு எதிரானதாகக் குறிப்பிடப்பட்ட அந்த மெயில் அபூசுமைய்யாவின் பதிலோடு வெளியிடப்படும்.

குழுமத்தின்விதிமுறைகளுக்கு எதிரானதாக, குறிப்பாக அபூசுமைய்யா குறித்து கேட்கப்படும் நமது மெயில்களுக்கு, அபூசுமைய்யா பதிலளிப்பாரேயானால் அதுகுழும விதிமுறைகளுக்கு உட்பட்ட மெயிலாக மாறிவிடும் மர்மம் என்னவென்றுநமக்கு விளங்கவில்லை. இவர்களுடைய இந்த நடைமுறை தான் இந்தக்குழுமத்தின் மீது எனக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ஆதாரம்-1-மட்டுறுத்தல்-1

உணர்வுவார இதழில் வெளியான கட்டுரையில் உள்ள வாசகங்கள் குறித்து அபூசுமைய்யா அவர்கள், பொன்மொழிகள் என்ற தலைப்பில்----நபிகள் நாயகத்திற்கு ஈடாக இவ்வுகில் யாரும் இல்லை மதுரை ஆதினம் வருத்தம் தெரிவித்து TNTJ விற்கு கடிதம் என்ற இழையில் ஒருவிமர்சனத்தை வைக்கின்றார். அதற்கு பதிலளிக்கும் விதமாக நானும் அதே இழையில், கீழ்க்கண்ட செய்தியைப் பதிவு செய்தேன்:

abu umaiya abuumaiyya@gmail.com

totamilmuslimbrothers@googlegroups.com

dateWed, Jan 13, 2010 at 10:20 PM

subjectRe: {TMB} நபிகள் நாயகத்திற்கு ஈடாக இவ்வுகில் யாரும் இல்லை மதுரை ஆதினம் வருத்தம் தெரிவித்து TNTJ விற்கு கடிதம்!

mailed-bygmail.com

கீழ்கண்ட இதஜ வினர் உபயோகித்த வார்த்தைகள் எல்லாம் பொன்மொழிகளா?

மடத்தனமான முற்றுகையும்

தனி நபர் அமைப்பு மட்டும் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடப் போவதாக ஸ்டன்ட் அடித்தது கேலிக் கூத்தானது

எடுத்தேன் கவிழ்த்தேன் என முற்றுகையை அறிவித்து விட்டு பின்னர் கேவலப்பட்டிருக்கிறார்கள்.அதைப் பெற்றுக் கொண்டு சரிதானுங்க என்கிற ரீதியில் வாபஸ் ஆகி புஸ் ஆகி விட்டார்கள் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பாவம் தலையை சொறிகின்றனர்

சமுதாயத்தினரிடம் மூக்குடைபட்டவர்கள்

படம் காட்டுகிறார்கள்

வயிற்றெரிச்சல்பட்டவரின் புலம்பல்களைப்

இவைகளெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியாதா?

Reply Forward

குழுமத்தின் பதில்

அபூசுமைய்யாவைநோக்கிகேள்வி கேட்கப்பட்டஎனதுமெயிலுக்குடி.எம்.பி.யினரின்பதில்,

ubjectRe: Re: {TMB} நபிகள் நாயகத்திற்கு ஈடாக இவ்வுகில் யாரும் இல்லை மதுரை ஆதினம் வருத்தம் தெரிவித்து TNTJ விற்கு கடிதம்! (Posting denied)

mailed-bygooglegroups.com

signed-bygooglegroups.com

hide details Jan 14

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரரே,

உங்கள் மடல் குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்ததால் மட்டுறுத்தப்பட்டது.

- தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.

சரி, அபூசுமய்யாவை நோக்கி கேள்வி கேட்டால் மட்டுறுத்தி விடுவார்கள் போல என்றுமனதைத் தேற்றிக் கொண்டு இருந்தால், அபூசுமைய்யாவின் பதிலோடு அதே எனதுமேற்கண்ட மெயிலை வெளியிடுகின்றனர்.

ஆதாரம் மட்டுறுத்துதல் 2

அபூசுமைய்யாவிற்குஅழகிய யோசனை என்ற தலைப்பில் அடுத்து ஒரு மெயிலை அனுப்புகின்றேன். அதுவும்குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளதால் மட்டுறுத்தப்பட்டு விட்டதுஎன்று குழுமத்திலிருந்து பதில் வர, அதற்கு அபூசுமைய்யா கூறிய பதிலோடு தடைசெய்யப்பட்ட எனது மெயிலை வெளியிடுகின்றனர்.

ஆதாரம் 3மட்டுறுத்தல் 3

இணை வைக்கும்இமாம் பற்றி கேள்வி கேட்ட ஒரு சகோதரருக்குப் பதிலளிக்கும் விதமாக ஆன்லைன்பீ.ஜே இணையதளத்தின் லிங்கோடு, சில குறிப்புடன் நான் அனுப்பிய மெயிலையும்மட்டுறுத்தி விட்டோம் என்று சொல்லி முழுகட்டுரையும் அனுப்பச் சொன்னார்கள்.அதே நேரத்தில் ஐ.என்.டி.ஜே. வுடைய லிங் மட்டும் அனுப்பிய மெயிலைவெளியிட்டுள்ளார்கள். நான் முழுக் கட்டுரையை அனுப்பியபிறகும், அதை வெளியிடாமல், அதற்குப் பதிலளிக்கும் விதமாக கீழ்த்தரமானவிமர்சனங்களோடு சம்சுதீன் விஷமி என்பவர் பேசிய ஆடியோவோடு தான் அதையும்வெளியிட்டார்கள். இந்நிலையில் தான் நான் குழுமத்தினருக்கு அனுப்பிமட்டுறுத்தப்பட்ட எனது மெயில் அபூசுமைய்யாவிற்கு எப்படி கிடைத்தது என்பதைக்கேள்வியாக எழுப்பி கீழ்க்கண்டவாறு மெயில் அனுப்பினேன்.

அபூ உமய்யா கடிதம்

உங்களது தொடர்பாக நான் எழுதக்கூடிய விஷயங்களை தமிழ்முஸ்லிம் குழுமத்தினருக்கு நான் அனுப்பிய உடன், குழுமத்திலிருந்து கீழ்க்கண்டவாறு எனக்கு பதில் அனுப்பப்படுகின்றது.

Reply |tamilmuslimbrothers+owner@googlegroups.com to me

குழுமத்தின் பதில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரரே,

உங்கள் மடல் குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்ததால் மட்டுறுத்தப்பட்டது.

- தமிழ் முஸ்லிம் சகோதரர்கள். - நான் அனுப்பிய விஷயத்தில் எந்த வாசகம் குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. அப்படியே எனது வாசகங்கள் இருந்திருக்குமானால் நான் அனுப்பிய மெயிலுக்கு உண்டான உங்களது பதிலோடு குழுமத்தினர் அதை வெளியிடுவது ஏன் என்றும் புரியவில்லை.

நாம் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் கருத்துப்பரிமாற்றம் செய்வதாக இருந்தால், நான் அனுப்பக்கூடிய கேள்வி மற்றும் கருத்துக்களை மட்டுறுத்தப்படாமால் வெளியிடுவதற்கு குழுவின் மாடரேட்டர்கள் ஒப்புதல் அளிப்பார்களேயானால், என்னால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் உங்களிடத்தில் நான் கருத்துப்பரிமாற்றம் முழுவதுமாக செய்ய தயார் என்று அறிவித்துவிட்டு, குழுமமாடரேட்டர்கள் நான் அனுப்பிய மெயில்கள்

உங்கள் மடல் குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்ததால் மட்டுறுத்தப்பட்டது. எனக்கு பதில் அனுப்புவார்களேயானால், நானும் பதிலலிக்கின்றேன் என்று சொல்லி பாதியில் அமைதியாகி விட்டதாக நீங்கள் அறிவித்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது. எனவே,

நான் அனுப்பக்கூடிய கேள்வி மற்றும் கருத்துக்களை மட்டுறுத்தப்படாமால் வெளியிடுவதற்கு குழுவின் மாடரேட்டர்கள் ஒப்புதல் அளிப்பார்களேயானால், என்னால் இயன்ற அளவுக்கு உங்களுக்கு பதில் அளிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்

நாம் அனைவரும் உண்மையை விளங்க நேர்வழிகாட்டும் அருளாளான் அருள் புரிவானாக!அதற்கு கீழ்க்கண்டவாறு அபூசுமைய்யா அவர்கள் பதிலளித்தார்.

அபூ ஸுமையாவின் பதில்

அஸு to tamilmuslimbro.

show details Jan 16

குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? எனக்கு உங்கள் மடல் வராமல் நான் எப்படி உங்களுக்குப் பதில் அளித்திருப்பேன்? நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள்என நினைக்கிறேன்.

குழுமத்தின் விதிமுறைக்கு எதிரானதாக உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டதன் விளக்கம், நீங்கள் குழும மாடரேட்டர்களிடம் தான் கேட்க வேண்டும். அநியாயமாக உங்கள் மடல் காரணமின்றி மட்டுறுத்தப்பட்டால், உங்களுடன் நானும் அதனை எதிர்ப்பேன்.

எனக்கு நீங்கள் சிசி போட்டு அனுப்புவதால், குழுமத்தில் மட்டுறுத்தப்பட்டாலும் அது ஒரு பிரச்சனையாக இராது. அத்தோடு உங்கள் மடல் அனைத்தையும் மட்டுறுத்தாமல் அனுமதிக்க வேண்டிய உத்தரவாதம் என்னால் தரவும் இயலாது. அதனைக் குழும மாடரேட்டர் தான் தர வேண்டும்.

- அபூ சுமையா

அபூ உமய்யா பதில்

அபூசுமைய்யா கூறுவது பொய் தான் என்பது தெள்ளத் தெளிவாக எனக்கு தெரிந்த நிலையில் கீழ்க்கண்டவாறு அவருக்கு பதிளளித்தேன்.

சகோதரர் அபூ சுமைய்யா அவர்களுக்கு,

\ குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? எனக்கு உங்கள் மடல் வராமல் நான் எப்படி உங்களுக்குப் பதில் அளித்திருப்பேன்? நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்\

நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றீர்களே! இது எவ்விதத்தில் நியாயம்? நான் உங்கள் தொடர்பான மெயில்களை டி.எம்.பி.க்கு மட்டுமே அனுப்பியிருக்கும் நிலையில் நான் உங்களுக்கு சிசி போட்டிருப்பேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்து, குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? என்று என்னிடத்தில் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். நான் உங்களை நோக்கி கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் முந்திக்கொண்டு, என்னை நோக்கி எழுப்பியுள்ளீர்கள். அதற்குரிய பதில் உங்களுக்குத்தான் தெரியும். ஏனெனில் நான் இது வரை உங்களது மெயில் ஐ.டி.க்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு மெயிலும் அனுப்பியிராத நிலையில் உங்களது மேற்கண்ட பதில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை எற்படுத்துகின்றது. யாரிடத்தில் இருந்து மெயில் வந்துள்ளது என்பது கூடவா தெரியாமல் இருக்கின்றீர்கள்.

இப்படி ஆளுக்கு ஆள் அபூ உமையா எனக்கு ஒரு சிசி போட்டுவிட்டார் என்று கிளம்பிவிட்டால் என்னவாகும்? என்று சற்று யோசித்து பருங்கள். நான் யாருக்கும் மெயில் அனுப்பாத நிலையில், எனக்கு நீங்கள் மெயில் அனுப்பினீர்கள் என்று ஆளுக்காள் கூறுவார்களேயானால் அது பல விபரீதங்களை ஏற்படுத்தும்.

நிரூபித்தே ஆகவேண்டும்!

நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்\ என்று யூகமெல்லாம் வேண்டாம். நான் உங்களுக்கு சிசி போட்டு அனுப்பியிருந்திருந்தால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். அதாவது நான் எனது மெயில் ஐ.டி.யிலிருந்து உங்களுக்கு சிசி போட்டு அனுப்பியதாக கூறும் மெயிலை எனக்கு ஃபார்வேடு செய்து நீங்கள் நான் அனுப்பியதாக கூறும் மெயிலை நிரூபிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நான் அனுப்பிய மெயிலை குழுமத்தினர் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி அதற்கு நீங்கள் பதிலளித்தபின் வெளியிடுகிறார்களா? அப்படியென்றால் அபூசுமைய்யா தான் டி.எம்.பி.குழுமமா? எனது இந்த நியாயமான சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய நீங்களும் குழுமத்தினரும் கடமைப்பட்டுள்ளீர்கள்.

1.நான் உங்களுக்கு சிசி போட்டேன் என்பதை நீங்கள் நிரூபியுங்கள். (நிச்சயமாக நீங்கள் நிரூபிக்க முடியாது. ஏனெனில் அது உங்களது யூகம்)

2. நீங்கள் நிரூபிக்காத பட்சத்தில், அபூசுமைய்யாவும் குழுமத்தில் ஒருவராக இருக்க வேண்டும்

3.அல்லது குழுமத்திற்கு வரக்கூடிய உங்களது தொடர்பான மெயில்களை குழுமமே உங்களுக்கு முதலில் அனுப்பி, ஒருபக்க சார்பாக குழுமத்தினர் நடந்திருக்க வேண்டும்

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.

நான் அனுப்பிய மெயில்,குழுமத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதால் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று குழுமத்திலிருந்து எனக்கு பதில் அனுப்புகின்றார்கள். ஆனால், நீங்கள் நான் அனுப்புகிற மெயிலுக்கு தரும் பதிலோடு பிறகு என்னுடைய செய்தி குழுமத்தில் வெளியிடப்படுகின்றது. அது மட்டும் எப்படி? என்று நான் உங்களையும், குழுமத்தினரையும் பார்த்து கேட்ட கேள்வியையே என்னிடத்தில் நீங்கள் திருப்பிக்கேட்பது எந்தவிதத்தில் நியாயம் சகோதரா? என்னுடைய மெயிலை ஏன் மட்டுறுத்தினார்கள் என்ற விபரத்தை இதுவரை குழுமத்தினரும் எனக்குத் தெரிவிக்கவில்லை. மட்டுறுத்தப்பட்டதற்கு தகுந்த காரணம் இருக்குமேயானால் எனக்கு இதுவரை தெரியாத, எனக்கு குழுமத்தினரால் இதுவரைத் தெரிவிக்கப்படாத அந்த காரணத்தை நான் சரி செய்யாமலேயே என்னுடைய மெயிலை ஏன் குழுமத்தில் பிரசுரித்தார்கள்? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.

குழுமத்தினரின் மேற்கண்ட நிலை, டி.எம்.பி.குழுமம் குறித்து எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இது குறித்து குழுமத்தினர் எனக்கு தக்க விளக்கம் அளிக்க கடமைப்பாட்டுள்ளனர்.

\குழுமத்தின் விதிமுறைக்கு எதிரானதாக உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டதன் விளக்கம், நீங்கள் குழும மாடரேட்டர்களிடம் தான் கேட்க வேண்டும். அநியாயமாக உங்கள் மடல் காரணமின்றி மட்டுறுத்தப்பட்டால், உங்களுடன் நானும் அதனை எதிர்ப்பேன்.\ எனக்கு எழுதியிருந்தீர்கள்.

கீழ்கண்டவாசகங்களோடு குழுமமாடரேட்டர்களுக்கு நான் மெயில் அனுப்பினேன்.

குழுமத்தின் விதிமுறைகளை எனக்கு ஒரு காப்பி அனுப்புங்கள், மேலும் குழுமத்தின் எந்த விதிக்கு மாறாக நான் அனுப்பிய மெயில் உள்ளது என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். என்னை சரி செய்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் ஆனால், குழுமத்தின் எந்த விதிக்கு முரணாக எனது மெயில் உள்ளது என்பதை இதுவரை அவர்கள் எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனால் குழுமத்தின் விதிமுறைகளை மட்டும் ஒரு காப்பி அனுப்பிவைத்துள்ளார்கள்.

\எனக்கு நீங்கள் சிசி போட்டு அனுப்புவதால், குழுமத்தில் மட்டுறுத்தப்பட்டாலும் அது ஒரு பிரச்சனையாக இராது.\ என்று என்னை நோக்கி எழுதியுள்ளீர்கள். முதலில், கடிதத்தின் ஆரம்பத்தில், நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் எழுதியிருந்தீர்கள். ஆனால், பின்னாலோ நீங்கள் அவ்வாறு சிசி போட்டு அனுப்புவதால் என்று நீங்கள் எழுதியதன் மூலம் நீங்கள் யூகித்த யூகத்தை உறுதி செய்கின்றீர்கள். என்னே அருமையான வார்த்தை பிரயோகம்? மறுபடியும் அழுத்தமாக பதிவு செய்கிறேன், நான் இது வரை உங்களது மெயில் ஐ.டி.க்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு மெயிலும் அனுப்பவில்லை.

குழுமத்தில் மட்டுறுத்தப்பட்டாலும் அது ஒரு பிரச்சனையாக இராது.\ மிகவும் புத்திசாலித்தனமாக எழுதியுள்ளீர்கள். எது உண்மை நிலை என்பதை டி.எம்.பி. குழுமத்திலுள்ள அனைத்து சகோதரர்களும் விளங்கிக்கொள்வதற்காக இந்த கருத்து பரிமாற்றமா? நீங்களும் நானும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதற்கா? நான் அனுப்பிய நியாயமான கேள்விகள் எவ்வித காரணமுமின்றி மட்டுறுத்தப்பட்டு, உங்களது வாதங்கள் மட்டும் டி.எம்.பி குழுமத்தினரால் வெளியிடப்பட்டால், அப்படி ஒரு ஒருதலைபட்சமான கருத்துப் பரிமாற்றம் தேவைதானா? என்னுடைய கருத்துக்கள் மட்டுறுத்தப்படும், நான் உங்களுக்கு சிசி அனுப்புவேனேயானால் நீக்கள் கூறுவது போன்று அது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இராது, ஆனால், என்னுடன் உரையாடிய ததஜ அனுதாபி ஆளைக்காணோம், அமைதியாகிவிட்டார் என்ற அவப்பெயரையும் இந்த அபூஉமைய்யா சுமக்க வேண்டுமா என்ன?

அத்தோடு உங்கள் மடல் அனைத்தையும் மட்டுறுத்தாமல் அனுமதிக்க வேண்டிய உத்தரவாதம் என்னால் தரவும் இயலாது.

உண்மை நிலை அறிவதன் அவசியத்தை வலியுறுத்தி, நாம் முழுமையாக கருத்துப்பரிமாற்றம் செய்யவேண்டுமானால் மட்டுறுத்தப்படும் விளையாட்டெல்லாம் விளயாடாமல் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்று நீங்களும் டி.எம்.பி.குழுமத்தினரை வலியுற்த்துவதை விட்டு விட்டு, மேற்கண்ட வார்த்தையை எழுதி உத்தரவாதமெல்லாம் தர முடியாது என்பதை நீங்களும் உறுதி செய்வது எவ்விதத்திலும் நியாயமில்லை.

அமைதியானார்களா? அமுக்கப்பட்டார்களா?

இதுவரை எத்தனை ததஜ சகோதரர்கள் வருவதும் கேள்விகள் கேட்டதும் அமைதியாகி விடுவதுமாக உள்ளனர் என்பதை நான் தனியாக பட்டியல் போட வேண்டிய தேவை இல்லா அளவுக்கு இக்குழுமத்தினருக்குத் தெரியும் இதுவும் நீங்கள் எழுதிய வார்த்தைகள் தான். ததஜ சகோதரர்கள் வந்து கேள்விகேட்டு அமைதியாகி விட்டார்களா? அல்லது டி.எம்.பி.குழுமத்தினரால், மட்டுறுத்தப்பட்டு அமுக்கப்பட்டார்களா? என்ற எனது அடுத்த சந்தேகத்திற்கும் குழுமத்தினர் நிச்சயம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். அப்படி இதுவரை கருத்துக்கள் அனுப்பிய எந்த ததஜ ஆதரவு சகோதரருடைய மெயிலும் எங்களால் மட்டுறுத்தப்பட வில்லை மாறாக அவர்களாகவே தான் அமைதியாகிவிட்டனர் என்பதை குழுமத்தினர் உறுதி செய்தால் தான் கருத்துப் பரிமாற்றம் செய்வதில் பிரயோஜனம் உள்ளது. அதை விட்டுவிட்டு பொன்மொழிகள் என்று நீங்கள் அனுப்பும் மெயிலை வெளியிடுவதும், அதே போன்று நான் அனுப்பும் பொன்மொழிகள் பட்டியல் மட்டும் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று எனக்கு டி.எம்.பி.குழுமத்திலிருந்து பதில் அனுப்புவதும், நான் அனுப்பிய மெயிலுக்கு பதிலை நீங்கள் அனுப்பிய பிறகு மட்டுறுத்தப்பட்ட எனது மெயிலே டி.எம்.பி.யில் வெளியிடப்படும் விளையாட்டுக்கள் தொடந்தால் உங்களிடத்தில் பதில் இருந்தால் மட்டுமே எனது மெயில் வெளியிடப்படும் நிலை. இப்படி ஒரு நிலை இருக்குமேயானால் உங்களது தவறை சுட்டிக்காட்டும் நிலைஇருக்காது. இந்த நிலை அபூ உமைய்யாவுக்கு தேவையுமில்லை.

பீ.ஜே.வின் துணிச்சலை பாராட்டுகின்றேன் டி.எம்.பி.குழுமத்தினர் நான் அனுப்பிய ஒரு சில மெயில்களையும் மட்டுறுத்துகின்றோம் என்று சொல்கின்ற நிலையில், பீ.ஜே அவர்களோ அவரை லென்ஸ் வைத்து பார்ப்பதே வேளையாக அறிவித்திருக்கின்ற ஒருவரது (அபூசுமைய்யா.. உங்களைத்தான்) விமர்சனத்தை எந்த விதமான எடிடிங்கும் செய்யாமல் தனது இணையதளத்தில் வெளியிட்டு அதற்கு பதிலளிக்கின்றேன் என்று தனது இணையதளத்தில் அறிவிப்பும் வெளியிட்டு இருக்கின்றார் என்றால் உண்மையிலேயே அவருக்கு சரியான துணிச்சல்தான்.

//பீஜேயின் விஷயத்தில் மட்டும் லென்ஸ் வைத்து பார்த்து குற்றம் கண்டுபிடிப்பது உங்கள் வழக்கம்//- 26119அன்று சிநேகிதன் கேட்டது, அதற்கு பதிலலிக்கும் விதமாக 1129அன்று அபூ சுமைய்யா சொன்னது

மற்ற எல்லோருடைய விஷயத்திலும் விமர்சனம் என்ற பெயரில் ஒரு சாதாரண பாமர முஸ்லிம் கூட பேசுவதற்கு வெட்கப்படும் கேவலமான வாசகங்களுடன் பிஜே லென்ஸ் வைத்து பார்த்து உளறிக் கொட்டும் போது அவரின் உளறல்களையும் கேவலமான செயல்பாடுகளையும் லென்ஸ் வைத்துப் பார்த்து விமர்சிக்க ஒருவராவது வேண்டாமோ? லென்ஸ் வைத்து பார்த்து பீ.ஜே உடைய குறைகளை கண்டுபிடிக்கும் அபூசுமைய்யா அவர்கள் யரென்று தெரிந்தால் டி.எம்.பி.குழுமம் போன்று மட்டுறுத்தப்படாமல் பதில் தருவாராம் பீ.ஜே. இவ்வளவு அறிவிப்புக்கு பிறகும் நீக்கள் யாரென்று அறிவிக்க மறுப்பதைப் பார்த்தால் உங்கள் மீது சந்தேகம் எழுவது இயல்பே! எனது மேற்கண்ட சந்தேகங்கள் அனைத்திற்கும் டி.எம்.பி குழுமத்தாரும் அபூசுமைய்யா வும் பதிலளிப்பார்களா?

நாம் அனைவரும் உண்மையை விளங்க நேர்வழிகாட்டும் அருளாளான் அருள் புரிவானாக! ஆவலுடன், அபூஉமைய்யா

அபூ ஸுமையாவின் பதில்

அதற்கு கீழ்கண்டவாறு அபூசுமைய்யா பதிலளித்தார்.

அஸு to tamilmuslimbro.

show details Jan 17 (4days ago)

அன்புச் சகோதரர் அபூ உமையாவுக்கு,

முதலில் என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.

உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டதாக குழும மாடரேட்டரிடமிருந்து மடல் வந்திருக்க, உங்களின் அந்த மட்டுறுத்தப்பட்ட மடலுக்கு நான் எப்படி பதில் போட்டேன் என்று நீங்கள் கேட்டதால், ஒருவேளை குழுமத்துக்கு அனுப்பிய அதே வேளையில் எனக்கும் நீங்கள் சிசி(இங்கு சிசி என்பதில் பிசிசியும் உட்படும்) போட்டிருக்கலாம். ஆகவே, குழுமம் மட்டுறுத்தினாலும் எனக்கு அது கிடைத்திருக்கும் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு கூறியிருந்தேன்.

ஆனால் அதனைத் தாங்கள் மறுத்து விட்ட நிலையில், என் கருத்தை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். குழுமத்தில் அனுமதிக்கப்படாத ஒரு மெயில் எனக்குக் கிடைத்தது எனில், அதற்கு இது ஒன்றே சாத்தியம் என்று கருதியதாலேயே அவ்வாறு குறிப்பிட்டுருந்தேன். ஆனால், குழும மாடரேட்டர்களே எனக்கு நேரடியாக அனுப்பி தந்திருக்கலாம் என்று மற்றொரு சாத்தியத்தையும் நீங்கள் குறிப்பிட்டது சரியான சந்தேகமே. இதுவரை குழும மாடரேட்டர்களிடமிருந்து எனக்கு அவ்வாறான ஒரு மடல் கிடைக்கப்பெறாததால் நான் அந்த வழியில் சிந்திக்கவில்லை.

அனுமானத்தின் அடிப்படையில் நான் கூறியது தவறு தான். என்னை மன்னியுங்கள். நீங்கள் எனக்கு சிசி போட்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்டதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

அத்தோடு, இதுவரை எந்த ஒரு மடலும் எனக்கு இக்குழும மாடரேட்டர்களிடமிருந்து தனியாக கிடைக்கப்பெறவில்லை என்பதையும் இங்கு உறுதி கூறுகிறேன்.

என் மடலுக்கு வந்த மெயிலுக்கே நான் பதிலளித்தேன். அந்த மெயில் குழுமத்திலிருந்து தான் வந்தது, அல்லாமல் தனியாக அல்ல. இதே இழையில்,

1. இதஜவின் பொன்மொழிகள்

2.அபூ சுமையாவின் பொன்மொழிகள் என

இரு மெயில்களை நீங்கள் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அனுப்பியுள்ளீர்கள். அது குழுமத்தில் அனுமதிக்கப்பட்டே எனக்குக் கிடைத்துள்ளது. தயவு செய்து இதனை மற்ற சகோதரர்களும் தங்களின் இன்பாக்ஸில் இதே இழையில் செக் செய்து உறுதிபடுத்தக் கோருகிறேன்.

இந்த இரண்டு மடல்களுக்கு நான் உங்களுக்குப் பதிலளித்துள்ளேன். இவையல்லாமல் வேறு எந்த உங்களின் மடல் மட்டுறுத்தப்பட்டது என்பதையும் அவ்வாறு மட்டுறுத்தப்பட்ட உங்களின் எந்த மடலுக்கு நான் பதிலளித்திருந்தேன் என்பதையும் நீங்கள் இங்கு ஆதாரத்துடன் வையுங்கள். அவ்வாறு வைத்தாலே, உங்களின் குற்றச்சாட்டுகள் சரியானவை என்று கருதப்படும்.

இந்த விஷயத்தை முடித்துக் கொண்டப்பின், பாதியில் அமைதியாகி விடமாட்டேன் என்று உங்களிடமிருந்து உறுதிமொழி கிடைக்கும்பட்சத்தில் மட்டுமே உங்களுடன் மற்ற விஷயங்கள் குறித்து கருத்துப்பரிமாற துவங்குவேன் இன்ஷா அல்லாஹ்.

  • அபூ சுமையா
  • குழுமத்தின் பதில்
  • குழுமம் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டி வரும் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். என்னுடைய மூன்று மெயில்களை மட்டுறுத்திவிட்டு, அபூசுமைய்யாவின் பதிலோடு அதைத் திரும்பவும் வெளியிட்டு விட்டு, இரண்டு மெயிலை தான் மட்டுறுத்தினோம் என்று சொல்லி தங்களது விதிமுறைகள் என்று கூறி ஒரு மெயிலையும் குழுமத்தினர் எனக்கு அனுப்பிவைத்தனர்.
  • சகோதரர் அபூஉமைய்யா,
  • நம் குழுமத்தின் மீது உறுப்பினர்களுக்குச் சந்தேகம் எழும் வகையிலான குற்றச்சாட்டுகளை அனுப்பியுள்ளீர்கள்.
  • பத்து நாட்களுக்கு முன்னர் நம் குழுமத்தில் இணைந்த நீங்கள், இதுவரை மொத்தம் எத்தனை மெயில்கள் நம் குழுமத்துக்கு அனுப்பியுள்ளீர்கள் என்றும் அதில் எந்தெந்த மெயில்களெல்லாம் குழும விதிமுறைகளுக்கு மாறாக மட்டுறுத்தப்பட்டது என்ற விவரத்தையும் நீங்கள் இங்கு வையுங்கள்.
  • இதுவரை நீங்கள் அனுப்பியுள்ள மெயில்களில் வெறும் சுட்டி மட்டும் அனுப்பிய ஒரு மெயிலும் ஒரே மெயிலை இருமுறை அனுப்பியதில் ஒரு மெயிலும் ஆக இரு மெயில்கள் மட்டுமே நம் குழுமத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுறுத்தப்பட்டுள்ளது. இதுவன்றி உங்களின் வேறு எந்த மெயில் மட்டுறுத்தப்பட்டது என்பதையும் அவ்வாறு மட்டுறுத்தப்பட்ட எந்த மெயிலைச் சகோதரர் அபூசுமைய்யாவுக்கு நாங்கள் தனியாக அனுப்பிக் கொடுத்தோம் என்பதையும் நீங்கள் முழு விவரத்தோடு இங்கு வையுங்கள். ஆதாரமின்றி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்களே பதிலளிக்க வேண்டும்.
  • சில விஷயங்கள் குழும சகோதரர்கள் அறிதலுக்காக:
  • நாம் இதுவரை இரண்டு சகோதரர்களின் மெயில்களை மட்டுமே முழுமையாக மட்டுறுத்துகிறோம்.
  • 1. சகோதரர் ரசூல்
  • 2. சகோதரர் நண்பன்
  • இதில் சகோதரர் ரசூல், ரஷாத் கலீஃபாவை முஸ்லிம் அறிஞர் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரை எதன் அடிப்படையில் முஸ்லிம் அறிஞர் என்று கூறுகிறீர்கள்? என குழுமத்தில் அவரின் கருத்துக்கு எதிராக வைக்கப்பட்ட கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தக் காரணத்தால், அவரின் மற்ற அனைத்து மடல்களும் மட்டுறுத்தப்படுகின்றன. அவருடைய கருத்துக்கு எதிரான கேள்விக்கு அவர் பதிலளிக்கும்பட்சத்தில் மட்டுமே தொடர்ந்து அவரின் மடல்கள் குழுமத்தில் அனுமதிக்கப்படும்
  • அதே போன்று குழும சகோதரர்களின் தொடர் கோரிக்கைக்கு இணங்க, சகோதரர் நண்பனின் ஐடியை நீக்குவது தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பு இக்குழுமத்தில் வைக்கப்பட்டு, அதில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அவரின் அனைத்து மடல்களும் மட்டுறுத்தப்படும் என்ற அறிவிப்பு இக்குழுமத்தில் செய்யப்பட்டு, அதன்படி அவரின் அனைத்து மடல்களும் மட்டுறுத்தப்படுகிறது.
  • இவர்களின்றி, சகோதரர் முஹம்மது உபைஸ் அவர்களின் மடல்களையும் முழுமையாக மட்டுறுத்துவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன(பல இடங்களில் தன் கருத்துக்கான விளக்கங்களை அவர் பதிலாகப் பதிவு செய்யாத காரணத்தால். இன்ஷா அல்லாஹ் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்).
  • மேற்கண்ட இருவரின்றி வேறு எந்த ஒரு சகோதரரின் மடலும் இதுவரை நம் குழுமத்தில் முழுமையாக மட்டுறுத்தப்படவில்லை.
  • 1. அனுப்பிய மடலையே திரும்ப அனுப்புதல்
  • 2. வெறும் சுட்டி மட்டும் அனுப்புதல்
  • 3. மிகத் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துதல்
  • 4. ஆங்கில மடல்கள்
  • பெரும்பாலும் இந்நான்கு விஷயங்களுக்காகவே நம் குழுமத்தில் அநேக மட்டுறுத்துதல்கள் நடைபெறுகின்றன. இவையன்றி ஒருதலைபட்சமாக இதுவரை நாம் செயல்படவில்லை என்று அல்லாஹ்வுக்கு அஞ்சி தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவிக்கும் சகோதரர்கள், அதற்கான ஆதாரத்துடன் வெளிப்படையாக குழுமத்திலேயே தங்களின் குற்றச்சாட்டைப் பதிவு செய்யலாம்.
  • நம் குழுமத்தின் வசதிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட மாடரேட்டர்கள் இருப்பது சகோதரர்களுக்குத் தெரியும். தினசரி வரும் மெயில்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்து, மேலும் மாடரேட்டர்களை நியமிக்கத் தேர்வு செய்து கொண்டும் இருக்கிறோம். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்படும் மாடரேட்டர்களால் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு குழும விதிமுறைக்கு எதிராக எந்த ஒரு மெயிலாவது மட்டுறுத்தப்பட்டிருந்தால், அதனை முழு விவரத்துடன் அனுப்பி வைத்தால் இன்ஷா அல்லாஹ் பரிசீலித்து முடிவுகாணப்படும்.
  • இதுவன்றி, இந்தக் குழுமத்தில் எவராவது அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க முடியாமல் அமுக்கப்பட்டதாக சகோதரர் அபூஉமைய்யா அவர்களுக்குத் தெரிந்தால், அதனை அவர் ஆதாரத்துடன் இங்கு தெரிவிக்கலாம். இம்மாதம் 6ஆம் தேதி இக்குழுமத்தில் இணைந்த சகோதரர் அபூஉமைய்யா அவர்கள், 10நாட்களுக்குள் இக்குழுமத்தைக் குறித்து ஒரு முடிவுக்கு வருவது சரியல்ல.
  • யாருக்காவது இக்குழுமத்தில் தங்களின் கருத்துக்களைப் பதிய விடாமல் தடுக்கப்பட்டதாக தோன்றினால், அவர்கள் வெளிப்படையாக அதனைப் பதிவு செய்யலாம்.
  • நாகரீகமாக, இஸ்லாமிய பண்புகளைப் பேணி நடத்தப்படும் கருத்துப்பரிமாற்றத்துக்கு இது ஒரு சுதந்திரமான களமே என்பதை இங்கு உறுதியுடன் அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து பதிவு செய்கிறோம்.
  • - தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்.
  •  
  • இது தொடர்பான அத்தனை மெயில்களையும் ஆதாரத்திற்காக உங்களுக்கு ஃபர்வேர்டு செய்கின்றேன்

இப்படிக்கு,

அபூஉமைய்யா

சகோதரர் அபூ உமய்யா அனுப்பியுள்ள இந்தத் தகவல்களில் இருந்து நாம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்கே வைக்கிறோம்.

கேள்வி -1

இந்தக் கள்ளக் முழுமம் நடத்துவோர் எதை வெளியிடவும் பரப்பவும் இந்த நாடகம் நடத்துகிறார்களோ அதற்கு எதிராக யாராவது எழுதினால் அபூ ஸுமய்யா கோ நடத்தும் இந்தக் கள்ளக் குழுமம் உடனே வெளியிடுவதில்லை. மாறாக உங்கள் மடல் மட்டுறுத்தப்பட்டுள்ளது என்ற பதிலை மறுப்பை எழுதியவருக்கு மட்டும் தெரிவிக்கிறார்கள். குழுமத்தில் உள்ள மற்றவர்களுக்கு மட்டுறுத்திய விபரம் தெரியாது. ஒரு கட்டுரை வெளியிடப்பட்டால் தான் உறுப்பினருக்குத் தெரியுமே தவிர வெளியிட மறுத்த விபரம் குழுமத்தில் வைக்கப்படாததால் மற்றவர்களுக்குத் தெரியாது.

விதி முறைக்கு முரணானது என்று காரணம் கூறி மட்டுறுத்திய மடல் சில மணி நேரம் கழித்து குழுமத்தில் வெளியிடப்படுகிறது. அதுவும் எப்படி வெளியிடப்படுகிறது? அந்த மடலுக்கு அபூ ஸுமையா எழுதும் மழுப்புடன் (மறுப்பு அல்ல) வெளியிடப்படுகிறது.

விதி முறைக்கு மாறானது என்று காரணம் கூறி மேற்கண்ட மெயில்கள் குழுமத்தால் மட்டுறுத்தப்பட்டது என்றால் அதன் பின் அதை வெளியிடாமல் இருக்க வேண்டும். விதி முறைக்கு மாறானது என்பது காரணம் என்றால் அதை வெளியிடவே கூடாது.

சரி தவறாக மட்டுறுத்தி விட்டார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்? அபூ உமய்யா எழுதியதை அப்படியே வெளியிட வேண்டும். வெளியிட்ட பிறகு அதைப் பார்க்கும் உறுப்பினர்கள் தங்களது மறுப்பை வெளியிட்டால் அது ஏற்கத்தக்கது தான். ஆனால் என்ன நடந்துள்ளது? விதிமுறைக்கு மாறானது என்று குழுமத்தால் மறுக்கப்பட்ட மடல் அபூ ஸுமையாவின் மறுப்போடு வெளியிடப்படுகிறது. அபூ ஸுமையா என்பவர் மற்ற ஏமாளிகளைப் போல் குழுமத்தில் ஒரு உறுப்பினர் என்று பதில் சொல்வார்களானால் மறுக்கப்பட்ட மடல் குழுமத்தில் வெளியிடப்பட்டு மற்றவர்கள் அதைப் பார்ப்பது போல் அவரும் பார்த்து விட்டு மறுப்பு எழுதினால் அது சரி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் அபூ உமய்யா எழுதிய மடல் அபூ உமய்யாவுக்கும், குழுமம் நடத்துவோருக்கும் மட்டுமே தெரியும் நிலையில் வெளியிடுவதற்கு முன் அபூ ஸுமய்யாவுக்கு எப்படித் தெரிந்தது? தெரிந்தது மட்டும் இன்றி அதற்கு அபூ ஸுமய்யா எழுதும் மறுப்புடன் சேர்த்து எப்படி வெளியிடப்படுகிறது?

அப்படியானால் இந்தக் கள்ளப் பேர்வழி தான் குழுமம் நடத்துகிறார் என்பது புரிகிறதா? அல்லது அதை நடத்தும் பல கள்ளர்களில் இவரும் ஒருவர் என்று புரிகிறதா?

ஒருவரது கருத்துக்கு மறுப்பு இருந்தால் தான் அதை வெளியிடுவார்கள் என்பதும் மறுப்பு சொல்ல வக்கில்லாவிட்டால் மட்டுறுத்தி விடுவார்கள் என்பதும் தெரிகிறதா?

இந்தக் கேள்விகளில் தான் இவர்கள் கள்ளப் பேர்வழிகள் என்பது அம்பலமாகிறது.

கேள்வி 2

அபூ உமய்யா மிகத் துல்லியமாக இதைக் கண்டு பிடிக்கிறார். நான் குழுமத்துக்கு அனுப்பிய மடல் அது வெளியிடத் தகுதியற்றது எனக் கூறி தடுக்கப்பட்ட பின் அபூ ஸுமாய்யாவின் பதிலோடு எப்படி வெளியிடப்பட்டது என்று அபூ உமய்யா கேட்கிறார். அபூஸுமய்யா தான் இதை நடத்துபவரா? அல்லது கள்ளக் கும்பலில் அவரும் ஒருவரா என்பது தான் இக்கேள்வியில் அடங்கியுள்ளது.

இதற்குப் பதில் எழுதும் போது தான் இந்தத் திருட்டுக் கும்பல் வசமாக மாட்டிக் கொண்டது. தனக்கும் மூளைக்கும் சம்மந்தமில்லை என்பதைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்டியது

குழுமத்துக்கு நான் அனுப்பிய மடல் அபூ ஸுமய்யாவுக்கு எப்படிக் கிடைத்தது என்பது கேள்வி. இதற்கும் அபூ ஸுமய்யா தான் பதில் சொல்கிறார். அவரது பல்லிளிக்கும் பதிலைப் பாருங்கள்

குழுமத்தில் மட்டுறுத்தப்பட்ட மடல் எனக்கு வந்தது எவ்வாறு? எனக்கு உங்கள் மடல் வராமல் நான் எப்படி உங்களுக்குப் பதில் அளித்திருப்பேன்? நீங்கள் எனக்கும் சிசி போட்டு அனுப்பியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

வசமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என்ற பதட்டத்தில் இத்தனை நாள் நடத்திய நாடகம் முடிவுக்கு வரப் போகிறதே என்ற கலக்கத்தில் நீங்கள் சிசி போட்டு நீங்கள் அனுப்பி இருப்பீர்கள் என்று இந்தக் கள்ளப் பேர்வழி கூறுகிறார்.

நான் கேட்கிறேன் ஊகமாகக் கூற வேண்டியவைகளை ஊகமாகக் கூறுவதில் தவறு இல்லை. ஆனால் உறுதியாகக் கூற வேண்டிய விஷயத்தில் ஊகமாகக் கூறுவது அயோக்கியத் தனம்.

ஒருவர் ஒரு செய்தியை இன்னொருவருக்கு சிசி போட்டு அனுப்பினால் அது அவரது இன்பாக்ஸில் இருக்கும். நீங்கள் இந்த நாளில் இந்த நேரத்தில் எனக்கு சிசி போட்டு அனுப்பினீர்கள். அதனால் எனக்குத் தெரிந்தது என்று கூற வேண்டும். சிசி போட்டு அனுப்பி இருப்பீர்கள் என்று தனது குழுமத்தில் உள்ள அப்பாவிகள் போல் அபூ உமையாவையும் நினைத்துக் கொண்டு இதைப் பதிலாகத் தருகிறார்.

நான் சிசி போட்டிருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை நடத்துபவர் அபூ ஸுமையா தான் என்பது கேள்வியின் சாரம்.

நீங்க சிசி போடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று இந்தக் கள்ளப் பேர்வழி பதிலளிக்கிறார்.

உடனே சில கூறு கெட்டதுகள் இந்த மன்னிப்பைச் சிலாகித்து எழுதுகின்றன. அதாவது அவ்வாறு எழுதுவதாக செட்டப் செய்கின்றனர்.

என்னுடைய பேனாவை ஒருவரிடம் நான் பார்க்கிறேன். இது எப்படி உங்களுக்கு வந்தது என்று நான் கேட்கிறேன், நீங்கள் தான் தந்திருப்பீர்கள் என்று அவர் கூறுகிறார். நான் தரவே இல்லை. உங்களை நான் பார்க்கவே இல்லையே என்று கூறுகிறேன். அப்படியா நீங்கள் என்னிடம் தந்ததாக நான் கூறியது தவறு; மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறுகிறார். அப்படியானால் பேனா அம்போ தானா? என் பேனா அவரிடம் எப்படி வந்தது என்பதற்கு என்ன விடை? அவர் தான் மன்னிப்புக் கேட்டு விட்டாரே இதோடு விட்டு விடுங்கள் என்பது தான் பேனாவின் சொந்தக் காரனுக்கு அளிக்கும் நீதியா?

இது போல் இந்தப் பிரச்சனையில் எதற்குப் பதில் சொல்ல வேண்டும்? அபூ உமய்யா, இந்தக் கள்ளப் பேர்வழிக்கு அனுப்பவில்லை என்றால் அது எப்படி இந்தக் கள்ளப் பேர்வழிக்கு வந்தது என்பதற்கு என்ன பதில்?

குழுமத்தில் இருந்து அபூ உமய்யாவை நீக்கு என்பது தான் பதில்.

குழுமத்தில் இருந்து பலருக்கும் அனுப்பப்பட்டது என்றால் அதை அபூ ஸுமையா அப்போதே சொல்லாமல் நீதான் எனக்கு அனுப்பினாய் என்று முட்டாள் தனமாக உளறி அட்வான்ஸாக மாட்டி விட்டாரே?

இவ்வளவு கேவலமான பிழைப்பு பிழைக்க கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? உங்களுக்குத் தான் பேரும் இல்லை. பாரம்பர்யமும் இல்லை. பிறகு வெட்கம் எதற்கு?

அபூ உமய்யா அவர்கள் எனக்கு அனுப்பியதைப் பாருங்கள்! நடுநிலையோடு சிந்தியுங்கள்!

நாம் கேட்டுள்ள இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்று கேளுங்கள். உடனே உங்களை மட்டுறுத்துவார்கள். அல்லது நீக்குவார்கள். இதை விட நல்ல குழுமங்கள் எவ்வளவோ உள்ளன. உங்களை ஏமாற்றாத குழுமமாகப் பார்த்து சேர்ந்து கொள்ளுங்கள்!

தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு எதிராக நீங்கள் எடுக்கும் நிலைபாட்டில் யாரும் தலையிட முடியாது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு என்பதை மூலதனமாகக் கொண்டு உங்களை ஒரு கும்பல் ஏமாற்றுவதைச் சகித்துக் கொள்ளலாமா என்று சிந்தியுங்கள். ஒருவன் எழுதுகிறான்; இன்னொருவன் பதில் சொல்கிறான் என்று கருதி இரண்டையும் ஏதோ விவாதம் என்று எண்ணி படித்து வருகிறீர்கள். ஆனால் இருவருமே ஒருவர் தான் என்று தெரியும் போது ஏமாற வேண்டுமா? குருடன் பார்க்கிறான் என்ற கிறித்துவ நாடகத்துக்கு ஒப்ப இவர்கள் நடித்துள்ளார்கள். இன்றும் நடித்து வருகிறார்கள் என்றால் அதை உங்களால் சகித்துக் கொள்ள முடிகிறதா? இதைச் சிந்திப்பதற்காக ஒரு சாம்பிள் மட்டும் இப்போது வெளியிடப்படுகிறது.

மடமை ஐந்து

இப்படிப்பட்டவரிகளுக்கு உங்களைப் போன்று மற்றவர் முகம் சுழிக்கும்படி செய்யாமல், சகோதரர் பிஜே என்ற நல்ல(!)ப்பேர்வழி என்று ஆரம்பித்து, மறைமுகமாக தாக்கிஎழுதவும் என்னால் இயலும். தௌஹீது சிந்தனை எனக்கு ஏற்படக் காரணமாக இருந்தஅறிஞர் என்ற நிலையில், நான் இப்போதும் மதிக்கும், இச்சமுதாயத்தின் மார்க்கஅறிஞர்களில் ஒருவர் நீங்கள் என்ற எண்ணம் இப்போதும் என் மனதினுள்இருப்பதால், அத்தகைய கேலிகளை நான் அறிந்து கொண்டே செய்வதற்கு என் மனம்ஒப்பவில்லை. உங்களுக்கு என ஒரு மரியாதையும் தரமும் இருக்கின்றது. அதனைத்தரையில் போட்டு நீங்களே மிதிக்கும் வகையில் உங்கள் திறமையைஉபயோகிக்காதீர்கள். ஒரு விஷயத்தைச் சகோதரர் பிஜே புரிந்து கொள்ளுங்கள்.நான் உங்கள் எதிரி அல்ல; உங்களின் கருத்துகள்/நிலைபாடுகளில் உள்ள தவறுகள்என தெரிபவற்றை எதிர்க்கும் ஒரு சராசரி முஸ்லிம். ஒரு சாதாரண, உங்களுடன்ஒப்பிட்டால் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கு மார்க்க ஞானத்தில்கீழ்நிலையில் உள்ள ஒரு சாதாரண மனிதன் நான். ஆகவே, ஒருவேளை நான் தவறு எனநினைப்பவை மார்க்கத்தில் சரியாக இருக்கலாம். அல்லது நான் எழுதும் முறை கூடசரியற்றதாக இருக்கலாம். ஆனால், என் கருத்துக்கள் தவறு என எனக்கு சரியானமுறையில் விளக்கப்பட்டால், இறைவனுக்கு அஞ்சி அதனை உடனடியாக ஏற்றுக்கொள்பவனாகவே நான் இருக்கிறேன். என் கருத்தைக் கருத்தால் மட்டும்எதிர்கொள்ளுங்கள். அது தான் நம் அனைவருக்கும் நல்லது. அல்லாமல் மூன்றாம்தர மனிதர்கள் பயன்படுத்துவதைப் போன்ற வாசகங்களையே எனக்கு எதிராக நீங்கள்தொடர்ந்து உபயோகிப்பீர்கள் எனில், அதனைவிட மகா மட்டமான, படுக்கேவலமானநடையில் என்னாலும் உங்களுக்குப் பதில் கொடுக்க முடியும் என்பதை முதலில்நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாமைக்கு இஸ்லாமிய பண்பும்நாகரீகமும் உங்கள் மீதான மதிப்பும் தடையாக இருக்கும் காரணத்தால் மட்டுமேநான் உங்களைப் போன்றோ அல்லது அதனைவிடக் கேவலமாகவோ எழுதத் தயாராகவில்லை.

எனவே, கருத்துகளுக்குக் கருத்துகளால் மட்டும் பதில் கொடுக்க நீங்கள்தயாராகவேண்டும் என்று மீண்டும் உங்களை மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து மீண்டும் இது போன்றே எழுதுவீர்களாயின், அதற்கானமுறைபாட்டை நான் இறைவனின் நீதிமன்றத்தில் வைப்பேன். இனிமேல் இத்தகையகோரிக்கையை உங்களிடம் வைக்கமாட்டேன் இன்ஷா அல்லாஹ்.

3. ஒருவரைக் கள்ளப் பேர்வழி என அவரைக் குறித்துமுழுமையாக அறியாமல் இருக்கும் நிலையில் அழைக்கலாமா? ஆம் எனில், அதற்கானஆதாரம் என்ன? கூடாது எனில், அவ்வாறு அழைப்பவர் செய்ய வேண்டிய பரிகாரம்என்ன?

ஐந்தாவது மடமைக்கு மறுப்பு

இவருக்கு என்னென்ன திறமைகள் உள்ளன என்பதில் எனக்கு அக்கறை இல்லை. இவர் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும். அத்துடன் நாம் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லட்டும் அது போதும். அதை விடுத்து எனக்கும் எழுதத் தெரியும் என்பது போன்ற எச்சரிக்கை என்னிடம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

கள்ளப் பேர்வழி என்று நான் கூறுவதற்காக இறைவனிடம் முறையிடுவதாக இவர் கூறுகிறார். இறைவன் இவர்களின் விருப்பப்படி நடக்கும் ஒருவன் என்று எண்ணி விட்டார் போலும். அவன் விரும்புகிற முறையில் நடந்து கொண்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தான் இறைவனிடம் முறையிட வேண்டும்.

இவர் மார்க்க அடிப்படையில் பல கட்டளைகளை மீறி தன்னை ஒளித்துக் கொள்கிறார். தன்னுடைய தந்தை யார் என்பதைக் கூட இவர் சொல்லாமல் மறைக்கிறார். ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் போது அவருக்குக் கூட தன்னை அடையாளம் காட்ட மறுக்கிறார். இந்த வகையில் இவர் கள்ளத் தனம் செய்ததால் கள்ளப் பேர்வழி என்று நான் கூறினேன். இவர் கள்ளத் தனம் செய்யாமல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்து, நான் கள்ளப் பேர்வழி என்று நான் கூறவில்லை என்று என்னால் இறைவனிடம் பதில் கூற முடியும்.

நான் கள்ளத் தனம் செய்தது உண்மை. ஆனாலும் என்னைக் கள்ளப் பேர்வழி என்று இவர் குறிப்பிடார் என்று இவர் தாராளமாக முறையிட்டு அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகிக் கொள்ளட்டும்.

மேலும் இறைவன் முன்னால் இவர் முறையிடும் போது இவரைப் பற்றி பேசினாயா என்று இறைவன் கேட்டால் இவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இவரை நான் பார்த்தது இல்லை என்று கூறி விடுவேன். அப்போது நான் தான் அபூ ஸுமய்யா என்று இவர் கூறினால் இதை உலகத்திலேயே சொல்லித் தொலைத்திருந்தால் நான் ஏன் கள்ளப் பேர்வழி என்று கூறப் போகிறேன்.

இவர் இறைவனிடம் முறையிட்டாலும் உலகில் முறையிட்டாலும் தன்னை யார் என்று எனக்கு வெளிப்படுத்தாமல் எப்படி முறையிட முடியும்.?

மடமை ஆறு

ஏதோ, அபூ சுமையா தன் விவரத்தைத் தெரிவித்தால், நான் அவரின்கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சகோதரர் பிஜேகூறி, நான் முடியாது என மறுத்து வருவது போன்று இதுவரை என்னால் முகம்காட்டமுடியவில்லை என்று கூறுகிறார்.

4. என்னால் முகம்காட்ட முடியவில்லையா? அல்லது என்னிடம்என் விவரம் கேட்கும் முன்னரே தரம்தாழ்ந்து விமர்சித்து, என்னைக் கண்டறியதக்கவர்களை நாடியுள்ளதாக நீங்கள் அறிவித்ததால் அந்த வழியிலேயே நீங்கள்என்னைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று நான் கூறி அதற்காகக்காத்திருக்கிறேனா? நடுநிலையோடு பதில் கூறுங்கள்.

ஆறாவது மடமைக்குப் பதில்

இவருக்குச் சிந்திக்கும் திறனில் குறைபாடு உள்ளதை இந்த வாதத்தின் மூலமும் நிரூபிக்கிறார்.

இவரைக் கண்டு பிடிக்க நான் முயற்சிப்பதால் இவர் தன்னைப் பற்றி அடையாளம் காட்டத் தேவை இல்லை என்று நான் எந்த இடத்திலும் எழுதவில்லை. நான் கண்டுபிடிக்க முயற்சிப்பேன் என்று சொன்ன அதே நேரத்தில் உன்னை அடையாளம் காட்ட வேண்டும் என்பதையும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

ஒன்று நான் செய்யும் முயற்சி பற்றியது.

இன்னொன்று அவர் செய்ய வேண்டிய கடமை பற்றியது.

இரண்டுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இவர் தன்னை அடையாளம் காட்டித் தான் ஆக வேண்டும் என்பது அவசியம் என்பதற்கான ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி நான் வலியுறுத்தி இருக்கும் போது இப்படிக் கூறுவது வடிகட்டிய மடமை இல்லையா?

இந்த வாதம் மார்க்க அடிப்படையிலோ அறிவுப்பூர்வமாகவோ ஏற்கத்தக்க வாதம் தானா?

ஒரு பொருளைத் தூக்க முடியாமல் ஒருவர் சிரமப்படுகிறார். என்னால் சிரமப்பட்டுத் தூக்கி விட முடியும். ஆனால் மார்க்க அடிப்படையில் சிரமப்படும் எனக்கு உதவுவது மார்க்கக் கடமை என்பதால் தூக்கி விடுங்கள் என்று அந்த மனிதர் கேட்கிறார். நானே தூக்கி விடுவேன் என்று நீ சொன்ன காரணத்தால் தூக்கி விட முடியாது என்று பதில் கூறுபவன் நல்ல முஸ்லிம் என்று யாரும் கருத மாட்டார்கள்.

இந்த வாதத்துக்கும் இந்தக் கள்ளப் பேர்வழியின் வாதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இவரைப் போல் நம்மை எதிர்க்கும் முகவை அப்பாஸ் என்பவர் விவாதிப்பவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டு அது இவரது குழுமத்திலும் வெளியானதே. அப்போது இவர் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாமே? இப்போது இவருக்கு முகம் காட்ட முடியவில்லை என்பது நடுநிலையாளர்கள் எடுக்கும் முடிவு தானே?

ஒரு செயலைச் செய்யத் துப்பு இல்லாதவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் பொருந்தாத காரணம் கூறுவார்கள். இதைச் செய்திருப்பேன் இன்று இன்ன கிழமை என்பதால் செய்யவில்லை என்று அவர்கள் கூறுவது போல் இவரது இந்த வாதம் அமைந்துள்ளது.

நானே கண்டு பிடித்துக் கொள்ள முடியும் என்பதால் உன்னை அடையாளம் காட்ட வேண்டாம் என்று நான் கூறினேனா? எப்போது கூறினேன்? உன்னை அடையாளம் காட்டுவது அவசியம் என்று நான் கூறியுள்ளேனா இல்லையா? அதற்கான ஹதீஸ்களையும் காரணங்களயும் விளக்கியுள்ளேனா இல்லையா? ஒருவர் தெளிவாகச் சொல்லி இருக்கும் ஒன்றை மறைத்து திசை திருப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? கள்ளப் பேர்வழி தன்னை அடையாளம் காட்டினால் நான் பதில் அளிக்கத் தயார் என்று தெளிவாக எழுதியிருந்தும் அவ்வாறு எழுதவில்லை என்று புளுகுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? உன்னைப் போல் மட்டுறுத்தும் மடத்தனம் செய்யாமல் அப்படியே வெளியிட்டு நான் அப்தில் சொல்வேன் என்று நான் தெளிவாகக் கூறியிருந்தும் அதைத் திட்ட மிட்டு மறைப்பது குற்றமா? இல்லையா? இனி மேல் இது போல் செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி அளிக்கத் தயாரா?

என்றெல்லாம் கேள்விகள் உள்ளன. இதற்கெல்லாம் கள்ளப் பேர்வழி பதில் சொல்லியாக வேண்டும்.

மடமை ஏழு

சகோதரர் பிஜே இதிலிருந்து என்ன கூற வருகிறீர்கள் என்பது முழுமையாக எனக்கு புரியவில்லை.

5. கருத்துப்பரிமாறல் நடக்கும் இக்குழுமத்திலும் ததஜ மெயில் முகவரிகளுக்கும் மட்டும்என் பதில்களை அனுப்புவது பரப்புதல் எனில், என்னைக் குறித்து தகாததைஎல்லாம் எழுதி சகோதரர் பிஜே அவரின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதன் பெயர்என்ன?

இந்தநிமிடம் வரை பரப்புவது என்ற எண்ணத்தில் நான் இதனை அணுகவே இல்லை. அதன்முதல் காரணம், நான் இதுவரை சகோதரர் பிஜேவுக்கு எதிராக வைத்துள்ளவைஅனைத்தும் கேள்விகளும் சந்தேகங்களுமே. அவற்றிற்குச் சகோதரர் பிஜே உரியபதிலைத் தந்தால் மட்டுமே அதில் இறுதி முடிவுக்கு வர இயலும். அதனாலேயே, சகோதரர் பிஜே எனக்கு எதிராக எழுதிய முதல் விமர்சனத்துக்கு நான் அளித்தமுதல் பதிலை இஸ்லாம்கல்வி.காம் போன்ற தளங்களில் அனுப்பி பதிய வைக்கஎன்னிடம் கேட்டுக் கொண்டதைக் கூட நான் நிராகரித்தேன். அல்லாமல் சகோதரர்பிஜே கூறுவதைப் போன்று பரப்பும் எண்ணம் எனக்கு இருந்திருந்தால், என்னிடம்இருக்கும் அனைத்து மெயில் முகவரிகளில் ஆரம்பித்து, அனைத்து முஸ்லிம்வலைப்பூ, இணையதளங்களுக்கு என்னால் அனுப்பி வைத்திருக்க இயலும். அத்தோடுஒன்றோ இரண்டோ வலைப்பூக்களும் ஏன் ஆன்லைன்பிஜே போன்று ஒரு டொமைன் பதிவுசெய்து தனி இணையதளம் உருவாக்கி அதில் கூட பதிவு செய்திருக்க இயலும்.அதற்கான பொருளாதார வசதியோ, இணைய நுட்ப அறிவோ இல்லாததால் அதை செய்யாமல்இருக்கவில்லை.அத்தகைய பரப்பல்கள் செய்வதில் விருப்பமில்லாததாலேயே செய்யவில்லை என்பதைச் சகோதரர்பிஜே புரிந்து கொள்ளுங்கள்.

ஏழாவது மடமைக்குப் பதில்

இதிலும் மடமையும் கோழைத்தனமும் அறியாமையும் தான் நிறைந்து காணப்படுகிறது.

பரப்புவது என்றால் என்ன? என்பது கூட இவருக்குத் தெரியவில்லை. எனக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பினால் அது பரப்புதல் இல்லை. அதை இன்னும் சிலருக்கு அனுப்பினால் அது பரப்புதல் இல்லாமல் வேறு என்ன? இவரது குழுமத்தில் ஐம்பது உறுப்பினராவது இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு செய்தியை அந்தக் குழுமத்தில் வைத்தால் அது ஐம்பது பேருக்குப் பரப்பி விட்டதாக அர்த்தம் இல்லையா? இது தவிர தன்னிடம் உள்ள முகவரிகளுக்கு இவர் அனுப்புவது பரப்புதல் இல்லையா?

ஆயிரம் ருபாய் திருடி விட்டான் என்று ஒருவனை நாம் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். நான் நினைத்திருந்தால் கன்னக் கோல் வைத்திருப்பேன். கிலோ கணக்கில் நகையைக் கொள்ளை அடித்திருப்பேன். நான் திருடனாக இருந்தால் பெரிய பெரிய வங்கிகளில் கொள்ளை அடித்திருக்க மாட்டேனா? என்னை எப்படி திருடன் என்று கூறலாம் என்று அவன் கூறினால் அது சரியா?

அது சரி இல்லை என்றால் இந்தக் கள்ளப் பேர்வழி கூறுவது மட்டும் எப்படிச் சரியான வாதமாகும்.

பரப்பி விட்டே பரப்பவில்லை என்று கூறியதன் மூலம் தான் ஒரு கள்ளப் பேர்வழி என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.

பரப்புதல் என்று நான் குறிப்பிட்டது அவ்வளவு பயங்கரமான சொல்லா? நல்லவற்றைப் பரப்புவது ஒரு முஸ்லிமின் கடமை தானே? இவர் செய்வது நல்ல காரியம் என்று இவருக்கு நம்பிக்கை இருந்தால் ஆம் நான் தான் பரப்பினேன் என்று கூறுவது தானே? பரப்பி விட்டு பரப்பவில்லை என்று வழிவது கோழைத்தனம் அல்லவா? இந்தக் கோழைத்

தனம் தான் முகமூடி போடுவதற்கும் காரணமாக உள்ளது.

இவர் இது போல் உளறுவதைத் தான் ஆஹா அற்புதம் என்று ஜால்ராக்கள் வரவேற்று தங்கள் தலையில் உள்ள சரக்கின் அளவை அடையாளம் காட்டுகிறார்கள். எதிரி என்ன பதில் கூறுகிறான் என்பதை அறிந்து கொள்ளக் கூட பொறுமை இல்லாமல் மடமை வாதங்களுக்கு வாழ்த்துப் பா பாடுகிறார்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

மடமை எட்டு

பதில்1, பதில் 2 என போடக் காரணம் கூட, பின்னர் யாராவது நான் சகோதரர் பிஜேவின்இன்ன செருப்படிக்குப் பதிலளிக்கவில்லை என எனக்கு எதிராக பொய் பரப்பினால், உடன் தேடி எடுப்பதற்கும் அவர்களுக்கு விவரம் கொடுப்பதற்கும் இலகுவிற்காகவேபதில்களில் அவ்வாறு போடுகிறேன். அது கூட சகோதரர் பிஜேவை வேதனைப்படுத்துகிறது என்று சொன்னால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு இனி போடாமல்இருக்கவும் கவனம் செலுத்துவேன் இன்ஷா அல்லாஹ்.

6. அவ்வாறு நான் பதில் 1, பதில் 2 என தலைப்பிடுவது சகோதரர் பிஜே அவர்களுக்கு வருத்தமளிக்கின்றதா? எனத் தெரிவியுங்கள்.

எட்டாவது மடமைக்கு மறுப்பு

இவர் வருத்தம் தெரிவிப்பது பற்றி பலரும் பாராட்டு மழை பொழியும் வகையில் செட்டப் செய்வதை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம். தவறான கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டார். எது மன்னிப்புக்கு உரிய விஷயம் இல்லையோ, எதிர்க் கருத்து உள்ளவர்கள் எதை ஒரு பிரச்சனையாக ஆக்கவில்லையோ அதற்கு வருத்தம் தெரிவிப்பார். இதில் மறைந்துள்ள் அயோக்கியத்தனம் பலருக்குப் புரிவதில்லை. அதாவது எவ்வளவு பெருந்தன்மை என்பதைக் காட்டி கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது தான் இதில் உள்ள அடிப்படை.

இப்போது வருத்தம் தெரிவித்துள்ளாரே அது தான் வருத்தம் தெரிவிக்கும் இலட்சணம்.

ஒருவனை செருப்பால் அடித்து விட்டு இரத்தக் காயம் ஏற்படுத்தி விட்டு உன்னை போடா என்று நான் கூறியதில் உன் மனம் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒருவன் கூறினால் அது வருத்தம் தெரிவிப்பதா? வடிகட்டிய அயோக்கியத்தனமா?

பதில்2 பதில்2 பதில்3 என்று பொட்டு எழுதுவது யாரையாவது வருத்தப்படுத்துமா? இதற்கு வருத்தப்படும் ஒருவன் மூளை உள்ளவனாக இருப்பானா?

ஒரு மனிதனை மூன்று பேப்பரில் திட்டி எழுதி விட்டு பேப்பர்1 பேப்பர்2 பேப்பர்3 என்று ஒருவர் அந்த மனிதனிடம் கொடுக்கிறார். பேப்பர்1 பேப்பர்2 பேப்பர்3 3 என்று நான் குறிப்பிட்டது உங்களைப் புன்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறுவது திட்டியதை விட பெரிய அயோக்கியத்தனம் அல்லவா?

(மக்களை ஏமாற்ற இவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இது இவரது குருட்டுக் குழுமத்துக்கு சரிப்பட்டு வரும். அறிவுடைய மக்களிடம் எடுபடாது என்பதை இவர் உணர வேண்டும்.)

இதற்குக் கூட புண்படும் அளவுக்கு பீஜே இருக்கிறார் என்று நிலை நாட்டுவதும், தவறை தவறு என்று ஒப்புக் கொள்பவன் என்று தன்னைப் பற்றிக் காட்டிக் கொள்வதும் இதில் அடங்கியுள்ளதா? இல்லையா? வார்த்தை அமைப்புகளில் தான் எனக்கு தவறு நிகழுமே தவிர விமர்சனத்தில் தவறு ஏற்படாது என்று நம்ப வைப்பதற்காக இந்தத் தந்திரத்தை இவர் கையாள்கிறார். சாதரண மக்களை மடையர்களாக்கும் இவரது இந்தப் போக்கை இவர் வருத்தம் தெரிவித்த விஷயங்களைத் தொகுத்து பார்க்கும் யாரும் அறிந்து கொள்ளலாம்.

மடமை ஒன்பது

//இவரைக் குறித்து நான் எழுதிய எந்த ஒரு விஷயத்தையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இன்னும் அதிக உறுதியாக இருக்கிறேன் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.//- சகோ. பிஜே

நல்லது.அப்படியே இருங்கள்; அப்படித்தான் இருக்கவேண்டும்!!!? தவறு எனத்தெரிந்தாலும் அதனை எப்படியாவது நியாயப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கவேண்டும்!!!? ஒரு விஷயத்தில் என் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இதுவரை என்னை அவன், இவன் என ஏக வசனத்திலும் அது என அஃறிணைகுறியீட்டிலும் அழைத்த நீங்கள், இவர் என மரியாதையுடன்குறிப்பிட்டுள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ். மற்றவர்களின் கண்ணியத்துடன்விளையாடாமல், அனனவரையும் மரியாதையுடன் நடத்தும் இஸ்லாமிய பண்பாளர்களுக்குஅல்லாஹ் ஈருலகிலும் அருள்புரியட்டும்.

எட்டாவது மடமைக்கு மறுப்பு

அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது இவரைப் பொருத்த வரை சரியாக உள்ளது.

நான்கு தலைப்புகளில் இவரது விமர்சனத்தை வகைப்படுத்தி அதில் முதல் வாதமாக ஒருவர் முகத்திரை போட்டு தன்னை மறைத்துக் கொள்ளலாமா என்ற தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் முதல் தொடர் மட்டுமே வெளியிட்டுள்ளோம். அது சம்மந்தமாகவே மேலும் சில ஆதாரங்களை வெளியிட வேண்டியுள்ளது.

அது முடிந்த பிறகு கள்ளப் பேர்வழிகளைத் தரக் குறைவாக விமர்சிக்க அனுமதி உண்டா என்பது குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளோம்.

அதில் எந்த ஆதாரங்களை எடுத்து வைக்கப் போகிறோம் என்ற அக்கரை இவருக்கு இல்லை. எந்த ஆதாரத்தை எடுத்துக் காட்டினாலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்பதை மேற்கண்ட நையாண்டி மூலம் தெரிவிக்கிறார். இவர் நினைக்கிற படி மார்க்கத்தில் கூறப்பட்டால் அதை மட்டும் ஏற்பதும் இவருக்கு எதிராக மார்க்கத்தில் கூறப்பட்டால் அதை மறுப்பதும் இவரது கொள்கை என்பதை இத்தொடரில் மேலும் மேலும் அறிவீர்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

21.01.2010. 20:39




Search..

பார்வையாளர்

தாங்கள்

வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
46 நபர்கள்

நண்பருக்கு அனுப்ப..

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியை உங்கள் நண்பருக்கு அனுப்ப

புது வரவுகள்

பொருளடக்கம்


PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனை தொடர்பு கொள்ளவும்.
 
Moon Publication
83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1
போன்-044 65690810 , செல்-9444276341,9976223885
 
புத்தகங்களின் பட்டியலை கான Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி