Navigation



முகவரியற்றதுகளின் விதண்டாவாதம்

முகவரியற்றதுகளின் விதண்டாவாதம்
அபூ ஸுமய்யா என்ற கள்ளப் பேர்வழி இன்னும் தன்னை முகம் காட்ட காட்ட முடியவில்லை.
பதில் 1 பதில் 2 பதில் 3 என்று எழுதிப் பரப்பி வருகிறார்.


இவரைக் குறித்து நான் எழுதிய எந்த ஒரு விஷயத்தையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இன்னும் அதிக உறுதியாக இருக்கிறேன் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.

இவரது அறியாமையை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு இதன் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.

இவரது விமர்சனத்துக்குள் செல்வதற்கு முன்னால் ஒரு செய்தியைப் பதிவு செய்து கொள்கிறேன்.


TMB
(தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ்) என்ற பெயரில் நடத்தப்படும் குழுமத்தை நான் பால மாதங்களாகக் கவனித்து வந்தேன். எந்தச் சார்பும் இல்லாமல் பொதுவானது என்று காட்டிக் கொண்டு ஒரு பக்கச் சார்பு செய்திகளை மட்டும் திட்டமிட்டு தினித்துக் கொண்டு இவர்கள் அயோக்கியத்தனம் செய்வதாக சந்தேகம் வந்து அதை உறுதி செய்து கொண்டேன்.

இவர்களின் அபத்தங்களுக்கு சரியான பதில் எழுதினால் உங்கள் மடல் மட்டுறுத்தும் (மடையர்களால்) மட்டுறுத்தப்பட்டுள்ளது என்று பதில் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒன்றிரண்டு மடல்களை வெளியிடுவதாக இருந்தால் அதற்கான மறுப்புடன் இணைத்தே வெளியிடுவதையும் நான் கண்டறிந்தேன்.

விவாதம் என்று இவர்களாக செட்டப் செய்து கொண்டு இவர்கள் விவாதிக்க முணைப்புடன் இருப்பது போலவும் தவ்ஹீத்வாதிகள் பின் வாங்கி விட்டது போலவும் நாடகம் நடத்துவதும் உறுதியானது.

இந்தக் குழுமத்தை நடத்துவதும் அதில் சம்மந்தமில்லாதது போல் எழுதுவதும் ஒரே கும்பல் தான் என்று சந்தேகமற உறுதி செய்த பின் தான் அபூ ஸுமையாவில் இருந்து முகத்திரையைக் கிழிக்க ஆரம்பித்தேன்.

தமிழ் முஸ்லிம் பிரதர்ஸ்களை இவர்கள் எப்படி ஏமாற்றி நடுநிலை வேடம் போட்டு வருகின்றனர் என்பதை இதன் இறுதியில் இன்ஷா அல்லாஹ் அம்பலப்படுத்துவேன்.

இவர்களின் நடு நிலை வேஷத்தை நம்பி தமது கருத்தை அனுப்பி மட்டுறுத்தும் (மடையர்களால் )மட்டுறுத்தலுக்கு ஆளானவர்கள் சிலர் மட்டும் அந்த மின்னஞ்சலை நமக்கு அனுப்பி உதவியுள்ளனர். இது போல் மடையர்களால் (இவர்கள் மடையர்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. அதுவும் இறுதியில் வெளியிடப்படும்) மட்டுறுத்தும் நிலையச் சந்தித்த சகோதரர்கள் தமக்கு வந்த மட்டுறுத்தும் மின்னஞ்சலை எனக்கு அனுப்பினால் என்னிடம் இருக்கும் தகவலுடன் இன்னும் கூடுதல் தகவலை வெளியிட உதவியாக இருக்கும்

குறிப்பாக ததஜ அனுதாபி என்ற பெயரில் உண்மையில் நம் சகோதரர்கள் யாராவது இவர்கள் குழுமத்தில் விவாதம் நடத்தி இருந்தால் அவர்கள் எனக்கு தங்களின் முழு விபரத்தைத் தக்க ஆதாரத்துடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி அனுப்பவில்லை என்றால் ததஜ அனுதாபி என்பதும் செட்டப்களில் ஒன்று நிரூபிக்க முடியும். என் சார்பில் நான் பதிலளிக்க எனது முழு நேரத்தையும் ஒதுக்கியுள்ள நிலையில் எந்த அனுதாபியும் ததஜ சார்பில் பேசும் தேவை எதுவும் இல்லை. எனவே அப்படி உண்மையிலேயே ததஜ அனுதாபி இருந்தால் அவர் தன்னை அடையாளம் காட்ட வேண்டும். இன்னும் சிலரும் அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் பற்றி ஒவ்வொன்றாகத் தெரிவிப்பேன்.

எனவே மேற்படி குழுமத்துடன் இணைந்துள்ள சகோதரர்கள் எனக்கு நான் கேட்ட விபரங்களை அனுப்பினால் என்னுடன் உள்ள தகவலுடன் அவற்றையும் இணைத்துக் கொள்வேன். pjtntj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி உதவுங்கள்.

இனி கள்ளப் பேர்வழி அபூ ஸுமையாவின் கேள்விகளுக்கு வருகிறேன்,

அவரது கேள்விகளை கீழ்க்காணும் வகையில் பட்டியலிடலாம்

--1- --ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மார்க்க அடிப்படையில் அவசியமா?

--2- --இழி பிறவி, சாக்கடைப் பன்றி என்றெல்லாம் சொல்லலாமா? (இவற்றில் எந்த ஒன்றையும் நான் வாபஸ் வாங்கவில்லை)

--3- --ஆர்.எஸ்.எஸ் பொம்பளைப் பொறுக்கி என்றெல்லாம் ஊகம் செய்து ஒருவரைப் பற்றிக் கூறலாமா?

--4- --பீஜேயே தன்னை மறைத்துக் கொள்ளும் படி மற்றவர்களுக்குக் கடிதம் எழுதியதற்கு ஆதாரம் உள்ளது

இந்த நான்கு விஷயங்களுக்குள் அவரது அத்தனை விமர்சனங்களும் அடங்கி விடுகின்றன.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலும் அதனடிப்படையில் எடுத்து வைக்கப்படும் அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையிலும் இதை அலசுவோம்.

ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மார்க்க அடிப்படையில் அவசியமே!

ஆதாரம் ஒன்று

6768حدثنا أصبغ بن الفرج حدثنا ابن وهب أخبرني عمرو عن جعفر بن ربيعة عن عراك عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا ترغبوا عن آبائكم فمن رغب عن أبيه فهو كفر

உங்கள் தந்தையரைப் புறக்கணிக்காதீர்கள். யார் தனது தந்தையைப் புறக்கணிக்கிறாரோ அவர் நிராகரித்து விட்டார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்- புகாரி 6768

(இந்த ஹதீஸில் லா தர்கபூ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் புறக்கணித்தல், அலட்சியம் செய்தல் என்பது தான். திருமணம் எனது வழிமுறை. அதைப் புறக்கணிப்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல என்ற ஹதீஸிலும் இந்தச் சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலர் தமிழாக்கம் செய்யும் போது வெறுக்காதீர்கள் என்று தவறாகக் குறிப்பிடுள்ளதால் இந்த விளக்கம் தரப்படுகிறது. ஆனால் இதே வாசகம் புஹாரி 6830லும் இடம் பெற்றுள்ளது. அங்கே புறக்கணிக்காதீர்கள் என்று சரியாகத் தமிழாக்கம் செய்துள்ளதைக் கவனிக்கவும்.)

அபூ ஸூமய்யா என்றால் ஸுமையாவின் தந்தை என்று பொருள். இதிலிருந்து ஸுமையாவுக்குத் தந்தை இருப்பது தெரிகிறது. (இதை அஸு என்று சுருக்கமாகச் சொன்னாலும் இப்படி விளக்கம் கொடுக்க வாய்ப்புள்ளது.)

ஸுமய்யாவின் தந்தைக்குத் தந்தை யார் என்று கேட்டால் இக்கேள்வியின் விடை எளிதாக இருந்தும் அதைச் சொல்ல ஸுமையாவின் தந்தை அதாவது அபூ ஸுமய்யா மறுக்கிறார் என்றால் அவர் தந்தையைப் புறக்கணிக்கிறார் என்பது தான் பொருள். அல்லது சொல்ல வெட்கப்ப்டும் அளவுக்கு ஏதோ உள்ளது என்பது தான் பொருள்.

உன் தந்தை யார் என்று யாரும் கேட்காத வரை புறக்கணிக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தக் கேள்வி கேட்ட பிறகு தந்தையின் மரியாதையைக் காப்பாறும் வகையில் என் தந்தை இந்தத் தெருவில் இருக்கும் இன்னார் என்று கூற வேண்டுமா இல்லையா? இப்படி ஒரு கேள்வி வந்த பின் என் தந்தை இன்னார் தான் என்று சொல்ல விருப்பம் இல்லை என்றால் பெற்ற தந்தையைப் புறக்கணித்துள்ளார் என்று நாம் புரிந்து கொள்வதா? அல்லது தந்தை யார் என்பது இவருக்கே தெரியவில்லை என்பதா? .

தந்தை யார் என்று தெரிந்த நிலையில் இவர் தந்தையைப் பற்றி சொல்ல மறுத்தால் தந்தையைப் புறக்கணிக்கிறார். கேவலப்படுத்துகிறார் என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தம்? இந்த ஹதீஸின் அடிப்படையில் இவரிடம் நிராகரிப்பு இருப்பது உறுதியாகின்றது.

தந்தையைப் பராமரிக்கத் தவறுவது, அவரது கட்டளையை மீறுவது போன்றவை தந்தையைப் புறக்கணிப்பதில் அடங்கும் என்றாலும் அவரைத் தந்தை என்று நெஞ்சுயர்த்திச் சொல்ல மறுப்பது தான் மிகப் பெரிய புறக்கணிப்பாகும்.

உன் தந்தை யார் என்று கேட்கும் போது அதைச் சொல்ல முடியாது என்று கூறலாம் என்றால் அதற்கான ஆதாரத்தை குர்ஆனிலிருந்தும் ஹதீஸில் இருந்தும் எடுத்துக் காட்டி இதற்கு விதி விலக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஒரே ஒருவருக்குத் தான் இவ்வாறு தந்தை யார் என்று சொல்லாமல் இருக்க அனுமது உண்டு.

ஆரம்ப கால முஸ்லிம்களில் ஸுஹைபும் ஒருவர். இவர் சிறு வயதில் திருடப்பட்டு ஸினான் என்பவர் வீட்டில் விற்கப்பட்டார். இதனால் ஸுஹைப் பின் ஸினான் என்று அழைக்க்கப்பட்டார். இது குறித்து உமர் ரலி அவர்கள் அவரைக் கடிந்து கொண்டனர். உன் தந்தை யார் என்று சொல் எனக் கேட்டார்கள்.

2219 இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஸுஹைப் (ரலி) அவர்களிடம், நீர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக! உம் தந்தையல்லாதவரைத் தந்தை எனச் சொல்லாதீர்! எனக் கூறினார்கள். அதற்கு ஸுஹைப் (ரலி) அவர்கள், என் தந்தையல்லாதவரைத் தந்தை என்று நான் சொல்வதற்காக எவ்வளவு பொருட்களைக் கொடுத்தாலும் ஒப்ப மாட்டேன்; என்றாலும், நான் சிறுவனாக இருக்கும் போது திருடப்பட்டு விட்டேன்! (அதனால் என் தந்தை யார் என்று தெரியவில்லை!) எனக் கூறினார்கள்

புஹாரி 2219

அபூ ஸுமையா சிறு வயதில் திருடப்பட்டு இருந்தால் அப்போது கூட அவர் தந்தை பெயரைச் சொல்லா விட்டாலும் தான் திருடப்பட்டதைச் சொல்ல வேண்டும்.

ஆதாரம் இரண்டு

ஒருவருக்குப் பெயர் இருக்கும் போது செல்லப் பெயர் சூட்டிக் கொள்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம் குழப்பமில்லாமல் ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்பது தான்.
ஒரு பெயரில் பலர் இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் பெயரை நாம் பயன்படுத்தினால் யாரைக் குறிப்பிடுகிறோம் என்ற குழப்பம் ஏற்படும். அவருக்கு ஒரு செல்லப் பெயர் இருந்தால் அதைக் குறிப்பிடும் போது யாரைக் குறிப்பிடுகிறோம் என்பது தெளிவாகி விடும். இஸ்லாத்தின் அடிப்படையில் செல்லப் பெயர் வைப்பது இதற்காகத் தான்.
தன்னைக் குழப்பமின்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் செல்லப் பெயரை தன்னை மறைத்துக் கொள்வதற்காக அபூஸுமையா என்ற கள்ளப் பேர்வழி தலை கீழாக மாற்றுகிறார். இது குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

நபிகள் நாயகத்தின் பெயர் முஹம்மத் என்பதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஹதீஜா (ரலி) மூலம் காசிம் என்று ஒரு மகன் இருந்து அவர் இறந்து விட்டார். எனவே ஹதீஜா (ரலி) அவர்கள் காசிமின் தந்தை எனப் பொருள்படும் அபுல் காசிம் என்று நபிகள் நாயகத்தை அழைத்து வந்தனர். பின்னர் இதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்லப் பெயரானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காசிம் என்று மகன் இருந்தது போல் இன்னும் பலருக்கும் காசிம் என்ற பெயரில் மகன்கள் இருந்தனர். அதனால் அவர்களும் அபுல் காசிம் என்று தம்மை அழைத்துக் கொண்டனர்.

மார்க்க அடிப்படையில் இதில் எந்தத் தவறும் இல்லை. இதில் எந்தப் பொய்யும் இல்லை. இவ்வாறு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போட்டியாக வந்து விட்டார்கள் என்றும் ஆகாது.

ஆனாலும் அபுல் காசிம் என்று பலர் இருந்தால் எந்த அபுல் காசிமைக் குறிப்பிடுகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு விடும். எனவே யாரும் அபுல் காசிம் என்று செல்லப் பெயர் சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று நபிகள நாயகம் (ஸல்) தடை செய்தார்கள்.

2120حدثنا آدم بن أبي إياس حدثنا شعبة عن حميد الطويل عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم في السوق فقال رجل يا أبا القاسم فالتفت إليه النبي صلى الله عليه وسلم فقال إنما دعوت هذا فقال النبي صلى الله عليه وسلم سموا باسمي ولا تكنوا بكنيتي

2120 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடை வீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!) என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்! என்றார்கள்.

2121, 3537 ஆகிய ஹதீஸ்களிலும் இது இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் கூறுவது என்ன?

செல்லப் பெயர் சூட்டிக் கொண்டவர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டால் அந்தக் குழப்பத்தை சம்மந்தப்பட்டவர் நீக்க வேண்டும் என்பதும், செல்லப் பெயர் குழப்பத்தை ஏற்படுத்துமானால் அந்தக் குழப்பத்தை நீக்க வேண்டும் என்பதும் இந்த நபி வழியில் தெரிகிறது.

அபூ ஸுமையா என்று எழுதுபவர் யார் என்று கேள்வி எழுகிறது. இது யாராக இருக்கும் என்ற சந்தேகம் பலமாக ஏற்படுகிறது.

இதற்கிடையே நான் தான் அபூ ஸுமையா என்று இவரது குழுமத்துக்கே சிலர் எழுதுகிறார்கள். அது மாட்டுறுத்தப்படாமல் வெளியிடவும் படுகிறது.

இவ்வளவுக்குப் பிறகும் தன்னை அடையாளம் காட்ட மறுப்பது இந்த நபி வழிக்கு மாற்றமாகும்.

இப்போது இந்த நபிவழியின் அடிப்படையில் இவர் செய்ய வேண்டியது என்ன? இந்தத் தளத்தில் அபூ ஸுமையா என்று எழுதுபவன் நான் தான் என்று கூறி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமா? இல்லையா?

அல்லது யார் என்று தெரியாமல் மக்கள் குழம்பினாலும் என்னால் ஏற்படும் குழப்பத்தை நான் நீக்க மாட்டேன் என்று கள்ளப் பேர்வழி பிடிவாதம் பிடித்தால் அதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? ஹதீஸ் எது என்பதை எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆதாரம் மூன்று

எந்த மனிதர் நம்மிடம் தொடர்பு கொண்டாலும் அவர் யார் என்று கேட்கும் உரிமை மார்க்கத்தில் நமக்கு உள்ளது. ஒருவர் கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்வது கடமை என்றாலும் நாம் விரும்பினால் கேள்வி கேட்பவர் யார் என்ற விபரங்களைக் கோரும் உரிமை இருக்கிறது.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது தானே? யார் என்பது தேவை இல்லை என்று கூறுவது மார்க்கத்திற்கு எதிரான அதிகப்பிரசங்கித் தனமாகும்.

1466حدثنا عمر بن حفص حدثنا أبي حدثنا الأعمش قال حدثني شقيق عن عمرو بن الحارث عن زينب امرأة عبد الله رضي الله عنهما قال فذكرته لإبراهيم ح فحدثني إبراهيم عن أبي عبيدة عن عمرو بن الحارث عن زينب امرأة عبد الله بمثله سواء قالت كنت في المسجد فرأيت النبي صلى الله عليه وسلم فقال تصدقن ولو من حليكن وكانت زينب تنفق على عبد الله وأيتام في حجرها قال فقالت لعبد الله سل رسول الله صلى الله عليه وسلم أيجزي عني أن أنفق عليك وعلى أيتام في حجري من الصدقة فقال سلي أنت رسول الله صلى الله عليه وسلم فانطلقت إلى النبي صلى الله عليه وسلم فوجدت امرأة من الأنصار على الباب حاجتها مثل حاجتي فمر علينا بلال فقلنا سل النبي صلى الله عليه وسلم أيجزي عني أن أنفق على زوجي وأيتام لي في حجري وقلنا لا تخبر بنا فدخل فسأله فقال من هما قال زينب قال أي الزيانب قال امرأة عبد الله قال نعم لها أجران أجر القرابة وأجر الصدقة

1466 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி(ஸல்) அவாகள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால்(ரலி), அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள்.

புஹாரி 1466

ஸைனப் அவர்கள் மார்க்கம் சம்மந்தமான ஒரு சட்டத்தைக் கேட்டு வருமாறு பிலால் (ரலி) அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு கேள்வி கேட்பவர் யார் என்பது தெரிய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

கேள்விக்கு என்ன விடையோ அதைச் சொல்லாமல் இக்கேள்வியைக் கேட்டவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் வினவுகிறார்கள். ஸைனப் என்று கூறியவுடன் விட்டு விடவில்லை. எந்த ஸைனப் என்று விசாரிக்கிறார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி என்று கூறிய பிறகு தான் கேள்விக்கு விடை அளிக்கிறார்கள். எங்களைப் பற்றி தெரிவிக்க வேண்டாம் என்று (அபூ நூறாவிடம் மேற்படியார் கேட்டுக் கொண்டிருந்தால் அது போல்) அந்தப் பெண்கள் கோரிக்கை வைத்திருந்தும் அதை பிலால் (ரலி) பொருட்டாக மதிக்கவில்லை.

ஒரு மனிதர் தன்னை மறைத்துக் கொள்வது என்பது அந்தச் சமுதாயத்தில் இருந்ததில்லை என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

ஒருவர் ஒரு கேள்வியை இன்னொருவரிடம் எழுப்பினால் அவர் யார் என்று அறிந்து கொள்ளும் உரிமை அந்த இன்னொருவருக்கு உள்ளது. அவர் அதைப் பயன்படுத்தலாம்; பயன்படுத்தாமல் இருக்கலாம்.

அபூ ஸுமையா என்ற பெயரில் ஒருவர் ஒளிந்து கொண்டு சில கேள்விகளைக் கேட்கிறார். அவர் யார் என்று நான் அறிந்து கொள்ள விரும்பினால் அதைக் கேட்கும் உரிமை எனக்கு உள்ளது. கேட்கும் உரிமை எனக்கு உள்ளது என்றால் அதற்குப் பதில் சொல்லும் கடமை அவருக்கு உண்டு.

கேள்வி கேட்பதற்கு மட்டுமல்ல. எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் ஒருவரைத் தொடர்பு கொள்ளும் போது நம்மைப் பற்றி விசாரிக்கும் உரிமை அவருக்கு இருக்கத் தான் செய்கிறது. ஒருவர் உதவி கேட்டு வருகிறார். அவரைப் பற்றி விசாரிக்காமல் எதையாவது கொடுக்கலாம்.

அல்லது அவர் பிராடு பேர்வழியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கும் உரிமை இருக்கிறது.

தெருவில் ஒருவர் போய்க் கொண்டு இருக்கிறார். அவரிடம் போய் நீ யார் உன் அப்பன் யார் என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர் நம்மை அனுகவில்லை. நம்மைப் பற்றி பேசவில்லை.

ஆனால் ஒருவர் நம்மைப் பற்றி பேசுகிறார். அல்லது நம்மிடம் பேசுகிறார் என்றால் அப்போது அவரைப் பற்றி நமக்கு இருக்கும் எல்லா சந்தேகங்களையும் அவர் நீக்க வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸின் படி அவர் யார் என்று நான் அறிய முயன்றது தவறா? ஒருவர் கேள்வி கேட்கும் போது அவர் யார் என்று கேட்கும் உரிமை உள்ளது என்பதற்கு ஆதாரம் காட்டி விட்டேன். இதற்குப் பதில் சொல்லும் அவசியம் இல்லை என்றால் அதற்குரிய குர்ஆன் வசனம் என்ன? ஹதீஸ்கள் என்ன என்பதை அவர் எடுத்துக் காட்ட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.காரனாகவே இருக்கட்டுமே! ஆர்.எஸ்.எஸ்.காரன் கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியது தானே? என்று செட்டப் செய்து எழுதிக் கொள்ளாமல் இந்த ஆதாரத்துக்குப் பதில் சொல்ல வேண்டும்.

நான் ஆர்.எஸ்.எஸ்.காரன் தான் என்றும் யார் என்றும் அடையாளம் காட்டினால் ஆர்.எஸ்.எஸ்.காரனாக இருந்தாலும் நான் பதில் சொல்வேன்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்றால் அவனுக்கு உரிய பதிலைச் சொல்லி விட்டு அவனை உரித்துக் காயப்போடும் வகையில் பதில் சொல்ல வேண்டும். மத்ஹப்வாதியாக இருந்தால் உரிய பதிலைச் சொல்வதுடன் அவருக்கு உரைக்கும் வகையில் பதில் சொல்ல வேண்டும்.

ஆதாரம் நான்கு

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص - (ج 6 / ص 429)

صحيح

8164 - حدثنا أبو العباس محمد بن يعقوب ثنا أحمد بن عبد الجبار ثنا يونس بن بكير حدثني محمد بن إسحاق حدثني عاصم بن عمرو بن قتادة عن أبيه عن جده قتادة بن النعمان رضي الله عنه قال : كان بنو أبيرق رهط من بني ظفر و كانوا ثلاثة بشير و بشر و مبشر و كان يكنى أبا طعمة و كان شاعرا و كان منافقا و كان يقول الشعر يهجو به أصحاب رسول الله صلى الله عليه و سلم ثم يقول : قاله فلان فإذا بلغهم ذلك قالوا كذب عدو الله ما قاله إلا هو فقال :

( أو كلما قال الرجال قصيدة ضموا إلي بأن أبيرق قالها )

( متخطمين كأنني أخشاهم جدع الإله أنوفهم فأبانها )

و كانوا أهل فقر و حاجة في الجاهلية و الإسلام و كان عمي رفاعة بن زيد رجلا موسرا أدركه الإسلام فو الله إن كنت لأرى أن في إسلامه شيئا و كان إذا كان له يسار فقدمت عليه هذه الضافطة من السدم تحمل الدرمك ابتاع لنفسه ما يحل به فأما العيال فكان يقيتهم الشعير فقدمت ضافطة و هم الأنباط تحمل درمكا فابتاع رفاعة حملين من شعير فجعلهما في علية له و كان في عليته درعان له و ما يصلحهما من آلتهما فطرقه بشير من الليل فخرق العلية من ظهرها فأخذ الطعام ثم أخذ السلاح فلما أصبح عمي بعث إلي فأتيته فقال : أغير علينا هذه الليلة فذهب بطعامنا و سلاحنا فقال بشير و إخوته : و الله ما صاحب متاعكم إلا لبيد بن سهل لرجل منا كان ذا حسب و صلاح فلما بلغه قال : أصلت و الله بالسيف ثم قال : أي بني الأبيرق و أنا أسرق فو الله ليخالطنكم هذا السيف أو لتبينن من صاحب هذه السرقة فقالوا : انصرف عنا فو الله إنك لبريء من هذه السرقة فقال : كلا وقد زعمتم ثم سألنا في الدار و تحسسنا حتى قيل لنا و الله استوقد بنو أبيرق الليلة و ما نراه إلا على طعامكم فما زلنا حتى كدنا نستيقن أنهم أصحابه فجئت رسول الله صلى الله عليه و سلم فكلمته فيهم فقلت : يا رسول الله إن أهل بيت منا أهل جفاء و سفه غدوا على عمي فخرقوا علية له من ظهرها فغدوا على طعام و سلاح فأما الطعام فلا حاجة لنا فيه و أما السلاح فليردوه علينا فقال رسول الله صلى الله عليه و سلم : سأنظر في ذلك و كان لهم ابن عم يقال له أسير بن عروة فجمع رجال قومه ثم أتى رسول الله صلى الله عليه و سلم فقال : إن رفاعة بن زيد و ابن أخيه قتادة بن النعمان قد عمدا إلى أهل بيت منا أهل حسب و شرف و صلاح يأبنونهم بالقبيح و يأبنونهم بالسرقة بغير بينة و لا شهادة فوضع عند رسول الله صلى الله عليه و سلم بلسانه ما شاء ثم انصرف و جئت رسول الله صلى الله عليه و سلم و كلمته فجبهني جبها شديدا و قال : بئس ما صنعت و بئس ما و كانوا أهل فقر و حاجة في الجاهلية و الإسلام و كان عمي رفاعة بن زيد رجلا موسرا أدركه الإسلام فو الله إن كنت لأرى أن في إسلامه شيئا و كان إذا كان له يسار فقدمت عليه هذه الضافطة من السدم تحمل الدرمك ابتاع لنفسه ما يحل به فأما العيال فكان يقيتهم الشعير فقدمت ضافطة و هم الأنباط تحمل درمكا فابتاع رفاعة حملين من شعير فجعلهما في علية له و كان في عليته درعان له و ما يصلحهما من آلتهما فطرقه بشير من الليل فخرق العلية من ظهرها فأخذ الطعام ثم أخذ السلاح فلما أصبح عمي بعث إلي فأتيته فقال : أغير علينا هذه الليلة فذهب بطعامنا و سلاحنا فقال بشير و إخوته : و الله ما صاحب متاعكم إلا لبيد بن سهل لرجل منا كان ذا حسب و صلاح فلما بلغه قال : أصلت و الله بالسيف ثم قال : أي بني الأبيرق و أنا أسرق فو الله ليخالطنكم هذا السيف أو لتبينن من صاحب هذه السرقة فقالوا : انصرف عنا فو الله إنك لبريء من هذه السرقة فقال : كلا وقد زعمتم ثم سألنا في الدار و تحسسنا حتى قيل لنا و الله استوقد بنو أبيرق الليلة و ما نراه إلا على طعامكم فما زلنا حتى كدنا نستيقن أنهم أصحابه فجئت رسول الله صلى الله عليه و سلم فكلمته فيهم فقلت : يا رسول الله إن أهل بيت منا أهل جفاء و سفه غدوا على عمي فخرقوا علية له من ظهرها فغدوا على طعام و سلاح فأما الطعام فلا حاجة لنا فيه و أما السلاح فليردوه علينا فقال رسول الله صلى الله عليه و سلم : سأنظر في ذلك و كان لهم ابن عم يقال له أسير بن عروة فجمع رجال قومه ثم أتى رسول الله صلى الله عليه و سلم فقال : إن رفاعة بن زيد و ابن أخيه قتادة بن النعمان قد عمدا إلى أهل بيت منا أهل حسب و شرف و صلاح يأبنونهم بالقبيح و يأبنونهم بالسرقة بغير بينة و لا شهادة فوضع عند رسول الله صلى الله عليه و سلم بلسانه ما شاء ثم انصرف و جئت رسول الله صلى الله عليه و سلم و كلمته فجبهني جبها شديدا و قال : بئس ما صنعت و بئس ما مشيت فيه عمدت إلى أهل بيت منكم أهل حسب و صلاح ترميهم بالسرقة و تأبنهم فيها بغير بينة و لا تثبت فسمعت من رسول الله صلى الله عليه و سلم ما أكره فانصرفت عنه و لوددت أني خرجت من مالي و لم أكلمه فلما أن رجعت إلى الدار أرسل إلي عمي يا ابن أخي ما صنعت ؟ فقلت : و الله لوددت أني خرجت من مالي و لم أكلم رسول الله صلى الله عليه و سلم فيه و أيم الله لا أعود إليه أبدا فقال : الله المستعان فنزل القرآن { إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما } أي طعمة بن أبيرق فقرأ حتى بلغ { ثم يرم به بريئا } أي ليبد بن سهل { ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك } يعني أسير بن عروة و أصحابه ثم قال : { لا خير في كثير من نجواهم } إلى قوله { و يغفر ما دون ذلك لمن يشاء } أي كان ذنبه دون الشرك و فلما نزل القرآن هرب فلحق بمكة و بعث رسول الله صلى الله عليه و سلم إلي الدرعين و أداتهما فردهما على رفاعة قال قتادة : فلما جئته بهما و ما معهما قال : يا ابن أخي هما في سيبل الله عز و جل فرجوت أن عمي حسن إسلامه و كان ظني به غير ذلك و خرج ابن أبيرق حتى نزل على سلامة بنت سعد بن سهل أخت بني عمرو بن عوف و كانت عن طلحة بن أبي طلحة بمكة فوقع برسول الله صلى الله عليه و سلم و أصحابه يشتمهم فرماه حسان بن ثابت بأبيات فقال :

( أيا سارق الدرعين إن كنت ذاكرا بذي كرم بين الرجال أوادعه )

( وقد أنزلته بنت سعد فأصبحت ينازعها جلد استه و تنازعه )

( فهلا أسيرا جئت جارك راغبا إليه و لم تعمد له فتدافعه )

( ظننتم بأن يخفى الذي قد فعلتم و فيكم نبي عنده الوحي واضعه )

( فلولا رجال منكم تشتمونهم بذاك لقد حلت عليه طوالعه )

( فإن تذكروا كعبا إلى ما نسبتم فهم من أديم ليس فيه أكارعه )

( وجدتهم يرجونكم قد علمتم كما الغيث يرجيه السمين و تابعه )

فلما بلغها شعر حسان أخذت رحل أبيرق فوضعته على رأسها حتى قذفته بالأبطح ثم حلقت و سلقت و خرقت و خلفت إن بت في بيتي ليلة سوداء أهديت لي شعر حسان بن ثابت ما كنت لتنزل علي بخير فلما أخرجته لحق بالطائف فدخل بيتا ليس فيه أحد فوقع عليه فقلته فجعلت قريش تقول : و الله لا يفارق محمدا أحد من أصحابه بخير

هذا حديث صحيح على شرط مسلم ولم يخرجاه

تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص

நபிகள் நாயகம் ஸல் காலத்தில் உபைரிக் என்பவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். மூவரும் முனாபிக்காக இருந்தனர். அதில் ஒருவன் பஷீர். இவன் வேலை என்ன வென்றால் நபித்தோழர்களை ஏசும் வகையில் கவிதை எழுதி விட்டு இது அந்தக் கோத்திரத்தார் சொன்னது; இது இந்தக் கோதிரத்தார் சொன்னது என்று (அஸு புஸு என்று மேற்படியார் செட்டப் செய்வது போல்) சொல்லி விடுவான். நபித்தோழர்களோ இல்லை இது இவன் தான் சொல்கிறான் என்று கூறி விடுவார்கள். ஆனால் இவன் முஸ்லிம் என்று வேடம் போட்டு வந்தான். இவனும் இவனுடைய சகோதரர்களும் ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் வீட்டுக்குள் கன்னக்கோல் வைத்து உணவுகளையும், ஆயுதங்களையும் திருடிச் சென்று விட்டனர். மற்றவர்கள் திருடி விட்டார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இவர்கள் தான் திருடி இருப்பார்கள் என்று திருட்டுக் கொடுத்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் புகார் செய்தனர். ஆனால் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மீது பழி போடலாமா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகார் செய்தவரையே கண்டித்தார்கள். (இப்படித்தான் அபூ நூறாவும் ஏமாந்திருப்பார் போலும்) ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டித்து அல்லாஹ் பின் வரும் வசனங்களை அருளினான். (ஹாகிம் ஹதீஸ் சுருக்கம்)

தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்த போது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்காக வாதிடுகிறீர்கள். கியாமத் நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதிடுபவன் யார்? அல்லது அவர்களுக்காகப் பொறுப்பேற்பவன் யார்?

யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார்.

பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது

திருக்குர்ஆன் 4:107-113

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்களிடமிருந்து தன்னை ஒருவன் மறைத்துக் கொள்ளக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வாறு மறைத்துக் கொள்வோருக்காக யாரும் வாதிடக் கூடாது. அவர்களை வெளிப்படுத்த முயல வேண்டுமே தவிர அவர்களை நம்பி ஏமாறக் கூடாது

முகமூடி போட்டும் கொண்டு எதையாவது எழுதி விட்டு இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்று மற்றவர்கள் மேல் சந்தேகம் வரும்படி நடப்பவன் அவதூறு கூறியவன்; அநியாயக்காரன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆதாரம் ஐந்து

இஸ்லாத்தில் இன வேற்றுமை குல வேற்றுமை கிடையாது என்பது இஸ்லாத்தின் பிரகடனம். ஆனாலும் குலத்தையும் கோத்திரத்தையும் முக்கியமான பயன் கருதி அல்லாஹ் அனுமதிக்கிறான்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

ஒரே பெயரில் பலர் இருந்தால் அவரைக் குறிப்பாக அறிந்து கொள்ள முடியாமல் போகும். இந்தக் குலத்தைச் சேர்ந்த இன்னார் என்று கூறினால் அவரை மக்கள் குறிப்பாக அறிந்து கொள்வார்கள் என்பதற்காக குலம் கோத்திரத்தை ஏற்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்.

தேவைப்படும் போது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவசியம என்பதால் கேடு விளைவிக்கும் குலம் கோத்தரத்தைக் கூட அனுமதித்து அந்தக் கேடு வராத முறையில் தக்க வழி காட்டுகிறான் இறைவன். இதைச் சிந்தித்தால் மனிதன் தன்னை மறைத்துக் கொள்ளக் கூடாது என்பதை அறியலாம். ஒருவரை ஒருவர் குறிப்பிட்டு அறிந்து கொள்ள இறைவன் அனுமதிப்பது மட்டுமின்றி ஆர்வமும் ஊட்டி இருக்கும் போது இதற்கு மாற்றமாக் தன்னை ஒளித்துக் கொள்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?

திருக்குர்ஆனிலிருந்தும் நபிவழியில் இருந்தும் இதற்கான ஆதாரத்தை கள்ளப் பேர்வழி எடுத்துக் காட்டி விட்டு முகமூடி போட்டுக் கொள்ளட்டும்.

ஒருவரைப் பற்றி யாரும் அறிந்து கொள்ள விருப்பம் கொள்ளாவிட்டால் அவர் தன்னைப் பற்றி அறிவிக்கும் அவசியம் இல்லை. ஆனால் ஒருவரைப் பற்றி சந்தேகம் எழுப்பும் போது குறிப்பாக எழுத்து மூலம் பொது வாழ்வுக்கு வந்துள்ளதால் அவரைப் பற்றி அறியும் அவசியம் அனைவருக்கும் இருக்கும் போது தன்னை மறைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு சில ஆதாரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. புதன் கிழமைக்குள் அவர் இதற்கு பதிலளித்தால் அது குறித்து பதில் தரப்படும். அவர் பதில் தராவிட்டால் இது குறித்த இன்னும் பல ஆதாரங்கள் எடுத்து வைக்கப்படும்.

அதன் பிறகு மற்ற வாதங்கள் ஒன்று விடாமல் பதிலளிக்கப்படும்.

இதன் தொடர் புதன் கிழமை இன்ஷா அல்லாஹ்

17.01.2010. 18:36




Search..

பார்வையாளர்

தாங்கள்

வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
36 நபர்கள்

நண்பருக்கு அனுப்ப..

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியை உங்கள் நண்பருக்கு அனுப்ப

புது வரவுகள்

பொருளடக்கம்


PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.
Moon Publication
83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1
போன்-044 65690810 , செல்-9444276341,9976223885
புத்தகங்களின் பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி