ஜாகிர் நாயக் மீது காழ்ப்புணர்ச்சி ஏன

ஜாகிர் நாயக் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்

நான் அண்மையில் ஆன்லைன் பீ ஜே வெப்சைட்டில் ஜாகிர் நாயக்கின் அறியாமை என்ற தலைப்பில், கருவில் உள்ள குழந்தை வெளி உலகில் நடப்பதைச் செவியுருமா என்பது குறித்து ஜாகிர் நாயக்கரின் கருத்துக்கு உங்களுடைய விமர்சனம் படித்தேன். அதில் நீங்கள் ஜாகிர் நாயக் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களைக் கூறி உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள். மேலும் யாராவது முடிந்தால் ஜாகிர் நாயக்கின் கருத்துக்கு அவரிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்குமாறு கூறி இருந்தீர்கள். நான் ஜாகிர் நாயக்கிடம் கேட்கவில்லை. ஆனால் நான் சில டாக்டர்களிடம் இதைப்பற்றி விசாரித்தேன். நான் விசாரித்த டாக்டர்கள் சொன்ன பதிலும் ஜாகிர் நாயக்கின் பதிலும் ஒன்றாகவே உள்ளது.

அதாவது தாயின் கருவில் உள்ள ஐந்து மாத சிசுவால் வெளி உலகில் உள்ள சத்தங்களைக் கேட்கமுடியும். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் எந்த டாக்டரிடம் வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் நான் விசாரித்த டாக்டர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய செல் நம்பர்களைத் தருகிறேன். மேலும் இதைப் பற்றி நான் சில வெப்சைட்களிலும் தேடினேன். அதுவும் ஜாகிர் நாயக்கின் கருத்துடனே ஒத்துப்போகிறது. ஒரு மருத்துவராக ஜாகிர் நாயக் அவருடைய கருத்துத்தை ஒழுங்காகவே கூறியுள்ளார். ஆகவே நீங்கள் அவரை விமர்சித்து இருப்பது அவர் மேல் உங்களுக்கு(TNTJ) உள்ள தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவதாகவே உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது ஒன்றைப் பற்றி விமர்சிக்கும் முன் அதைப்பற்றி முழுவதுமாக அறிந்துகொண்டு விமர்சிப்பது ஒரு தலைமைக்கு நல்லது என்று நான் கருதுகிறேன்.

மேலும் நீங்கள் குரான் வசனம் (திருக்குர்ஆன் 16:78 ) குறிப்பிட்டு உங்களுடைய கருத்தைச் சொல்லி இருந்தீர்கள். அந்த வசனம் பின்வருமாறு அமைந்துள்ளது.

"நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்".

இதில் எதையும் அறியாத நிலை என்பதற்கு எந்த சத்தமும் கேளாமை என்று அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

மேலும் "செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்" என்பது நாம் கருவிலிருந்து வெளி உலகத்திற்கு வந்த உடன்தான் ஏற்படுத்தினான் என்று அர்த்தம் இல்லை. இது கருவிலும் (அதாவது தாயின் வயிற்றிலும்) ஏற்படுத்தி இருக்கலாம். ஆகவே இதில் அவர் அவர் கருத்தை சொல்வதைவீட உண்மையை ஆராய்ந்து மக்களுக்கு உணர்த்துவது நல்லது.

இதில் என்னுடைய அறியாமை ஏதாவது இருந்தாலும் அதை எனக்கு உணர்த்தும் மாறும், மேலும் என்னுடைய கருத்துக்கு உங்களுடைய பதில் அளிக்குமாரும் ஒரு மூமினாக கேட்டுக்கொள்கிறேன்.

நவ்ஃபல் மாலிக்  

ஜாகிர் நாயக் குறித்த விமர்சனத்துக்கு நீங்கள் மறுப்பு எழுதுவதாக இருந்தால் அது குறித்த அனைத்து வாதங்களுக்கும் நீங்கள் மறுப்பு எழுத வேண்டும். உங்கள் வாதம் அவ்வாறு அமையவில்லை.

ஜாகிர் நாயக்கின் வாதம் குறித்து நாம் சொன்னவைகளை முழுமையாக உள்வாங்கி உங்கள் விமர்சனத்தை வைக்கவில்லை. தனிப்பட்ட மனிதர் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக இது போன்ற நிலை சிலருக்கு ஏற்படுவதுண்டு. உங்கள் விமர்சனத்திலும் அது காணப்படுகிறது.

எங்கள் முதல் வாதம்

ரவி சங்கருடன் நடந்த கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று ஜாகிர் நாயக் கூறியுள்ளார்.

கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.

திருக்குர் ஆன் 76:2, 3

இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறவில்லை. விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறை பற்றி பேசவில்லை.
அதைத் தொடர்ந்து நேர்வழி காட்டினோம்
; அவன் நன்றி செலுத்துபவனாக அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறப்படுகிறது. கருவறையிலேயே நேர்வழியை அல்லது கெட்ட வழியை குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்பதும் அறியாமையாகும்.

இது தான் நாம் எடுத்து வைத்த முதல் வாதம்.

டாக்டர்கள் கூறுவது சரியா என்பதை இரண்டாவதாக எடுத்துக் கொள்வோம். முதலில் ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி அது சொல்லாத கருத்தைச் சொல்வதாக அவர் வாதிட்டுள்ளார் என்பது தான் எங்களின் முதன்மையான விமர்சனம்.

ஜாகிர் நாயக்குக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் திருக்குர்ஆன் சொல்லாத கருத்தை அவர் சொல்லி இருக்கிறார் என்ற வாதத்துக்கு ஒரு வரி கூட பதில் சொல்லவில்லை.

நீங்கள் விறுப்பு வெறுப்பு இல்லாமல் சிந்தித்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த வசனத்தை எடுத்துக் காட்டி அந்த வசனத்தில் ஜாகிர் நாயக் சொன்ன கருத்து உள்ளது என்று வாதிட வேண்டும். அல்லது குர்ஆன் விஷயத்தில் அவர் தவறாகச் சொல்லி விட்டார். மருத்துவம் பற்றி சரியாகச் சொல்லி இருக்கிறார் என்றாவது நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்.

குர்ஆனுக்கு எதிரான கருத்தை அவர் சொல்லி இருக்கிறார் என்பதற்காக உங்களுக்கு அவர் மீது கோபம் கூட வரவில்லை என்றால் இதை எப்படி நாங்கள் எடுத்துக் கொள்வது?

உறுதிபடக் கூறுகிறோம். ஜாகிர் நாயக் எடுத்துக் காட்டும் வசனம் கருவறையில் குழந்தை கேட்கும் என்ற கருத்தைக் கூறவில்லை. விந்துத்துளியில் இருந்து படைக்கப்பட்டவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்ற வாக்கியம் கருவறையில் குழந்தை கேட்கும் என்ற கருத்தைத் தான் தருகிறதா? இது தவறு என்று உங்களுக்கே தோன்றவில்லையா?

கேட்பவனாக என்று மட்டும் அதில் கூறப்படவில்லை. பார்ப்பவனாக என்றும் உள்ளது. கருவறையில் உள்ள குழந்தை வெளிஉலகில் உள்ளதைப் பார்க்கும் என்று இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டி யாராவது வாதிட்டால் அதை அவர் ஏற்றுக் கொள்வாரா? அல்லது நீங்கள் தான் ஏற்றுக் கொள்வீர்களா?

ஜாகிர் நாயக் கூறுவது சரியானது என்றால் அவர் இந்த வாதத்துக்கு மறுப்பு அளித்திருக்க வேண்டும்.
ஆனால்
http://onlinepj.com/audio_uraikal/vivathangal/jakir_nayak_ariyamai/ என்ற ஆக்கம் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பி ஆண்டுகள் இரண்டு ஓடிவிட்டன. இன்று வரை அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இது குறித்து அறிய 2010ல் வெளியிட்ட

http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/jakir_nayakin_pathil_enna/
 

என்ற ஆக்கத்தையும் பார்வையிடவும்

எங்கள் இரண்டாம் வாதம்

ஜாகிர் நாயக் 76:2 வசனத்தை தன்னுடைய இஷ்டத்துக்கு வளைத்திருக்கிறார் என்பதை மேலும் நிறுவ கீழ்க்கண்ட வாதத்தையும் நாம் எழுப்பி இருந்தோம்.

இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 16:78

கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது என்ற வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கின்றது.

இது நம்முடைய இரண்டாவது வாதம்

இந்த வாதத்துக்கு மட்டும்தான் நீங்கள் ஒரு மறுப்பைக் கொடுத்துள்ளீர்கள். ஜாகிர் நாயக் கூட நீங்கள் கொடுத்த விளக்கத்தைக் கொடுக்க மாட்டார்.

இதில் எதையும் அறியாத நிலை என்பதற்கு எந்த சத்தமும் கேளாமை என்று அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இது தான் உங்கள் வாதத்தின் சுருக்கம்.

எதையும் அறியாத நிலை என்பதற்கு காது கேளாமை என்று அர்த்தம் உள்ளதாக நாம் வாதிக்கவில்லை. காது கேளாமையையும் உள்ளடக்கிய அதைவிட விரிவான அர்த்தம் கொண்ட சொல் தான் அறியாமை என்பது.
கருவறையில் இருந்து மனிதனை அல்லாஹ் வெளியேற்றும் போது மனிதன் எதையும் அறியாதவனாக இருந்தான் என்பது குர்ஆன் தெளிவாகக் கூறும் உண்மை. காது கேட்கும் என்றால் கேட்பதன் மூலம் மனிதன் சிலதை அறிந்திருந்தான் என்ற கருத்து தான் வரும். மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய ஆற்றவில் செவிப்புலனும் ஒரு அறிவாகும், (ஷைஅன்) எந்த ஒன்றையும் அறியாதவனாக என்ற சொல் கேட்டறிவும் இல்லாதவனாக இருந்தான் என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.

எதையும் அறியாதவனாக கருவில் இருந்து மனிதன் வெளியேறுகிறான் என்று அல்லாஹ் சொல்கிறான். நீங்களோ சில விஷயங்களை அறிந்தவனாக வெளியேறினான் என்று சொல்கிறீர்கள். அல்லாஹ்வின் வசனத்தை நீங்கள் ஒருவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திரிக்கிறீர்கள் என்று தான் நாங்கள் கருத வேண்டியுள்ளது.

கருவறையில் இருக்கும் போதே குழந்தைக்கு அல்லாஹ் பார்வையையும் வழங்குகிறான். இதனால் வெளியில் நடப்பதை குழந்தையால் பார்க்க முடியும் என்று கூறினால் அது எவ்வளவு அறிவீனமான கருத்தோ அது போன்று உங்களுடைய இந்த கருத்தும் அமைந்துள்ளது  

ஜாகிர் நாயக் கூறும் கருத்துதான் சரியானது என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் ஜாகிர் நாயக்கின் விளக்கம் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் எடுத்து வைத்த அனைத்து வாதங்களுக்கும் நீங்கள் பதில் கூற வேண்டும்.

இதை நீங்கள் செய்யாமல் நமது ஓரிரு வாதங்களுக்கு மட்டும் உங்களுக்குத் தெரிந்த பதிலை சொல்வது சத்தியத்தை அறிந்து கொள்வதற்குரிய சரியான நடைமுறை இல்லை.

ஒரு வசனத்துக்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால் முதலில் அந்த விளக்கம் அந்த வசனத்துடன் கச்சிதமாக பொருந்திப்போக வேண்டும். வசனத்தின் முன்பின் வாசகங்கள் அந்த விளக்கத்தை மறுக்கும் வகையில் இருக்குமானால் அப்போது அந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடாது.

இந்த அடிப்படையில் குர்ஆனை அனுகினால் 76 : 2 வது வசனத்துக்கு ஜாகிர் நாயக் கொடுத்த விளக்கம் தவறானது என்பதைப் பின்வருமாறு கூறியிருந்தோம்.

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டினோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.

திருக்குர் ஆன் 76:2, 3

இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவிமடுக்கும் என்று கூறவில்லை. விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறை பற்றி பேசவில்லை.

அதைத் தொடர்ந்து நேர்வழி காட்டினோம்; அவன் நன்றி செலுத்துபவனாக அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறப்படுகிறது. கருவறையிலேயே நேர்வழியையும் கெட்டவழியையும் குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்பதும் அறியாமையாகும்.

ஜாகிர் நாயக்கின் கருத்தைச் சரிகாணும் நீங்கள் மேற்கண்ட நமது வாதத்துக்கு ஏன் பதில் தரவில்லை.?

ஒரு பேச்சுக்கு குழந்தை கருவறையில் கேட்கின்றது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும் வெளியில் உள்ள சப்தத்தைக் கேட்கின்றது என்பதற்கு என்ன ஆதாரம்? வெளியில் உள்ள சப்தத்தைக் கேட்பதாக மேற்கண்ட வசனத்தில் எங்கே சொல்லப்பட்டுள்ளது?

காற்று புகாத இடத்தில் ஒலி செல்ல முடியாது என்ற உலகம் அறிந்த விஞ்ஞான உண்மையைப் பதிலாக கூறியிருந்தோம். இதற்கு ஏன் நீங்கள் பதிலளிக்கவில்லை?

அல்லாஹ் 39 : 6 ஆவது வசனத்தில் கருவறையில் உள்ள குழந்தை மூன்று தடுப்புகளால் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான். இந்த தடுப்புகளை மீறி சப்தம் உள்ளே எப்படி செல்லும் என்று கேட்டோம். அதற்கு தங்களிடம் பதில் இல்லை?

மேற்கண்ட நமது வாதங்களைக் கண்டுகொள்ளாத நீங்கள் நாம் தனிப்பட்ட வெறுப்பால் ஜாகிர் நாயக்கை விமர்சனம் செய்துள்ளதாக உங்களால் எப்படி கூற முடிகின்றது?

தாயின் கருவறையில் உள்ள 5 மாத சிசுவால் வெளியில் உள்ள சத்தங்களைக் கேட்க முடியும் என்ற கருத்து விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.

விஞ்ஞானத்தில் எப்போது? யார் நிரூபித்தார்கள்? எப்படி நிரூபித்தார்கள்? என்பதை விளக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. இதை எப்படி நிரூபிப்பீர்கள்?

உங்களுக்குத் தெரிந்த சில டாக்டர்கள் சிசுவால் கேட்க முடியும் என்று கூறிவிட்டதால் இது விஞ்ஞானப்பூர்வமான முடிவு என்ற நிலைக்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மீறி ஒருவனுக்கு பலர் என்பதால் எய்ட்ஸ் உண்டாகிறது என்று இந்தியாவில் 90 சதவிகிதம் டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்திய அரசாங்கம் இவர்கள் சொல்லைக் கேட்டு இப்படி பிரச்சரம் செய்கிறது. ஆனால் இது அப்பட்டமான பொய்யாகும் ஒருத்திக்கு ஒருவன் என்பதை மீறினால் தான் எய்ட்ஸ் உண்டாகும்.

அதாவது ஒரு ஆண் நாலு பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்தால் அவனுக்கும் எய்ட்ஸ் வராது. நான்கு மனைவிகளுக்கும் வராது. முஸ்லிமல்லாத ஒருவன் நூறு பெண்களை மணந்து கொண்டாலும் இதன் காரணமாக எய்ட்ஸ் வராது. ஆனால் ஒரு பெண் ஒரு காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டால் தான் எய்ட்ஸ் வரும். அவள் வழியாக மற்றவருக்கும் பரவும்.

டாக்டர்கள், பலர் சொன்னாலும் அவர்களே அறிவியலைப் படிக்காமல் உலகம் போகிறபோக்கில் கருத்து கூறுகின்றனர்.

அதுபோல் உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் நடப்பதால் குழந்தைகளைப் பாதிக்கும் என்று ஏராளமான டாக்டர்கள் கூறுவார்கள். ஆனால் இதுவும் உண்மை இல்லை. இது எந்த ஆய்வின் மூலமும் நிரூபிக்கப்பட்டதல்லை. ஊகமாக விட்டு அடித்த பொய்யான சித்தாந்தம் தான்.

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/uravinarai_thirumnam_seythaal_kuzanthai/

அதுபோல் தான் பல டாக்டர்கள் இப்படி கூறுவதை நாங்கள் அறிவோம். ஆனால் அதற்கான அறிவியல் நிரூபணத்தைத் தர முடியுமா? குழந்தைக்கு கருவில் காது கேட்கிறது என்பதற்கு செய்யப்பட்ட சோதனை என்ன? எந்த முறையில் இதைக் கண்டுபிடித்தார்கள் என்றெல்லாம் ஆதாரம் கேட்டுப்பாருங்கள். அவர்களால் இதுவரை அந்த ஆதாரங்களைத் தர இயலவில்லை.

ஏழு ஆண்டுகள் படித்த ஆலிம்களில் நூற்றில் ஒருவர் தான் ஆய்வாளராக இருக்கிறார். அது போல் டாக்டர்களிலும் உள்ளனர். நூற்றில் ஒருவர் தான் ஆய்வாளராக ஆய்ந்து முடிவு எடுப்பவராக உள்ளார். அதிகமானவர்கள் ஊகமான சொல்லப்படும் ஊடகங்களைப் பின்பற்றி அதையே விஞ்ஞான முலாம் பூசி சொல்லி விடுகிறார்கள்.

நீங்களாவது அதற்கான ஆதாரத்தை அந்த டாக்டர்களிடம் கேட்டு எங்களுக்கு தெரிவிக்கவும்.

காற்று இல்லாமல் சத்தத்தைக் கேட்க முடியாது என்ற நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்துக்கு மாற்றமாக மருத்துவர்கள் சொன்னால் அது எப்படி சாத்தியம் என்பதை அந்த மருத்துவர்கள் அறிவிப்பூர்வமாக விளக்க வேண்டும். மருத்துவர் சொன்னதை சரிகாணும் நீங்களாவது அந்த அறிவிப்பூர்வமான விளக்கத்தை நம்மிடம் கூறி இருக்கலாமே?

கருவறையில் இருக்கும் போதே குழந்தைக்கு அல்லாஹ் பார்வையையும் வழங்குகிறான். இதனால் வெளியில் நடப்பதை குழந்தையால் பார்க்க முடியும் என்று கூறினால் அது எவ்வளவு அறிவீனமான கருத்தோ அது போன்று உங்களுடைய இந்த கருத்தும் அமைந்துள்ளது.

மேலே நாம் சுட்டிக்காட்டிய லின்கில் ஜாகிர் நாயக் பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளோம். அதை முழுமயாகக் கேட்டு விட்டு குர்ஆன் வசனத்தில் இல்லாத ஒரு கருத்தை அவர் தன்னிஷ்டத்துக்கு தினித்து குர்ஆனுடன் விளையாடியுள்ளார் என்பதை நீங்களும் அறிந்து கொள்வீர்கள்.

அவர் இது போல் பல விஷயங்களில் வாய்க்கு வந்தவாறு சொல்லியுள்ளார். அவருக்கு நாம் பல சந்தர்ப்பங்களில் மறுப்பை பலர் வழியாக தெரிவித்த பின்னர் அது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்க மாட்டார். மேடையில் விட்டு அடித்து விட்டு அது குறித்த கேள்விகளை அவர் ஒரு போதும் எதிர் கொண்டதில்லை என்ற கோபம் மட்டும் தான் எங்களுக்கு உண்டு. இது மார்க்கத்துக்காக ஏற்படும் கோபமே தவிர தனிப்பட்ட நபர் மீதான கோபம் அல்ல

இது குறித்து நமது இணைய தளத்தில் உள்ள கீழ்க்காணும் செய்திகளைப் பாருங்கள்

http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/jakir_nayak/

http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/ervadi_periyavr/

http://onlinepj.com/vimarsanangal/jakir_nayak/ervadi_periyavr/

http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/nerupukoziyin_muttai_vadivil_poomi_pataikapatulatha/

எனவே சரியான முறையில் சிந்தித்துப் பாருங்கள். உண்மையை அறிந்துகொள்வீர்கள்.

November 15, 2012, 1:59 AM

ஜாகிர் நாயக்கின் பதில் வந்ததா

ஜாகிர் நாயக்கின் பதில் வந்ததா கருவில் உள்ள குழந்தை வெளி உலகில் நடப்பதைச் செவியுறுமா என்பது குறித்து ஜாகிர் நாயக் அவர்கள் தெரிவித்த கருத்து குர் ஆனுக்கும் அறிவியலுக்கும் எதிரானது என்று நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

தொடர்ந்து படிக்க April 22, 2010, 10:00 PM

ஏர்வாடிப் பெரியவர் யார்

 

ஏர்வாடிப் பெரியவர் யார் அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். டாக்டர் ஜாகிர் நாயக் குறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஒரு பெரியவர் என்னிடம் கேள்வி கேட்டது பற்றியும், அப்போது ஜாகிர் நாயக்கின் கருத்துக்கள் பல தவறாக உள்ளன என்பதை அப்பெரியவருக்கு எழுதியதையும் இது குறித்து ஜாகிர் நாயக்கிடம் விளக்கம் கேட்குமாறு நான் அந்தப் பெரியவருக்கு கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெரியவர் யார் என்பது மறந்து விட்டது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

தொடர்ந்து படிக்க December 20, 2009, 10:22 AM

ஜாகிர் நாயக்

நீங்கள் dr.சாகிர் நாயக் அவர்களை காபிர் என்று சொன்னதாக ஒரு தமுமுக சார்ந்த சகோதரர் கூறுகிறார் உங்கள் பதில் என்ன டாக்டர் சாகிர் நாயக் அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன ? எந்தத் தனி நபரைப் பற்றியும் குறிப்பாக ஜாகிர் நாயக்கைப் பற்றி காஃபிர் என்று நாம் கூறியதில்லை. மார்க்கம் தொடர்பாக அவரது பல நிலைபாடுகளில் நாம் மாறுபடுகிறோம்

தொடர்ந்து படிக்க September 10, 2009, 6:50 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top