விகடக் கோமாளியின் தெருக்கூத்து

விகடக் கோமாளியின் தெருக்கூத்து : 

இலங்கைப் பெண் ரிசானாவிற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஆனந்த விகடன் என்ற கோமாளி பத்திரிக்கையில், பாரதி தம்பி என்ற அரைவேக்காடு, இல்லாத பொல்லாத விஷயங்களையெல்லாம் இஸ்லாத்தின் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் அள்ளி வீசியுள்ளது.

இது குறித்து
, “துண்டிக்கப்பட்ட நீதிஎன்ற கட்டுரையை வெளியிட்டு தங்களுக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் விகடக் கோமாளிகள். துண்டிக்கப்பட்ட நீதிஎன்று தலைப்பிட்ட கட்டுரையில் பொய்களையும், உளறல்களையும் அள்ளிக் கொட்டி, அறிவையும், உண்மையையும் தங்களிடத்திலிருந்து துண்டித்துள்ளது ஆனந்த விகடன்.

இது காட்டுமிராண்டிகளின் நரபலி அல்ல. நவீன உலகத்தில் சட்டப்படி வழங்கப்பட்டு இருக்கும் நீதிஎன்று ரிசானா விவகாரம் குறித்து ஆரம்பமாகின்றது இந்தக் கட்டுரை.

4
மாத குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமாம். பாரதி தம்பியின் அண்ணனையோ அல்லது அவரது குழந்தையையோ எவனாவது கொலை செய்தால் இந்தத் தம்பியின் நிலை அப்போது தெரியும்.

பாரதி தம்பிக்கு உண்மையிலேயே துணிவு என்ற ஒன்று துளியாவது இருக்குமேயானால் நரபலி என்ற பெயரில் குழந்தைகளைக் கொல்லும் இந்து சாமியார்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி பேனா பிடிக்கட்டும்
.

இந்த அரைவேக்காட்டு பாரதி தம்பியும் மிருக புத்திரன் எழுதியது போலவே ரிசானா எழுதிய கடிதம்தான் அவர் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரம் என்று எழுதி தனது புத்தியின்மையை வெளிப்படுத்தியுள்ளார்
.
 

ஆனந்த விகடனின் திட்டமிட்ட சதி அம்பலம்
:

அடுத்ததாக இவர்கள் புளுகியுள்ள விஷயம்தான் இந்த ஆண்டின் மகா புளுகாக கருதப்படும் என்கின்ற அளவிற்கு இஸ்லாத்தின் மீதும்
, இஸ்லாமியர்கள் மீதும் திட்டமிட்ட பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் இப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள்தான் என்ற விஷக்கருத்தை விதைக்கும் விதமாக உண்மையை மறைத்து திரித்து எழுதியுள்ளனர்.
 

இதோ பாரதி தம்பியின் அவதூறு வரிகள்
:

சவுதி சிறைச்சாலைகளில் இன்னும் நான்கு இலங்கையர்கள் மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்
. புத்தர் சிலையை வைத்துத் தொழுதார், ‘பைபிள் வைத்திருந்தார், ‘முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார், ‘மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார். என்பது அந்த நான்கு பேர் மீதும் சொல்லப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள். இவர்களைக் காப்பாற்றவும் இலங்கை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லைஎன்று கட்டுக்கதை எழுதியுள்ளார் பாலாய்ப்போன பாரதி தம்பி.
 •  
  சவூதி அரேபியச் சிறைச்சாலையில் இன்னும் 4நபர்கள் தலைவெட்டப்பட காத்திருக்கின்றார்களாம்.
 •  
  புத்தர் சிலையை வைத்துத் தொழுதார்,
 •  
  பைபிள் வைத்திருந்தார்,
 •  
  முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்,
 •  
  மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார்
மேற்கண்ட நான்கு செய்திகள்தான் அவர்கள் தலைவெட்டப்படப் போவதற்கு காரணம் என்று சொல்லி இல்லாத புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார் பொய்யுக்கும், புரட்டுக்கும் அண்ணனாக விளங்கும் புளுகள் தம்பி.

மேற்கண்ட நான்கு காரணங்களுக்காக சவூதியில் தலை வெட்டப்படுமானால் அந்த
4பேரோடு சேர்த்து இங்குள்ள பாரதி தம்பிகளும், மனுஷ்ய புத்திரர்களும், ஜோஸபைன் பாபாக்களும் தலைவெட்டப்பட வேண்டியவர்கள்தான்.

இந்த பாரதி தம்பி தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஏ
.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு, சம்பந்தப்பட்ட நால்வருடன் ஐந்தாவது நபராக அமர்ந்திருந்தவர் போல கதை எழுதியுள்ளார்.
பாரதி தம்பி சொன்ன செய்திகள் இவரது சொந்த சரக்கோ, சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்போ கிடையாது. இலங்கை எம்.பி.ரஞ்சன் ராமநாயக்கா என்பவர் ஆளும் கட்சியைத் திட்டுவதற்காக சொல்லியுள்ள செய்திகள்தான் அவை.
 
 
இலங்கையின் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கா சொன்னது என்ன?:
சவூதி அரேபிய சிறையில் புத்தர் சிலையை வைத்துத் தொழுதார், ‘பைபிள் வைத்திருந்தார், ‘முஹம்மது நபிகள் குறித்த கேலிச் சித்திரத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார், ‘மந்திரம் ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு வாங்கினார்என்பதற்காக 4பேர் சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. இவர்கள் மரணதண்டனை குற்றவாளிகள் அல்லஎன்று இலங்கை எம்.பி. கூறியுள்ள செய்திகளைத்தான் திட்டமிட்டு, முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காழ்ப்புணர்வோடு திரித்து எழுதியுள்ளார் ஆனந்த விகடன் கட்டுரையாளர் புளுகள் தம்பி.

முதலில்
4பேர் மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்காக சவூதி அரேபியாவில் தண்டனை பெற்றுள்ளார்கள் என்று இலங்கை எம்.பி. சொன்ன செய்தி ஆதாரப்பூர்வமான தகவலா இல்லையா என்பதே சந்தேகம். அப்படியிருக்கையில் அந்த எம்.பி. சொன்னதாக அவர் சொல்லாத கருத்தை இட்டுக்கட்டி சொல்வதோடு, அவர் சொன்ன கருத்திற்கு நேர்மாற்றமாக இவர் பொய் சொல்லி முஸ்லிம்களை காட்டுமிராண்டிகளாகச் சித்தரிப்பதிலிருந்து இவர்களின் திட்டமிட்ட சதி அம்பலமாகியுள்ளது.
 

பாரதி தம்பியையும் பிடித்தாட்டும் மேஜர்
மைனர் கிறுக்கு
:

பாரதி தம்பி என்பவரும் ரிசானா இந்த கொலை செய்யும்போது அவருக்கு
17வயதாகத்தான் இருந்தது என்று கதையளந்துள்ளார். மேலும் சரியான மொழி பெயர்ப்பாளர்கள் ரிசானாவிற்கு நியமிக்கப்படவில்லை என்ற பொய் குற்றச்சாட்டுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார்.
 

சரியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படவில்லையா
? :

சரியான மொழி பெயர்ப்பாளர்கள் அந்தப் பெண்மணிக்காக நியமிக்கப்படவில்லை என்றும் பொய்யான குற்றச்சாட்டை அவிழ்த்துவிட்டு வருகின்றனர்
. இஸ்லாமிய எதிரிகள் வைக்கக்கூடிய இந்த பொய்க்குற்றச்சாட்டையும் பாரதி தம்பி வாந்தியெடுத்து கக்கியுள்ளார். இதுவும் திட்டமிட்டு இவர்கள் பொய் சொல்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
 

மொழிபெயர்ப்பாளரை நியமித்தது சவூதியா
? இலங்கையா?:

ரிசானா என்ற அந்தப் பெண்மணிக்காக வாதாடக்கூடிய மொழிபெயர்ப்பாளரை நியமித்தது சவூதி அதிகாரிகள்தான் என்று நினைத்துக் கொண்டுதான் இவர்கள் இத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றார்கள்
. ஆனால் உண்மை என்ன தெரியுமா? சவூதியிலுள்ள இலங்கை மிஷன்தான் ரிசானாவிற்கு உரிய மொழிபெயர்ப்பாளராகவும், அவருக்காக வாதாடக்கூடியவருமான வக்கீலையும் நியமித்துள்ளது. அப்படியானால் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க இலங்கையைத்தான் சாரும். இதற்கும் சவூதி அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
 

சவூதிக்கு இலங்கை தூதரகம் பாராட்டு
:

அதுமட்டுமல்லாமல்
, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் சமரச முயற்சி செய்வது உள்ளிட்ட சவூதி அரசாங்கத்தின் முயற்சிகளும், அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்
, ஸ்ரீலங்காவின் அட்டர்னி ஜெனரலும், மற்றுமொரு மூத்த அதிகாரியும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் நேரடியாக சவூதி சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடி திருப்தியோடு திரும்பிய விஷயங்களையெல்லாம் இந்த மிருக புத்திரர்களும், பாரதி தம்பிகளும் மறைக்கக் காரணம் என்ன? முஸ்லிம்கள் மீது காழ்ப்புணர்வு தவிர காரணம் வேறென்னவாக இருக்க முடியும்.
 

சவூதியுடன் சுமூகமான தூதரக உறவு தொடரும்
இலங்கை அறிவிப்பு
:

அத்துடன்
2012 டிசம்பர் 9ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்ற சவூதியிலுள்ள இலங்கைக்கான தூதர் அஹமது ஏ.ஜவாத் அவர்களுக்கு பதிலாக வேறொரு தூதர் நியமிக்கப்படுவார் என்றும், சவூதி அரேபியாவுடனான சுமூகமான இலங்கையின் தூதரக உறவு தொடரும் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள அறிவிப்புகள் இந்த செவிடர்கள் காதில் விழவில்லையா? அல்லது விழுந்தும் விழாத செவிடர்கள் போல நடிக்கின்றார்களா?

சவூதிக்கான இலங்கை தூதர் தனது பணிக்காலம் முடிந்த காரணத்தால் இலங்கை திரும்பியுள்ளார்
. அவருக்கு பதிலாக வேறொருவரை சவூதிக்கான இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உண்மை நிலை இப்படி இருந்தும் நடந்த சம்பவத்தை கண்டித்து தனது தூதரை இலங்கை அரசு வாபஸ் பெற்றுள்ளது என்று சில அரைவேக்காடுகள் கதையளந்து வருவதும் இஸ்லாத்தின் மீது கொண்ட வெறுப்பினால்தான்.

நிலைமை இப்படி இருக்க சவூதி அரசாங்கத்தை குறை சொல்லும் சாக்கில் இந்த அரைவேக்காட்டுக் கூட்டம் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசுகின்றது
. இஸ்லாமியச் சட்டத்தை, இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாத்தின் மீது இப்படி புழுதி வாரி வீசுவார்களேயானால் இழிவும், கேவலமும்தான் இவர்களுக்கு மிஞ்சும் என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
 

Published on: January 20, 2013, 5:11 PM Views: 1333

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top