ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்

ஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை

இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது.

ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள்தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான உடலுறவு நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகின்றது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆபாசப் படங்களை பார்ப்போர் பல பிரச்சினைகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

வீடியோவில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லை.

இதற்கு   முக்கியக் காரணம்மூளையின் உற்சாக மையத்தைத் தூண்டி விடக்கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே ஆகும் என்று கண்டுபிடித்துள்ளனர். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது இது குறித்த கவுன்சிலிங்கிற்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மனரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இல்லற வாழ்வை இழந்து தவிக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

மேற்கண்ட ஆய்வு முடிவை உண்மைப்படுத்தும் விதமான ஒரு வழக்கு சென்ற மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் பின்வருமாறு :

ஆபாசப் படம் பார்த்ததால் வந்த கேடு!

எழும்பூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் ஒருவருக்கு 25 வயதுப் பெண்ணுடன் திருமணம் செய்விக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு இந்தத் திருமணம் நடைபெற்றது.

2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு 2009ஆம் ஆண்டு கணவர் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் தன் மனைவிக்கு உடலுறவில் நாட்டம் இல்லை; எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு செய்திருந்தார்.

ஆனால் மனைவியும் ஒரு விவாகரத்து மனு செய்தார். அதில் அவர், “தன் கணவர் ஆண்மையற்றவர்; தங்கள் இருவருக்கும் உடலுறவே நடக்கவில்லை; எனவே தனக்கு விவாகரத்து வேண்டும்என்றும் தனியாக மனுச் செய்தார்.

பிறகு நீதிபதி தம்பதியினரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் உறவு வைத்துக் கொள்ள உடல் ரீதியாக எந்த விதத் தடையுமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் முறையில் பிரச்சனையை அறிய தம்பதியினர் உளவியல் நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உளவியல் நிபுணர்கள் இருவரையும் தனித்தனியாக, சேர்ந்து என்று பலநாட்கள் கவுன்சிலிங் நடத்தியதில் தெரியவந்த உண்மை வேறுவிதமாக இருந்துள்ளது.

கணவர் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்ள வற்புறுத்துவதாகவும், ஆபாச வீடியோக்களை தினமும் பார்ப்பதாகவும் மனைவி கூறினார்.

இதனையடுத்து கணவரும் தனது ஆபாசப் பட ஆர்வத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தன் மனைவியிடம்  இயற்கையான முறையில் உறவுகொள்ள நாட்டமில்லை என்றும், தன்னால் உறவு கொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் கணவர்.

இதையே உளவியல் நிபுணர்கள் அறிக்கையாகத் தயாரித்து, “இப்படி ஒருவர் ஆபாசப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தால் இயற்கையான உறவில் அவர்களுக்கு நாட்டமில்லாது போய்விடும்; இந்தக் கேசிலும் இதுதான் நிலைமைஎன்று அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த குடும்பநல கோர்ட், மனைவியின் விவாகரத்து மனுவை ஏற்று விவாகரத்து வழங்கியது.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டு கடைசியில் உடலுறவிலேயே நாட்டமில்லாத அளவிற்குச் சென்று ஆண்மையை இழந்து நிற்கும் இந்த இழிநிலை தேவைதானா என்பதை ஆபாசப் படம் பார்ப்போர் சிந்திக்க வேண்டும்.

இப்படி ஆண்மையற்ற கணவன்கள் அதிகரிக்கும்போது அவர்களது மனைவிமார்கள் தங்களுக்கு வேறு வடிகாலின்றி விபச்சாரத்தின் பக்கம் தள்ளப்படுகின்றனர். விபச்சாரத்தின் பக்கம் செல்ல வழியில்லாத பெண்கள் தங்களது கணவனின் கதையை முடிப்பதற்கும் இதுதான் காரணமாக உள்ளது. இதனால் விபச்சாரமும், கொலைகளும் பெருகுகின்றன.

கள்ளக்காதல்களும், அதனால் ஏற்படும் கொலைகளுக்கும் இந்த ஆபாசப் படங்கள்தான் காரணமாக உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபாசப் படம் பார்த்தால் மட்டுமல்ல; அறைகுறை ஆடை அணிந்த பெண்களைப் பார்ப்பதும் ஆபத்து!

ஆபாசப் படங்களைப் பார்ப்பது மட்டும்தான் ஆண்மைக் குறைவுக்கு காரணம் என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. அறைகுறையாக கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களைப் பார்ப்பதும் கூட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டு உடலுறவில் நாட்டமில்லாமல் செய்துவிடும் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்தப் புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.

அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் எனக் கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்தக் குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்தத் தொடர்பு தெரிய வந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் உடைகள் மறைக்காத உடலின் பாகங்களால் ஆண்களின் தூண்டப்படும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.

முக்கால்வாசி ஆண்மைக் குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

நாங்கள் ஆபாச ஆடை அணிந்தால் உங்களுக்கென்ன? என்று வெட்டி நியாயம் பேசும் பெண்கள் மேற்கண்ட செய்தியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிற பெண்கள் அணிந்து செல்லும் ஆபாச ஆடைகளையும், கவர்ச்சிக் காட்சிகளையும் உங்கள் வீட்டு ஆண்கள் உற்று நோக்கினால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டு, இல்லற வாழ்வை இழந்து அவதிப்பட்டு, அதனால் பாதிக்கப்படுபவர்கள் வெட்டி நியாயம் பேசும் இந்தப் பெண்கள்தான் என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர் ஆன் 24 : 30

செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

அல்குர் ஆன் 17 : 36

ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்படுமா? :

- சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை!

ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து, கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவற்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமலேஷ் வஸ்வானி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் கோரும் மனு, தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆபாச இணையதளங்கள் ஏராளமாக பெருகியுள்ளன. அவற்றைத் தடை செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

அந்த மனு, தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர் தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்' முன், 15.04.13 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

 "இணையதளங்களில், ஆபாச இணையதளங்கள் ஏராளமாக உள்ளன; அவற்றில், குழந்தைகளை நிர்வாணமாக காட்டும் இணையதளங்கள் பெருகியுள்ளன; அத்தகைய இணைய தளங்களைப் பார்க்கும் சிறுவர் சிறுமியர், அது போன்ற குற்றங்களில் ஈடுபட, வாய்ப்பு இருக்கிறது' என, கவலை தெரிவித்தனர்.

மேலும், "ஆபாச இணையதளங்களைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், "அவற்றை முழுவதும் தடை செய்ய என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றும் தெரிவித்தனர்.

மத்திய அரசாங்கம் நினைத்தால்  ஆபாச இணையதளங்களை ஒரே நிமிடத்தில் தடை செய்துவிடலாம். ஆபாச இணையதளங்களால் ஏற்படும் கேடுகளை மத்திய அரசாங்கம் அறியாமலில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆசியோடுதான் அவை அரங்கேறி வருகின்றது என்பதுதான் உண்மை.

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இவைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதுதான் ஒழுக்க சீலர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆபாசப்படம் பார்ப்போருக்கு மன அழுத்தம் :

லண்டன் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

பிரிட்டன் ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பணியிடங்கள், கணவன்-மனைவி உறவு உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.

April 23, 2013, 12:31 AM

OPEN DEBATE CALL FOR THE SUPPORTERS OF LTTE

OPEN DEBATE CALL FOR THE SUPPORTERS OF LTTE

The release of Photographs showing Balachandran the 12 year old,  younger son of LTTE leader Prabhakaran alive in a military bunker and lying dead has evoked much controversy. New war crime has been framed against srilanka president Mahinda Rajapaksa for killing LTTE leader Prabhakaran son, Balachandran. While the TV charges that Balachandran was killed by the Sri Lankan military after he and his bodyguards had surrendered to the army. A new war crime has been added before the UNHRC meet in Geneva.  A pro Tamil supporters (so called) has started a country wide agitation against Rajapaksa.

We strongly condemned the killings of innocent people during the civil war led by Srilankan army under the rule of Rajapaksa. There should be no biased while trail is in process in International court of Justice.  Mean while We shouldn’t ignore the killings of innocent Tamil Muslims in northern provinces of Srilanka by LTTE led by Prabhakaran which is more in number than by Srilankan forces.

The LTTE has been engaged in a systematic and brutal ethnic cleansing campaign against Muslims and Sinhalese living in the North and Eastern Provinces in its fanatical attempt to create an ethnically pure Tamil State.  LTTE Cadres attacked the mosque in kattankudi killing 147 Muslim men and boys while offerings Friday Isha prayers. “Why such massacre ignored by so called Pro Tamil Supporters?

Many Muslims in Kilinochchi and Mannar were forced to leave their homeland. The turn of
Jaffna came; when LTTE trucks drove through the streets ordering Muslim families to assemble. There, they were told to exit the city within two hours. The entire Muslim population was expelled from Jaffna. They could take with them only the clothes they were wearing and no more than 500 rupees in cash. Their houses were subsequently looted by the LTTE. “Why No Voice has been raise in the support of Tamil Muslims by so called Pro Tamil Supporters”.

Khattankudi incident was the worst massacre of civilians since the resumption the conflict, human rights has been abused towards the Muslim community, “Why there is no genocide crime against LTTE led by Prabhakaran for ethnic cleansing”.  
 
after gaining a great wealth and shelter these muslims where send out from their own lands! . “Why No Voice has been raise in the support of Tamil Muslims by so called Pro Tamil Supporters”. 
 
In khattankudi the most of the infants where killed and shot dead by LTTE . “Why No Voice has been raise in the support of Tamil Muslims by so called Pro Tamil Supporters”. 
 
Many muslims where brutally killed in a place moodur, from the state of trikonamalai and about 30000 muslims where made as refugees and they where settled in kinyaa, mullipatnam, kandalai  refugee camp. “Why No Voice has been raise in the support of Tamil Muslims by so called Pro Tamil Supporters even after knowing these histories?”.  
 
Permanent Ceasefire agreement has been signed between LTTE and Srilankan Government in which Norway and Japan act as mediator, It has decided that a delegation on behalf of the Muslims too would participate in the dialogue between the Government and Liberation Tigers of Tamil Elam which was ignored by LTTE due to dislike of Muslim community where the “Pro Tamil supporters ignored to raised voice against such”.

Reconciliation between the LTTE and Muslims in eastern Sri Lanka, leaders of the Muslim community reached a deal with the Liberation Tigers for the return of the majority of land which was seized by LTTE. This was breached by LTTE and failed to handover the lands.

So called “Pro Tamil Supporters” are bind to answers to all above questions which are raised. These intellectuals used to raise their voice if the  same kind of brutal  is organized by Hindu terrorist outfits in India , Why do they lobby for LTTE? Our Question to those is why do you different stands for same scenario.

We have already published an article in Unarvu edition 17 : 27 (Tamil Weekly Magazine of TNTJ ) about the reason why Tamilnadu Thowheed Jamaath was not raising voice against the so called oppressed (LTTE). Moulvi P. Zainul Abideen has called for open forum to discuss his statement against the support, so called “Pro Tamil Supporters” and political pundits (Spineless men) ignored his call and busy in verbal attack against him during public speeches.

Now we called an open floor to discuss on such atrocities acts which is led under LTTE leader Prabhakaran which is greater than war crime charge against srilankan president Mahinda Rajapaksa.  We will show the supportive documents against ethnic cleansing during the debate. Rather spreading the unauthentic fact and initiate dispute communal harmony, step in to the floor and prove yourself that your stands are valuable.

Many Muslims (by name) men and Muslim political honcho who already have Trust Deficit ignored the genocide and support the LTTE to gain the vote banks, those honchos are also invited to the floor to stand on their voice supportive to LTTE.

During 2008, Ace Director Mr. Ameer arranged a dialogue meet between Srilankan MP Sivajilingam, LTTE Supporter and P. Zainul Abideen. Bro. PJ started to deployed the facts and statistical figures regarding the atrocities carried by LTTE which make MP Sivajilingam to diminished to lay his unsupportive facts.

PJ said to implicate the Ceasefire agreement by including the North Eastern Muslims groups for the implacable of peace around the corners which was ignored and breached the pact. Which made him to change in to silence mode.  He in turn promised during the talk, to pass this message to LTTE Leader Prabhakaran to frame an amicable solution which was later passed on air. This clearly pictures the true face of LTTE.

Floor is free to your speech. All supporters are invited.


April 13, 2013, 5:56 PM

பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப்

 பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப் ஆண்டவர்!

பெண்களை தேவாலயப் பணிகளில் ஈடுபடுத்த புதிய யுக்தி(?) கடந்த மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளிக்கு முந்தைய தினமான புனித வியாழன் தினத்தை அனுசரித்தார்கள். ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய தினம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியில்  தனது 12 சீடர்களின் கால்களை கழுவி ஏசு முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் புனித வியாழன் வழிபாடு வாடிகன் நகரத்தில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவி ஆண்டுதோறும் போப்  முத்தமிடுவார். ஆனால், இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப் பிரான்சிஸ் இதுவரையிலான மரபுகளை மாற்றினார்.

பெண்களின் கால்களை முத்தமிட்டு புதிய புரட்சி(?):

இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களெல்லாம் ஆண்களுடைய கால்களில்தான் முத்தமிட்டனர். ஆனால் புதிய போப்போ இரண்டு பெண்களது கால்களை முத்தமிட்டு சரித்திர சாதனை புரிந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பெரிய வியாழன் என்று சொல்லப்படக்கூடிய தினமான மார்ச் 28ஆம் தேதி  ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்த 14 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளுக்கும், அங்கிருந்த 2 இளம்பெண்களுக்கும் அவர்களது பாதங்களை கழுவி போப் முத்தமிட்டார்.

இதற்கு முன்னர் இருந்த எந்த போப்பும் பெண்களது பாதங்களை கழுவி முத்தமிட்டதில்லை. முதல் முறையாக சர்ச் மரபுகளுக்கு மாறாக போப் பிரான்சிஸ் செய்தது சரியா தவறா என்று விவாதம் தற்போது எழுந்துள்ளது.

 ‘கேள்விக்குரிய ஒரு முன்னுதாரணத்தை போப் ஏற்படுத்தி இருக்கிறார்என்று போப் செய்த செயலை எதிர்ப்பவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

ஆனால், சர்ச் நடவடிக்கைகளில் பெண்களையும் இடம்பெறச் செய்ய போப்பின் இந்த முத்த நடவடிக்கை உதவும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முத்தம் கொடுத்துவிட்டு ஆற்றிய உரை:

பெண்களது காலில் முத்தம் கொடுத்துவிட்டு போப் பேசியதாவது :

 “உங்கள் பாதங்களை கழுவியதன் அர்த்தம், நான் உங்களுக்காக சேவை செய்யவே இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.

இயேசு இதைத்தான் நமக்கு கற்றுத் தந்தார். அதைத்தான் நான் செய்கிறேன். ஒரு போதகராக, ஒரு பிஷப்பாக மனப்பூர்வமாக நான் இதை செய்கிறேன். இதற்கு விளக்கம் தேவையில்லை. சேவை செய்ய வேண்டியது என் கடமைஎன்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதாவது பெண்களுக்கு யாராவது சேவை செய்ய விரும்பினால் அவர்களது கால்களைக் கழுவி முத்தமிட வேண்டும் என்பதுதான் புதிய போப்பின் புதிய அறிவுரை.

போப் மீது குற்றச்சாட்டு :

இயேசு தனது ஆண் சீடர்களின் கால்களைத்தான் கழுவினாரே தவிர, பெண்களுடைய கால்களைக் கழுவி பெண்களுக்கு முத்தம் கொடுக்கவில்லை. இயேசுவுடைய வழிகாட்டுதலை மீறி போப் பெண்களது காலில் முத்தம் கொடுத்துள்ளார். இது தவறான அணுகுமுறை என்று கிறித்தவர்களில் ஒருதரப்பினர் பகிரங்க குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.

ஆனால் இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு அசராத போப் அவர்களோ, பெண்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தத்தான் பெண்களது கால்களையும் கழுவி அவர்களுக்கு முத்தம் கொடுத்தேன் என்ற கருத்துப்பட விளக்கமளித்துள்ளார்.

இப்படி அளவுக்கதிகமாக பாதிரிமார்கள் பெண்களுக்கு சேவையாற்றுவதும்(?), பெண்களுக்கு உதவி செய்வதும்(?), அவர்களை கண்ணியப்படுத்தி(?) கவனிப்பதும்தான் கருக்கலைப்புவரைக் கொண்டு செல்கின்றது என்பது போப் ஆண்டவருக்குத் தெரியாதது அல்ல.

பெண்களுக்கு போப் ஆண்டவர் முத்தம் கொடுத்தது தவறு என்று இவரை எதிர்க்கக்கூடியவர்கள் வைக்கக்கூடிய மற்றொரு வாதம் ரொம்ப நகைச்சுவையானதும், அதே நேரத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாக உள்ளது.

விசித்திர விளக்கம் :

போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது இயேசுவுடைய வழிகாட்டுதலில் இல்லாத செயல். எனவே போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது தவறு. போப் ஆண்டவருக்கு பெண்கள் முத்தம் கொடுத்தால் அது தவறில்லை.

மேற்கண்ட விளக்கத்தைக் கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர். காரணம் என்னவென்றால் ஏசுவுக்கு ஒரு பெண் தைலம் பூசிவிட்டு ஏசுவுடைய பாதங்களை முத்தமிட்டுள்ளார். அதை ஏசுவுடைய சீடர்கள் கண்டித்தபோது, முத்தம் கொடுத்த பெண்ணை கண்டித்த சீடர்களை ஏசு கண்டித்துள்ளார்.

நீங்கள் எப்போதாவது இதுபோன்று எனக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா? இல்லையே! இந்தப் பெண் எனக்கு முத்தம் கொடுப்பதை நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்? இப்படி அவள் எனக்கு தைலத்தைப் பூசிவிட்டு, முத்தம் கொடுத்த காரணத்தால் அவளது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று கூறியுள்ளார்.

(பார்க்க : லூக்கா அதிகாரம் 7 : 27 முதல் 48 வரை, யோவான் அதிகாரம் 12 : 3முதல் 8 வரை)

அதாவது பெண்கள் பாதிரியார்களுக்கு தைலம் பூசி, அவர்களது பாதங்களில் முத்தம் கொடுத்தால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஏசுவின் வழிகாட்டுதல். அதைவிடுத்துவிட்டு பாதிரியாராக இருக்கக்கூடியவர் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பதுதான் போப் ஆண்டவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஆழமான(?) கேள்வி.

தேவாலயங்களில் இத்தகைய ஊழியங்களில் பெண்களை ஈடுபடுத்தத்தான் போப் பெண்களுக்கு முத்தம் கொடுத்தாரோ என்னவோ?. நமக்குத் தெரியவில்லை. கர்த்தருக்கே வெளிச்சம்.

பெண் அதிபருக்கு முத்தம் கொடுத்த போப்:

அதுமட்டுமல்லாமல் புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்றவுடன் அர்ஜெண்டினாவின் பெண் அதிபர் கிரிஸ்டினா பெர்னான்டிஸ் கடந்த மார்ச் 18ஆம் தேதி போப் ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அப்போது போப் ஆண்டவர் பெண் ஜனாதிபதிக்கு பல பரிசுகளை வழங்கினார். அத்தோடு பெண் ஜனாதிபதியை கட்டித்தழுவி முத்தத்தையும் பரிசாக வழங்கினார் போப்.

பின்னர் வெளியே வந்த பெண் ஜனாதிபதியோ, “போப் எனக்கு முத்தம் கொடுத்தார். இதுவரை இப்படி நான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லைஎன்று பெருமையாக பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு சொன்ன உதாரணத்தைக் கூறி நான் எந்த தீமையையும் எதிர்க்கமாட்டேன்; தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கமாட்டேன் என்று போப் ஆண்டவர் உரை நிகழ்த்தியதன் அர்த்தம் இதுதானா என்று பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நான் நீங்கள் செய்யக்கூடிய அநியாயங்களை தட்டிக் கேட்கமாட்டேன்; அதுபோல நான் செய்யக்கூடிய இதுபோன்ற சேட்டைகளை நீங்களும் கண்டுகொள்ளக்கூடாது; கண்டிக்கக் கூடாது; கண்டனம் தெரிவிக்கக்கூடாது என்பதைத்தான் புதிய போப் சூசகமாகச் சொல்லியுள்ளாரோ என்று அனைவரும் சந்தேகப்படுகின்றனர்.

அதே நேரத்தில் போப் ஆண்டவரிடத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் கேட்க விரும்புகின்றோம். தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லும் தாங்கள் தீமைகளைச் செய்தவரை சிறையில் தள்ளி அழகு பார்க்கலாமா?

தீமைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் அந்த தீமைகளைச் செய்தவர்களை சிறையிலும் அடைக்கக்கூடாதல்லவா? அவர்களது கால்களைக் கழுவி அவற்றை முத்தமிடுவது அவர்களுக்குச் செய்யும் சேவையா? அல்லது திருடர்களை விடுதலை செய்து சிறைக் கொட்டடிகளை ஒழித்துக்கட்டுவது அவர்களுக்கு உதவுவதா என்பதை போப் முதலில் விளக்க வேண்டும்.

ஆகமொத்தத்தில் போப் செய்யும் அத்தனை செயல்களும் பைபிளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக உள்ளதோடுமட்டுமல்லாமல் பல பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.

April 5, 2013, 12:05 PM

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : இந்தியா கடைபிடிக்கும் இருநீதி கொள்கை! 

கடந்த மார்ச் 21 - 2013 அன்று உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் சங்பரிவார் என்ற சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயம் அடைந்தனர்.

30 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டு தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் 123 பேர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

இவர்களில் இருவர் இறந்து விட்டனர். 68 பேருக்கு ஆயுள் தண்டனைக்கு குறைவான தண்டனை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தடா நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு தீர்ப்பைத்தான் மார்ச் 21 - 2013ல் உச்ச நீதிமன்றம் அளித்தது.

தடாமன்றம் - நீதிமன்றம் தீர்ப்பளித்த 20 பேர்களில் இறந்து விட்ட இருவரைக் கழித்து 18 பேர்களில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் இப்ராஹீம் முஷ்தாக் என்ற டைகர் மெமன் தலைமறைவாகி விட்டார்.

மீதமுள்ள 11 பேர்களில் யாகூப் மெமனுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. யாகூப் மெமன் கடந்த 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மீதமுள்ள 10 பேர்களும் இருபது ஆண்டுகளாக சிறையில் வாடி வருவதையும் இதனால் அவர்களுடைய சுகாதார, பொருளாதார நிலை முற்றிலும் நொறுங்கிப் போனதையும் கவனத்தில் கொண்டு அவர்களுடைய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதன்படி அவர்கள் தங்களின் இயற்கையான மரணத்தைத் தழுவுகின்றவரை சிறையிலேயே அடைந்து கிடக்க வேண்டும்.

பெண் குற்றவாளிகள்:

1993 மும்பை வெடி குண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் யாகூப் மெமனின் மனைவி ரஹீன் மெமன், இவரது தாயாரான ஹனீபா மெமன் இருவரும் ஏற்கனவே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். பாயி மூஸா பீவாண்டிவாலா என்றழைக்கப்படக்கூடிய முபீனா என்பவருக்கு தடா நீதிமன்றம் ஐந்தாண்டு தண்டனை விதித்திருந்தது.

ஆனால் அவரை உச்சநீதி மன்றம் விடுதலை செய்தது. யாகூப் மெமனின் மதனி ரூபினா மெமனுக்கு(ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட பத்து பேர்களில் ஒருவர்) எந்தச் சலுகையும் காட்டவில்லை. 70 வயது நிரம்பிய ஜைபுன்னிசா அன்வர் காஜிக்கு தடா நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு தண்டனையிலிருந்து எந்தச் சலுகையும் அளிக்கவில்லை. பாலிவுட் குற்றவாளி: இந்தக் குற்றவாளிகளில் மிக முக்கியமான பிரபல்யமான குற்றவாளி இந்தி திரைப்படத்துறையான பாலிவுட்டைச் சார்ந்த சஞ்சய் தத்.

குரல் எழுப்பும் கோலிவுட் ரஜினி:

இவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டு கால சிறைத் தண்டனை அளித்திருந்தது.அதை உச்ச நீதிமன்றம் 5 ஆண்டு காலமாக குறைத்து தீர்ப்பளித்தது. ஏற்கனவே இவர் 15 மாதம் சிறைவாசம் அனுபவித்துவிட்டார்.இதனால் இனிமேல் அவர் மூன்றரை ஆண்டுகால தண்டனையை மட்டும் அனுபவிக்க வேண்டும்.

இவருக்கு உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்ததுதான் தாமதம்! இவருக்காக வாரி வரிந்து கொண்டு திரையுலகம் குரல் கொடுத்தது. நடிகை ஜெயப்பிரதா என்னுடைய உள்ளம் உடைந்து விட்டது. சஞ்சய் தத்துக்கு கருணை வழங்க வேண்டும் என்று கூறினார். அமீர்கான் கருணை மனு வேண்டி கூப்பாடு போடுகின்றார்.அவருக்காக சென்னை திரைப்பட உலகமான கோலிவுட்டிலிருந்து ரஜினிகாந்த் குரல் கொடுக்கின்றார்.

அரசியல்வாதிகளும் தேசபிதாவான(?) சஞ்சய் தத் வீட்டிற்கு ஜெயபிரதாவுடன் சென்று ஆறுதல் கூறுகின்றனர்.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் பங்குக்காக சஞ்சய் தத் மன்னிப்பு பெறுவதற்கு முழுத் தகுதி பெற்றவர் என்று சான்றிதழ் அளிக்கின்றார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இவருக்காக பரிந்துரை பேசுகின்றார்.ஜெயப்பிரதா அமர்சிங் போன்றோர் சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்டு மகாராஷ்டிர ஆளுநரையும் சந்திக்கின்றார். இவர்களது கோரிக்கையை ஏற்று கவர்னரும் அதை உள்துறைச் செயலாளருக்கு பரிந்துரை செய்கின்றார். ஒட்டுமொத்த ஊடகத்துறையும் அவருக்காக ஓலமிட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

பிரபல்யமே பின்னணி:

இவ்வளவு ஆதரவு இவருக்கு ஏன்? இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தாரா? சமூக, சமுதாய விடுதலைக்காக களப்பணி ஆற்றினாரா? திரைப்படத்தில் நடித்தார்.அதுதான் இவருடைய பின்னணி! மறைந்த இவருடைய தகப்பனார் சுனில் தத் ஒரு நடிகர். அத்துடன் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாகவும் இருந்தார்.இவருடைய தாயார் நர்கிஸ் ஒரு நடிகை. இவருடைய சகோதரி பிரியா தத் இப்போது காங்கிரஸ் எம்பி. இந்தக் குடும்பப் பின்னணியும், பிரபல்யமும்தான் இத்தகையோரை குரல் கொடுக்கச் செய்கின்றது.

பண முதலைகளின் படமுதலீடு:

இதில் திரைப்படத்துறையினர் ஒட்டு மொத்தமாக குரல் கொடுப்பதற்கு மற்றுமொரு முக்கிய பின்னணி,சஞ்சய் தத் படங்களுக்காக திரைப்படத் தயாரிப்பாளர்கள் - அதாவது பண முதலைகள் பல கோடி ரூபாய் சுமார் 100 கோடிக்கும் மேலாக முதலீடு செய்திருக்கின்றார்கள்.இந்த முதலீடுகள் மூழ்கி போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சஞ்சய் தத்துக்காக பொங்கி எழுகின்றனர்.

ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்காக சஞ்சய் தத்துக்காக ஆர்த்தெழுபவர்கள்,பொங்கி எழுந்து போர்க் குரல் கொடுப்பவர்கள் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவுக்கு குரல் கொடுத்திருப்பார்களா? கற்பழிக்கப்பட்ட,களங்கப்படுத்தப்பட்ட அப்பாவி அபலைப் பெண்களுக்காக என்றைக்காவது குரல் கொடுத்திருப்பார்களா? கிடையாது.

இவர்கள் குரல் கொடுக்க முன் வருவதெல்லாம் உயர்குடி மக்களுக்காகத்தான்.சாதாரண,சாமான்ய மக்களுக்காக வேண்டி அல்ல. பொங்கி வரும் போலி தேசப்பக்தியாளர்கள்:முஸ்லிம்கள் என்றால் பூதாகரமாக காட்டுவது: சஞ்சய் தத்தின் விவகாரத்தை சிறிதாக காட்டுவது இதுதான் இவர்களது செயல். சஞ்சயின் குற்றம் சாதாரணமானதா? இங்குதான் இந்த நடிகர், நடிகையர் கும்பல்கள், அரசியல்வாதிகள், ஊடகத் துறையினரின் போலி தேசப்பற்று வெளிச்சத்திற்கு வருகின்றது.

இவர்களில் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சற்று வித்தியாசமானவர் என்று கூறலாம்.ஆனால் அவர் சஞ்சய் தத்துக்காக குரல் கொடுக்கும் அணுகு முறையை நாம் சரிகாண முடியாது. உண்மையில் இவர்களுக்கு சரியான தேசப்பற்று இருக்குமேயானால் சஞ்சய் தத்துக்கு எந்த வக்காலத்தும் வாங்கக்கூடாது. வக்கணையும் பேசக்கூடாது. காரணம் சஞ்சய் தத்தின் குற்றம் சாதாரணமானது அல்ல. மும்பை கலவரத்துக்குப் பின்னால் 1993 ஜனவரி மாதம் அபூ சலீமிடமிருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி பெற்றிருந்தார். மும்பை கலவரத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹீமின் சகோதரர் அனீஸ் இப்ராஹீமுடன் தொடர்பில் இருந்தார். சமீர் ஹிங்கோரா என்பவரிடம் மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளையும், வெடி மருந்து பொருட்களையும் சஞ்சய் தத் தன் வீட்டில் வாங்கி வைத்திருந்தார். மூன்று ஏ.கே.56 ரக துப்பாக்கிகளில் ஒன்றை பெற்றுக்கொண்டு இரண்டை திரும்பக் கொடுத்திருந்தார். சஞ்சய் தத் மொரீசியஸ் நாட்டில் படப்பிடிப்பில் இருந்தபோது தனது நண்பர்களான ஹனீஃப், கந்தாவலா, சமீர் ஹிங்கோரா இருவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் யூசுப் நுல்வல்லாவுக்கு போன் செய்து ஏ.கே.56 ரக துப்பாக்கி,250 சுற்று மருந்துகள் 9விவி பிஸ்டல் ஆகியவை அடங்கிய பையை எடுத்துச் சென்று கேஸ்ரி அட்ஜானியாவிடம் கொடுத்து தடம் தெரியாமல் அழித்து விடுமாறு சொல்கிறார்.

1992 ல் சட்டத்திற்கு புறம்பாக பிஸ்டல் ஒன்றை தன் வசம் வைத்திருந்தார். துபாயில் ரவுடிக் கும்பல்களுடன் தாவூத் இப்ராஹீம் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் வைத்தது, ஆயுதங்களை அழித்ததன் மூலம் தடயங்களை அழித்தது என்று சஞ்சய் தத்தின் குற்றம் பல்வேறு கோணங்களில் பல்வேறு பரிமாணங்களில் விரிந்து விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

இந்திய அரசியல் சட்டத்தின் 1958 ஆம் ஆண்டின் நன்னடத்தை விதியின்படி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இவரது குற்றம் மிகக் கடுமையானது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இதை ஒரு வார்த்தையில் இந்நாட்டு சட்டத்தின் பார்வையில் சொல்ல வேண்டுமென்றால் தேசத்துரோகம். இந்த தேசத்துரோகத்தை செய்தவருக்குத்தான் இப்படிப்பட்ட குரல்களும், கூச்சல்களும்.

விநோதமான வாதங்கள்: ·

துப்பாக்கி வைத்து இருந்ததற்காக இப்படிப்பட்ட துர்பாக்கியவானுக்கு ஐந்தாண்டுகால தண்டனையா? · ஆயுதங்கள் வைத்திருந்தார். ஆனால் அவற்றை அவர் பயங்கரவாதத்திற்காகப் பயன்படுத்தவில்லையே.அதற்காக அவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையா? · சஞ்சய் தத்துக்கு மனைவி, மக்கள் இருக்கின்றனர். · அவர் தனது படங்களில் அறப் போராட்ட அடிப்படையில் நடித்திருக்கின்றார் என்பது போன்ற கேலிக்கூத்தான வாதங்களையும், கோமாளித்தனமான விஷயங்களையெல்லாம் வைக்கின்றார்கள். ·

சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்களை தன் கைவசம் வைத்திருந்தாலே அவர் அந்த சட்டப்படி ஐந்தாண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் பயன்படுத்துதல், பயன்படுத்தாமை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. · சஞ்சய் தத்துக்குத்தான் மனைவி, பிள்ளைகுட்டிகள் இருக்கின்றனர் என்ற வாதம் சுத்தப் பைத்தியக்காரத்தனமான வாதமாகும். ·

இவருக்கு இருப்பது தான் மனைவி, மக்கள்! மற்ற குற்றவாளிக்கு இருப்பது மண்ணாங்கட்டிகளா? உணர்வற்ற மரக்கட்டைகளா? உயிரற்ற சடலங்களா? இவர்கள் புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறார்களா அல்லது புத்தியில்லாமல் புலம்புகிறார்களா என்று தெரியவில்லை. · இருபது வருடமாக அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.

அலைக்கழிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றார்.இதை கணக்கில் கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை போலி தேச பக்தியாளர்கள் ஒரு வாதத்தை வைக்கின்றனர்.இந்த வாதமும் அர்த்தமற்றது.இருபது ஆண்டுகளைக் கடந்து எத்தனையோ வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டவர் யாரும் இப்படிப்பட்ட வாதத்தை வைத்ததில்லை.அப்படி ஒரு வாதம் சட்டப்படியும் அறிவுப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதமும் அல்ல. · காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திக் விஜய் சிங் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய் சஞ்சய் தத் இக்குற்றத்தில் ஈடுபடும்போது ஒரு குழந்தையாக இருந்தார். அப்போது அவர் அந்தத் தப்பை செய்து விட்டார் என்று வக்காலத்து வாங்குகின்றார். ·

குற்றம் செய்த ஒவ்வொரு குற்றவாளிக்கும் இதே வாதம் பொருந்துமே என்று இக்கூழ் முட்டை கடுகளவு கூட சிந்திக்கவில்லை. இப்படி இத்துனை கோணங்களில் பரிமாணங்களில் சஞ்சய் தத்துக்கு பரிந்துரை செய்வதற்கு ஒரே காரணம் அவர் ஓர் இந்து என்பதால்தான்.அதே சமயம் இவர் ஒரு முஸ்லிம் என்றால் அவரைத் தண்டிப்பதற்காக சங்பரிவாரங்கள் புறக்கண்ணுக்கு தெரியாத சிறு சிறு குற்றங்களை பூதக் கண்ணாடி போட்டு பூதாகரமாக்கி விடும்.

இந்துக்கள் என்றால் அதை புஸ்வானமாக்கி விடும்.இதற்கு அப்ஸல் குரு, சஞ்சய் தத் வழக்குகள் எடுத்துக்காட்டுகளாகும்.கூட்டு மனசாட்சி என்று குறிப்பிட்டு நாட்டு சட்டத்தை தூரத் தள்ளி விட்டு- தூக்கி எறிந்து விட்டு உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்குகின்றது.

இதைத்தான் முஸ்லிம்களாகிய நாம் இரட்டை நீதி என்று குறிப்பிடுகின்றோம். இந்தியாவின் இரட்டை நீதி : மும்பை வெடிகுண்டு வழக்கை எடுத்துக் கொள்வோம். சஞ்சய் செய்த குற்றங்களின் பட்டியலை மேலே விரிவாகப் பார்த்தோம். அப்படியிருந்தும் நடிகர், நடிகையர் கூட்டமும், அரசியல்வாதிகளும் இவருக்காக குருட்டுத்தனமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.இதிலிருந்து சஞ்சய் தத் செய்த குற்றம் மாபெரும் பரிமாணத்தைக் கொண்டது என்று விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் சஞ்சய் தத்துக்காக பலமிக்க பட உலகம்,பண்ணை உலகம்,அரசியல் உலகம்,ஆட்சியர் உலகம் விதிவிலக்காக ஒன்றிரண்டைத் தவிர உள்ள ஊடக உலகம் அத்துனையும் குரல் கொடுத்தது.இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் 5 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஜைபுன்னிசா அன்வர் காஜிக்காக யாராவது குரல் கொடுத்தார்களா என்றால், நிச்சயமாக இல்லை.

காஜியின் கண்ணீர் பேட்டி :

TIMES NOW என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி மட்டும் ஜைபுன்னிசா காஜி மற்றும் அவரது 40 வயது நிரம்பிய மகள் ஆகிய இருவரின் பரிதாபகரமான பேட்டியை வெளியிட்டது. அந்தப் பேட்டியில் ஜைபுன்னிசா காஜி குறிப்பிட்டதாவது:

எனக்கு 70 வயதாகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்பு எனக்கு கிட்னி ஆபரேஷன் நடந்தது. அதனால் கால்களில் கடுமையான வலி.என்னால் சரியாக நடக்க இயலவில்லை. தொழுவதற்காக கூட என்னால் உட்கார முடியவில்லை. படுக்கையில் இருந்து கொண்டு தொழுகின்றேன். சிறைச்சாலையில் ஐந்து ஆண்டுகால வாழ்க்கையை கழிப்பது என்பது என்னால் எண்ணிப் பார்க்க முடியாது. இறைவா! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. குடியரசுத் தலைவர் அவர்களே! மகாராஷ்டிர ஆளுநர் அவர்களே! எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்.

இது ஜைனப் காஜியின் கண்ணீர் பேட்டி.


அவரது மகள் அளித்த பேட்டி இதோ! கடந்த 20 ஆண்டுகளாக என்னுடைய தாயாருக்காக நான் மட்டும் நீதிமன்றத்திற்கு அலையாய் அலைந்து விடுதலைக்காக பாடுபட்டு வருகின்றேன். எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. நடிகர், நடிகையாக இல்லாமல் இருப்பதுதான் நாங்கள் செய்த பாவம். இது Times Now வெளியிட்ட பேட்டியாகும். இது வெளியான பின்புதான் முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ நான் ஜைபுன்னிசாவுக்காக குரல் கொடுப்பேன். குடியரசுத் தலைவர், ஆளுநர் இடத்தில் கருணை, மன்னிப்பு வழங்கக் கோருவேன்.

ஜைபுன்னிசாவுடைய வழக்கு சம்பந்தப்பட்டவைகளை நான் படித்து விட்டேன்.பரிந்துரைப்பதற்கு தகுதி உள்ள வழக்குதான் என்று குறிப்பிட்டார்.

Times Now செய்தி வெளியீட்டுக்குப் பின்தான் ஜைபுன்னிசாவின் பாதிப்பும், அவருக்கு இழைக்கப்படுகின்ற அநியாயமும் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. இந்த வகையில் இஸ்லாமிய சமுதாயம் Times Now க்கு நன்றி சொல்லவும்,பாராட்டவும் கடமைப்பட்டிருக்கின்றது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தியாவின் இரட்டை நீதியைத்தான்.வலியவனுக்கு தண்டனை என்றால் வரிந்து கொண்டு ஆதிக்கபுரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சி தர்பார்கள் ஓர் அணியாய் நின்று அது அநியாயமாக இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் குரல் கொடுக்கின்றார்கள்.

ஏழைகள் என்றால் ஏன் என்று கூட கேட்க மறுக்கின்றார்கள். ஏறிட்டுக் கூட பார்க்க மறுக்கின்றார்கள்.அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் மூச்சுவிடக் கூட மறுக்கின்றார்கள். இந்த அடிப்படையில் ஒரு சிலரைத் தவிர ஜைபுன்னிசாவுக்காக இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள்,திரைப்படத்துறையினர் குரல் கொடுக்க முன் வராதது இவர்களிடம் குடி கொண்டிருக்கும் இரட்டை நீதி நிலைபாட்டைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகின்றது.

இந்த பிரதிபலிப்பைதான் அப்ஸல் குரு போன்றவர்களை தூக்கில் போடுவது மூலம் இந்திய நிர்வாகத்துறை தனது செயல்பாடாகக் கடைபிடிக்கின்றது.இது நிர்வாகத்துறையின் போக்கு என்றால் நீதித்துறையின் போக்கும் இதற்கு முற்றிலும் வேறுபட்டதாக இல்லை. நீதித்துறையின் இரட்டை நிலை : இதற்குரிய எடுத்துக் காட்டும் ஜைபுன்னிசா வழக்குதான்.ஜைபுன்னிசா செய்த குற்றம் என்ன? ரியல் எஸ்டேட் வியாபாரத்தின் அடிப்படையில் அபூ சலீமுடன் இவரது தொடர்பு இருந்தது.இதைப் பயன்படுத்தி அபூசலீம் ஓர் ஆயுத மூட்டையை சஞ்சய் தத் வீட்டிலிருந்து ஜைபுன்னிசா வீட்டிற்கு மாற்றி விட்டார்.மூட்டையில் இருப்பது என்ன என்பது பற்றி தாய்க்கும்,மகளுக்கும் அறவே தெரியாது. இது ஜைபுன்னிசா காஜிக்கு வினையாகவும், விபரீதமாகவும் ஆனது.சிறைத் தண்டனையை விலையாகவும் பெற வேண்டியதாயிற்று.

இதல்லாமல் வேறெதையும் இவரது வீட்டிலிருந்து சிஙிமி கைப்பற்றவில்லை. குண்டு வெடிப்பில் அவருக்கு எந்த வகையிலும் எள்முனையளவிலும் பங்கில்லை. இந்த ஆயுத மூட்டையினால் மட்டும் இவர் மீது தடாலடியாக தடா வழக்கு பாய்கின்றது. 2007ல் தடா நீதிமன்றத்தின் நீதிபதி இதை தனது தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கின்றார்.

இந்த மூட்டை ஆயுதப்பை இருந்ததால் அவர் மீது தடா பாய்கின்றது. இதே தடா சஞ்சய் தத்தின் மீது பாய்ந்தது.பாய்ந்த அந்தத் தடா சட்டம் சுனில் தத் செல்வாக்கினால், சிவசேனாவிடம் அவர் கெஞ்சிய கெஞ்சலால் தடா அவரை விட்டும் விலகியது.சஞ்சய் தத்தின் மீது பாய்ந்திருப்பது இந்திய ஆயுத சட்டம் மட்டும் தான்.தடா கிடையாது. இவ்வாறு சஞ்சய் தத் மீது தடாவை திரும்பப் பெற்றது எந்த அடிப்படையில் நியாயம்? அது மிகப்பெரும் தப்பில்லையா? ஒருதலைப்பட்சமான நியாயம் இல்லையா? ஓரவஞ்சனை இல்லையா? இதை தப்பு என்று நாம் சொல்லவில்லை.மும்பையின் போலீஸ் முன்னால் கமிஷனர் திரு.எம்.என்.சிங் தான் இவ்வாறு கூறுகின்றார்.

இவர் மும்பை தொடர் குண்டு வெடிப்பை விசாரித்த காவல்துறை அதிகாரி.சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தனது (எம்.பி. பதவியின்)அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி தன்மகனுக்கு கருணை காட்டுமாறும்,மன்னிப்பு வழங்குமாறும் கோருகின்றார். எந்த விதமான சார்பு நிலை- யாருக்கும் ஆதரவு ஏதுமின்றி நான் ஒரு கருத்தை பதிவு செய்கின்றேன். நான் சஞ்சய் தத்துக்கு நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை. அவர் மீது தடா வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டு அவர் மீது இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பெரும் தப்பாகும் என்று நான் குறிப்பிடுகின்றேன். இதுதான் முன்னால் மும்பை காவல் ஆணையாளர் குறிப்பிடுகின்ற உண்மைக் கருத்தாகும். ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதி : ஜைபுன்னிசாவிலிருந்து மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட அத்துனை பேரும் தடாவின் கீழ்தான் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் சஞ்சய் தத் மட்டும் விதிவிலக்கம் பெறுகின்றார்.இது ஏன்? எப்படி? இதைத்தான் நாம் சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி ஜைபுன்னிசாவுக்கு வேறு நீதியா என்று கேட்கின்றோம் என்று நினைக்காதீர்கள்.


இந்தச் செய்தியை தொலைக்காட்சியிலும் வெளியிட்டுவிட்டு இணையதளத்திலும் ஆவணப்படுத்தியிருக்கின்றதுNDTV. அந்த NDTV தான், “1993 Bombay blast: same crime, different punishment” “1993 பம்பாய் குண்டு வெடிப்பு ஒரே குற்றம். வேறு வேறு தண்டனை” என்று இதற்கு தலைப்பிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றது. இது இரட்டை நீதியில்லாமல் வேறென்ன? ஏற்கனவே இந்தியாவில் மனுதர்மக் கொள்கை உயர் சாதிக்காரர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா மனித நீதியை விட்டு விட்டு மனு நீதியைத்தான் கடைப்பிடிக்கின்றது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது. மேற்குடிமகன், கீழ்குடிமகன், ஏழை, பணக்காரன், ஆண்டான் அடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன், சாதிமதம் என்று வேறுபடுத்தி பார்க்காமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் நம்புகின்ற நீதி தேவனின் கண்கள் கருப்புக் கயிரால் கட்டப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த நீதி தேவனின் கருப்பு கயிறு அவிழ்த்து விடப்பட்டு அவ்விரு கண்களும் ஆட்களை தரம் பிரித்து பார்க்கின்றன. அதனால்தான் சஞ்சய் தத்தை தடாவிலிருந்து விடுவித்து ஒப்புக்காக ஓர் ஐந்தாண்டு தண்டனை கொடுத்துள்ளது.தப்புக்காக கொடுக்க வேண்டுமானால் ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை.சஞ்சய் தத்தை தடாவிலிருந்து எப்படி விடுவித்தீர்கள் என்று கேட்கவும் இல்லை.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஜைபுன்னிசாவை மட்டும் தடா சட்டம் மாட்டி அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது.ஜைபுன்னிசாவுக்கு தடா இல்லை எனில் சிறைத்தண்டனை இல்லை.ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பதால் சாதாரணமானவர்- சாமான்யமானவர் என்பதால் அவர் மீது தடா பாய்ந்து 70 வயது படுகிழவியான அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கின்றது.இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து விட்டது. இந்த அநீதி தொடர்ந்தால் நீதியின் கட்டுமானம் குலைந்தால், இந்தியா சீர்குலைந்து போய்விடும்.இந்தியா மட்டுமல்ல வேறெந்த நாடும் இந்த பாரபட்சத்தை கடைபிடித்தால் அந்நாடும் நிலைகுலைந்து நீர்மூலமாகி விடும். இறை சாபத்திற்கும்,கோபத்திற்கும் இலக்காகி விடும். இதோ மனித குலத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் எச்சரிக்கை : ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின்போது) மக்ஸுமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர்.

"அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், "அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?" என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்" என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), "உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்" என்று சொன்னார்கள். புகாரி : 3475

April 5, 2013, 11:59 AM

ஈஸ்டர் சண்டே என்பது தவறு!

ஈஸ்டர் சண்டே என்பது தவறு! – ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி! – பைபிளின் அடிப்படையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறிஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள்என்ற அடிப்படையில் கொண்டாடுவர். இதுகுறித்து பல உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதால், மறைக்கப்பட்ட அந்த உண்மைத் தகவல்களை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே உணர்வு இதழில் வெளியான இந்த சிறப்புக் கட்டுரை தற்போது மீண்டும் வெளியிடப்படுகின்றது.

ஏசு மரணித்த நாள்:

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே  அதாவது புனித வெள்ளி என்று கிறித்தவ மக்கள் கொண்டாடிவருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.

ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயு என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு.

ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாக சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை.

இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப்போட்டு பார்க்கலாம்.

அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை மதியம் 3மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிர்த்தெழுந்துவிட்டதாகவும், அதை சிலர் பார்த்ததாகவும் பைபிள் கூறுகின்றது.

இப்போது பைபிள் சொல்லக்கூடிய கணக்கை காண்போம். ஏசு இறந்து அடக்கம் செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை

1 இரவு

சனிக்கிழமை காலை

1 பகல்

சனிக்கிழமை

1 இரவு

 

ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசுவை பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

மத்தேயு 28 : 1 முதல் 6

கிறித்தவ நம்பிக்கை பிரகாரம் சனிக்கிழமை ஓய்வுநாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும்தான் மனுஷ குமாரன் பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார். எனவே மரியாளுக்கு காட்சி தந்தது பிசாசாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.

ஏசு சொன்ன உண்மையான முன்னறிவிப்பின்படி,

வெள்ளிக்கிழமை

1 இரவு

சனிக்கிழமை காலை

1பகல்

சனிக்கிழமை

1 இரவு

ஞாயிற்றுக்கிழமை

1 பகல்

ஞாயிற்றுக்கிழமை

1இரவு

திங்கள் கிழமை

1 பகல்

 

மேற்கண்டவாறு கணக்கு போட்டால்தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றன. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவுதான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்பது நமக்குத்தெரிய வருகின்றது.

ஆனால் கிறித்தவ நண்பர்களோ மரியாளிடத்தில் விளையாடிய பிசாசைப் பார்த்து அது ஏசு என்று தவறுதலாக விளங்கியுள்ளனர் என்பதும் பைபிளின் அடிப்படையில் தெரியவருகின்றது.

ஏசு தான் சொன்னபிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப்போனது. இதன் மூலம் பைபிள் இறைவேதமில்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

அதே நேரத்தில் ஏசுவைப்போல தோற்றமுடைய சாத்தான்தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பலசான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதிசெய்யப்படுகின்றது.

அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

 

 Jonah was in the stomach of a huge fish for three days and three nights. The Son of Man will be in the grave for three days and three nights.

மத்தேயு 12 : 40

மேற்கண்ட ஆங்கில வார்த்தைகளில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை கீழ்க்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இந்த கள்ள பாதிரிகள். .

யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயு - 12 : 38 முதல் 40

மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்றுநாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையை கட்டியுள்ளனர் இந்த கள்ளப்பாதிரிமார்கள். இவர்களது இந்த மோசடியிலிருந்து கிறித்தவர்கள் மீண்டு வந்து உண்மையான சத்தியக் கொள்கையை விளங்கி பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

ஈஸ்டர் சண்டே என்பது உண்மையல்ல; ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி என்று நிரூபணமாவதிலிருந்து கிறித்தவர்களின் அடிப்படையே ஆட்டம் கண்டு வருகின்றதை பார்க்கின்றோம். ஒரு கிறித்தவ சகோதரர் மூலம் சென்னையிலுள்ள ஒரு கிறித்தவ பாதிரியாரிடம் ஈஸ்டர் மண்டே என்று சொல்வதுதான் சரியானதாக இருக்குமேயொழிய, ஈஸ்டர் சண்டே என்று சொல்வது சரியில்லை என்பதற்கான மேற்கண்ட ஆதாரத்தை கொடுத்தனுப்பினோம். அதற்கு அந்த கிறித்தவ பாதிரியார் சொன்ன விளக்கம் சிரிப்பை வரவழைப்பதாக அமைந்தது.

நாம் அனுப்பிய அந்த கிறித்தவ சகோதரர் ஈஸ்டர் சண்டே என்பது தவறு என்பதற்கு இந்த ஆதாரத்தை அந்த பாதிரியாரிடம் காட்டி நமது தரப்பு விளக்கம் என்னவென்று கேட்டதற்கு அந்த பாதிரியார் ஆதாரங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, பைபிள் அடிப்படையில் ஈஸ்டர் சண்டே என்பது தவறுதான். ஈஸ்டர் மண்டே என்பதுதான் சரி. ஆனால் உலகமெங்கும் ஈஸ்டர் சண்டே என்றுதான் நம்பிக்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை விடுகின்றார்கள். இந்த ஆதாரத்தைக்காட்டி திங்கள் கிழமை விடுமுறை விடச்சொல்ல இயலாது என்பதால் ஈஸ்டர் தினத்தை ஞாயிற்றுக்கிழமைகளிலேயே கொண்டாடி வருகின்றோம் என்று விளக்கமளித்துள்ளார்.

இப்படித்தான் இவர்களது விளக்கங்களும் நம்பிக்கையும் அமைந்துள்ளது.


March 31, 2013, 5:42 PM

உணர்வு இதழின் குற்றச்சாட்டை

உணர்வு இதழின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்திய புதிய போப் ஆண்டவரின் முதல் உரை:

 

போப் ஆண்டவராகப் பதவி வகித்து வந்த 16ஆம் பெண்டிக்ட் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பதவி விலகினார். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பணிகளை துரிதமாகச் செய்ய இயலவில்லை என்று காரணம் கூறி அவர் ராஜினாமா செய்ததாக வாடிகன் நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

ஆனால் இது உண்மையல்ல என்பதையும், இவர் தானாக ராஜினாமா செய்யவில்லை என்பதையும், ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்பதையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்

உணர்வு 17 : 28 இதழில் தெளிவுபடுத்தியிருந்தோம்.

 

·         ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் திருச்சபைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

 

·         கருத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

 

·         பாலியல் சேட்டையில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

 

·         திருச்சபைகளில் ஊழல் செய்யும் பாதிரியார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது என்று கிறித்தவ மக்கள் மத்தியிலும், கிறித்தவ பாதிரியார்கள் மத்தியிலும் இருக்கக்கூடிய தீமைகளை தயவுதாட்சண்யமின்றி அவர் எதிர்த்ததும், இஸ்லாம் குறித்து கருத்து தெரிவித்ததும்தான் இவர் ராஜினாமா செய்ததன் முக்கியப் பின்னணி என்பதை தக்க ஆதாரங்களுடன் நாம் விளக்கியிருந்தோம்.

நாம் வைத்த அந்தக் குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் விதமாக தற்போது புதிய போப் ஆண்டவராகப் பதவியேற்றுள்ள ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிரான்சிஸின் முதல் உரை அமைந்துள்ளது.

அவர் புதிய போப் ஆண்டவராக மார்ச் 19ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்பாக இத்தாலியிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தினருகே அமைந்துள்ள வாடிகன் தேவாலயத்தில் மார்ச் 17 ஞாயிற்றுக் கிழமை அன்று சிறப்புப் பிராத்தனையில் பங்குகொண்டு அங்கு கூடியிருந்த ஒன்றரை லட்சம் மக்கள் முன்னிலையில் தனது முதல் உரையைப் பதிவு செய்தார்.

 

அந்த உரை விபரம் இதோ :

 

தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்

 

பைபிள் சம்பவம் :

அங்கு அவர் மக்களுக்கு செய்தி வழங்கினார். எவ்வித குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் பிரசங்கம் செய்தார். முதலில் தனது உரையில் பைபிளில் வரும் ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.

விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று ஏசு கிறிஸ்து முன்பாக நிறுத்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர் பிரசங்கம் செய்தார். அந்தப் பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று தன் முன் நிறுத்தியபோது, ஏசு கிறிஸ்து அவர்களை நோக்கி, ‘‘உங்களில் பாவமே அறியாதவர்கள் இந்தப் பெண்ணின் மீது முதலில் கல்லெறியக் கடவர்என்றார். அதைக் கேட்ட யாவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது அந்தப் பெண்ணை நோக்கி ஏசு கிறிஸ்து, ‘‘போ. இனி பாவம் செய்யாதேஎன்று கூறி அனுப்பினார்.

 

தவறுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது :

 

இதை எடுத்துக்கூறிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடர்ந்து கூறியதாவது:-

சில நேரங்களில் நாமும் இந்த மக்கள் போலவே ஏசுவின் வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறோம். மற்றொரு பக்கமோ மற்றவர்கள் மீது கல் எறிய விரும்புகிறோம். மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஏசு கிறிஸ்துவின் போதனை, கருணைதான். ஏசுவின் வலுவான செய்தி கருணை தான் என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவிக்கிறேன். தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று வேண்டுகோள் விடுத்தார்.

புதிய போப்பின் முதல் அறிவுரை உணர்த்துவது என்ன? :

 

·         புதிய போப் ஆண்டவர் முதன்முதலில் நிகழ்த்திய அறிவுரை . உங்களுக்கு விளங்குகின்றதா?

 

·         உணர்வு இதழில் குற்றச்சாட்டு உண்மையாவது உங்களுக்குப் புரிகின்றதா?

ஏதாவது ஒரு தீமையை நீங்கள் கண்டால் அதை தடுக்கக்கூடாது; கண்டனம் தெரிவிக்கக்கூடாது. நான் எந்தத் தீமையையும் தடுக்கமாட்டேன். எந்தத் தீமைக்கும் கண்டனம் தெரிவிக்க மாட்டேன்.

எப்படி இதற்கு முன்பு இருந்த போப் ஆண்டவர் 16ஆம் பெண்டிக்ட் தான் கண்ட அனைத்து தீமைகளையும் கண்டித்து, தடுத்து, கண்டனங்களைப் பதிவு செய்தாரோ, அதுபோல கிறித்தவ தேவாலயங்களில் நடைபெறும் பாலியல் சேட்டைகள், பொருளாதார மோசடிகள், ஓரினச்சேர்க்கை திருமணங்கள் போன்ற எந்தத் தீமைகளையும் நான் கண்டிக்கப்போவதில்லை; எனவே இத்தகைய மேற்கண்ட ஊழியங்களைச் செய்பவர்கள் தாராளமாக அதைத் தொடரலாம்.

 "போப் ஆண்டவர் நமக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று யாரும் பயப்பட வேண்டாம். நான் அதைக் கண்டிக்கமாட்டேன். அதற்கு கணடனம் தெரிவிக்க மாட்டேன். காரணம் என்னவென்றால் விபச்சாரம் செய்த விபச்சாரியை யூதர்கள் கல்லால் எறிந்து கொல்லப் போகும்போது, அந்த விபச்சாரியை கல்லால் எறிந்து கொல்லாமல், அந்தத் தீமையைக் கண்டிக்காமல் ஏசு எப்படி நடந்து கொண்டாரோ அதுபோலத்தான் நான் நடந்து கொள்ளப்போகின்றேன்" என்பதுதான் இவரது உரையின் சாராம்சம்.

பழைய போப் 16ஆம் பெண்டிக்ட் போல தீமைகளுக்கு கண்டனம் தெரிவித்து எனது போப் பதவியை இழக்க நான் தயாரில்லை என்பதை சூசகமாக, சொல்லாமல் சொல்லியுள்ளார் புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்.

இதன் மூலம் மேற்கூறிய தீமைகளை சுட்டிக்காட்டியதால்தான் போப் பதவிக்கு ஆப்பு விழுந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் உணர்வு இதழின் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.

 

ஏசு தீமையை எதிர்க்காதவரா? :

அதே நேரத்தில் நாம் இங்கு முக்கியமான மற்றுமொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு தீமையைக் கண்டாலும் அதை எதிர்க்கக்கூடாது. கண்டனத்தை தெரிவிக்கக்கூடாது என்று போப் ஆண்டவர் கூறிய அறிவுரை அறிவுக்குப் பொருந்தாத அறிவுரையும், ஏசுவுக்கு எதிரான அறிவுரையுமாகும்.

 

தீமைகளை எதிர்த்த ஏசு :

விபச்சாரம் செய்த பெண்மணியை ஏசு ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டதைப்போல நானும் யாரையும், எதையும் செய்ய மாட்டேன்; எதுவும் சொல்லமாட்டேன் என்பதுதான் புதிய போப் ஆண்டவருடைய முதல் அறிவுரையாக இருந்தபோதும், பைபிள் முழுக்க இவருக்கு எதிரான ஆதாரங்கள்தான் அடுக்கடுக்காக காணக்கிடைக்கின்றன.

 

சாட்டையை சுழற்றிய ஏசு :

 

 13. பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது ஏசு எருசலேமுக்குப் போய்,

 

 14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,

 

 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,

 

 16. புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.

 

யோவான் 2 : 13 - 16

மேற்கண்ட சம்பவம் சொல்வது என்ன?. ஏசு ஜெருசலமுக்குப் போகின்றார். அந்த ஆலயத்திற்குள் ஆடு, மாடு, புறா விற்கிறவர்களை காண்கின்றார். தேவாலயத்தினுள் வியாபாரம் செய்வது அவருக்கு தவறாகப் படுகின்றது. எனவே ஒரு சாட்டையை தயார் செய்கின்றார். அங்கிருந்தவர்களையெல்லாம் அந்த சாட்டையாலேயே வெளுத்து அள்ளுகின்றார். அடித்து விரட்டுகின்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள பலகைகளை கவிழ்த்தி விடுகின்றார். காசுகளை எல்லாம் எடுத்து கீழே கொட்டுகின்றார். சுருங்கச் சொல்வதானால் சூறையாடுகின்றார். சாட்டையை சுழற்றுகின்றார். அங்கிருந்த ஆடு, மாடுகளைக்கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் அடித்துவிரட்டியுள்ளார்.

அப்படியானால், ஏசு தேவாலயத்தினுள் வியாபாரம் செய்வதே கூடாது என்று கோபப்பட்டு இவ்வளவு போராட்டங்களைச் செய்துள்ளாரே! அந்தத் தீமைக்கு எதிராக போராடியுள்ளாரே! வியாபாரமே கூடாது என்றால் விபச்சாரம் கூடுமா? ஓரினச்சேர்க்கை கூடுமா? அந்த ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு திருமணம்  முடித்து வைப்பது கூடுமா? என்பதை புதிய போப் ஆண்டவரிடம் கேட்க விரும்புகின்றோம்.

 

ஏசுவின் பொருந்தாத போதனை :

 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

 

மத்தேயு 5:39

மேற்கண்ட போதனையைச் சொல்லித்தான் ஏசுவை சாந்த சொரூபியைப்போன்று காட்ட முயல்கின்றனர் கிறித்தவப் பாதிரியார்கள்.

தீமையை எதிர்த்து நிற்க வேண்டாம் என்று சொன்ன ஏசுவால் அவர் கூறிய அறிவுரையை அவராலேயே கடைப்பிடிக்க முடியவில்லை. தீமைக்கு எதிராக போராடியுள்ளார்.

 "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" என்று சொன்னவருக்கு அதையும் செய்ய முடியவில்லை.

 

இதோ அதற்கான ஆதாரங்கள் :

 

 22. சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, ஏசுவை ஒரு அறை அறைந்தான்.

 

 23. ஏசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

 

யோவான் : 18 : 22, 23

 மேற்கண்ட வசனத்தில் ஏசுவை ஒரு போர் சேவகர் ஒரு அறை அறைகின்றார். ஏசு சொன்ன போதனையின் பிரகாரம் அவர் என்ன செய்திருக்க வேண்டும். மறுகன்னத்தை அறைவதற்காக கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு மறு கன்னத்தைக் காட்டாமல், “என்னை ஏன் அடிக்கிறாய்என்று ஏசு கேட்டுள்ளார். அப்படியானால் தீமைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். தீமைக்கு எதிராக போராடியுள்ளார். தீமைகளை எதிர்த்து போராடாதே என்ற அவரது போதனைகளை அவரே மீறியுள்ளார்.

இதுமட்டுமல்ல, பைபிளில் புதிய ஏற்பாடு முழுக்க நாம் பார்ப்போமேயானால் ஏசு எந்த அளவுக்கு தீமைகளுக்கு எதிராக போராடியுள்ளார் என்பது நமக்கு தெளிவாகத் தெரியும்.

 

இவரை விசுவாசம் கொள்ளாமல், இவரிடத்தில் ஆதாரத்தைக் கேட்டவர்களைப் பார்த்து, பொல்லாத விபச்சார சந்ததிகளே! என்று திட்டியுள்ளார்.

 

பார்க்க : மத்தேயு 12:39

 

விரியன் பாம்புக்குட்டிகளே! என்று திட்டியுள்ளார்.

 

பார்க்க : மத்தேயு 3:7

 

ஏசுவுக்கு பசி உண்டாகி ஒரு அத்தி மரத்தினருகே பழம் சாப்பிட சென்றபோது, அந்த அத்தி மரத்தில் பழம் இல்லை என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்து, அத்தி மரத்தையும் சபித்துள்ளார். அத்தி மரம் இவருக்கு தீங்கு செய்ததாக நினைத்த காரணத்தால் அந்த அத்தி மரத்தைக்கூட இவர் விட்டு வைக்கவில்லை. அந்த அளவிற்கு தீமைக்கு எதிராக எதிர்த்து நின்றுள்ளார்.

 

பார்க்க : மத்தேயு 21:19

 

இஸ்ரவேல் இனத்தைச் சாராத கானானிய பெண்ணொருத்தி தனது பிள்ளைக்கு பிசாசு பிடித்துள்ளது என்று வந்து ஏசுவிடம் முறையிட்ட போது, இஸ்ரவேல் ஜாதியல்லாத பிற ஜாதியினருக்கு நான் அற்புதம் செய்யமாட்டேன்; ஆசி வழங்கமாட்டேன் என்று அந்தப் பெண்ணை நாய் என்று திட்டி அவர் தீமை என்று எதைக் கருதினாரோ அந்தத் தீமைக்கு எதிராக நின்றுள்ளார்.

 

பார்க்க : மத்தேயு 15:22

 

புனித வெள்ளியன்று கடவுளைத் திட்டியது :

இந்த வாரம் கிறித்தவ சகோதரர்கள் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாட உள்ளார்களே புனித வெள்ளி என்ற ஒரு திருவிழா. அதுகூட ஏசு எந்த அளவிற்கு தீமைக்கு எதிராக நின்றுள்ளார் என்பதை பறை சாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.

 

ஏசுவை யூதர்கள் சிலுவையில் அறைகின்றார்கள். அவ்வாறு சிலுவையில் அறையப்பட்டு அவரது உயிர் பிரியும் நேரத்தில், தான் சிலுவையில் அறையப்பட்டது அநியாயமானது என்பதை அவர் உணர்கின்றார். தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றாமல் தனது கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக அவர் எண்ணுகின்றார். அவ்வாறு தன்னை கடவுள் கைவிட்டது தீமை என்பது அவருக்குத் தெரிகின்றது. அவ்வாறு தீயது செய்த கடவுளைக்கூட அவர் விட்டு வைக்கவில்லை. அந்த கடவுளுக்கு எதிராக தனது கேள்வியை எழுப்புகின்றார்.

 

பார்க்க : மத்தேயு 27:46

 

பைபிளிலிருந்து இதோ அந்த வரிகள் :   

 

46. ஒன்பதாம் மணி நேரத்தில் ஏசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

 

50. ஏசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.

 

மத்தேயு 27 : 46, 50

அதாவது தான் உயிரை விட்டபோது அவர் சொன்ன கடைசி வார்த்தையும் கூட கடவுள் தனக்கு இழைத்ததாக ஏசு கருதிய தீமைக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது எனும்போது இதை கிறித்தவ பாதிரிகளும், கிறித்தவ மக்களும், போப் ஆண்டவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஆக மொத்தத்தில் தீமையை எதிர்த்தால்    ஏசுவைப்போல       சிலுவையில் தொங்கவிடப்பட்டுவிடுவோம் என்பதை அஞ்சித்தான், தீமைக்கு எதிராக களம் காண வேண்டாம்; கண்டனம் தெரிவிக்க வேண்டாம் என்ற அறிவுரையை புதிய போப் ஆண்டவர் கூறியுள்ளார் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகின்றது

அவ்வாறு தீமையை எதிர்த்ததனால்தான் முந்தைய போப் 16ஆம் பெண்டிக்ட் உடைய போப் பதவி சிலுவையில் ஏற்றப்பட்டது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

சட்டையை விற்று வாள் வாங்கியவர் சாந்த சொரூபியா? :

ஏசுவை சாந்த சொரூபியாகத்தான் பாதிரியார்கள் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் தீமைகளைக் கண்டித்து போர் புரியக்கூடிய அளவிற்கு களம் கண்டுள்ளார். கையில் ஆட்டுக்குட்டியுடன் காட்சி தரும் ஏசுவை பார்த்திருப்பீர்கள். ஆனால் கையில் வீர வாளுடன் எதிரிகளான யூதர்களை அழிக்க போருக்காகப் புறப்பட்ட ஏசுவை பார்த்திருக்கின்றீர்களா 

இதோ பாருங்கள் :

இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப் பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பிய போதுஉங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார். அவர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை'' என்றார்கள். அவர் அவர்களிடம், "ஆனால்இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்''

லூக்கா 22:35, 36

யூதர்களுக்கு எதிரான புனிதப் போருக்காக ஒரு போர் முழக்கத்தைஒரு போர்த் தளபதியாக மாறிப் போன ஏசு முழங்குகின்றார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன ஏசு தான் இந்தப் போர் முழக்கத்தைச் செய்கின்றார் என்பதையும், இந்த அளவுக்கு தீமையை எதிர்த்துள்ளார் என்பதும் இதிலிருந்து தெரியவருகின்றது.

March 31, 2013, 5:41 PM

மனித நேயம் காப்போம்!

மனித நேயம் காப்போம்!

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வு மனித நேயம் குறித்து பேசுபவர்களை சிந்திக்க வைத்துள்ளது. மனிதநேயம் என்ற ஒன்று மிகவும் மோசமான நிலையை அடைந்து மழுங்கி வருவதையும், இந்நிலை தொடருமேயானால் மனித நேயம் என்றால் என்ன? அது கிலோ எவ்வளவு? அது எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு நிலைமை செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நம்மை மனித நேயம் குறித்து அச்சப்பட வைத்த அந்தச் செய்தி இதோ :

அவசர கால ஆம்புலன்ஸ் "108  சேவைக்கு தகவல் கொடுத்தோருக்கு பாராட்டு!

சென்னை: சாலை விபத்துகளில் சிக்கியோர் குறித்து, அவசர கால ஆம்புலன்ஸ், "108' சேவைக்கு தகவல் கொடுத்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கடந்த மூன்று மாதத்தில், பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கிய, வாகன ஓட்டிகள், பயணிகள், பொது இடங்களில், மின் விபத்து மற்றும் நெஞ்சு வலி, வலிப்பு போன்ற உடல்நலக் குறைவுக்கு ஆளானோர் குறித்து, அவசர கால ஆம்புலன்ஸ், "108' சேவைக்கு தகவல் கொடுத்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள ஒரு தனியார் நிறுவன வளாகத்தில்,  14.03.13 வியாழன் அன்று  நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 14 பயனாளிகள் மற்றும் அவர்கள் விபத்தில் சிக்கியபோது, ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்த, 33பேர், அழைக்கப்பட்டனர். சாலை விபத்துகளில் சிக்கியோர் குறித்து தகவல் அளித்த, பிரபாகரன், அர்ஜுன் உள்ளிட்ட, 20 பேருக்கு, பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.  

இதுகுறித்து, அந்த தனியார் நிறுவனர்  கூறுகையில், "சாலை விபத்துகளில் சிக்குவோர் குறித்து, ஆம்புலன்சிற்கு தகவல் தந்தால், சட்டரீதியான சிக்கலுக்கு ஆளாவோம் என்ற எண்ணம், பொதுமக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இந்த எண்ணத்தை மாற்றும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என்றார்.

அதாவது கடந்த மூன்று மாதங்களில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தவர்களின் பட்டியல்களை அந்த நிறுவனம் திரட்டியுள்ளது. இத்தனை லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரத்தில் உயிருக்குப் போராடக்கூடியவர்களுக்கு உதவும் நோக்கத்தில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தவர்கள் 3 மாதத்தில் வெறும் 33 நபர்கள் மட்டும்தான் என்றால் மனித நேயத்தின் கதி என்ன என்று நாம் அஞ்ச வேண்டியுள்ளது.

மனிதநேயம் என்ற அந்த மகத்தான பண்பு இப்போது உயிருக்குப் போராடி மிக சீரியஸான கண்டிஷனில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகின்றது என்பதுதான் இதன் மூலம் நமக்குத் தெரியவரும் உண்மையாகும்.

இந்த நிகழ்வை வைத்துமட்டும் இதை நாம் குறிப்பிடவில்லை. இதுபோன்ற பல நிகழ்வுகளை நாம் நமது கண்முன்னால் கண்ட அடிப்படையில்தான் இவற்றை நாம் கூறுகின்றோம்.

கடந்த ஜூன் மாதம் திருச்சியில் நடந்த செயற்குழுவை முடித்துவிட்டு மேலப்பாளையத்திற்கு விவாத ஒப்பந்தம் செய்வதற்காக நமது மாநில நிர்வாகிகள் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது இரத்த வெள்ளத்தில் மிதந்தவராக ஒரு நபர் நமது வாகனத்தை இடைமறித்து உதவி கோருகின்றார். நமது நிர்வாகிகள் அவருக்கு உதவி செய்கின்றனர். அவர்கள் வந்த மாருதி காரை பின்னால் வந்த லாரி அடித்து தூக்கி எறிந்ததில் பலத்த காயமுற்ற அந்த சகோதரரும், அவரோடு வந்த மற்றொரு சகோதரரும் மிக சீரியஸான நிலையில் இருக்க டிஎன்டிஜேவின் விருதுநகர் மாவட்ட ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டது.

அவரிடம் நாம் விசாரித்த போதுதான் பின்வரும் செய்திகள் தெரியவந்தன. லாரி அடித்து தூக்கிவீசப்பட்ட நான் இரத்த வெள்ளத்தில் மிதந்தவனாக, இங்கு 15 நிமிடத்திற்கும் மேலாக எங்களைக் கடந்து செல்லக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தச் சொல்லி உதவி கேட்டுக் கெஞ்சிப் பார்த்துவிட்டேன். ஒருவர் கூட வாகனத்தை நிறுத்த மறுக்கின்றார்கள் என்று பரிதாபமாகக் கூறிய அவர், இத்தனைக்கும் தான் ஒரு வக்கீல் என்றும் கோவில்பட்டி அருகில் உள்ள சாத்தூர் தனது சொந்த ஊர் என்றும் விபத்து நடந்தவுடன் 108 ஆம்புலன்ஸுக்குத் தான் தகவல் கொடுத்துவிட்ட நிலையிலும், அவர்கள் வந்து சேருவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று தெரிவித்துவிட்டார்கள் என்றும் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடியே செய்திகளை தெரிவித்தார்.

ஒருவர் தான் விபத்துக்குள்ளாகி கிட்டத்தட்ட 25 நிமிடங்களாக அந்த வழியே சென்ற அனைத்து வாகன ஓட்டிகளிடமும் உதவி கோருகின்றார். அவருக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லை என்றால், 108 ஆம்புலன்ஸும் வரவில்லை என்றால், மனித நேயம் எங்கு வாழ்கின்றது? என்ற கேள்வி இயற்கையாகவே நம் உள்ளத்தில் எழுகின்றதா? இல்லையா?

இந்த நிலை தொடருவதால்தான் 3மாதங்களாக வலைவீசித் தேடியும் 33 மனிதர்களது பட்டியல் அந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

அதனால்தான் நமது ஜமாஅத் சார்பாக நாம் செய்யும் நற்பணிகளை காணக்கூடிய பிறமத சகோதரர்கள் நம்மை ஏதோ வேற்றுக்கிரகவாசியைப் பார்ப்பதுபோல வெறித்து வெறித்துப் பார்க்கும் நிலையை நாம் காண்கின்றோம்.

கடந்த ஜூன் மாதம் ஜெமினி மேம்பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்த விபத்தை நாம் அனைவரும் அறிவோம். அதில் அந்த வழியாகச் சென்ற டிஎன்டிஜே உறுப்பினர் ரியாஸ் அவர்கள் உடனடியாக களமிறங்கி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, பேருந்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றினார்.

மறுநாள் அவரது மனிதநேயப் பணியை புகழ்ந்து அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிடாத நாளேடுகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு செய்திகள் வெளிவந்தன.

மனிதநேயப் பணியை ஒருவர் செய்வது என்பது அரிதிலும் அரிதாகி வருகின்றது. அதனால்தான் அத்தகைய பணிகளை செய்தவரைப் பார்த்து அதிசயப் பிறவியை பார்த்ததுபோல இந்த சமுதாயம் காண்கின்றது.

ஆனால் இந்த மனித நேயப்பணியை இஸ்லாம் மார்க்கம் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர் மீதும் கடமையாக ஆக்கியுள்ளது.

இறைநம்பிக்கை என்பது 70க்கும் மேற்பட்ட கிளைகளுடன் அமைந்தது. அதனது கடைசி கிளை என்பது பாதையில் தீங்கு தரக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்துவதாகும் என்று நபிகளார் வழி காட்டித் தந்துள்ளார்கள்.

பூனைக்கு உணவளிக்காத ஒரு பெண்ணுக்கு அவள் செய்த அந்த செயலின் காரணமாக இறைவன் அந்தப் பெண்ணை நரகில் தள்ளுக்கின்றான் என்றும், தாகத்தில் தவித்த நாய்க்கு பரிவு காட்டி தண்ணீர் புகட்டிய ஒரு மனிதருக்கு அவரது செயலின் காரணமாக இறைவன் சுவனத்தை பரிசாகக் கொடுத்தான் என்றும் நபிகளார் சொல்லிக்காட்டுகின்றார்கள்.

பிறருக்கு தொல்லை தரும் விதத்திலான செயல்களை செய்பவன் உண்மையான முஸ்லிம் அல்ல என்று நபிகளார் முஸ்லிமுக்கு இலக்கணம் வகுத்துள்ளார்கள்.

பிறருக்கு உதவி செய்வதை இஸ்லாம் மார்க்கத்தில் ஒரு கடமையாக ஆக்கியுள்ளது.

ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், துன்பத்தில் உழல்பவர்களுக்கும், பட்டினியால் வாடுபவர்களுக்கும் உதவுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. (பார்க்க : கீழ் குறிப்பிடப்பட்டுள்ள திருமறை வசனம்)

இதை இஸ்லாம் மார்க்கக்கடமையாக வலியுறுத்தும் காரணத்தால்தான் முஸ்லிம்கள் இரத்ததானத்தில் முன்னிலை வகிக்கின்றனர். அதை மற்றவர்களுக்கு போதித்து பிரச்சாரம் செய்யும் இந்த ஜமாஅத் இறைப்பொருத்தத்தை நாடி அதைச் செய்வதால்தான் தொடர்ந்து இரத்ததானத்தில் முன்னிலை வகித்து வருகின்றது.

அதனால்தான் பிறரது துயர் துடைப்பதை இந்த ஜமாஅத் தனது தலையாய பணியாக செய்து தமிழகத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றது.

இதுபோன்ற மனித நேயப்பணிகளை அனைத்து சகோதரர்களும் இந்த ஜமாஅத்தோடு இணைந்து செய்து மனித நேயம் வளர்க்க அன்பான அழைப்பு விடுக்கின்றோம்.

 

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்-ஆன் 2 : 177

மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

 

 
 
 
 

ஆதாரம் : புகாரி  2989


March 31, 2013, 5:34 PM

முஸ்லிம்களை கருவருப்பதில் ஊடகங்களு

முஸ்லிம்களை கருவருப்பதில் ஊடகங்களும் கைகோர்க்கும் அவலம்:

சரணடைய வந்த தீவிரவாதியினது கையில் வெடி குண்டுகளையும், துப்பாக்கிகளையும் கொடுத்து செட்டப் செய்து மறுபடியும் அவனை தீவிரவாதியாக்கி டெல்லி காவல்துறை நடத்திய அயோக்கியத்தனத்தை உணர்வலைகள் பகுதியில் படித்திருப்பீர்கள்.

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ஏதேனும் சிறு செய்தி கிடைத்துவிட்டால் போதும், ஊடகங்கள் அதை தீபாவளி கொண்டாடுவதுபோல திருநாளாக கொண்டாடுகின்றனர். இதுபோன்ற செய்திகள் வெளியானால், அது இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. புளகாங்கிதம் அடைந்தவர்களாக அந்தச் செய்திகளை பரப்புகின்றார்கள்.

அது உண்மையா அல்லது இட்டுக்கட்டப்பட்ட செய்தியா என்றெல்லாம் ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதிலேயே கவனம் செலுத்தி தங்களது காவி புத்தியை வெளிக்காட்டுகின்றனர்.

 

 

காதலர் தினத்தில் நடந்த அநியாயம் :

கடந்த காதலர் தினத்தன்று மும்பையில் வெடிகுண்டு வெடிக்கவுள்ளதாக மிரட்டல்கள் விடப்பட்டபோதும் இதேபோலத்தான் இவர்கள் இல்லாதபொல்லாத செய்திகளை இட்டுக்கட்டி எழுதினார்கள்.

காதலர் தினத்தன்று மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தவுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து அந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் வெளியிட்ட லட்சணத்தை பாருங்கள்:

மும்பை : மும்பையின் முக்கிய இடங்களில் காதலர் தினத்தன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என மும்பை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மர்ம அழைப்புக்கள் வந்துள்ளன. 6 பயங்கரவாத அமைப்புக்களைச் சேர்ந்தோர் இந்த தாக்குதலை நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். காதலர்கள் அதிகம் கூடி காதலர் தினத்தை கொண்டாடும் ஜூஹூ சவுபத்தி அல்லது பந்த்ரா பந்த்ஸ்டண்ட் அல்லது இரு இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

போலீஸ் கமிஷ்னர் தகவல்:

மர்ம அழைப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் மும்பை போலீஸ் கமிஷ்னர் சத்யபால் சிங், அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு மும்பை மற்றும் அதனைச் சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறும், மக்கள் அதிகம் கூடும் விமானநிலையம், ரயில்வே நிலையம், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதியும் மும்பை தாக்குதல் குற்றவாளியுமான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு குறுகிய காலத்திலேயே பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவும் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கரவாதிகள் இந்த பதில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

 

 

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு :

அஜ்மல் கசாப் மற்றும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை  அடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிவ சேனா கட்சியினரே அதிகளவில் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவர் என போலீசார் எதிர்பார்த்து இருந்த வேளையில் பயங்கவாதிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

குற்றவாளிகள் கண்டுபிடிப்பு :

போலீஸ் கண்காணிப்பு அறைக்கு மர்ம போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து அந்த குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பை கண்காணிக்கும் பணியில் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிலமுறை வந்த தொலைபேசி அழைப்பை வைத்து போன் செய்தவன் உத்திர பிரதேச மாநிலம் மகு பகுதியைச் சேர்ந்த ராஜூ என போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போன்று மேலும் 2 பேர் மும்பையில் காதலர் தினத்தன்று 6 பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இத்தகவலை பயங்கரவாத தடுப்புப் படைக்கும், பந்த்ரா போலீசிற்கும், ஜூஹூ போலீசிற்கும் மும்பை போலீசார் அனுப்பி உள்ளனர்.

மேற்கண்ட செய்தியை ஒன்றுக்கு பலமுறை வாசித்துப்பாருங்கள். அஜ்மல் கசாப்பிற்கும், அப்சல் குருவிற்கும், காதலர் தினத்திற்கும் என்ன சம்பந்தம்?

 

 

காதலர் தினத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

பொதுவாக காதலர் தினத்தன்று தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றுவது சங்பரிவாரத் தீவிரவாதிகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருக்கையில் இதுபோன்ற மிரட்டல்கள் விடப்பட்டால் அது சங்பரிவாரத் தீவிரவாதிகளின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்பதில் எள்ளளவு கூட யாருக்கும் சந்தேகம் வராது எனும்போது அப்சல் குரு ஆதரவாளர்கள்தான் இந்த மிரட்டல் விடுத்துள்ளார்கள் என்று இவர்களுக்கு சொல்ல எப்படி மனம் வருகின்றது?

அதுமட்டுமல்லாமல், மிரட்டல் விடுத்த தீவிரவாதியையும் கைது செய்ததாக அவர்களே செய்தி வெளியிடுகின்றார்கள். அவனது பெயர் ராஜு என்றும் அவர்களே சொல்கின்றார்கள். அப்படியானால் இவன் நிச்சயம் சங்பரிவாரத் தீவிரவாதியாகத்தானே இருக்க வேண்டும். அந்தக் கோணத்தில் இந்த விசாரணையை நடத்தினார்களா? இல்லையே! இப்படித்தான் இவர்கள் முஸ்லிம்களை திட்டம்தீட்டி கருவறுக்கும் வேலையை செய்து வருகின்றார்கள்.

அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் பசுலுல்லாஹ் என்பவரது வீட்டில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்தில் 4வயது குழந்தை உட்பட பலர் பலத்த காயமுற்றதுடன், இருவர் உயிரிழந்தனர். அந்த சிலிண்டர் விபத்தைக்கூட இந்த அயோக்கிய ஊடகங்கள் எவ்வாறு எழுதின தெரியுமா?

 

 

வண்ணாரப்பேட்டையில் விபத்து :

சிலிண்டர் வெடித்ததா? வெடி குண்டு வெடித்ததா? என்று போலீசார் ஆய்வு!

என்று விஷமத்தனமாக செய்தி பரப்புகின்றார்கள் என்றால் இவர்களின் மதத்துவேஷத்தை என்னவென்பது?

முஸ்லிமுடைய வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டால் கூட அது இவர்களுக்கு வெடி குண்டுகளாக காட்சி தருகின்றதென்றால் இந்த ஊடகங்களின் குருட்டுப்பார்வைக்கு முதலில் நாம் வைத்தியம் பார்த்தாக வேண்டும். அதுபோல முஸ்லிம்களின் மீது இவர்களது துவேஷப்பார்வை மாற வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் முக்கிய தூண்களில் ஒன்றான ஊடகத்துறை எனும் தூண் இடிந்து நாடு சவக்குழிக்குள் சென்று விடும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிவைக்கின்றோம்.


March 31, 2013, 5:32 PM

டெல்லி காவல்துறை நடத்திய சதி

முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்க டெல்லி காவல்துறை நடத்திய சதி அம்பலம்!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி  ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைதுஎன்று சொல்லி கடந்த மார்ச் 23ஆம் தேதி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டன.

 

 

அந்த செய்தி இதோ :

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனஇதன் மூலம் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின், நாட்டின் முக்கிய இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறைக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் நேபாளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சையத் லியாகத் என்ற தீவிரவாதியை டெல்லி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

மத்திய டெல்லியில் ஜும்மா மஸ்ஜித் பகுதியில் உள்ள ஹாசி அராபத் என்ற விருந்தினர் இல்லத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக லியாகத் தெரிவித்தான். சோதனையில் .கே47 ரக துப்பாக்கி, 3 கையெறி குண்டுகள், 2 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்து பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில், ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெறும் பெரோஸா கோட்லா மைதானத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹிஸ்புல் தீவிரவாதி கைது சம்பவம் குறித்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

லியாகத், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்தவன். கடந்த 1997ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு இவன் ஊடுருவி தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளான். பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் இவன் கராச்சியிலிருந்து, காத்மாண்டு வந்துள்ளான். அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். லியாகத் டெல்லியில் தற்கொலைப் படை தீவிரவாதியாக செயல்பட வேண்டும் என ஹிஸ்புல் கமாண்டர்கள் காசி நஸ்ரூதீன், பரூக் குரேஷி ஆகியோர் கூறியுள்ளனர். இதற்கான சதி திட்டங்களை காஷ்மீர் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், டெல்லியில் லியாகத்திடம் வழங்குவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சரியான இடத்தை தேர்வு செய்து தாக்குதல் நடத்த வேண்டும் என லியாகத்திடம் ஹிஸ்புல் கமாண்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாக்குதலுக்குப் பின், லியாகத் காஷ்மீர் செல்லும்படியும் தீவிரவாதிகள் கூறியுள்ளனர் என்றார் அவர்.

மேற்கண்டவாறு பரபரப்புடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களும், டெல்லி போலீசாரும் தற்போது முகம் குப்புற கீழே விழுந்து கேவலப்பட்டுள்ளனர். ஆம்! டெல்லி போலீஸ் பிடித்த லியாகத் என்ற நபர் சரணடைய வந்தவர் என்ற உண்மைத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கூறிய தகவல்கள் பின்வருமாறு :

டெல்லி போலீஸ் கைது செய்துள்ளதாக சொல்லும் லியாகத் ஷா, எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் அல்ல. அவன் இப்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, சரணடையும் பயங்கரவாதிகளுக்காக, மறுவாழ்வு கொள்கையை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், காஷ்மீர் அரசிடம் சரண் அடைய வந்தவன் அவன். இந்த விவரம் மத்திய உளவுத் துறைக்கும், எங்களுக்கும் தெரியும். அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, டில்லி போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். லியாகத் ஷா, தன் இரண்டாவது மனைவி மற்றும், 19 வயது மகளுடன் நேபாளம் வழியாக, இந்தியா வந்தபோது தான் கைது செய்யப்பட்டுள்ளான். இவ்வாறு, ஜம்மு - காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.

 

 

கைது செய்யப்பட்ட லியாகத்தின் முதல் மனைவி சொல்வது என்ன? :

கோரக்பூரில் கைது செய்யப்பட்ட லியாகத் ஷாவின் முதல் மனைவி அமீனா பேகம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அதாவது, எனக்கும், லியாகத் ஷாவுக்கும் திருமணம் முடிந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின், துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர், ஒரு நாள் திடீரென என் கணவரை அழைத்துச் சென்றனர். அதன்பின், அவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் இருந்தது.

சில ஆண்டுகள் கழித்து என் கணவரிடம் இருந்து, கடிதம் ஒன்று வந்தது. அதில், தான் பாகிஸ்தானில் இருப்பதாகவும், மான்செரா என்ற இடத்தில், கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில், மொபைல் போன் சேவைகள் துவங்கியபின், என் கணவர் எங்களை அடிக்கடி மொபைலில் தொடர்பு கொண்டு பேசுவார். நன்றாக இருப்பதாகவும், வீடு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறுவார்.

இதையடுத்து, காஷ்மீர் குப்வார மாவட்ட நிர்வாகத்தினரிடம், நாங்கள் மனு ஒன்றை சமர்ப்பித்தோம். அதில், காஷ்மீர் மாநில அரசின், பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வு கொள்கைப்படி, அவர் சரண் அடைய அனுமதிக்க வேண்டும் எனக் கோரினோம். மாவட்ட நிர்வாகத்தினர் எங்களின் வேண்டுகோளை ஏற்றனர். அதனால், எங்கள் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டபடி, என் கணவர் நேபாளம் வழியாக இந்தியா திரும்பியுள்ளார். விரைவில் அவர் குடும்பத்தினருடன் சேருவார் என, எதிர்பார்த்தோம். ஆனால், அதற்குள், டில்லி போலீசார் அவரை, ஆயுதங்களுடன் கைது செய்துள்ளதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கைப்படியே, என் கணவர், இந்தியா திரும்பினார். அதனால், அவர் ஆயுதங்களைக் கொண்டு வந்தார் என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அமீனா பேகம் கூறியுள்ளார்.

 

 

 இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கூறிய தகவல்கள் பின்வருமாறு :

முன்னாள் தீவிரவாதியான லியாகத் ஷா, சரணடையும் திட்டத்தின் கீழ் வரும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் விளக்கம் அளித்துள்ளார்தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த காஷ்மீர் இளைஞர்கள் ராணுவப் போலீசில் சரண் அடைந்தால் அவர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இடையே நடைமுறையில் உள்ளது. இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 270 முன்னாள் தீவிரவாதிகள் காஷ்மீரில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் லியாகத் ஷா, இந்தியாவிற்கு வந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இதை டெல்லி காவல் துறை ஏற்க மறுப்பதால், விசாரணையை தேசிய புலனாய்வுக் கழகத்திடம் ஒப்படைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விசாரணையின் முடிவில் டெல்லி போலீசின் சதியும், காங்கிரஸ் கயவர்களின் சதியும் அம்பலத்திற்கு வரும்.

தன்னுடைய வாழ்வின் போக்கை மாற்றி, திருந்தி, சரணடைந்து மறுவாழ்வு வாழவேண்டும் என்று முடிவெடுத்து சரணடைவதற்காக வந்த ஒரு நபரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி, அவரிடத்தில் துப்பாக்கிகளும், வெடி குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக நாடகமாடி, அந்த அப்பாவியை ஹோலி பண்டிகையை சீர்குலைக்க வந்த கொலைகாரன் என்றும், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி என்றும் பட்டம் சூட்டி இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண டெல்லி காவல்துறையும், டெல்லி காங்கிரஸ் அரசும் படுபிரயத்தனம் எடுத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி போலீஸ் மற்றும் காங்கிரஸ் கயவர்களின் சதி இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தைக்கூட ஹோலி பண்டிகையோடு முடிச்சுப்போட்டு டெல்லியையும் குஜராத் போல மாற்ற இந்த கொடும்பாவிகள் திட்டம் தீட்டியுள்ளதையே இது வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

இப்படிச் செய்வது காங்கிரஸ் கயவர்களுக்கும், டெல்லி காவல்துறையினருக்கும் முதல் முறையல்ல. இதற்கு முன்பாக இதுபோல, 1998 பிப்ரவரி மாதம் டெல்லியில் வசித்து வந்த முகமது அமீர் என்ற முஸ்லிம் இளைஞர் டெல்லி போலீஸாரால் திடீரென காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு 18 வயது. எதற்கு அழைத்துச் செல்கின்றார்கள் என்றே தெரியாமல் அமீர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.

அடுத்த நாள் பத்திரிக்கையில் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது அமீர் பயங்கர ஆயுதங்களுடன் கைது. 10-க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன். பாகிஸ்தானில் பயிற்சி எடுத்தவன் என டெல்லி காவல்துறை செய்தி வெளியிட்டது, கைது செய்யும்போது அமீர் கையில் அமெரிக்க டாலர்கள், குண்டு செய்வதற்கான குறிப்புகள் அடங்கிய 5 டைரிகள், குண்டு வெடிப்புகளுக்குப் பயன்படும்  ரசாயனப் பொருட்கள், பாகிஸ்தானுக்கு ஒரு முறை சென்றதற்கான விசா  ஆகியவைகளை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இவை அனைத்தும் போலியாக போலீசாரால் ஜோடிக்கப்பட்டவை என பின்னர் நீதி மன்றத்தில் நிரூபணமானது.

பின்னர் அமீர் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது 1996 முதல் 1997 வரை நடந்த 10 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைத்து இடங்களிலும் குண்டு வைத்து இயக்கச் செய்தவர் இவர்தான் என டெல்லி  போலீஸார் குற்றம் சாட்டினர்.

உண்மையில் எந்த ஆதாரமும் அமீருக்கு எதிராக இல்லை, குண்டு வெடிப்பை நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் கூட அமீரை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை என நீதி மன்றத்தில் தெரிவித்தனர்அமீர் குண்டு வைத்ததை நேரில் பார்த்தேன் என காவல் துறையால் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்ட சந்திராபான் நீதி மன்றத்தில் காவல் துறையின் மோசடியை அம்பலப்படுத்தினார். நீதிபதிகள் "அமீரைப் பார்த்தீர்களா?" என்று கேட்டதற்க்கு "அமீரைப் பார்த்ததே இல்லை எனத் தெரிவித்தார்", நீங்கள் பார்த்ததாகக் காவல் துறை ஆவணம் தாக்கல் செய்துள்ளதே எனக் கேட்டதற்க்கு "என்னை சாணக்கியாபுரி காவல் நிலையத்திற்க்கு போலீசார் அழைத்துச் சென்றனர், அங்கு வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினர், பின்னர் அனுப்பிவிட்டனர், அதில் என்ன எழுதினார்கள் என்று எனக்குத் தெரியாது" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். இப்படி பல்வேறு பொய்களைச் சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரின் வாழ்க்கையோடு ஏற்கனவே விளையாடியது டெல்லி காவல் துறை.

 14ஆண்டுகளுக்குப் பிறகு இது டெல்லி காவல்துறையின் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிமன்றம் அமீரை விடுதலை செய்தது. அதுபோலத்தான் தற்போதும் டெல்லி போலீசார் அழகான முறையில் இந்தப் பொய் வழக்கையும் ஜோடித்துள்ளார்கள்.

இதன் மூலம்  சோனியாவும்நரேந்திர  மோடியும்  ஒரே  கொள்கையுடையவர்கள்தான் என்பது அம்பலமாகியுள்ளது. இவர்களுக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றார்கள்.

 (முஸ்லிம்களுக்கு எதிராக சதி வலை பின்னும் இந்த கேவலமான செயலில் ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அது குறித்த தனி செய்தியை 13 ஆம் பக்கத்தில்முஸ்லிம்களை கருவறுப்பதில் ஊடகங்களும் கைகோர்க்கும் அவலம்தனிக்கட்டுரையில் காண்க)

 

 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.


March 31, 2013, 5:31 PM

தனி ஈழம் சாத்தியமா?

 தனி ஈழம் சாத்தியமா?

(திமுக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பதற்கு முன் இந்த பதில் உணர்வில் வெளியானது என்பதைக் கவனத்தில் கொள்க)

இலங்கைப் பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்பார்க்கும் பலன் ஏற்படுமா?

மசூது, கடையநல்லூர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தங்களின் முதல் கோரிக்கையாக தனிஈழம் என்பதை முன்வைக்கின்றனர். அதாவது இலங்கையின் வடக்கு மாகாணத்தை இலங்கையிலிருந்து பிரித்து அதைத் தமிழர்களின் தனிநாடாக ஆக்கவேண்டும் என்பது முதல்கோரிக்கை. 

அமெரிக்கா  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

இதில் முதலாவது கோரிக்கை எள்முனையளவும் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எந்தநாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள ஒப்புக் கொள்ளாது.

தனிநாடு கோருவோரின் கடுமையான பதிலடி காரணமாக, ராணுவமும் காவல்துறையும் சோர்வடைந்து இனிமேல் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு பலவீனம் அடையும்போது மட்டுமே வேறுவழி இல்லாமல் தொலைந்து போகட்டும் என இதற்கு ஒப்புக் கொள்வார்கள்.

அல்லது உலகநாடுகள் அனைத்தும் அல்லது வல்லரசுநாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடும்விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கும் அளவுக்கு ஒருநாடு தனிமைப்படுத்தப்பட்டால் அப்போது வேறுவழியில்லாமலும், எஞ்சிய பகுதியையாவது தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தனிநாடு கோரிக்கையை அந்தநாடு ஏற்றுக்கொள்ளும்.

இலங்கையில் பிரபாகரன் உயிருடன் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துவந்த போதும், வடக்குப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை ராணுவம் நுழையவிடாமல் தடுத்துக்கொண்டு இருந்தபோதும், வடக்குப் பகுதியைக் கடந்து கொழும்பு நகருக்குள் ஊடுருவி இலங்கைத் தலைவர்கள் மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கிய போதும், வேறுநாடாக இருந்தால் தொலைந்து போகட்டும் என்று தனிநாடாக ஆக்கி இருப்பார்கள்.

ஆனால் விடுதலைப்புலிகளின் கடுமையான அனைத்து தாக்குதல்களுக்குப் பின்னரும், இலங்கையானது தனிநாடு கோரிக்கையை ஏற்கமறுத்து விட்டது. சில ராணுவவீரர்கள் ராணுவத்தைவிட்டு ஓட்டம்பிடிக்கும் அளவிற்கு நிலைமை இருந்தும், அந்தநாடு தனிநாடு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இன்று அங்கு விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளனர். சரணடைந்த புலிகள்கூட பெரும்பாலும் கொன்று குவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் குடும்பத்தில் இருந்த பெண்களும் சிறுவர்களும்கூட அழிக்கப்பட்டுவிட்டனர். தனிநாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஒருவர் கூட இல்லாத அளவுக்கு துடைத்து எறியப்பட்ட பின்னர், தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது இலங்கை அரசால் கோமாளித்தனமாகத்தான் பார்க்கப்படும். வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

விடுதலைப்புலிகளின் கடுமையான போராட்டத்தின்போது இலங்கைக்கு உலகநாடுகள் நெருக்கடி கொடுத்து இருந்தால், தனிஈழம் கிடைத்துவிடும் என்றநிலை ஒருகாலத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் இருந்த ஐந்துகோடிக்கும் மேலான தமிழர்கள் மொழிஉணர்வின் காரணமாக ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அரசியல் கட்சியினர் பெருமளவில் அவர்களுக்கு நிதியுதவி அளித்தனர்.

தமிழக ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகள் தங்கிட இங்கு அடைக்கலம் கொடுத்தனர். ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுதிரண்டு ஆதரிக்கிறது என்ற நிலைமை காரணமாக, மத்திய அரசும் இலங்கை விவகாரத்தில் தலையிட்டது. அமைதிப்படையை அனுப்பி விடுதலைப்புலிகள் முற்றிலும் அழிக்கப்படாமல் காப்பாற்றியது. இலங்கையின்மீது அத்துமீறிப் பறந்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணவுப்பொட்டலங்கள் போட்டு, இலங்கை அரசுக்கும் கடுமையான எச்சரிக்கையும் விட்டது.

அந்தநிலை நீடித்து இருந்தால், உலகநாடுகளின் ஆதரவுடன் தனிநாடு அமைய இந்திய அரசும் உதவுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் விடுதலைப் புலிகள் தங்களது செயல்களால் நாசமாக்கி விட்டனர்.

இந்தியாவிற்குள்ளேயே தங்களது பயங்கரவாதச் செயல்களை விடுதலைப்புலிகள் அரங்கேற்றினார்கள். முன்னாள் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தியை இந்திய மண்ணில் அதுவும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த தமிழகத்தில் வைத்தே சமாதி கட்டினார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடான இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இவர்கள் நடத்திய போர் ஆறாதவடுவாக அதிகாரிகள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் வாய்திறக்க முடியாதநிலை அப்போது தமிழகத்தில் ஏற்பட்டது. ஜெயலலிதா போன்ற சிலதலைவர்கள் விடுதலைப்புலிகளின் செயல்களை துணிவுடன் கண்டித்தனர். விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் ஜெயலலிதாவும் உள்ளார் என்ற உளவுத்துறையின் தகவலால், அவருக்கு இசட்பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மன்னிக்க முடியாத பாதகத்தைச் செய்த புலிகளை ஒழித்துக் கட்ட மத்தியஅரசு முழுவீச்சில் களமிறங்கியது.

ராஜிவ்காந்தியின் மனைவியிடமும், அவரது மகனிடமும் முழுஅதிகாரமும் குவிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் கணக்கைத் தீர்க்க அவர்கள் நினைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே புலிகளை ஒழித்துக்கட்ட அனைத்து விதமான உதவிகளையும் இலங்கை அரசுக்கு மத்தியஅரசு செய்து கொடுத்ததிலும் ஆச்சரியம் இல்லை.

ஆயுத சப்ளை வழங்கி இந்திய ராணுவத்தின் உதவியுடன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்தும், தேவையான வியூகங்களை வகுத்துக் கொடுத்தும், புலிகளை முற்றிலுமாக ஒழிக்க எல்லா உதவிகளையும் மத்திய அரசுசெய்து கொடுத்ததால்தான் இலங்கை ராணுவம் புலிகளை வேறோடு அழிக்கமுடிந்தது.

விடுதலைப்புலிகள் தங்களுக்கு பக்கபலமாக இருந்த மாபெரும் நாட்டை தங்களது கொடும் செயலால் எதிரியாக ஆக்கிக் கொண்டு இருக்கா விட்டால், தனிஈழம் இன்னேரம் அமைந்திருக்கலாம்.

அல்லது அதிகாரப் பகிர்வுடன் கூடிய தனிமாகாணம் இந்துத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். அதைக் கெடுத்து விடுதலைப்புலிகள் நாசமாக்கிக் கொண்டனர்.

மதத்தால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்ட தமிழ்கூறும் முஸ்லிம்களைத் தங்களின் முதல்எதிரியாக இவர்கள் ஆக்கிக் கொண்டதாலும், முஸ்லிம்களை வேறோடு கிள்ளி எறிய அவர்கள் செய்த கொடுமைகளாலும், அவர்களின் பலம் குன்றியது. இந்துத்துவாவிற்கு நிகரான விடுதலைப்புலிகளை விட சிங்களபௌத்த வெறியர்கள் பரவாயில்லை என்ற நிலைமை இதனால் ஏற்பட்டது.

இவர்கள் போராளிகள் அல்ல பிறநாடுகளிலும் புகுந்து வன்முறையில் ஈடுபடும் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் (வல்லரசு நாடுகள் உட்பட) எல்லா நாடுகளுக்கும் ராஜிவ் கொலையால் ஏற்பட்டது. பலநாடுகளும் இவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிங்களஅரசு அனைத்து நாடுகளின் ஆதரவுடன் செயல்பட்டு புலிகளை முற்றாக ஒழித்தே கட்டிவிட்டது.

புலிகளின் கொடூரமான ஆட்சிமுறையால் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வந்த வடமாகாணத் தமிழர்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். எப்போது என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழ்ந்த நிலை மாறியுள்ளது. எனவே விடுதலைப் புலிகளின் பாதையில் செல்லக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் உறுதியுடன்உள்ளனர்.

இவர்களின் விருப்பத்திற்கு நேர்மாறாகத்தான் இங்குள்ளவர்கள் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி தங்களைத் தாங்களே ஏமாற்றி வருகிறார்கள்.

இங்கே இந்தக் கோரிக்கை வைப்பதால் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள்மீது அடக்குமுறை அதிகரிக்கத்தான் செய்யும். சிங்களர்களின் கோபம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பும்பட்சத்தில் ராஜபக்சேஅரசு அதை வேடிக்கை பார்க்குமே தவிர, தமிழர்களைப் பாதுகாக்காது.

திராவிடநாடு கேட்டு அண்ணாதுரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றெல்லாம் வாதங்களை எடுத்து வைத்தார். இந்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அதை அடக்கி விட்டது.

திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன என்று அண்ணா அந்தர்பல்டி அடித்ததை நாம் மறந்துவிட முடியாது. காரணங்கள் இருந்தாலும் அதைக் கேட்டுப்பெற முடியாத அளவிற்கு அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அது கைவிடப்பட்டது. தனிநாடு கோரிக்கைக்கு இதுதான் முடிவாகும்.

ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதற்கே பல உயிர்களைப் பலிகொடுத்து போராட வேண்டியிருக்கிறது. இன்னும் தெலுங்கானா உருவானபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிட்டு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. அவ்வாறு செய்யாமல் அவர்கள் சென்றிருந்தால் இந்த இருநாடுகளும் ஒரே நாடாகத்தான் இன்றுவரை இருந்திருக்கும்.

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் அவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இந்திய ராணுவத்தை அனுப்பியதால்தான் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷாக மாறியது.

பாலஸ்தீனம் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று சுதந்திரநாடாக ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்றால், அவர்கள் தங்கள் மண்ணுக்கு வெளியே வேறுநாடுகளில் எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்பதும், முழு இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களிடத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்பதால் ஏற்பட்ட அனுதாபமும் காரணமாகஇருந்தது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்சமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதற்கு நிகரான அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

அடுத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அபத்தமான ஒன்றே. அமெரிக்கா தீர்மான நகலை வெளியிட்டு, அதன் நகலை வாசித்துப் பார்த்துவிட்டு இப்படியான கோரிக்கையை தமிழீழ ஆதரவாளர்களும் மாணவர்களும் வைக்கவில்லை.

மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் முதல்இடத்தில் உள்ள அமெரிக்காவைப் பற்றி இங்குள்ள அரசியல்கட்சித் தலைவர்களுக்கு எந்த அறிவும் இல்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

தனது ஆதாயத்திற்காக உலகநாடுகளை மிரட்டுவதும், காரியம் சாதித்துக் கொள்வதும் அமெரிக்கவிற்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சுப்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்தியது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் மூலம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால், உப்புசப்பு இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழகப் போராளிகள் அனைவர் மீதும் கரியைப்பூசி விட்டது. ராஜபக்சே அரசு தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தத் தீர்மானம் உள்ளது.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரைத் தூக்கில் போடப் போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்து விட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து, அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியஅரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றுபுரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கூறுவதற்கு முன் அந்தத் தீர்மானத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

அறிவுஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் கூட இந்த அறிவு இல்லாமல் போய்விட்டது.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஒன்றே தனிஈழத்தைப் பெற்றுத்தரும், ராஜபக்சேயைத்த ண்டிக்கும் என்று சிறுபிள்ளைத்தனமாக ஊடகங்களில் முகம் காட்டியவர்கள் வெட்கமின்றி பல்டி அடிக்கின்றனர்.

எமது கணிப்பு பிரகாரம், தமிழகமே கொந்தளித்தாலும், மத்திய அரசு இலங்கைக்கும் ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிவ்காந்தி படுகொலைக்கு கணக்கு தீர்ப்பதற்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும். ராஜபக்சேவுக்கு வலிக்காத வகையில் தடவிக் கொடுக்கும் மத்திய அரசின் நிலையில் எந்தமாற்றமும் இருக்காது.

March 19, 2013, 11:07 PM

ஹைதராபாத் குண்டு வெடிப்பும் - முஸ்லி

ஹைதராபாத் குண்டு வெடிப்பும் - முஸ்லிம்களுக்கு எதிரான தமிழக பத்திரிகைகளின் சதியும்!

ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள்தான் இதைச் செய்தனர் என்று முடிவு செய்துவிட்ட போலீசாரும், ஊடகங்களும் இது சம்பந்தமான பெய்ச் செய்திகளை கசிய விட்ட வண்ணம் உள்ளனர். கோவையில் இருந்து கேரளா நோக்கி மினி லாரி ஒன்று சென்றதாம்! அந்த லாரியில் 5 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாம்! அந்த மினி லாரியை கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவர் ஓட்டிச் சென்றாராம்! இந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் கோவை - கேரளாவைத் தகர்க்கும் சதித் திட்டத்தில் இந்த வெடி மருந்துகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என 25-02-13 அன்று தினத் தந்தி செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மூலம் ஹைதராபாத்தில் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் என பிற சமூக மக்களிடம் பதிய வைத்தாயிற்று.

ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும், அப்துல் கரிமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை கேரள போலீசாரோ, என்.ஐ.ஏ.போலீசாரோ கைது செய்யுவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை என்ற உண்மையை தினத் தந்தி சொன்னதா? இல்லை.

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஆதம். சோமாலியா நாட்டைச் சேர்ந்த அப்துல்லா உம்ரன் மக்ரன் ஆகிய இருவர் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாள எல்லைக்குள் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக 25-02-13 அன்று செய்தி வெளியிட்ட தினத் தந்தி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், பேனா, கேமரா செல், ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், ஐதராபாத்-செகந்ராபாத் நகர படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஹைதராபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என அப்பாவி மக்களை நம்ப வைத்தது தினத் தந்தி. தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவரும் லேப்டாப், பேனா, கேமரா செல், டிரைவிங் லைசென்ஸ், ஊரின் வரை படங்கள் வைத்துள்ளனர். இவையெல்லாம் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என்று யாராவது சொல்வார்களா? முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்தி, இந்த பொருட்களும் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என தினத்தந்தி காட்ட முயலுகிறது.

ஆந்திர மாநில பி.ஜே.பி.யின் தலைவராக கிரன் ரெட்டி என்பவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மர்மக் கடிதம் வந்ததாம்! அந்தக் கடிதத்தில் ‘ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது நாங்கள் தான். எங்களது அடுத்த தாக்குதல் ஹைதராபாத்தின் பேகம் பஜார் தான்’ என்று குறிப்பிட்டு இருந்ததாம். இந்த கடிதம் பி.ஜே.பி.யின் செட்டப் நாடகம் என இப்போது சிலர் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மதுரை தினகரன் 25-02-13 அன்று இந்த கடிதத்தின் சாராம்சத்தை வெளியிட்டு குண்டு வெடிப்பு என்றால் முஸ்லிம்கள் என அப்பாவி மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டதே! இந்தப் பதிவை யார் அப்புறப்படுத்துவது?

ஹைதராபாத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெடி பொருட்களுடன் நுழைந்து விட்டனர். அதனால் காவல்துறை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது என்று அதே நாளின் முதல் பக்கத்தில் தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டு குமரி மாவட்ட முஸ்லிம்களை கதி கலங்க வைத்ததே! அந்த கலங்கத்தை யார் தான் போக்க முடியும்? கடைசியில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது மக்பூல், இம்ரான் கான், மற்றும் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு முஸ்லிம்கள்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று 4-3-13 அன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதே! இதை எங்கு போய் சொல்வது?

ஜெயிலில் இருந்து இவர்கள் வெடிகுண்டு வெடிப்பை நடத்தினார்கள் எனில் இவர்களுக்கு ஜெயில் அதிகாரிகள் துணை புரிந்துள்ளார்கள் என்று அர்த்தமாகிறது. இந்த ஜெயில் அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தினமலர் சொல்லுமா? சொல்லவே சொல்லாது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அல்லவா தினமலர் அப்படிச் சொல்லும். அது பொய் என்று தினமலருக்கு நன்கு தெரியும் போது அது எப்படி இவ்வாறு சொல்லும்?

இவர்களின் நோக்கம் குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதல்ல. மாறாக முஸ்லிம்கள் மீது குண்டு வெடிப்பு பழியை தூக்கிப் போட வேண்டும். குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே! இதுதான் இவர்களின் நோக்கம் எனும் போது பத்திரிகை தர்மம் எப்படி காக்கப்படும்? இந்தியா எப்படி உருப்படும்? என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் கேள்வி எழத்தானே செய்யும்!

March 18, 2013, 3:52 PM

மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பத

மிரட்டல் விடுத்து மன்னிப்பு கேட்ட பதுங்கும் புலிகள்:

பிரபாகரன் செய்த அட்டூழியங்களையும், விடுதலைப்புலிகள் செய்த அடாவடித்தனங்களையும், இனப்படுகொலைகளையும் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி டிஎன்டிஜேவின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் கரூர் குளித்தலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும் அவர் பேசிய பொதுக்கூட்ட உரைகள் ஃபேஸ் புக்கிலும் இடம்பெற்றிருந்ததுஇதற்கு வாதப்பிரதிவாதங்கள் ரீதியாக பதிலளிக்கத் திராணியில்லாத விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான, “நாம் தமிழர்கட்சியினர் நமது மாநில நிர்வாகிகள் எம்..சுலைமான் மற்றும் சையது இப்ராஹீம் ஆகியோரிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளனர்.

பிரபாகரன் முஸ்லிம்களை கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? என்று முதல் கேள்வி எழுப்ப அனைத்திற்கும் தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் உள்ளன. அதை நீங்கள் மறுப்பீர்களேயானால் அதை நாங்கள் நிரூபிக்கத்தயார் என்று நமது நிர்வாகிகள் பதில் சொல்ல, அது உண்மையென்று வைத்துக் கொண்டால் ராஜபக்சேவை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். ராஜபக்சே போர் குற்றங்கள் செய்திருப்பாரேயானால் அவரும் குற்றவாளிதான்; அதே நேரத்தில் முஸ்லிம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் கொலை செய்து படுபாதக செய்லபுரிந்த பிரபாகரனும் அவனுடைய ஆதரவாளர்களும் மரணதண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நமது நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர்.

அப்படியானால், மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய முஸ்லிம்களை நீங்கள் ஆதரிப்பீர்களா? அவர்களைக் கண்டிப்பீர்களா? என்று அவர்கள் கேள்வி கேட்க, தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் அதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். முஸ்லிம் பெயர் தாங்கிகள் அதைச் செய்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று நாம் பதில் கூற பதிலளிக்க முடியாமல் விழிபிதுங்கியுள்ளனர், "நாம் தமிழர்" கட்சியினர்.

இது குறித்து பகிரங்க விவாதம் நடத்த நீங்கள் தாயாரா? என்று விவாதத்திற்கு பகிரங்க அறைகூவல் விடுக்கப்பட்டது. அதற்கு பதில் இல்லை.

நமது கேள்விகளுக்கு பதிலளிக்க வக்கில்லை என்றவுடன், விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசுவதை நீங்கள் நிறுத்த முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் தொனியில் கேள்வி வர, “நீ இப்படியெல்லாம் மிரட்டினாயேயானால், இன்னும் அதிகமாக அவர்களைப்பற்றி பேசி அவர்களை தோலுரிப்போம் என்று நமது நிர்வாகிகள் தெரிவிக்க, அப்படியானால் நாளை கரூரில் நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுபோன்று ஒரு நாளைக்கு நூறுபேரை நாங்கள் சந்திக்கின்றோம். நீ என்னவேண்டுமானாலும் செய்துகொள். உன்னுடைய இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்என்று நமது நிர்வாகிகள் கூற தொலைபேசி இணைப்பைத் துண்டித்தனர். அதைத் தொடர்ந்து அந்த விடுதலைப்புலி ஆதரவாளர் நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் இர்ஷாத் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.

நமது நிர்வாகிகள் உடனடியாக கரூர் டவுன் காவல்நிலையத்தில் அவரது தொலைபேசி எண்ணைக் கொடுத்து புகார் செய்யவே காவல்துறை உடனடியாக களமிறங்கியது. நமது நிர்வாகிகளிடம் அவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரெகார்டு செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் வசமாகச் சிக்கிக்கொண்டனர்.

போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தவே அரண்டு போன விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஆரம்பத்தில் நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்று மறுத்துள்ளனர். இவர்கள் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ரிகார்டு செய்யப்பட்டுள்ளது. அதை மாநிலத்தலைமையிடமிருந்து வாங்கி போட்டுக்காட்டட்டுமா? என்று நமது கரூர் மாவட்ட பொறுப்பாளர் ஹனீஃபா அவர்கள் கேள்வியெழுப்பியவுடன் நமது குட்டு வெளிப்பட்டுவிடும் என்று பயந்த விடுதலைப்புலிகளின் ஆதாரவாளர்கள் தாங்கள் பேசியது உண்மைதான் என்றும், அவ்வாறு நாங்கள் பேசியதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கின்றோம் என்றும் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர்.

அவர்களிடத்தில் இது குறித்து நேரடியாக விவாதம் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதிலிருந்தே அவர்களிடத்தில் உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.

நாம் தமிழர் மாவட்டத் தலைவர் ராஜா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இஸ்லாமிய அழைப்புப்பணியும் செவ்வனே செய்யப்பட்டது.

March 14, 2013, 12:29 PM

மதுவை ஒழிக்க வழி என்ன?

மதுவை ஒழிக்க வழி என்ன? - இஸ்லாம் கூறும் தீர்வு!

மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுங்கள்; அதனால்தான் நாட்டில் பல துன்பங்களும், துயரங்களும் நிகழ்கின்றன என்று ஆட்சியாளர்களிடத்தில் கோரிக்கை வைத்தால், அவர்கள் கூறும் பதில், “டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டினால், கள்ளச்சாராயக்கடைகளை திறந்துவிடுவார்கள். அதனால்தான் நாங்களே சாராயக்கடைகளை திறந்து வியாபாரம் பார்க்கின்றோம்என்பதாக உள்ளது.

உண்மையிலேயே இந்த மதுவை ஒழிக்க வழியில்லையா? என்ற ஏக்கம் பலரது உள்ளத்திலும் நீண்ட நெடுங்கனவாக உள்ளது. அதற்கு இஸ்லாம் அழகான தீர்வை வழங்குகின்றது.

  மது அருந்துவது ஒரு கேவலமான செயல் என்று பார்க்கும் நிலைமாறி, அது ஒரு பாராட்டத்தக்க, போற்றத்தக்க ஒரு சாதனை என்பது போல நிலைமையை மாற்றி வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்.

ஆம்! தொலைக்காட்சி சேனல்களில் குடிமகன்கள் பேட்டி கொடுக்கின்றனர்.

 

 

·         மூன்று நாட்கள் தொடர்ந்து கடைகளைப் பூட்டினால் நாங்கள் எங்குபோய் மதுக்குடிப்பது? என்று கேள்வியெழுப்புகின்றனர்.

 

 

·         நாங்களெல்லாம் அன்றாடங்காட்சிகள்; மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறைவிட்டால் மொத்தமாக மூன்று நாட்களுக்கு தேவையான சரக்குகளை நாங்கள் முன்கூட்டியே எப்படி ஸ்டாக் வாங்கி வைக்க முடியும் என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர்.

 

 

·         நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அரசாங்கம் பூட்டிவிட்டால் நாங்கள் குடிப்பதை நிறுத்திவிடுவோமா? எங்களுக்கு தெருக்களில் உள்ள கடைகளில் வாங்கிக் குடிக்கத்தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

  இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட கேவலமான நிலைதான் நம் நாட்டில் நிலவி வருகின்றது.

இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடிய மிருக ஜென்மங்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்காததுதான் இவர்கள் இப்படி பேசுவதற்கும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கும் காரணமாகும்.

தவறு செய்பவர்களுக்கு அந்த தவறுக்காக வழங்கப்படும் தண்டனைகள் கடுமையானதாக இருக்குமேயானால் அதைக் கண்டு அஞ்சி நடுங்கி அந்தத் தவறை செய்யாமல் அந்தக் குற்றவாளிகள் திருந்துவதற்கு அது வழிவகுக்கும்.

மது அருந்தியவனுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனைகளை கேட்பவருக்கு, மது அருந்தும் எண்ணம் அறவே ஓடிவிடும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இஸ்லாம் தண்டனைகளை வழங்கச் சொல்லி உள்ளது.

 

 

இஸ்லாம் சொல்லும் தீர்வு :

நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)

 நூல்: அஹ்மத் 18610

மது அருந்தியவர்களை அடிக்க வேண்டும் என்ற சட்டம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதற்கு கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.

 

 

மது அருந்தும் கணவரை அடிக்கும் மனைவிக்கு அதிர்ஷ்டம்!

 

 

ஒரு அடிக்கு ரூ. 1000 வீதம் பரிசு!!

 "மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அவரை அடிக்கும் பெண்களுக்கு ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்" என ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி. ஜி. வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆந்திரா கர்னூல் நகரில் நடந்த  விவசாயப் பெண்கள் கருத்தரங்கில், கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:- பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை, மது குடிக்கும் பழக்கமுள்ள, அவர்களின் கணவன்மார் வீணாகச் செலவிடுகின்றனர். கணவர்கள் மது அருந்துவதால் பெண்களின் வருமானம் எல்லாம் சாராயத்திற்குச் சென்று விடுகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை அவர்களது மனைவியர், இதுபோன்ற பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து மக்கள் மத்தியில் நிற்க வைத்து, அடிக்க வேண்டும்.

கணவரை அவமானப்படுத்தும் விதத்தில் இப்படி அடிக்கும் பெண் களுக்கு ஒரு அடிக்கு 1000 ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால் 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக அந்த இடத்தில் வழங்கப்படும். கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள் 10 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் அறிவித்தது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மதுஅருந்துபவர்களுக்கு அடி கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இன்றைய ஆட்சியாளர்கள் வாயிலிருந்து  தானாகவே வந்துவிட்டது. அது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.

இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனையை மது அருந்திய குடிகாரன் ஒருவனுக்கு வழங்கி, அந்த வீடியோப் பதிவைத் தொலைக்காட்சி சேனல்களில் ஒரே ஒருநாள் ஒளிபரப்பிக்காட்டட்டும்.

இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த தண்டனை முறைகளை அமுல்படுத்திவிட்டால், அதன் பிறகு குடிகாரர்களது  வாயில்  கொண்டு போய் மதுவை ஊற்றினால்கூட அதை அவர்கள் துப்பிவிட்டு ஓடும் நிலை ஏற்படும்.

டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு இஸ்லாம் சொல்லக்கூடிய இத்தகைய சட்டதிட்டங்களை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவார்களேயானால் நாட்டில் யாராவது மது அருந்துவார்களா?

இத்தகைய சட்டதிட்டங்களின் மூலம் மது அருந்துவதைக் குறித்து நினைத்துப்பார்க்கவே அச்சப்படும் நிலை உருவாகுமா, இல்லையா?

அதைவிட்டுவிட்டு இவர்களே மதுவை ஊற்றிக்கொடுத்து, மக்களை மாக்களாக ஆக்குகின்றார்கள் என்றால், இவர்களை என்னவென்பது?

 

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.

 

 

 அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 

 

 நூல்: இப்னு மாஜா 3371


March 14, 2013, 12:27 PM

திரும்பவும் வராதா என்று போலீஸார்

திரும்பவும் வராதா என்று போலீஸார் ஏங்கிய அந்த மூன்று நாட்கள்!

 

தலைப்பைக் கண்டவுடன் போலீஸார் என்ன ஏக்கம் கொண்டார்கள்? திரும்பவும் வராதா என்று எந்த மூன்று நாட்கள் குறித்து ஏங்கினார்கள்? அளவுக்கதிகமாக மாமூல் வசூல் செய்யப்பட்ட நாளா அவர்கள் ஏங்கும் நாள்? என்ற சந்தேகமெல்லாம் உங்களது உள்ளத்தில் எழலாம்.

போலீசாரின் ஏக்கம் உண்மையாகவே மதிப்பளிக்கக்கூடிய வகையிலான நியாயமான ஏக்கம்தான் என்பதை அதற்கான செய்தியைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம். போலீஸார் ஏங்கியதைப்போல ஒவ்வொரு தமிழக மக்களும் அந்த மூன்று நாட்களைப்போலவே வருடத்தின் மற்ற 365 நாட்களும் ஆகிவிடக்கூடாதா என்று ஏங்கக்கூடிய அளவுக்கு திரும்பவும் வராதா என்று போலீசார் ஏங்கிய அந்த நாட்கள் அமைந்துவிட்டன.

 

 

அதுகுறித்து தகவல்கள் இதோ :

கடந்த ஜனவரி மாதம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

ஜனவரி 25, 26, 27 (மீலாடி நபி, குடியரசு தினவிழா, வள்ளலார் தினம்) ஆகிய அரசு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வந்த காரணத்தால் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த மூன்று நாட்கள் மதுக்கடைகளை பூட்டியதன் விளைவாக எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளனவா என்று சிவகங்கை மாவட்ட காவல்துறை மூலம் புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டன.

மதுக்கடைகளை பூட்டியதன் காரணமாக அந்த மூன்று நாட்கள் குற்றச்செயல்கள் மிக மிகக் குறைவாகவே நடந்துள்ளன. இப்படி குற்றச்செயல்களே இல்லாத இதுபோன்ற மூன்று நாட்கள் திரும்பவும் வராதா என்று போலீசார் ஏங்கியுள்ளதாக அந்தப் புள்ளிவிபரங்கள் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகள் உங்கள் பார்வைக்கு!

மூன்று நாள் நிம்மதி மீண்டும் வருமா? - போலீசார் ஏக்கம்

காரைக்குடி: "டாஸ்மாக்' கடைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்திருந்தது. மீண்டும் அத்தருணம் வருமா எனப் போலீசார் ஏங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் 75 சதவீத விபத்துக்களுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. கடந்த ஜனவரி 25, 26, 27 தேதிகளில், முறையே மிலாடி நபி, குடியரசு தினம், வள்ளலார் தினம் என மூன்று நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டது. "டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன.

அந்த 3 நாட்களிலும் போலீஸ் ஸ்டேஷன்களில் குறைவான வழக்குகள் பதிவானது, போலீசாரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது, காரைக்குடி வடக்கு ஸ்டேஷனில் 138 மது பாட்டில்கள் பறிமுதல் , குன்றக்குடியில் 52 மது பாட்டில்கள் பறிமுதல், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வரதட்சணை வழக்குகள், தெற்குப் பிரிவில் ஒரு தற்கொலை வழக்கு, குன்றக்குடியில் ஒரே ஒரு டூவீலர் விபத்து வழக்கு ஆகியன மட்டுமே பதிவானது.

மதுவிலக்கு போலீசார் நடத்திய ரெய்டில், காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டையில், 427 மது பாட்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இதே போல், 108 ஆம்புலன்சில், தினமும் 2 கேஸ்கள் எடுத்து வருவர். கடந்த ஜனவரி மாதம் மதுபானக் கடைகளுக்கு விடப்பட்ட 3 நாள் விடுமுறையில், காரைக்குடி, சிவகங்கையில் தலா 2 கேஸ்கள் வந்தன. மானாமதுரை, திருப்புவனத்தில் எதுவுமில்லை. அந்த 3 நாட்களிலும்அடிதடிதிருட்டு சம்பவங்களும் குறைந்ததால், மீண்டும் இதுபோன்ற தருணம் வருமா என்ற ஏக்கத்தில், போலீசாரும், பொதுமக்களும் உள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகள் லீவு விட்டதால், வழக்குக்கு வேலை இல்லாமல் போனது. இதே நிலைமை தினமும் இருந்தால், குற்றங்கள் பாதியாகக் குறையும். மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இதற்கு அரசு முன் வர வேண்டும், என்றார்.

மேற்கண்ட புள்ளிவிபரங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட அந்த மூன்று நாட்களிலும் மற்ற மாவட்டங்களிலும், மற்ற ஊர்களிலும் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ஆய்வு செய்தால் அங்கும் இதுபோல குற்றச் செயல்கள் குறைந்து இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்படி போலீசார் அந்த மூன்று நாட்கள் வராதா என்று ஏங்கக்கூடிய நிலையில், பொதுமக்களும் அந்த மூன்று நாட்கள் திரும்பவும் வராதா என்று ஏங்கக்கூடியவர்களாக உள்ளார்கள் எனும்போது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகத் திகழும் இந்த மது தேவைதானா என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

நாட்டில் நடக்கக்கூடிய அடிதடி தகராறு, கொலைகள், கொள்ளைகள், வாகன விபத்துக்கள் போன்ற 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு மதுதான் காரணமாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலுமா?

அப்படி இருக்கும்போது இந்த மது விறபனை மூலம் கல்லாகட்டி மக்களது வாழ்விலும், வயிற்றிலும் அடிக்கும் இந்தப்பிழைப்பு தேவைதானா என்பதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் இவற்றையெல்லாம் அரசாங்கம் சிந்திப்பதுபோலத் தெரியவில்லை. மாறாக அந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட்டால் ஏற்படும் பலகோடி ரூபாய் இழப்புகளை எப்படி சரிக்கட்டுவது என்று ஆய்வு செய்து எப்படியாவது குடிமகன்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மூன்று நாட்கள் கடை விடுமுறை விடப்போகின்றோம். எனவே முன்கூட்டியே ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று இவர்கள் அறிவிப்பு ஓட்டியுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், இதற்கென்றே டாஸ்மாக் மேலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டி விற்பனையை அதிகரிப்பது எப்படி என்று ஆலோசனை செய்துள்ளனர்.

விற்பனை அதிகமில்லாத கடைகளில் உள்ள டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது, "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்

இதுபோன்று லீவு நாட்களில் குடிமகன்கள் வேறு எங்கும் சென்று குடித்துவிடக்கூடாது; அப்படி வேறு எங்காவது சென்று குடித்துவிட்டால் நமக்கு விற்பனை பாதிப்பு ஏற்படும் என்று கணக்குப்போட்ட அரசாங்கம், இதுபோன்ற விடுமுறை நாட்களில் ஹோட்டல்களில் உள்ள பார்களில் குடிக்கலாம் என்று ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த அனுமதிக்கும் ஆப்பு வைத்தது.

இந்த அளவிற்கு படுபிரயத்தனம் எடுத்து நாட்டு மக்களை குடிகாரர்களாக மாற்ற, சிறந்த குடிமகன்(?)களாக உருவாக்க அரசாங்கம் பாடுபடுகின்றதைப் பார்த்தால் நாடு எந்த நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளதோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது. இவ்வளவு கூத்துக்களையும் இவர்கள் அடிக்கக் காரணம் பணம்தான்.

அதாவது டாஸ்மாக் கடைகள் மூலம் ஈட்டப்பட்ட விற்பனை விபரத்தைப் பாருங்கள் :

  தமிழகத்தில் செயல்படும், 6,850 "டாஸ்மாக்' கடைகள் மூலம், மது விற்பனை நடக்கிறது. மது விற்பனையை அரசே ஏற்று நடத்தத் துவங்கிய, 2003-04 நிதியாண்டில், 3,500 கோடியாக இருந்த மது விற்பனை, 2011-12ம் நிதியாண்டில், 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், "டாஸ்மாக்' மூலம், 25 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில், 50 கோடி ரூபாய் வரையிலும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 75 கோடி ரூபாயும், விசேஷ தினங்களில், 90 கோடி ரூபாயைத் தாண்டியும், மது விற்பனை நடப்பது வழக்கமாக உள்ளது.

 2013 புத்தாண்டை முன்னிட்டு, “டாஸ்மாக்விற்பனை இலக்கு, 200 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 177 கோடிக்கு மட்டுமே விற்பனை நடந்தததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், பொங்கல் பண்டிகை விற்பனை இலக்கு, 400 கோடி ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக அதிரடியாகக் குறைப்பு செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப விற்பனை இலக்கை பூர்த்தி செய்யும் வகையில், கடைகளில், 15 நாள் விற்பனைக்கு, தேவையான சரக்குகள் குவிக்கப்பட்டன.

இந்நிலையில், பொங்கலுக்கு முதல் நாள், ஜன., 13ம் தேதி, அதிகாரிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 108 கோடி ரூபாய்க்கு, சரக்கு விற்பனை நடந்தது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை நாளில், 112 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்து உள்ளது. இரண்டே நாளில், 220 கோடி ரூபாய் வரை, சரக்கு விற்பனை நடந்துள்ளது. இதுவே முதல் முறை. இதனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கு பூர்த்தி ஆகிவிடும் என, அதிகாரிகள் நம்புகின்றனர். இது, அதிகாரிகளை நிம்மதிப் பெரு மூச்சு விடச் செய்துள்ளது.

மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டு மார்தட்டிக் கொள்கின்றனர். மதுக்கடைகள் மூலம் வரக்கூடிய வருமானம்தான் இவர்களது கண்களுக்குத் தெரிகின்றதே தவிர, மக்களுக்குத் தேவையான நிம்மதியை நாம் வழங்க வேண்டும்; சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் கிஞ்சிற்றும் இல்லை.

சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வராமல் பாதுகாப்பதுதான் சிறந்த ஆட்சி. அதைவிட்டுவிட்டு சட்டம் ஒழுங்கைக்