கருணாநிதியின் இரண்டாவதுஅறிக்கை எதை
சாதிக்பாட்ஷாகோவை
அவரது முதல் அறிக்கை முஸ்லிம்களும் கமலஹாசனும் கலந்துபேசி தீர்வு காணவேண்டும் என்று இருந்தது. அரசியல்வாதி என்ற முறையில் அனைவரின் ஓட்டுக்காக இப்படித்தான் அவரால் கூற முடியும்.
ஆனால் தடை செய்தது தவறு என்று சொன்ன இரண்டாவது அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் களமிறங்கிவிட்டதன் அப்பட்டமான வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. தடையை நீக்க வேண்டும் என்றால்,
முஸ்லிம்களின் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று பொருள்
இஸ்லாத்தை இழிவுபடுத்துவதை முஸ்லிம்கள் சகித்துக் கொள்ளவேண்டும் என்பதும் இதன் அர்த்தம்.
எல்லா முஸ்லிம்களும் ஒன்று திரண்டாலும், அனைவரையும் அந்தப்படம் பாதித்தாலும் அதைப்பற்றி ஒன்றும் எனக்குக் கவலை இல்லை. சினிமாக்காரர்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.
இவர் ஆட்சியில் இருந்திருந்தால் எந்தக்காட்சிகளையும் வெட்டாமல் அப்படியே வெளியிட அனுமதித்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பார் என்பதும் தெரிகிறது. இவரது இந்த துரோகச் செயலுக்கு முஸ்லிம்கள் தக்க சமயத்தில் பாடம் புகட்டுவார்கள்.
Published on: 06.02.2013. 04:07 Views: 547

