டி.என்.டி.ஜே அலுவலகம் திருச்சிக்கு
தலைமைக்கு சென்னையில் இடம் கிடைக்காத காரணத்தால் தலைமையகத்தை திருச்சிக்கு மாற்றப்போவதாக தகவல் வருகின்றது. இது உண்மையா?
முஹம்மது ஃபாரூக், பேட்மா நகரம்
பதில் :
சென்னையில்தான் இடம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாம் திரட்டியுள்ள நிதிநிலைக்கு ஏற்ப இடம் அமையாமல் உள்ளது. இடம் வாங்குவது தாமதமானால் நிதி அளித்தவர்களிடம் சந்தேகமும், கேள்விகளும் எழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் இடம் அமைந்தால் சென்னையில் இடம் வாங்குவது என்றும், அவ்வாறு அமையாத பட்சத்தில் திருச்சியில் நமக்கு சொந்தமாக உள்ள 24 கிரவுண்ட் இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய செயல் அலுவலகம் கட்ட அந்த நிதியைப் பயன்படுத்துவது என்றும் செயற்குழுவில் ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தாவாப்பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்வது என்றும், சென்னையில் வாடகை இடத்தில் அரசுத் தொடர்புகள், ஊடகத் தொடர்புகள் போன்றவற்றைச் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. நிதியைக் கையில் வைத்துக் கொண்டு இருப்பது ஜமாஅத்தின் நலனுக்கு உகந்தது அல்ல என்பதுதான் இதற்குக் காரணம்.
Published on: July 12, 2012, 5:54 PM Views: 567
