தீர்மானங்கள் என்று வாசிப்பதன் பயன்
மேடை போட்டு மக்களைக் கூட்டி போராட்டம் என்று நடத்தினாலே அரசு மற்றும் மற்ற இயக்க முஸ்லிம்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதை நாம் அறிவோம். பிறகு பொதுக்கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் என்று வாசிப்பதன் பயன் என்ன?
- ரபியுதீன், மங்கலம்பேட்டை
ஜனநாயக நாடுகளில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் நிலை இருப்பதால் போராட்டங்களாலும், தீர்மானங்களாலும் நிச்சயம் பயன் இருக்கத்தான் செய்யும். மக்களின் கோபமும் அதிருப்தியும் அரசின் கவனத்துக்கு வந்து அதனால் அதிகமான ஓட்டுக்களை இழக்கும் நிலை வரும் என்று தெரியும்போது நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Published on: 12.07.2012. 07:57 Views: 536
