அரசியல்வாதிகளின் கைக்கூலி யார்?
கலைஞர் அவர்கள் சமுதாயதிற்கு துரோகம் செய்த போது அவரை எதிர்த்து போராட்டம் செய்தீர்கள்; உங்களை ஜெயலலிதாவின் கைக்கூலி என்றார்கள். இன்று ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போது கலைஞரின் கைக்கூலி என்கிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
மு. அப்துல் மாலிக், திருத்துறைபூண்டி
பதில் :
எல்லா முஸ்லிம் இயக்கங்களும் ஒரு கட்சியில் கூட்டணி கண்ட பின் மறு தேர்தலில் பேரம் பேசும் வரை அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்காத குறையாக பெரிய கட்சிகளின் காலில் விழுந்து கிடக்கின்றன. திமுகவுடன் கூட்டு வைத்தால் ஐந்து ஆண்டுகளுக்கும் திமுகவை எதிர்த்து களம் காண மாட்டார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் எந்த ஒரு அணியையும் ஆதரிப்பதாக இருந்தாலும், சமுதாயத்தின் கோரிக்கையை முன்வைத்துத்தான் ஆதரிக்கிறது. அதன் பின்னர் அந்த அணி முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தால் உடனே போராட தவ்ஹீத் ஜமாஅத் தயங்கியதில்லை. மற்ற எந்த இயக்கத்துக்கு வேண்டுமானாலும் மேலே சொன்ன அந்த குற்றச்சாட்டு பொருந்தலாமே ஒழிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஒருபோதும் பொருந்தாது. இது விமர்சிப்பவர்களுக்கும் தெரியும். ஆனாலும் தங்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் வித்தியாசம் இல்லை என்று காட்டுவதற்காக சிலர் செய்யும் விஷமப்பிரச்சாரம்தான் இது. இதில் கடுகளவும் உண்மை இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.
Published on: July 12, 2012, 6:22 PM Views: 574
