இம்சை செய்யும் அஹிம்சைவாதிகள் (16:50)

இம்சை செய்யும் அஹிம்சைவாதிகள் 

நாங்கள் எல்லாம் புத்த மத சாமியார்களாக்கும்
; நாங்களெல்லாம் அஹிம்சைவாதிகளாக்கும் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த புத்த பிட்சுகளின் வெறிச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இலங்கையில் ஆட்டம் போட்டது போதாதென்று தற்போது பர்மாவில் இவர்கள் போடும் ஆட்டம் சொல்லி மாளாது. இவர்கள் கொலை செய்வதில் பெயர் போனவர்கள் என்று பார்த்தால், பாலியல் சேட்டைகளிலும் எங்களை மிஞ்ச ஆளில்லை என்று கூறி, கிறித்தவ பாதிரிமார்களை இந்த விஷயத்தில் மிஞ்சிக்காட்டுவோம் என்று இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம்.
68லும் அடங்காத ஆசை :
68 வயதுடைய புத்த பிட்சு ஒருவர் 10 வயது புத்த பிட்சுவை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாகொட - யட்டலமன்ன சுரம்யாராம விகாரையில் உள்ள 10 வயது சிறுவரான புத்த பிட்சு ஒருவர் கடுமையான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த இந்த சம்பவம்  குறித்து நாகொட காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
10 வயது சிறுவர் பிக்கு சுரம்யாராம, விகாரையில் உள்ள 68 வயது மூத்த பிக்குவால் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 68லும் ஆசை அடங்காத அந்த காமவெறி பிடித்த புத்த பிட்சு கைது செய்யப்பட்டு நாகொட போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.
இவர்கள் சிறுவயது குழந்தைகளை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே எங்களது மடத்தில் வந்து விட்டுவிடுங்கள் என்று ஆர்வமூட்டி அழைப்பதற்கு என்ன காரணம்  என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த இதே வேளையில் சமீபத்தில் சீனாவில் இரண்டு கொலை செய்த புத்த பிட்சுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது சீன நீதிமன்றம்.
  இரண்டு கொலைகளை செய்து விட்டு புத்த துறவியாக வாழ்ந்த வந்த நபருக்கு மரண தண்டனை அறிவிக்கப் பட்டுள்ளது.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ளது ஜியுஜியாங். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சியு சின்லியான்(வயது 39).
கடந்த 1994ஆம் ஆண்டு ரயில் நிலைய ஓய்வறையில் ஏற்பட்ட தகராறில் சின்லியான், கணவன்- மனைவியை கொலை செய்தார். அவர்களது இரண்டு வயது குழந்தையையும் தாக்கியதில் அந்த குழந்தை காயமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சின்லியான் மற்றும் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான சின்லியான், ஷிஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங் ஷா நகரில் உள்ள புத்தமடாலயத்தில் புத்த துறவியாக இருந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம்தான் இவர் இந்த மடாயலத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு கொலைகளைச் செய்த குற்றத்துக்காக இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்துள்ளது. இவர் மீது மற்ற குற்றவியல் புகார்கள் ஏதும் இல்லாத காரணத்தால், இரண்டு ஆண்டு கழித்து மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாங்கள் அஹிம்சைவாதிகள்; ஒரு புழு பூச்சிக்குக்கூட தீமை செய்ய நாங்கள் நினைக்க மாட்டோம் என்று கூறும் இந்தக் கொலைவெறி பிடித்தக் கூட்டம் புழு பூச்சிகளைத்தவிர மற்ற அனைவரையும் கொன்று குவிக்கலாம் என்று வெறி பிடித்து அலைகின்றது. அதனால்தான் குழந்தையையும் தாக்கி தனது கோர முகத்தை, கொடூர முகத்தை வெளிக்காட்டியுள்ளது இந்த காவிக்கூட்டம்.
சீனாவில் இவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது போல பர்மாவிலும் இவர்கள் அனைவரையும் தூக்கில் தொங்கவிட்டால், நாடு உருப்படும்.
தகவல் : காரைக்குடியிலிருந்து அபூஃபர் ஹானாஸ்

Published on: August 11, 2012, 12:41 AM Views: 544

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top