தினமலர் புறக்கணிப்பு தினத்தந்தி புற
தினமலர் புறக்கணிப்பு தினத்தந்தி புறக்கணிப்பாக போனது ஏன்
பொதுவாக மீடியாக்கள் அனைத்துமே முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றன. இதில் முன்னிலை வகித்த தினமலரை முன்னர் புறக்கணிக்க வேண்டும் என்றீர்கள். இதனால் முஸ்லிம்கள் தினத்தந்தியை வாங்க ஆரம்பித்தனர். தற்போது தினத்தந்தியும் அந்த வரிசையில் சேர்ந்து விட்டதால், அதற்கு எதிராக நாம் களமிறங்கி இருக்கிறோம். இப்படியே போனால் எந்த பத்திரிக்கையைத் தான் வாங்குவது என்ற கேள்வி பரவலாக எழுகிறது. இதற்கு உணர்வின் பதில் என்ன?
உ.முஹம்மது அபுதாஹிர், கம்பம்.
பதில் :
இது போன்ற கேள்விகளே பொருளற்றதாகும். மனிதர்களாகிய நாம் எல்லா விஷயங்களையும் இப்படித்தான் அணுகி வருகின்றோம். இப்படித்தான் அணுக முடியும்.
ஆம்! அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்பவே நாம் முடிவு எடுக்க முடியும். மனைவியோடு குடும்பம் நடத்துவது பற்றி நாம் ஒருவருக்கு ஆலோசனை கூறுவோம். அந்த மனைவியின் நடத்தை சரி இல்லை எனும் போது நீ அவளை விட்டு விலகு என்றும் கூறுவோம்.
இதை முரண்பாடு எனக் கூற முடியாது. சூழ்நிலை மாறினால் முடிவுகளும் மாறத்தான் செய்யும்.
பல வருடங்களாக ஒருவரை நண்பராக அல்லது எதிரியாக நாம் கருதுவோம். ஆனால் காலப்போக்கில் எதிரியாக இருந்தவன் நண்பனாகவும், நண்பனாக இருந்தவன் எதிரியாகவும் மாறி விடுவான். இதை குறை கூற முடியாது.
அதற்கேற்ப சூழ்நிலை அமைந்தால் முடிவை மாற்றித்தான் ஆக வேண்டும். ஒரு காலத்தில் திமுகவை ஆதரித்ததால் காலமெல்லாம் அதையே ஆதரித்துக் கொண்டு இருக்க முடியாது. அதை வெறுத்து அதிமுகவையும் பின்னர் அதிமுகவை வெறுத்து திமுகவையும் ஆதரிக்கும் நிலைமை ஏற்படத்தான் செய்யும்.
தினமலர் நமக்கு எதிராக எழுதினால் தினமலரை புறக்கணிக்கச் சொல்லி விட்டதால் அதை விட மோசமாக எழுத தினத்தந்திக்கு நாம் அனுமதி அளித்து விட்டோம் என்பது பொருளல்ல. யாருக்கும் நாம் நிரந்தர வாசகர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
ஆனால் தினமலர் நமது செய்திகளை இருட்டடிப்பு செய்து துரோகம் செய்து வந்தது. ஆனால் தினத்தந்தியோ, “இந்துக்களே! முஸ்லிம்களுக்கு எதிராக அணி திரளுங்கள்” என்று எழுதி முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட களம் இறங்கி விட்டது. இது தினமலர் செய்யாத வேலையாகும்.
எனவே தினமலரை வாங்கினாலும் பரவாயில்லை. தினத்தந்தி ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். இதற்கு நாம் கொடுக்கும் தக்க பதிலடி இனி ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்ய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
உண்ரவு 16:41
Published on: 11.06.2012. 08:53 Views: 538

