முஸ்லிம்களின் கோபத்தை கொப்பளித்து எரிமலையாய் வெடித்த திநகர் பொதுக்கூட்டம்!

முஸ்லிம்களின் கோபத்தை கொப்பளித்து எரிமலையாய் வெடித்த திநகர் பொதுக்கூட்டம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தாமாக முன்வந்து சரணடைந்த யாகூப் மேமன் அவர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்தது மத்திய அரசு. முஸ்லிம்கள் மட்டுமே இந்த நாட்டில் தூக்குக்கு உரியவர்களாக பலிவாங்கப் படுபவர்களாக ஆக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் சமுதாயமாக இந்த சமுதாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதைக் கண்டித்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை  நடத்த தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாஅத்தின் தென் சென்னை மாவட்டம் முடிவெடுத்த்து.
பிறமத சகோதரர்களிடத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்திற்கு நியாயம் கேட்கும் வகையில் பிறமத சகோதரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை தி நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்டத்தை தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
7மணிக்கு துவங்குவதாக அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் 6மணி முதலே குழுமத்துவங்கிவிட்டனர். நிகழ்ச்சியை தென்சென்னை மாவட்டத் தலைவர் காதர் அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

துவக்கமாக மாநிலத் தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள், “ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?” என்ற தலைப்பில் உரை  நிகழ்த்தினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஏகத்துவ எழுச்சியை பறைசாற்றி இணைவைப்பு என்னும் மாபாதகச் செயலை தரைமட்டமாக்கி தமிழகத்தில் இணைவைப்பை வேரோடு அழிப்பதுதான் இந்த மா நாட்டின் முழு குறிக்கோள் என்பதை அவர் முழங்கிய போது தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளந்தது. 

அடுத்ததாக சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள், “இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

யாகூப் மேமனை அநியாயமான முறையில் தூக்கிலிட்டுக் கொன்றதை கண்டிக்கும் முகமாக இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்த சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகின்றார்கள். மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது மருந்துக்குக்கூட இல்லை என்பதை பல்வேறு விதமான வரலாற்று நிகழ்வுகளை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் கூறி சகோதரர் பீஜே அவர்கள் விளக்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

உரையின் துவக்கமாக மதச்சார்பற்ற நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்னாள் அமெரிக்க அதினர் கென்னடி கூறிய செய்திகளை மேற்கோள்காட்டி பீஜே பேசினார். அதாவது கிறித்தவ மத்த்திலுள்ள  ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த கென்னடி அவர்கள் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒரு பிரகடனத்தைச் செய்தார். ரோமன் கத்தோலிக்கப் பிரிவினரின் தலைமையிடமாக உள்ள வாடிகனுக்குச் சென்று தான் ஒவ்வொரு முறையும் அங்குள்ள மதத்தலைவரான போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், ஆனால் தற்போது நான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ளதால் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும் நான் அதிபராக ஆகியுள்ளதால் இனிமேல் போப் ஆண்டவரிடத்தில் ஆசி வாங்க செல்லமாட்டேன் என்று அறிவிப்புச் செய்தார். மதச்சார்பற்ற நாட்டில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் இப்படி ஒருசார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும் மதச்சார்பற்ற இந்தியா என்று சொல்லப்படும் நம் நாட்டில் நடக்கும்  அநியாயங்களை பட்டியலிட்டார்.

மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் கடவுள் சிலைகளையும், கோவில்களையும் வைத்து வழிபாடு நடத்துவது மதச்சார்பின்ன்மையா?
 
தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சின்னத்தை வைத்திருப்பது மதச்சார்பின்ன்மையா?
 
பொங்கல் இனாம் கொடுக்கும் அரசாங்கம், ரமலான் பரிசு வழங்காமல் பாரபட்சம் காட்டுவது சரியா?
 
பெருநாள் அன்று மின்சாரத்தை தடை செய்து முஸ்லிம்களுக்கு வேதனையை பரிசாக கொடுப்பதுதான் மதச்சார்பற்ற அரசா?
 
பள்ளிவாசல் கட்ட இந்து முன்னணியினர் ஆட்சேபனை செய்தால் தடை போடுவதுதான் மதச்சார்பற்ற அரசின் லட்சணமா?
 
இராமாயணத்தை ஒளிபரப்பிவிட்டு, திப்பு சுல்தானின் வீர வரலாற்றை ஒளிபரப்பும் போது இது கற்பனை கதை என்று மத்திய அரசு அறிவித்த்தே
இதுதான் மதச்சார்பற்ற தன்மையா?
 
இந்தியாவிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகள் வாங்கும் சம்பளத்திலும், உண்ணும் உணவிலும் 20 சதவீத முஸ்லிம்களின் வரிப்பணம் இருக்கிறது.
அந்த நன்றி உணர்வு எந்த அதிகாரிக்காவது இருக்கிறதா ?
 
நீதி தேவதை கண்ணைக் கட்டியிருப்பது போல காட்டிவிட்டு முஸ்லிம் என்றால் மட்டும் மத துவேஷத்தோடு தீர்ப்பளிப்பதுதான் மதச்சார்பற்ற தன்மையா?
 
தாடி வைப்பது தாலிஃபானிசம்;
தாடி வைக்க அனுமதி கேட்பது பாகிஸ்தானிசம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்களே! அப்படியானால் தாடி வைத்திருக்கும் மோடிக்கு அதை சிரைத்து விடுவீர்களா? என்று பலகேள்விகளை எழுப்பினார்.
 
குர்பானி கொடுக்க தடை போட்டு மத துவேஷத்தை தங்களது தீர்ப்பில் காட்டியது, பகவத் கீதையை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்த்து என்று சராமாரியாக தீர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட கட்டப்ப ஞ்சாயத்துக்களை பீஜே விலாசினார். சட்டத்தை மதிக்காமல் வழங்கப்படும் இத்தகைய தீர்ப்புக்கள் எங்களது கால் செருப்புக்குச் சமானம் என்று தெரிவித்தார்.
 
குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சங்க்பரிவாரக் கும்பல்களில் ஒருவருக்காவது தூக்கு தண்டனை கொடுத்தீர்களா?
 
97 பேரை கொன்று குவித்த பாபு பஜ்ரங்கிக்கு தூக்கு வழங்காத்து ஏன்?
 
சரணடைந்த யாகூப் மேமனை தூக்கிவிட்டு மதவெறியை நிலை நாட்டியது
 
சப்ரஜித் சிங் என்ற அயோக்கியன் பாகிஸ்தானில் குண்டு வைத்த வழக்கில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அவனை அங்குள்ளவர்கள் அடித்தே கொன்று சாகடித்தனர். அவனுக்கு 1கோடி உதவித்தொகை, அந்த தீவிரவாதிக்கு தேசிய கொடி போர்த்தி ராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம், என்று கவனித்தது ஏன்?


 தீவிரவாதி சப்ரஜித் சிங்க்

தேசியக்கொடி போர்த்தி கொண்டு செல்லப்படும் தேசத்துரோகியின் உடல்

துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்ட தேசத்துரோகி

இதுதான் தேசப்பற்றா? தேசப்பற்றை வெளிக்காட்டும் லட்சணமா?

அப்சல் குருவை அநியாயமாக தூக்கிலிட்டு கொலை செய்தது ஏன்?
உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினார்.
 
இந்த அநியாயத்திற்கெல்லாம் படைத்த இறைவனிடம் முறையிடுங்கள்
அவன் நமக்கு தீர்ப்பு வழங்குவான்
இந்த அநியாயக்காரர்களுக்கு இங்கும் மறுமையில் அல்லாஹ் இழிவை வழங்குவான் என்று ஆக்ரோசமான முறையில் பேசி முடித்தார்.
முஸ்லிம்களின் கோபத்தை கொபளிப்பதாகவும், ரணமாக வேதனை பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும், இஸ்லாமியர்களிடத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பறைசாற்றும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டைப் போல மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது.


 
அல்ஹம்துலில்லாஹ் 

August 16, 2015, 8:08 PM

டிஎன்டிஜே தலைமையகம் வந்து இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

கிறித்தவ பாதிரியாரை கவர்ந்த இஸ்லாம்:

- டிஎன்டிஜே தலைமையகம் வந்து இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

கடந்த 02.08.15 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது. மறுமுனையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், “தான் ஒரு பாதிரியார் என்றும், தனது பெயர் மாரிஸ் பவுல் என்றும், தான் சமீபத்தில் தான் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை படித்ததாகவும், அதில் ஏராளமான சந்தேகங்கள் தனக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து தங்களை நேரில் சந்தித்து பல கேள்விகளை கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றார்.

பாண்டிச்சேரி மற்றும் அதனது சுற்றுப்புறங்களில் உள்ள குக்கிராமங்கள் தோறும் தான் கிறித்தவ மதபிரச்சாரம் செய்து வருவதாகவும், இவ்வாறு கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்யும் பணியில் தன்னை கடந்த 24ஆண்டுகளாக ஈடுபடுத்தி வருவதாகவும் கூடுதல் விபரங்களை தெரிவிக்கின்றார்.

வரக்கூடிய 05.08.15 அன்று புதன் கிழமை தாங்கள் எங்களது மாநிலத்தலைமையகத்திற்கு வந்தால் உங்களுக்கான அனைத்து விளக்கங்களையும் தரத்தயாராக இருப்பதாக அவருக்கு பதிலளிக்கப்பட்டது. சொல்லி வைத்தாற்போல குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் மாநிலத்தலைமையகத்திற்கு நேரில் வந்தார் பாதிரியார் மாரிஸ் பவுல்.

பாதிரியார் அவர்களை நேரில் வரவேற்ற சகோதரர் சையது இப்ராஹீம் மற்றும் மாநிலச் செயலாளர் இ.ஃபாரூக் ஆகியோர் அவரிடத்தில் கலந்துரையாட ஆரம்பித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் தனக்கு  சகோதரர் பீஜே அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை முஹம்மது உசேன் என்ற ஒரு சகோதரர் அன்பளிப்பாக வழங்கியதாகவும், அதைப்படிக்க ஆரம்பித்த தான் அதனை கீழேயே வைக்க மனம் வராத அளவிற்கு மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த திருக்குர்ஆனின் மொழி பெயர்ப்பையும் படித்து முடித்துவிட்டதாகவும் கூறினார்.

அதிலே சொல்லப்பட்டுள்ள விளக்கங்கள் வாயிலாக திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதை தான் விளங்கிக் கொண்டதாகவும், ஒரு சாதாரண மனிதன் பேசுவதுபோல திருக்குர்ஆன் பேசவில்லை என்றும், இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகளை முஹம்மது என்ற படிக்காத மனிதர் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லியிருப்பதும், அதிலே சொல்லப்பட்டுள்ள விஞ்ஞான கருத்துக்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையாகியிருப்பதும் தன்னை ஈர்த்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய இதுதான் பைபிள்,இயேசு இறை மகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை” ஆகிய நூல்களையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினர். அதையும் முழுவதுமாக தான் படித்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் திருக்குர்ஆனை தான் வாசித்த போது தனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் என்று 70க்கும் மேற்பட்ட கேள்விகளை 4 பக்கங்களுக்கு எழுதி வைத்திருந்தார். அதிலிருந்து ஒவ்வொரு கேள்விகளாக நம்மிடம் கேட்டார்.

 • ஸஃபாவும், மர்வாவும் இறைவனின் சின்னங்கள். அவற்றை சுற்றுவது உங்கள் மீது குற்றமில்லை என்று அல்பகரா அத்தியாயத்தில் வரும் வசனங்களை மேற்கோள்காட்டி மூட நம்பிக்கையை ஒழிக்க வந்த மார்க்கத்தில் இங்கேயும் அரசமரத்தை சுற்றுவதைப் போலவும், கிரி வலம் வருவதைப் போலவும் சுற்றச் சொல்வது சரியா?
 • இறைவன் சொர்க்கத்தில் நமக்கு பரிசாக பெண்களையும், மதுவையும் வழங்குவதாக சொல்லியிருப்பது சரியா?
 • ஜின்கள் என்ற படைப்பை இறைவன் நரகத்திற்காக படைத்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளதே! அப்படியானால் அதில் உள்ள நல்ல ஜின்களுக்கும் நரகம் தானா? இது நீதியா?
 • எவருடைய எடை கனக்கின்றதோ அவருக்கு வெற்றி என்றும், எவருடைய எடை குறைந்து விடுகின்றதோ அவருக்கு தோல்வி என்றும் இறைவன் கூறியிருக்கின்றான். அப்படியானால் மறுமையில் நமது உடல் எடை கூடுவதற்கும், நாம் வெற்றி பெறுவதற்கும் என்ன சம்பந்தம்? நமது உடல் எடை எப்படி அங்கே கூடுதலாக ஆகும். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
 • சஜ்தா, இஃதிகாப், ருகூஉ என்றால் என்ன?
 • மகாமே இப்ராஹீமை தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இறைவன் கட்டளையிடுவதாக வரும் வசனத்தின் பொருள் என்ன? அந்த இடத்தை ஏன் தொழுமிடமாக ஆக்க வேண்டும்?
 • இறைவனை அவன், இவன் என்று சொல்லலாமா?

உள்ளிட்ட தனக்கு எழுந்த இன்னும் பல கேள்விகளை கேட்டார். அவருக்கு அழகிய முறையில் குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் வாயிலாக பதிலளிக்கப்பட்டது.

மேலும் திருக்குர்ஆன் மற்றும் பைபிள் இரண்டையும் படித்ததன் வாயிலாக தனக்கு மிகப்பெரிய தெளிவு கிடைத்துள்ளதாகவும், இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை தான் சரியானது என்பதையும் தான் விளங்கிக் கொண்டதாகவும், பைபிளில் சொல்லப்பட்டுள்ள முக்கடவுள் கொள்கை பொய் என்பதையும், இயேசு நமக்காக தனது உயிரை ஒப்புக் கொடுத்தார் என்று சொல்வது பொய் என்பதையும் தான் விளங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார். ஏனெனில் பைபிளை படிக்கும் போதே அதில் வணக்கத்திற்கு உரிய தேவன் கர்த்தர் ஒருவரே என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்; மேலும் இயேசு நமக்காக தாமாக முன் வந்து தன்னை பலிகொடுத்தார் என்று சொல்லப்படுவதற்கு மாற்றமாக இயேசு தன்னை கொல்லப்போகின்றார்கள் என்று அறிந்ததும் ஓடி ஒழிந்த செய்திகளும், அதை நினைத்து இயேசு கதறி அழுத செய்திகளும் பைபிளில் உள்ளது. அவற்றை படிக்கும் போதே எனக்கு மிகுந்த சந்தேகம் எழுந்தது என்றும், இதுபோன்ற கட்டுக்கதைகள் தான் எனது உள்ளத்தில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது என்றும் நம்மிடம் தெரிவித்தார்.

இவ்வளவு விளக்கங்களையும் அறிந்து கொண்டீர்கள். நீங்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே! என்று நாம் கேட்டதுதான் தாமதம்; உடனடியாக தான் இஸ்லாத்தில் இணைய விரும்புவதாக தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அவருக்கு மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சையது இப்ராஹீம் அவர்கள் கலிமா சொல்லிக்க தன்னை இஸ்லாத்தில் இணைத்து முஸ்லிமாக பிரகடனப்படுத்திக் கொண்டார் மாரிஸ் பவுல் என்ற பாதிரியார். நீங்கள் பாதிரியாராக இருந்து தற்போது இஸ்லாத்தில் இணைந்துள்ளீர்கள். இதற்கு கிறித்தவ மதத்தினர் மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களே! அப்படி உங்களை எதிர்ப்பவர்களை எப்படி சமாளிக்கப்போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினோம்.

என்னை யாரெல்லாம் எதிர்க்கின்றார்களோ அவர்களிடம் இந்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கி இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்பேன் என நம்மிடம் பதில் அளித்தார். நீங்கள் இன்னும் தெளிவான முறையில் இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு சிறந்த பிரச்சாரகராக வர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று நாம் கூறினோம். இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் விதத்தில் டிவிடிக்கள், புத்தகங்கள் அனைத்தையும் பெற்றுச் செல்லுங்கள் என்று அவருக்கு வழிகாட்டப்பட்டது. உங்களுக்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சொந்தங்கள் உங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள்; அனைத்துக்கும் மேல படைத்த இறைவன் உங்களுக்கு பக்க பலமாக இருப்பான் என்று அவரிடம் சொல்லப்பட்டது.

கலந்துரையாடலை துவக்குவதற்கு முன்பாக நமது இந்த கலந்துரையாடலை வீடியோ பதிவு செய்து கொள்ளலாமா என்று அவரிடம் இ.ஃபாரூக் அவர்கள் கேட்க அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

August 16, 2015, 7:36 PM

நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:

நான் யார்? நான் யார்? அப்துல் கலாம் விளக்கம்:

(அப்துல் கலாம் குறித்தும், அவரது உண்மை நிலை குறித்தும் கடந்த காலங்களில் உணர்வு இதழில் எழுதப்பட்ட செய்திகளை காலத்தின் கட்டாயம் கருதி இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.)

தான் பயின்ற திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்கு வருகை புரிந்தார் ஜனாதிபதி வேட்பாளர் அப்துல் கலாம். கல்லூரியைச் சுற்றிப் பார்த்து தனது மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்தார் கலாம்.

1950-54 ஆண்டுகளில் அப்துல் கலாமுடன் பயின்ற ஒரு முஸ்லிம் நண்பர், அப்துல் கலாமைச் சந்தித்து “அந்தக் காலத்தில் புனித ஜோசப் கல்லூரியில் படித்த இரண்டே முஸ்லிம்கள் நாம்தான்” என்பதை நினைவுபடுத்தினார். உடனே இடைமறித்த அப்துல் கலாம், தயவு செய்து என்னை முஸ்லிம் என்று கூறாதீர்கள், இந்தியன் என்று கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக கலாம் அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியின் முடிவில் தமிழகத்து செய்தியாளர்கள், நீங்கள் தமிழ்நாட்டுக்காரர் தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியை தமிழில் கூறுங்கள் எனக் கேட்டனர். அப்போது உடனிருந்த பிரமோத் மகாஜன், ஒரு பிராந்திய மொழியில் பேட்டித் தரக்கூடாது என்று அப்துல் கலாமைத் தடுத்தார். பிரமோத் மகாஜனின் உத்தரவுக்குப் பணிந்த அப்துல் கலாம் தமிழில் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்.

அப்துல் கலாமை முஸ்லிமாகவும், தமிழராகவும் தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

(ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறொம்)

அப்துல் கலாமின் அவமானப் பயணம்:

பதவியேற்றதும் முதல் சுற்றுப்பயணமாக குஜராத்துக்குப் போவதாக அப்துல் கலாம் முடிவெடுத்தவுடன் திடீரென ஆசாமி திருந்தி விட்டாரோ என பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்துல் கலாமின் குஜராத் பயணம் மணப்புண்ணுக்கு மருந்து போடுவதற்குப் பதிலாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தது.

ஷா ஆலம் முகாம் உள்ளிட்ட பல அகதி முகாம்களில் இந்திய முஸ்லிம்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட சோகம் நிலை கொண்டுள்ளது. அரசாங்கமே நடத்திய அராஜகத்தால் வாழ்விழந்த முஸ்லிம்கள் ஆறாத் துயரோடு அங்கே தங்கியுள்ளனர். அகதிகளான பின்னரும் பாஜக அரசு அவர்களை இயன்றவரை இம்சித்து வருகிறது.

குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருக்கும் அப்துல் கலாம் அம்மக்களைச் சந்தித்திருந்தால் அவர்களுக்கு அது ஓர் ஆதரவாக இருந்திருக்கும். ஆனால் முஸ்லிம்கள் அதிக அளவில் தங்கியுள்ள அகதி முகாம்களை அப்துல் கலாம் முற்றிலும் தவிர்த்துள்ளார். அம்மக்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணமாக இருந்த பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தன்னோடே அழைத்துச் சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளை நேரில் சென்று பார்த்தார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு குஜராத் அரசு உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து மாடி வீடுகளைக் கட்டிக் கொடுத்ததையறிந்து அப்துல் கலாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தனது வழக்கமான சிறுபிள்ளைத் தனங்களை அரங்கேற்றிட குழந்தைகளை அழைத்து கேள்விகள் கேட்டார். அதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை அவர் சந்தித்து தனது மதச்சார்பின்மையை(?) சிதைக்கவில்லை.

நரேந்திர மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப, தனது பார்வையிடல் பயணத்தை அமைத்துக் கொண்டார் அப்துல் கலாம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் மறந்தும் விசாரிக்கவில்லை. மருந்துக்குக் கூட ஆறுதல் வார்த்தைகளைக் கூறவில்லை. பூகம்ப சேத இடங்களைப் பார்வையிட்டு தனது காருண்ய குணத்தை வெளிக்காட்டினார் கலாம்.

நேரு காலத்தில் கும்பமேளாவில் மக்கள் நசுங்கி உயிர்விட்ட இடம், கும்பகோணத்தில் மகாமக நெரிசல் சாவுகள், இன்னும் இருபது முப்பது வருடங்களுக்கு முன் நடந்த எத்தனையோ இழப்புகள் உள்ளன. அவற்றையும் அப்துல் கலாம் பார்வையிட்டு தனது கருணையைக் காட்டட்டும். குஜராத்தில் இப்போது நடந்துள்ள கொடுமைகளை இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பின்னால் ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் பார்த்துக் கொள்வார்.

இந்தக் கூத்துக்களை கண்ட ஒட்டுமொத்த உலகமும் உமிழ்கிறது.

(ஆகஸ்ட் 23 - 29, 2002 தேதியிட்ட உணர்வில் நாம் எழுதியது. அப்துல் கலாமின் மரணத்தினால் இதை மறக்க மாட்டோம்)

கலாமின் குஜாராத் பயணம் ஒரு கண்துடைப்பு :

அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக நியமித்துவிட்டால் குஜராத்தில் தாங்கள் நடத்திய மனிதப் படுகொலைகளை உலக நாடுகளின் சிந்தனையிலிருந்து திசை திருப்பிவிடலாம் எனக் கனவு கண்ட பி.ஜே.பி உள்ளிட்ட சங்பரிவார சக்திகள், மீண்டும் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்துல் கலாமை குஜராத்திற்குச் செல்ல வைத்து தங்கள் கபட நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர்.

குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய முகாமான ஷா ஆலம் முகாம், மற்றும் ஜுஹாபுராவில் உள்ள சங்கவித் நகர் முகாம் ஆகியவை அப்துல் கலாமின் பயணத் திட்டத்தில் இடம்பெறவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தெரிவித்துள்ளது.

இதற்கு மாறாக வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட கலூபூரில் உள்ள ஹஜ் இல்லம் மற்றும் ஜூஹாபுராவில் உள்ள விதவைகள் இல்லம் ஆகியவை அப்துல்கலாம் பார்வையிடும் இடங்களில் உள்ளவையாகும்.

86 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாடியாவிற்குச் செல்லும் கலாம் முன்னாள் எம்.பி. எஹ்ஸான் ஜாப்ரீ உள்ளிட்ட 39 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சமன்புராவிற்குச் செல்லவில்லை.

பிரதமர் வாஜ்பேய் மற்றும் தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ உள்ளிட்டவர்கள் சென்ற மிகப்பெரும் நிவாரண முகாமான ஷா ஆலம் முகாமிற்கு கலாம் செல்லாதது பெரும் விந்தையாக உள்ளது.

செய்தி ஊடகங்களுக்குக் கூட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் இல்லம் மற்றும் விதவைகள் இல்லம் ஆகியவற்றிற்கு கலாம் செல்லும்போது பத்திரிக்கையாளர்கள் உடன்வர மாநில அரசு தடைவிதித்துள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் லிங்டோ வந்தபோது செய்தி ஊடகங்களில் மாநில அரசுக்கெதிராக மிகப்பெரும் விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு எரிச்சலடைந்துள்ள அதிகாரிகள், அப்துல் கலாமின் வருகையின்போது செய்தியாளர்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.

மொத்தத்தில் அப்துல் கலாமின் குஜராத் பயணம் பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் காயங்களை போக்குவதாக இல்லை. மாறாக முக்கிய நிவாரண முகாம்களைப் பார்வையிடச் செல்லாத அவரது போக்கு அவர் சங்பரிவாரின் கைப்பாவைதான் என்பதை சந்தேகமின்றி நிரூபித்துள்ளது.

(ஆகஸ்ட் 16 - 22, 2002 தேதியில் நாம் எழுதியதை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்)

பா.ஜ.க. கொள்கையைப் பிரதிபலிக்கும் கலாம்:
பா.ஜ.க. கொள்கைகளுக்கு ஒத்து ஊதும் ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது என்பதை அப்துல் கலாம் நிரூபித்து விட்டார். தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று அத்வானியும், அவருடைய ஆர்.எஸ்.எஸ். பரிவாரமும் பல தடவை கூறி வந்துள்ளது. அந்த கீறல் விழுந்த பழைய ரெக்கார்டின் பல்லவியை இப்போது கலாமும் பாடியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டால் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள் முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து எளிதாக எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்து விட்ட பிறகு மீண்டும் இந்தியர்கள் பட்டியலில் இணைவதற்கு ஏராளமான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டிவரும். அரசாங்கம் கேட்கும் அவ்வளவு ஆவணங்களும் எல்லோரிடமும் இருக்காது.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடும் மாற வேண்டிவரும். அதனால் பழைய விலாசம் இடம் பெற்றுள்ள ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்றும் கூட அதிகாரிகள் நிராகரிக்கலாம். ரேஷன் கார்டு பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் வாக்காளர் அடையாள அட்டை பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ஆகிய அனைத்திலும் எழுத்துப் பிழையில்லாமல் யாருடைய பெயரும் சரியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அரசு ஆவணங்களில் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் கவனக்குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதும் சாதாரண விஷயமாகும்.

எனவே இதிலுள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் வீம்புக்காக அலைய விடலாம். இப்படி சட்டரீதியாக முஸ்லிம்களை அலைக்கழிப்பதற்கு அத்வானி கூறும் தேசிய அடையாள அட்டை சரியான காரணமாக அமையும். குஜராத், காஷ்மீர், ராஜஸ்தான், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் வாழும் ஏராளமான முஸ்லிம்களை வந்தேரிகள் என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது.

தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டால் இம்மாநிலங்களில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களை இந்தியர்கள் பட்டியலில் இருந்து மத்திய பாஜக அரசு எளிதாக அகற்றிவிடும். மற்ற சமுதாய மக்களை விட முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றனர். ஆகவே தேசிய அடையாள அட்டை பற்றிய குறைகளைச் சொல்வதற்கு யாரை அணுக வேண்டும்? எத்தகைய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்? உரிமைகள் பறிக்கப்படும் போது எப்படி சட்ட ரீதியாகப் போராட வேண்டும் என்ற வழிமுறைகள் தெரிய வாய்ப்பில்லை.

முஸ்லிம்களில் உள்ள பெரும்பான்மையினரின் நிலை இந்த வகையில்தான் உள்ளது. எனவே தேசிய அடையாள அட்டை என்ற யோசனை முஸ்லிம்களை நசுக்கவும் மனரீதியாக அவர்களைத் துன்புறுத்தவும் அரசுத் திட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்காகவும் தான் பா.ஜ.க. மற்றும் சங்பரிவார அமைப்பால் முன்மொழியப்படுகிறது. இதைத் தவிர இந்த அடையாள அட்டையால் வேறு எந்த வெங்காயமும் விளையப் போவதில்லை.

இந்த யோசனையை பா.ஜ.க. வைத் தவிர இந்தியாவில் உள்ள எந்தக் கட்சிகளும் தெரிவிக்கவில்லை. ஏற்கவில்லை. ஆனால் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கப் போகும் அப்துல் கலாம். இப்படிப்பட்ட தேசிய அடையாள அட்டை தேவை என்று டெல்லியில்  ஜூன் 25ஆம் தேதியன்று நடந்த தொழில்நுட்ப பாதுகாப்புக் கருத்தரங்கில் பேசியுள்ளார். தேசிய  அடையாள அட்டை ஒருமைப்பாடு அணுகுமுறைக்கு மிகவும் அவசியம் எனவும், அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.

நாட்டு மக்களையும், சொந்த மண்ணையும் நேசிப்பவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் அப்துல் கலாம் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் சொந்த நாட்டு மக்களை அகதி முகாம்களில் தங்க வைத்துள்ளவர்கள் ஆட்சியில் இதுபோல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒரு சதவீத அளவுக்குக்கூட இருக்க முடியாது என்பதுதான் உண்மை. பாஜக ஆட்சியில் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட்டால் அதனால் இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சிதையுமே ஒழிய உறுதிப்படாது. 

இதை அப்துல் கலாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் உள்ளவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறும் கம்யூனிஸ்டுகளின் கருத்துக்கு அப்துல் கலம் வலு சேர்த்து விடுவார் போல் தெரிகிறது.

(ஜூலை 05 - 11,2002 தேதியிட்ட உணர்வில் எழுதியமேற்கண்ட செய்தியை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்)

கலாம் என்ற முஸ்லிம்?:

இந்தியாவுடைய அடுத்த ஜனாதிபதி ஆகப்போகின்ற அப்துல் கலாம் எல்லா வகையிலும் உலக அளவில் இந்தியாவிற்குப் புகழ் வாங்கிக் கொடுத்த விஞ்ஞானி என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரை ஏவுகணை மனிதன் என்பதில் எல்லா இந்தியர்களும் பெருமை அடைகிறோம்.

அப்துல் கலாம் அவர்கள் முஸ்லிமாகப் பிறந்ததினாலோ, முஸ்லிமாக வளர்ந்ததினாலோ முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதிகளான டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹமது இவர்களுக்கு சமமாகமாட்டார்.

கலாமைப் போலவே அவர்கள் இருவரும் மிகுந்த தேசப்பற்று உள்ளவர்களாகவும், இந்தியாவுடைய பெருமைகளை கட்டிக் காப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் சொல்லிலும், செயலிலும் பெயரிலும் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்கள் திருக்குர் ஆன் வழி நடப்பவர்களாகவும், முஹம்மது நபி அவர்கள் காட்டிய வழியையே பின்பற்றுபவர்களாகவும் இருந்தார்கள்.

நாட்டுடைய வளர்ச்சியில் எப்படி அக்கறை கொண்டு இருந்தார்களோ அது போலவே தமது சமுதாயத்தின் மீதும் அக்கறை கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் மகாத்மா காந்திக்கு பிரியப்பட்ட உத்தமர்களாகவும் இந்தியாவுடைய சுதந்திர தியாகிகளாகவும் இருந்தார்கள்.

முஹம்மதலி ஜின்னாவின் பிரிவினை வாதத்தை எதிர்த்து அவர்கள் அபுல் கலாம் ஆசாத்தோடு கைகோர்த்து நின்றார்கள். இந்தியாவுடைய பண்பாட்டிலும், ஒருமைப்பாடிலும் ஒத்துப்போகக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.

டாக்டர் ஜாகிர் உசேன் ஜாமியா மில்லியா இஸ்லாமிய ஸ்தாபனத்திலும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் உப தலைவராக இருந்தார். பக்ருத்தீன் அலி அஹமது அஸ்ஸாமிலும் மற்றும் சில மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் அறக்கட்டளைகளிலும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அப்துல் கலாமோ முஸ்லிம்களை விட்டும் எப்போதும் விலகி நிற்கவே முயற்சித்தர் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன். மேலும் அவர்களோடு பழகுவதையும் தவிர்த்தார். முஸ்லிம் சமுதாய விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார். 

மும்பையில் ஆல் இந்தியா கிலாபத் கமிட்டி வருடந்தோறும் நடத்தும் பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய மீலாது நபி தின பொதுக்கூட்டத்திற்கு இந்தக் கமிட்டியுடைய சேர்மன் என்ற முறையில் நான் அவர்களை நேரில் சென்று அழைத்தும் வர இயலாது எனத் தட்டிக் கழித்து விட்டார்.

1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலாபத் கமிட்டி நடத்தும் விழாக்களில் இந்தியாவுடைய பிரதமர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

இதைப் போலவே மேலும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அஞ்சுமனே இஸ்லாம் சங்கம் நடத்திய நபி தின நினைவு நாளன்று நடக்கும் விழாவிற்கு அஞ்சுமன் நிர்வாகி இஸ்ஹாக் ஜும்கான்வாலா அழைத்தும் அவர் செல்லவில்லை. அதையும் தட்டிக் கழித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் எந்த நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் எந்த ஒரு முன்னேற்றத்திலும் இவருக்கு அக்கறை இல்லை என்பது கீழே குறிப்பிடுவதை வைத்து நீங்களே சொல்லலாம்.

மத்திய அரசாங்கத்தின் உதவியோடும், ஒத்துழைப்போடும் ஆரம்பிக்கப்பட்ட மௌலானா ஆசாத் எஜுக்கேஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையில் ஒரு நபராக இருந்தார். ஆனால் இதுவரை இவரை வைத்து முஸ்லிம்களுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

இந்து நண்பர்க்ளோடு பழகுவதையே அவர் விருப்பமாகக் கொண்டிருந்தார். வாழ்க்கையின் அதிக காலத்தை அவர்களோடு தான் அவர் செலவழித்தார் என்று சொல்வது எனக்குத் தவறாகத் தோன்றவில்லை.

ஒரு முஸ்லிமை நாங்கள் ஜனாதிபதியாக ஆக்கி இருக்கிறோம் என்று மார்த்தட்டிக் கொள்ளாதீர்கள். 

DRDL இதனுடைய முன்னாள் டைரக்டர் கே. ராமாராவ் எழுதுகிறார்.

32 வருடமாக நான் கலாமோடு பழகுகிறேன். 32 வருடகாலமாக எனக்கு அவரைத் தெரியும். 1954ல் இருந்து நாங்கள் ஒன்றாகவே ஒரே அறையில் தங்கியிருந்தோம்.

1980ல் விஞ்ஞானியாகி அதற்குத் தலைவராகி வரும் வரை என் கூடவே இருந்தார். அவர் இரவு வெகு நேரம் கழித்துத்தான் உறங்குவார். காய்கறிகள் மட்டுமே சாப்பிடும் பழக்கமுள்ளவர். முஸ்லிம் என்பதற்கு எந்தவொரு அடையாளமும் காணப்படாதவர். தினம் ஐந்து நேரத் தொழுகையோ ரமலான் மாதங்களில் நோன்பு நோற்கவோ நான் பார்த்ததில்லை.

பெங்களூர் மிஷிஸிளி சாட்டிலைட் சென்டரின் முன்னாள் டைரக்டர் ஆர். அறவுமதன் கூறுகிறார் “திருவனந்தபுரத்தில் இந்திரா பவன் லாட்ஜில் நாங்கள் தங்கியிருந்த காலத்தில் கலாமை, கலாம் ஐயர் என்று சொன்னால்தான் தெரியும். பிராமணர்களோடு இருப்பதையும், அவர்களின் உணவை சாப்பிடுவதையும் பெருமையாகக் கருதுபவர். அவர் அசைவம் சாப்பிட்டுள்ளார் என்றால் புரோட்டாவோடு முட்டை மசாலா மட்டுமே சாப்பிட்டுள்ளார். அவர் மாதா பிதாக்களை நினைத்தோ சொந்த பந்தங்களை நினைத்தோ பேசியதை நான் கேடதில்லை. ஆனால் தினந்தோறும் காலை பகவத் கீதை வாசிப்பதையும், மனப்பாடம் செய்வதையும் பழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் கிருஷணனின் பக்தராக இருந்தார். சைவம் சாப்பிடுபவராகவும், சுத்த பிரம்மச்சாரியாகவும் இருந்தார். 

அவர் தன்னை ஒரு முஸ்லிம் ஜனாதிபதி என்றோ, முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஜாகிர் உசேன், பக்ருதீன் அலி அஹமது இவர்கள் போல் நானும் ஒரு முஸ்லிம் என்றோ சொல்லிக் கொள்ள விருப்பப்படாதவர். 

அவர் மோசமானவர் என்றோ இதற்கு முன்பிருந்த இரண்டு ஜனாதிபதிகளை விட தாழ்ந்தவர் என்றோ இதற்கு அர்த்தமில்லை. அவரை முஸ்லிம் என்று மதத்தின் பெயர் சொல்லி அழைப்பதையே நான் எதிர்க்கிறேன்.

(நன்றி : மாத்யமம் 21.06.2002 ஜூலை 12 - 18,2002 தேதியிட்ட உணர்வில் இடம்பெற்ற வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.)

மீலாது விழாக்களில்  நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அது முஸ்லிம்களின் விழாவாக கருதப்படுகிறது. அரசு விடுமுறை விடப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் அந்த விழாவில் கூட கலந்து கொள்ள மறுத்துள்ளார். 

August 5, 2015, 10:04 PM

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

முஸ்லிம்கள் பார்வையில் அப்துல் கலாம் மரணம்!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மரணம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு மற்ற எந்தத் தலைவரின் மரணமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனலாம்.

மத்திய அரசும், இந்தியாவின் பல மாநில அரசுகளும் யாருக்கும் வழங்காத அளவுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்தன. எல்லா ஊடகங்களும், பொது மக்களும் அவரது எளிமை, மாணவர்களுடன் அவர் காட்டிய நெருக்கம், அவரது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை ஆகிவற்றைப் பேசி அவருக்கு புகழ்மாலை சூட்டின.

அவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் பெயரை வைத்திருந்து, முஸ்லிமாக அறியப்பட்டு இருந்தும் முஸ்லிமல்லாத மக்களும் அவரைப் பெரிதும் மதித்து வீதிகள் தோறும் அவரது படத்தை வைத்து மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள்.

இது எப்படிச் சாத்தியமானது? எந்த முஸ்லிமையும் அனைத்து மக்களும் அங்கீகரிக்க மாட்டார்களே! முஸ்லிம் என்றால் வெறுப்புடன்தானே பார்ப்பார்கள்? அப்படி இருக்கும் போது இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

முஸ்லிமுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கூடத்தில் இடம் தர மறுக்கும் சமுதாயத்தில், முஸ்லிம்களைப் பணியில் அமர்த்த மறுக்கும் சமுதாயத்தில் ஒரு முஸ்லிமுக்கு எப்படி ராஜ மரியாதை அளிக்கப்பட்டது?

இந்த அதிசயம் எப்படி நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான துவேசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து சங்பரிவார இயக்கங்களும் அப்துல் கலாமைத் தூக்கிப் பிடித்தன. புகழ்மாலை சூட்டின. 90 விழுக்காடு ஊடகங்கள் சங்பரிவாரக் கொள்கையில் உள்ளதால் அவரைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் ஏற்படும் வகையில் அதிகமான பொய்களைக் கலந்து கருத்துருவாக்கம் செய்தன. திரும்பத் திரும்ப இதையே ஒரே செய்தியாக முன்வைத்து மக்களை மூளைச் சலவை செய்தன.
அப்துல் கலாமுக்கு எங்காவது படம் வைத்து மாலை போட்டால் அதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி அனைவரும் இவ்வாறு செய்யத் தூண்டின. இதன் விளைவாகவே அப்துல் கலாமுக்கு யாருக்கும் கிடைக்காத கவுரவம் கிடைத்தது.

சங்பரிவாரமும், சங்பரிவார ஊடகங்களும் ஒரு முஸ்லிமை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றால் அவர்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு சங்பரிவாரம் சில விதிகளை வைத்துள்ளது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் பெயர் வைத்துக் கொள்ளலாம்; தொழுகை நடத்தலாம். ஆனால் இந்துக்கள் தெய்வமாக மதிக்கும் கடவுள்களையும் தங்களின் கடவுள்களாக முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்துக்கள் வேதமாக மதிக்கும் கீதை உள்ளிட்ட வேதங்களைத் தமது வேதங்களாக முஸ்லிம்கள் மதித்து ஓத வேண்டும். 

இந்து தெய்வங்களை வழிபட்டு, இந்துச் சாமியார்களின் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும். இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். முஸ்லிம்களை இப்படி மாற்றுவதுதான் சங்பரிவாரின் முக்கியக் கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை அப்படியே அட்சரம் பிசகாமல் கடைப்பிடித்து சங்பரிவாரத்தின் அடிமையாக அப்துல் கலாம் இருந்ததுதான் இந்த பில்டப்புக்குக் காரணம். இப்படி நடக்கும் முஸ்லிம்களைத்தான் மதிப்போம் என்ற செய்தியை உரத்துச் சொல்லவே இந்த பில்டப்புகள்.

மக்களின் கருத்து எப்படிச் செல்கிறதோ அதுபோல் நிலை மாறுவது மனிதனின் இயல்பு. முஸ்லிம்கள் இந்த நிலையில் இருக்கக் கூடாது. எது சரியானதோ அதில் உறுதியாக நிற்பதுதான் முஸ்லிம்களின் இயல்பாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள் குறித்த நமது கருத்தை அழுத்தமாகச் சொல்கிறோம்.

மலஜலத்தைச் சுமந்து கொண்டுள்ள சாமியார்கள் மேலே இருக்க, அப்துல் கலாம் கீழே அமர்ந்து குடியரசுத் தலைவர் என்ற மரியாதையைக் கெடுக்கும் வகையில் ஆசி வாங்கும் காட்சிகளையும் சங்பரிவாரத்தை மனம் குளிரச் செய்யும் வகையில் சாமி கும்பிடும் காட்சிகளையும் பாருங்கள்!


ஏவுகனையைக் கண்டுபிடித்தவருக்கு, அணுசக்தியை ஆராய்ச்சி செய்தவருக்கு மனிதன் மனிதன்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன் பகுத்தறிவை அடகு வைத்து சரணாகதி அடையக் காரணம் என்ன? இப்படி நடப்பதுதான் சங்பரிவாரத்துக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்.


இவரது ஆராய்ச்சி குறித்து தினமலர் உள்ளிட்ட பல ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்!

கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து இந்தியாவில் அப்துல் கலாம் உட்பட மொத்தம் 30 இலட்சம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பதுதான். அதன் அடிப்படையில் அண்டார்டிக்காவின் அருகில் உள்ள பகுதியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்காக ஏற்றுக் கொண்டனர். அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமிக்கு பல கோடி மீட்டர் கொண்ட ஆழம் தோண்டும்போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.

உடனடியாக 30 இலட்சம் விஞ்ஞானிகளில் ஒருவரான அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவத்தில் இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பதாகக் கூறினார். 

விஞ்ஞானிகள் 1978 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார். மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான். அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச் சென்றுள்ளனர்.

சிவன்தான் உலகைப் படைத்தார் என்ற நம்பிக்கையும், அல்லாஹ்தான் படைத்தான் என்ற நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்க முடியாது.

அல்லாஹ்வுக்கு அப்பட்டமாக இணை வைத்து, இல்லை இல்லை அல்லாஹ்வையே மறுத்து நடந்து கொண்ட அப்துல் கலாமை இஸ்லாம் அங்கீகரிக்காது.

முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்ற கொள்கையை இவர் ஆதரித்தார். இதுதான் சங்பரிவாரத்தின் பிரதானக் கொள்கை.

குஜராத் கலவரத்தின்போது ஜனாதிபதியாக இருந்தவர் அப்துல் கலாம். அந்தக் கொடூரமான முஸ்லிம் இன அழிப்பைப் பொறுக்க முடியாமல் பிரதமர் வாஜ்பாய் மோடியைக் கண்டித்தார். ராஜ தர்மத்தைக் கடைப்பிடிக்க வலியுறுத்தினார்.

ஆனால் அப்துல் கலாம் மவுனச் சாமியாராக இருந்தார். வாய் திறக்கவில்லை. குஜராத் முஸ்லிம்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. நேரிலும் போய்ப் பார்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை இந்த நேரத்தில் பார்வையிடச் சென்றார்.

ஆர்.எஸ்.எஸ். கண்ணசைவின்படி நடந்து கொண்டதற்குத்தான் இந்த வெகுமதியைக் கொடுத்துள்ளனர் என்று தெரிகிறதா?

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பிராமணராக இருந்தும் இந்தக் கொடும் செயலைக் கண்டித்தார். அந்த உணர்வு கூட இல்லாமல் அப்துல் கலாம் நடந்து கொண்டார். மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எள் முனையளவு கூட இவருக்கு உறுத்தலை ஏற்படுத்தவில்லை. நமக்கு ஏன் உறுத்தல் ஏற்பட வேண்டும்?

இவரது இறுதிச் சடங்கில் அதிகமான மக்கள் கலந்து கொண்டாலும், யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பத்து சதம் கூட முஸ்லிம்கள் கலந்து கொள்ளவில்லை. நாடு முழுவதும் இலவசப் பயண ஏற்பாடு செய்து கொடுத்தும் இந்த நிலை ஏன்?

மும்பை என்ற ஒரு பகுதியில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட அளவுக்குக் கூட முஸ்லிம்கள் இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதில் இருந்து அவரால் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு காயம் பட்டிருப்பார்கள் என அறியலாம்.

சில முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஜனாசா தொழுகையில் முகம் காட்டினார்கள் என்றால் அதற்குக் காரணம் உள்ளது. இவர்களும் அப்துல் கலாம் போல் திருவாடுதுறை ஆதீனத்திடம் ஆசி வாங்கியுள்ளனர். அப்துல் கலாமே செய்திருக்கும் போது நாங்கள் செய்தால் என்ன என்று நியாயப்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்.
அல்லாஹ்வை மறுத்து சிவ பெருமானை வழிபட்டவருக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸைக் கேட்குமளவுக்கு ஈமான் உறுதியைக் காட்டியுள்ளனர்.

இவர்களைப்போல் அப்துல் கலாமுக்காக இந்துக் கோவில்களில் மோட்சதீபம் ஏற்றியுள்ளனர். இது இந்துக்களுக்கு மட்டுமே ஏற்றப்படும் தீபமாகும்.

அப்துல் கலாம் ஆன்மா சந்தி அடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் இது ஏற்றப்பட்டது.

அப்துல் கலாம் உடல் அன்று நல்லடக்கம் செய்யப்பட்டபின் மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் பிரார்த்தனை செய்தனர்.

அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோயிலின் 4 வாசல்களில் மோட்ச தீபத்தை கோயில் குருக்கள் விஜய ஆனந்த், கணபதி ராமன் ஏற்றினார். அதை இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின் ராஜாங்கம், பேஷ்கார் அண்ணாதுரை, கமல நாதன், பா.ஜ. தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்கத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் பிரார்த்தனை செய்தனர். அப்துல் கலாமுக்கு ஏராளமானோர் திரண்டு இதை ஏற்றினர்.

இவர்கள் மோட்ச தீபம் ஏற்றியதிலாவது நியாயம் உள்ளது. இவர்களைப் போன்ற நம்பிக்கையுடையவராக அப்துல் கலாம் திகழ்ந்தார். தொழுகை நடத்தியவர்களிடம் அந்த நியாயமும் இல்லை.

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.

(திருக்குர்ஆன் 4 : 60)

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

(திருக்குர்ஆன் 9:113,114)

ஊரெல்லாம் சேர்ந்து ஒன்றைச் செய்தால் அதைப் பார்த்து முஸ்லிம்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் கூறியதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருக்க வேண்டும்.

இனிமேல் முஸ்லிம் தலைவர்கள் அப்துல் கலாம் போல் நடக்கவும், அதை நியாயப்படுத்தவும் இதைக் காரணமாக ஆக்கக் கூடாது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.

இறந்தவர்களை ஏசாதீர்கள் என்ற ஹதீஸைச் சொல்லி சில மூடர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த அப்துல் கலாமின் செயலை நியாயப்படுத்தினார்கள். கேட்டால் கடைசி நேரத்தில் தவ்பா செய்து திருந்தி இருக்கலாம் அல்லவா என்ற வாதத்தை வைத்தனர்.

சல்மான் ருஷ்டியோ, தஸ்லீமாவோ மரணிக்கும்போது கடைசி நேரத்தில் திருந்தி இருக்கலாம் என்று சொல்வார்களா?

முஸ்லிம்களாகிய  நாம் வெளிப்படையானதைத்தான் பார்க்க வேண்டும். உள்ளத்தில் உள்ளதைப் பார்க்கக் கூடாது. அப்துல் கலாம் வெளிப்படையாக இணை கற்பித்தார். நான் நடந்து கொண்டது தவறு என்று அறிவிக்கவில்லை. இதை வைத்துத் தான் நாம் முடிவு செய்ய வேண்டும். அவர் தவ்பாச் செய்திருக்கலாம் என்பது இவர்களின் ஆதாரமற்ற ஊகம்.

இறந்தவரை குறை கூறாதீர்கள் என்பது அப்துல் கலாமுக்குப் பொருந்தாது. முஸ்லிமாக வாழ்ந்தவருக்கே பொருந்தும்.

அப்துல் கலாம் வாழும்போது அவர் முஸ்லிமாக வாழவில்லை என்று நாம் எழுதினோம். அதை வாசித்தால் அவர் ரொம்ப மகிழ்ச்சியடைவார். அவர் மகிழ்ச்சி அடையக் கூடியதைக் கூறுவது இறந்தவரை ஏசுவதில் சேராது.

முஸ்லிம்களே! உங்களுக்கு இந்த நாட்டில் மரியாதை வேண்டும் என்றால் அப்துல் கலாம்போல் முஸ்லிம் பெயரில் இந்துவாக மாறுங்கள் என்ற செய்தியை இந்திய அரசும், மாநில அரசுகளும் இந்துத்துவா சக்திகளும் இந்துத்துவாவில் ஊறிய ஊடகங்களும் தெளிவாகச் சொல்லியுள்ளன. ஆனால் உண்மை முஸ்லிம் உயிரே போனாலும் உலகே திரண்டாலும் ஏகத்துவக் கொள்கையில் இருந்து தடம் புரள மாட்டான்.


சுருங்கச் சொன்னால் அப்துல்கலாமினால் முஸ்லிம்களுக்கு கடுகளவும் நன்மை கிடைக்கவில்லை. இவரால் இஸ்லாத்துக்கு கடுகளவும் பெருமை இல்லை. இதைச் சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. 

August 5, 2015, 9:36 PM

தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன

கேள்வி

பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?

சனாவுல்லா, அய்யம்பேட்டை

பதில்

இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவாகப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வருவார்கள். எனவே இந்த வாதத்தை வைத்து நம்மை நாமே போலியாக ஆறுதல் படுத்திக் கொள்ளக்கூடாது. பாஜக இதற்கு முன்னர் 30 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. இப்போது பெற்றுள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நமது நாட்டில் பிரிட்டன் ஜனநாயகத்தின் அடிப்படையிலான தேர்தல் முறை உள்ளது இது மாறினால் பாஜக இவ்வளவு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியாது. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியாது.

இது குறித்து 2011 ஆம் ஆண்டு உணர்வு இதழில் நாம் எழுதியதன் ஒரு பகுதியை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தத் தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.

உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.

பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.

இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.

ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது. ஆனால் இவர் 790 பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.

இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும், மறைமுக சூதாட்டமாகவும் உள்ளது. இரண்டு பேர் மட்டும் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.

மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.

ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.

ஒவ்வொரு தொகுதியிலும்

ஏ கட்சி 501 ஓட்டுக்களும்

பி கட்சி 499 ஓட்டுக்களும்

பெறுவதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 100 எம் எல் ஏக்கள் கிடைக்க, பி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.

ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம்.

ஏ கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 50100

பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 49900. 

ஏ கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற, பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும் மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ரா போட்டால் தான் இது சாத்தியமாகும்.

இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பல வகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறைதான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.

அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறையில் எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம், கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.

ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிர்ணயிக்கப்படும்.

நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 50100வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம்.

அது போல் 49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமிக்கலாம். 

இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.

யாருடனும் கூட்டணி சேராமல் சிறுபான்மை சமுதாயத்துக்கும் சிறிய கட்சிகளுக்கும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.

மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் பிரகாரம் முஸ்லிம் கட்சி நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும். ஆனால் எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம் கட்சி தோற்றதாக ஆகும்.  ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் கட்சி ஜெயிக்க முடியாது. முஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.

ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு 100 என்ற கணக்குப்படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்,.

அது போல் திமுக, அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.

இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் அனைஅவரும் அரசியல் அதிகாரம் பெற முடியும். எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம். ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்.

முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.

ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையை மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இவ்வாறு நாம் எழுதினோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 542 ஆகும். இப்போது பாஜவுக்கு 30 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 542ல் 30 சதவிகிதம் என்பது 162 தொகுதிகள் தான். இதுதான் பாஜகவின் ஒட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கிடைக்க வேண்டிய எண்ணிக்கையாகும்.,

காங்கிரஸ் 19 சதவிகிதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இதற்கு விகிதாசாரக் கணக்குப்படி 118 இடங்கள் கிடைத்து இருக்கும். பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் ஆகியிருக்கும். ஆனால் கிடைத்தது 44 இடங்கள்.

மாயாவதி கட்சி நான்கு சதவிகிதத்துக்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றும் அதற்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாக்குகளுக்கு 22 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்து இருக்கும்.

அதிமுக 45 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 19 தான். ஆனால் 37 இடங்கள் கிடைத்துள்ளன.

திமுக 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள்  9 ஆகும். ஆனால் கிடைத்தது பூஜ்யம். இது போல் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் ஆறு லட்சம் வாக்குகளுக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் ஓரிரு இடங்கள் கிடைத்து இருக்கும்..

நாட்டு மக்கள் தொகையில் 20 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 120 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்தத் தேர்தல் முறையால் பத்து இடங்கள் தான் கிடைக்கின்றது. இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவரவர் சதவிதத்துக்கு ஏற்ப பங்குகள் கிடைத்து விடும்.

ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதும் இதை எதிர்ப்பார்கள். 37 இடங்களை இப்போது வென்ற அதிமுக  19 இடங்களில் தான் வெற்றி பெற முடியும். இதை அதிமுக விரும்பாது. சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. தோற்றுப்போன பிறகு இதைப் பற்றிப் பேசுகிறது. இந்த தேர்தல் முறையினால் அடுத்த தேர்தலில் பாஜக காங்கிரசின் நிலையை அடையலாம். ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க ஜெர்மன் ஜனநாயகம் தான் ஒரே வழியாகும். இதனால் எந்தக் கட்சிக்குப் போடும் ஓட்டும் வீணாகாது. அனைவரின் ஓட்டுக்களும் மதிப்புடையதாக ஆகும்.

இதற்கான கருத்துவாக்கத்தை ஏற்படுத்தி போலி ஜனநாயகமாக உள்ள இந்த்த் தேர்தல் முறையை ஒழித்துக்கட்ட அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். இந்தக் கருத்தை அனைத்து கட்சிகளிடமும் கொண்டு செல்வது இட ஒதுக்கீட்டை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அசுர பலத்துடன் ஆட்சியாளர்கள் ஆட்டம் போடுவதற்கு கடிவாளமாகவும், எப்போதும் பலமான எதிர்க்கட்சி அமைவதை உறுதி செய்வதாகவும் இது அமையும்.

கேடுகெட்ட கூட்டணிக் கலாச்சாரத்துக்கு ஜெர்மன் ஜனநாயகத்தில் வேலை இருக்காது. கட்சி மாறுவதற்கு இடம் இருக்காது. இன்னும் எண்ணற்ற நன்மைகள் இதனால் ஏற்படும்.

கேள்வி

பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறக் காரணம் என்ன?

பரகத்துல்லா, பத்தமடை

பதில்

காங்கிரஸ் கட்சி ஒழிந்தால் போதும் என்ற அளவுக்கு காங்கிரஸ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகி இருந்தது. எப்படியாவது காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இது தான் ஒரே காரணம்.

காங்கிரஸ் செய்த ஊழல் உள்ளிட்ட எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜகவும் செய்தது. பணக்கார்ர்களுக்குச் சாதகமாக ஆட்சி நடத்துவதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அப்படி இருந்தும் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் கருதினார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டும். இரண்டுமே அனைத்து அயோக்கியத்தனக்களிலும் சமமானவை எனும் போது காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை ஏன் மக்கள் தேர்வு செய்தார்கள் என்றால் சோனியா, ராகுல் மன்மோகன், சிதம்பரம் போன்ற படித்த முட்டாள்கள் தான் காரணம்.

இரண்டு திருடர்களில் ஒரு திருடன் மற்றவனை திருடன் என்று குற்றம் சாட்டினால் நீதான் திருடன் என்று திருப்பி அடிக்க வேண்டுமல்லவா? மதிகெட்ட காங்கிரஸ் தலைமை இப்படி உரிய பதிலடி கொடுக்கவில்லை. பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தி இருவரும் சமம் என்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அரசியல் அறிவு இல்லை.

ஒரு மாணவி கற்பழிக்கப்பட்டதை வைத்து காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்திய போது பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களைப் பட்டியல் போட்டு பாஜக ஆட்சியில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என்று எளிதாக நிலைநாட்டி இருக்க முடியும்.

இதற்கும் ஊமை மன்மோகனும் மக்களை அணுகாத வெள்ளைக் காலர் சிதம்பரமும் காங்கிரசின் முக்கிய தலைவர்களும் தக்க பதில் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ வீரரின் தலையை வெட்டி நமது எல்லையில் போட்டது என்றார் மோடி. இது போல் வாஜ்பாய் ஆட்சியிலும் நடந்தது என்பதை இவர்கள் உரத்துச் சொல்லி மறுத்து இருந்தால் இது எடுபடாமல் போய் இருக்கும். அதைச் செய்யவும் படித்த முட்டாள்களுக்குத் தெரியவில்லை..

மும்பை தாக்குதலைச் சொல்லி பாகிஸ்தான்காரன் நமது நாட்டில் புகுந்து தாக்குதல் நடத்துகிறான். அதைத் தடுக்க காங்கிரசுக்கு துப்பு இல்லை என்றது பாஜக. உன் ஆட்சியில் தான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது என்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அறிவும் இந்த மதியீனர்களுக்கு இல்லை.

மன்மோகன், பாகிஸ்தான் பிரதமரோடு கை குலுக்குகிறார் என்று பாஜக செய்த பிரச்சாரத்துக்கும் மவுனம் தான் இந்த மூடர்களின் பதிலாக இருந்தது. பாகிஸ்தானுக்கு ரயில் விட்டது யார்? கார்கில் ஊடுறுவல் நடந்தது யார் ஆட்சியில்? கார்கில் ஊடுறுவல் நாயகன் முசரபுக்கு பட்டுக் கம்பள வரவேற்பு அளித்தவர் வாஜ்பாய் தானே? தீவிரவாதிகளுக்கு பணிந்து கந்தகாருக்கு போய் தீவிரவாதிகளை ஒப்படைத்து விட்டு வந்தது யாருடைய ஆட்சி என்று எகிறி அடிக்க எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் இந்த மடையர்கள் அதற்கும் பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்யவில்லை.

இந்திய மீனவ்ர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்று மோடி பேசியதற்கும் பதில் கொடுக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சியில் தான் இதைவிட அதிக மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற புள்ளிவிபரங்கள் கையில் இருந்தும் அதை எடுத்து வீரியமான பிரச்சாரம் செய்யவில்லை.

அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறயில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்க்கள், மோடிமீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது.

பதவிப்பிரமானத்துக்கு எதிராக உளவுத்துறையைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்தியதாக மத்திய அரசு விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிப்போம் என்று கூறி விட்டு அதை அப்படியே கிடப்பில் போடும் அளவுக்கு இவர்களின் அரசியல் அறிவு இருந்தது.

எந்தப் பிரச்சனையையும் எப்படி கையாள்வ்து என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை. தெலுங்கானா பிரச்சனையை மாற்றி மாற்றி பேசி மாநிலத்தை ரணகளமாக்கினார்கள்.

தெலுங்கானா பகுதியில் வாக்கெடுப்பு நடத்துவோம். மக்கள் தனி மநிலத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் மாநிலத்தைப் பிரிப்போம் இல்லாவிட்டால் பிரிக்க மாட்டோம் என்று சொன்னால் அனைத்து கட்சியினரும் அதை ஏற்று இருப்பார்கள். பிரிப்பது என்று முடிவு எடுத்தாலும் பிரிப்பதில்லை என்று முடிவு எடுத்தாலும் அதை மக்கள் தலையில் போட்டு விடலாம் என்ற திட்டத்தை மேதாவி சிதம்பரத்துக்கு கடிதம் மூலம் நாம் தெரிவித்தோம். எந்த பிரச்சனையும் இல்லாமல் தீர்க்க வழிமுறைகள் உள்ளன என்றும் தெரிவித்தோம். இப்படி எளிதாக தீர்க்க வேண்டிய பிரச்சனையைத் தவறாக தீர்க்க முயன்று ஆந்திராவில் காங்கிரசை அழித்தார்கள்.

ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்குப் பின் அவரது மகனுக்கு பின்னால் மக்கள் நிற்கிறார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்தது. ஆனால் அவர் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் எடுத்த ந்டவடிக்கைகளும் ஆந்திராவில் காங்கிரசை அழித்தன.

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராடுவது போல் சித்தரித்து காங்கிரசுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்திய போது அவருக்கு நெருக்கடி கொடுக்காமல் விட்டு இருக்க வேண்டும். நெருக்கடியும் கொடுத்து அவரைக் கைதும் செய்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் வகையில் நாங்கள் ஊழல்வாதிகள் என்று ஒப்புக் கொள்வது போல் நடந்து கொண்டது காங்கிரஸ்.

பாஜக ஊழலுக்கு எதிராக தம்பி ஹசாரே என்று ஒருவரை உருவாக்கி பில்டப் கொடுத்து பாஜக ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்ப் போராட்டத்தை நடத்தி இருந்தால் பாஜக ஆதாயம் அடைய முடியாமல் தடுத்து இருக்கலாம்.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் கூட பிரதமரும் காங்கிரசை அழித்த சிதம்பரமும் எந்தப் பதிலும் விளக்கமும் மக்களுக்குச் சொல்லவில்லை.

மோடி டீக்கடைக்காரர் என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். இது மோடிக்குச் சாதகமாக அமையும் என்ற சாதாரண அறிவு கூட காங்கிரசாருக்கு இல்லை.

மோடியின் அம்மா ஆட்டோவில் போகிறார்; தாயைக் கவனிக்கவில்லை என்ற ஆயுதத்தை எடுத்தார்கள். பெற்ற தாய் என்பதற்காக எந்தச் சலுகையும் காட்டாத எளிமையானவர் என்று இது மாறும் என்பது கூட தெரியாக மடையர்களாக கங்கிரசார் இருந்தார்கள்.

கங்கிரஸ் செய்த எல்லா அயோக்கியத்தனங்களையும் பாஜக செய்து இருந்தும் பாஜக பரிசுத்தம் என்பது போலவும் காங்கிரஸ் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரித்து வெற்றி பெற்றார்கள் என்றால் மூளையற்ற காங்கிரசின் தலமை தான் இதற்குக் காரணம்.

களத்தில் நின்று உழைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் ஒயிட் காலர் தலைவர்களை முன்னிறுத்தினார்கள். மக்களின் நடித்துடிப்பை அறிந்து கொள்ளாத இவர்களின் ஆலோசனையைக் கேட்டதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம். ஒரு காரியம் சரியா தவறா என்பதை மட்டும் ஏசி அறையில் விவாதிப்பது அர்சியலுக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் ஏற்பார்களா என்பதையும் அறிந்து செயல்படுவது தான் அரசியல். இந்த அரசியல் மன்மோகனுக்கும் தெரியாது. தலைக்கணத்தில் யாராலும் மிஞ்ச முடியாத சிதம்பரத்துக்கும் தெரியாது. பல்லாண்டுகளாக காங்கிரசை வைத்து பிழைப்பு நடத்திய கிழட்டுத் தலைவர்களுக்கும் தெரியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைவரின் கீழ் செயல்பட வேண்டும். அவர் மக்களால் அறியப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஒருவர் வளர்ந்தால் நமக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்று நினைத்து ஏராளமான கோஷ்டிகளை உருவாக்கி ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். ஜகன்மோகனை ஓரம் கட்டி போட்டி தலைவர்களை உருவாக்கி கட்சியை அழித்தனர். தமிழகத்திலும் ஒரு தலைவரின் கீழ் கட்சி செயல்படவில்லை.

இன்னும் பல காரணங்கள் உள்ளன. அனைத்திலும் காங்கிரசின் முட்டாள்தனம் பளிச்சிடுகிறது. இதன் காரணமாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து இருந்த காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்று கருதிய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள்.

இவை பாஜகவின் ஆதரவு ஓட்டு அல்ல. காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களாகும். இது நீடிக்காது, காங்கிரஸ் துடிப்புள்ள மூளையுள்ளவர்களின் ஆலோசனையுடன் அரசியல் நடத்தினால் அடுத்த தேர்தலுக்குள் இதை மாற்ற முடியும்.

கேள்வி

இந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சல்மான், கோவை

பதில்

காங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்கள் ஒழிய வேண்டும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் 30 சதவிகிதம் அளவுக்கு வாக்குகள் பெறுவார்கள் என்று நாம் நினைக்கவில்லை. குஜராத்தில் நடந்த கொடூரச் செயலைப் பார்த்து விட்டு, வயிற்றில் உள்ள குழந்தையைக் கூட ஈட்டியால் குத்தி கொலை செய்த கொடூரத்தைப் பார்த்து விட்டு, சிலிண்டர்களை வீடுகளில் வீசி கொளுத்திப் போட்ட கொடூரத்தைப் பார்த்து விட்டு இந்தக் கொடியவர்களை இந்துக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.

முஸ்லிம்களை அழித்து ஒழிக்கும் கொள்கை உடையவர் என்று தெரிந்து இருந்தும் மோடியை இவர்களால் ஆதரிக்க முடிகிறது என்றால் முஸ்லிம்கள் அநியாயமாக அழிக்கப்பட்டதும் அழிக்கப்படலாம் என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்தாலும் அது ஒரு பிரச்சனை இல்லை என்ற மனநிலைக்கு இவ்வளவு மக்கள் வந்து விட்டார்க்ள் என்பது தான் இதில் இருந்து நமக்குத் தெரியவருகிறது.

நம் சமுதாயத்தில் உள்ள சில மூடர்கள் குண்டு வைத்தல் போன்ற காரியங்களில் இறங்குவதும் மற்றவர்கள் வைக்கும் குண்டுகளும் முஸ்லிம்கள் மீது போடப்படுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலைக்கு காரணமாக இருந்துள்ளது. ஊடங்கள் இவ்வாறு சித்தரிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இதை மாற்ற நாம் முயல வேண்டும். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதை வெறுக்கிறார்கள் என்றாலும் அது உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவோ தீவுரவாதிகளின் ஆதாரவாளரகளாகவோ இருக்கிறார்கள் என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழகத்தை விட இந்தி பேசும் மாநிலங்களில் இது அதிகமாகப் பதிந்துள்ளது.

இதை மாற்றி அமைக்க நாம் பாடுபட வேண்டும். 30 சதவிகிதத்தை குறைக்கும் வகையில் நாம் திட்டங்கள் வகுத்தாக வேண்டும்.

இதன் துவக்கமாக குண்டு வெடிப்புக்கும் தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்கள் ஆதரவாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டத்தைத் திரட்டி கண்டனப் பேரணிகள் எல்லா ஊரிலும் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் இது போன்ற செயல்களை நஞ்சாக வெறுக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையிலும் அனைத்து சமுதாய மக்களும் இதைக் கவனிக்கும் வகையிலும் நடத்தப்பட வேண்டும். இதற்கான திட்டம் அடுத்த வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் தனி நபர் சந்திப்புகளை அதிகப்படுத்தி நாட்டில் நமக்கு என்ன நடக்கிறது என்பதையும் புரியவைக்க வேண்டும். இதற்காக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். முஸ்லிமல்லாத மக்கள் மனங்களில் உள்ள வெறுப்பை அகற்றுவதுதான் உடனடியாகச் செய்ய வேண்டியதாகும்.

மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று நாம் அஞ்சத்தேவை இல்லை. இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மக்களிடம் தான் உலக நாடுகளின் அதிகாரம் உள்ளது. சிறுபான்மை மக்கள் நசுக்கப்படும் போது வல்லரசுகளான கிறித்தவ நாடுகளும், பொருளாதார வல்லரசுகளான இஸ்லாமிய நாடுகளும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஐநா வரை பிரச்சனையாகும். அதைக் கவனத்தில் கொண்டுதான் ஆட்சி நடத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே அதிகமாக நாம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

பாடப்புத்தகங்களில் இந்து மதக்கருத்தைப் பரப்புதல், சிறுபான்மை கல்விக்கூடங்களின் சலுகைகளைப் பறித்தல், இட ஒதுக்கீட்டின் பயன் முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் தடுத்தல், பசுமாடுகளை அறுக்கத் தடை செய்தல், கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இடையூறு செய்தல் இது போல் சில்லறைத்தனமான வேலைகள் செய்ய ஓரளவு வாய்ப்பு உள்ளது. உலக அளவில் நல்ல பெயர் எடுப்பதற்காக அவ்வாறு செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாபர் மஸ்ஜிது சம்மந்தமாக வழக்கு போட்டவர்களை மிரட்டி அல்லது சரிக்கட்டி அது குறித்த வழக்கை வாபஸ் பெறச் செய்து .சட்டப்படியான தடை இல்லாமல் ஆக்கி அந்த இடத்தைக் கோவிலாக்க முயற்சிக்கலாம்.

வைப்பாட்டிதான் வைத்துக் கொள்ளலாமே தவிர இரண்டாம் திருமணம் கூடாது என்றும் நீதிமன்றங்கள் மூலமே விவாக ரத்து செய்ய வேண்டும் எனவும் சட்டங்கள் கொண்டு வர முயற்சிக்கலாம்.

இவை நடக்கும் போது இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ளும். இதனால் ஏற்படும் விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு நன்மையாக மாறும். எனவே நாம் இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை

கேள்வி

தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே? முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதே? தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறதே?

ஆதில் சா மதுரை

பதில்

முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கையை இந்த்த் தேர்தலில் முஸ்லிம்கள் அப்படியே ஏற்கவில்லை என்பது உண்மை தான்.

பாஜக பற்றி ஜெயலலிதா வாய் திறக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நாம் ஆதரவை வாபஸ் பெற்றோம். மற்றபடி அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பெரிய மனக்குறை இல்லை. கலவரங்களின் போதும் குண்டு வெடிப்புகளின் போதும் அவரது நடவடிக்கை பாரபட்சமாக இருக்கவில்லை. கருனாநிதியைப் போல் அவர் அடக்குமுறை செய்யவில்லை. அத்துடன் இட ஒதுக்கீட்டுக்கான ஆணையத்தையும் அமைத்து இருந்தார். இதனால் அவரை ஆதரிக்கும் மனநிலையில் தான் அதிகமான முஸ்லிம்கள் இருந்தனர்.

பாஜகவை எதிர்க்கவில்லை என்ற் காரணத்தால் நாம் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அவர் பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்தது முஸ்லிம்களிடம் எடுபட்டது. இதைத் தானே குற்றச்சாட்டாக வைத்தீர்கள். ஜெயலலிதாதா பாஜகவையும் விமர்சித்து விட்டாரே என்ற அதிமுகவின் பிரச்சாரத்தை முஸ்லிம் மக்கள் நம்பினார்கள். எனவே தான் முஸ்லிம் இயக்கங்களின் கோரிக்கை எடுபடவில்லை. ஆதரவு வாபஸ் என்ற பிறகு அவர் பாஜக் பற்றி வாய் திறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் பாதி இடங்களில் தோற்று இருப்பார்.

முஸ்லிம்கள் பெருவாரியாக அவருக்கு வாக்களித்துள்ளதால் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை அவர் சொன்ன படி நிறைவேற்றுவார் என்று வாக்களித்த முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.

May 20, 2014, 3:21 PM

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

ஜல்லிக்கடும் அறுத்து உண்பதும் சமமா?

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது. இதை விமர்சனம் செய்யும் பேஸ்புக் அறிவுஜீவிகள் உயிரினங்களை அறுத்து உண்பதையும் நீதிமன்றம் தடை செய்யுமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இந்தவாதம் ஏற்கத்தக்கது தானா?

மசூது, கடையநல்லூர்

பதில்

பொதுவாக அறிவுஜீகள் என்று அறியப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் முழுமையாக ஆய்வு செய்யாமல் பிரச்சனைகளை அணுகி வாயில் வந்தபடி உளறி வருகின்றனர். வித்தியாசமாக எதையாவது சொன்னால் அறிவுஜீவிகளாக மக்கள் கருதுவார்கள் என்ற நினைப்பில் தான் இவ்வாறு உளறுவதாக நாம் கருதுகிறோம்.

அந்த வகையில் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வாதமும் அமைந்துள்ளது.

முதலில் நீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் கொள்வோம். நீதிபதிகள் நாட்டில் எது சட்டமாக ஆக்கப்பட்டுள்ளதோ அதனடிப்படையில் தான் தீர்ப்பு அளிக்க முடியும்.

இதை அறிவுஜீவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் கோழி வியாபாரம் செய்கிறான். இன்னொருவன் கொக்கு வியாபாரம் செய்கிறான். காவல்துறைவினர் கோழி வியாபாரம் செய்பவனை விட்டுவிடுவார்கள். ஆனால் கொக்கு வியாபாரம் செய்பவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள்.

ஒருவன் ஆட்டுத் தோலை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் அவனைச் சட்டம் ஒன்றும் செய்யாது. ஆனால் புலித்தோலை வைத்திருந்தால் அவனைப் பிடித்து சிறையில் தள்ளும்.

ஆட்டுக்கறி விருந்துக்கும் மான்கறி விருந்துக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனாலும் மான்கறி விருந்து வைத்தால் கம்பி எண்ண வேண்டும்.

நமது நாட்டில் இதுதான் சட்டம்.

வளர்ப்புப் பிராணிகளைத் தான் உணவுக்கு பயன்படுத்தலாம். வனவிலங்குகளையும் வளர்ப்பு பறவைகளாக இல்லாமல் சுதந்திரமாக சுற்றித்திரியும் பறவைகளையும் வேட்டையாடக் கூடாது. உண்ணவும் கூடாது. இதுதான் நமது நாட்டில் உள்ள சட்டம்.

கொக்கு வேட்டையாடியவனை நீதிமன்றம் தண்டித்தால் கோழி வியாபாரியையும் தண்டிக்குமாறு நீதிமன்றத்தைக் கோர முடியாது.

நமது நாட்டின் சட்டம் வளர்ப்புப் பிராணிகளை உண்பதற்கு அனுமதிக்கிறது.

ஆனால் உணவுக்காக அல்லாமல், மனிதனுக்குப் பயன்படும் உழவு போன்ற பணிகளுக்கு அல்லாமல், மருந்துக்காக அல்லாமல், தற்காப்புக்காக அல்லாமல் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது என்பதுதான் நம் நாட்டில் உள்ள சட்டம்.

இந்தச் சட்டப்படி ஜல்லிக் கட்டைத் தடுக்க முடியும். பிராணிகளை அறுத்து உண்பதைத் தடுக்க முடியாது.

பிராணிகள் வதைச் சட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் உணவுக்காக அறுத்து உண்பது சேர்க்கப்படவில்லை. சிங்கம் புலிகளை வதை செய்யாமல் சர்க்கஸ் நடத்துவதற்கு பயன்படுத்தினாலும் அது குற்றம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றம் சட்டப்படி அளித்துள்ள தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி குற்றமாக இல்லாத காரியங்களைக் குற்றமாக அறிவிக்கக் கோருவது அறியாமையாகும்.

பிராணிகள் வதைச்சட்டத்தில் இருந்து காளைகளைச் சித்திரவதை செய்வதற்கு விதிவிலக்கு உண்டு என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் மட்டுமே இவர்கள் விரும்பக் கூடிய தீர்ப்பை நீதிமன்றங்கள் வழங்க முடியும்.

பிராணிகள் வதைச் சட்டத்தில் சரிபாதி சட்டங்கள் கிறுக்குத்தனமானவை என்பதில் நமக்கும் உடன்பாடு உள்ளது. மனிதர்களைக் கடித்துக் குதறும் வெறிநாய்களை நாம் தாக்கினால் புளூகிராஸ் எனும் மிருகநண்பர்கள் நம் மீது வழக்குப் போட்டு சிறையில் தள்ளிவிடுவார்கள்.

மனிதனை விட நாயை பெரிதாக ம்திக்கும் இது போன்ற சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். அது தனி விஷயம்.

ஆனால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்டப்படியானது என்பதில் சந்தேகம் இல்லை.

உயிரினங்க்ளைக் கொன்று புசிப்பதும் ஜல்லிக்கட்டும் சமமானது அல்ல என்பதை அறிவுஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜல்லிக் கட்டில் உயிர்வதை உள்ளது. ஆனால் அறுத்து உண்பதில் உயிர்வதை இல்லை என்று விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் விளக்க உரையில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம். அதனைக் கீழே தருகிறோம்.

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

2. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா?

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா?

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுய நலத்திற்காகக் கொல்வது உயிர்வதைதானே?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண் பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.

சைவம், அசைவம் ஆகிய இரு உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

இது போன்ற கேள்விகளைச் சிந்தித்தால் தனது நன்மைக்காக மனிதன் அல்லாத பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

1) இஸ்லாமிய முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன் என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.

1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை.

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால்தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.

 பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை.

இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான்.

அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால்தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

இவ்வாறு நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.

அறுத்து உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் இந்த அறிவுஜீவிகள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் தமது கோரிக்கையை இன்னும் விரிவுபடுத்திட வேண்டும். அறுத்து உண்பதை மட்டும் தடுக்குமாறு கோரக்கூடாது.

எலியைக் கொல்லக்கூடாது, கொசுவைக் கொல்லக் கூடாது; பாம்பு தேள் உள்ளிட்ட எதையும் கொல்லக் கூடாது. உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. மீனவர்கள் மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டும்.

தோல்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். தோலால் தயாரிக்கப்படும் ஷூக்கள், கைப்பைகள், பெட்டிகள், அலங்காரப்பொருட்கள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

கோழிப்பண்ணைகளை ஒழிக்க வேண்டும். தேனி வளர்ப்பு பட்டு வளர்ப்பு ஆகிய அனைத்தையும் தடுக்க வேண்டும். பட்டாடை, தேன் ஆகியன தடை செய்யப்பட வேண்டும்.

இப்படி அனைவரின் வயிற்றிலும் அடிக்கும் வகையில் தெளிவாக தங்கள் கோரிக்கையை சொல்ல இவர்கள் தயாரா?

ஜல்லிக்கட்டு என்பது மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லாத ஒருகாரியத்துக்காக மாடுகளை வதை செய்யும் செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

நூறு பேர் சேர்ந்து கொண்டு ஒருமாட்டை அடக்குவதில் வீரத்தின் எந்த அம்சமும் இல்லை. ஒண்டிக்கு ஒண்டி என்று காளையை அடக்கினால் கூட அதிலும் கூட வீரமில்லை. முட்டுவதைத் தவிர வேறு எதுவும் அறிந்திராத ஜீவனிடம் இவர்கள் வீரத்தைக் காட்டுகிறார்கள்.

ஒரு காட்டுப்புலியைப் பிடித்து வந்து ஒண்டிக்கு ஒண்டியாக இந்த வீரர்களை மோதச் சொன்னால் யார் முன்வருவார்? ஒருவரும் வரமாட்டார்கள். ஏனெனில் புலிக்கு அதன் பற்களும் கூரிய நகங்களும் பேசும். இவனை விட வலிமையாக கொடுக்கும் ஒரு அரையில் இந்த வீரன் சுருண்டு விடுவான்.

இங்கே தான் வீரத்தைக் காட்ட வேண்டும். எனவே ஜல்லிக்கட்டைத் தடை செய்தது காளைகளுக்கு மட்டுமின்றி மனிதக் காளைகளுக்கும் நன்மை செய்யக் கூடியது என்பது தான் நமது கருத்து.

May 12, 2014, 4:37 PM

தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள்

தமிழக மீனவர்களைத் தாக்கும்

 இலங்கை தமிழ் மீனவர்கள்:

- மௌனம் காக்கும் தமிழ் போராளிகள்!!

- வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித் தகவல்கள்

மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தமிழகக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும்போது தான் இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தக்கூடியவர்கள் யார் என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு அதிர்ச்சிதான் மிஞ்சுகின்றது.

இலங்கையில் மீன்பிடித் தொழில் செய்யும் தமிழ் மீனவர்கள்தான் தமிழகத்திலிருந்து எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்பதுதான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.

இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் சென்றால் இராணுவம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றது. அதே நேரத்தில் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களிடம் தமிழகத்திலிருந்து செல்லும் தமிழ் மீனவர்கள் சிக்கி விட்டால் பின்னி எடுத்து, நையப் புடைத்து அனுப்பும் சம்பவங்கள் நடக்கின்றன.

தமிழக மீனவர்களைத் தாக்குபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்தான் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஒரு மாதத்துக்கு முன் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது போட்டு உடைத்தார். இதைக்கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நாம் கூறிய செய்திகளை உண்மைப்படுத்தும் விதத்தில் கடந்த நவம்பர்  16ஆம் தேதி அன்றுவெளியான, “தி ஹிந்து நாளேட்டின் தமிழ் பதிப்பில், “இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் " அந்த நாளேட்டிற்கு அளித்த பிரத்தியேக பேட்டி வெளியிடப்பட்டது. அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

அந்த பதில் இதோ :

கேள்வி :

தமிழக மீனவர்கள் இலங்கையிலும் இலங்கை மீனவர்கள் தமிழகத்திலும் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். மொத்தத்தில் இரு தரப்பிலும் பாதிக்கப்படுவது தமிழ் மீனவர்கள்தான். இதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடியது என்ன?

பதில் :

 உண்மையில் பாதிக்கப்படுவது யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே நான் செய்யக்கூடியது. நீங்கள் தமிழர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால், உண்மையில் பாதிக்கப்படுவது இந்திய - இலங்கை கடற்பரப்பில் வாழும் கடல் இனங்களே.

இந்திய மீனவர்கள், தங்கள் கடல் எல்லை தாண்டி இரவு 1 மணியளவில், நன்றாக நாங்கள் பார்க்கக்கூடிய நெருங்கிய தூரத்திலேயே வந்து ஏன் மீன் பிடிக்கிறார்கள்?பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். காரணம்,இந்தியக் கடல் பிராந்தியத்தில் இழு வலைப்படகுகள் மூலம் கடல் வளங்களாகிய மீன்களை வாரி இழுத்துக் காலி செய்துவிட்டார்கள். பணத்தாசையால் பெரும் படகு முதலாளிகள் தங்கள் நாட்டுக்கும் கடல் வளத்துக்கும் செய்துள்ள துரோகம் இது. உங்கள் பகுதியில் மீன் கிடைக்காததால் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க வருகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் இலங்கை கடல் பிராந்தியத்திலும் கடல் இனங்கள் அற்று ஒன்றுமில்லாமல் போய்விடும்.

எங்கள் நாட்டில் இழு படகுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படியல்ல.

இழு படகுகளால் மீன் வளங்கள் மட்டுமல்ல;பவளப்பாறைகள் கூட இழுத்து வரப்படுகின்றன. இழு படகு உபயோகத்தை இந்தியா தடை செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சட்டம் வருமா என்பது சந்தேகமே. தமிழகத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இழு படகை விட்டுவிட்டு மீண்டும் கரை வலையை மீனவர்கள் உபயோகித்தால் மீன் இனம் பெருகும். கடல் அன்னை பூரிப்பாள். இன்று பயனடைந்து கொண்டிருப்பவர்கள் இழு படகுகளுக்குச் சொந்தக்காரர்களான பெரும் பணக்காரர்களே. சிறு மீனவர்கள் அல்லர்.

மேற்கண்ட பதிலில் பல உண்மைகளை நாம் அறிய முடிகின்றது.

தமிழக மீனவர்களைத் தாக்குபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள்தான். அதுபோல அங்கிருந்து இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையால் சிறையில் அடைத்து சித்திரவதைக்கு ஆளாகுபவர்களும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களே! ஆக மொத்தத்தில் இரண்டு பக்கத்திலும் கொலைவெறித் தாக்குதலுக்கும், சித்திரவதைக்கும் உள்ளாகுபவர்கள் தமிழர்களே!

இந்தச் செய்தியை நாம் சொல்லும்போது நம்ப மறுத்தவர்கள் தற்போது, “இலங்கையின்  வடக்கு  மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்”  சொல்லும்போது வாய்மூடி மௌனம் காக்கின்றனர்.

உண்மையிலேயே இங்குள்ள தமிழ் அமைப்புகள் தமிழ் மீனவர்கள் மீது அக்கறை செலுத்துகின்றோம்; அவர்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றோம் என்று தாங்கள் சொல்லும்  கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்காகவும், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்காகவும் போராட வேண்டும். மொத்தத்தில் ஒட்டு மொத்த தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டுமா இல்லையா? அதை இவர்கள்  செய்வார்களா?

ஈழப் பிரச்சனையில் தனி ஈழம் வேண்டும்; தமிழர்களுக்கு அமைதி வேண்டும்; நிம்மதி வேண்டும்  என்று இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் போராடுகின்றோம் என்று சொல்லக் கூடியவர்கள் இந்த விஷயத்தில் என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்?

அதுபோல இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்படும் இலங்கை தமிழ் மீனவர்களுக்காக இவர்கள் இதுவரை போராடாதது ஏன்? என்ற கேள்விக்கும் இவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்காக நாங்கள் போராடுகின்றோம். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைக்  காக்க  உயிரையும்    கொடுக்கத்    தயார்  என்று  தமிழகத்திலுள்ள தமிழ்ப் போராளிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் பேச்சுக்களெல்லாம் வெறும் வெத்து வேட்டு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. நாம் சொல்லிக் காட்டிய செய்தியும் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.

November 28, 2013, 3:10 PM

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

இடஒதுக்கீடு அளித்தால் பாஜகவை ஆதரிக்கலாமா?

கேள்வி பா... முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் ட்ர்ஹவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?

எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில்

உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும்பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

 • பல்லாயிரம் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது,
 • கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது,
 • பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது,
 • முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப்பயிற்சி அளிப்பது,
 • திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது,
 • அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது,
 • முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது
இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா... வாக்குறுதி அளித்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் பா...வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் அவர்கள் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும் தீர்மானத்திலும் சொல்லியுள்ளது. இது பா...வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது  என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும்.
நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால்தான் அது முரண்பாடு என்று கூற முடியும்.

சில
கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இதுபோன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு.
ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து என்று இதன் பின்னர் அல்தாபி சொல்லி இருந்தால் தான் அது முரண்பாடு என்று சொல்ல முடியும். அப்படி சொல்லி இருந்தால் ஜமாஅத் தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும். கவனமின்மையால் திடீரென கேள்வி கேட்ட போது தவறுதலாக இப்படிச் சொல்லி விட்டேன் என்பதுதான் அல்தாபியின் பதில் என்பதால் ஜமாஅத்தில் முரண்பாடு என்று அறிவுடையோர் கூறமாட்டார்கள்.

வேறு இயக்கத்தின் தலைவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் தவறாகும்.

ஒரு இயக்கத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பாரதூரமான கருத்தைச் சொல்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. அவரது இயக்கமும் மறுக்கவில்லை என்றால், அதைத்தான் தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளது.

அல்தாபி இவ்வாறு கருத்து சொன்ன பின் தவ்ஹீத் ஜமாஅத் அதை ஆதரித்து இருந்தால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது ஜமாஅத் இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதித்தால் அப்போதும் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்லது அல்தாபியின் பேட்டி வெளியாகி முகநூல்களில் பலவித விமர்சனங்கள் வந்த போது தான் கூறியது சரிதான் என்று நியாயப்படுத்தி அறிக்கையோ மின்ன்ஞ்சலோ அல்தாபி அனுப்பி இருந்தால் அப்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கலாம்.

அல்தாஃபி அவர்கள் இப்படிக் கூறியவுடன் ரியாதில் பொதுச் செயலாளர் இருக்கும் நிலையில் அங்கிருந்தே அனைவரிடமும் ஆலோசனை பெற்று அங்கிருந்தே ஜமாஅத்தின் கருத்து என்ன என்று அறிக்கை வெளியிட்டார்.

ஜமாஅத்தின் கருத்து இதுதான் என்று அந்த அறிக்கை தெளிவாக அறிவித்தது. அல்தாபி சொன்னது ஜமாஅத்தின் கருத்து அல்ல என்ற விஷயமும் அதற்குள் அடங்கி இருந்தது.

அவ்வாறு அறிக்கை வெளியிட்ட பின்னர், ஜமாஅத்தின் கருத்து தவறு, நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அல்தாஃபி சொல்லி இருந்தால் தான் ஏன் அவருக்கு ஒரு நிலை மற்றவருக்கு ஒருநிலையா என்று கேள்வி கேட்கமுடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதுபோல் வேறு இயக்கம் நடந்து அதை தவ்ஹீத் ஜமாஅத் விமர்சித்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மா அவர்கள் அள்ளிக் கொடுத்ததைப் பார்த்து, தமிழகத்தில் தானே புயல் வராத பகுதிகளில் வசிக்கும் மக்கள் புயல் தமது பகுதிக்கும் வராதா என்று ஏங்குகின்றனர் என்று மமக சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார்.

இது அவரது கருத்து. இதை மமக மற்றும் தமுமுக ஆதரிக்கவில்லை என்று அதன் நிர்வாகிகள் அறிக்கை விட்டிருப்பார்களானால் தவ்ஹீத் ஜமாஅத் அந்த இயக்கத்தினை இந்த விஷயத்தில் விமர்சனம் செய்திருக்காது.

அதுபோல் பேசிய சட்டமன்ற உறுப்பினரும் தான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்று உடனே மறுத்து இருந்தால், அப்போதும் நாம் விமர்சித்து இருக்க மாட்டோம்.

(அனைத்து முஸ்லிம்களின் கடும் கண்டனத்துக்குப் பிறகு பல மாதங்கள் கழித்து ஒரு பொதுக்கூட்டத்தில் தான் கூறியது தவறு என்று மென்மையாக அவர் ஒப்புக் கொண்டார்.)

பெரும்பாலான முஸ்லிம் இயக்கங்களில் இதுதான் நடக்கிறது
அந்த இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்கள் சிலை திறந்தாலும், இறந்தவரின் படங்களுக்கு மூத்த தலைவர்கள் மலர் தூவினாலும், பா..வு.டன் ஒரே மேடையில் தோன்றினாலும், அந்த இயக்கங்கள் அதை எதிர்க்க முடியாமல் மவுனம் காக்கின்றன.

பா... தலைவருடன் போஸ் கொடுத்ததை எங்கள் இயக்கம் கண்டிக்கிறது என்று அந்த இயக்கங்களால் சொல்ல முடியவில்லை. சொன்னால் அந்த மூத்த தலைவர் மனஸ்தாபம் அடைவார் என்று மௌனம் சாதிக்கிறார்கள்.

ஏராளமான சம்பவங்கள் மூலம் தெரிந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

மூத்த தலைவர்களும் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. நிர்வாகிகளுக்கும் அதைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லை.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை ஒரு தலைவர் இப்படிக் கூறினால், அது ஜமாஅத்தின் கருத்துக்கு எதிராக இருந்தால், வாய் மூடி இருக்காமல், கருத்து சொன்ன நபரைப் பார்க்காமல், கருத்தை மட்டும் பார்த்து உடனே மறுப்புச் சொல்கிறது.

அதுபோல் யாருடைய கருத்துக்கு எதிராக ஜமாஅத் கருத்துச் சொல்கிறதோ, அவரும் சரியானவராக இருக்கிறார். கவனக்குறைவாக நான் சொன்ன சொற்களால் ஜமாஅத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுவிட்டதே என்று சொல்லி அவரும் வருந்துகிறார்.

நான் சொன்ன கருத்துக்கு எதிராக உடனே எப்படி மறுப்பு வெளியிடலாம் என்று அவரும் நினைக்கவில்லை.

அவர் மேலாண்மைக்குழு உறுப்பினராக இருப்பதால் எப்படி எதிர்க்கருத்து சொல்வது என்று நிர்வாகமும் நினைக்கவில்லை.

இது ஆட்களைச் சார்ந்த இயக்கமல்ல. கொள்கை சார்ந்த இயக்கம். மார்க்க விஷயத்தில்கூட பெரிய பெரிய இமாம்கள் சொன்ன கருத்தாக இருந்தாலும், அது தவறு என்றால், அதை விட்டுவிட வேண்டும் என்ற சரியான, உறுதியான அடித்தளத்தில் இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாசத்தை விளங்கினார்கள் என்றால், இந்தப் பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொண்டதை அவர்கள் பெருமிதத்துடன் பார்ப்பார்களே தவிர குறைகூற மாட்டார்கள்.

எத்தனையோ இயக்கங்களைப் பார்க்கிறோம். அதன் மாவட்ட நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்தாலோ, மோசடி செய்தாலோ, சமுதாய நலனுக்கு எதிராக நடந்தாலோ, அவர்களை எதிர்த்து கருத்துச் சொல்லவோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ தலைமைக்குத் துணிவு இல்லை.  

அந்த மாவட்டத்தில் அந்த நபரை நம்பித்தான் இயக்கம் உள்ளதால், நடவடிக்கை எடுத்தால், எல்லோரும் அவருடன் சென்று விடுவார்கள் என்று அஞ்சும் அளவிற்கு கொள்கையற்றவர்களாக உள்ளனர்.

ஆனால் அதிகச் செலவில் நடத்தப்பட்ட திருமணங்களில் கலந்துகொண்ட சின்ன விஷயத்துக்காக மாநில நிர்வாகிகள் மீதே நடவடிக்கை எடுக்கும் ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது.

இந்த ஜமாஅத்தில் இருக்கும் மக்கள் இதன் தெளிவான கொள்கைக்காகவே இருக்கிறார்கள்.

எனவேதான் தலைமையும் சரியாக உள்ளது. நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களும் சரியாக உள்ளனர்.

நம்மை இந்த விஷயத்தில் விமர்சிப்பவர்கள் இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் மேலும் உயர்வாகத்தான் இந்த ஜமாஅத்தை மதிப்பார்கள்.

ஒரு பேச்சுக்காக நான் சொன்ன கருத்து தான் சரி என்று அல்தாபி வாதிட்டு இருந்தாலோ, அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ இந்த ஜமாஅத் இவர்களைப் போல் வாய்பொத்தி இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

October 28, 2013, 2:59 PM

கோவிலைவிட கழிவறை முக்கியம் என்று மோடிசொன்னது சரியா

கேள்வி கோவில் கட்டுவதைவிட கழிப்பறைகள் கட்டுவதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று மோடி பேசியுள்ளாரே?

மசூது, கடையநல்லூர்

பதில் இதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

இதே கருத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் என்பவர் கூறினார். இதைக்கூறியவுடன் சங்பரிவாரத்தின் அனைத்து இயக்கங்களும் அவருக்கு எதிராக வரிந்துகட்டி எதிர்ப்புத் தெரிவித்தன. ஜெயராம் ரமேஷ்  இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று கூறாத ஒரு இந்துத்துவா கட்சியும் இருக்கவில்லை.

மோடி இப்போது கூறுவதுதான் அவரது உண்மையான கருத்து என்றால் ஜெய்ராம் ரமேஷ் கூறியதை நான் ஆதரிக்கிறேன் என்று அப்போது கூறியிருக்கவேண்டும். அவருக்கு தார்மீக ஆதரவு அளித்து இருக்க வேண்டும்.

அப்போது வாய்திறக்காமல்
மௌனமாக இருந்துவிட்டு இப்போது இந்தக் கருத்தைக்கூறுகிறார்.

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன? மோடி ஒரு சந்தர்ப்பவாதி என்பதும் உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் வேஷதாரி என்பதும்தான்.

இது புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயமாகும்.

இந்துத்துவா இயக்கங்கள் ஜெய்ராம் ரமேஷை எதிர்த்தது இந்து மதத்தின் மீது உள்ள பக்திக்காக என்றால் அதே கொந்தளிப்பை இப்போதும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மோடியின் வீட்டுமுன் விளக்குமாறுகளுடன் கூடியிருக்க வேண்டும். ஆனால் ஜெய்ராம் ரமேஷுக்குக் கொடுத்த எதிர்ப்பில் ஐந்து சதவிகிதம்கூட இவர்கள் கருத்துக் கூறவில்லை. கண்டிக்கவில்லை

இதிலிருந்து தெரியவரும் உண்மை என்ன?

இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்தும் இவர்களுக்கு இந்து மதத்தின்மீது நம்பிக்கை இல்லை. பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக உள்ளதால் இந்து உணர்வைக் கிளறி தம்மை வளர்த்துக் கொள்வதுதான் இவர்களின் நோக்கம் என்பது இதில் இருந்து தெரியும் இரண்டாவது உண்மையாகும்.

இது பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தங்கள் கடவுள் சிலையைத் தாங்களே உடைத்துவிட்டு முஸ்லிம்கள்மீது பழி போடுவதில் இருந்து இவர்களுக்கு இந்து கடவுள் மீது பக்தி இல்லை என்பதை முன்னரே நாம் பார்த்திருக்கிறோம்.

கற்பு, ஒழுக்கத்தை இந்து மதமும் அதில் நம்பிக்கை உள்ளவர்களும் பேணக்கூடியவர்களாக உள்ளனர். இந்து மதத்தின் பெயரால் இயக்கம் நடத்துவோர் பொது மக்களை விட அதிக பக்திமான்களாகவும் ஒழுக்கமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவினர் என்ன செய்தனர்? சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்தனர். நிர்வாண நடனத்தை ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் சேர்ந்து ரசித்தனர். நித்தியானந்தாவை தங்களின் லோட்டஸ் டிவியில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அழகியோடு பாஜக தலைவர் உல்லாசம் அனுபவித்த காட்சியை உலகமே பார்த்து காரித்துப்பியது. மயக்க மருந்து கொடுத்து சிறுமியைச் சூறையாடிய பாஜக தலவர்களும் உள்ளனர். குசும்ராயுடன் ஆட்டம் போட கல்யாண்சின், வேலைக்காரனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அமைச்சர் என நீளும் பட்டியலில் இருந்து இவர்களுக்கும் இந்து மதத்துக்கும் சம்மந்தமில்லை என்பதை இந்துக்கள் புரிந்து கொண்டனர். (இது குறித்து ஆதாரங்களுடன் தனிக்கட்டுரை காண்க)

மோடியின் இந்தத் தத்துவத்துக்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பதும் அந்தப் பட்டியலில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்து மதம் என்பது இவர்கள் கடைப்பிடிக்கும் தத்துவம் அல்ல. இந்துக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க உதவும் பிழைப்புக்கான ஒரு வழியாகும் என்பதை எஞ்சிய இந்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மோடியோ, ஜெயராம் ரமேஷோ இவர்கள் இவ்வாறு கூறியது சரியா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

இதுபோன்ற கருத்துக்கள் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடு என்று ஊடகங்கள் தூக்கிப்பிடிக்கின்றன.

உண்மையில் சிந்தனைக்குறைவின் காரணமாகவே இது போன்று உளறுகின்றனர் என்பது தான் நமது நிலைபாடு.

கோவில்கள் மீது முஸ்லிம்களாகிய நமக்கு நம்பிக்கை இல்லாததால் இது போன்ற பேச்சுக்களைக் கேட்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படக் கூடாது. இதை ஆதரித்தால் பள்ளிவாசல் கட்டுவதைவிட கழிவறைதான் முக்கியம் என்று ஒரு அரைவேக்காடு நாளைக்கு கூறுவான்.

இந்த இரண்டையும் கேட்டு நாத்திகர்கள் மகிழ்ச்சியடையக் கூடாது.

பெரியார் சிலை  வைப்பதைவிட, இயக்க அலுவலகம் கட்டுவதைவிட, கிளைகள் அமைப்பதைவிட ,கொடிகள் கட்டுவதைவிட கக்கூஸ் கட்டுவது நல்லது என்று கூறும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

இவை எல்லாம் மடத்தனமான வார்த்தைகள்.

ஒரு மனிதனுக்கு ஏராளமான தேவைகள் உள்ளன. அவை அனைத்தும் சமமான முக்கியத்துவம் உடையவை அல்ல என்ற போதும் மனிதன் அனைத்துக்கும் செலவிடுகிறான்.

ஆடை அணிவதை விட சோறுதான் முக்கியம் என்று கூறி நிர்வாணமாக யாரும் திரிவதில்லை. இரண்டையும் சேர்த்துச் செய்வது முரண்பாடானது அல்ல. சோற்றுக்கும் செலவிட்டு ஆடைக்கும் செலவிட  முடியும்.

குழம்பைவிட சோறு முக்கியம் என்பது உண்மை என்றாலும் இதன்படி வெறும் சோற்றை யாரும் சாப்பிடுவத்தில்லை.

கோவில் மீது நம்பிக்கை உடையவர்கள் கோவிலைக் கட்டுவதுடன் கழிவறையையும் கட்டுவதில் என்ன பிரச்சனை உள்ளது?

பள்ளிவாசலையும் கட்டிக் கொண்டு கழிவறைக்கும் செலவிடாமல் யாரும் இருப்பதில்லை. அரை வேக்காட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் அடிக்கடி இதுபோல உளறி அறிவாளிகாளாகக் காட்டப்பட்டு விடுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் மக்கள் பக்தியுடன் மதிப்பதையும், அவர்கள் இழிவாக நினைப்பதையும் சமமாக வைத்து யாரும் பேசுவது நல்லதல்ல.

 மோடியாக இருக்கப் போய் இவ்வாறு கூறிவிட்டு தப்பித்து விட்டார். இதை குலாம் நபி ஆசாத், அல்லது சல்மான் குர்ஷித் சொன்னால் என்னவாகி இருக்கும்?ஆபாச ஓவியன் ஹுசைனுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கும் நேர்ந்திருக்கும்.

இது போன்ற வாசல்களைத் திறந்து விடக்கூடாது என்பது தான் நமது நிலை.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

கோவில்களையும், பள்ளிவாசல்களையும் அதில் நம்பிக்கை உள்ள மக்கள் தமது சொந்தப் பணத்தில் செலவிடுகிறார்கள். இதில் அரசுக்கு எந்த வேலையுமில்லை.

ஆனால் கழிவறை கட்டுவது அரசின் கடமையாகும்.  

அது
மக்கள் செய்யவேண்டியது.

இது அரசு செய்ய வேண்டியது.  

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் இரண்டையும் ஒப்பிட்டு மோடி பேசியதிலும் அவரது மடமை  வெளிப்படுகிறது.

திருச்சியில் பிசுபிசுத்த மாநாட்டுக்குச் செலவு செய்த கோடிக்கணக்கான ரூபாயில் திருச்சி முழுவதும் கழிவறை கட்டலாமே என்று நாம் கேட்டால் மோடி இதற்கு கைதட்டுவாரா?

October 7, 2013, 1:42 PM

அப்பாவிகள் குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கையை பாஜக ஏன் எதிர்க்கிறது

கேள்வி அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளார்களா என்பதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை பா... ஏன் எதிர்க்கிறது?

அபு ஜாசிம்கொல்லாபுரம்

பதில் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் மத்திய அரசு இப்படி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானதுபோல் பா... நினைக்கிறது. நடுநிலையாளர்களையும் குழப்புகிறது.

மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை பாஜக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறதா என்று தெரியவில்லை.

முஸ்லிம் என்ற காரணத்துக்காக தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் சுற்ற்றிக்கை கூறுகின்றது.

நாட்டில் எந்த இந்துவும் இந்து என்ற காரணத்திற்காக பொய்வழக்கில் கைது செய்யப்பட்டதில்லை.

இந்துக்களிலும் அப்பாவிகள் மீது ஏராளமான பொய் வழக்குகள் உள்ளன. திருட்டு வழிப்பறி போன்ற வழக்குகளில் இந்துக்களில் பலர் மீது பொய்வழக்குகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்துக்கள் என்ற காரணத்திற்காக இந்த வழக்குகள் போடப்படவில்லை.

திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கணிசமான அளவுக்கு போடப்பட்ட பொய் வழக்குகளில் எல்லா மதத்தினரும் உள்ளனர். இதுபோன்ற வழக்குகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பினால் முஸ்லிம்கள் என்று மட்டும் குறிப்பிடுவதைத் தவறு என்று சொல்லலாம்

மத்திய அரசின் சுற்ற்றிக்கை இதைப் பற்றி பேசவில்லை.

இரு சமூகங்களுக்கு இடையே மோதல் நடக்கும்போது முஸ்லிம்கள் மட்டுமே பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர்.

மற்ற சமுதாயத்தினருக்கு மோதலில் தொடர்பு இருந்தால் மட்டுமே அவர்கள் சில நேரங்களில் கைது செய்யப்படுவார்கள். பொய்வழக்கில் இந்து என்ற காரணத்துக்காக எந்த இந்துவும் கைது செய்யப்பட்டதில்லை.

இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்ற்றிக்கை கூறுகிறது.

குண்டு வெடிப்புகள் மற்றும் தீவிரவாதச் செயல்கள் எங்கே நடந்தாலும், அதுபற்றி புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் மறுகணமே நான்கு முஸ்லிம்களைப் பிடித்து அந்த வழக்கில் அவர்களைச் சேர்த்து விடுகின்றனர். பின்னர் காலம் கடந்து உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் அப்பாவி முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதில்லை.

இது போன்ற வழக்குகளைத் தான் மத்திய அரசின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.

இது போன்ற வழக்குகளை எந்த இந்துவும் சந்தித்ததில்லை. குண்டு வெடிப்பிலும் தீவிரவாதச் செயல்களிலும் தொடர்பு உள்ளது நிரூபிக்கப்பட்டால் தவிர எந்த இந்துவும் இது போன்ற வழக்குகளில் பொய்யாக கைது செய்யப்பட்டதில்லை.

சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் ஒருவன் கிடைத்தால், அவனை சர்வதேச பயங்கரவாதியைப்போல் சித்தரித்து சிறையில் அடைக்கின்றனர். இந்த அவலத்தை வேறு எந்தச் சமுதாயமும் சந்திக்கவில்லை.

இதுபோன்ற வழக்குகளைக் குறித்துத்தான் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

முஸ்லிம்கள் மட்டுமே சந்திக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசும்போது முஸ்லிம்கள் என்று கூறுவது எப்படி மதச்சார்பின்மைக்கு எதிரானது ஆகும்.

இதிலும் பாஜகவின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வருகிறது.

தீவிரவாதிகள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா  என்று சுற்றறிக்கை அனுப்புவதைக் கண்டிக்கும் பாஜக, எங்கள் பிரதமர் வேட்பாளர்மீது போலி என்கவுண்டர் வழக்கு பற்றி ஆர்வம் காட்டவேண்டாம் என்று பிரதமரைக் கோருகிறது.

முஸ்லிம்  பெண்கள் உட்பட பல முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரையும் என்கவுண்டர் வழக்கில் சுட்டுத் தள்ளிய விஷயத்தில் மோடிக்குச் சம்பந்தம் உண்டு என்று அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டு இருக்கின்றன.

கிரிமினல் குற்றத்தில் தொடர்புடையவர் என்று தெரிந்தபின்னர் தான் மோடியை பிரதமராக இவர்கள் அறிவித்தார்கள். பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டபின்னர் என்கவுண்டர் பிரச்சினை எழுப்பப்படவில்லை.

இந்த அறிவுகூட பா...தலைவர்களில் ஒருவருக்கும் இல்லை.

அப்பாவிகள் மீது வழக்கு போடுவதைத் தவிர்க்குமாறு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையைக் கண்டித்துக் கொண்டு கிரிமினல் மோடிமீது வழக்குப் போடவேண்டாம் என்று கூறுவது எவ்வளவுபெரிய முரண்பாடு?

மக்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர்.

இந்த நேரத்தில் முஸ்லிம்கள் இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடக்கூடாது. மத்திய அரசு இப்படி அறிக்கை அனுப்பியுள்ளதால் காங்கிரஸ் கட்சி இதுபோல் அப்பாவிகளைத் தீவிரவாதிகளாக ஆக்கவில்லை என்று கருதக் கூடாது.

இதில் பாஜகவை மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்ளன. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக ஆக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றும் சிறையில் உள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் இது அதிகம் என்பதை இந்த அறிக்கை மூலம் மறைக்க முடியாது. தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் நடத்தும் நாடகம்தான் இது என்பதில் சந்தேகம் இல்லை.

திருடி விட்டு ஓடுபவன் திருடனைப் பிடி என்று கத்திக் கொண்டு ஓடுவது போல் தான் காங்கிரசின் இந்த அறிக்கையை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்

October 7, 2013, 1:38 PM

விஷ்வரூபம்2_நம்நிலை_என்ன

கேள்வி - விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன?

அஷ்பாக் அஹமது, பண்டாரவாடை

பதில்இரண்டாம் பாகம் வெளிவந்தாலும் அது இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் இருக்காது. முதல் பாகத்திற்கு முஸ்லிம் சமுதாயம் கொடுத்த எதிர்ப்புகள் மூலம் கமலஹாஸன் பாடம் படித்துவிட்டார் என்றே தெரிகிறது.

அதன்பின்னர் அவர் அளித்த நேர்காணல்களில் முஸ்லிம்களின் உணர்வு சரியானதுதான் என்ற கருத்தில் பேசினார். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இடம் பெறாது என்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறார்.

October 7, 2013, 1:35 PM

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!

ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது.

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது.

ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர்.

ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன?

சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த இடைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது.

கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எவ்வித மாயாஜாலங்களையெல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது.

அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர்.

உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான்.

ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம்.

இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார்.

மேலும் பச்சைமுத்து என்ற சாதிக்கட்சி நடத்தும் பாரி வேந்தர் தனது கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர்தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக நரபலி மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும்.

நாம் அறைகூவலாகவே சொல்கிறோம்.

அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும் லோட்டஸ் டிவியும் பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாங்களும் ஆதரவு தருகிறோம்.

அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கிறோம்.

அல்லது இந்த நாலரை லட்சம் பேர் கூடிய அதிசய மாநாட்டுக்காக எவ்வளவு செய்தார்களோ அந்த செலவை அவர்கள் காட்டும் கணக்கின் அடிப்படையில் நாங்கள் தந்து விடுகிறோம்.

தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் தனியாகவோ கூட்டாகவோ இந்த அறைகூவலை ஏற்கத்தயாரா?

அவ்வளவு வேண்டாம் அதில் பாதியளவு ஒன்னே கால் லட்சம் சேர்களை போட்டுக்காட்டத் தயாரா?

நாம் இப்படி சவால் விடுவதற்கு முன்னர் அந்த இடத்தில் எத்தனை சேர் போட முடியும் என்று மாநாட்டுக்கு மறுநாள் கள ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டுதான் இந்த சவாலை விடுகிறோம்.

கள ஆய்வு செய்யும் காட்சியை காணுங்கள்.
m1

ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையே ஒரு லாரி போகும் அளவுக்கு இடைவெளி விட்டு பாஜக போட்டது போல் சேர்களைப் போட்டால் ஒரு வரிசைக்கும் மறுவரிசைக்கும் இடையே இன்னொரு வரிசை அளவுக்கு இடைவெளி விட்டால் அதிகபட்சம் முப்பதாயிரம் சேர்களைக் கூட போட முடியாது என்பதுதான் உண்மை.

இந்தப் புளுகர்களுக்கு இதை பகிரங்க அறைகூவலாக சொல்லிக் கொள்கிறோம்.

அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்ட உரை :

இந்த நிகழ்ச்சியில் மோடி பேசிய உரையானது இவர் எவ்வளவு பெரிய கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் புகழ்ந்த மோடி :

தனது உரையின் துவக்கமாக மோடி சில நிமிடம் தமிழில் உரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய தமிழ் உரையை ஹெச்.ராஜா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து(?) கூறினார்.

வாலிப் சிங்கங்களே! என்ற மோடியின் தமிழ் உரையை, “வாலிப சிங்கங்களே!” என்று தமிழில் மொழிபெயர்த்தார் ஹெச்.ராஜா.

அதைத்தொடர்ந்து தமிழ் நாட்டிற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழர்கள்தான் என்னை எனது தொகுதியில் ஜெயிக்க வைத்தனர். தமிழ்ச் சங்க இலக்கியங்கள் என்றால் எனக்கு மிக விருப்பம். தமிழன் போன்று நல்லவர்கள் கிடையாது. தமிழ் மொழி போல மொழி கிடையாது என்று கூறி தமிழ் வெறியைத் தூண்டிவிட்டார் மோடி.

இவருக்கும் தமிழ் மொழிக்கும் எந்த உறவும் கிடையாது. தமிழ் மொழியை இவர் கற்றதும் கிடையாது. பல நாட்கள் உருப்போட்டும் வாலிப சிங்கங்களே என்பதை வாலிப் சிங்கங்களே என்று இவர் சொன்னதில் இருந்து இவருக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் வராது என்பதை அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களே விளங்கி இருப்பார்கள்.

போகிற இடங்களில் வசிக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக இது போல் பேசி ஏமாற்றும் சந்தர்ப்பவாதி நாட்டின் பிரதமரானால் என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடற்கரை உள்ளது. குஜராத்திலும் கடற்கரை உள்ளது என்று கொஞ்சம் அதிகமாகப் போய் உளறிக் கொட்டினார்.

அதுபோக இங்கே ராஜாஜி – அங்கே காந்திஜி. இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று தமிழர்களின் நெஞ்சை நக்குவதாக நினைத்துக் கொண்டு மோடி பேசினார்.

இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை அவரது பேச்சு நமக்கு உணர்த்தியது. இந்திய நாட்டின் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ஒரு நபர், அனைத்து மாநிலங்களையும், அனைத்து மொழிகளையும் சம தூரத்தில் வைத்து பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ்நாட்டில் வந்தால் தமிழை தூக்கிப்பிடிப்பதும். கன்னட நாட்டில் கன்னடத்தை தூக்கிப் பிடிப்பதும், ஆந்திராவிற்குச் சென்றால் தெலுங்கை தூக்கிப்பிடிப்பதுமாக இருந்தால் இவரது நயவஞ்சகத்தனமும், இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வருகின்றதா இல்லையா?

இதுபோல மற்ற மாநிலங்களில் சென்று அந்த மொழி பேசக்கூடியவர்களை உசுப்பேற்றி விட்டால் மொழி வெறி தூண்டப்படுவதன் காரணமாக நாட்டில் மொழிக்கலவரம் ஏற்பட அது வழி வகுக்குமா இல்லையா?

இத்தகைய காவிக்கயவர் கூட்டம்தான் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்று ரஜினிகாந்தை தங்களுக்கு ஆதரவாக அழைக்கின்றது.

இவர்களது நாலாந்திர ஐந்தாம் படை வேளைக்கு உதவ அவர் ரொம்பத் தகுதியானவர்தான். காரணம் என்னவென்றால் இதற்கு முன்பாக படையப்பா என்ற ஒரு படத்தில் இவர் ஒரு பாடலுக்கு ஆடும்போது, “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா? என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும், தமிழருக்கும் கொடுப்பது முறையல்லவா?” என்று பாடியிருப்பார்.

அதே படத்தை நரசிம்மா என்று தெலுங்கில் டப்பிங் செய்தார்கள். அதிலோ, “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தெலுங்கல்லவா? என் உடல் பொருள் ஆவியை தெலுங்குக்கும், தெலுங்கருக்கும் கொடுப்பது முறையல்லவா?” என்று பாடியிருப்பார்.

கன்னடத்திலும் இப்படி பாடியிருப்பார்.

ஒரு துளி வியர்வைக்கு ஒரு தங்கக் காசு என்பது நாலரை லட்சம் பேர் கூடியதாக இவர்கள் சொல்வது போன்ற பொய்க் கணக்குத்தான். ஒரு துளி வியர்வைக்கு ஒரு கோடி தங்கக் காசு என்ற கணக்கை விட அதிகமாகவே தமிழ் ஏமாளிகள் ரஜினிக்கு கொடுத்தனர் என்பது தனி விஷயம்.

இதுதான் இவரது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பது. அதைப்போல மோடியும் தான் செல்லும் மாநிலத்திற்கு தகுந்தாற்போல நாடகமாடும் நாடக நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். மோடி + ரஜினி கூட்டணி உண்மையிலேயே நல்ல நாடகக் கூட்டணிதான்.

அதுபோல இங்கேயும் கடற்கரை, அங்கேயும் கடற்கரை; இங்கே ராஜாஜி – அங்கே காந்திஜி என்பது போன்ற டயலாக்குகளெல்லாம் தமிழ் நாட்டில் வேகாது என்பது மோடிக்குத் தெரியவில்லை போலும். மோடியை விட செண்டிமென்ட் டச் பண்ணுவதற்கு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வித்துவான்கள் இருப்பது இவருக்குத் தெரியவில்லை.

“அண்ணா’ என்பது மூன்றெழுத்து, “அறிவு’ என்பது மூன்றெழுத்து’ என்று சொல்லி டயலாக் அடிப்பதற்கு இங்கே நிறைய ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதும் மோடிக்குத் தெரியவில்லை.

காந்தியைச் சுட்டுக்கொன்ற சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்த மோடிக்கு காந்தியை பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் பொய்யுரைத்த மோடி:

அடுத்ததாக மோடி மீனவர்கள் விஷயத்தைக் கையிலெடுத்தார். இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களையும், பாகிஸ்தான் இராணுவம் குஜராத் மீனவர்களையும் பிடித்துச் செல்கின்றது. இதற்குக் காரணம் மத்திய அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் வாஜ்பாய் ஆட்சியில் இதுபோன்ற நிலை இல்லை. மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். காங்கிரஸ் அரசு மத்தியில் இருப்பதால்தான் மீனவர்களை அண்டை நாடுகள் பிடித்து வைத்துக் கொள்கின்றது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் மோடி.

இந்திய நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி அடுத்த நாட்டின் கடல் எல்லைக்குள் புகுந்தால் அண்டை நாடு நமது மீனவர்களையும், அண்டை நாட்டு மீனவர்கள் நமது எல்லைக்குள் புகுந்தால் அவர்களை நமது நாட்டினரும் சிறைப்பிடிப்பது வழக்கம். ஆனால் அதற்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் தான் காரணம் என்று சொன்னதோடு, மாவீரர்(?) வாஜ்பேய் ஆட்சியில் இப்படி நடந்ததில்லை என்று கதை கட்டுகின்றார் மோடி.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இல.கணேசனுடன் நடத்திய விவாதத்தில் மோடி கூட்டத்திற்கு மறுநாள் நடந்த தந்தி டிவியின் நேரடி ஒளிபரப்பில் வாஜ்பேய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட புள்ளி விபரங்களை எடுத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் வாஜ்பாய் ஆட்சி போன பிறகு கங்கிரஸ் ஆட்சி வந்த போதுதான் விடுவிக்கப்பட்டார்கள் என்பதையும் புள்ளி விபரங்களுடன் போட்டு உடைத்தார். அதற்கு பதிலளிக்கத் திராணியற்ற இல.கணேசன் வாஜ்பாய் ஆட்சியில் மீனவர்கள் சிறைபிடிக்கப்படவில்லை என்பது மீனவர்களுக்குத் தெரியும் என்று கையாலாகத்தனமான பதிலைக் கூறி அசடு வழிந்தார். காங்கிரஸ் ஆட்சி வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு இலங்கை அரசு மீனவர்களை சிறைப்பிடித்திருக்கும் என்று இல.கனேசன் கூறியது உச்சகட்ட காமெடியாக இருந்தது. மோடியின் பித்தலாட்ட உரை இல.கணேசனின் வாயாலேயே இந்த விஷயத்திலும் அம்பலமானது.

அடுத்ததாக மோடி தனது உரையில் குறிப்பிட்டது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தன்மானம் பற்றியது.

மானம் கெட்டவர்கள் தன்மானத்தை பற்றிப் பேசியதுதான் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் வீரர்கள் துண்டிப்பது, எல்லை வீரர்களைக் கொன்று குவிப்பது என்று சம்பவங்கள் நடக்கும் போது நமது நாட்டின் பிரதமர் பாகிஸ்தான் பிரதமரோடு பேசுவேன் என்று கூறி சிக்கன் பிரியானி சாப்பிடுகிறார் என்றால் இது எல்லாம் எந்த தையரித்தில் நடக்கிறது.

இந்திய நாட்டில் ராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எல்லைக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இப்படி எதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு அரசைத் தூக்கி எறிய வேண்டியது நமது கடமையாகும் என்று அடுத்த கோரிக்கையை வைத்துள்ளார் மோடி.

இதில்தான் மோடியின் உச்சகட்ட பித்தலாட்டம் அம்பலத்திற்கு வருகின்றது.

மோடி இந்த உரையில் இரண்டு முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார்.

1.நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது.

2.அப்படி நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியவர்களோடு அமர்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார் பிரதமர். இது சரியா?

இதுதான் இந்த கோயபல்ஸ்களின் வாதம். இது எந்த அளவிற்கு அயோக்கியத்தனமான கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத வாதம் என்பதற்கு இந்த சங்பரிவாரக் கும்பல்களே ஆதாரமாகத் திகழ்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குரியாகிவிட்டது என்று பேசுவதற்கு மோடிக்கு என்ன தகுதியுள்ளது? சொந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து சொந்த நாட்டிலேயே இரண்டரை லட்சம் முஸ்லிம்களை அகதிகளாக ஆக்கி மகத்தான(?) பாதுகாப்பு அளித்த பெருமை மோடியையே சாரும். அந்த மாபாதகன் மோடிதான் மக்களது பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

இவருடைய ஆட்சியில் சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழக்கூடிய மக்களுக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை எனும் போது பாதுகாப்பைப் பற்றி மோடி பேசலாமா?

மோடியின் இந்த பசப்பு வாதம் புதிதல்ல. ஏற்கனவே இதே வாதத்தை முன்வைத்துத்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

அந்த ஆட்சியில் நாடு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியாது என்று மோடி நினைத்து விட்டார்.

பாஜகவின் ஆட்சியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் என்ன?

நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய பாராளுமன்றத் தாக்குதல்:

பாஜக ஆட்சியின் போதுதான் ஜனநாயகத்தின் சின்னமாகவும், நமது தேசத்தின் அடையாளமாகவும் திகழக்கூடிய பாராளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கினர். இதை விட ஒரு அரசாங்கத்திற்கு கேவலம் என்ன இருக்க முடியும். இதைவிடக் கேவலமான முறையில் எந்த ஒரு அரசாங்கத்தாலும் பாதுகாப்பு வழங்க இயலாது.

கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியவன் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனை மேடை போட்டு விமர்சிப்பதற்கும் மோடியின் இந்த நாலாந்தர பேச்சுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

தீவிரவாதிகளை தீவிரவாதிகளிடத்தில் பத்திரமாக ஒப்படைத்த ஒரே ஆட்சி:

அதுமட்டுமா? பாஜக ஆட்சியின் போதுதான் கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கடத்தப்பட்டது. விமானத்தை விடுவிக்க வேண்டும் என்றால், ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என விமானத்தைக் கடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். இதை பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்டு விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளிடம் அவர்கள் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் இந்தியாவிலிருந்த தீவிரவாதிகளை தீவிரவாதக் கூட்டத்திடமே பத்திரமாக அழைத்துச் சென்று ஒப்படைத்தது. அப்போது பா.ஜ.க. தலைமையிலான அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் தலைமையில், தனி விமானத்தில் அந்தத் தீவிரவாதிகளை ஏற்றிச்சென்று ஒப்படைத்துவிட்டு, பயணிகளுடன் நமது விமானத்தை மீட்டு வந்தார்.

இதன் காரணமாக உலக அரங்கில் இந்திய நாடு மிகப்பெரும் கேவலத்தைச் சந்தித்தது. இதைவிட பாதுகாப்பு விஷயத்தில் ஒரு கேவலம் வேண்டுமா?. இத்தகைய பாதுகாப்பைத்தான் மோடி மறுபடியும் நமது நாட்டு மக்களுக்கு பா.ஜ.க தலைமையில் அமையும் ஆட்சியின் மூலம் வழங்குவார்கள் என்பதில் நாட்டு மக்களுக்கு சந்தேகம் இல்லை.

இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்ற கொடூரம் :

தற்போது மத்திய அரசின் பாதுகாப்பற்ற தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு மோடி தனது பேச்சில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் இராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பில்லை. இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள். இது எந்த அளவிற்கு மத்திய அரசு பலவீனமாக உள்ளது என்பதைக் காட்டுகின்றது என்று சொல்லியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்வது இப்போது முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருக்குமேயானால் மோடி சொல்வதை நியாயம் என்று நம்பலாம். ஆனால் நடப்பு என்ன?

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய இராணுவ வீரர்களின் தலையை அறுத்து முண்டத்தை போட்டுவிட்டுச் செல்லும் சேட்டையை முதன்முதலில் பாஜக ஆட்சியின் கடந்த கிபி 2000ஆம் ஆண்டின் போதுதான் ஆரம்பித்து வைத்தார்கள். இந்த உண்மையை வசமாக மறைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர் போல் நல்லபிள்ளை நாடகமாடுகின்றார் மோடி.

பாஜக அரசு அப்போதே ராணுவ நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? அதை யார் தடுத்தது?

இராணுவத் தளபதி விக்ரம் சிங் இந்த உண்மையை புள்ளிவிபரங்களோடு கடந்த ஜனவரி மாதத்தில் போட்டு உடைத்தார். இதற்கும் பாஜக ஆட்சிதான் வழிகாட்டியுள்ளது எனும்போது காங்கிரஸ் அரசை மோடி குற்றம்சாட்டி தன்னை நல்ல பிள்ளை போல காட்ட முயல்கின்றார்.

இதுதான் பாஜக ஆட்சியில் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு கிடைத்த லட்சணம்.

100கிலோ மீட்டர் பரப்பளவை பாகிஸ்தானிடம் இழந்து பா.ஜ.க. தந்த பாதுகாப்பு:

அதோடுமட்டுமல்லாமல் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் நமது நாட்டை எந்த அளவிற்கு அந்நிய சக்திகளிடமிருந்து பாதுகாத்தது என்பதற்கான ஆதாரம்தான் கார்கில் போர் ஆகும்.

கார்கில் போர் நடந்தபோது மோடி கோமாவில் இருந்தாரா என்று நமக்குத் தெரியவில்லை.

கார்கில் போர் நடக்க காரணம் என்ன? பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவம் கிட்டத்தட்ட 100கிலோமீட்டர்களுக்கு மேலான இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது. அந்நிய நாட்டுப்படை தங்களது இராணுவ துருப்புகளோடு இந்தியா நாட்டின் பாதுகாப்பு எல்லையைத் தாண்டி 100கிலோமீட்டர் தூரம் கடந்து நமது நாட்டை ஆக்கிரமிப்பதாக இருந்தால் எத்தனை நாட்கள் செலவிட்டிருக்க வேண்டும்? எவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்? இது எதுவுமே பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்குத் அப்போது தெரியவில்லை. இவ்வளவு ஆக்கிரமிப்பும் நடந்து முடிந்த பிறகுதான் இந்தச் செய்தி தூங்கிக்கொண்டிருந்த பாஜக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகுதான் கார்கில் போர் நடத்தி இழந்த பகுதிகளை மீட்டெடுத்தார்கள். இதுதான் பா.ஜ.க. ஆட்சி தந்த பாதுகாப்பு. இந்த பாதுகாப்பைத்தான் மோடி தரப்போகிறாரா?

கார்கில் என்பது பாகிஸ்தான் நாட்டில் உள்ளது போலவும் அங்கே போய் வீரதீர சண்டையிட்டு மீட்டு வந்தது போலவும் கார்கில் நாயகன் என்று வாஜ்பேய்க்கு பட்டம் வேறு கொடுத்துக் கொண்டார்கள் நாட்டுபற்று இல்லாத இந்த நயவஞ்சகர்கள்.

ஒரு காவல் நிலையத்தை ரவுடிக் கூட்டம் கைப்பற்றிக் கொள்கிறது. இப்படி கைப்பற்றிக் கொண்ட விபரம் ஆறு மாதமாக மாவட்ட காவல்துறை அதிகாரிக்கோ மாநில காவல்துறை ஆணையருக்கோ மாநில முதல்வருக்கோ தெரியவில்லை. ஆறுமாதம் கழித்து பத்திரிகையில் செய்திகள் வந்த பின்னர்தான் விபரம் தெரிந்து ரவுடிகளை அப்புறப்படுத்தி காவல் நிலையத்தைக் கைப்பற்றினார்கள் என்றால் காவல் ஹீரோ என்று யாரேனும் சொல்வார்களா?

வேறு ஆட்சியில் பறிகொடுத்த கார்கிலை பாஜக ஆட்சி மீட்டு எடுத்தால் கூட இதைப் பாராட்டலாம். பறிகொடுத்ததே பாஜக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தான் எனும் போது இவர்களை நம்பி நாட்டை மீண்டும் ஒப்படைத்தால் பாகிஸ்தான் ராணுவம் டெல்லியில் தனது படைகளைக் குவித்தாலும் ஆறுமாதம் கழித்துத்தான் இவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். இது போன்ற பாதுகாப்பு தான் நாட்டுக்கு தேவையா?

இத்தகைய கேவலமானதொரு ஆட்சியை வழங்கியவர்கள் நாட்டின் பாதுகாப்பைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

பாகிஸ்தான் தலைவர்களுடன் சிக்கன் பிரியாணி தின்னலமா?:

அடுத்ததாக மோடி எழுப்பிய கேள்விதான் தங்களுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லை என்பதை வெளிக்கொணர்ந்து வந்த கேள்வி.

நமது நாட்டு இராணுவ வீரர்களைப் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தாக்கி வரும் இவ்வேளையில் அந்த நாட்டு தலைவர்களோடு சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்றார் நமது பிரதமர். நாட்டிற்கு தன்மானம், கௌரவம் முதலில் முக்கியம். தன்மானத்தையும், கௌரவத்தையும் விட்டுவிட்டு பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு செய்வதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று நான் கேட்கிறேன் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று மோடி கேள்வி எழுப்பினார். கூடியிருந்த கூட்டத்தில் மோடியின் கேள்விக்கு பலத்த(?) வரவேற்பு. எந்த அளவிற்கு வரவேற்பு(?) என்றால் மொத்தமே இருபது பேர் கூட அதற்கு கரவொலி எழுப்பவில்லை. ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து சொன்ன பிறகும் எல்லோருமே ஜடங்களைப்போல அமர்ந்திருந்தினர். மறுபடியும் கேட்கிறேன்; மறுபடியும் சொல்லுங்கள் என்று மோடி கேட்க, அப்போதும் அந்த 20பேர்தான் கரவொலி(?) எழுப்பினார்கள். மீண்டும் கேட்கிறேன் என்று மோடி மீண்டும் கேட்க, முதலில் கத்திய 20நபர் கூட கடைசியில் கரகோஷம் எழுப்பாமல் மோடியின் முகத்தில் கரி பூசினார்கள். கடைசியாக மோடி இவ்வாறு கேட்கும் போது முன்வரிசையில் அமந்திருந்த மூவர் குஷன் மெத்தையில் மல்லாக்க தலையைப் பின்புறமாக தொங்கவிட்டு படுத்துக் கிடந்தனர்.

(இதற்கு ஆதாரமாக வீடியோ காட்சிகள் நம்மிடம் உள்ளன)

அந்த அளவிற்கு மோடியின் இந்தப் பேச்சிற்கு பலத்த(?) வரவேற்பு. வந்த அனைவரும் கூலிப்படையினர்தான். கொடுத்த காசுக்காக வந்திருக்கின்றார்கள். வாங்கிய காசுக்குக்கூட சரியாகக் கூவவில்லை என்பது அங்கே வெட்ட வெளிச்சமானது.

இந்த பலத்த(?) கரகோஷத்திற்குப் பிறகு மோடி சொன்னதுதான் காமெடியிலும் காமெடி. “பிரதமர் அவர்களே! இந்த கருத்தை நான் சொல்லவில்லை; மக்கள் சொல்கின்றார்கள்” என்று மோடி நாக்கூசாமல் புளுகினார். திரண்டிருந்த மக்களில் 20 பேர் கூட மோடியின் இந்தக் கருத்தை ஆமோதிக்கவில்லை. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கூட அதை ஏற்கவில்லை எனும்போது மோடி தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அங்கு நிரூபித்தார்.

பாகிஸ்தான் தலைவர்களுடன் மன்மோகன் சிங் தற்போது சிக்கன் பிரியாணி உண்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றாரே மோடி. இவரது பா.ஜ.க.வின் ஆட்சியில் நடந்தது என்ன என்பதை மோடி ஒப்பிட்டு பார்க்க வேண்டுமா இல்லையா?

பாகிஸ்தான் வீரர்கள் நமது நாட்டின் இராணுவ வீரர்களைக் கொன்று குவிக்கும் நிலையில் அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நாட்டின் தன்மானத்திற்கும், கௌரவத்திற்கும் இழுக்கு என்றால் கார்கில் பகுதியை ஆக்கிரமிப்பதில் தலைமையேற்று நடத்திய முஷரப் அதிபராக இருந்தபோது, கார்கில் போரில் பல இந்திய இராணுவ வீரர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த முஷரபை இந்தியாவிற்கு அழைத்து அவரோடு வாஜ்பேயியும், அத்வானியும் கைகுலுக்கினார்களே! அது மானமுள்ள செயலா? அல்லது மானம் கெட்ட செயலா?

மோடிக்கு வெட்கம் வேண்டாமா?

அத்தோடு மட்டுமல்லாமல், முஷரபிற்கு தலைநகர் டெல்லியில் வைத்து இந்திய இராணுவ வீரர்கள் இராணுவ மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு நடத்தி பாஜக ஆட்சியில் பிரதமர் வரவேற்பு வழங்கினாரே! இது மானமுள்ள செயலா? மானங்கெட்ட செயலா?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபுடன் இணைந்து டாட்டா காட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்து பாகிஸ்தானிற்கு பஸ் விட்டாரே வாஜ்பேய். இதுதான் மோடியின் பார்வையில் தன்மானமுள்ள, நாட்டின் சுய கௌரவத்தைக் காக்கக்கூடிய லட்சணமா என்பதை மோடியும், சங்பரிவாரக்கூட்டமும் மறைக்க முயன்றாலும் மக்கள் தெளிவாக இதை நினைவில் வைத்துத்தான் உள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமரோடு மன்மோகன் சிங் சிக்கன் பிரியாணி உண்டதுபோல, பாகிஸ்தான் தலைவர்களோடு சேர்ந்து வாஜ்பேயும் வெஜிடேபிள் பிரியாணி சாப்பிட்டுள்ளார் என்பதை மோடி மறந்துவிட்டாரா! அல்லது அவரது தன்மானம்(?) அதை மறைந்துவிட்டதோ தெரியவில்லை.

அது மட்டும் இவ்வளவு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு பஸ் விட்டதும் பாஜக ஆட்சிதான்.

உலக நடப்பு அறியாத மோடி:

இது குறித்து குறிப்பிடும்போது மோடி சில நாட்டுத்தலைவர்கள் குறித்து உதாரணத்தைக் கூறினார். தனது நாட்டை உளவுபார்த்த ஒருவனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்யாவில் கால் வைக்கவில்லை என்று மோடி யாரோ விவரமில்லாமல் தவறாக எழுதிக் கொடுத்ததை உளறிக் கொட்டினார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதிதான் ஒபாமா ரஷ்யாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். 20நாட்களுக்கு முன்பு நடந்த உலக நிகழ்வுகூட தெரியாத இந்த கூமுட்டையைத்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் என்று அறிவித்து பிரதமர் பதவியையே அசிங்கப்படுத்தி வருகின்றனர் காவிகள்.

அது மட்டுமின்றி தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றுவதாக எண்ணிக் கொண்டு உப்பு சத்தியாக்கிரகம் வ.உ.சி தலைமையில் தமிழகத்தில் நடந்தது. அவ்வளவு பெருமைக்குரிய மாநிலம் தமிழகம் என்றார்.

வ.உ.சி உப்பு சத்தியாக்கிரகத்தை எதிர்த்தவர் என்ற சாதாரண பொது அறிவு கூட மோடிக்கு இல்லை. ராஜாஜி தலைமையில் தான் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது என்று வாயில் வந்ததை உளறிக் கொட்டும் அறிவிலி பொய்யன் நாட்டின் பிரதமராகலாமா?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் இந்திய பிரதமரை கிராமத்துப் பெண்ணோடு ஒப்பிட்டு பேசியதாக டெல்லிக் கூட்டத்தில் புளுகி மாட்டிக் கொண்டார். அப்படி நவாஸ் ஷரீப் பேசவேயில்லை என்று மறுநாளே அம்பலமாகிப் போனது.

பேசுவதெல்லாம் பொய். சுய ஆய்வோ சுய சிந்தனையோ சிறிதும் இல்லாமல் எவனோ எழுதிக் கொடுக்கும் பொய்களைப் பரப்ப ஒரு பிரதமர் தேவையா?

நீரோ மன்னன் ஹீரோவாக முயற்சிக்கலாமா?:

நாடே தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு சம்பவம் கூறுவார்கள். மோடியை நினைக்கும் போது அந்த நீரோ மன்னன் ஞாபகம்தான் நமக்கு வருகின்றது.

குஜராத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து மக்கள் அவதிக்குள்ளாகி வரும் வேளையில் அங்குபோய் மீட்பு பணியைப் பார்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் பதவி வெறி பிடித்து திருச்சியில் வந்து படம் காட்டுவது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைத்தான் ஞாபகப்படுத்துகின்றது. உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்ட போது பத்து காரில் போய் 15 ஆயிரம் மக்களை மீட்டதாகப் புளுகியவர் சொந்த மாநிலத்தில் மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள போது திருச்சியிலும் சென்னையிலும் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பவரிடம் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும்?

பணத்திற்கு விலைபோன புலனாய்வு(?) பத்திரிக்கைகள்:

மோடி விஷயத்தில் கேடித்தனம் செய்தது மோடி மட்டுமல்ல. நமது தமிழகத்து மீடியாக்களும்தான். ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி மோடிக்கு கூட்டம் சேர்ப்பதற்காக வாங்கிய காசுக்கு மேலாக கூவினர். அதிலும் குறிப்பாக புலனாய்வு இதழ்கள் நடத்திய புலனாய்வு லட்சணங்கள் மோடி விஷயத்தில் அம்பலத்திற்கு வந்தன.

இரண்டு பக்கத்திற்கு இந்த புலனாய்வு வார இதழ்களுக்கு விளம்பரம் கொடுத்து விட்டால் போதும், “வரலாறு காணாத கூட்டம்!” “திணறியது திருச்சி!” “பா.ஜ.விற்கு திருப்புமுனை தந்த திருச்சி” என்று வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். அதே வேலையைத்தான் மோடி விஷயத்திலும் செய்தார்கள்.

இவர்கள் தாங்கள் வாங்கிய காசுக்கு ஏற்றாற்போல தொழில் செய்யும் எழுத்து விபச்சாரிகள்தான் என்பதை நிரூபித்தனர். இவர்கள் இந்தத் தொழில் செய்வதற்கு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்தலாம் என்று நடுநிலையாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

வாங்கிய காசுக்கு கூவிய தினமணி:

தினமணி நாளிதழ் திருச்சி மாநாடு நடப்பதற்கு முன்பாகவே மோடியைப் புகழும் விதத்தில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டது.

“பிரியாணி கிடையாது;

கைப்பணம் கிடையாது;

சரக்கு கிடையாது;

ஆளுக்கு ரூ10 டிக்கட் வாங்கி ஒன்றரை லட்சம் பேர் மோடி பேச்சைக் கேட்கப்போறாங்களாம். இவர் பிரதமர் ஆவதற்கு முன்னாடியே நாடு கெட்டுப்போயிருச்சு” என்று மோடியைப் புகழும் விதத்தில் அந்த கார்ட்டூனை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ்.

மாநாடு நடந்து முடிந்து, அந்த மாநாட்டில் ஆனலைனில் பதிவு செய்த ஒன்றரை லட்சம் பேர் வந்து கலந்து கொண்டு, மாநாட்டிற்கு வந்த யாருமே பா.ஜ.க.வினரிடத்தில் பிரியாணி பொட்டலம் வாங்காமல், சரக்கு வாங்கி அடிக்காமல், கைப்பணம் பெறாமல் தியாகம் செய்து வந்திருந்தால் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பலாம். ஆனால் மாநாடு நடப்பதற்கு முன்பே பிரியாணி, கைப்பணம், சரக்கு வழங்கப்படவில்லை. மாநாட்டிற்கு வரக்கூடிய யாருமே இவைகளை வாங்காமல் மாநாட்டிற்கு வருகின்றார்கள் என்று தினமணி அவிழ்த்துவிட்டது தார்ப்பாயில் வடிகட்டிய பொய் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

வந்திருந்த அனைவரும் மப்பில் மிதந்தார்கள் என்பதற்கு மோடி ஆக்ரோஷமாக மக்களை நோக்கி கேள்வி எழுப்ப அனைவரும் வேறு உலகத்தில் இருந்ததும், ஜடமாகி கிடந்ததும் சிறந்த ஆதாரம்.

காந்திக்கு முடிவு கட்டிய காவி கயவர்கள்:

காங்கிரஸைக் கலைத்து அதன் மூலம் காங்கிரஸிற்கு முடிவு கட்ட வேண்டும்

என்று காந்தி சொன்னதாக மோடி தனது உரையில் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு முன்பாகத்தான் காந்திக்கே சமாதி கட்டி, காந்திக்கு முடிவு கட்டியவர்கள்தான் இந்தக் காவிக்கயவர்கள் என்பதை மோடி வசமாக மறைத்துவிட்டார்.

மீடியாக்கள் அனைத்தும் மகுடி வாசித்தும் பிசுபிசுத்த மாநாடு:

சங்பரிவாரக் கும்பல்களின் சதி வேலை அனைத்தும் திருச்சி மாநாட்டில் முறியடிக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அனைத்து மீடியாக்களும் மோடிக்கு ஆதரவாகத்தான் தங்களது விளம்பரங்களையும், செய்திகளையும் வாசித்தன. இவர்கள் கொடுத்த பில்டப்புகள் கொஞ்ச நெஞ்சமல்ல. தினத்தந்தி என்ற நாளிதழ் சார்பாக நடத்தப்பட்டு வரும் தந்தி டிவியும் இதற்கு ஆதரவாக களமிறங்கியது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் காட்டிவிடலாம் என்றும் அவர்கள் போட்ட சதி வேலை அனைத்தும் பிசுபிசுத்துப் போனது.

இவர்கள் கொடுத்த பில்டப்புகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த தமிழகமும் திருச்சியில்தான் குழுமியிருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மீடியாக்களின் சதிவேலைகளை மக்கள் நம்பத் தயாரில்லை என்பதையும், மோடி என்பவனை மக்கள் தூரமாகத்தான் தள்ளி வைத்துள்ளார்கள் என்பதும் திருச்சி மாநாட்டின் வாயிலாக வெட்ட வெளிச்சமானது.

இந்த நரபலி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக பா.ஜ.க. ஏற்கனவே பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களைப் பெற்று மண்ணைக் கவ்வ உள்ளது என்பது வல்ல இறைவனின் நாட்டப்படி நடக்கும். இன்ஷா அல்லாஹ்….

இது தினமலர் ஸ்டைல் :

இதுபோன்றுதான் ஊர், பெயர் ஆகியவற்றை கற்பனையாக போட்டு தினமலர் நாளிதழ் பொய்களை எழுதுகிறது. கீழ்க்கண்ட கருத்துக்களும் தினமலர் நாளிதழை பின்பற்றி எழுதப்பட்டது.

மாநாட்டிற்கு வந்திருந்தோர் கருத்துக்கள்:

சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை:

மாநாட்டிற்கு ஏதோ பெருமளவில் கூட்டம் கூடும் என்று வந்திருந்தேன். ஆனால் மொத்தம் 10ஆயிரம் பேர் கூட தேர மாட்டார்கள். கூட்டம் மிக மிகக் குறைவு. இந்தக்கூட்டத்தைப் போல ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நான் கண்டதே இல்லை என்று மோடி சொன்ன போது சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை.

- திருச்சி பொன்மலை நகர் மாரிமுத்து

நான் ஆன்லைன் வாயிலாக எனது பெயரைப் பதிவு செய்தேன். நானே கிட்டத்தட்ட 50பெயர்களைப் பதிவு செய்தேன். அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனலைனில் பதிவு செய்ததாக எனக்கு மாநாட்டிற்கு முந்தைய நாளில் வந்த எண் 10,530. அப்போதுதான் எனக்கு விளங்கியது மொத்தமே இதுவரை 10ஆயிரம் பேர் தான் பதிவு செய்துள்ளார்கள் என்று. அதிலும் என்னைப்போன்று எத்தனை பேர் 50 தடவை பதிவு செய்தார்களோ! தெரியவில்லை. அதற்கு ஏற்றாற்போலத்தான் கூட்டமும் இருந்தது.

- தெட்சிணா மூர்த்தி, கரூர்

மாநாட்டில் கூட்டம் எவ்வளவு உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக காவி துண்டு போட்டுக் கொண்டு சென்றிருந்தேன். வந்திருந்தவர்களின் வாயிலிருந்து பெருவாரியாக டாஸ்மாக் வாடை நாறியது. பாதிப்பேர் சரக்கு கேஸ்கள் என்பது தெரிந்தது.

- சுகுமாரன், மதுரை

கொடுத்த பில்டப்புகளுக்கும், மாநாட்டில் கூடிய கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை. மாநாடு மொத்தத்தில் ஊத்திக்கிச்சு. பா.ஜ.க.வும் ஊத்திக்கொள்ளும்.

- ராஜாராம், நாமக்கல்

October 3, 2013, 1:17 PM

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்!

மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதும் ஜால்ராக்கள்! 

மோடிதான் அடுத்த பிரதமர்; இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகின்றது. மோடிக்கு ஆதரவு ஊற்றெடுத்து பெருகி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று அநேக பில்டப்புகளை கொடுத்து ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்கள்தான் தற்போது அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கும் செய்தியாக உள்ளது. 

கருத்துக்கணிப்பில் மோடிதான் முன்னணியில் உள்ளார் என்று கூறி கருத்து திணிப்பை இப்போதிருந்தே மீடியாக்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மோடி என்ற நரமாமிசப் பிரியரை பிரதமராக்காமல் ஓயமாட்டோம் என்று மீடியாக்கள் உறுதிமொழி ஏற்றதுபோல அவைகளின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. 

அரியானாவில் மோடி உரையாற்றக்கூடிய நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ள தந்தி டிவி நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய அளவிற்கு மோடிக்கு ஆதரவாக மகுடி ஊதி வருகின்றனர் நமது மீடியாக்கள். 

திருச்சியில் பா.ஜ.க. சார்பாக நடைபெறவுள்ள மாநாட்டில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் குவிய உள்ளார்கள் என்று இவர்கள் காட்டும் பில்டப்புகள் எல்லை கடந்து செல்கின்றன. 

மோடிக்கு மிரட்டல் உள்ளதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை; அவர் குண்டு துளைக்காத மேடையில் நின்று உரையாற்றப்போகின்றார். அவருக்கு ரஜினி ஆதரவு தரப்போகின்றார்; இதற்கென தனியாக பாடல் ரிங்டோன்களை பா.ஜ.க. அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தனியாக பிரச்சார சிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன; சாமானியர்கள்; தொழிலாளர்கள்; தொழில் அதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களுடைய ஆதரவும் மோடிக்குத்தான் என்று இவர்கள் மோடியை புகழ்ந்து தள்ளி எழுதுவதைக்காணும் போது தமிழகத்தையும் குஜராத்தாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் போலும் என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது. 

குஜராத் போன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றுவதுதான் இவர்களுக்கு விருப்பமாம். ஆம்! குஜராத்தில் எப்படி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை மோடி கருவறுத்து இரத்த ஆறு ஓட்டினாரோ அதுபோல இந்தியா முழுவதும் இரத்த ஆறு ஓடவிடவேண்டும் என காவிக்கரை படிந்த மீடியாக்கள் எதிர்பார்க்கின்றனர் போலும். 

மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது. 

1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம். 

பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள். ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம். 

இந்த லட்சணத்தில்தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள்தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. 

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத்தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது. 

மோடியை கதாநாயகனாக சித்தரிக்கும் இதே வேலையில் அந்த நரபலி நாயகன் செய்த மிருக வெறிச்செயல்களை, இரத்தம் குடித்த கொடூரத்தை வசதியாக மறைத்து இந்த காட்டுமிராண்டியை மனித நேய விரும்பியைப்போல காட்டி மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையையும் இந்த மீடியாக்கள் செய்து வருகின்றனர். 

இவற்றையெல்லாம் காணும்போது இதற்கு முன்பு வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கின்றது என்று சொல்லி காட்டப்பட்ட பில்டப்புகள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. 

இந்தியா ஒளிர்கின்றது; நாடு முழுவதும் வாஜ்பேயி அலை வீசுகின்றது. வாஜ்பேயிதான் அடுத்த பிரதமர். இவரைப்போல ஒரு சாது கிடையாது; இவர்தான் உலக அளவில் இந்தியாவை தூக்கி நிறுத்தினார் என்றெல்லாம் சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். கடைசியில் வாஜ்பேயி மண்ணைக்கவ்வினார். பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. அதுபோலத்தான் இவர்கள் மோடிக்கு கொடுக்கும் பில்டப்புகளும் இறைவனின் அருளால் புஷ்வாணமாகிப்போகவுள்ளது என்பதை தற்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.

September 23, 2013, 1:14 PM

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

பாஜக அல்லாத ஆட்சிகளில் கலவரம் நடக்கவில்லையா

    கேள்வி - குஜராத்தில் மோடி நடத்திய மிருக வெறியாட்டத்தைப் பற்றி பேசுவோர் காங்கிரஸ் ஆட்சியிலும் இன்னபிற மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

கலவரங்கள் எல்லா ஆட்சியிலும் தான் நடக்கிறது. எல்லா கலவரங்களிலும் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் கேள்வி எழுப்புகின்றனவே? இந்தக் கேள்வி நியாயமானது தானா?

    சொல்லின் செல்வன், அதிராம்பட்டிணம்

   பதில் - குஜராத்தில் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பது உண்மை. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆட்சியிலும் கலவரங்கள் நடந்துள்ளன என்பதும் உண்மை. சில கலவரங்களில் குஜராத்தை விட அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் உண்மைதான்.

ஆனால் குஜராத் வன்முறைக்கும் இன்னபிற மாநிலங்களில் நடந்த வன்முறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை சங்பரிவாரமும் அதன் சார்பு ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன.

மற்ற மாநிலங்களில் நடந்த கலவரங்களின் போது மநில அரசின் கையாலாகாத்தனம் காரணமாக இருக்கும்.

மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரடியாகத் திட்டமிட்டு நடத்தி இருக்க மாட்டார்கள்.

பெரும்பான்மை பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்கத் தவறிய குற்றத்தைத்தான் அவர்கள் செய்தனர்.

ஆனால் குஜராத்தில் மோடிதான் கலவரத்தை நடத்தியவர். அவரது அமைச்சர்கள்தான் முன்னின்று நடத்தினார்கள். காவல் நிலையத்தில்தான் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

பிற ஆட்சியில் பிற மாநிலங்களில் நடந்த கலவரத்தின்போது 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அந்த மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

குஜராத் கலவரத்தின்போது மோடி அல்லாத வேறு யாராவது முதல்வராக இருந்திருந்தால் அப்போது கொல்லப்பட்டவர்களில் கால்வாசி மக்கள் கூட கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள்.

மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரத்தை நடத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்காக 28 ஆண்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

உபியில் கலவரம் செய்வதற்காக மோடியால் அனுப்பி வைக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் அமைச்சராக இருந்த அமித்ஷா என்ற கொடியவனுக்கு கலவரத்தில் சம்மந்தம் உண்டு என்று நிரூபிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளான்.

காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

மற்ற கலவரங்களுக்கும் மோடி நிகழ்த்திய கலவரத்திற்கும் இதுதான் பெரிய வேறுபாடு.  இதைத் திட்டமிட்டு ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.

மேலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற மாநில அரசுகள் இழப்பீடு அளித்தன. இடிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் அரசுத் செலவில் புணர்நிர்மானம் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் பயங்கரவாதி மோடியோ இதைக்கூட செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

மற்ற கலவரங்கள் ஆள்வோரின் திறமையின்மையால் நடந்தன.

ஆனால் குஜராத் கலவரம் மோடியின் மதவெறித் திமிரால் திறமையாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரசின் திறமையின்மையும், அரசே கலவரத்தை முன்னின்று நடத்துவதும் சமமாகுமா?

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முறையாக வழக்கு பதிவு செய்து மற்ற மாநில அரசுகள் தாமதமாக நீதி வழங்கினார்கள்.

ஆனால் கலவரக்கார்களை தப்பிக்க வைக்க எல்லா அயோக்கியத்தன்ங்களையும் செய்தவர் பயங்கரவாதி மோடி. நாட்டின் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்கா விட்டால் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள். இந்த வித்தியாசம் தினமணிக்கும் தினமலருக்கும் தினத் தந்திக்கும் நன்றாக தெரியும். ஆனாலும் அவர்களின் மதவெறி இந்த உண்மையை மறைக்கச் சொல்கிறது.

ஒரு ஊரில் காவல் நிலையம் இருந்தும் திருட்டுக்கள் நடக்கின்றன. 100 கோடி ரூபாய் அளவுக்கு திருட்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு ஊரில் 10 கோடி அளவுக்குத்தான் திருட்டு நடந்துள்ளது. ஆனால் இந்த பத்து கோடி திருட்டையும் காவல்துறையினரே செய்துள்ளார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

இரண்டும் சமமானதா? பத்து கோடியைவிட நூறு கோடி பெரிது என்று மனசாட்சியுள்ளவர்கள் பேசுவார்களா?

ஒன்று சமூக விரோதிகளின் திருட்டு. இன்னொன்று காவல்துறையே நடத்திய திருட்டு என்று வேறுபடுத்தி பேச மாட்டார்களா? இவர்களைப் போலீஸ் வேலைக்கே வைக்கக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா?

மோடி செய்த்து இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

தினத்தந்தியும், தினமலரும் தினமணியும் என்னதான் திசை திருப்பினாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். நடுநிலையான இந்துக்கள் மோடி என்ற பயங்கரவாதியைப் பிரதமராக ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.

September 23, 2013, 1:01 PM

மோடியின் தமிழக வருகைக்கு எதிராக?

மோடியின் தமிழக வருகைக்கு எதிராக?
கேள்வி
- மோடியின் தமிழக வருகை குறித்து தவ்ஹீத் ஜாமஅத்தின் நிலை என்ன

    மசூது, கடையநல்லூர்

   பதில் - நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரத்தை  நிகழ்த்தி விட்டு அதற்கு காரணமானவர் அந்தச் சூடு ஆறுவதற்குள் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டலாம்; கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.

    இந்த நேரத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களும் இதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் என்று இதை எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ஒரு கொடூரம் நடந்து ஆண்டுகள் பல கடந்து விடுமானால் அப்போது மக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

எப்போதோ நடந்த ஒரு கொடுமைக்காக அடிக்கடி எதிர்ப்பு காட்ட வேண்டுமா? இப்போது இது தேவைதானா என்ற எண்ணம் முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் ஏற்படும். இதன் காரணமாக கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவான நிலையைக் கூட அவர்கள் எடுத்து விடக் கூடும்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை ஆண்டுகளானாலும் அதை மறக்காதவர்கள் சொற்ப எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் அதிகமான முஸ்லிம்கள் அப்படி இருக்க மாட்டார்கள். ஒரு கொடுமை நடக்கும் நேரத்தில் அல்லது சூடு ஆறுவதற்குள் போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்தால் தன்னார்வத்துடன் மக்கள் பெருமளவுக்கு திரள்வார்கள். ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னர் நடத்தும் போராட்டங்களுக்கு தீவிரமான சமுதாயப்பற்றுள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். நமது வலிமையான கடுமையான எதிர்ப்பைக் காட்ட இது போதுமானதாக இருக்காது. கொடியவர்களுக்கு இது சாதகமாக அமைந்து விடும்.

எனவே தான் எந்தப் போராட்டம் நடத்துவது என்றாலும் மக்களின் உணர்வுகளை எடை போட்டு அதற்கேற்ப போராட்டம் நடத்துகிறோம்.

இப்போது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவரது கூட்டத்துக்கு காசு இல்லாத விளம்பரமாக அமையும் எதிரிகளுக்கு விளம்பரமாக அமையும் என்று நாம் கருதுகிறோம்.

இந்த  விளம்பரத்தைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். சங்பரிவாரம் காலூன்றவும், வளரவும் இது உதவும் என்று நாம் கருதுகிறோம்.

எனவே மோடியோ, அத்வானியோ தமிழகம் வரும்போது ஒரு முஸ்லிமும் கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர்கள் வந்ததும் போனதும் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும். இதுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம்.

அதே நேரத்தில் இது மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் போராட்டம் நடத்தினால் அதை நாம் குறைகூற மாட்டோம்.

September 23, 2013, 12:57 PM

காஷ்மீர் மக்களுக்காக போராடலாமே?

காஷ்மீர் மக்களுக்காக போராடலாமே?
கேள்வி
- தினமும் செத்து மடிந்து கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக நாம் ஏன் குரல் கொடுக்கக்கூடாது?

என்.எம்.முஹம்மத் இஸ்மாயில் மதுரை - 20.

   பதில் - கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதாவது ஒரு கொடுமை நடந்தால், அந்த நேரத்தில் வலிமையாகக் குரல் கொடுக்கலாம். ஆனால் காஷ்மீரில் அன்றாடம் கொடுமைகள் நடக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் கொடுமைகள் நடக்கும்போது சாத்தியமான வழியில்தான் குரல் கொடுக்க முடியும்.

    ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொருநாளும் மக்களைத் திரட்டிப் போரட முடியாது. மக்களுக்கு இது சாத்தியப்படாது. எனவே குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது பேச்சு மூலமும் எழுத்து மூலமும் நம்மால் இயன்ற அளவுக்கு நாம் குரல் கொடுக்க முடியும் அதைத்தான் நாமும் செய்து வருகிறோம்.

September 23, 2013, 12:55 PM

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா?

உடல் தானம் செய்ய அனுமதி உண்டா?

மசூது கடையநல்லூர்

பதில்

இது பெரியார் தாசன் அப்துல்லாஹ்வுக்காக கேட்கப்பட்டாலும் இது குறித்து இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை ஏப்ரல் 9- 2012 அன்று நாம் ஆன்லைன் பீஜே இணைய தளத்தில் பதில் அளித்துள்ளோம். அதுவே இதற்குரிய பதிலாகும். அதை அப்படியே தருகிறோம்.

உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா

ரிஸ்வான்

கண் கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும்.

நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாகக் கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்தச் சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான். 

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.  ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. 

உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. 

மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. 

கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),

நூல் : புகாரி 2474, 5516

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)

நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவப் படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

இவ்வாறு நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

பெரியார்தாசன் தனது உடலை தானம் செய்வதாக எழுதிக் கொடுத்தாரா? குடும்பத்தினருக்கு சொல்லிச் சென்றாரா என்பது நமக்குத் தெரியவில்லை.

அப்படி சொல்லிச் சென்று இருந்தாலும் எழுதியே கொடுத்தாலும் குடும்பத்தினர் உடலைக் கொடுக்க விரும்பாவிட்டால் கட்டாயமாக உடலைப் பெற முடியாது.

எழுதிக் கொடுத்து இருந்தால் கூட நான் முஸ்லிமாக மாறிவிட்டேன். எனது உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வேன் என்று மாற்றி எழுதிக் கொடுக்கலாம். தனது உடலை தானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது குடும்பத்தினருக்குச் சொல்லிச் சென்றிருக்கக் கூடாது. இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களால் அப்படிச் சொல்ல முடியாது என்பதையும் கூடுதலாக சொல்லிக் கொள்கிறோம்.

August 27, 2013, 2:29 PM

பெரியார் தாசனின் ஜனாசாவில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளவில்லையா

பெரியார் தாசனின் ஜனாசாவில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளவில்லையா
கேள்வி

பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதைப் புறக்கணித்தது என்று கூறப்படுவது உண்மையா?

மசூது கடையநல்லூர்

ரஸ்மின், இலங்கை

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை  குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறோம்.

இதுபோல் ஜனாஸா தொழுகையில் பங்கு கொள்வதற்கும் முன்னரே உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடந்து வருகிறோம். பெரியார் தாசன் அப்துல்லா அவர்களுக்காக புதிதாக ஒரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தில் ஒருவராக இருப்பவர் வெளிப்படையாக அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அல்லது வெளிப்படையாக கடவுள் மறுப்புக் கொள்கையை வெளிப்படுத்தினால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்வதில்லை என்பது நெடுங்காலமாக நாம் கடைப்பிடித்து வரும் நிலைபாடாகும்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர் ஆன் 9 : 113

ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்கு பாவமன்னிப்பு தேடுவதாக இருப்பதால் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைப்படி இதுபோன்ற ஜனாஸாக்களில் நாம் கலந்து கொள்வது இல்லை.

தன்னைப் பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் அவர்கள் இணை கற்பித்தால் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளனர்.

பெரியார் தாசன் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் பெரியார் கொள்கையைப் பெருமையுடன் பிரச்சாரம் செய்ததாலும், பெரியார் சிலைக்கு மாலை போட்டதாலும் இதைக் கடவுள் மறுப்புக் கொள்கையாகவே நாம் கருதுகிறோம்.

கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று சொன்னதுதான் பெரியாரின் பிரதானமான கொள்கை என்பது தமிழ் உலகமே அறிந்த உண்மையாகும்.

மேலும் இனவாதத்தை ஒழித்துக்கட்டிய இஸ்லாத்தை ஏற்ற பின்னும் திராவிட இன மக்களுக்காகப் பாடுபடுவதாக அவர் கூறியதும் ஏற்க முடியாததாகும்.

பெரியார் தாசன் அல்லாத பரம்பரை முஸ்லிம் இப்படி நடந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் இந்தக் கொள்கையைத் தான் கடைப்பிடித்து வருகின்றது. இதற்கு முன் எத்தனையோ பிரமுகர்கள் மரணித்து அவர்களின் ஜனாசா தொழுகையில் எல்லா இயக்கங்களும் கலந்து கொண்டதுண்டு. இறந்தவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் செயலில் ஈடுபடுவது, அதை ஆதரித்துப் பேசியது தெரியவந்தால் நாம் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம்.

நபிகள் நாயகத்துக்கே அனுமதி இல்லாத ஒன்றை நாம் யாருக்காகவும் செய்ய முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.

மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமையாக இருக்க வேண்டும். வேறு யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. பெரியாரின் அடிமை என்ற பொருளில் பெரியார் தாசன் எனவும் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் அப்துல்லாஹ்வாகவும் அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார்.

இனிமேல் யாரும் தன்னைப் பெரியார் தாசன் என்று அழைக்கக் கூடாது. நான் அல்லாஹ்வின் தாசன் மட்டுமே என்று பகிரங்கமாக அவர் அறிவிக்கவும் இல்லை. கெஜட்டில் மாற்றம் செய்யாவிட்டாலும் மக்கள் இப்படித்தான் அழைக்க வேண்டும் என்று சொல்வது அவருக்குக் கடமையாக இருந்தது. அவர் முன்னிலையில் அவ்வாறு அழைக்கப்பட்ட போது அவர் அதை மறுக்கவில்லை என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லிக் கொள்கிறோம்.  

இது தவிர இறந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு நல்லடக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்து இவர் பேசுவார், அடுத்து அவர் பேசுவார் என்று அரசியல் மேடையாக்குவதும், இறந்தவரைப் பற்றி இல்லாததைக் கூறிப் புகழ்வதும் தங்களின் வருகையை விளம்பரப்படுத்த தலைவர்கள் துடிப்பதும் தவ்ஹீத் ஜமாஅத்தால் ஏற்க முடியாததாகும்.

ஏகத்துவக் கொள்கையில் மரணித்தவராக இருந்தாலும் அவரது மரணம் அரசிலாக்கப்பட்டால் அதையும் நாம் தவிர்ப்பதைக் கொள்கையாக வைத்துள்ளோம்.

தொழுதோமா, ஜனாஸாவுக்காக துஆ செய்தோமா, அடக்கம் செய்தோமா, என்று கலைந்துவிடுவது தான் சரியான இஸ்லாமிய முறையாகும்.

இந்த முறை மீறப்பட்டால் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்வது பெரியார் தாசன் எனும் அப்துல்லாஹ்வுக்காக எட்டுக்கப்பட்ட முடிவு அல்ல.

கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

August 27, 2013, 2:23 PM

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காக ஏன் போராடவில்லை?

கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காக ஏன் போராடவில்லை?

கேள்வி 1: திருச்சியைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  முஸ்லிம் இயக்கங்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்று ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இது உண்மையா? உண்மை என்றால் தவ்ஹீத் ஜமாஅத் இதில் போராடாமல் போனதற்குக் காரணம் என்ன?

நஸீர் அஹ்மது, திருச்சி

இப்ராஹீம், திருச்சி

கேள்வி 2: கோவையில் முஸ்லிம் சிறுவன் காவல்துறை வாகனத்தினால் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு மரணித்தான். இதற்காக எல்லா அமைப்புகளும் போராடிய போது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் ஒதுங்கிக் கொண்டது ஏன்?

இர்பான், கோவை

ஜக்கரியா, ஆவடி

பதில்:

இது குறித்து மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு இழைக்கப்படும் அநீதிகளும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் இரு வகைகளில் உள்ளன.

முஸ்லிம் என்ற காரணத்திற்காக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் முதல் வகை.

முஸ்லிம் என்ற காரணத்திற்காக அல்லாமல் பொதுவாக நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இரண்டாவது வகை.

உதாரணமாக ஒரு விபத்தில் முஸ்லிம் ஒருவர் மரணமடைகிறார் அல்லது படுகாயம் அடைகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த விபத்து முஸ்லிம் என்ற காரணத்திற்காக நிகழ்த்தப்படவில்லை. விபத்தில் முஸ்லிம்கள் மரணிப்பது போலவே முஸ்லிமல்லாத நபர்களும் மரணிக்கிறார்கள்.

விபத்தை ஏற்படுத்தியவர்களில் முஸ்லிம்களும் இருக்கலாம். முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம்.

அரசு வாகனத்தினாலும் விபத்து ஏற்பட்டு இருக்கலாம். தனியார் வாகனம் மூலமாகவும் விபத்து ஏற்படலாம்.

விபத்துக்கு உள்ளானவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். அல்லது விபத்தை ஏற்படுத்தியவரே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

ஒரு முஸ்லிம் விபத்துக்கு உள்ளாகி மரணித்து விட்டால் அதைச் சமுதாயப் பிரச்சினையாக ஆக்கக் கூடாது. அது நியாயமாகவும் ஆகாது.

நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் மற்ற விபத்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கு ஏற்படும் விபத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள மக்கள் சம்பவம் நடந்தவுடன் ஒன்று திரள்வது இயற்கையானது. விபத்துக்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இப்படி திரள்வார்கள்.

இவ்வாறு திரள்வது முஸ்லிம் என்பதற்காக இருக்கக் கூடாது. முஸ்லிமல்லாதவர் விபத்துக்கு உள்ளானாலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் திரளும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து திரள வேண்டும்.

இதற்காக ஊர்கள் தோறும் மாவட்டங்கள் தோறும் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமையாகாது.

விபத்துக்கள் நடக்கும் பொழுது அதை இயக்கப் பிரச்சினையாக்காமல் எந்த இயக்கத்தின் பெயரிலும் பேனரிலும் இல்லாமல் எந்த அமைப்பின் கொடியும் இல்லாமல் மக்கள் தன்னிச்சையாகத் திரண்டால் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் மக்களோடு மக்களாக தவ்ஹீத் ஜமாஅத் அடையாளம் இல்லாமல் கலந்து கொள்ளலாம்.

கோவை சிறுவன் மரணத்தின் போது இப்படித்தான் நாம் நடந்து கொண்டோம்.

விபத்தை ஏற்படுத்தியது அரசு வாகனம் என்பதால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்காது. ஏனெனில் அரசாங்கத்தின் எந்த வாகனமும் இன்ஷுரன்ஸ் செய்யப்படுவதில்லை என்பதால் இறந்தவரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் நஷ்டஈடு கிடைக்காது. எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து தக்க இழப்பீடு அளிக்க கோரிக்கை வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு தலைமை மூலம் அறிவுரை கூறி அவ்வாறு மனு கொடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் முஸ்லிம் என்பதற்காக வேண்டும் என்றே வாகனத்தை ஏற்றிக் கொலை செய்திருந்தால் அப்போது அது சமுதாயப் பிரச்சனையாக மாறிவிடும்.

அது போல் கற்பழிப்பு போன்ற கொடுமைகள் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு நடந்தாலோ கற்பழித்து கொல்லப்பட்டாலோ அது முஸ்லிம் என்பதற்காக நிகழ்த்தப்பட்டது அல்ல.

நாடே சீரழிந்து போய்க் கிடப்பதால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி அதை விட அதிகமாக முஸ்லிமல்லாதவர்கள் கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது மதத்தின் அடிப்படையில் நடப்பது அல்ல.

திருச்சி சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களில் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் உள்ளனர்.

முஸ்லிமுக்கோ முஸ்லிம் அல்லாதவருக்கோ இது போன்ற கொடுமை இழைக்கப்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தினால் அவர்களோடு நாமும் கலந்து கொள்ளலாம்.

கொலையாளிகளையும், காமுகர்களையும் தப்ப விடக்கூடாது என்பதற்காக இது போல தன்னார்வத்துடன் உணர்ச்சி கொந்தளிப்புடன் மக்கள் திரள்வதை நாம் குறை கூற முடியாது.

இது போன்ற பிரச்சினைகளை வைத்து ஒரு இயக்கம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வகையில் இயக்கத்தின் பெயர், கொடி, பேனருடன் அரசியலாக்கினால் அவர்களோடு இணையாமல் ஒதுங்கிக் கொள்வது என்ற நிலைபாட்டை நம் ஜமாஅத் கடைப்பிடித்து வருகின்றது.

காவல்துறையினர் நியாயம் வழங்காமல் வழக்கை திசை திருப்பினால்

குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால்

அப்போது அமைப்பின் சார்பில் வீரியமிக்க போராட்டம் நடத்தலாம்.

ஏனெனில் முஸ்லிம் என்ற காரணத்திற்காக நீதி மறுக்கப்பட்டால் அப்போது அது சமுதாயப் பிரச்சினையாக உருமாறி விடுகின்றது.

அவ்வாறு அல்லாமல் முஸ்லிம் என்ற காரணத்துக்காக அதிகாரிகளோ, பிற சமுதாயத்தவர்களோ அநீதி இழைத்தால் அது போன்ற விஷயங்களில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற யாருக்கும் சளைக்காமல் வீரியமிக்க போராட்டம் நடத்தத் தயங்கியதில்லை.

இந்த நிலைப்பாட்டுக்கு ஏற்பவே நம்முடைய நடவடிக்கைகள் அமைதுள்ளன.

August 27, 2013, 2:18 PM

கிரிமினல்கள ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா

கிரிமினல்கள ஆதிக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பு மாற்றுமா

கேள்வி

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கிரிமினல்களின் ஆதிக்கத்தைக் குறைக்குமா?

பதில்

உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகள் வழங்கியுள்ளது. அதில் ஒரு தீர்ப்பை நாம் வரவேற்கலாம். இன்னொரு தீர்ப்பு நியாயமற்றதாக உள்ளது. அதை நாம் வரவேற்க முடியாது.

ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் உடனே அவர் பதவி இழக்க வேண்டும் என்ற தீர்ப்பை நாம் வரவேற்க முடியும். இது குறித்து தனி கட்டுரை இடம் பெற்றுள்ளது.

ஆனால் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது என்றும். ஓட்டுப் போட உரிமை இல்லாதவர்கள் போட்டியிடக் கூடாது என்றும் அளிக்கப்பட்ட தீர்ப்பை நாம் வரவேற்க முடியாது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு4 மற்றும்5-ன் படி வாக்களிக்க தகுதி பெற்ற ஒருவர்தான் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி படைத்தவர்கள் என்கிறது. அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5)பிரிவின்படி தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களும், விசாரணைக் கைதிகளும் தேர்தலில் ஓட்டுப்போட முடியாது. எனவே வாக்களிக்கும் தகுதியை இழந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி கிடையாது என்ற சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருக்கும் விசாரணைக் கைதிகளும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிபதிகள் பட்நாயக், முகோபாதியா கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு முற்றிலும் தவறாகும்.

இது கிரிமினல்களை ஒழிப்பதற்குப் பதிலாக அப்பாவிகளை கிரிமினல்களாக ஆக்கவே உதவும்.

போலீசார் எத்தனையோ அப்பாவி மக்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். அவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நீண்ட காலம் விசாரணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்படுன்றனர். பல வருடங்கள் சிறைவாசம் முடிந்த பின் இவர்க நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இவர்களைத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று தீர்ப்பளித்தால் இது மாபெரும் அநீதி என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?

தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சிகள் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு என பல வழக்குகளைப் போட்டு நீதிமன்றக் காவலில் அரசாங்கத்தால் வைக்க முடியும். அவர்களை இதன் காரணமாக போட்டியிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயம்? ஒருவர் கிரிமினலா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். போலீசார் முடிவு செய்யக் கூடாது என்று ஏன் இந்த நீதிபதிகளுக்குத் தோன்றவில்லை?

விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்று சட்டம் உள்ளதால் ஓட்டுப் போடாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இடலாம் என்று நீதிபதிகள் கேட்பது அவர்களின் சிந்தனைக் கோளாறுக்கு ஆதாரமாக உள்ளது. விசாரணைக் கைதிகள் ஓட்டுப் போட முடியாது என்ற சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதைத் தான் நீதிமன்றம் தடுத்து இருக்க வேண்டும்.

நீதிமன்றங்கள் குற்றவாளி என்று முடிவு சொல்வதற்கு முன்னால் அரசாங்கம் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளதால் விசாரணைக் கைதிகள் ஓட்டும் போடலாம். போட்டியும் இடலாம் என்று தீர்ப்பளிப்பதுதான் அரசியல் சட்டத்துக்கு நெருக்கமானதாக இருக்கும்.

இலாவிட்டால் ஒரு அரசாங்கம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் விசாரணக் கைதியாக்கி தேர்தலில் ஓட்டுப் போடுவதை தடுக்க முடியும். அதைக் காரணம் காட்டி அவர் தேர்தலில் போட்டியிடுவதையும் தடுக்க முடியும். இந்த அநியாயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று காரணம் சொல்லி அந்தச் சட்ட்த்தை திருத்தச் சொல்லும் நீதிமன்றம் அதே காரணத்தை இந்த விஷயத்தில் கருத்தில் கொள்ளவில்லை.

சட்டப்படி ஒருவன் குற்றவாளி என்று அறிவிக்கப்படும் முன் அவன் நிரபராதி என்பது தான் உலகம் முழுவதும் உள்ள நீதியாகும். நீதிமன்றங்கள் விசாரணை செய்து குற்றவாளி என்று அறிவிக்காமல் இருக்கும் போது அவன் குற்றவாளி என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறினால் அதைத் தான் திருத்த வேண்டும்.

விசாரணைக் கைதிகள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். எனவே அவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிப்பதுதான் சரியானதாக இருக்கும். முரண்பாடு இல்லாத தீர்ப்பாக இருக்க முடியும்.

இரு தீர்ப்புகளுக்கும் இரு வேறு அளவு கோலைப் பயன்படுத்தி அப்பாவிகளைக் கிரிமினல்களாக ஆக்கும் இந்தத் தீர்ப்பு கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

July 14, 2013, 2:10 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top