தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்: - பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை!

தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:

- பிறமத மக்களின் உள்ளத்தை ஈர்த்த பீஜே உரை!

லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தின் மகத்துவத்தையும், இஸ்லாமிய சட்டத்தின் உன்னதத்தையும் உலகிற்கு உணர்த்த திருச்சியில் குழுமிய பொதுக்கூட்டத்தில் (06.11.16) சகோதரர் பீஜே அவர்கள், “தனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கூறிய செய்திகள் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களும் இஸ்லாத்தின் உன்னதத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்தது.

 

பீஜே தனது உரையில் கூறிய முக்கிய செய்திகளின் தொகுப்பு:

10 நாள் உழைப்பில் திரண்ட மக்கள்:

இதற்கு முன்னாள் திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தினோம்; அது பல மாதங்கள் பிரச்சாரம் செய்து கூட்டப்பட்ட கூட்டம்; ஆனால் இந்த போராட்டம் வெறும் 10 நாள் அறிவிப்பில் கூட்டப்பட்டுள்ளது.

 

பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று தானே இஸ்லாத்தை ஏற்றோம்:

எங்களுக்கு அற்புதமான முறையில் இஸ்லாம் வழங்கிய சட்டதிட்டங்களை விட்டுவிட்டு பொது சிவில் சட்டம் என்ற சட்டத்தின் பக்கம் வாருங்கள் என்று எங்களுக்கு அழைப்பு விடுகின்றீர்களே! முஸ்லிம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது; அதனால் நாங்கள் போடும் சட்டத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என்று சொல்கின்றீர்களே!  நாங்கள் என்ன அரபு நாட்டு இறக்குமதியா? இதே இந்தியாவில் பிறந்தவர்கள் தான்; எங்களது முப்பாட்டிமார்கள் எல்லாம் இந்து மதத்தில்தான் இருந்தார்கள்.  எந்த பொது சிவில் சட்டம் என்று சொல்லி நீங்கள் இப்போது எங்களை அழைக்கின்றீர்களோ அதே சட்டத்தைத்தான் எங்களது முப்பாட்டிமார்கள் பின்பற்றி வந்தனர். அதில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும், அநீதிகளையும் கண்டித்து வெந்து நொந்து போய்தான் அவர்களெல்லாம் இஸ்லாத்தில் இணைந்தார்கள்.

 

இந்து மதம் பெண்களுக்கு இழைத்த அநீதிகள்:

இந்து மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நெஞ்சமா?

பெண்கள் யாரும் ரவிக்கை அணியக்கூடாது என்று சொல்லி இந்துமதம் பெண்களை இழிவுபடுத்தவில்லையா?

கணவன் இறந்துவிட்டால் சதி என்ற பெயரால் உடன்கட்டை ஏற வைத்தீர்கள்;  உயிரோடு தீவைத்துக் கொளுத்தினீர்கள்.

அவ்வாறு தீவைத்து கொளுத்தப்படாமல் இருக்கும் பெண்களை அலங்காரம் செய்யக்கூடாது என்று சொல்லி மொட்டை அடித்துகுளக்கரையில்  கூழாங்கல்லிலே படுக்க வைத்தீர்கள்.

பெண்களுக்கு ஆன்மா இருக்கின்றதா இல்லையா என பட்டிமன்றம் நடத்தினீர்கள்.

பெண்களுக்கு சொத்துவைத்துக் கொள்ள உரிமையில்லை என்று வைத்திருந்தீர்கள். அவள் எந்த ஆணையாவது சார்ந்துதான் வாழவேண்டும் என்று பெண்களை கொடுமை படுத்தினீர்கள்.

இதையெல்லாம்  வெறுத்துத்தான்; அந்த கொடுமைகளில் இருந்தெல்லாம் தப்பித்து வந்துதான் தூய இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுள்ளோம்.

மறுபடியும் அந்த கொடுமைகளையெல்லாம் நாங்கள் அனுபவிக்க வேண்டுமா?

நீ கொண்டு வரும் சட்டமெல்லாம் அதரப்பழசுதான்.

 

இந்து மதத்திற்கு மாறுவோரை ஐயராக ஆக்குவீர்களா?:  

கர் வாப்சி என்று சொல்லி தாய் மதம் திரும்பச் சொல்லி அழைத்தாயே! மறுபடியும் உனது இந்து மதத்திற்கு நாங்கள் வந்தால் மீண்டும் எங்களை அதில் இணைத்து ஐயராக ஆக்குவீர்களா? என மக்கள் கேள்வி எழுப்பியதும் ஓட்டமெடுத்தாயே! இதுதான் உனது நிலை.

இப்படி நீ போட்ட சட்டமெல்லாம் அசிங்கமானது; எங்களை கொடுமைப்படுத்தக்கூடியது என்பதை உணர்ந்து காரி உமிழ்ந்துவிட்டுத்தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளோம்.

அற்புதமான மார்க்கத்தை நாங்கள் தேர்ந்தெடுத்து வந்துள்ளோம்.

 

இங்கு குழுமியிருக்கும் உளவுத்துறை, காவல்துறை, மற்றும் பிறமத சகோதர, சகோதரிகள் மற்றும் மீடியாக்கள், இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கின்றோம்.

இப்படி இஸ்லாம் பெண்களை கொடுமைப்படுத்துகின்றது என்று சொல்லி இஸ்லாத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்கள் செய்த போதும் கூட அப்படியெல்லாம் இல்லை; நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லி, இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பிய அவதூறை அடித்து நொறுக்க இங்கே லட்சக்கணக்கான பெண்கள் குழுமியகாரணம் என்ன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

தலாக் தலாக் தலாக்(?):

தலாக் என்ற விஷயத்தின் உண்மை நிலையை முதலில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தலாக் என்ற முறையை பலரும் எதிர்க்கின்றனர். தலாக் என்றால் என்ன? விவாகரத்து என்று அர்த்தம். தலாக்கை எதிர்க்கக் கூடியவர்கள் விவாகரத்து முறையே இருக்கக் கூடாது என்று அவர்கள் சொல்ல வருகின்றார்களா?

யாராவது அப்படிச் சொல்வார்களா?

இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையை எதிர்ப்பவர்கள் திருமணம் முடித்த கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால்  விவாகரத்தே செய்யக்கூடாது என சொல்ல வருகின்றார்களா?

விவாகரத்துச் செய்வது சட்டப்படி குற்றம் என அவர்கள் அறிவிக்கத் தயாரா? 

இப்போது இவர்கள் வைத்துள்ள இந்து திருமணச் சட்டத்திலாவது அப்படி உள்ளதா?

இல்லை;

அப்படியானால் விவாகரத்து என்பதை அனைவரும் ஏற்றுத்தான் இருக்கின்றோம்; இஸ்லாம் கூறும் விவாகரத்து முறை கூடாது என்பதுதான் இவர்களது வாதம்.

இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் பெண்களுக்கு கேடு ஏற்படுகின்றது என்பதுதான் இவர்களின் பிரதான குற்றச்சாட்டு. ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

முஸ்லிம்களை விட இந்துக்களில் தான் அதிகமான விவாகரத்து நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் எடுத்த புள்ளி விபரத்தின்படி 0.56 சதவீதம் பேர் முஸ்லிம்களிலும், 0.76 சதவீதம் பேர் இந்துக்களிலும் விவாகரத்துச் செய்கின்றனர். 

இந்த புள்ளிவிபரமே சொல்கின்றது முஸ்லிம்கள் அதிகமாக விவாகரத்துச் செய்வதில்லை என்று.

உனது விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்தினால் விவாகரத்து கூடத்தான் செய்யுமே தவிர குறையாது. 

 

இஸ்லாம் கூறும் அழகிய வழிகாட்டுமுறை:

கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள் அழகான முறையில் பிரிந்து கொள்ள இஸ்லாம் எளிய வழியை காட்டுகின்றது. அதுதான் தலாக் எனும் விவாகரத்து வழிமுறை.

முதலில் பிடிக்காத மனைவியை கணவன் தலாக் சொல்லி பிரிவான்.

தலாக் சொல்லி பிரிந்த பிறகு மூன்று மாதவிடாய்க் காலங்கள் அந்த பெண் அவனது வீட்டில்தான் தங்கியிருக்க வேண்டும்; அவன் தான் அந்தப் பெண்ணுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பான். இப்படி தலாக் சொல்லப்பட்டு பிரிந்திருக்கும் மனைவியின் மூன்று மாதவிடாய் காலங்களுக்குள் அவன் மறுபடியும் சேர்ந்து வாழ விரும்பினால் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம்; மறுபடியும் சேரவே முடியாது என்று இஸ்லாம் அவர்களை அடியோடு வெட்டவில்லை; மூன்று மாதவிடாய் காலங்கள் முடிந்து விட்டால் அவளோடு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மறுபடியும் மறுமணம் செய்து சேர்ந்து வாழலாம்; இதுதான் ஒரு தலாக்;

மறுபடியும் சேர்ந்து வாழும் போது பிரிவு ஏற்பட்டால் இரண்டாவது தடவை தலாக் சொல்லலாம்; அப்போதும் முந்தைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்; இப்போதும் இணைய வாய்ப்பு உள்ளது;

இதன் பிறகு இணைந்து மூன்றாவது தடவை தலாக் கூறினால் தான் அவளோடு இவன் இணைய முடியாது என்று இஸ்லாம் சொல்கின்றது. இது எவ்வளவு அழகான எளிய நடைமுறை.

 

இந்திய சட்டம் வழங்கியுள்ள கொடூர விவாகரத்து முறையில் விளையும் கேடுகள்:

ஆனால் இந்துமத சட்டத்தின் பிரகாரம் தற்போது நீதிமன்றத்தில் விவாகரத்து செய்யப்படும் முறை என்ன? அதனால் எவ்வளவு தீமைகள் நிகழ்கின்றது தெரியுமா?

இந்தியாவில் உள்ள  இத்தகைய விவாகரத்து நடைமுறையால் பல கொலைகள்; மனைவி மீது பழிசுமத்துதல்; கணவனை மனைவியே கொலை செய்தல் உள்ளிட்ட பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.

இஸ்லாம் சொல்லும் தலாக் முறையில் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வதில்லை. இலகுவான முறையில் திருமணம் ரத்து செய்யப்படும்.

 

இந்து பெண்கள் அனுபவிக்கும் அவலங்கள்:

ஆனால் இந்து மத சட்டப்படி என்ன நிலைமை?

விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேற வேண்டும். பல ஆண்டுகள் நீதிபதி வாய்தா வாய்தா என வாய்தா போட்டு அலைக்கழிப்புச் செய்வார். அதன் பிறகு பல ஆண்டுகாலம் கழித்து விவாகரத்து வழங்குவார். இத்தனை ஆண்டுகள் நாம் நமது உடல் பசியை தீர்க்க வழியில்லாமல் போய்விட்டதே என நினைக்கும் கணவன் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்துதல் உள்ளிட்ட கொலைச் சம்பவங்களை அரங்கேற்றி ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என செய்தி வரவழைக்கின்றான்; ஸ்டவ் வெடித்து கிழவி செத்ததாக செய்தி வந்துள்ளதா?

அதற்கு காரணம் இதுதான்.

முஸ்லிம் சமுதாயத்தில் அதுபோல ஸ்டவ்கள் வெடிக்காததற்குக் காரணம் விவாகரத்து முறை எளிதாக இருப்பதால்தான்.

விவாகரத்து இழுத்தடிக்கபடும் நிலையில், கணவனை பிடிக்காத மனைவி அவனை சோற்றில் விஷம் வைத்து காலி செய்கின்றாள். 

மனைவியை பிடிக்காத கணவன் சின்ன வீடு செட்டப் செய்து வைத்துக் கொண்டு தனது மனைவியை கொடுமைப்படுத்துகின்றான்.

இந்த நாட்டில் பல தார மணம் தான் கூடாது; சின்ன வீடு செட்டப் வைத்துக் கொள்வது குற்றமே இல்லை; இதுதான் நீதியா?

விவாகரத்துக் கேட்டுச் செல்லும் பெண்களை நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது அவர்களது மானம் போகின்றது.

பல நேரங்களில் அந்தப்பெண்ணிடம் அவளது கற்பையே சில வக்கீல்கள் பீஸ் ஆக கேட்கின்றார்கள்.

இவ்வளவு கொடுமைகளும் இந்துமதத்தில் பொது சிவில் சட்டத்தில் உள்ளது. அதைத்தடுக்கத்தான் இந்த விழிப்புணர்வு.

இந்த கேவலங்கள் எல்லாம் முஸ்லிம் பெண்களுக்குக் கிடையாது; பிரிய வேண்டும் என நினைக்கும் தம்பதிகள் அந்த பகுதி ஜமாஅத் தலைவரிடம் போய் முறையிடும் போது அவர்கள் வசிக்கும் தெருவிலேயே இருக்கும் தலைவருக்கு அனைத்தும் தெரியும்; ஆனால் அந்த நீதிபதிக்கு ஒன்றும் தெரியாது; இதனாலும் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.

இவ்வளவு எளிய அழகான நடைமுறையை விட்டுவிட்டு மானத்தை இழந்து உங்களது நீதிமன்றப்படி ஏறச் சொல்கின்றீர்களா? அதை எதிர்த்துத்தான் இத்தனை லட்சம் பெண்கள் இங்கே கூடியுள்ளார்கள்.

எங்களது இஸ்லாமிய சட்டத்தின் முன்னால் நீ போடும் பொதுசிவில் சட்டத்தால் உன்னால் என்ன செய்ய முடியும்?

வழக்குகளை நாங்கள் கொண்டுவந்தால் தானே நீ சட்டம் போடுவாய். நாங்கள் எங்களுக்குள் பேசி முடித்துக் கொண்டால் உன்னால் என்ன செய்ய முடியும்?

 

தடவை என்பதன் பொருள் என்ன?:

அதே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி மூன்று தலாக்கையும் ஒன்றாகச் சொல்லி ஒரேயடியாக பெண்களை பிரித்து வைக்கும் கொடுமை இஸ்லாமிய மதகுருமார்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது நபி வழியில்லை; அது இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது.

திருப்பி அழைக்கப்படும் தலாக் என்பது இரண்டு தடவை தான் என திருக்குர் ஆன் கூறுகின்றது. தடவை என்பதற்கு விளக்கம் என்ன? இதே விளக்கத்தை 1987 ஆம் ஆண்டு இதே திருச்சியில் நடந்த ஒரு மாநாட்டில் நான் தெளிவுபடுத்தினேன். அதையே இப்போதும் சொல்கின்றேன். தடவை என்று எப்போது நாம் சொல்லுவோம்; ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் தடவை என்போம்; 10 இட்லிகளை ஒருவன் ஒரே தட்டில் வைத்து ஒருமிக்க சாப்பிடுகின்றான். இவன் ஒரு தடவை சாப்பிட்டான் என்று சொல்வோம்; அதே நேரத்தில் 2 இட்லி சாப்பிட்டுவிட்டு கைகழுவிவிட்டு மறுபடியும் இரண்டு இட்லி சாப்பிடுகின்றான்; அதன் பிறகு  கைகழுவிவிட்டு மறுபடியும் இரண்டு இட்லி சாப்பிடுகின்றான்; இப்படியே 5 முறை 10 இட்லி சாப்பிட்டால் நாம் என்ன சொல்வோம்; 5 தடவை சாப்பிட்டான் என்போம்; அதுபோலத்தான்; தலாக் விடப்படுதல் என்பது மூன்றுதடவை நிகழ வேண்டும்; அப்போதுதான் அது மூன்றாக கணக்கிடப்படும்; தலாக் தலாக் தலாக் என மூன்று முறை அல்ல; மூன்று லட்சம் தடவை சொன்னாலும் ஒரு தலாக் தான்; இதுபுரியாமல் இந்த ஆலிம்கள் தவறாக மக்களை வழி நடத்துகின்றார்கள்.

கடந்த 1987ஆம் ஆண்டு பீஜே அவர்கள் திருச்சியில் உரையாற்றிய மாநாடு குறித்து அப்போது வெளியான செய்தி

 

விபரீத ஃபத்வா வழங்கிய ஆலிம்(?):

இரண்டு நாட்களுக்கு முன்பு  கேரளாவில்கூட ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட தடைவிதித்த ஒரு ஆலிம்; அந்தக் குழந்தை பிறந்த தினத்திலிருந்து ஐந்து தடவை அதன் காதில் பாங்கு கேட்ட பிறகுதான் அது தாய்ப்பால் குடிக்க வேண்டும் என தவறாகச் சொல்லி தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இதுபோல ஆலிம்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் திருந்த வேண்டும்.

 

முத்தலாக் - விதண்டாவாதமும்; உண்மை விளக்கமும்:

முத்தலாக் என்பதுகூடாது தான் ஆனால் சொல்லிவிட்டால் அது நிகழ்ந்துவிடும்; எப்படி விஷத்தை குடிக்கக்கூடாதோ; அதைக் குடித்தால் அதைக் குடித்தவன் எப்படிச் செத்துவிடுவானோ அதுபோலத்தான் இதுவும்; முத்தலாக்  கூடாதுதான்; ஆனால் சொன்னால் முத்தலாக் நிகழ்ந்துவிடும் என சிலர் தப்பான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். இது தவறான உதாரணமாகும்; மெட்டீரியலாக உள்ளதற்கும், வாயில் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

மெட்டீரியலாக உள்ள பொருளானது உடலில் போனால் செத்துவிடுவோம்; ஆனால் வாயால் சொல்வதாலேயே அது நடந்துவிடாது; 3000 ரூபாயை ஒரு ஆலிமிடம் கடன் வாங்கிவிட்டு ஆயிரம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மூவாயிரத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்று ஒருவன் சொன்னால் இவ்வாறு சொன்னதாலேயே பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக யாராவது ஒப்புக் கொள்வார்களா? அதை அந்த ஆலிம்தான் ஏற்பாரா? அதுபோலத்தான் தலாக் என்பதும்; மூன்று தடவை நிகழ்ந்தால் தான் அது முத்தலாக் ஆகுமே ஒழிய வார்த்தையால் சொல்வதால் முத்தலாக் ஆகிவிடாது.

 

இறுதி எச்சரிக்கை:

இறுதியாக, இந்த பாஜக அரசாங்கத்திடம் ஒன்று கேட்கின்றோம்; பொது சிவில் சட்டம் என்று அனைவருக்கும் பொதுவானதாக சட்டம் கொண்டு வரப்போகின்றோம் என்று சொல்கின்றீர்களே! இந்து மதத்திலேயே ஆயிரத்தி எட்டு ஜாதிகள் உள்ளன; செட்டியார்; கள்ளர்; தேவர்; தலித் என்று பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் பிராமணவாள் கல்யாணம் செய்வதுபோல்தான் அனைவரும் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொன்னால் நாட்டில் நிலைமை என்னவாகும்? நாட்டில் இரத்த ஆறுதான் ஓடும்; அரிவாளால் தான் பேசுவார்கள். இதுதான் நடக்கும்.

இந்து மதத்திற்குள்ளேயே உங்களால் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர இயலாது; இதுதான் நிலைமை.

 

நாமம் போடுவதில் சண்டை:

தற்போது கூட திருப்பதியில் உள்ள கடவுள் சிலைக்கு நாமம் எப்படிப்போடுவது என்று சர்ச்சை ஓடிக்கொண்டுள்ளது. யு வடிவ நாமமா? அல்லது ஒய் வடிவ நாமமா என்று சண்டை நாறி ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றம் சென்று லண்டன் நீதிமன்றம் ப வடிவத்திலான நாமம் போடச்சொல்லி உத்தரவு போட்டுள்ளார்கள். இவ்வளவு கேலிக்கூத்துக்களையும், பிரிவுகளையும் வைத்துக் கொண்டு எங்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்கப்போகின்றீர்களா? என்று பீஜே கேள்வி எழுப்பி உரையை நிறைவு செய்தார். 

November 8, 2016, 12:34 PM

1980களில் ஏகத்துவ புரட்சிக்கு வித்திட்ட தவ்ஹீத் எழுச்சி: - மலரும் நினைவுகள்!

1980களில் ஏகத்துவ புரட்சிக்கு வித்திட்ட தவ்ஹீத் எழுச்சி:

- மலரும் நினைவுகள்!

பொதுவாக 80 களில் (1980) தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனைகள் தலை தூக்க ஆரம்பித்தது என்று சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இந்த சிந்தனையின் தாக்கம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்தன.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் மனப்பாங்கு, சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை துணிந்து சொல்லும் நெஞ்சுரம் போன்றவை ஆங்காங்கே துளிர்விடத்தான் செய்தன.

இதற்கு ஆதாரமாக சில செய்திகளைத் தரலாம் என்று எண்ணுகிறோம்.

1980 க்கு முன் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பள்ளி மற்றும் மதரசாவில் பணி புரிந்த பீ. ஷேக் அலாவுதீன் என்கிற பீ.எஸ் அலாவுதீன், பீ. ஜைனுல் ஆபிதீன் ஆகிய இரண்டு சகோதரர்கள் அப்போதைய அப்பள்ளி நிர்வாகத்தினரின் கருத்துக்களோடு முரண்பட்டு, சங்கரன்பந்தல் என்ற ஊர் சென்றது பலருக்கு தெரியாத செய்தியாக இருக்கலாம்.

அங்கே தான் இச்சகோதரர்கள் ஒத்த கருத்துடையோருடன் இணைந்து முழு மூச்சுடன் ஏகத்துவப் பிரச்சாரத்திலும், சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களை பரப்புவதிலும் ஈடுபட்டனர்.

இச்சகோதரர்கள் உள்ளூரில் பணியாற்றிய போது பல்வேறு அனாச்சாரங்களை எதிர்த்து வந்ததால் சொந்த ஊரில் நண்பர்களை விட எதிரிகளை அதிகம் சம்பாதித்திருந்தனர். அவ்வாறு எதிர்த்த பலரின் வாரிசுகள் இப்போது ஏகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டது இறைவன் செய்த அருட்கொடைகளில் ஒன்று என்பது வேறு விஷயம்.

அப்பகுதிகளில் நடைபெற்ற சந்தனக்கூடு வைபவங்கள், தட்டு தாயத்து விற்பனைகள், மெளலீது கச்சேரிகள், வரதட்சணைத் திருமணங்கள், தர்காக்கள் இருக்கும் ஊர்களிலிருந்து வருவதாக கூறிக்கொள்ளும் சடைப்பக்கீர்களின் கோமாளித்தனங்கள் போன்றவற்றை எதிர்ப்பதில் இவர்கள் காட்டிய வேகம் தீவிரமானதாகும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வது அன்றைக்கு தொண்டியில் சமுதாய குற்றமாக கருதப்பட்ட காலத்தில் இச்சகோதரர்கள் இருவரும் தங்களது திருமணத்தின் போது வரதட்சணை வாங்கவில்லை.

மேலும், இவர்களின் இளைய (மூன்றாம்) சகோதரரின் திருமணமும் எந்தவித வரதட்சணையும் இல்லாமல் தான் நடந்தேறியது.

இது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான உள்ளூர் மக்கட்பிரட்சனைக்காகவும் இச்சகோதரர்கள் அக்காலகட்டத்தில் போராடினர்.

இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

அவர்களின் சொந்த ஊரான தொண்டிக்கும் அருகிலுள்ள தாலுக்காத் தலைநகரான திருவாடானை என்ற ஊருக்கும் பல ஆண்டுகளாக நகரப்பேருந்து இல்லாத நிலை இருந்தது.

இதற்கென போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் உள்ளூர் அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்ட போது, அவர்களோடு இணைந்து போராடி நகரப்பேருந்து வசதிப் பெற்று தந்ததில் இச்சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என உள்ளூர்வாசிகள் இன்றும் கூறுகிறார்கள்.

இவர்கள், தங்களின் சொந்த ஊரில் (தொண்டி) பணியாற்றிய காலத்தில் கேரளாவிலிருந்து அந்தர் தீவு மவ்லானா என்ற நபர் ஒருவர் வந்திருந்தார். இவரைப் பெரிய மகான் என்றும், அவ்லியா என்றும் உள்ளூர் ஜமாஅத்தினர் கூறிக்கொண்டு அவருக்கு பெரும் மரியாதையெல்லாம் செய்து வந்தனர்.

இவர் கூறினால் மழை வரும், இவரிடம் அபூர்வ சக்திகள் பல உள்ளன என்ற ரீதியில் ஊரில் செய்திகள் பரப்பப்பட்டன.

இதை விமர்சித்த இவர்களை (பீ.எஸ். அலாவுதீன் மற்றும் பீ. ஜைனுல் ஆபிதீன்) அம்மகானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜமாஅத்தினர் உத்தரவிட்டனர்.

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று கூறித் தான் இவர்கள் ஊரை விட்டு கிளம்பி தஞ்சை மாவட்டம் வந்தடைந்தனர்.

சங்கரன்பந்தல் அருகிலுள்ள பெரம்பூர், காரைக்கால், கிளியனூர் ஆகிய‌ ஊர்களில் சொந்தமாக மளிகை வியாபாரம் சிலகாலம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தான் ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவராகவும், கிளியனூர் (மயிலாடுதுறறை) அரபுக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்த அறிஞர் அப்துஸ்ஸலாம் அவர்கள் அடிக்கடி இவ்விருவரையும் சந்தித்து, "திறமைமிக்க நீங்கள் இருவரும் வியாபாரத்தில் இறங்கி உங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம். பள்ளிவாசல்களில் இமாமாக பணியாற்றுவது சுயமரியாதையை பாதிக்கும் என்று நீங்கள் எண்ணினால் ஏதாவது அரபுக்கல்லூரியில் நீங்கள் இருவரும் பேராசிரியராக பணியாற்றலாமே" என்று கூறி வந்தார்.

கடைசியில் அவரது அறிவுரை பலன் தந்தது. இருவரும் அரபுக்கல்லூரிகளில் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.

இதன் பின்னர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் சங்கரன்பந்தல் மதரசாவில் முதல்வராக அவராலேயே (அப்துஸ்ஸலாம் ஹஜரத்) சேர்த்து விடப்பட்டார்.

பீஜே அவர்களின் சகோதரர் பீ.எஸ்.அலாவுதீன் அவர்களின் புகைப்படம்

 

மற்றொரு சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீனை தம்முடைய கிளியனூர் மதரசாவில் பேராசிரியராக சேர்த்துக் கொண்டார். பின்னர், அவரும் (பிஜே) சங்கரன்பந்தல் மதரசாவிலேயே பேராசிரியராக சேரும் வாய்ப்பு ஏற்பட்டது.

சகோதரர்கள் இருவரும் இடையில் சிறிது காலம் நிறுத்தியிருந்த ஏகத்துவப்பணிகளை முழுவீச்சுடன் மீண்டும் செய்ய துவங்கினார்கள்.

இச்சகோதரர்களில் மூத்தவரான பீ.எஸ். அலாவுதீன் (1985 இல்) கடும் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், உள்ளூர் ஜும்மாக்களில் நடத்தப்பட்ட அபத்தங்களை படுத்துக் கொண்டே எதிர்த்து வந்தார்.

அதற்கு ஆதாரமாக அப்போது வெளியிடப்பட்ட 'ஈட்டியின் முனையில்..' என்ற தலைப்பிலான பிரசுரம் ஆதாரமாக உள்ளது.

கடும் இதய நோயால் அவதிப்பட்ட அவரிடம் உறவினர்கள் சிலரால் "தொண்டியில் உள்ள தர்கா ஒன்றில் தங்கி அவ்லியாக்களிடம் வேண்டினால் எல்லா நோய்களும் குணமாகும்" என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டது.

ஆயினும், அவர் கடைசி மூச்சுள்ளவரை இது போன்ற யோசனைகளுக்கோ, தட்டு தாயத்து போன்ற மந்திர தந்திரங்களுக்கோ உடன்படவேயில்லை.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மதுரை மருத்துவமனை ஒன்றில் இருந்த காலகட்டத்தில் ஏகத்துவ சிந்தனைவாதிகள் மற்றும் அவரது மாணவர்கள் ஆகியோர் அவருக்கு உதவியாக இருந்தனர்.

அவருக்கு உதவியாக இருந்தவர்களில் தற்போது சிறந்த பேச்சாளராக இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளில் ஒருவரான எம்.ஐ.சுலைமானும் ஒருவர்.

பீ.எஸ். அலாவுதீன் மற்றும் பீ. ஜைனுல் ஆபிதீன் ஆகியோரின் இளைய சகோதரர் பீ.ஹாஜா அலாவுதீன் ஆவார்.

இவர் தான் உணர்வில் இடம்பெறும் 'மூன்றாம் காரிணி' என்ற மக்கட்தொகை ஆய்வுத் தொடரை 'மரியம் செல்வன்' என்ற பெயரில் எழுதி வருகிறார்.

பீ.எஸ். அலாவுதீன், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலகட்டத்தில் தற்போது களஞ்சியம் ஸ்கூல் நடத்தி வரும் கலீல் ரசூல் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெரிதும் உதவியாக இருந்தனர்.

பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் மிகவும் நோயுற்ற காலகட்டத்தில் தான் 'நஜாத்' திருச்சியிலிருந்து வெளியானது.

பின்னர், இவ்விதழ் 'அந்நஜாத்' என்று பெயர் மாற்றப்பட்டது.

அந்நஜாத், புரட்சி மின்னல், அல்முபீன், அல்ஜன்னத், ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மணி என்று ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் இதழ்களின் பட்டியல் நீண்டன.

உணர்வு இதழைப் பொறுத்தவரை அது சமுதாய சீர்த்திருத்தக் கருத்துக்களுக்கும் முஸ்லிம்களின் பல்வேறு ஜீவாதாரப் பிரச்சனைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அந்நஜாத், அல்ஜன்னத், ஆகியன, தற்போது வேறு சிலரது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. புரட்சி மின்னல் மற்றும் அல்முபீன் போன்றவை ஏகத்துவம் இதழாக வளர்ந்து வெளியாகி வருகிறது.

தீன்குலப்பெண்மணியானது முஸ்லிம் பெண்களுக்கான இதழாக பரிணமிக்கிறது.

இந்த அச்சு ஊடகங்களை விட  தொலைக்காட்சியில் தினசரி இரவு  ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் தான் மக்களை அதிகமாகவும், விரைவாகவும் சென்றடைவதில் முதலிடத்தில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நஜாத் வெளிவருவதற்கு முன்னேயே 'நர்கிஸ்' மாத இதழில் சகோதரர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதி வந்த "விற்பனைக்காக கற்பனைக்கதைகள்" என்ற ஆய்வுத் தொடர் ஏகத்துவ சிந்தனைகளுக்கு உரமிட்டது எனலாம்.

ஆயினும், அப்பத்திரிக்கை நிர்வாகம், ஒரு சில சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (?) மிரட்டலுக்கு பயந்து தொடரை இரண்டு மூன்று அத்தியாயங்களோடு நிறுத்திக் கொண்டது.

நஜாத்தின் முதல் இதழில் (1985) சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்களின் கட்டுரை வெளியானது. அடுத்த இதழ் வெளியான போது அவர் உயிரோடு இல்லை.

அவரின் அகால மரணத்திற்கு அப்போதைய காலகட்டத்தில் காட்டப்பட்ட தீவிர கபுர் வணக்க எதிர்ப்பே காரணமென்றும், அவ்லியாக்களின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டார் என்றும் தர்கா வணங்கிகளால் செய்திகள் பரப்பப்பட்டதை அந்நேரத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும், சகோதரர் பீ.எஸ். அலாவுதீன் அவர்கள் நோய் வாய்ப்பட்ட நேரத்தில் மற்றொரு சகோதரரான பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காயல்பட்டினத்தில் இணை வைப்பவர்களுடன் நடத்திய முபாஹலாவும் இவரது சகோதரரின் மரணத்திற்கு காரணம் என்றும் செய்திகள் பரப்பினர் தர்கா வணங்கிகள்.

இந்த பொய்யுரைகளையெல்லாம் மீறி இன்று எண்ணற்றவர்களின் கொள்கையாக இந்த ஏகத்துவக் கருத்துக்கள் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு வல்ல இறைவனே காரணம்.

- ‍ஹலிமா

நன்றி: உணர்வு வார இதழ் 

(கடந்த 2008 ஆம் ஆண்டு உணர்வு வார இதழில் வெளியான கட்டுரை)

தகவல்: பீ.ஹாஜா அலாவுதீன்

எழுத்தாக்கம்: நாஷித்

October 27, 2015, 11:01 PM

போலிகள் ஜாக்கிரதை!

போலிகள் ஜாக்கிரதை!

(1993 ஆம் ஆண்டு பரேலவிக் கூட்டத்தைச் சேர்ந்த ஹமீது அப்துல் காதிர் என்பவர் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் மாபாதகத்தை நியாயப்படுத்தி கலிகால இமாம்கள் என்ற ஒரு நூல் வெளியிட்டார். அதில் அவர் எடுத்து வைத்த வாதங்களுக்கு அல்ஜன்னத் இதழில் பீஜே ஆசிரியராக இருக்கும் போது மறுப்பு எழுதி வந்தார். 1993 மார்ச் இதழில் பீஜே எழுதி அந்த மறுப்பை வரலாற்றுப் பதிவாக வெளியிடுகிறோம்.)

தொடர்ந்து படிக்க October 16, 2015, 9:50 AM

குண்டு வைத்தவர்கள் யார்?

குண்டு வைத்தவர்கள் யார்?

பீ.ஜைனுல் ஆபிதீன்

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பீஜே அவர்கள் எழுதிய இந்த சிற்றேடு இலவச வெளியீடாக நம் ஜமாஅத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதுவரை நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது. அதை வரலாற்றுப் பதிவாக இப்போது வெளியிடுகிறோம்.

சாதி மத உணர்வுகளுக்கு அப்பால் நின்று உண்மைகளைக் கண்டறிய விரும்பும் அனைவரின் கவனத்திற்கு!

கடந்த சில ஆண்டுகளாக நமது இந்தியத் திருநாட்டில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்து அப்பாவி மக்கள் உடல் சிதைந்து மாண்டு போனதைக் கண்டு, குண்டு வைத்த படுபாவிகளை மக்கள் மனதாரச் சபித்தார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து அரை மணி நேரம் கூட ஆகாத நிலையில் நாட்டில் உள்ள காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சிமி, லஷ்கரே, தய்யிபா, ஜெய்ஷே முஹம்மது மற்றும் சில பெயர்களைக் கூறி இவர்கள் தான் சதிகாரர்கள் என்று மீடியாக்கள் மத்தியில் அறிவித்து வந்தனர்.

இந்த அறிவிப்புக்கு கண், காது வைத்து மிகைப்படுத்தி மீடியாக்களும் பரபரப்பாகச் செய்தி வெளியிட்டும் வந்தனர். நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தான் செய்கின்றார்கள் என்ற கருத்து தினந்தோறும் பதிவு செய்யப்பட்டதால் முஸ்லிம் சமுதாயத்தை மற்றவர்கள் வெறுக்கும் நிலை ஏற்பட்டது.

கடவுளின் கருணையால் குண்டு வெடிப்புகளின் மர்மம் இப்போது விலகத் துவங்கி விட்டது.

அப்பாவி இந்துக்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவித்து, அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் இந்துக்களுக்கு ஆளும் கட்சியின் மீது கோபம் ஏற்படும். அந்தக் கோபத்தை அடுத்த தேர்தலில் ஓட்டுக்களாக அறுவடை செய்யலாம் என்ற நோக்கத்துடன் குண்டு வைத்த சதிகாரர்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டனர்.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் என்ற ஊரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பல்லாயிரம் மக்கள் வெள்ளிக் கிழமை தொழுது கொண்டிருந்த போது மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்து 38 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 125 முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இது 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நடந்தது.

குண்டுவெடிப்பு பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்டிருந்தும், முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீதே புலனாய்வுத் துறை போட்டு சில முஸ்லிம்களையும் கைது செய்தது .

இதே மாலேகான் நகரில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று மற்றொரு குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட சிமி அலுவலகம் அருகில் மோட்டார் சைக்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல முஸ்லிம்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே பலியாகி இருந்தும் அந்தப் பழியையும் மராட்டியக் காவல் துறை முஸ்லிம்கள் மீது தான் போட்டது.

இதே நாளில் குஜராத் மாநிலம் மொடாசா நகரிலும் குண்டு வெடித்தது.

இதனால் கொந்தளித்துப் போன முஸ்லிம்கள் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த மராட்டிய அரசு ஏ.டி.எஸ். எனப்படும் தீவிரவாதத் தடுப்புப் படையிடம் மறு விசாரணை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தது.

சாதி, மத உணர்வுகள் இல்லாமல் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காகவே தக்க பயிற்சி பெற்ற இந்தப்படை மாலேகான் இரண்டாவது குண்டுவெடிப்பைப் பற்றி மறு விசாரணை செய்த போது தான் குண்டு வைத்த சதிகாரர்கள் யார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

எந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வைக்கப்பட்டதோ அந்த மோட்டார் சைக்களில் இருந்து தனது விசாரணையை தீவிரவாதத் தடுப்புப்படை துவக்கியது.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளைப் பொருத்த வரை அது எவ்வளவு தான் சேதமடைந்தாலும் அந்த வாகனத்தின் எண்ணை தடய அறிவியல் துறை மூலம் கண்டு பிடிக்க முடியும்.

மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட் சுரண்டப்பட்டிருந்தாலும் அதன் என்ஜினை ஆய்வு செய்து அதன் எண்ணைத் தடய அறிவியல் துறை கண்டுபிடித்தது.

என்ஜினுடைய எண் தெரிந்து விட்டால் அந்த எண்ணுடைய இரு சக்கர வாகனம் யாருக்கு விற்கப்பட்டது? யார் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த மோட்டார் சைக்கிள் இளம் பெண் துறவியான பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.

இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. யிலும், ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் அங்கம் வசித்தவர் என்பதும் தெரிய வந்தது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சாமியார் கைது செய்யப்பட்டு இவரிடம் விசாரணை நடத்தியதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சங்பரிவாரத்தைச் சேர்ந்த ஷியாம்லால், திலீப்நகர், தர்மேந்திரா பைராகி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்களில் குர்ஆன் வசனம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அப்போது தான் முஸ்லிம்கள் மீது சந்தேகம் எழும் என்பது இவர்களின் எண்ணம். அந்த இடத்தில் உருது மொழிப் பிரசுரங்களும் சிதறிக் கிடந்தன.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் குர்ஆன் ஸ்டிக்கர்களும் உருதுப் பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ஒட்டு தாடிகளும், தொப்பிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்தக் குண்டு வெடிப்புகளில் ஜெலட்டின், அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிமருந்துகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக ஆர்.டி.எக்ஸ். என்னும் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

மற்ற வெடி மருந்துகளைப் போல் இது எங்கேயும் கிடைக்காது. இராணுவத்தில் மட்டுமே இந்த வகை வெடிமருந்து இருக்கும். மாட்டிக் கொண்ட இவர்கள் குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டதுடன் ஆர்.டி.எக்ஸ். எப்படிக் கிடைத்தது என்று விசாரித்த போது தான் முன்னாள் இராணுவத்தினரும் இந்நாள் இராணுவத்தினரும் ஆர்.டி.எக்ஸ். சப்ளை செய்ததும் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்தது.

மேஜர் அந்தஸ்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரபாகர் குல்கர்னி, உபாத்யாயா

ஆகிய இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தற்போது கர்னல் என்ற உயர் அந்தஸ்தில் உள்ளவருக்கும் தொடர்பு உள்ளதைக் கண்டு பிடித்து இராணுவத்தின் அனுமதி பெற்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

54பேருக்கு வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி அளித்துள்ளதாக இவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு வைத்ததில் தொடர்புடைய சியாம்சாரு, திலீப் நஷர், சிவநாராயனன் ஆகிய மூவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல சங்பரிவாரத்தினரும், காஷ்மீர் சாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் பண முதலைகள் இதற்குப் பெருமளவில் பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் புள்ளி ஒருவரைக் கைது செய்ய நீதி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்ட பெண் சாமியார், பா..ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன.

மேலும் அந்தச் சாமியார் வந்தேமாதரம் என்ற அமைப்பை குஜராத்தில் நிறுவியுள்ளார். இதற்கு குஜராத் மோடி அரசு நிதியுதவி அளித்ததும் அம்பலமாகியுள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பை துப்பு துலக்கிய ஏ.டி.எஸ் படை, குஜராத் மற்றும் பிற இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கும் மாலேகான் குண்டுவெடிப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது கவனிக்கத் தக்கது.

அப்பாவி முஸ்லிம்களை மட்டுமின்றி அப்பாவி இந்துக்களையும் சங்பரிவாரத்தினர் எப்படிக் கொலை செய்வார்கள் என்று ஆச்சரியப்படத் தேவையில்லை.

இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவரும், தலித்கள் முஸ்லிம்களாக மதம் மாற இருந்ததை எதிர்த்து உண்ணா விரதம் இருந்து அதைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் சங்பரிவாரத்தின் ஆசையை நிறைவேற்றியவரும், எப்போதும் ராம் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தவரும், இந்து மதத்தில் அதிக ஈடுபாடு காட்டியவருமான காந்தியைக் கூட இதே சங்பரிவாரத்தைச் சேர்ந்த கோட்சே தான் கொன்றான்.

இந்து மதப்பற்று உள்ள எந்த ஒருவனுக்கும் காந்தியைக் கொல்ல மனம் வராது. ராம பக்தரான காந்தியைக் கொல்வது இவர்களின் நோக்கம் அல்ல.

காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டால் அதிகமான முஸ்லிம்களை இந்துக்கள் கொன்றொழிப்பார்கள் என்பதற்காகவே காந்தியைக் கொன்றனர்.

இதனால் தான் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும் சுன்னத் செய்து கொண்டும் காந்தியைக் கொன்றான் என்பதை நாட்டு மக்கள் மறந்திருக்க முடியாது.

2002ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகில் உள்ள சதுமுகையில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டது. இதை முஸ்லிம்கள் மீதும், திகவினர் மீதும் போட்டு இந்துத்துவா இயக்கங்கள் ஆர்ப்பரித்தனர். கடைசியில் தீவிர விசாரணைக்குப் பின் செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகிய இரண்டு இந்து முன்னணியினர் தான் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவர்கள் என்று அம்பலமாகி இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்து மத்தில் பற்று உள்ள எவரும் தான் வணங்கும் சிலைக்கு செருப்பு மாலை போடத் துணிவாரா? தங்கள் கடவுளுக்கு செருப்பு மாலை போடுவதால் முஸ்லிம்களுக்கு அழிவு வரும் என்றால் அதையும் இந்துத்துவா இயக்கத்தினர் செய்வார்கள் என்பதற்கு இதை விட சான்று தேவையா?

இது போல் நெல்லை மாவட்டம் இலஞ்சியில் தேருக்குத் தீ வைக்கப்பட்டது. உடனடியாக முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் விசாரணையில் இதைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் தான் என்று கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்ட்டனர்.

இந்து மதத்தில் பற்று உடைய எவரேனும் தனது கடவுளின் வாகனமான தேருக்கு தீ வைப்பார்களா? இவர்கள் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இந்துமதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தேருக்கும் தீ வைத்து இந்து மதத்துக்கே துரோகம் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

இது போல் 2008ஆம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் தான் இதைத் செய்தனர் என்று ராமகோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் முடிவில் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர் தான் குண்டு வைத்தவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அது மட்டுமின்றி மராட்டிய மாநிலம் தானேயில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், அத்காரி ரக்சயாதன் என்ற ஆடிட்டோரியத்திலும்

நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

பயங்கரவாதத் தடுப்புப் போலீசாரின் தீவிர புலனாய்வுக்குப் பின்

1. மங்கேஷ் தினகர் நிகாம்

2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி

3. சந்தோஷ் ஆங்ரே

4. விக்ரம் பவே

ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வர் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய்காட் மாவட்டம் வர்சா கிராமம் மற்றும் பென் ஆகிய கிராமங்களில் உள்ள இவர்களின் வீடுகளை தீவிரவாதத் தடுப்புப் போலீசார் சோதனையிட்ட போது பாக்கெட் பாக்கெட்டாக அமோனியம் நைட்ரேட் 200ட்டனேட்டர்கள், டைமர்கள், வோல்டேஜ் மீட்டர்கள், இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்,  ரிமோட் கன்ட்ரோல்கள், ரிவால்வர், 92தோட்டாக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேற்கண்ட குண்டுவெடிப்புகளில் அப்பாவி இந்துக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்துக்களின் கோபத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதற்காக சில இந்துக்களை அழிப்பது தவறில்லை என்பது இவர்களின் அடிப்படைக் கொள்கை.

1993ல் மத்தியப் பிரதேசம் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் குண்டுவெடித்து இரண்டு பேர் காயமடைந்தனர். முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டாலும் பின்னர் இவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறாக வெடித்ததால் தான் அந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

2002ல் மோவ் எனும் ஊரிலுள்ள கோவிலில் வெடிகுண்டு வெடித்தது.

முதலில் முஸ்லிம்கள் மீது பழி போடப்படாலும் தீவிர விசாரணைக்குப் பின் வி.ஹெச்.பி. தொண்டர்கள் தான் குண்டு வைத்தனர் என்று காவல்துறை கண்டு பிடித்து கைது செய்தது. இவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

2006 ஏப்ரல் 7 அன்று மராட்டிய மாநிலம் நான்டெட் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்து சங்பரிவாரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டு வைப்பதற்காக தயார் செய்த போது வெடித்து விட்டதாகக் கூறினார்கள்.

அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் ஏராளமாகக் கிடைத்தன .

முஸ்லிம்கள் அதிகமாகக் கூடும் பள்ளிவாசல்களில் குண்டு வைப்பது இவர்களின் சதித் திட்டத்தில் உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பள்ளிவாசலில் குண்டு வைத்தாலும் அதையும் முஸ்லிம்கள் மீது போடுவதற்கு மீடியாக்கள் தயாராக இருப்பதால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று இவர்கள் நம்புகின்றனர்.

2003 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகையின் போது மராட்டிய மாநிலம் பார்பானி நகரில் உள்ள முஹம்மதிய்யா பள்ளிவாசலில் குண்டு வெடித்தது.

2004 ஆகஸ்ட் 27ஆம் தேதி பார்பானி மாவட்டம் சித்தார்த் நகரில் உள்ள மதரஸா மற்றும் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகையின் போது குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் பலியாகினர்.

அதே நாளில் அதே நேரத்தில் மராட்டிய மாநிலம் ஜால்னா நகரில் உள்ள காதிரியா பள்ளிவாசலில் குண்டு வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

2008 ஆம் ஆண்டு ஐதராபாத் மெக்கா மசூதியிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

மேற்கண்ட எல்லா குண்டுவெடிப்புகளும் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று கூடும் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையின் போது நடத்தப்பட்டன. நிச்சயமாக இதில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என்பதை சாதாரண மூளையுள்ளவனும் அறிய முடியும். ஆனால் மீடியாக்களுக்குத் தான் மனசாட்சி இல்லாமல் போய் விட்டது.

நான்டெட் நகரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது காயமடைந்து கைது செய்யப்பட்ட சஞ்சய் என்ற பாபுராவ் சௌத்ரி, ஹிமான் சுபான்சே இருவரும் பெங்களூரில் உள்ள குற்றவியல் ஆய்வுக் கூடத்தில் நரம்பியல் ஆய்வுக்கும், மூளைவரைவு சோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

2003 ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிக்க, தான் பயிற்சி பெற்றதாகவும், நான்டெட் நகரின் பஜ்ரங்தள் தலைவன் பாலாஜி காடியா, வி.ஹெச்.பி. தலைவன் கோவிந்த் புரானிக், ஔரங்காபத் ஆர்.எஸ்.எஸ் தலைவன் அபய்மதூக்கர், பஜ்ரங்தள் தலைவன் வினோத்ராவ் தேசர் ஆகியோருடன் கூட்டாக பள்ளிவாசலில் குண்டு வைக்கத் திட்டமிட்டதை ஹிமான் சுபான்சே ஒப்புக் கொண்டான்.

காயமடைந்த குருராஜ் ஜெயராம் என்பவன் குண்டு வைக்க தனக்கு 50 ஆயிரம் தரப்பட்டதாகக் கூறினான். புனோ நகரில் மிதுன் சக்கரவர்த்தி என்பவன் தனக்குப் பயிற்சி அளித்ததாக இவன் ஒப்புக் கொண்டான்.

மேலும் ஔரங்காபாத் பள்ளிவாசலைப் பல கோனங்களில் காட்டும் புகைப் படங்கள், ஔரங்காபாத் மேப், பள்ளிவாசல் இருக்கும் பகுதி அடையாளமிடப்பட்ட மேப் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

இவ்வளவு நடந்த பின்பும் சின்ன செய்தியாக மீடியாக்கள் வெளியிட்டு பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்தன.

கோத்ரா ரயிலைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு 2000 முஸ்லிம்களைக் குஜராத்தில் கொன்று குவித்ததை நாட்டு மக்கள் மறக்க முடியாது. கோத்ரா ரயிலை எரித்ததே சங்பரிவாரர் தான் என்பதை வீடியோ ஆதாரங்களுடன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்திய பிறகும் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் மீடியாக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை.

நாட்டில் எந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக முஸ்லிம்கள் மீது பழிபோடும் காவல்துறை அதன் படி வழக்கு நடத்தியுள்ளார்களா? தண்டனை பெற்றுத் தந்தார்களா என்றால் இல்லவே இல்லை என்று கூறிவிடலாம்.

பெங்களூரில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியாகி 15 பேர் காயமடைந்தனர். அந்தப் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டாலும் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

2003 ஆம் ஆண்டு மும்பை ரயிலில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. இது வரை வழக்கில் எந்தத் துப்பும் இல்லை.

2003ஆகஸ்ட் 25 அன்று மும்பை கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் செத்தனர். உடனடியாக எந்த ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி போடப்பட்டது. ஆனால் வழக்கில் எதையும் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.

2004 ஆகஸ்ட் 15 அன்று மும்பையில் வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் இறந்தனர். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீது போடப்பட்டது. ஆனால் எந்தத் துப்பும் துலக்கப்படவில்லை.

2005 ஆகஸ்ட் 29 அன்று புதுடெல்லியில் 3 இடங்களில் குண்டு வெடித்து 66 பேர் பலியானார்கள். உடனடியாக முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறது.

2006 மார்ச் 7 அன்று காசி வாரணாசியில் குண்டு வெடித்து 15 பேர் செத்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். அதுவும் நிரூபிக்கப்படவில்லை.

2006 ஜுலை 11 அன்று மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வெடித்தது. 180 பேர் செத்தனர். அந்தப் பழியும் முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.

எந்த முஸ்லிம்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பதிரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

2007 பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான் சென்ற சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் செத்தனர். பெரும்பாலோர் முஸ்லிம்கள். ஆயினும் இந்தப் பழியும் முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.

2007மே 118 அன்று ஹைதாரபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடித்து 11 பேர் செத்தனர். அந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டனர். ஆனால் துப்பு துலக்கவில்லை.

2007 ஆகஸ்ட் 25 அன்று ஹைதராபாத் பூங்காவில் வெடிகுண்டு வெடித்து 40 பேர் பலியானார்கள். அந்தப் பழியும் உடனடியாக முஸ்லிம்கள் மீதே போடப்பட்டது. ஆனால் இது வரை தடையங்கள் இல்லை.

2008 மே 13 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 7 வெடிகுண்டுகள் வெடித்து 63 பேர் பலியானார்கள். இந்தப் பழியையும் முஸ்லிம்கள் மீதே போட்டு பெரிய கலவரமே நடந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களைத் தொடர்பு படுத்த எந்தத் தடயமோ ஆதாரமோ இல்லை.

இப்படி நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் உரிய விதத்தில் துப்பு துலக்கியிருந்தால் அன்றைக்கே சங்பரிவாரர் தான் காரணம் என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம்கள் மீது பொய்யாகப் பழி சுமத்தியதால் தான் எந்தத் துப்பும் கிடைக்காமல் இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன .

கோவை குண்டுவெடிப்பும் மும்பை தொடர் குண்டுவெடிப்பும் ஆகிய இரண்டு மட்டுமே முஸ்லிம்கள் மீது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது .

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போலீசும், அரசும் இந்துத்துவா சக்திகளும் ஒருமித்து தாக்குதல் நடத்தி 19 பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட குழு என்ன செய்வது என்ற அறிவு இல்லாமல் பதிலடி என்ற பெயரில் வெடிகுண்டு வைத்தனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்தி இல்லை. எந்த நெட்ஒர்க்கும் இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது.

அது போல் பால் தாக்கரேயால் தூண்டிவிடப்பட்ட மும்பை காலவரத்தில் குறி வைத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் அல்லாத வீடுகளுக்கு ஸ்வஸ்திக் அடையாளம் போட்டு முஸ்லிம் வீடுகளைக் கண்டறிந்து தாக்கி நூற்றுக் கணக்கானோரைக் கொன்று குவித்தனர். இதற்குக் காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அந்தக் கோபத்தின் காரணமாக மும்பை தொடர் குண்டுவெடிப்பில் சில முஸ்லிம்கள் இறங்கினார்கள். அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.

இதைத் தவிர எந்தக் குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களைச் சம்மந்தப்படுத்த துரும்பளவும் முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை. ஆனால் சங்பரிவாரத்தைச் சம்பந்தப்படுத்த எண்ணற்ற ஆதராங்கள் கிடைத்தும் பெரும்பான்மை என்ற போர்வைக்குள் நுழைந்து சங்பரிவாரம் தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.

இவை யாவும் சங்பரிவாரத்தின் திட்டமே என்பதை குஜராத் குண்டு எடுப்பு (வெடிப்பு அல்ல) நாடகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

குஜராத்தின் சூரத் நகரில் வெடிக்காத குண்டுகளை எடுத்தார்கள். மோடி பார்வையிட வரும் போது அவரது மேடையில் கூட ஒரு குண்டு தொங்க விடப்பட்டதாக தொலைக் காட்சியில் பார்த்தோம்.

நாட்டில் அதிகப் பாதுகாப்பில் இருக்கின்ற மோடி ஒரு பகுதிக்கு வந்தால் எவ்வளவு சோதனை நடத்தப்படும்? அப்படி இருக்கும் போது அவர் பர்வையிடும் மேடையில் மோடியைத் தவிர யாராவது குண்டு வைக்க முடியுமா?

அவர் போகும் பாதையெல்லாம் வெடிகுண்டுகளாக எடுக்கப்படுகின்றன. இப்படி நடக்கும் என்பதை அறிவுடைய யாராவது நம்புவார்களா?

அதை விட வேடிக்கை வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்த நாடகம்.

வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய தனி நிபுணர்கள் உள்ளனர். அதற்கென குண்டு துளைக்காத உடை உண்டு. அப்படியெல்லாம் இல்லாமல் சாதாரண போலீசார், சாதாரண உடையில் பொது மக்கள் மத்தியில் பக்கோடா பொட்டலத்தைப் பிரிப்பதுபோல் பிரித்து வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ததைப் பார்த்து நாடே கை கொட்டி சிரித்தது.

இந்து மதத்தின் தீவிர பக்தரான பூரி சங்காராச்சரியாரே இதை நாடகம் என்றார் .

வெடிக்கப்படாமல் கண்டு எடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் குஜராத் முதல்வர் மோடியின் நாடகம். மதக் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டவை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோத்ரா சம்பவம் போன்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்த மோடி திட்டமிடுகிறார். அவர் எதையும் செய்யத் திறமை படைத்தவர்

என்று பூரி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

19.10.2008 அன்று கேரள மாநிலம் தலைச்சேரியை அடுத்த தர்மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வீட்டுத் தோட்டத்தில் சக்திவாய்ந்த 20 குண்டுகளைக் காவல்துறை கண்டு பிடித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் விபின் தாஸ் என்பவருக்குச் சொந்தமான ஷோபாசதனம் என்ற வீட்டில் தான் மேற்படி குண்டுகள் எடுக்கப்பட்டன.

2008 செப் 21 அன்று கர்நாடகா புத்துர் எனும் இடத்தில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் காமத்துக்குச் செந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்து 397 ஜெலட்டின் குச்சிகள், 1200 டெட்னேட்டர்கள் மற்றும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் பா.ஜ.க தலைவர் சுரேஷ் காமத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவற்றையெல்லம் தொகுத்துப் பார்க்கும் போது கோவை, மும்பை தொடர் குண்டுவெடிப்பு தவிர அனைத்துமே சங்பரிவாரத்தின் சதித் திட்டம் என்பது தெளிவாகிறது.

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அவர்களை டெல்லி போலீஸ் கைது செய்தது. ஆனால் மறு விசாரணை நடத்திய சி.பி.ஐ. அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்கள் மீது வழக்குப் போட்ட காவலர்களைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது .

நடுநிலையாளர்களே! இந்த விபரங்கள் யாவும் மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது மிகப் பெரிய வலைப்பின்னல் இதன் பின்னால் இருப்பது தெரிகிறது.

ராணுவத்தினரே இந்த பயங்காரவாதச் செயல்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து கடத்தி தீவிரவாதிகளூக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தலைவர்கள் பணக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இவை அனைத்துமே நாட்டிலிருந்து முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்துக் கடவுளை உடைத்தாலும், இந்துக் கோவில்களை இடித்தாலும், இந்துத் தலைவர்களைக் கொன்றாலும், இந்து அப்பாவி மக்கள் உடல் சிதறி செத்து மடிந்தாலும் அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட முடியும் என்றால் அதைச் செய் என மூளைச் சலவை செய்யப்ட்ட ஒரு கூட்டம் தான் அனைத்தையும் கன கச்சிதமாகச் செய்து வந்தது.

அத்வானியாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இப்போது மாட்டிக் கொண்டனர்.

நியாய உள்ளம் படைத்த எங்கள் இந்து சகோதரர்களே! உங்களையே கொன்று குவிக்கத் தயங்காத இந்தப் பாவிகளை இனியும் இந்து மதத்தின் காவலர்கள் என்று நம்பப் போகிறீர்களா ?

ஆட்சியைப் பிடிக்கவும், முஸ்லிம்களை அழித்தொழிக்கவும், இந்துக்களையே கொன்று, அந்தப் பழியை முஸ்லிம்கள மீது போடுபவர்களையும், இந்துத் தெய்வங்கள் மீது செருப்பு மாலை போட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், இந்துத் தலைவர் காந்தியைக் கொன்று அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும், கோத்ரா ரயிலில் வந்த கரசேவகர்களைக் கொளுத்தி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களையும் இந்துக்களின் காவலர்கள் என்று இனியும் நம்பப் போகிறீர்களா?

உங்களையே நாளை அழிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதில் இனியும் உங்களுக்குச் சந்தேகமா?

உங்கள் தெய்வங்களுக்குச் செருப்பு மாலை போடத் துனிந்தவர்களை இந்துக்கள் பட்டியலில் சேர்க்க உங்கள் மனம் இடம் தருமா?

அரசியலுக்காக மதவெறியைத் தூண்டும் இவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல; இந்துக்களுக்கும் எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

அனைத்து மதத்தவரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ குறுக்கே வருபவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் அவர்களை அடியோடு ஒதுக்கித் தள்ளுவோம். ஒற்றுமை காப்போம்.

August 8, 2015, 11:46 PM

பீஜே மாறிவிட்டாரா?

பீஜே மாறிவிட்டாரா?

சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும்; அதைத் தவிர எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தில் முன்னர் நாமும் இருந்தோம். பீஜேயும் இருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் 2:102 வசனம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. சூனியத்தின் மூலம் எதையும் செய்ய முடியாது என்பது தான் சரியான கருத்து என்ற முடிவுக்கு வந்தோம். குறித்து 495 வது குறிப்பில் பீஜே விளக்கியுள்ளார்.

இதன் பின்னர் தொடர் உரைகளிலும் இதை பீஜே விளக்கியுள்ளார். சூனியம் என்ற நூலிலும் இது குறித்து பீஜே தெளிவாக விளக்கியுள்ளார்.

சூனியத்தால் கணவன் மனைவிக்கிடையே பிரிக்க முடியும் என்ற கருத்தில் பீஜே இருந்த போது பொருளடக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தார்.

சூனியம்

சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் - 2:102

சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது - 2:102

சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் - 2:102

அதிகபட்சமாக உறவினரிடையே பிளவு ஏற்படுத்தலாம் - 2:102

சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் - 2:102

சூனியம் என்பது மாயையும், ஏமாற்றுதலுமே - 7:116, 10:81, 20:66, 20:69

நபிமார்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 17:47,48, 17:101, 25:8, 26:153, 26:185

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 5:67, 15:9, 75:17, 114:1

அந்தக் கருத்தை பீஜே மாற்றிக் கொண்ட பின்னர் பொருளடக்கத்தில் சிவப்பு எழுத்தில் நாம் அடையாளம் காட்டியதை நீக்காமல் விட்டு விட்டார். சில பதிப்புகள்  நீக்கப்படாமல் வந்து விட்டன. 14 வது பதிப்பும் அப்படியே அச்சாகி விட்டது.

ஆனால் வழிகெட்ட சூனியக்காரர்கள் _  ஆதாரத்தின் மூலம் தங்கள் கருத்தை நிலைநாட்ட வக்கற்றவர்கள்-  சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியுமென்று பீஜே தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டார் என்று இதை வைத்து விமர்சனம் செய்து அற்ப திருப்தி பட்டுக் கொள்கின்றனர்.

பீஜே எந்தக் கருத்தில் இருக்கிறார் என்பது இவர்களுக்குத் தெரியும். இது திருத்தம் செய்யாமல் விடுபட்ட பிழை என்பதும் இவர்களுக்குத் தெரியும்.

14ஆம் பதிப்பில் 2:102 க்கான 495வது குறிப்பில் நமது நிலை என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளதும் இவர்களுக்குத் தெரியும்.

அப்படி இருந்தும் அறிவு  நாணயமில்லாமல் இவ்வளவு  கீழ்த்தரமாக இவர்கள் செயல்படுவது இவர்களின் கேடுகெட்ட தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ஒருவனை, ஒருவனின் கருத்தை விமர்சனம் செய்வதாக இருந்தால் அந்தக் கருத்தில் தான் அவன் இருக்கிறானா? என்று தெளிவடைந்து விமர்சிக்க வேண்டுமே தவிர பிழையாக விடுபட்டதை வைத்து விமர்சித்தால் ஒரு நாளிலேயே சாயம் வெளுத்து விடும். இவர்கள் வடிகட்டிய அயோக்கியர்கள் என்பதும் தெரிந்து விடும் என்பதைக் கூட இவர்கள் அறிய வில்லை.

அதிகபட்சமாக உறவினரிடையே பிளவு ஏற்படுத்தலாம் - 2:102

இப்படி தவறுதலாக நீக்கப்படாமல் உள்ளதை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இதைப் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்? உடனே : 2:102 வசனத்தை எடுத்துப் பார்ப்பார்கள். அந்த வசனத்தில் போடப்பட்டுள்ள குறிப்பு எண் 495ஐ எடுத்து வாசிப்பார்கள்.

102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.28 பாபில் நகரத்தில் சூனியத்தை357 மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத்395 என்ற ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.495 மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

இதில் சூனியத்தால் கணவன் மனைவியரிடையே பிரிப்பது உள்ளிட்ட எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று பீஜே விளக்கியுள்ளதைப் பார்ப்பார்கள்.

அட கேடுகெட்டவர்களா? ஒரு மனிதன் நீக்காமல் தவறுதலாக விட்டு விட்டதை வைத்து விமர்சிக்கும் அயோக்கியர்களான உங்களின் எல்லா விமர்சனமும் இப்படித்தான் இருக்கும் என்று முடிவுக்கு வர மாட்டார்களா? இந்த அறிவு கூட இந்தக் குறுமதியாளர்களுக்கு இல்லை.

ஒரு வகையில் இந்த சலபிக் கும்பல் பீஜேயின் தமிழாக்கத்தை இவர்களின் ஆதரவாளர்களும் வாங்கிப் படிக்க தூண்டுதலாக அமைந்து விட்டனர்.

ஆஹா பீஜே நம் கருத்துக்கு வந்து விட்டாராமே என்று இவர்கள் கொடுக்கும் விளம்பரத்தால் ஆர்வமாக பீஜேயின் தமிழாக்கத்தை வாங்கிப் படிப்பார்கள். இவர்கள் சொன்னது போல் பீஜே மாறவில்லை. இன்னும் உறுதியாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்வார்கள். இதுதான் சரியான கருத்து என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

அல்ஹம்து லில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் அது நீக்கப்படும். ஆன்லைன் பீஜேயில் அது நீக்கப்பட்டு விட்டது.

August 5, 2015, 4:56 PM

சபதம் ஏற்போம்!

சபதம் ஏற்போம்!

சகோதரர் பீஜே அவர்கள் அல்ஜன்னத் மாத இதழில் ஆசிரியராக இருந்த போது அதன் கடைசி பக்கத்தில், "சபதம் ஏற்போம்" என்ற தலைப்பில் கீழ்க்கண்ட கொள்கை முழக்கம் இடம் பெறும்.

கீழே  நீங்கள் பார்ப்பது  1989ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அல்ஜன்னத் மாத இதழின் கடைசிப் பக்கத்தைத்தான்.

அப்போதே இந்த ஜமாத் தனது கொள்கையைத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதோ அந்தக் கொள்கை முழக்கம்:

சபதம் ஏற்போம்!

எந்நிலையிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவோம்!

இணைவைத்தலின் சாயல் கூட நம்மீது படிய விடமாட்டோம்!

அல்லாஹ்வின் தூதரை மட்டுமே பின்பற்றுவோம்!

அவர்களுக்கு இணையாக மனிதர்களில் எவரையும் கருதமாட்டோம்!

திருக்குர் ஆனையும், நபி மொழியையும் உயிருக்கு மேலாய் மதிப்போம்!

இவிரண்டிற்கும் முரண்பட்ட எவரது கருத்தையும் நிராகரிப்போம்!

இஸ்லாத்திற்காக தியாகங்கள் சேவைகள் செய்த உத்தமர்களை மதிப்போம்!

அல்லாஹ்வுக்கு இணையாக அவனது தூதருக்கு சமமாக அவர்களில் யாரையும் கருத இடம் தரமாட்டோம்!

தவறுகள் எவரிடத்திலிருந்து வந்தாலும் அந்த தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம்!

தவறிய மனிதர்களை தரைக்குறைவாக விமர்சிக்கமாட்டோம்!

தவறுகளை எவர் சுட்டிக்காட்டினாலும் அடக்கத்துடன் ஏற்போம்!

வரட்டுக் கௌரவம் பார்ப்பவர்களையும், முரட்டுப் பிடிவாதம் கொள்பவர்களையும் அலட்சியம் செய்வோம்!

தனி நபர் வழிபாட்டை தரைமட்டமாக்குவோம்!

தனி நபர் தாக்குதலை அடியோடு தவிர்ப்போம்!

June 27, 2015, 7:47 PM

நமது பொறுப்பு அதிகமாகிறது!

நமது பொறுப்பு அதிகமாகிறது!

மலரும் நினைவுகள்!

பீ,ஜைனுல் ஆபிதீன் அவர்களின் அண்ணனும், மார்க்க அறிஞருமான பீ.ஷேக் அலாவுத்தீன் அவர்கள் இளம் வயதில் மரணித்ததை ஆரம்ப காலக் கொள்கைச் சகோதரர்கள் அறிவார்கள். மிகச் சிறந்த வசீகரமான பேச்சாளராகவும், பீஜே அவர்களுக்கு வழிகாட்டியாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். ஷேக் முரீது என்ற பித்தலாட்டத்தை எதிர்த்து வந்த அவர்கள் தனது பெயரில் கூட ஷேக் என்ற சொல் வேண்டாம் என்பதற்காக பீ. ஷேக் அலாவுதீன் என்பதை பீ. எஸ். அலாவுதீன் என்று மாற்றிக் கொண்டார்கள்.

பீஜே அவர்கள் அந்நஜாத் எனும் மாத இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சில நாட்களில் பீ.எஸ். அலாவுத்தீன் அவர்கள் மரணித்த போது பீஜே அவர்கள் அந்நஜாத் மாத இதழில் எழுதிய தலையங்கத்தை வரலாற்றுப் பதிவாக இங்கே வெளியிடுகிறோம்.

நமது பொறுப்பு அதிகமாகின்றது

1986 மே, அந்நஜாத் தலையங்கம்...

பேரன்பு கொண்ட செயல் வீரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், ஓரிறைக் கொள்கையில் ஆழ்ந்த உறுதி கொண்ட நம் சகோதரர்களால் “பீஎஸ்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட, எனது அண்ணன் P.S. அலாவுதீன் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து நமது பொறுப்பு அதிகமாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் முன்னே எடுத்து வைத்த கொள்கையில் கடைசி வரை “P.S.” அவர்கள் உறுதியாக நின்றார்கள். மரணத்தின் விளிம்பை அடைந்து விட்ட நேரத்தில் கூட, “மாயம் மந்திரங்கள்” மூலம் இந்த நோய் குணமாகும் என்றால் அல்லது தர்ஹாக்களில் சென்று தங்குவதால் இந்த நோய் குணமாகும் என்றால் என் நோய் குணமடைய வேணடாம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்கள்.

தர்ஹாக்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கண்டித்துப் பேசியதால் தான் அவர்களுக்கு நோய் வந்ததாகக் கதை கட்டினர் சிலர்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்பட பல நபிமார்களும், நல்லவர்களும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்” என்ற வரலாற்று உண்மை தெரியாதவர்கள் தான் இப்படி எல்லாம் பேசுவார்கள்.

“தர்ஹாக்களின் பெயரால் நடக்கும் தில்லுமுல்லுகளைச் சுட்டிக் காட்டியதால் தான் இந்தச் சின்ன வயதிலேயே மரணத்தை தழுவிக் கொண்டார்”என்று நாக்கில் நரம்பின்றி பேசுவோர் சிலர்.

நபிகள் நாயகத்தின் அருமை மகள்கள் பாத்திமா (ரழி) அவர்களும், ருகையா (ரழி) அவர்களும், நபிகளின் அன்பு மகன் இப்ராஹிம் (ரழி) அவர்களும் P.S.ஐ விட சின்ன வயதில் மரணமடைந்த வரலாறு நமக்கு நன்றாகத் தெரியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போர்க்களத்துக்கு புறப்படும் வேளை, அவர்களின் அன்பு மகளார் ருகையா (ரழி) அவர்களின் உடல் நிலை, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது தனது மருமகன் உஸ்மான் (ரழி) அவர்களை தம் மகளின் அருகே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு போர்க்களம் சென்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

போர் அங்கே மும்முரமாக நடக்கும்போது, இங்கே அவர்களின் மகளார் (மிகவும் சின்ன வயதில்) மரணமடைந்து விடுகிறார்கள். அந்த நேரத்தில், மக்கத்துக் காபிர்களும், மதீனத்து யூதர்களும் சொன்ன அதே வார்த்தைகளைத்தான், மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்போர் இன்றைக்கு சொல்கிறார்கள்.

நஜாத் என்ற திருப்பணியை நான் ஏற்ற நேரத்தில், அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில் எனது அண்ணனை அல்லாஹ் அழைத்துவிட்டான். அவனது முடிவு எதுவானாலும், அதனைப் பொருந்திக் கொள்வதுதூனே ஒரு மூமினுடைய பண்பாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற விமர்சனங்கள் எனது கொள்கையிலிருந்து எள்ளளவும், எள்ளின் முனையளவும் என்னை மாற்றிவிடாது. உலகத்து விளைவுகளை வைத்து மார்க்கத்தை முடிவு செய்கின்ற நிலமையில் நாம் இல்லை.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள P.S. அவர்கள் ஆற்றிய உரை இதனை நமக்கு நன்கு தெளிவுபடுத்தும்.

நான் காயல்பட்டிணத்தில் முபாஹலா செய்ததால் தான் இந்த இதய நோய் ஏற்பட்டது என்றும் கூட சிலர் பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுவர். P.S.அவர்கள் இரண்டு ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டார்கள். முபாஹலா நடந்து ஆறேழு மாதங்களே ஆகின்றன.

P.S. அவர்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் நான் முபாஹலாவுக்குச் சென்றேன்.

அல்லாஹ்வினால் நமக்குத் தரப்பட்ட இந்த மார்க்கம் எவரையும் நம்பி இருக்கவில்லை.

அவன் யாரை வைத்து வேண்டுமானாலும் இந்த தீனுடைய வேலையை வாங்கிக் கொள்வான்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு கூட இந்த இஸ்லாம் அழிந்து விடவில்லை. அவர்கள் விட்டுச் சென்ற பணியினை நாம் தொடர்ந்து செய்வோம். இன்னும் வேகமாக, உறுதியாகச் செய்வோம். அந்த நெஞ்சுறுதியை அல்லாஹ் நமக்குத் தருவான்.

ஒரு P.S. மறைந்துவிட்டாலும், ஆயிரம் P.S.களை நாடெங்கும் உருவாக்கிச் சென்றுள்ளார்கள். P.S. அவர்கள் துவக்கி வைத்த திருக்குர்ஆன் விரிவுரை திறமை மிக்க அறிஞர்களைக் கொண்டு தொடர்ந்து நஜாத்தில் இடம் பெறும்.

அன்புடன்,

P.ஜைனுல் ஆபிதீன்

குறிப்பு : P.S. அவர்களின் மரணச் செய்தியை நான் எவருக்கும் தந்தி மூலமோ, தொலைபேசி மூலமோ தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.

வேண்டுகோள்

பீ. எஸ். அவர்கள் ஆற்றிய உரைகள் அன்று ஆடியோ பதிவுகளாக இருந்தன. அவை அனைத்தும் நம்மிடமிருந்து தவறிவிட்டன. அந்த உரைகள் யாரிடமாவது இருந்தால் மாநிலத் தலைமைக்கு அனுப்பி உதவுங்கள்!

June 8, 2015, 11:52 AM

சூனியம் ஒப்பந்தம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனக்கு யாரேனும் சூனியம் செய்து அதனால் பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக ரமளான் உரையில் அறிவித்திருந்தார்கள்.

இதை கேள்வி பட்ட திருச்சியை சேர்ந்த ஒருவர் நான் பி.ஜே விற்கு சூனியம் செய்கின்றேன் என வந்தார். பி.ஜே விற்கு 2 மாத்தில் சூனியம் செய்கின்றேன் என்றார். தனக்கு சூனியம் செய்வதற்கு அவர் கேட்ட பொருட்களை பி.ஜே அவர்கள்  கொடுத்து விட்டு அவருடன் இன்று (31-7-2014)  ஒப்பந்தம் செய்தார்கள். 

ஒப்பந்த வீடியோ

பாகம் - 1

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

பாகம் - 2

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

இது குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியானது:

 

ஒப்பந்தத்தின் நகல்:

August 1, 2014, 8:56 PM

இலங்கை நவமணி வார இதழக்கு பீஜேயின் பேட்டி

இலங்கை நவமணி வார இதழுக்கு பீஜேயின் பேட்டி

இலங்கையில் இருந்து வெளிவரும் நவமணி வாரைதழ் தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் அதன் இலங்கைக் கிளையாக உள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும், முஸ்லிம்களின் நிலை குறித்தும் பீஜே அவர்களை பேட்டி கண்டு விரிவாக வெளியிட்டுள்ளது. அதனை நன்றியுடன் இங்கே அப்படியே வெளியிடுகிறோம்.


பி.ஜே தீவிரவாதியா? அவரே பதில் சொல்கின்றார். 

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பி.ஜே பிரபல தென்னிந்திய மார்க்க அறிஞரும், தமிழுலகறிந்த பேச்சாளரும், எழுத்தாளரும், குர்ஆனை சரளமாக தமிழ் மொழியில் பெயர்த்தவருமாவார். இஸ்லாத்தின் தூய செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கும் தனது பயணத்தில் ஆயிரக்கணக்கான உரைகளை இவர் ஆற்றியுள்ளார். கிறிஸ்தவர்கள் மற்றும் வேறு பல இயக்கத்தவர்களுடன் குர்ஆனும் நபியவர்களின் வாழ்க்கை வழிகாட்டலும் தான் மறுமை வெற்றிக்கு வழி செய்துதரும் என்பதை பல விவாதங்கள் மூலமாக இவர் நிரூபித்திருக்கின்றார்.

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத அன்பர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இவர் நடத்தும் நிகழ்ச்சி தமிழுலகில் பிரபலமானதாகும். இவர் நூற்றுக்கணக்காண நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய உரைகள், விவாதங்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைகளை www.onlinepj.com என்ற இவருடைய இணையதளத்தில் பார்க்கலாம்.

கேள்வி - உங்களைப் பற்றியும், உங்களது அமைப்பு பற்றியும் கூறுவீர்களா? உங்களது நோக்கமென்ன? அதன் செயற்பாடுகள் எவ்வாறு இடம் பெறுகின்றன?

பதில் - திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியையும் முஸ்லிம்கள் முறையாகவும், முழுமையாகவும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை ஏற்று பிரச்சாரம் செய்யும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற எங்கள் அமைப்பு நான்கு செயற்திட்டங்களை வகுத்து அதைச் செயல்படுத்தி வரும் இயக்கமாகும்.

01. முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளையும், வணிகம், திருமணம் மற்றும் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளிலும் திருக்குர்ஆன் காட்டும் வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியிலும் நடக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட எல்லா சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் மத்தியில் பிரசாரம் செய்வது முதல் திட்டம்.

02. பிற மத மக்களுக்கு இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி கசப்புணர்வை நீக்குவது இரண்டாவது திட்டம். பிறசமய மக்கள் மத்தியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி வழியாகவும், பொதுக்கூட்டங்கள் வழியாகவும், துண்டுப் பிரசுரங்கள் வழியாகவும் பிரசாரம் செய்து அனைத்து மதத்தவரும் இணக்கமாக வாழ உழைக்கிறோம். அனைத்து மதத்தவருக்கும் பயன்படும் வகையில் இரத்ததானம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது சாதி, மத பேதம் பாராமல் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவுவது எல்லாம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

03. கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக ஸகாத் நிதியைத் திரட்டி உதவுதல், கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் கல்வி கற்க ஆர்வமூட்டுதல், தொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல், ஆதரவற்ற சிறுவர்களுக்காகவும், முதியோர்களுக்காகவும், தனித்தனியாக சகல வசதிகளுடன் இலவசமாக ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்துதல்.

04. முஸ்லிம்களுக்கு இந்திய அரசின் மூலமோ அல்லது மற்றவர்கள் மூலமோ பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் வன்முறையில் இறங்காமல் சட்டத்தை மீறாமல் அறவழிப் போராட்டம் மூலமும், நீதிமன்ற நடவடிக்கை மூலமும், பிரசாரம் மூலமும் நியாயம் கிடைக்கப் பாடுபடுதல்.

கேள்வி - இலங்கையில் செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவீர்களா?

பதில் - இந்தியாவுக்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் எங்கள் அமைப்புக்கு கிளைகளும் வலுவான அடித்தளமும் உள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் உள்ளது. மற்ற நாடுகளில் செயல்படும் இயக்கத்தின் கொள்கைகளும், எங்கள் கொள்கையும் ஒன்றுதான். நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ப செயற்திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை காரணமாக சில செயல்பாடுகளை இந்தியாவில் உள்ள சட்டப்படிதான் நடக்க முடியும். இது போல் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கலாம்.

கேள்வி - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு துணை போகின்றதா?

பதில் - 25 ஆண்டுகளுக்கு மேலாக ஏகத்துவக் கொள்கையில் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இவ்வளவு நீண்ட காலகட்டத்தில் பல்வேறு ஆட்சிகள் தமிழகத்திலும், இ்ந்தியாவிலும் மாறியுள்ளன. எந்த ஆட்சியிலும் எங்கள் அமைப்பின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. தீவிரவாதம், வன்முறைக்கு எதிராக நாங்கள் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறோம். மேலே நான் எடுத்துச் சொன்ன நான்காவது திட்டமே வன்முறை வழியில் மக்கள் செல்லக் கூடாது என்பதற்காகத்தான்.

கேள்வி - இலங்கையிலுள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்குத் துணை போவதாக முத்திரை குத்தப்படுகிறதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் - இலங்கையிலுள்ள எங்கள் ஜமாஅத் ஒருகாலத்திலும் தீவிரவாதத்தில் இறங்காது. அப்படி இறங்கும் அமைப்பு எங்களின் கிளை அமைப்பாக இருக்க முடியாது. இப்படி யாரேனும் குற்றம் சுமத்தினால் எங்கள் இலங்கை நிர்வாகிகளின் பேச்சு அல்லது நடவடிக்கையை ஆதாரமாக் காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இப்படி எங்களுக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களுடன் அது குறித்து பகிரங்க விவாதம் செய்ய ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டது. எங்களை தீவிரவாதிகள் என்று சொன்னவர்கள் இன்றுவரை அந்த அறைகூவலை ஏற்கவில்லை. இதுவே இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்ற பொய் என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளது.

கேள்வி - பொதுபல சேனா, சிங்கல ராகவ போன்ற இனவாத அமைப்புகளின் அண்மைக்கால செயற்பாடுகளால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

பதில் - கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் உள்ளன. கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சாரம் காரணமாகத்தான் ஈழப் பிரிவினை வாதமும் ஈடுகொடுக்க முடியாத வன்முறைகளும் நடந்தன.  இது போல் கடந்த காலங்களில் பேரினவாதிகள் பேசியதை ஆதாரமாகக் காட்டித்தான் விடுதலைப் புலிகள் தமிழர்களை வென்றெடுக்க முடிந்தது.

இந்த வரலாற்றில் இருந்து இவர்கள் பாடம் படிக்கவில்லை என்பதை நாம் உணர்கிறோம். விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பை இலங்கை அரசு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்ததற்கும் முஸ்லிம்கள் அரசின் நிலைபாட்டை ஆதரித்தது முக்கியக் காரணம். முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டு இருந்தால் இன்றும் கூட புலிகளைத் தோற்கடிக்க முடியாது. இதற்கு இப்படி நன்றி செலுத்துவது போல் தெரிகிறது.

மேலும் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் தான் பயன்பட்டனர். முஸ்லிம்கள் இலங்கையில் நல்ல நிலையில் உள்ளனர் என்று பிரச்சாரம் செய்துதான் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை அரசால் பெற முடிந்தது. சக முஸ்லிம் நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அது இலங்கைக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மேற்கண்ட அமைப்பினர் உணர வேண்டும். இலங்கை அரசு இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

கேள்வி - எல்.டி.டி. அமைப்பிற்கு எதிராக அதன் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் விமர்சித்திருந்தீர்கள். இதற்கான காரணங்கள் ஏதுமுண்டா?

பதில் - சட்டம் ஒழுங்கைக் கையில் எடுக்கக் கூடாது என்பது எங்களின் அடிப்படைக் கொள்கையாக உள்ளதாலும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழைந்து பலநூறு முஸ்லிம்களை, புலிகள் சுட்டுக் கொன்றதாலும் இன்னும் பல நியாயமற்ற நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இறங்கியதாலும் நாங்கள் விடுதலைப் புலிககைளை ஆரம்பம் முதல் எதிர்த்தோம்.

எங்கள் ஆதரவைக்கோரி விடுதலைப் புலிகளின் சார்பில் சிவாஜிலிங்கம் என்ற இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரைப்பட இயக்குனர் அமீர் என்பவருடன் வந்து எம்மைச் சந்தித்தார். அவரிடமே அனைத்து ஆதாரங்களையும் கொடுத்து புலிகளை, கடுகளவும் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கூட ஆதரிக்க மாட்டான் என்று சொல்லி அனுப்பினோம். ஒஸ்லோ மாநாட்டில் முஸ்லிம்களை ஒரு தரப்பாக சேர்க்கக் கூட ஒப்புக்கொள்ளாமல் கிழக்கு மகாணத்தையும் தங்கள் கைவசத்தில் வைத்து கொள்ள நினைத்த புலிகளின் முஸ்லிம் விரோதப் போக்கையும் நாம் அவரிடம் தெளிவாக விளக்கினோம்.

கேள்வி - எல்.டி.டி. ன் மோசமான யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டவை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் - இப்போது நாடு அமைதியாக உள்ளது. புலிகளின் ஆதிக்கமிருந்த கால கட்டத்தில் நான் இலங்கைக்கு பல தடவை வந்துள்ளேன். கொழும்பிலிருந்து கல்முனைக்குப் போய்ச் சேர்வதற்குள் பத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகளை இறக்கிவிட்டு சோதிப்பார்கள். காலையில் புறப்பட்டால் இறவில்தான் போய்ச்சேர முடியும். அந்த நிலை இப்போது இல்லை.

நாங்கள் கொலன்னாவ என்ற இடத்தில் தங்கியிருந்து காலையில் விமானத்தில் சென்னை செல்லக் காத்திருந்தோம். எங்கள் பயணத்துக்கு சிலமணி நேரங்களுக்கு முன்னால் கொழும்பு விமான நிலையத்தைப் புலிகள் தாக்கினார்கள். நாங்கள் ஒரு மணிநேரம் முன்னதாகப் புறப்பட்டிருந்தால் கொல்லப்பட்டவர்களில் எங்கள் பெயரும் இடம் பெற்று இருக்கக்கூடும்.  இது போன்ற நிலை இப்போது இல்லை.

ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டிய சிங்கள இயக்கங்கள் இந்த அமைதியை நீடிக்க விடமாட்டார்களோ என்று அச்சமாக உள்ளது.

கேள்வி - நீங்கள் தீவிரவாதியா?

பதில் - நான் மேலே கூறியவற்றில் இதற்குப் பதில் உண்டு.

கேள்வி - தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே ஆட்சி தொடர்பாக ஏதாவது கூறுவீர்களா?

பதில் - இலங்கையிலுள்ள அரசியல் நிலவரங்கள் எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் இலங்கைக்கு வெளியே வாழும் எல்லா முஸ்லிம்களும் பேரினவாத வெறியர்கள் விஷயத்தில் மென்மையாக அல்லது மறைமுக ஆதரவாக ராஜபக்ஷே இருக்கிறார் என்ற எண்ணம் பதிந்து வருகிறது. இதை அவர்தான் தனது நடவடிக்கை மூலம் மாற்ற வேண்டும்.

கேள்வி - .நா பேரவையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தபோது இலங்கைக்கு ஆதரவாக உங்கள் குரல் வந்தது ஏன்?

பதில் - புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதால் அதைச்செய்த இலங்கை அரசைக் கண்டிக்கக் கூடாது என்பதால் ஆதரவாக் குரல்கொடுத்தோம். ஆனால், பள்ளிவாசல்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், முஸ்லிம்கள் தாக்கப்படுவதும் அதிகரித்தால் இந்த நிலை நிச்சயமாக மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

கேள்வி - பௌத்த இனவாதிகளுக்கு ஏதாவது கூற விரும்புகிரீர்களா?

பதில் - பெரும்பான்மை மக்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காட்டி அதிகாரம் செலுத்தவும், சொகுசாக வாழவும் இதேபோல் பேரிணவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் போது நம்மில் ஒருவன் செத்தாலும் எதிரிகளில் ஆயிரம் பேரை அழிக்கவேண்டும் என்ற மனநிலைக்கு உள்ளாகிறான். இதே போல் உருவாகாத வரை தான் பெரும்பான்மை வாதத்தால் பயன் அடைய முடியும்.

கொடுமை எல்லை மீறிப் போனால் சாகத் துணிந்தவர்களை அது மீண்டும் உருவாக்கிவிடும். இதனால் பெரும்பான்மை சமுதாயம் பயந்து வாழும் நிலை ஏற்பட்டுவிடும்.  இதற்கு வரலாற்றில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளை விட வேறு என்ன ஆதாரம் தேவை? அனைத்து மக்களும் சகோதரர்களாக சம உரிமை பெற்றவர்களாக வாழ்வதற்கு பாடுபடுங்கள் என்பதுதான் இவர்களுக்குச் சொல்லும் செய்தி.

கேள்வி - இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு கூறுகளாக பிரிந்திருக்கின்றார்களே. இது பற்றி...?

பதில் - இலங்கை மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. மார்க்கம் அடிப்படையிலான பிளவுகளும் உள்ளன. அரசியல் ரீதியான பிளவுகளும் உள்ளன. மார்க்க அடிப்படையிலான பிளவுகள் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்பட வேண்டும்.

மனது வைத்தால் இதில் அதிகமான பிளவுகளைக் குறைத்துவிட முடியும். அனைத்து பிரிவினரும் திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டுள்ளனர். நபிகள் நாயகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடுவோம் என்ற மனநிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டால் இரண்டு மூன்று பேச்சுவார்த்தைகளில் ஏராளமான வேறுபாடுகளைக் குறைத்து விடலாம். புரிந்து கொள்வதில் ஏற்பட்ட மிகச் சில வேறுபாடுகள் மட்டுமே மிஞ்சும்.

யார் பதவியைப் பிடிப்பது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளையும் கூட நாம் மனது வைத்தால் குறைத்துவிடலாம். இயக்கங்களை நடத்தும் தலைவர்கள் தங்களின் ஆதாயத்திற்காகவே இயக்கம் நடத்துவதால் தங்கள் இயக்கத்தைக் கலைக்க மாட்டார்கள். ஆனால் மக்களுக்கு இவர்களைப் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மக்கள் நினைத்தால் அதிகமான இயக்கங்களை ஒழித்துவிடலாம்.

எல்லா இயக்கங்களிலும் கேடுகளும் நல்லவைகளும் இருக்கும். முற்றுமுழுதான நல்ல இயக்கம் எதுவும் கிடையாது. முழுமையான கெட்ட இயக்கமும் கிடையாது.

எனவே இருக்கும் இயக்கங்களில் குறைவாக தவறு செய்யும் இயக்கம் எது என்றும், அதிகமான நன்மை செய்யும் இயக்கம் எது என்றும் திறந்த மனதுடன் ஆய்வு செய்து உள்ளதில் நல்லதை மட்டும் ஆதரித்து மற்றவைகளை அறவே ஒதுக்கினால் பெரியளவில் இயக்கங்களின் எண்ணிக்கை இருக்காது.

இருக்கும் இயக்கங்களில் ஓரளவு நல்ல இயக்கம் தவிர, வேறு இயக்கங்களை ஆதரிப்பதில்லை. நிதி அளிப்பதில்லை. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை. என்று முடிவு செய்தால் லெட்டர் இயக்கங்கள் காணாமல் போய்விடும். எவன் எதை ஆரம்பித்தாலும் அதை ஆதரிக்கவும், உதவவும் நாலு பேர் இருப்பதால்தான் இயக்கங்கள் பெருகுகின்றன.

கேள்வி - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏனைய அமைப்புகளுடன் முரண்படுகின்றதாம். இக்குற்றச்சாட்டு நியாயமானதா?

பதில் - ஒவ்வொரு அமைப்பும் மற்ற அமைப்போடு பல விடயங்களில் முரண்பட்டுத்தான் இருக்கின்றன. முரண்பட்டாலும் எங்கள் நிலை சரி உங்கள் நிலை தவறு என்று சொல்ல மாட்டார்கள். எங்கள் இயக்கத்தின் தவறுகளை நீங்கள் பேசாதீர்கள். உங்கள் இயக்கத்தின் தவறுகளை நாங்கள் பேசமாட்டோம் என்று எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது

ஆனால், குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம். வேறு எதுவும் மார்க்கம் இல்லை என்பது எங்கள் கொள்கை. இந்தக் கொள்கையில் நாங்கள் இருப்பதால் மற்றவை தவறு என்று நாம் பிரசாரம் செய்யும் அவசியம் ஏற்படுகிறது. இதனால் இக்கொள்கையை ஏற்காதவர்கள் எங்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். நாங்களும் அவர்களுடன் ஒத்துப்போக மாட்டோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் இதுதான் நடந்தது. யூதர்களும், நசாராக்களும் கொள்கை அடிப்படையில் அதிக வேறுபாடு உள்ள மக்கத்துக் காஃபிர்களுடன் இணக்கமாக இருக்க முடியாது. கொள்கையில் நெருக்கமாக உள்ள முஸ்லிம்களுடன் தான் இணக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கத்துக் காஃபிகளுடன் அவர்கள் இணைந்து கொண்டனர். நபியவர்கள் அனைவருடைய தவறுகளையும் தாட்சண்யமில்லாமல் போட்டு உடைக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது.

இதன் காரணமாகத்தான் எல்லா இயக்கங்களும் மற்ற இயக்கங்களில் இருந்து வேறுபட்டாலும், எழுதப்படாத இந்த ஒப்பந்தம் காரணமாக சேர்கிறார்கள். குறிப்பாக எங்களை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு விடுகிறார்கள்.

கேள்வி - இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற மகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் உறுப்புரிமை குறைந்துள்ளதை பற்றி?

பதில் - இதுபற்றி முழுமையாக விபரம் என்னிடம் இல்லை. ஆனால் முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டன என்பது மட்டுமே தெரிகிறது. அவர்கள்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கேள்வி - இலங்கையில் தமிழ் தலைவர்கள் ஒன்றுபட்டு உரிமைகளுக்குப் போராடும் போது முஸ்லிம் தலைவர்கள் பிரிந்திரக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் - முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்ற பிரச்சினை என்பதால் அந்த நெருக்கடி அவர்களை ஒன்று சேர்த்து விட்டது. சாதாரண நிலை வந்ததும் ஒற்றுமை சிதறிவிடும்.

ஒரு ஊரில் கலவரம் நடந்தால் அந்த நேரத்தில் மட்டும் எல்லோரும் கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை.

முஸ்லிம்களுக்கும் வாழ்வா, சாவா என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டால் அந்த நெருக்கடியே அவர்களை ஒன்றுபடுத்திவிடும். சாதாரண நேரங்களில் ஒரு பார்வையும், நெருக்கடியான நேரத்தில் வேறுபார்வையும் இருப்பது மனிதர்களின் இயல்புதான். எனவே முஸ்லிமல்லாத தமிழர்கள் ஒன்றுபட்டதை முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியாது.

October 7, 2013, 2:40 PM

onlinepj.com ஓர் அலசல்

onlinepj.com ஓர் அலசல்

நம்முடைய இணையதளம் குறித்தும் அதில் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பு குறித்தும் டைம்ஸ் ஆப் இந்தியா சிறப்புச் செய்தியை 21-8-2010 அன்று வெளியிட்டிருந்தது. நமது இணையதளம் குறித்து வெளியிட்ட செய்தியுடன் ஷம்சுத்தீன் காசிமியின் இணையதளத்தின் நேரடி ஒளிபரப்பைச் சமநிலையில் வைத்துப் பார்க்கும் வகையில் அது எழுதியிருந்தது. எனவே நமது இணையதளத்துக்கு நெருக்கமாக மக்காமஸ்ஜித்.காம் இருப்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தி பல சகோதரர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க August 23, 2010, 1:50 AM

onlinepj.com பற்றி times of india

22-08-2010 அன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இந்தச் செய்தியில் மக்கா மஸ்ஜித் இணைய தளம் பற்றி மிகைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த ஆய்வுக்கட்டுரை தனியாக வெளியிடப்பட்டுள்ளது பார்க்க  onlinepj.com பற்றி times of india

தொடர்ந்து படிக்க August 22, 2010, 12:02 PM

மாநாட்டு குறித்து கல்கி ஏடு

மாநாட்டு குறித்து கல்கி ஏடு நீண்ட பாரம்பரயம் கொண்ட கல்கி இதழ் தீவுத்திடல் முஸ்லிம்கள் மாநாட்டைச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்தச் செய்தியை நன்றியுடன் எடுத்துக் காட்டுகிறோம்

தொடர்ந்து படிக்க July 10, 2010, 10:30 AM

பிரதமர் சந்திப்பு (புகைப்படம்)

 அல்லாஹ்வின் திருப்பெயரால்…

பிரதமருடன் தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு

 முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.

தொடர்ந்து படிக்க July 7, 2010, 3:38 AM

தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்

தமிழில் இன்னொரு குர்ஆன் மொழிபெயர்ப்பு தேவையா? 

 

திருக்குர்ஆனுக்கு பல அறிஞர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கும் போது இன்னொரு மொழி பெயர்ப்பு தேவை தானா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்பட்டது. இது குறித்து ஒற்றுமை இதழ் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பீஜேயை பேட்டி கண்டார். இந்தப் பேட்டி ஒற்றுமை இதழில் வெளியானது.

தொடர்ந்து படிக்க January 18, 2010, 7:42 PM

பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா

2002 ஆம் ஆண்டு கல்கி ஏட்டில் பீஜைனுல் ஆபிதீன் அளித்த பேட்டி. பின்னர் இது ஒற்றுமை இதழிலும் வெளியிடப்பட்டது. நேயர்களுக்குப் பயன்படும் என்பதால் இதை வெளியிடுகிறோம். பைபிளும் குரானும் பேசுவது ஒன்றுதானா

தொடர்ந்து படிக்க January 14, 2010, 7:43 AM

பெண் சல்மான் ருஷ்டியா? ஓர் உலகளாவிய ச�

தஸ்லீமா நஸ்ரின் தலைஎடுத்த போது 1993ல் பீஜே எழுதிய தலையங்கத்தை அனுப்பியுள்ளேன். தஸ்லீமா பற்றி மக்கள் அறிந்து கொள்ள உதவும் என்பதால் இதை வெளியிடலாமே என்று பிரபல இலங்கை எழுத்தாளர் ஹஃபீள் அவர்கள் அனுப்பித் தந்துள்ளார்.

அதைக் கீழே வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க January 3, 2010, 8:43 PM

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

மண்டியிட வைத்த தொண்டி விவாதம்

 

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன். அல்குர்ஆன் 16:125

தொடர்ந்து படிக்க December 3, 2009, 11:51 PM

உமர அலி விவாததின் விளைவு

 

இலங்கை உமர் அலி என்பவருடன் நடந்த விவாதத்தின் போது இருந்த சூழ் நிலைகள் பல இப்போது எனக்கு நினைவில்லை. அதை நினைவுபடுத்தும் வகையில் இல்ங்கை அல்தாஃப் எனும் சகோதரர் சில விபரங்களை உங்கள் கருத்து பகுதியில் தெரிவித்துள்ளார். அது பதிவு செய்யப்பட வேண்டிய கருத்து என்பதால் வெளியிடுகிறோம்.

தொடர்ந்து படிக்க November 15, 2009, 11:41 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top