படைத்த அல்லாஹ் பட்டினியால் கொல்வது ஏன்?

படைத்த அல்லாஹ்
பட்டினியால் கொல்வது ஏன்?:

(நாத்தீகவாதிகளின் பிதற்றலுக்கு பதில்!)
 
கடந்த இரண்டு வாரங்களாக மேற்கண்ட கேள்வி முகநூல் மற்றும் வாட்ஸ் அப் வழியாக நாத்தீகவாதிகளால் அதிகமாக பரப்பட்டு வருகின்றது.

படைத்த அல்லாஹ்
பட்டினியால் கொல்வது ஏன்?

என்ற இந்த கேள்வியானது நாத்தீகவாதி ஃபாரூக் என்பவரது படுகொலைக்குப் பிறகு  கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்களால் இஸ்லாத்தைஒ விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் அறிவாளித்தனமாக கேள்வி எழுப்புவதாக நினைத்துக் கொண்டு கூடுதலாகவே எழுப்பப்பட்டு வருகின்றது; போதாக்குறைக்கு சோமாலியாவில் பலர் பட்டினியால் சாகின்றனர்; எல்லோருக்கும் உணவளிப்பதாகச் சொல்லும் அல்லாஹ் இப்போது எங்கே போனார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இது ஒன்றும் புதிய கேள்வி அல்ல; பல வருடங்களுக்கு முன்னதாகவே பதில் சொல்லப்பட்ட புளித்துப் போன கேள்விதான்.
 
சகோதரர் பீஜே அவர்கள்  திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் இந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்துள்ளார்கள்.
 
அதை தற்போதைய காலத்தின் கட்டாயம் கருதி அறியத்தருகின்றோம்.
 
திருக்குர்ஆன் தமிழாக்கத்தின்    
463வது குறிப்பில்,  
“பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
(அல்குர்ஆன் 11:06)

என்ற கருத்தில் அமைந்த வசனத்திற்கான விளக்கம்.
 
உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டிணிச்சாவு ஏன்?
இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்றால் பட்டிணிச்சாவுகள் ஏற்படுகிறதே? அப்படியானால் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்கவில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்.
 
இறைவன் உணவுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் ஒருவரும் எப்போதும் சாகக் கூடாது என்று இவர்கள் கேட்பார்களா?
 
உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் எவ்வளவு காலம் ஒருவன் வாழவேண்டும் என்று இறைவன் முடிவு செய்துள்ளானோ அந்தக் காலம் வரை இறைவன் பொறுப்பு என்பது தான் இதன் பொருள்.
 
மேலும் இறைவனைத் தவிர யாரும் பொறுப்பேற்க முடியாது என்பதும் இதன் கருத்தாகும்.

உணவு மட்டுமின்றி எல்லா பாக்கியங்களுக்கும் இறைவன் தான் பொறுப்பு என்றாலும் அனைத்துமே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் கொண்டதாகும். நிரந்தரமானதல்ல. எவ்வளவு காலத்துக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளானோ அந்தக் காலம் வரை அவன் உணவளிப்பான் என்பதுதான் இதன் பொருள்.
 
திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் மனிதனுக்கு வழங்கப்படும் அனைத்தும் காலக்கெடுவுடன் கூடியதாகும் என்று அல்லாஹ்வே இதைத் தெளிவுபடுத்தி விட்டான்.
 
இதை 6:2, 7:34, 10:49, 11:3, 16:61, 71:4 ஆகிய வசனங்களில் காணலாம்.
 
ஒருவனுக்கு எப்போது மரணம் என்று இறைவன் நிர்ணயம் செய்துள்ளானோ அதுவரை தான் உணவுக்கு இறைவன் பொறுப்பேற்றுள்ளான். தவணை வந்து விட்டால் பொறுப்பேற்றல் என்பது கிடையாது.
 
இது உணவுக்கு மட்டும் அல்ல. அனைத்துக்கும் உள்ள பொதுவான விதியாகும். ஒரு மனிதனின் ஆரோக்கியத்துக்கு இறைவன் தான் பொறுப்பு. ஒருவனின் பாதுகாப்புக்கும் இறைவன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டால் எந்த மனிதனுக்கும் நோய் வராது என்றும் எந்த மனிதனும் சாக மாட்டான் என்றும் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.நாத்தீகவாதிகளின் கேள்விகள்விதண்டா வாதம்பட்டினிச் சாவு ஏன்?உணவுக்கு அல்லாஹ் பொறுப்பாளனா?

Published on: March 28, 2017, 8:49 PM Views: 8425

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top