வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்?

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்?
சவுதியிலிருந்து ரமலான் மாதம் பாதியில் ருக்கு வருபவர் ரில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு. அவர் அன்று நோன்பை வைக்கலாமா அல்லது ரமலான் நோன்பு 30 மட்டும் தான் வைக்க முடியும் என்று கருத்து இருந்தால் அவர் கடைசி நோன்பைப் பிடிக்காமல் இருக்கலாமா ? விளக்கவும்

ஹபீப்

தலைப்பிறையைக் காண்பதில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டு சவுதியில் ரமலானை அடைந்து அதன் பிறகு மாத இடையில் ஊருக்கு வந்தவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தொழுகை நோன்பு போன்ற அனைத்து காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக்கணக்கைப் பின்பற்ற முடியாது.

இந்தியாவில் இருந்து கொண்டு சவதி நேரத்துக்கு தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக்கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ துறக்கவோ முடியாது.

எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் சவுதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக்கணக்கைப் பின்பற்றி அவர் நோன்பு நோற்க வேண்டும்.

அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது?

மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம்.

ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : நஸாயீ (2109)

ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார். இது சரியான வழிமுறையாகும்.

அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்கு திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது.

எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவார்.

03.05.2013. 01:58

பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்

பணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா

நோன்பு துறக்க யார்யார் பள்ளிவாசலுக்கு வரலாம்? பணக்காரர்கள் வரலாமா? வசதியுள்ளவர்கள் சென்றால் அது யாசகம் கேட்பதாக ஆகுமா?

முஹம்மத் சபியுல்லாஹ்

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசலில் நோன்பு துறக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கஞ்சி காய்ச்சி வழங்கப்படவில்லை. இது நம்முடைய வசதிக்காக நாம் செய்து கொண்ட ஏற்பாடாகும். பள்ளிவாசலில் நோன்புக் கஞ்சி காய்ச்சும் ஏற்பாடு இல்லாவிட்டால் அதனால் ஒரு குற்றமும் வராது.

நம்முடைய வசதிக்காக நாம் செய்யும் காரியம் என்பதால் பள்ளிவாசலில் நோன்பு துறக்க பணக்காரர்கள் செல்லலாமா என்ற கேள்விக்கு எளிதில் விடை காணலாம்.

பள்ளிவாசலில் நோன்பு துறப்பதற்காக மக்களிடம் நிதி திரட்டும்போது தர்மம் என்ற அடிப்படையில் நிதி திரட்டுவதில்லை. ஏழைகளுக்கு மட்டும் தான் இதை வழங்குவோம் என்று கூறி நிதி திரட்டுவதில்லை

வீடுகளில் நோன்பு துறந்து விட்டு பள்ளிவாசலுக்கு மக்ரிப் தொழ வருவது பாதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் பள்ளிவாசலில் நோன்பு துறக்கும் வசதிகள் செய்யப்படுகின்றன. நோன்புதுறக்கும் உணவு கிடைக்காமல் ஏழைகள் சிரமப்படுவார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதை வசதி படைத்தவர்களும் பயன்படுத்துவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே தான் நிதி உதவி செய்கின்றனர்.

எனவே இது யாசகத்தில் சேராது. செல்வந்தர்களும் ஏழைகளும் ஒரே மாதிரியான உணவுடன் நோனு துறந்து சமத்துவம் காட்டுவதை நாம் வரவேற்க வேண்டும்.

கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/masjithil_nonbu_thurapathu_nabivaziya/

27.04.2013. 22:47

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன?

நாளிர்

இச்சை மேலாங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவதே சுய இன்பம் எனப்படுகிறது.

வழிகெட்ட சலபிக் கூட்டத்தை தவிர மற்ற அனைவரிடமும் சுய இன்பம் கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பாவமான செயலாகும்.

வழிகெட்ட சலபிக் கும்பல் காமக்களியாட்டத்துக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் என்பதை அறிய

http://www.adiraitntj.com/2013/02/blog-post_24.html 

அதற்கான விபரத்தை அறிய இதை க்ளிக் செய்து வாசிக்கவும். சுய இன்பம் கூடாது என்பதற்கான ஆதாரங்களை அறிந்து கொள்ள கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/panbadukal_kelvi/suya_inbam_kuduma/

நோன்பு என்பது சுப்ஹ் முதல் மக்ரிப் வரை  உண்ணாமல் பருகாமல் இருப்பதோடு இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வதுமாகும். இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ (ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1894

இந்த அடிப்படையில் தான் நோன்பு கால கட்டத்தில் பகல் நேரங்களில் மனைவியுடன் உறவு கொள்வதும் தடுக்கப்படுகிறது.

நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் எனும் போது சுய இன்பம் கொண்டு இச்சையைத் தீா்த்துக் கொள்வது எப்படி நோன்பாகும்?

நோன்பு நோற்றுக் கொண்டு ஹலாலான வழிமுறையிலேயே (மனைவியுடன் உறவு கொண்டு) இச்சையைத் தணிக்க கூடாது என்றால் தடை செய்யப்பட்ட ஹராமான சுய இன்பம் மூலமாக இச்சையைத் தணிப்பது அறவே கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அறிவிப்பவா் அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1903

வெறுமனே உண்ணாமல் பருகாமல் இருப்பது மாத்திரம் நோன்பல்ல தீய நடவடிக்கைகளை முற்றிலுமாக விட்டொழிப்பது தான் நோன்பின் நோக்கம் என்று இந்த நபிமொழி உணா்த்துகின்றது. எனவே ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டால் அது நோன்பாகவே ஆகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கு எந்த கூலியையும் பெற முடியாது.

19.04.2013. 23:56

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா

எனக்கு ஆஸ்துமா இருக்கிறது எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன் . இந்த ஸ்ப்ரே நேராக நுரையிரலுக்கு செல்வது . நோன்பு இருக்கும் போது இதை நான் உபயோகிக்காலமா ? இதனால் நோன்பு முறிந்து விடாதா? எனக்கு விளக்கவும்

சாதிக் பாட்சா
சவூதி அரேபியா

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் :புகாரி 1894

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை.

நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது.

ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம்.

தீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

08.04.2013. 22:50

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த நோன்பைத் தொடர வேண்டுமா? அல்லது முறித்து விட்டு வேறுநாட்களில் அந்த நோன்பை வைக்க வேண்டுமா

ரஃபீக் அஹ்மத் நாகர்கோவில்

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நேரடியாக ஹதீஸ்களைக் காண முடியவில்லை. ஆனாலும் பொதுவாக மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் இதற்கான விடையும் அடங்கியுள்ளது.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மை அடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 508

இந்த அடிப்படையில் நோன்பு வைத்திருந்த நிலையில் இடையில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அத்துடன் நோன்பு முறிந்து விடுகிறது. எனவே அவர் உண்ணலாம்:  பருகலாம். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு வேறு நாட்களில் விடுபட்ட அந்த நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டும். இது கடமையான (ரமலான் மாத) நோன்புக்குரிய சட்டமாகும்.

நபிலான நோன்பாக இருந்தால் அதை வேறு நாட்களில் நோற்பது கட்டாயமில்லை.

31.03.2013. 10:28

சஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா

?ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு வழிகெட்ட இயக்கம் தனது பிரசுரத்தில் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. அந்தப் பிரசுரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். அது சரியான செய்தியா?

தொடர்ந்து படிக்க 20.07.2011. 00:48

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா

உபரியான நோன்புக்கு சஹர் உணவு அவசியமா  

உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று ஒரு நண்பர் கூறுகிறார். அப்படியே அவர் கடிப்பிடித்தும் வருகிறார்.அப்படி ஹதீஸ் உள்ளதா

தொடர்ந்து படிக்க 26.05.2011. 04:01

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோ

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? 

ஷஃபீக்

பதில் :

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது

தொடர்ந்து படிக்க 12.03.2011. 02:17

நாளின் ஆரம்பம் எது?

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா   

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க 11.07.2010. 16:03

ஆறு நோன்பு

ஆறு நோன்பு
ஆறு நோன்பு வைப்பது நபி வழியா?
ரமலான் முடிந்த உடன் தொடர்ந்து தான் வைக்க வேண்டுமா?
ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமனாலும் வைக்கலாமா?
இங்கே கிளிக் செய்யவும்

17.09.2009. 10:53

நோன்பை தாமதமாக திறத்தல்

நோன்பை தாமதமாக திறத்தல் நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

தொடர்ந்து படிக்க 12.08.2009. 11:51

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்ற

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா

'கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்' என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை' என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும்.

தொடர்ந்து படிக்க 20.03.2010. 13:20

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்பட

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா ? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

தொடர்ந்து படிக்க 21.01.2011. 08:39

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்

ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்

ஆஷூராப்பற்றிய ஹதீஸில், ஒரு ஹதீஸ் ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாகவும் , மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றும் கூரியுள்ளர்கள் ! அப்படியென்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே ? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே ? விளக்கம் தரவும்.

தொடர்ந்து படிக்க 14.12.2010. 02:52

அரபா நோன்பு உண்டா

அரபா நோன்பு உண்டா அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள் .

தொடர்ந்து படிக்க 13.12.2010. 06:48

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

கேள்வி

வாரத்தில் திங்கள் வியாழன் ஆகிய இருநாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள் வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா?

ராஜா முஹம்மத்

தொடர்ந்து படிக்க 12.12.2011. 09:06

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத்

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா

சுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

முஹம்மத் ஸபீர்

தொடர்ந்து படிக்க 08.01.2012. 12:19

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top