கிலாஃபத் இறையாட்சியை ஆதரப்பீர்களா

கேள்வி

சூழல் காரணமாக ஓர் இறைமறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் ‎கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் ஜெயலலிதாவையோ ‎கருணாநிதியையோ ஆதரிப்பது தவறில்லை என்கிறீர்கள். சரி, அதே ‎போல உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத் இறையாட்சி ‎ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?‎


ஒரு ஆட்சியை கிலாபத் என்றும் இறையாட்சி என்றும் சொல்லிக்கொண்டால் அது சரியான ஆட்சியாகிவிட முடியாது. அது இஸ்லாமிய ஆட்சியாகவும் முடியாது.

இஸ்லாமிய ஆட்சி என்றால் இஸ்லாமிய சட்டதிட்டங்களை வளைந்துகொடுக்காமல் அப்படியே பின்பற்றுவதாகும். இப்படிப்பட்ட ஆட்சி இன்று உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் நாடுகளிலும் இல்லை.

இஸ்லாத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும் நெறிமுறைகளையும் மீறி நடப்பவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு அழைப்பு விட்டால் அந்த அழைப்பு பொய்யானது. போலியானது. இவர்களை நம்பி இவர்களுக்குப் பின்னால் செல்லக் கூடாது. இந்த அழைப்பை விடுவதற்கு இவர்களுக்கு எள்ளளவு கூட தகுதி இல்லை.

இஸ்லாமிய ஆட்சி என்றால் திருக்குர் ஆனையும் ஹதீஸையும் ‎அடிப்படையாக கொண்டு நடத்தப்படும் ஆட்சி தான். அப்படி எந்த ‎ஆட்சியும் இப்போது உலகில் எங்கும் இல்லை.

இஸ்லாமிய ஆட்சியை ‎உருவாக்குவதாக படம் காட்டும் இயக்கங்களும் குர் ஆன் ஹதீஸ் ‎மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையில் ‎இல்லை. மாறாக இக்கொள்கையின் முழு எதிரிகளாக உள்ளனர். ‎எனவே இஸ்லாமிய ஆட்சியும் இப்போது இல்லை.

அதைக் கொண்டு ‎வருவதாக ஜாலம் காட்டுவோர் ஆட்சிக்கு வந்தாலும் அது இஸ்லாமிய ‎ஆட்சியாக இருக்காது. இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கையின் ஒட்டு ‎மொத்த குத்தகை தாரர்களான இக்வானுல் முஸ்லிமீன் எகிப்தில் ‎நடத்தும் இஸ்லாமிய ஆட்சி நல்ல உதாரணம். ‎

Published on: 08.08.2012. 12:22 Views: 544

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top