ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா

ரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா

வூதியில் மக்கள் ரொட்டித் துண்டை குப்பைத் தொட்டியில் போடாமல் அதன் பக்கத்தில் போடுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதிஸ் வழியில் ஆதாரம் இருக்கின்றதா?

செய்யது மஸ்ஊத்

வீண் விரையம் செய்வது இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

பொருள்களை வீணாக்குவதை இறைவன் வெறுக்கின்றான் என்பது நபிமொழி 

புகாரி 1477

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

அல்குா்ஆன் 7 31

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

அல்குா்ஆன் 17 26 27

வீண் விரையம் செய்வது ஷைத்தானுடைய செயல் என்றும் ஆதலால் வீண் விரையம் செய்யக்கூடாது என்றும் இறைவன் மேற்கண்ட வசனங்களில் தெரிவிக்கின்றான்.

உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான அளவை அறிந்து மீதம் ஏற்படாதவாறு நமது சாப்பாட்டு முறையை அமைத்துக் கொள்வது முஸ்லிம்களின் மீது அவசியமாகும். மீதம் வந்தால் கூட அதை வீண் விரையம் செய்யாது பிறருக்கு வழங்கி விட வேண்டும்.

நம்மால் இயன்ற அளவுக்கு திட்டமிட்டு உணவைத் தயாரித்தாலும் சில நேரம் உணவுகள் மீதமாகிவிடும். அதைப் பெற்றுக் கொள்வோரும் கிடைக்க மாட்டார்கள். வீட்டுக்குள் வைத்திருந்தால் அந்த உணவுப் பொருள் கெட்டுப்போய் விடும். வீட்டில் இருப்பதால் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தி விடும். இது போன்ற சூழ்நிலையில் குப்பைத்தொட்டியில் போடுவது வீண்விரயத்தில் சேராது.

எப்போது பார்த்தாலும் பணத்திமிரைக் காட்டுவதற்காக அளவுக்கு அதிகமாக தயாரிப்பதும், மீதமாகும் என்பதைத் தெரிந்து கொண்டே கூடுதலாக சமைத்து குப்பைத் தொட்டியில் போட்டால் அது வீண் விரயம் செய்த குற்றத்தில் சேரும்.

அவ்வாறு குப்பைத் தொட்டியில் போடும் போது ஒவ்வொரு நாட்டிலும் பலவிதமான குப்பைத் தொட்டிகளை அமைத்து இருப்பார்கள்.

சீக்கிரம் மக்கிப் போகும் குப்பைகளுக்கு தனி குப்பைத் தொட்டிகளும் மக்கிப்போவதற்கு அதிக காலம் பிடிக்கக் கூடிய பொருட்களுக்கு வேறு குப்பைத் தொட்டிகளும் வைப்பார்கள். சீக்கிரம் மக்கிப் போகக் கூடிய குப்பைகள் உரமாக ஆகலாம். அல்லது மண்ணோடு மண்ணாக ஆகிவிடலாம் என்பதற்காக அதற்கேற்ப பயன்படுத்துவார்கள்.

பிளாஸ்டிக் போன்ற மக்கிப் போகாத பொருட்களை மண்ணில் போட்டால் நிலத்தடி நீரைத் தடுக்கும் என்பதால் அதை எரித்து விடுவார்கள்.

இது போன்று பல வகை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தால் அதை நாம் பேண வேண்டும்.

ரொட்டியைth தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் சேர்த்து கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படலாம். இன்னும் ஏதோ பயன்பாட்டுக்காக அவ்வாறு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கலாம். அதைப் பேணிக்கொள்வது வரவேற்கத் தக்கது தான்.

15.05.2013. 02:09

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்க

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா

நேரடியா ஒரு பெண்ணை பார்க்கும்போதே அவள் சரியாக உடை அணிந்திருந்தாலும் பார்வையை தாழ்த்தும்படி குரானில் சொல்லப்படும்போது டிவியில் பெண்களை பார்ப்பதற்கும் தடை உண்டா?

சமீா்

ஒரு பெண்ணை நேரடியாகப் பார்ப்பதற்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் உரிய சட்டமாகும்.

எப்போது எந்நிலையில் பெண்களை நேரடியாகப் பார்ப்பது அனுமதிக்கப்படுமோ அந்நிலையில் தொலைக்காட்சியில் பார்ப்பதும் அனுமதிக்கப்படும். எந்நிலையில் நேரடியாகப் பார்ப்பது தடுக்கப்படுமோ அந்த நிலையில் பெண்களை தொலைக்காட்சியில் பார்ப்பதும் தடை செய்யப்பட்டதாகும்.

எவ்வித்த் தேவையுமில்லாமல் தவறான நோக்கத்தில் ஆண்கள் பெண்களைப் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கின்றதுஇறைநம்பிக்கையாளர்களான ஆண்கள்  அவ்வாறு பார்ப்பதை விட்டும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவனும் இறைத்தூரும் கட்டளையிடுகிறார்கள்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல் குர்ஆன் 24 30 31)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது, அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (6243)

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதி 2700

(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ''கஸ்அம்'' கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (1513)

மேறகண்ட செய்திகள் யாவும் தேவையின்றி தவறான நோக்கத்தில் பெண்களைப் பார்ப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

அதே வேளை பெண்கள் ஹிஜாபைக் கடைபிடித்திருக்கும் நிலையில் அவா்களைப் பார்ப்பதற்கு தேவை ஏற்பட்டால் அப்போது அந்நிய ஆண்கள் பெண்களைப் பார்க்கலாம். இதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்கு நபிமொழிகளில் ஏரளாமான ஆதாரங்கள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள்அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

புகாரி 98

நபியவா்களின் முன்னிலையில் பெண்கள் பகுதிக்குச் சென்று பெண்கள் தர்மமாக தருபவைகளை பிலால் (ரலி) தமது ஆடையில் வாங்கிக் கொண்டார் என்பதும் தேவை ஏற்படும் நேரத்தில் பெண்களைப் பார்ப்பது அனுமதி என்று இச்செய்தி விளக்குகின்றது.

இஸ்லாம் சொல்லக் கூடிய ஹிஜாபை முஸ்லிமல்லாத பெண்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களை நேரில் சந்திக்கும் நிலை நமக்கு ஏற்படுகிறது. உதாரணமாக பெண் மருத்துவர், பெண் அதிகாரி, பெண் நிர்வாகி, பெண் ஆசிரியை எனப்பலரையும் நாம் சந்திக்கும் அவசியம் ஏற்படுகிறது. அவர்கள் இஸ்லாமிய மரபுப்படி ஆடை அணியாவிட்டாலும் அவர்களை நமக்கு நாமே ஹிஜாப் அணிந்து கொண்டு பார்க்கலாம். அதாவது முகத்தை மட்டும் காமப்பார்வை இல்லாமல் பார்க்கலாம். அது போல் தொலைக் காட்சியிலும் பார்க்கலாம்.

ஆடல் பாடல் கூத்து போன்றவைகளில் ஈடுபட்டுள்ள பெண்களை நேரில் பார்ப்பது கூடாது. அதுபோல் தொலைக்காட்சியிலும் பார்க்க கூடாது.

இது பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் நூலில் உருவப்படம் தொடர்பான பதிலை பார்க்கவும்

http://onlinepj.com/books/naveena-prechanaigalum/

19.04.2013. 23:43

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டும

சாப்பிட்ட பின் விரலைச் சூப்ப வேண்டுமா

அப்துல் ரஹ்மான்


சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும், உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது' அல்லது "(உங்களின் எந்த உணவில்) உங்க ளுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

அறிவிப்பவா் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 4140

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.

விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம்.  இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.

நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது

17.04.2013. 00:00

புகைபிடித்தல் பற்றி இஸ்லாத்தின் நில

புகைபிடித்தல் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன

முஹம்மது அபூதாஹிர்

பதில்

புகை பிடித்தல் ஹராமான செயலாகும். முஸ்லிம்கள் இதில் போதுமான கவனமில்லாமல் உள்ளனர்.

இது பற்றி பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றைக் கீழ்க்காணும் ஆக்கங்களில் காணலாம்

http://onlinepj.com/egathuvam/2007-ega/jul_2007/

http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/pukai_pothai/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pukai_harama_makruha/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/pugai_pidikalama/

31.03.2013. 21:41

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தை

கருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா?

ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும்
, பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா

 பதில்

ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட காலத்தை அடைந்த பிறகு அறிவியல் சாதன வசதிகளைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்ல முடியும்.

நீ பிறந்த தேதியையும், உனக்கு கருத்தரித்த தேதியையும் சொல் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைச் சொல்கிறேன் என்று சொன்னால் இது வடிகட்டிய பொய்யாகும்.  ஏனெனில் மறைவானவற்றை இறைவனைத் தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள முடியாது.

நாளை என்ன நடக்கும்? என்று அறியக் கூடிய மறைவான ஞானம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாறு இருப்பதாக நம்புபவன் இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடியவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ் கூறுகிறான்:

"வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

(அல்குர்ஆன் 6:59)

எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாமல் எவராலும் அறிந்து கொள்ளவோ, சொல்லவோ முடியாது.

அவ்வாறு ஒருவன் சொல்வான் என்று நம்புவது இணைவைப்பாகும்.

தாங்கள் குறிப்பிட்ட இணையதளத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிறக்கும் குழந்தையைப் பற்றி சொல்வது கிடையாது. மாறாக ஜோசியம் சொல்வதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். இதை ஒரு போதும் முஸ்லிம்கள் நம்பக்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபியாகிய என்மீது அருளப்பட்டதை (வேதத்தை) நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 9171

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா

நூல்: முஸ்லிம் 4137

மேலும் ஒரு பெண் எப்போது கருத்தரித்தாள் என்பதை எப்படி அவளால் அறிந்து கொள்ள இயலும்? ஒரு மாதத்தில் ஒரே தடவை மட்டும் உடலுறவு வைத்திருந்தால் மட்டுமே இதை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உடலுறவு கொண்ட பெண்ணால் கரு எந்த நாளில் உண்டானது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. கருவுற்ற நாளைச் சொன்னால் கண்டு பிடித்து தருவோம் என்று சொல்வது முட்டாள்தனமானது என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் சொன்னபடி இல்லாமல் மாறிவிட்டால் நீங்கள் கருத்தரித்த நாளை தவறாக சொல்லி இருப்பீர்கள் அதனால் மாறிவிட்ட்து என்று தப்பித்துக் கொள்வதற்காக இப்படி கேட்கிறார்கள் போலும்.

29.03.2013. 04:17

ஒட்டுப்பல் வைக்கலாமா

ஒட்டுப்பல் வைக்கலாமா
ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே
? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா?

உதுமான்

பதில்

உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன செயற்கையான மூக்கை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்கள்.

5070أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا حَبَّانُ قَالَ حَدَّثَنَا سَلْمُ بْنُ زُرَيْرٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ عَنْ جَدِّهِ عَرْفَجَةَ بْنِ أَسْعَدَ أَنَّهُ أُصِيبَ أَنْفُهُ يَوْمَ الْكُلَابِ فِي الْجَاهِلِيَّةِ فَاتَّخَذَ أَنْفًا مِنْ وَرِقٍ فَأَنْتَنَ عَلَيْهِ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَّخِذَ أَنْفًا مِنْ ذَهَبٍ رواه النسائي

அர்ஃஜா பின் அஸ்அத் (ரலி) கூறுகிறார்கள் :

அறியாமைக் காலத்தில் குலாப் என்ற நாளில் நடந்த சண்டையின் போது எனது மூக்கில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வெள்ளியால் ஒரு (செயற்கை) மூக்கை பயன்படுத்தி வந்தேன். அதில் துர்வாடை கிளம்பியதால் தங்கத்தால் ஆன மூக்கை பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.

நூல் : நஸாயீ (5070)

இதனடிப்படையில் பல் விழுந்துவிட்டால் செயற்கைப் பல் பொருத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்.

பொதுவாக தங்கம் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாக இருந்தாலும் மருத்துவ நன்மைக்காக அதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதி கொடுத்துள்ளது. அழுக்கு சேறும் இடங்களில் வெள்ளியைப் பயன்படுத்தினால் அது நாற்றத்தைக் கிளப்பும். எனவே வெள்ளிக்கு பதிலாக தங்க மூக்கு தங்கப் பல் ஆகியவற்றை பயன்படுத்தில் துர்வாடை ஏற்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் ஒட்டுமுடி வைப்பதை தடைசெய்துள்ளார்கள். இந்தத் தடைக்கும் ஒட்டுப் பல் வைப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பல்லுக்கும் தலைமுடிக்கும் வேறுபாடு உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலை முடி குறைவாக இருந்தால் அழகு குறைந்து விட்டதாக ஒரு எண்ணம் ஏற்படுவதைத் தவிர இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பல் உணவுகளை மெல்லுவதற்கும் தெளிவாகப் பேசுவதற்கும் பயன்படுகிறது. பல் இழந்தவர் ஒட்டுப் பல் வைக்காமல் இருந்தால் உணவுகளை மெல்லுதல் அல்லது தெளிவாக உச்சரித்தல் ஆகிய இரண்டு பாதிப்புகளோ அல்லது இரண்டில் ஒன்றோ ஏற்படும். எனவே ஒட்டுப்பல் வைப்பதை முடியுடன் ஒப்பிட்டு முடிவு எடுக்க முடியாது.

23.03.2013. 11:14

ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் ச

ரிசானா விவகாரம் : கலைஞர் வைத்த வாதம் சரியா?

இலங்கை பெண்மணி ரிசானாவிற்கு சவூதி அரசு மரணதண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாமிய விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் இது குறித்து அறிக்கை ஒன்றை கடந்த 21.03.13 அன்று வெளியிட்டுள்ளார்.

மரணதண்டனைக்கு முடிவு கட்ட உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்ற தலைப்பில் அவரது அறிக்கை பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தன்னை இலக்கியவாதி, முற்போக்குவாதி என்று சொல்லிக் கொள்ளும் மனுஷ்ய புத்திரன் என்பவர் நக்கீரன் இதழில் பொய்யின் மறுவடிவமாகவும், புளுகு மூட்டையின் மொத்த உருவமாகவும் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி, அதையே தனது வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்டு நமக்கு ஆச்சர்யம்தான்.

மனுஷ்ய புத்திரன் என்பவர் தனது கட்டுரையில் எழுதிய செய்திகளை அப்படியே நம்பி அதையே தனது கட்டுரையிலும் எழுதி பொய்(யரு)க்கு உரம் சேர்த்துள்ள கலைஞரிடத்தில் சில கேள்விகள்:

ஒருவர் ஒரு செய்தியை சொல்கின்றார் என்றால் அதுகுறித்த செய்திகளை ஆய்வு செய்யாமலும், அதற்குரிய ஆதாரங்களைக் கேட்காமலும் அதை அப்படியே நம்பிவிடுவீர்களா?
அதற்கு ஆதாரம் எதையும் கேட்க மாட்டீர்களா? அதை ஆய்வு செய்ய மாட்டீர்களா?
உங்களைப் பற்றியும் உங்களது குடும்பத்தார் பற்றியும் ஜெயலலிதா விடக்கூடிய அறிக்கைகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்று அதை ஆராயாமல், அதற்குரிய சான்றுகளைக் கேட்காமல் அதை உண்மை என்று சொல்லி மற்றவர்கள் உங்களைப் பற்றி ஜெயலலிதா விட்ட அறிக்கையை அப்படியே வெளியிட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு கலைஞர் அவர்கள் நமக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்.

மனுஷ்ய புத்திரனது அனைத்து ஆதாரங்களும் பொய்கள்; புளுகு மூட்டைகள்; அவதூறுகள்; அநியாயங்கள் என்று அடுக்கடுக்கான சான்றுகளுடன் நாம் நிரூபித்துள்ளோம். அந்த சான்றுகளை கலைஞருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

ரிசானாவிற்கு அநியாயமாக மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் கலைஞரின் வாதம். அந்த வாதத்திற்கு தனிக்கட்டுரையில் விரிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மனுஷ்ய புத்திரன் சொன்ன பொய்களைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் கலைஞர் தனது அறிக்கையில் கூடுதலாக ஒரேயொரு வாதத்தைத்தான் முன் வைத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை சம்பவம் :

சென்னை வண்ணாரப்பேட்டையில் 3மாத குழந்தைக்கு அதன் தாய் பாலூட்டிய போது, அந்தக் குழந்தைக்கு பால் புரையேறி மூச்சுத்திணறி அது இறந்து விட்டது. இந்த சம்பவம் கலைஞரின் அறிக்கை வெளியாவதற்கு முந்தைய நாள் செய்தித்தாள்களில் வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டி இதுபோல ரிசானா பால் கொடுக்கும் போதும் பால் புரையேறி மூச்சுத்திணறி 4மாத குழந்தை இறந்திருக்கலாம் அல்லவா என்பதுதான் கலைஞரின் வாதம்.

இது எவ்வளவு பெரிய அபத்தமான வாதம்?. ஒரு குற்றச் செயல் சம்பந்தமாக பேசும்போது மற்றொரு விபத்தை அத்துடன் ஒப்பிட்டு பேசினால் அறிவுடையோர் அதை ஏற்றுக் கொள்வார்களா?

அந்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் செய்தாரா? இல்லையா?
அதற்குரிய ஆதாரங்கள் என்ன?
அந்த ஆதாரங்கள் உண்மையானவையா?
இதைத்தானே அறிவுடையோர் ஆராய்வார்கள்.
இந்த அடிப்படை விஷயம் கலைஞருக்கு தெரியாததா?

ஒருவரை மாடியில் இருந்து கீழே தள்ளி ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த கொலைகாரன் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்திற்கு ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதுதான் அறிவுடையோர் செயல். அதைவிட்டுவிட்டு இந்த கொலைச் சம்பவம் உண்மையா இல்லையா என்பதை அன்றைய தினம் செய்தித்தாளில் வந்த செய்தியை வைத்து எந்த அறிவாளியும் முடிவு செய்யமாட்டார்.

இன்று நான் செய்தித்தாள் படித்தேன். அதில் இருவர் மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, ஒருவர் கால் தவறி கீழே விழுந்து செத்துவிட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. அதுபோல கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுபவரும் கால் தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் அல்லவா? என்று யாராவது கேட்டால் அது எப்படி அறியாமையாக இருக்குமோ அதுபோலத்தான் கலைஞரின் வாதமும் அமைந்துள்ளது.

இது குறித்து கலைஞருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதில், மரணதண்டனை கூடாது என்பது உங்களது கொள்கையாக இருக்குமானால், நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மைதான் என்று சொல்வீர்களேயானால், மனுஷ்ய புத்திரன் கூறிய பொய்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்குமேயானால் அதை தக்க ஆதாரங்களுடன் மறுக்கும் எங்களிடத்தில் நீங்கள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கலைஞருக்கு விவாத அழைப்பு விடப்பட்டுள்ளது.

கடிதத்தை காண
Click Here

21.01.2013. 08:51

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை அறிவு

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்


குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

19.01.2013. 07:43

பாலியல் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம்

பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இயற்றுவது சரியா?

மசூது, கடையநல்லூர்

 பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால், அது மட்டுமே பாலியல் வன்முறையைக் குறைக்க உதவாது.

 கடும் தண்டனைகள் இருந்தாலும், மனிதனுக்கு காம வெறியை ஏற்படுத்தி அறிவுக் கண்ணை மறைக்கும் அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டால் மட்டுமே இந்த சட்டங்கள் பயன் தரும்.

 1.ஆபாசமான சினிமாக்கள், ஆபாசமான நாடகங்கள், சுவரொட்டிகள் போன்ற அனைத்தும் ஒரு சமுதாயத்தில் பரவலாக இருந்தால் நல்ல மனிதன் கூட தடுமாறி மிருகமாக மாறிவிடுவான். பெண்களைப் போகப் பொருளாகக் காட்டும் அனைத்து வாசல்களும் அடைக்கப்படாமல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வதால், குற்றங்கள் குறையாது.

 2.பெண்கள் அணியும் மானம் கெட்ட ஆடைகள் ஆண்களை பாலுணர்வுக்கு அழைப்பு விடுக்கும்போது, ஆண்கள் இதனால் பாதிக்கப்பட்டு பாலியல் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கும் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

 3.பெரும்பாலான பாலியல் வன்முறைகள் போதை மயக்கத்தில்தான் நடக்கின்றன. மது மற்றும் எல்லா போதைப் பொருட்களும் முழுமையாக தடை செய்யப்படவேண்டும். பாலியல் வன்முறைக்கு ஆண்களைத் தூண்டும் எல்லா வாசல்களையும் திறந்து போட்டுவிட்டு, பாலியல் வன்முறைக்கு அரசே காரணமாக இருந்துவிட்டு ஆண்மை நீக்கம் செய்வது ஏற்க முடியாதது.

 மேலும் தண்டனை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதற்கு முன் அதன் பயன் கிடைக்க இன்னும் சில ஏற்பாடுகள் அவசியமாகும்.

 ஒரு குற்றம் நடந்தால், அதை விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்க அதிகபட்சம் இரண்டு மாதங்களே போதுமானது. குற்றம் நடந்த சில நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிடும்.

 குற்றம் நடக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதை நேரில் கண்ட சாட்சிகளுக்கும் இயல்பாகவே கோபம் ஏற்படும். இந்தக் கோபம் அவர்களை சாட்சி சொல்லத் தூண்டும். அவர்கள் சரியாக சாட்சி சொன்னால்தான் குற்றவாளி தண்டிக்கப்படுவான்.

 நமது நாட்டில் பத்து முதல் ஐம்பது ஆண்டுகள் கூட ஒரு வழக்குக்கு தேவைப்படுகிறது.

 குற்றம் நடந்து இரண்டு வருடம் கழித்து விசாரணையை ஆரம்பித்தால் சாட்சிகளே பல விஷயங்களை மறந்துவிடுவார்கள். தீமைக்கு எதிரான அவர்களின் கோபமும் போய்விடும். இன்னும் எத்தனை வருடம் நம்மை இழுத்தடிப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டால் நான் அந்தக்குற்றச் செயல் நடக்கும்போது பார்க்கவில்லை என்று சாட்சிகள் கூறும் நிலை ஏற்படும். இதனால் குற்றவாளி தப்பித்துக் கொள்வான்.

  வழக்கு தொடுத்த காவல்துறை அதிகாரிகள் பத்து ஆண்டுகளுக்குள் பல ஊர்களுக்கும் மாற்றப்படுவார்கள். இப்படி அடுத்தடுத்து வேறு வேறு அதிகாரிகள் மூலம் அந்த வழக்கு ஃபாலோ பண்ணப்படும். அரசு வழக்கறிஞர்களும் மாறிக் கொண்டே இருப்பார்கள். இதனால் இந்த வழக்கு பற்றிய முழு விபரம் இல்லாமல்தான் அரசாங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தப்படும். இதன் காரணமாகவும் குற்றம் சாட்டப்பட்டவன் தப்பித்துக் கொள்வான்.

 பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அந்த வழக்கு குறைந்தது ஐந்து நீதிபதிகளுக்கு மாறிவிடும். இதனால் நீதிபதிகளுக்கே வழக்கின் தன்மை முழுமையாக பிடிபடாது. குற்றவாளி தப்பிக்க இதுவும் காரணமாகிவிடுகிறது.

 சுப்ரீம் கோர்ட்வரை மேலும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும்போது குற்றவாளியே செத்துப் போய்விடுவான். அல்லது பாதிக்கப்பட்டவன் செத்துவிடுவான்.

 சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்து விட்டாலும், நாட்டு மக்களையும் சட்டத்தையும் காலில் போட்டு மிதிக்கும் வகையில் ஜனாதிபதி மன்னித்துவிடுவார்.

 இத்தகைய கோளாறுகள் உள்ள நாட்டில் எவ்வளவு கடுமையான தண்டனைகள் வந்தாலும் அந்தத் தண்டனைகள் குற்றவாளிக்குக் கிடைக்கப்போவதில்லை.

 நீதி மன்றங்களை அதிகரித்தல், நீதிபதிகளை அதிகரித்தல் மற்றும் அர்த்தமற்ற வாய்தாக்களை ஒழித்தல் ஆகிவற்றின் மூலம் தாமதமற்ற நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவிகிதம் பன்மடங்கு அதிகரிக்கும்.

 இவற்றையெல்லாம் செய்துவிட்டு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அதை வரவேற்கலாம்.

12.01.2013. 03:48

பாலியல் குற்றங்களுக்கு குண்டர் சட்ட

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு குண்டர் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏற்கத் தக்கதா?
- பர்வீன், துபை

எந்தத் தண்டனை வழங்குவதாக இருந்தாலும், சட்டப்படியும் நீதித்துறை வழியாகவும்தான் வழங்க வேண்டும். அரசாங்கம் இதை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றத்தில் ஒருவர்மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தால், அது சரியானதாக இல்லையா என்பதை நீதி மன்றத்தில் விசாரித்து தீர்ப்பளித்த பின்னரே அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

 அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு முன்னால், தீர்ப்பும் வழங்கப்படுவதற்கும் முன்னால் குண்டாசில் கைது செய்து தண்டனை அளிப்பதற்கு அரசாங்கத்திற்கு தார்மீக உரிமை கிடையாது.

 பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் மீதும் காவல்துறை அதிகாரிக்கு எதிரானவர்கள் மீதும் பொய் வழக்கு போடலாம். விலைமாதர்களை அதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பொய் வழக்கு மூலம் ஒருவரை ஒரு ஆண்டு உள்ளே வைப்பதற்குத்தான் குண்டர் சட்டம் பயன்படும்.

 மேலும் சில பெண்கள் ஆண்களுடன் தவறான உறவு கொண்டு மாட்டிக் கொள்ளும்போது ஆண் தன்னை பலாத்காரம் செய்துவிட்டான் என்று புகார் கொடுக்கலாம். இதன் காரணமாக அவனை ஒரு வருடம் உள்ளே தள்ளிவிடலாம். இதற்குத்தான் குண்டாஸ் பயன்படும்.

 அல்லது ஆணுடன் பழகி அவனிடம் பணம் பறித்துவந்த பெண் அந்த ஆண் அவளைவிட்டு விலகும்போது,அவனுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்து குண்டாஸில் உள்ளே தள்ள முடியும்.

 ஏற்கனவே திருமணமான ஒருவனை அவன் திருமணமானவன் என்பதைத் தெரிந்துகொண்டே, தவறான உறவுகொண்டுவிட்டு அவனை மிரட்டி திருமணம் செய்ய வற்புறுத்தவும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

 காதலிக்க மறுக்கும் ஆண்களுக்கு எதிராகப் புகார் கொடுத்து ஒருவருடம் அவனை சிறையில் அடைக்கவும்முடியும்.

 பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகள் கண்டிக்கும் போதும் பெண்கள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை பழிவாங்க முடியும்.

எனவே புகார் உண்மையா பொய்யா என்பதை தீர விசாரித்து, நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் முனனதாகவேஅரசாங்கம் தீர்ப்பு எழுதுவதை நாம் ஏற்க முடியாது.

இது பாலியல் குற்றத்தை குறைப்பதற்கு பதிலாக, ஆண்கள் மீது பழி சுமத்தவும் அவனது வாழ்க்கையைப்பாழாக்கவும்தான் உதவும். இதனால் அரசாங்கம் எதிர் பார்க்கும் நன்மை நிச்சயம் கிடைக்காது.

12.01.2013. 03:45

ஜாகிர் நாயக்கை விமர்சிப்பது ஏன்

டாக்டர் ஜாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாத்திற்கு முரனான கருத்துக்களை நமது இணையதளத்தில் சுட்டிக்காட்டும் போழுது ஜாக்கிர் நாயக் மீது கொண்ட காழ்ப்புணர்சியினால் தான் இப்படி தவ்ஹீத் ஜமாஅத் விமர்சிக்கின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

அப்படி விமர்சனம் செய்வர்களுக்கு பதிலாக  பின் வரும் ஜாகிர் நாயகின் வீடியோவை வெளியிடுகின்றோம் 

உலமாக்களின் கருத்தும் மார்க்க ஆதாரம் எனக் கூறும் ஜாகிர் நாயகம்

Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ
ஆடியோ

குர்ஆன், ஹதீஸ் என்று ஒரு இடத்திலும், ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று மற்ற இடங்களிலும் மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்கியும் பேசுகின்றார் என்று நாம் குறிப்பிடும் போது இதுவும் காழ்ப்புணர்ச்சியில் பேசப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

உலமாக்களை ஆதாரம் காட்டி தான் ஒரு தக்லீத் வாதி என்பதை ஜாக்கிர் நாயக் மேற்கண்ட வீடியோவில் ஒத்துக் கொள்கின்றார்.
 

03.12.2012. 02:48

நாஜி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

கேள்வி

என் நண்பனின் பெயர் நாசிம். எல்லோரும் நாஜி என்று கூப்பிடுகிறார்கள். நாஜி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

ரஸ்வீ


பதில்
நாஜி என்ற அரபுச் சொல் நஜா என்ற வார்த்தையிலிருந்து பிரிந்து வந்த சொல்லாகும். நஜா என்றால் வெற்றி பெற்றான். பாதுகாப்பு அடைந்தான் என்று பொருள்.

நாஜி என்றால் வெற்றி பெற்றவன். ஒரு ஆபத்திலிருந்து விடுபட்டவன் என்று அர்த்தமாகும்.
 

26.11.2012. 07:35

கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எ

கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி

இந்த உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில்

கேள்வி 1 

நம் வீட்டிற்கு  முன் ஏதாவது  ஒரு நாள் ஒரு நாய் குலைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குலைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.

அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன்  போன்ற  கூத்தாடிகள்தான்  சில படங்களில்  முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதாமாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தக் கூத்தாடிகளின் வரிசையில் இப்போது கூத்தாடி சிம்பு,  சூர்யா,  விக்ரம்,  விஜய், நாளை யாரோ...

இப்படி முஸ்லிம்களைக் கூத்தாடிகள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டுசீண்டுவதைப்  பார்க்கிறோம்.முஸ்லிம்கள்சிறுபான்மையினர்தானே , இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியம்தான் இவர்களை இவ்வாறு மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறது. இதைக் களைய வேண்டுமென்றால் நம் ஜமாஅத் இதைக் கையில் எடுக்க வேண்டும். களத்தில் இறங்கி போராடினால்தான் நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பற்றி தற்போது நம் ஜமாத்தின் நிலைபாடு என்ன?

குறிப்பு: நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்படம் எடுத்ததையும் நாம் சக்திக்கு உட்பட்டு போராட்டங்கள் நடத்தித்தான் வெல்ல முயற்சி செய்து வருகிறோம். நாம் போராட்டங்கள் செய்தால் அதுவே விளம்பரம் ஆகிவிடும் என்பது சரிதான். ஆனால் அதை விட பலமடங்கு மேலாக தொலைக்காட்சிகளின் எல்லா சேனல்களிலும் இந்த திரைப்படங்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் ஆகி மூலை முடுக்கெல்லாம் சென்று பிரபலமாகத்தான் செய்கிறது. இறுதியாக இந்தக் கூத்தாடிகளுக்கு ரசிகர்களாக இருக்கும் நமது சமுதாய சகோதரர்களாவது இந்தப் போராட்டங்களைப் பார்த்து திருந்த வாய்ப்புண்டு  என்று  நான்  நம்புகிறேன். எனக்கு தெரிந்தே என் குடும்பத்தைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் இந்தக் கூத்தாடிகளை அடையாளம் கண்டு திருந்தி இருக்கிறார்கள்.

- பஹ்ரைன் மண்டலத்திலிருந்து பஞ்சலிங்கபுரம் அரஃபாத்

கேள்வி 2

கமலஹாசன் எடுத்து வெளியிடவுள்ள விஸ்வரூபம் திரைப்படமும் விஜய் நடித்து வெளியிட்ட படத்தைப் போலவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சொல்லப்படுகிறதே? இதுபோல் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?

- கடையநல்லூர் மசூது

கேள்வி 3

துப்பாக்கி என்ற படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற மத மக்களைத் தூண்டிவிட்டு மதவெறியை ஊட்டும் வகையில் தயாரித்துள்ளார்கள். இதில் ஐந்து வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நடந்த தவறுக்கு சினிமாக்காரர்கள் தரப்பில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த ஐந்து வசனங்கள் தவிர மற்றவை சரியாக உள்ளதா?

- கடையநல்லூர் மசூது

மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்

துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்குத் தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15/ 11/2012 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும்  15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.

போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா அவர்கள் நமது நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார்.

கூத்தாடி விஜய்யின் தந்தை சந்திரசேகரும்,  படத்தை இயக்கிய அயோக்கியன் முருகதாசும்,  படத்தை தயாரித்த அயோக்கியன் தானுவும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும், அந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டு ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி விடுவதாக சொல்லி விட்ட்தாகவும், எழுத்து மூலமாகவும் கையெழுத்திட்டு தந்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவை நீக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் உறுதி சொல்வதாகவும் தெரிவித்து நீங்கள் போராட்டத்தைக் கைவிடலாமே என்று கேட்டுக் கொண்டார்.

அவர்கள் பணிந்து வந்ததற்கு மதிப்பளித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்களும் நம் நிர்வாகிகளிடம் வைத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. கோரிக்கை நிறைவேறிவிட்டால் அதன்பின்னர் போராட்டம் நடத்துவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் அவர்களின்  கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.

அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கச் சொல்லி விட்டதால்  அதன் பிறகு அந்தப் படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையில் இருக்காது என்று நம்பினோம்.

அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் அந்தப் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கினால் போதும் என்று சொன்னதால் அவர்கள் கவனமாகப் பார்த்துத்தான் இப்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்று நாமும் நினைத்தோம். ஆனால் நீக்கப்பட்ட பிறகும் அந்தப் படத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.

மூன்று நாட்கள் கழித்து அவர்கள் நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்து போய் தலைமையை தொடர்பு கொண்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாகக் கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள்.

முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் முன்னால் அழுது கண்ணீர் விட்டு நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அந்த மூன்று அயோக்கியர்களும் நன்றாக நடித்துள்ளனர்.  எங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்கிறோம் எங்களுக்கு முஸ்லிம்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றெல்லாம் கூறி ஏமாற்றியுள்ளனர். இவர்களும் நன்றாக ஏமாந்து இப்படிப்பட்ட உத்தமர்களா என்று வியந்து போய் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும் நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் அத்தனை பேருக்கும் எப்படி தெரியாமல் போனது?

நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக்க் காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட படமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.

அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று நம்மிடம் கூறி போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் தயாரிப்பாளன், இயக்குனர்,  நடிகன் ஆகிய மூன்று அயோக்கியன்களுக்கு வலிக்கக் கூடாது;  நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.

பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச்செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாக்க் கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.

பார்க்க வேண்டிய காசை அந்தக் கும்பல் பார்த்த பின்னர் இப்போது போராட்டம் நடத்துவதால் அந்த அயோக்கியர்கள் நட்டப்படப் போவதில்லை

நடிகன் விஜய் கிறித்தவனாக உள்ளதால் திருச்சபைகளின் ஆலோசனைப்படி தான் இவன் இப்படி படம் எடுத்திருக்கிறான். இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கிறித்தவ திருச்சபைகளின் ஆலோசனையுடன்தான் இவன் இதுபோல் படம் எடுத்திருக்க முடியும். இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. (அவனது முழுபெயர் ஜோசப் விஜய். பார்க்க: அவன் சிறுவயதில் அவனது தந்தையுடன் ஞானஸ்நானம் எடுக்கும் புகைப்படம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த கிறித்தவனுக்கும் நடிகன் விஜய்க்கும் ஒரே சக்திதான் பின்னணியில் இருக்கிறது.

முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டால் யாரும் இஸ்லாத்தின் பக்கம் தலைவைக்க மாட்டார்கள் என்ற திட்டம் இதன் பின்னால் இருக்கிறது. இதே திட்டம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த அயோக்கியனுக்கும் இருந்தது.

இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்தான் என்று சித்தரிப்பதைப் பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போவோம்.

அமைதிப்பூங்காவான தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிப்போகும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.  இது கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சின்ன பிரச்சனை வந்தால் அனைவரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இந்தப் படம் மற்றவர்களுக்கு வெறியேற்றியுள்ளது.

அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாயப் போர் தொடுத்ததை இந்த விஜய் என்ற நாய் படம் எடுப்பானா? அல்லது பாதிரியார்களின் லீலைகளைப் படம் எடுப்பானா?  உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தைச சேர்ந்தவன் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.

இனிமேல் செய்ய வேண்டியது என்ன?:

விஜய், முருகதாஸ், தானு ஆகிய மூன்று அயோக்கியர்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்களோ அந்தத் தகவல் கிடைத்தவுடன் இவர்களுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் என்று தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும். இது குறித்து தலைமை மூலம் முறைப்படி அறிவிப்புச் செய்யப்படும்.

கமலஹாசன் என்ற அயோக்கியனும் இதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இவன் எடுக்கும் விஸ்வரூபம் படத்தின் பெயரையே அரபு எழுத்து போல் எழுதி விளம்பரம் செய்கிறான் என்றால் பரமக்குடி பார்ப்பான் கமலஹாசனுக்கு எவ்வளவு துவேசம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

விஸ்வரூபம் படம் இதுபோல் எடுக்கப்பட்டால் அடுத்த நிமிடமே , “பாபா” படத்துக்கு ராமதாஸ் கொடுத்தது போன்ற பதிலடியைப் போல் எந்த ஊரிலும் அந்தப் படத்தைத் திரையிட முடியாத நிலையை ஏற்படுத்தியதுபோல் சமுதாயம் பதிலடி கொடுத்தால் அதை எந்த முஸ்லிம் இயக்கமும் தடுக்கக் கூடாது.

பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைக் கூட கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிக் கும்பலின் இந்தப் போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.

பிற சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி வெறுப்பை விதைக்கும் அக்கிரமத்தை எந்த விலை கொடுத்தாகிலும் தடுக்க வேண்டும். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பொருட்படுத்தத் தேவை இல்லை என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் அறிவிக்க வேண்டும். காயம்பட்ட முஸ்லிம்கள் அவர்களே பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை விட்டுவிட வேண்டும்.

அப்போதுதான் இதையே வேலையாகக் கொண்டு திரியும் அயோக்கிய சினிமாக் கூட்டம் அடங்கும். இவர்களை அடக்கியே ஆக வேண்டும்.

காயம்பட்ட  முஸ்லிம்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொண்டாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் முன்னரே அறிவித்து விட வேண்டும்.

மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வார்கள்.

கேனத்தனமான பேச்சுவார்த்தைக்குப் போகாமல் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை சமுதாயம் எடுத்தாலும் அதை யாரும் தடுக்கக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக

முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள்.

அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும்.

அக்கம்பக்கத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களைப் பார்ப்பார்கள்.

இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும்

என்பதால் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்த அயோக்கிய சினிமாக் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் விருப்பப்படி தக்க பதிலடி கொடுத்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று கோருகிறோம்.

20.11.2012. 12:40

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம

திருட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தலாமா?

இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும் அழுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன் படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் O S மற்றும் இன்னபிற சாப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து வாங்குவது இல்லை அனால் பைரடேடாக (திருடப்பட்ட பொருளாக) பயன்படுத்துகிறார்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானதல்லவா? இதே நிலையில் மரணித்தால் மறுமையில் திவாலானவராக ஆகிவிடுவோமே விளக்கம் தரவும்

GM .பாஷா R .புதுப்பட்டினம்

பதில்

திருட்டு சாப்ட்வேரைப் பயன்படுத்துவது குற்றமாகும். எல்லாவகையான திருட்டுக்களும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால் விலை கொடுத்து வாங்கிய ஒருவரிடமிருந்து அவரது சம்மதத்துடன் காப்பி எடுத்து பயன்படுத்தினால் அது குற்றமாகாது. உரிமையாளரின் சம்மதத்துடன் எடுத்துக் கொள்வது திருட்டில் சேராது.

இது குறித்து நாம் முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். அது வருமாறு

ஒரிஜினல் சாப்ட்வேரை காப்பி எடுக்கலாமா

இஸ்லாத்தின் பார்வையில் ஒரிஜினல் சாப்ட்வேர்களைப் பயன்படுத்தாமல் காப்பி எடுத்து பயன்படுத்தலாமா? தவறு என்றால் பழைய நூல்களை வாங்கினாலும் வெளியிடுபவர் நட்டமடைவாரே? அது சரியா?

முஹம்மத் யூனுஸ்

இது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சந்திக்காத பிரச்சனை என்பதால் நேரடியான ஆதாரம் இதற்குக் கிடைக்காது. ஆனால் இது சரியா தவறா என்று முடிவு செய்வதற்கேற்ற அடிப்படை நிச்சயம் இஸ்லாத்தில் இருக்கும்.

இஸ்லாத்தில் வியாபாரம் என்பதன் விதிகள் ஒழுங்காக வகுக்கப்பட்டுள்ளன. ஒருவன் ஒரு பொருளை விற்று விட்டால் அதில் விற்றவனுக்கு எந்த உரிமையும் இல்லை. வாங்கியவன் தன் இஷ்டம் போல் அதைப் பயன்படுத்தலாம். இது தான் வியாபாரம்.

நாம் ஒரு சாப்ட்வேரை வங்கினால் அது நமக்குச் சொந்தமாகி விடுகிறது. நமக்குச் சொந்தமான ஒரு பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைத் தடுத்தால் அது நம் உரிமையைப் பறிக்கிறது.

சாஃப்ட்வேர்களைக் காப்பி எடுத்து பயன்படுத்துவதால் தயாரிப்பவருக்கு பெரிய நட்டம் ஏற்படுகிறது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துவது தவறு என்று ஒரு சாரார் கூறி ஃபத்வாக்களும் அளித்துள்ளனர்..

விற்பனையாளருக்கு நட்டம் ஏற்படுத்துதல் என்பது போலியான காரணமாகும். அவருக்குச் சொந்தமானதை எடுத்து அடுத்தவருக்குக் கொடுத்தால் தான் அவருக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமையும். நமக்குச் சொந்தமானதை நாம் இலவசமாகக் கொடுப்பதில் அவருக்கு நட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இது போல் விற்பனையாளருக்கு சிறு நட்டம் ஏற்படும் பல காரியங்களை இவர்கள் குற்றம் என்று ஃப்தவா கொடுத்ததில்லை. தொகை பெரிது என்பதால் இந்த வாதத்தை இப்போது கூறுகிறார்கள்.

மற்றவருக்கு அதிக நட்டம் ஏற்படுத்துவதும் குறைந்த நட்டம் ஏற்படுத்துவதும் இஸ்லாத்தில் சமமான குற்றங்கள் தான்.

ஆனால் இது போல் குறைவான நட்டம் ஏற்படுத்தும் காரியங்கள் நடந்த போது அது யாருக்கும் குற்றமாகப் படாமல் இருந்தது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொண்டால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும். இன்றைக்கும் அதை அவர்கள் குற்றமாகக் கருதுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நூல் வெளியிடப்படுகிறது. அந்த நூலை நீங்கள் வாங்குகிறீர்கள். உங்கள் சம்மதத்துடன் ஒருவர் ஜெராக்ஸ் எடுத்தால் அதனால் வெளியீட்டாளர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நட்டம் ஏற்படும். ஆனாலும் ஜெராக்ஸ் எடுப்பது ஹராம் என்று யாரும் கூறவில்லை.

அது போல் நீங்கள் விலை கொடுத்து வாங்கிய ஒரு நூலை ஒருவர் இரவல் கேட்கிறார். அவருக்கு நீங்கள் படிக்கக் கொடுத்தால் ஒரு பிரதியின் விற்பனை வியாபாரிக்கு பாதிக்கப்படும். இதன் காரணமாகவும் . வெளியீட்டாளர் நட்டமடைவார். ஆனாலும் இது தவறு என்று ஒருவருக்கும் தோன்றவே இல்லை. யாருடைய மனசாட்சியும் உறுத்தவில்லை.

ஏன் உறுத்தவில்லை? வெளியீட்டாளருக்குப் பாதிப்பு என்று ஏன் தெரியவில்லை?

எப்போது நாம் விலை கொடுத்து வாங்கி விட்டோமே அது நமது உடமையாகி விட்டது. அதை நாம் யாருக்கும் கொடுக்கலாம். ஜெராக்ஸ் எடுக்கலாம். வெளியீட்டாளருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்று இவர்கள் விளங்கி வைத்துள்ளதே காரணம்.

அதே நூலை நீங்கள் அச்சிட்டு விற்பனை செய்தால் அது உங்களை உறுத்துகிறது. விற்பனை செய்யும் உரிமை வெளியீட்டாளருக்கு உரியது என்பது நமது மனசாட்சிக்குத் தெரிகிறது.

அது போல் ஒரு சாப்ட்வேரை நாம் விலை கொடுத்து வாங்கினால் அதை நாம் பயன்படுத்துவதும், மற்றவருக்குப் பிரதி எடுத்துக் கொடுப்பதும் சமமானது தான்.

விலைக்கு விற்ற பிறகும் விற்றவருக்கு அதில் உரிமை இருக்க முடியாது.

சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் இது போல் நடக்கக் கூடாது என்று கருதினால் அதைக் காப்பி எடுக்க முடியாமல் செய்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அல்லது காப்பி எடுக்க முயற்சிக்காத வகையில் நியாயமான விலையில் அவர்கள் விற்பனை செய்தால் யாரும் காப்பி எடுக்க மாட்டார்கள். பத்து ரூபாய் பெறுமானமில்லாத சீடியில் சாப்ட்வேரைப் பதிவு செய்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பது கடுமையான கொள்ளை.

நூறு ரூபாய்க்கு அதை விற்றால் கூட தயாரிப்புச் செலவை விட பன்மடங்கு லாபம் கிடைக்கும். ஆனால் உலகப் பணக்காரராக முடியாது.

இந்த அளவுக்குக் கொள்ளை அடிப்பதால்தான் காப்பி எடுக்கிறார்கள் என்று உணர்ந்து குறைந்த விலைக்கு விற்க அவர்கள் முன் வரவேண்டும். இதன் மூலம் காப்பி எடுப்பதை அவர்கள் தடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காசு கொடுத்து வாங்கிய பிறகும் வாங்கியவனுக்கு உனக்கு உரிமை இல்லை என்று கூற முடியாது.

காசு கொடுத்து வாங்காதவர்களிடம் காப்பி எடுப்பதுதான் திருட்டாக ஆகும். ஒரு சாப்ட்வேரை விலை கொடுத்து வாங்கி அதைக் காப்பி எடுத்து பலரும் பகிர்ந்து கொள்வது எந்த வகையிலும் தவறாகாது.

ஒரு சட்டையை விற்கும் போது நீ ஒரு தடவை தான் அணிய வேண்டும் என்றோ யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றோ நிபந்தனை விதித்தால் அது செல்லாது. அது போல் தான் இந்த பத்வாக்களும் உள்ளன.

இது நேரடி ஆதாரத்தின் மூலம் இல்லாமல் சிந்தித்துக் கூறப்படும் கருத்தாக உள்ளதால் இது சரி என்று படக்கூடியவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு புரிந்து கொள்ள இடமில்லை என்று கருதுவோர் தாம் தவறு என்று கருதுவதைச் செய்ய வேண்டாம்,.

மார்க்கத்தில் தடுக்கப்படாத காரியத்தை உலக நாடுகளின் சட்டம் தடுக்குமானால் அதனால் சங்கடங்கள் ஏற்படுமானால் அப்போதும் அதைக் கவனத்தில் கொள்வது தவறல்ல.

சுத்த கிரயமாக வாங்கிய பொருள்களுக்குத் தான் மேற்சொன்னது பொருந்துமேயன்றி ஒப்பந்தத்துடன் வாங்கும் பொருள்களுக்கு பொருந்தாது என்றும் சாப்ட்வேர் விஷயத்திலும் இது பொருந்தாது. காரணம் நாம் அதை வாங்கும் போதே ஒப்பந்தத்துடன் தான் வாங்குகிறோம். (கடுமையான ஒப்பந்தம் சத்தியம் செய்வதற்குச் சமமானது) என்றும்

அதிலிருக்கும் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த சாப்ட்வேர் நமது கணிணியில் ஓடாது. ஒப்பந்தத்தைப் படித்துவிட்டேன், ஏற்றுக்கொள்கிறேன் என்று மார்க் செய்தால் அன்றி அதை நமது கணிணியில் ஏற்ற முடியாது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டபின் மார்க்கத்தில் நமது நிலை என்ன? என்றும்

சிலர் கேட்கின்றனர்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உண்மை தான். அந்த ஒப்பந்தம் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட விதியின்படி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அதை நிறைவேற்றத் தேவை இல்லை.

ஒரு பொருளை விற்பனை செய்தால் அப்பொருளின் முழு உரிமையும் வாங்கியவருக்குத் தான் உள்ளது. விற்றவருக்கு அதில் எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி. இதற்கு மாற்றமாக விற்பனை செய்த பிறகும் எனக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால் அது ஏற்க முடியாததாகும்.

456ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப்பெண்) பரீரா, தனது விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக உதவி கோரியபடி) என்னிடம் வந்தார். நான், நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையும்) நான் செலுத்திவிடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகிவிட வேண்டும் என்று கூறினேன். ஆனால் பரீராவின் எஜமானர்கள் என்னிடம், நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டிய பாக்கித் தொகையைத் தந்து (பரீராவை விடுதலை செய்து) கொள்ளலாம் என்று கூறினார்கள்.

- (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கையில் நீங்கள் விரும்பினால் அவரை விடுதலை செய்து கொள்ளலாம். ஆனால், (பரீராவின்) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாகி விடவேண்டும் என (பரீராவின் எஜமானர்கள் நிபந்தனையிட்டுக்) கூறியதாகச் சொன்னார்கள்.-

தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்த போது நான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், அவரை வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில் வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலுள்ள) சொற்பொழிவு மேடை மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்:) மக்களில் சிலருக்கு என்ன நேர்ந்து விட்டது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! எவர் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றாரோ அவருக்கு அதற்கான (அதை நிறைவேற்றக் கோரும்) உரிமை இல்லை; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 456

ஒரு அடிமையை ஒருவர் விலைக்கு வாங்கி விடுதலை செய்கிறார். பின்னர் அந்த அடிமை இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு விடுதலை செய்தவர் வாரிசாக ஆவார். இது இஸ்லாமியச் சட்டம்.

இதற்கு மாற்றமாக பரீரா என்ற அடிமையை விற்பவர்கள் ஒரு நிபந்தனை விதிக்கிறார்கள். பரீரா இறந்துவிட்டால் அவரது வாரிசுகளாக நாங்கள் தான் இருப்போம் என்ற நிபந்தனை அடிப்படையில் விற்போம் என்று கூறுகிறார்கள். இதை ஆயிஷா (ரலி) ஏற்றுக் கொள்கிறார்கள். பின்னர் நபிகள் நாயகத்திடம் இதைக் கூறிய போது அந்த நிபந்தனை செல்லாது. நூறு தடவை அந்த விதியை கூறினாலும் அது செல்லாது. அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒன்றை யார் நிபந்தனை போட்டாலும் அது செல்லாது. அதை ஏற்றுக் கொண்டாலும் அதை நிறைவேற்ற அவசியம் இல்லை என்பது மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரிகிறது.

மேலும் ஒருவர் எப்போது ஒன்றை விற்பனை செய்கிறாரோ அத்துடன் அவரது உரிமை நீங்கிவிடுகிறது. அதன் பின்னரும் உரிமை கொண்டாடுவதோ அதை தொடர்வதோ கூடாது என்ற சட்டமும் இதில் இருக்கிறது.

09.11.2012. 21:56

நபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே?

தொடர்ந்து படிக்க 13.04.2011. 14:58

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குண

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா சஹீஹுல் புஹாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடை முறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை

தொடர்ந்து படிக்க 26.04.2011. 12:36

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

ஷேர் மார்க்கட்டிங் ஹலாலா? ஹராமா?

பதில்

ஷேர் மார்க்கெட்  என்பது ஒரு கம்பெனி நடத்துகிறவர் தன்னிடமுள்ள 1 கோடி மதிப்புள்ள தொழிலில் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு பிறர் கூட்டு சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிப்பார். ஒரு பங்கு என்பது 10 ரூபாயக்கு மேல் தாண்டக் கூடாது என்பது தான் சட்ட விதிமுறை.

தொடர்ந்து படிக்க 24.04.2011. 23:40

வருமான வரியில் இருந்து தப்பிக்க

வருமான வரியில் இருந்து தப்பிக்க

இன்கம் டாக்ஸ் குறைக்க எள் ஐ சி, முட்சுவல் பான்ட் போன்றவை போடலாமா? அல்லது வேற என்ன வழி இருக்கிறதா?.  நான் ஹலாலான முறைப்படி வாழ விரும்புகின்றேன். பதில் தரவும்?

ஹிதாயதுல்லாஹ்

தொடர்ந்து படிக்க 24.04.2011. 23:02

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top