சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா

சிறுவர்கள் தற்கொலை செய்தால் நரகமா

கேள்வி

ஸ்கூல் படிக்கும் பிள்ளைகளில் சிலர் மார்க் குறைவாகவோ அல்லது பெயில் ஆகிவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனா். இது அறியாத வயசு. தற்கொலை செய்வது மார்க்கப்படி தப்பு என்று இந்த பசங்களுக்குத் தெரியாது தானே? அப்போ இவர்களுக்கு நிரந்தர நரகம் தானா? இது எப்படி சரி ஆகும். இரண்டவது கேள்வி தற்கொலை செய்ய தூண்டியவா்கள் மீது பாவமா? இல்லை தற்கொலை செஞ்சவங்க மீது பாவமா?

சல்மான்

தற்கொலை செய்தால் நிரந்தர நரகம் என்று நமது மார்க்கம் சொல்கிறது. இது பள்ளி மாணவர்களுக்குப் பொருந்துமா? என்று கேட்கிறீா்கள்.

பள்ளி மாணவா்களில் இரு வகையினா் உள்ளனா்.

போதிய விபரமறியாத பருவமடையாத சிறுவர்கள் ஒரு வகை. இத்தகைய சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டால் இவா்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. காரணம் சிறுவன் பெரியவனாகும் வரை அவன் செய்கிற தீமைகள் பதிவு செய்யப்படாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.

1. தூங்குபவர் விழிக்கின்ற வரை

2. சிறுவன் பெரியவராகும் வரை

3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: ஸாயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031

ஆனால் பருவமடைந்த விபரமுள்ள மாணவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொண்டால் அவா்களுக்கு தற்கொலை செய்ததற்கான தண்டனை இறைவனிடத்தில் உண்டு. இதை அறியாத வயசு என்று சொல்ல முடியாது. நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியக்கூடிய பருவமாகும். இவா்கள் மீது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலையும், தூதருடைய வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்வது கட்டாயமாகும். இந்நிலையில் மார்க்க போதனைகளை அறிந்து கொள்ளாதது இவா்களது தவறாகும்.

மார்க்க போதனைகளை அறிந்து கொள்ளாத காரணத்தால் தான் நரகில் நுழைந்தோம் என்று நரகவாசிகள் மறுமை நாளில் புலம்புவதாக இறைவன் தெரிவிக்கின்றான்.

கோபத்தால் அது (நரகம்) வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் ''எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 67:8

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67: 10

மேலும் சில விஷயங்களைப்பற்றி யாரும் விளக்கிச் சொல்லாமலே அதை தீமை என்று புரிந்து கொள்ள முடியும்.

பிறா் பொருளைத் திருடுதல், கொலை, கொள்ளை, விபச்சாரம் போன்றவைகளை யாரும் தீமை என்று கற்றுத்தர வேண்டியதில்லை. இவை தவறு என்று அனைவரும் அறிந்து வைத்திருக்கவே செய்கிறோம். தற்கொலையும் இந்த வகையில் உள்ளது தான். இதை யாரும் சரிகாண மாட்டார்கள்.

எனவே விபரமுள்ள பருவமடைந்த மாணவா்கள் தற்கொலை செய்திருந்தால் அவா்களுக்கு தற்கொலைக்கான தண்டனை உண்டு.

மேலும் இந்த பதிலையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/ithara_sattangal/tharkolai_seythavrku_pavamannippu/

ஒருவா் தற்கொலை புரிய யார் தூண்டுதலாக இருக்கிறார்களோ அத்தீமையின் பங்கு கூலி அவருக்கும் உண்டு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் 1848கேள்வி பதில்நம்பிக்கை தொடர்புடையவைசிறுவர்கள்தற்கொலைதூங்குபவர் விழிக்கின்ற வரைசிறுவன் ப

Published on: April 20, 2013, 9:49 AM Views: 4133

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top