பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

1995ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டது.

ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.

தொடர்ந்து படிக்க 20.03.2010. 14:08

அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

 அசைவத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்

அசைவம் சாப்பிடலாம் என்பதற்கு உள்ள அணைத்து அறிவியல் பூர்வமான சான்றுகளையும் அனுப்புங்கள் இந்து சஹோதரருக்கு இஸ்லாத்தை பற்றி சொல்லி புரிய வைக்க வேண்டும் அசைவம் பாவம் என்கின்றனர் விளக்கம் தரவும் பலமுறை கேள்வி அனுப்பியும் பதில் வரவில்லை

தொடர்ந்து படிக்க 11.03.2010. 23:15

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

தொடர்ந்து படிக்க 23.01.2010. 14:09

அசைவ உணவு உட்கொள்வது சரியா?

அசைவ உணவு உட்கொள்வது சரியா?

ஃபாத்திமா

அசைவ உணவு உட்கொள்வது சரியா? அது உயிர்வதை இல்லையா? என்ற கேள்விகள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டு விரிவாக பதில் சொல்லப்பட்டுள்ளன. பார்க்க இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் வீடியோஆடியோ

 இது தவிர குற்றச்சாட்டுக்களும் பதில்களும் என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அது இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது பார்க்க

16.01.2010. 15:33

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?
அஸ்ஸலாமு அலைக்கும்.ஒரு கிறிஸ்த்துவ நண்பரின் கேள்வி:"அல்லாஹ் குரானிலே இயேசுவையும்,மரியத்தையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குரிப்பிடுக்கிறானே. ரசூல்(ஸல்)அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்ட மாட்டான் என்றுதான் கூறி இருக்கிறார்கள்.ஆனால் ரசூல்(ஸல்) அவர்கள் தவறு செய்ததாகத்தானே குரானில் பார்க்க முடிகிறது.எனவே இயேசுவை குரானே பரிசுத்த ஆவி என்று கூறுவதால்,ஏசுதான் கர்த்தர்.(நவூதுபில்லாஹ்).ஏன் என்றால் கர்த்தரைத்தான் சைத்தான் தீண்ட முடியாது."(நவூதுபில்லாஹ்) என்று அவர் கூறுகிறார்.அவருக்குஒரு தெளிவான பதிலை எப்படி கூறுவது.

தொடர்ந்து படிக்க 16.01.2010. 00:14

கஅபாவுக்கு தங்கத் திரை ஏன்

காபாவுக்கு தங்கத் திரை ஏன்
அஸ்ஸலாமு அலைக்கும். நான் எனது நண்பர்களுக்கு தினசரி இஸ்லாத்தை அறிமுகம் செய்து வருகிறேன். காபா வில் தொங்கும் திரை பற்றி அவர்கள் கேட்கின்றனர். ஏன் அந்த திரை? அதில் உள்ள வேலைபாடுகள் ஏன் தங்கத்தில் உள்ளன அடுத்தது நமக்கு என்று தொழுகை முறை இருந்தாலும் ஏன் காபாவை மாற்று மத சகோதரர்கள் போல சுற்றி வர வேண்டும்? அடுத்தது காபா தான் உலகின் முதல் பள்ளியா?

தொடர்ந்து படிக்க 15.01.2010. 23:26

பெற்றோர் முஸ்லிமாக

பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:33

நீ இந்தியனா அல்லது முஸ்லீமா?

கேள்வி

எனது நன்பர் நீ இந்தியனா அல்லது முஸ்லிமா என்று கேட்கிறார் நான் முதலில் முஸ்லிம் இரண்டாவது இந்தியன் என்று பதில் சொன்னேன் இது சரியா நபியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செய்யது இப்றாஹீம்

பதில் :

நீ இந்தியனா அல்லது முஸ்லிமா? என உங்கள் நண்பர் உங்களிடம் கேட்டுள்ளார். இக்கேள்வி தவறானதாகும்.

இந்தியன் என்பதும் முஸ்லிம் என்பதும் ஒன்றொக்கொன்று எதிரான அர்த்தம் கொண்ட பெயர்கள் என்று கருதினாலே இவ்வாறு கேள்வி கேட்க முடியும். இந்தியனாக இருப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமாக இருப்பவர் இந்தியனாக இருக்க முடியாது என்ற தவறான கருத்து இக்கேள்வியில் அடங்கியிருக்கின்றது.

ஒருவர் இந்தியனாக இருந்துகொண்டு முஸ்லிமாக வாழ முடியும். இந்திய நாட்டில் வாழ்பவருக்கு இந்தியன் என்று சொல்லப்படும். இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும். இந்திய நாட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று அதனடிப்படையில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை. நாம் அனைவரும் அவ்வாறே வாழ்ந்துகொண்டுஇருக்கின்றோம். இதை விளங்கியிருந்தால் இக்கேள்வியை உங்கள் நண்பர் கேட்டிருக்கமாட்டார்.

உதாரணமாக உங்களைப் பார்த்து நீ மனிதனா? உயிரினமா? என்று கேட்டால் அக்கேள்வி எப்படி அர்த்தமற்றதோ அது போன்றே இந்த கேள்வியும் அமைந்துள்ளது. இப்படி ஒருவர் நம்மிடம் கேட்டால் நான் மனித உயிரினமாக இருக்கின்றேன் என பதிலளிப்போம். அதேப் போன்று நான் இந்திய நாட்டில் வாழும் முஸ்லிமாக இருக்கின்றேன் என்று உங்கள் நண்பருக்கு பதிலளியுங்கள். 

17.08.2010. 14:40

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து க

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்வது

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் விளக்கம் தேவை.

ரஃபீக் நாகர் கோவில்

பதில் பிற மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் சில சட்டங்கள் பொருந்தாது என்பது உண்மை தான். அவர்கள் பன்றி இறைச்சி சாப்பிட்டால் அதை இஸ்லாமிய அரசு தடுக்காது. அவர்கள் சிலை வழிபாடு செய்தால் அவர்களின் வழிபாட்டு உரிமை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்யும் போது அதை அந்த சபையில் நாம் இருப்பதற்கு இது எப்படி ஆதாரமாக அமையும்?

முஸ்லிமல்லாதவர்கள் நடித்துள்ள ஆபாசக் காட்சியை நாம் பார்ப்பது கூடுமா? அவர்கள் பன்றியைச் சாப்பிடுவதால் அதை அவர்கள் நமக்குத் தரும் போது நாம் சாப்பிட முடியுமா?

இறைவன் கட்டளையும் நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும் மாற்று மதத்தினர்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதா? என்ற அடிப்படையில் இப்பிரச்சனையை நாம் அனுகக் கூடாது. மார்க்கம் தடை செய்த காரியங்களில் பங்கெடுப்பது கூடுமா? கூடாதா? என்ற அடிப்படையில் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாம் செய்யக் கூடாது என்று முஸ்லிம்களாகிய நமக்கு அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் அக்காரியங்கள் நடைபெறும் சபையில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் நமக்கு கட்டளையிட்டிருக்கின்றான்.

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் வைபவங்களில் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்து.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:140)

பொதுவாக அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்யும் வகையிலும் அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் சேர்ந்து நாம் அமரக் கூடாது என்று இவ்வசனம் கூறுகின்றது.

இத்தடையை மீறி அமர்ந்தால் நாமும் அவர்களைப் போன்றவர்களே என்று எச்சரிக்கின்றது.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறு செய்தால் அமரக் கூடாது மற்றவர்கள் செய்தால் அமரலாம் என்று அல்லாஹ் வேறுபடுத்தி சட்டத்தைக் கூறவில்லை. மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை யார் செய்தாலும் அந்தச் சபையில் இருக்கக்கூடாது என்று பொதுவாகவே கூறுகிறான். 

தீமை நடக்கக் கண்டால் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 70

முடிந்தால் கையால் தடுக்க வேண்டும். இதற்கு இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் வெறுத்து ஒதுங்க வேண்டும்.

மூன்றாவதாக கூறப்பட்ட வெறுத்து ஒதுங்குவது என்ற நிலை கூட பலவீனமான நிலை என்று கூறப்படுகின்றது. மார்க்கத்திற்குப் புறம்பான சபைகளை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். அந்த சபைகளில் கலந்து அவைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூற முடியாது.

மாற்று மதத்தவர்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிகளில் இணைவைப்பு மூடநம்பிக்கைகள் இசை போன்ற அனாச்சாரங்கள் நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சிகளில் நாம் பங்கெடுத்துவிட்டு வந்தால் இத்தீமைகளை நாம் ஆதாரித்ததாக ஆகிவிடும். நாமே இவற்றை செய்த குற்றமும் ஏற்படும்.

மேலும் ஒருவர் தவறு செய்வதைக் கண்டால் ஏதோ ஒரு வகையில் அத்தவறை அவருக்கு உணர்த்துவது நமது கடமை. மார்க்கத்திற்கு மாற்றமான நிகழ்ச்சிகளை நாம் புறக்கணித்தால் தான் அவற்றை நடத்துபவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணருவார்கள். இந்நிகழ்ச்சிகளில் நமது பங்களிப்பை அளித்தால் தங்களது தவறுகளை அவர்களால் உணர முடியாமல் போகின்றது.

அழகிய முறையில் திருமணத்தை நடத்தி நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரனமாகத் திகழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக மாற்று மதத்தினர்களை நமது திருமணங்களுக்கு அழைக்கலாம். ஆனால் நாம் அவர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது மேலே நாம் சுட்டிக்காட்டிய வசனத்துக்கும் நபிமொழிக்கும் மாற்றமாக நடக்கும் நிலை உருவாகிறது.

மேலும் மாற்று மதத்தவர்களின் திருமண விஷயத்தில் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று கூறி அதில் கலந்து கொள்வதை நாம் கூடும் என்று சொன்னால் அவர்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்றே கூற வேண்டும். அவர்கள் நடத்தும் கும்பாபிஷேகம் கோவில் திருவிழாக்கள் சிலை திறப்பு விழா கிரகப் பிரவேசம் பூப்புனித நீராட்டு விழா காது குத்தும் விழா என்று இன்னும் மார்க்கத்திற்கு மாற்றமான ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கலாம் என்று கூற வேண்டி வரும்.

முடிவில் தீமையைக் கண்டால் அதை வெறுக்கும் குணம் காலப்போக்கில் அத்தீமைகளை ஆதரிக்கும் குணமாக மாறிவிடும். மேலும் அவர்களின் கலாச்சாரம் நமது சமுதாயத்திலும் தொற்றிக்கொள்ளும். எனவே தான் மார்க்கம் இதைத் தடைசெய்கின்றது.

மாற்றார்களின் திருமணத்தில் ந்மது மார்க்கம் தடுத்துள்ளவை நடக்குமானால் பங்கெடுக்கக் கூடாது என்றாலும் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ தீமைகள் அரங்கேராத போது மணமக்களைப் பார்த்துவிட்டு வந்தால் அது மார்க்கத்தில் தவறல்ல.

இது முஸ்லிமல்லாதவர் என்ற இனவேறுபாட்டினால் அல்ல. ஒரு முஸ்லிம் இப்படிச் செய்தாலும் நாம் புறக்கணிப்போம் என்று அவர்களிடம் தெளிவுபடுத்தினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். செயலின் அடிப்படையில் தான் நாம் முடிவு செய்கிறோம் என்று நடப்பவர்களுக்கு இது பிரச்சனை இல்லை. முஸ்லிம்கள் நடத்தும் அனாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு வேறு நிலை எடுப்பவர்களூக்குத் தான் இது கடினமானது.

அதே அல்லாஹ்வும் அவனது தூதரும் வேறுபடுத்தி காட்டிய விஷயங்களில் முஸ்லிமல்லாதவர் விஷயத்தில் நாமும் வேறு நிலை எடுக்கலாம்.

மேலும் விபரம் அறிய கீழ்க்காணும் செய்திகளைப் பார்க்கவும்

வீடியோ

வீடியோ2

கட்டுரை

கட்டுரை

கட்டுரை

11.07.2010. 16:28

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது

இஸ்லாமிய ஆட்சியால் பயன் இல்லை என்பது சரியா
இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு பலன் இல்லை என்று கூறப்படுகின்றதே. இது சரியா
?

rujahim

பதில் :

இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் உள்ள சில நாடுகளைப் பார்த்து விட்டு இந்தக் கருத்துக்கு அவர்கள் வந்திருக்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன என்று யோசித்தால் இக்கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ளலாம்.

ஒரு நாட்டில் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு  இருந்தால் அதுவே நல்லாட்சி. மேலும் மக்களுக்குக் கேடு தரும் எந்த அம்சத்தையும் நல்லாட்சி புரிபவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள். இதற்காகத் தான் மக்கள் ஆட்சியாளர்களைச் சார்ந்திருக்கின்றார்கள். இந்த அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தான் குற்றவியல் சட்டங்களை இஸ்லாம் வழிகாட்டியிருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சி முறையால் இத்தகைய நன்மை ஏற்பட்டது.

மேலும் மக்களுக்கிடையே நடக்கும் பிரச்சனைகளில் நியாயமான தீர்ப்புகளை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். எனவே ஒருவன் அநியாயமாகப் பாதிக்கப்படும் சூழல் தடுக்கப்பட்டது. உரிமையுள்ளவர்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட்டது. அக்கிரமங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த நன்மையும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஏற்பட்டது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஆள்பவர்கள் நீதி நேர்மையைக் கடைபிடித்து ஆட்சி செய்ததால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. செல்வந்தர்களிடமிருந்து முறையாக ஸகாத் வசூலிக்கப்பட்டது. அது உரியவர்களுக்கு அதாவது ஏழை எளியவர்களுக்கு முறையே வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் நாட்டில் அனைத்து மக்களும் சிறப்பான முறையில் வாழும் மிகப் பெரிய நன்மை ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களின் ஆட்சியால் இந்த நன்மையும் ஏற்பட்டது.

இது போன்ற நன்மைகள் நபியவர்களின் ஆட்சியால் ஏற்பட்டது. நபியவர்களின் ஆட்சியில் இப்படிப்பட்ட நன்மைகள் ஏற்படுவதற்கு திருமறைக்குர்ஆனே முக்கிய காரணமாகும். இறைவனுடைய உத்தரவை சிறிதும் புறக்கணிக்காமல் அவனுடைய திருப்தியை மட்டும் நாடி செயல்பட்டதால் தான் இப்படிப்பட்ட ஆட்சியை நபி (ஸல்) அவர்களால் உருவாக்க முடிந்தது.

இப்படிப்பட்ட ஆட்சி உருவாக வேண்டுமென்றால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படும் மக்களை நபி (ஸல்) அவர்கள் உருவாக்கியது போல் நாமும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸ் வழியில் தலைவைர்களும் தொண்டர்களும் பயணிக்க வேண்டும். இவ்விரண்டை மக்களிடையே கொண்டு சென்று மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் தானாக இப்படிப்பட்ட நல்லாட்சி மலர்ந்துவிடும்.

எனவே உண்மையான இஸ்லாமிய ஆட்சி வர வேண்டும் என்றால் நாம் முதலில் செய்ய வேண்டிய வேலை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் வாழ வேண்டும். இவ்வாறு பிறர் வாழ்வதற்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான செயல்களை மக்கள் செய்து கொண்டிருந்தால் தயவுதாட்சனையின்றி அச்செயல்களைக் கண்டிக்க வேண்டும். மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துக்கூறி அவர்கள் இஸ்லாத்தை ஏற்க பாடுபட வேண்டும்.

இதைச் செய்யாமல் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவோம் என்று வெறுமனே கோசம் மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தால் அதனால் ஒரு போதும் இஸ்லாமிய ஆட்சி உருவாகாது. அப்படியே உருவானாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்காது.

இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரைத் தவிர்த்து ஆள்பவர்களிடமோ நாட்டு மக்களிடமோ இஸ்லாம் இருக்காது. உதாரணமான இன்றைக்கு இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பல நாடுகள் இருக்கின்றன. அந்நாட்டை ஆள்பவர்களிடமோ மக்களிடமோ உண்மையான இஸ்லாம் இல்லை. எனவே இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைக் கூட இவர்களால் நாட்டில் செயல்படுத்த முடியவில்லை.

இன்றைக்கு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என கொக்கரிப்பவர்கள் மக்களைச் சீர்திருத்தி உண்மையான இஸ்லாமியக் கொள்கையைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதில்லை. இஸ்லாத்துக்குப் புறம்பான இணைவைப்பு மூடநம்பிக்கை பித்அத்துகள் மத்ஹபுகள் ஆகியவற்றை கண்டு கொள்வதில்லை. வெறுமனே இவ்வாறு கோஷம் போட்டுத் திரிவதைத் தவிர்த்து இவர்களின் பணி வேறொன்றுமில்லை. இவர்களால் இஸ்லாமிய ஆட்சியை எப்படி உருவாக்க முடியும்? ஒரு பேச்சுக்கு இவர்கள் உருவாக்கினாலும் அது உண்மையான இஸ்லாமிய ஆட்சியாக இருக்கவே இருக்காது. இஸ்லாமிய ஆட்சி என்ற பெயர் மட்டுமே இருக்கும். மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்று அல்லது அதை விட மோசமான ஆட்சியைத் தான் இவர்களால் உருவாக்க முடியும்.

உண்மையான இஸ்லாமிய ஆட்சியை குர்ஆன் ஹதீஸை கொள்கையாகக் கொண்டு செயல்படுபவர்களாலேயே ஏற்படுத்த முடியும்.

 

29.06.2010. 22:33

முஸ்லிமல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அற

முஸ்லிமல்லாத நண்பர்கள் இஸ்லாத்தை அறிந்திட

முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு

16.05.2010. 13:35




கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

தாங்கள்
6180671
வது பார்வையாளர்

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
86 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):