மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம்?

மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம்?

கணவன் தன்னுடைய மனைவியிடம் பால் அருந்துவதின் சட்டம் என்ன ?

ரிபாஸ்

கணவன் மனைவியரிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதை மட்டுமே மார்க்கம் தடை செய்கின்றது.

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ''அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்!

அல்குர்ஆன் (2 : 222)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் அல்லது மனைவியின் பின் துவாரத்தில் புணருபவன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை என்று நம்புபவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்து விட்டவனாவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (9779)

எனவே தடை செய்யப்பட்ட இந்த இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்து காரியங்களும் அனுமதிக்கப்பட்டவையே. பின்வரும் வசனம் இந்த அனுமதியைத் தருகின்றது.

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

அல்குர்ஆன் (2 : 223)

மனைவியிடம் கணவன் பால் குடிப்பதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்பது அறியாமை ஆகும். ஏனெனில் தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்தும் பாலூட்டுதல் என்பது இரண்டு வயதிற்குற்பட்ட நிலையில் தான். இந்த நிலையைத் தாண்டி பாலருந்தினால் தாய் மகன் என்ற உறவு ஏற்படாது. அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும். இதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் 2:233

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

திருக்குர்ஆன் 31:14

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்-புகாரி 5102

ஆனால் தாம்பத்தியம் சிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியிடம் பாலருந்துவது தடுக்கப்படாவிட்டாலும் மனைவிக்கு பால் சுரப்பது அவளது குழந்தைக்காகவே. எனவே குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கணவன் மனைவியரியடையே நடக்கும் அந்தரங்கமான விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு விவரிப்பது நாகரீகமான செயல் அல்ல என்பதால் உங்கள் மனைவிமார்கள் உங்கள் விளைநிலங்கள் என்று பொதுவாக அல்லாஹ் கூறி விட்டான். அதில் எல்லாமே அடங்கும்.

இதிலிருந்து இல்லறம் தொடர்பான ஏனைய சட்டங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விபரத்துக்கு கீழ்க்காணும் ஆக்கத்தையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/manaiviyin_vinthai_suvaipathu/

15.05.2013. 02:23

அக்கா மகளை மணந்திருந்தால்

அக்கா மகளை மணந்திருந்தால்

எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அவர் என்ன செய்வது?

நிசா, அயன்புரம்

பதில்

உடன் பிறந்த சகோதரியின் மகளை மணமுடிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ (23)4

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்.

அல்குர்ஆன் (4 : 23)

சகோதாரியின் மகளைத் திருமணம் செய்யக் கூடாது என்பதை ஒருவர் அறியாமல் இருக்க முடியாது. முஸ்லிம்களில் எந்தக் கொள்கை உடையவராக இருந்தாலும் அவர்கள் இது போன்ற திருமணத்தை செய்து வைக்க மாட்டார்கள். அவர் அறிந்து கொண்டே தான் இதைச் செய்திருக்க வேண்டும். இப்போது இறையச்சம் ஏற்பட்டு அவர் திருந்த எண்ணியிருக்கலாம். எனவே அவர் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட இந்தக் காரியத்தைச் செய்ததற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையை மறுபடியும் அவர் தொடரக்கூடாது. இதற்கு முன்பு அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் சட்டம் தெளிவான பிறகு அந்த வாழ்வைத் தொடராமல் இருவரும் பிரிந்துவிட வேண்டும்.

இது போன்ற பிரச்சனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழருக்கு ஏற்பட்டது. கணவன் மனைவியாக வாழ்ந்த அவ்விருவரும் பிரிந்துவிட வேண்டும் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

88حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عَزِيزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ فَقَالَ لَهَا عُقْبَةُ مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي وَلَا أَخْبَرْتِنِي فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ وَقَدْ قِيلَ فَفَارَقَهَا عُقْبَةُ وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ رواه البخاري

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறுகிறார்கள் :

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்துகொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து "நான், உக்பாவுக்கும் நீ மணந்துகொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்' (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் "நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே!'' என்று கேட்டேன்.  ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல் லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?'' என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள்.

நூல் : புகாரி (88)

இவர்கள் பிரிந்துவிட்டாலும் குழந்தைக்கு இவர்களே தாயும் தந்தையுமாவார்கள். இவ்விருவரில் குழந்தை யாரிடத்தில் இருக்க விரும்புகின்றதோ அவரிடத்தில் சேர்க்கப்படும்.

இந்தக் கட்டுரையையும் வாசிக்கவும்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/114-manamutika-thakathavarkali-manamutithal/


25.03.2013. 23:20

வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாம

வரதட்சணை கேட்பதால் திருமணம் செய்யாமல் இருக்கலாமா

கேள்வி: ஒரு இஸ்லாமிய பெண் வரதட்சணை வாங்கும் ஒரு ஆணை திருமணம் செய்ய மாட்டேன் என்று நிராகரிக்கலாமா
? நமது சமுதாயத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் இல்லை எனும் நிலைமை இருக்கும்போது அப்படி செய்தால் அந்த பெண்ணின் நிலை என்ன?

சோஃபியா பேகம்

பதில்

வரதட்சணைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பொதுவாக மார்க்கத்தில் அனுமதி இல்லாத வழிகளில் எதனையும் அடையக் கூடாது என்பது திருமணத்துக்கும் பொருந்தக் கூடியதாகும்.

வரதட்சணை கொடுத்துத் தான் திருமணம் நடக்கும் என்றால் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்வதற்குத் தான் பெண்களும் பெண்ணைப் பெற்றவர்களும் முயல வேண்டும். வரதட்சணை இல்லாத மணமகனைத் தான் தேட வேண்டும்.

இவ்வாறு தேடிப்பார்த்தும் வரதட்சணை இல்லாமல் மணமகன் கிடைப்பதாகத் தெரியவில்லை என்று தெரியும் போது, ஆண்டுகள் பல கடந்தாலும் வரதட்சணை இல்லாமல் வாழ்க்கைத் துணை அமையாது என்ற நிலை ஏற்படும் போது என்ன செய்வது?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தக்க சமயத்தில் வாழ்க்கைத் துணை அமையாமல் போனால் அதன் காரணமாக விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தன்னால் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியும் என்று ஒரு பெண் நம்பினால் அவள் அவ்வாறு இருந்து கொள்ளலாம்.

காலம் இருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் விபச்சாரத்துக்கு தூண்டக் கூடிய காட்சிகள் மலிந்துள்ள போது, ஒரு பெண்ணால் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டால், திருமணம் செய்யாவிட்டால் வழி தவற நேரும் என்று அவள் அஞ்சினால் அப்போது விபச்சாரத்தில் சென்று விடக் கூடாது என்பதற்காக வரதட்சணை கேட்பவனை மணந்து கொண்டால் கருணையுள்ள அல்லாஹ் அதை மன்னிப்பவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும்மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும்கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப் பட்டவர் தவிர.

(அல்குர்ஆன் 16:106)

இறை நிராகரிப்பு என்பது தான் அல்லாஹ்விடத்தில் மன்னிக்க முடியாத பாவமாகும். ஆனால் அதற்கே நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அல்லாஹ் இந்த வசனத்தில் விதி விலக்கு வழங்குகின்றான்.

பன்றி இறைச்சி மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட உணவு. அதையும் நெருக்கடி,நிர்ப்பந்தத்தின் போது சாப்பிட்டால் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான் என்பதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

தாமாகச் செத்தவைஇரத்தம்பன்றியின் இறைச்சிஅல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும்,வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2:173)

மூன்று நாட்கள் உணவு கிடைக்கா விட்டால் கூட மார்க்கத்தில் தடுக்கப்பட்டவைகளை செய்யலாம் என்று மார்க்கம் அனுமதி அளித்துள்ளது.

பார்க்க

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/431/

எனவே பொதுவாக இது போன்ற மனமகனை பெண்கள் மணக்கக் கூடாது என்றாலும் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் அப்போது வரதட்சணை கேட்பவனை மண்ந்து கொண்டால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

ஆனால் வரதட்சணை கேட்காத மணமகணைத் தேடுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தும் அதற்கேற்ற மணமகன் கிடைக்காத போது தான் அது நிர்பந்தமாகும். அவ்வாறு இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே எவனாக இருந்தாலும் சரி என்று தலையை நீட்டினால் அவர்கள் நிர்பந்த்த்துக்கு உள்ளானவர்களாக மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்

19.03.2013. 14:24

மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா

கேள்வி
மணமகனை விட ஒரு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? இதற்கு அனுமதி உண்டா? விளக்கவும்.

இஃஜாஸ் அஹ்மது

பதில்

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/vayathil_moothavalai_manakalama/

http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/vayathil_mootha_pennai_thirumanam/

பதிலளிக்கபட்டுள்ளது.

26.11.2012. 07:32

இல்லறம் கேள்விகளின் தொகுப்பு

இல்லறம் கேள்விகளின் தொகுப்பு

திருமணம்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா

மத்ஹபைப் பின்பற்றும் பெண்களை மணந்து கொள்ளலாமா


திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா

திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?

நபிகள் நாயகம் சிறு வயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்?

மணமுடிக்க உரிய சக்தி எவ்வளவு?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

இணை கற்பிக்கும் பெண்கள்

தாலி கருகமணி அணியலாமா? அதை அணியும் போது என்ன கூற வேண்டும்?

தாயின் சகோதரி மகளை திருமணம் செய்யலாமா?

பால்ய விவாகம் கூடுமா?

15 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சரியா?

வலீமா விருந்து

ஆடம்பர விருந்துக்கு தடை இல்லையாமே

ஏழைக்கு தனியாக விருந்து வைக்கலாமா?

திருமண நாளில் வலீமா விருந்து வைக்கலாமா?

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

பெண் வீட்டார் விருந்து கூடுமா?

திருமணத்திற்கும், வலீமாவிற்கும் அவசியம் என்ன?

பெண் வீட்டு விருந்து கூடுமா?

மஹர் வரதட்சணை

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

வாங்கிய வரதட்சனையை திருப்பிக் கொடுத்தல்

 

எவை எல்லாம் வரதட்சனையாகக் கருதப்படும்?

இத்தா

கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா

தள்ளாத கிழவியின் இத்தா காலம் எவ்வளவு?

தாம்பத்தியம்

குளிப்பு எப்போது கடமையாகும்

குழந்தை உருவாகாமல் தடுக்க ஆணுறை அணியலாமா?

குளிப்பது எப்போது கடமையாகும்?

கருகலைப்பு செய்வது குற்றமா?

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்து இருக்கலாம்?

மனைவியின் விந்தை சுவைப்பது கூடுமா?

குடும்ப கட்டுப்பாடு கூடுமா?
 

பிரச்சணைகள் விவாகரத்து

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் விடலமா?

ஸாபித் பின் கைஸ் அவர்களை பற்றி.....

கணவனின் பணத்தை கணவனுக்கு தெரியாமல் மனைவி எடுக்கலாமா?

கணவனை பிடிக்காத பெண்கள் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டுமா?

குலா என்றால் என்ன? தலாக், குலா இவைகளுக்கிடையில் உள்ள வித்தியாசம் என்ன?


 

இஸ்லாம் கூறும் குடும்பவியல் தொகுப்பு


வீடியோ வடிவில் கேள்விகள்

திருமணச் சட்டங்கள்

பிற மதத்தவர்களின் திருமணங்களில் கலந்து கொள்ளலாமா

பிறமதத்தவரை திருமணம் செய்ய மறுப்பது ஏன்

சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது சரியா

மணமக்களை மண மேடையில் சேர்த்து வைக்கலாமே

மணமேடயில் மாப்பிள்ளை மட்டும் அமர்வது ஏன்

இஸ்லாத்தில் முத்ஆ வாடகை மனைவி உண்டா

முஸ்லிம் ஆண் இந்துப் பெண்ணை மணக்கலாமா

சித்தப்பா மகளை திருமணம் செய்வது சரியா

திருமணத்தில் ஆண்கள் முகம் மறைப்பது ஏன்

முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்ய மறுப்பது ஏன்

இஸ்லாத்தின் திருமணச் சடங்குகள் யாவை 

விவாக ரத்து

பெண்களுக்கு விவாக ரத்து உரிமை தேவையா

ஜீவனாம்சம், முத்தலாக் குறித்து இஸ்லாம் சொல்வது என்ன

திருமணம் - விவாகரத்து

கருக்கலைப்பு செய்யலாமா 

கணவன் மனைவி பிரச்சணைக்கு தீர்வு என்ன 

ஆலிமாக்களைத் தான் திருமணம் செய்ய வேண்டுமா 

கணவன் மனைவி பொறுப்புகள் என்ன 

ஒரே நேரத்தில் மூன்று தலாக் கூடுமா 

தலாக்குக்கு உரிய இத்தா காலம் எவ்வளவு 

தலைப்பிரசவம் தாய் வீட்டில் தான் நடத்தனுமா 

வளைகாப்புக்கு அனுமதி உண்டா 

வரதட்சணை திருமணத்துக்கு சமைத்துக் கொடுக்கலாமா 

வரதட்சணைக்காக கடன் பட்டவருக்கு உதவலாமா 

திருமணத்தில் ஃபாத்திஹா ஓதலாமா 

பெண்கள் பல திருமணங்கள் செய்தால் என்ன 

பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா  

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்

ஆடம்பர திருமணத்தில் கலந்து கொள்ளலாமா 

வரதட்சணைக்கு உதவலாமா 

இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யலாமா 

மனைவி கணவனை அடிக்கலாமா 

தலாக் இத்தால் குலா இத்தா வேறுபாடு 

இத்தாவின் சட்டங்கள் 

வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வது 

விரும்பித் தருவது வரதட்சணையா 

தடை செய்யப்பட்டவரை திருமணம் செய்திருப்பது இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக அமையுமா 

திருமணத்திற்கு தலைவர்களை அழைப்பது 

அழகான பெண்ணைத் தான் மணமுடிப்பேன் என்பது சரியா 

குலம் பார்த்து திருமணம் செய்யலாமா 

வரதட்சணைக்காக உறவினர் திருமணத்தைப் புறக்கணிக்கலாமா 

கணவன் காணாமல் போய்விட்டால் 

விரும்பிக் கொடுக்கும் வரதட்சணையை வாங்கலாமா 

வரதட்சனைக்கு யார் காரணம் 

மணமகன் மணப்பெண்ணைப் பார்க்கலாமா 

உறவினரிடையே திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகுமா 

விபச்சாரம் செய்தவரை திருமணம் செய்யலாமா 

இரண்டாம் திருமணம் செய்தால் முதல் மனைவியை தலாக் கூற வேண்டுமா 

படிச்ச பொண்ணுதான் வேண்டும் என்பது சரியாநிச்சயம் செய்தபின் மாறலாமா

மாமனாரைக் கவனிப்பது மருமகளுக்கு கடமையா 

இத்தா என்றால் என்ன 

விபச்சாரம் செய்தவரை திருமணம் செய்யலாமாமுத்தலாக் கூடுமா

தாலி மெட்டிக்கு அனுமதி உண்டா 

மனைவியின் பெற்றோரைக் கவனிப்பது கடமையா

09.06.2011. 11:23

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மற

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா  

என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன?

தொடர்ந்து படிக்க 16.05.2011. 14:09

நபியின் மாமனார் திருமண விருந்து கொடு

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

எனது உறவினர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடந்தது. உறவினர் மாப்பிள்ளை வீட்டார் தான். ஆனாலும் திருமணத்தின் போது மண்டபத்தில் மதிய உணவு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்டது. இது தவறு என்று அவரிடத்தில் கூறிய போது  "நாங்களாக வற்புறுத்தவில்லை. பெண் வீட்டாரே தானாக முன்வந்து தருகிறார்கள். ஆகவே, இது எப்படி தவறாகவோ அல்லது வரதட்சனை ஆகவோ எடுத்துக் கொள்ள முடியும்?"  என்று கேட்கின்றனர். நாம் 'அப்துர்ரஹ்மான் பின் அவுப்' அவர்களின் ஹதீஸ் மற்றும் 'ஜகாத் வசூலித்தவருக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்ட ஹதீஸ்களைக் கூறிய போது நபிகள் நாகயமும் அன்னை உம்மு ஹபீபா அவர்களும் திருமணம் செய்த போது, உம்மு ஹபீபா அவர்களின் தந்தை நஜ்ஜாசி மன்னர் அவர்கள் தானாக முன்வந்து விருந்து கொடுத்தார்கள். அதை நபிகள் நாயகம் அவர்கள் தடுக்கவில்லை என்று ஒரு ஹதீஸ் இருப்பதாகவும், அதனால் திருமணத்திற்கு மணமகள் வீட்டில் விருந்து கொடுப்பது கூடும் என்றும் தங்களின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஹதீஸ் இடம் பெற்ற நூல் மற்றும் எண்களைக் கேட்ட போது- 'தான் இதை ஒரு புத்தகத்தில் படித்ததாகவும் ஹதீஸ் நூல் மற்றும் எண் நினைவில் இல்லை' என்று கூறி விட்டார்கள்

தொடர்ந்து படிக்க 24.04.2011. 22:54

மனைவிக்காக தாயைத் திட்டலாமா

மனைவிக்காக தாயைத் திட்டலாமா

எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி அவரது மனைவியிடம் சந்தோக்ஷமாக இருப்பதற்கு அவரது தாயார் எப்போதும் இடையூராக இருக்கிறாராம் அதனால் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டுமானால் அவரது தாயாரைத் திட்டினால் தான் அவர் பேசாமல் இருக்கிறாராம். இஸ்லாத்தின் பார்வையில் அவ்வாறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அவரது தாயாரிடம் எவ்வாறாக நடந்து கொள்வது விளக்கம் தேவை

தொடர்ந்து படிக்க 19.04.2011. 06:54

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பத

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா 

கணவன் இடத்தில் நல்ல விதமாக நடக்கும் எந்த குறையும் சொல்ல முடியாத ஒரு மனைவியை கணவனின் தாய் தலாக் செய்துவிடு என்று சொன்னால் உடனே தலாக் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் தேவை

தொடர்ந்து படிக்க 18.04.2011. 03:30

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம் மாதவிடாய் நின்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு காலம்? கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு நாட்கள்

தொடர்ந்து படிக்க 12.04.2011. 13:59

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா

பதில்

தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

தொடர்ந்து படிக்க 10.04.2011. 09:17

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாம

ஏழைகளுக்கு தனியாக விருந்து வைக்கலாமா

ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்படும் விருந்துகள் தான் மிக கெட்ட விருந்து என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ஏழைகளுக்குத் தனியாக விருந்து வைக்கலாமா?

தொடர்ந்து படிக்க 17.03.2011. 06:36

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?

தொடர்ந்து படிக்க 26.02.2011. 09:11

நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திரு

 நபிகள் நாயகம் சிறுவயது ஆயிஷாவை திருமணம் செய்தது ஏன்  முஹம்மது நபி அவர்கள் ஏன் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்து கொண்டார்கள்Lள்ள்?? ஹபீபுல்லாஹ்

தொடர்ந்து படிக்க 26.02.2011. 04:19

மணமுடிக்க உரிய சக்தி எது?

மணமுடிக்க உரிய சக்தி எது? 1.இஸ்லாதில் திருமணம் அவசியம் செய்ய வேண்டுமா?

ஏனெனில் திருமணம் செய்தால்தான் முழு முஸ்லிமாக ஆக முடியும் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து படிக்க 05.04.2010. 23:22

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா? தயவு செய்து பதில் தரவும் 

தொடர்ந்து படிக்க 05.04.2010. 16:16

கருக்கலைப்பு செய்வது குற்றமா

 கருக்கலைப்பு செய்வது குற்றமா

முஹம்மது இன்ஃபாஸ்

திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது.

தொடர்ந்து படிக்க 10.03.2010. 17:06

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top