பாலியல் பலாத்காரத்திற்கு அரைகுறை ஆட
திரிணாமுல் எம்.எல்.ஏ
டெல்லி, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக ஆர்வலர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பரசாத் ரெயில் நிலையத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவியின் வீட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்ஜீத் சென்று ஆறுதல் கூறினார். இது அவரது தொகுதியாகும். பின்னர் அவர் கூறியதாவது:-
பரசாத் ரெயில் நிலையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அதே சமயத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. இளம் பெண்களும், மாணவிகளும் நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடை அணிகின்றனர். இதுதான் இளைஞர்களை தவறு செய்யத் தூண்டுகிறது.
பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம். மினி ஸ்கர்ட், அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும்.
இவ்வறு அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிரஞ்ஜீத் ஒரு சினிமா நடிகர். பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வார்கள். அது போல சினிமா நடிகர், நடிகைகளின் ஆபாச ஆட்டங்களும், ஆபாச ஆடைகளும்தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்பது மற்ற அனைவரையும் விட சதையை விற்று பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளுக்குத்தான் நன்கு தெரியும் என்பதால்தான் இவர் இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் போலும்.
ஆனால் இவ்வளவுக்குப் பிறகும் பெண்ணுரிமை பேசக்கூடிய அமைப்புகள் இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல பளிச்சென்று தெரியக்கூடிய ஒரு விஷயம் கூட பெண்ணுரிமை பேசக்கூடிய மூளை வெந்தவர்களுக்கு விளங்கவில்லை என்றால், யாரெல்லாம் இந்த ஆபாசங்களுக்கு கொடி தூக்குகின்றார்களோ அவர்களது வீட்டுப்பெண்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்பட்டவுடன் தான் திருந்துவார்கள் போலும்.
Published on: August 2, 2012, 11:07 PM Views: 563

