பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது: -கர்நாடக சட்டசபை குழு பரிந்துரை!

பெண்களுக்கு நைட் ஷிப்ட் கூடாது:
-கர்நாடக சட்டசபை குழு பரிந்துரை!

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி வழங்கக் கூடாது  என்று கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென சட்டசபைக் குழுவின் தலைவர் என்.ஏ. ஹாரீஸ் தலைமையில் 21 உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களின் பணி நிலை குறித்து கடந்த நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஹாரீஸ் தலைமையிலான மாநில சட்டசபை கூட்டுக் குழு அறிக்கையை தாக்கல் செய்தது. அப்போது தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பெண்களை இரவுப் பணிக்கு அமர்த்தக் கூடாது; அதற்குப் பதில் ஆண்களை இரவுப் பணிகளில் அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.

பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்குழுவினர் இத்தகைய பரிந்துரையை வைத்தனர்.

மத்திய அரசு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் சட்டம் 1961-இன்படி, இரவுப் பணிகளில் பெண்களை அனுமதிக்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்நிலையில் மாநில அரசு இரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபட அனுமதி அளித்து அதற்கான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு நீக்கியது. தற்போது இந்தக் குழுவின் அறிக்கையை ஏற்பதா இல்லையா என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் அவர்கள் சம்பாத்தியம் செய்வதைக் காட்டிலும் முக்கியமானது என்பதை அறிவுஜீவிகள் உணர மறுக்கின்றார்கள்.

பெண்கள் இரவுப் பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவது கிடையாது; அதிகமான பெண்கள் தங்கள் கற்பை இழப்பதற்கு இரவுப்பணி காரணமாக அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

டெல்லியிலும் போலீஸ் போட்ட கட்டுப்பாடு:
கர்நாடக சட்ட சபைக்குழு பெண்கள் இரவு வேலைக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்று தற்போது பரிந்துரை செய்துள்ளது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னதாக டெல்லி போலீஸும் இது போன்றதொரு உத்தரவை பிறப்பித்தது.
டெல்லியிலுள்ள குர்கான் மாவட்டத்தில் அலுவலகம் மற்றும் கடைகளில்

இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைக்கு வைக்க்க் கூடாது என்று குர்கான் மாநகர போலீஸ் துணை கமிஷனர் இதற்கு முன்னதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குர்கானில் பெண்களைக் கடத்தி பலாத்காரம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களை மோசமாகக் கிண்டல் செய்வதும், பஸ் நிறுத்தம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பெண்களை மானபங்கம் செய்ய முயல்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் நகரின் ஒட்டுமொத்த பெருமையும், கலாசாரமும் சீரழிவதுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போலீசார் எடுக்கும்  எல்லா நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு  மிகவும் அவசியம். எனவே  போலீசார் எடுக்கும் எல்லா  நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.

வணிக வளாகங்கள், பெரிய மால்கள், அலுவலகங்கள் மற்றும் ‘பப்’ போன்றவற்றில் இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலையில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறி அவர்களை வேலைக்கு அமர்த்துவதாக இருந்தால் அதற்கு அவர்களுக்கு போடப்பட்டுள்ள கண்டிசன்களாவன:

 • இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், அவர்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
 •  
 • இரவில் அவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவது உட்பட அனைத்து வகையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.
 •  
 • அவர்களைக் காரில் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விடுவது பற்றிய தினசரி அறிக்கை ஒன்றையும் தயாரித்து அதை  வாரம் ஒருமுறை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
 •  
 • எந்த வாகனத்தில் வீட்டிற்குச் செல்கிறார்? அந்த வாகனத்தின் டிரைவர் யார்? எப்போது அலுவலகத்தில் இருந்து புறப்படுகிறார்? எப்போது வீட்டில் இறக்கி விடப்படுகிறார்? போன்ற அனைத்து வகையான விவரங்களையும் அறிக்கையில் தெரிவித்திருக்க வேண்டும்.
 •  
 • அத்துடன் அவர் வீட்டிற்குப் புறப்படும்போது வாகனத்தில் வந்து அவர் ஏறுவதையும் கண்காணிப்பு காமிரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.
 •  
 • இந்தக் காமிராவில் பதிவாகும் காட்சிகளை சுமார் 1 மாதமாவது பாதுகாப்பாக நிறுவனத்தினர் வைத்திருக்க வேண்டும்.
 •  
 • அதேபோல பப் மற்றும் மால்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் புகைப்படம் மற்றும் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும்.
 •  
 • இந்தப் புகைப்பட மற்றும் முகவரிப் பட்டியலை 15 நாட்களுக்கு ஒருமுறை அந்தப் பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் காட்டி அவரது கையொப்பத்தைப் பெற வேண்டும்.
 •  
 • மால் மற்றும் பப்’களில்  கண்காணிப்பு காமிராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும்.
 •  
 • இரவு நேரங்களில் செயல்படும் மால், பப் மற்றும் நிறுவனங்களில் அடிக்கடி போலீசார் சோதனையிட்டு அங்கு போதையில் இருக்கும் டிரைவர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டக்கூடாது.
 •  
 • இந்த உத்தரவுகள் எல்லாம் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
 •  
 • இரவில் வெகு நேரம் திறந்திருக்கும் மால்கள் மற்றும் பப் கள் பற்றி போலீசாருக்கு பொதுமக்கள் ரகசிய தகவல் கொடுக்கலாம்.
 •  
 • போன், எஸ் எம் எஸ் மற்றும் இ மெயில் மூலம் இந்தப் புகார்களை யார் வேண்டுமானாலும் போலீசுக்கு கொடுக்கலாம். இவ்வாறு துணை கமிஷனர் மீனா கூறியுள்ளார்.

இப்படி இவ்வளவு  கண்டிஷன்களைப் போட்டு அப்படி பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமா?

ஆணும் பெண்ணும் தனித்திருப்பதால் தான் இந்த அவலங்கள்; எனவே ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் வகையிலான தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்ற ஒரேயொரு உத்தரவின் மூலம் இவையனைத்தையும் சரி செய்து விடலாம்.

இரவுப் பணியில் இருக்கும் பெண் டிஎஸ்பியை கான்ஸ்டபிள் கற்பழித்தார் என்றும், கான்ஸ்டபிளோடு பெண் உயர் அதிகாரி போலீஸ் ஸ்டேஷனிலேயே சரச சல்லாபம் என்றும் செய்திகள் வருவதை அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை போராளிகளும் அறியவில்லையா?

ஆண்களும் பெண்களும் இணைந்து வேலை செய்யக்கூடிய இடங்களில் தான் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் அளவுக்கதிகமாக நடந்து வருகின்றன. இதை விளங்கிக் கொண்டதால் தான், இஸ்லாம் ஆணும் பெண்ணும் ஒரு இடத்தில் தனித்திருக்கக் கூடாது. அவ்வாறு தனித்திருப்பார்களேயானால் அந்த இடத்தில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று சொல்லி, ஆணையும் பெண்ணையும் தள்ளி வைக்கின்றது.

இப்படி ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக பிரித்து வைக்காமல், ஒன்றாக சேர்த்து வைப்பதால் ஏற்படும் விபரீதங்களை தற்போதுதான் ஒவ்வொருவரும் சிறிது சிறிதாக உணரத் தொடங்கியுள்ளனர்.

பகல் நேரத்தில் ஆணும் பெண்ணும் தனித்து வேலை செய்தாலே படுமோசமான நிகழ்வுகளெல்லாம் நடக்கும் இவ்வேளையில் இரவில் அவர்களை ஒன்றாக பணியமர்த்தினால் என்னவாகும் என்று சிந்திக்க வேண்டாமா?

நடிகர் சிவக்குமார் கல்லூரி இளவயது பெண்கள் மத்தியில் ஆற்றிய ஒரு உரை சமீப காலமாக வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ் புக் ஆகியவற்றில் வைரலாக பரவியது.

ஐடி கம்பெனிகளில் இரவு பணி புரிவோரின் நிலை என்ன என்பதை அவர் ஆதாரத்துடன் பேசியிருந்தார்.

அந்த ஐடி கம்பெனிகளில் உள்ள கழிவறைகளில் ஆணுறை பாக்கெட்டுகள் அளவுக்கதிகமான முறையில் வைக்கப்பட்டுள்ளதையும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை கழிவறையில் வீசியதால் செப்டிக் டேங்க் அடைத்து பல கிலோ கணக்கில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை செப்டிக் டேங்கிலிருந்து அந்த நிறுவனம் அள்ளிய செய்தியும் ஆச்சர்யப்பட்ட வேண்டிய விஷயம் மட்டுமல்ல; அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமும் கூட.

அப்படியானால் இதுபோன்ற இரவு நேர நிறுவனங்களில் ஆணும் பெண்ணையும் சேர்த்து அமர்த்தும் போது அவைகள் காமக்களியாட்டம் ஆடும் இடமாகத்தான் மாறுகின்றனவேயல்லாமல்,  சம்பாத்தியத்தை பெற்றுத்தரும் மையங்களாக அந்த இடங்கள் இருக்காது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டதிட்டங்களை இவர்கள் பின்பற்றினால் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள்
ஆதாரம்: (திர்மிதீ 1091) 

April 5, 2017, 5:07 PM

கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்!

கத்னா என்னும் சுன்னத்  செய்யச் சொல்லும் தினமலர்!

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

ஆண்குழந்தைகளுக்கு கத்னா என்னும் சுன்னத் செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது.

சுன்னத் என்னும் கத்னா செய்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே இடலாம்; அந்த அளவிற்கு ஆண்களுக்கான ஒரு சிறந்த மருத்துவ முறையாகவும், ஆண்களது இல்லற வாழ்வு சிறப்பாக அமைய சுன்னத் எனும் கத்னா வழிவகை செய்கின்றது என்பதையும் அறிவியல் உலகம் ஆதாரங்களுடன் தற்போது படியலிட்டு வருகின்றது.

சுன்னத் செய்வதால் சுன்னத் செய்த ஆண்களின் மனைவிமார்களுக்கும் அது நன்மை பயக்கும் என்பதை தற்போதைய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுன்னத் செய்த ஆண்களை கணவனாகப் பெற்ற மனைவிமார்களுக்கு - அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற ஆய்வும் சுன்னத் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த வழிமுறையைத்தான் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டத்தில் போடப்படும் ஆண் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கினார்.

அமெரிக்காவின் பிரபல குழந்தை  மருத்துவர்களும் ஆண் குழந்தைகளுக்கு சுன்னத்செய்வதை பரிந்துரை செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் சுன்னத் செய்வதன் கூடுதல் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஆண்கள் சுன்னத் செய்வதால் பாலியல் நோய்கள் பரவுவது தடுக்கப்படுகின்றது என்ற ஆய்வும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில்தான் ஜிம்பாப்வே நாட்டில் சுன்னத் செய்வதை சட்டமாக்கி முதலில் அனைத்து பாராளுமன்ற ஆண் எம்பிக்களும் அதற்கு முன்மாதிரியாக சுன்னத் செய்து அந்தச் சட்டத்தை அமுல் படுத்தினர்.

இவ்வாறாக முக்கியத்துவம் பெற்ற இந்த நபி வழியை செய்வதால் ஆண் குழந்தைகளுக்கு பல நன்மைகள் நிகழ்வதாக தற்போது தினமலர் நாளிதழும் ஒப்புக் கொண்டுள்ளது.

தினமலர் நாளிதழில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி செகண்ட் ஃபிரண்ட் பேஜ் பக்கத்தில் குழந்தைகள் நல நிபுணர் சீனிவாசன் என்பவரின் பேட்டியை பிரசுரித்திருந்தது.

 

அந்த பேட்டி இதோ:

'சுன்னத்' செய்வதில் பிரச்னை இல்லை!

'சுன்னத்' ஆபரேஷன் செய்யலாமா எனக் கூறும், குழந்தை நல நிபுணர் டாக்டர் சீனிவாசன்: சிறுவர்களுக்கு, 'சுன்னத்' ஆபரேஷன் செய்ய பயப்பட தேவையில்லை. அமெரிக்காவில் குழந்தை பிறந்த, ஐந்தாம் நாளே, இந்த ஆபரேஷனை செய்கின்றனர்.

ஆனால், பெற்றோர் விரும்பினால் மட்டும் தான் செய்வர்.

நம் நாட்டை பொறுத்த வரைக்கும், முஸ்லிம்கள் இந்த மருத்துவ நிகழ்வை ஒரு சடங்காகவே, காலங்காலமாக செய்து வருகின்றனர்.

பச்சிளம் ஆண் குழந்தைகளுக்கு, ஆணுறுப்பின் முன் தோல், டைட்டாகத் தான் இருக்கும். அது காலப்போக்கில் இயல்பாகிவிடும். சில பிள்ளைகளுக்கு மட்டும் சிறுநீர் போகும் போது, ஆணுறுப்பு வீங்கும்; சொட்டு சொட்டாக சிறுநீர் போகும். இந்த பிரச்னையை, 'பிமோசிஸ்' என, மருத்துவர்கள் சொல்வர். இதற்கு, 'சுன்னத்' செய்வது தான் தீர்வு.

இந்த ஆபரேஷன் செய்வதற்கு முன், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டும். சிங்கிள் கிட்னி, டூப்ளிகேட் கட்டி மாதிரியான பிரச்னைகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளத் தான் இந்த சோதனை. ரத்த பரிசோதனையில், ரத்தம் உறையும் நேரம், கசியம் நேரம் ஆகியவை குறித்து, பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு மணி நேரத்தில், இந்த ஆபரேஷனை முடித்து விடலாம். லோக்கல் அல்லது ஜெனரல் அனஸ்தீஷியா கொடுத்து செய்வர். புண் ஆற, 10 நாட்கள் ஆகும். தையல் தானாக விழுந்துவிடும்.

மற்றபடி அந்த சமயத்தில் குழந்தைகளால் பேன்ட், டிரவுசர்ஸ் போட முடியாது. 100 சதவீதம் ரிஸ்க் இல்லாத ஆபரேஷன் இது.

மேற்கண்டவாறு அந்த செய்தியில் சுன்னத் செய்வதன் முக்கியத்துவத்தை அந்த மருத்துவ நிபுணர் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்கள் ஒப்புக்கொண்டால் ஐந்தாம் நாளே சுன்னத் செய்துவிட்டுவிடுவார்கள் என்று அவர் கூறியிருப்பதன் முக்கியத்துவத்தை நாமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்

March 7, 2017, 3:30 PM

மீன் வயிற்றில் உருடன் இருந்தவர்

மீன் வயிற்றில் மூன்று நாட்கள் உயிருடன் இருந்தவர்

யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் உயிருடன் இருந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இது பற்றி பீஜே தனது தமிழாக்கத்தில் விளக்கியுள்ளார்.

பார்க்க

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/508_meen_vayitril_manithan_uyirudan_irukka_mudiyuma/#.VwRwhpx95kh

பெரிய திமிங்கலத்தின் வயிற்றில் மனிதனால் உயிருடன் இருக்க முடியும் என்பதை இலங்கையில் இருந்து வெளியாகும் வீயரகேசரி நாளிதல் ஏப்ரல் 6-2016 அன்று பின் வரும் செய்தியின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) மோசமான வானிலை காரணமாக மாயமானார். தொடர்ந்து உறவினர்கள் செய்த புகாரினால்  கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும்   அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.

ஆனால்  மூன்று நாட்களுக்கு பின் ஆச்சரியப்படும் விதமாக  மிகப்பெரிய ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர். 72 மணி நேரம் தான் திமிங்கிலத்தின்  வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறினார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரையும்  உயிருடன் இருப்பது எனக்கே  ஆச்சரியமான உள்ளது. திமிங்கிலத்தின் வயிற்றில் நல்ல குளிரிலும், கடும்  இருட்டிலும் நான்  இருந்தேன். எனது நீர்புகா கை கடிகாரத்தின்  (waterproof watch )ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம்  தாங்க முடியவில்லை அது  இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால் தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம் தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உயிருடன் வந்துள்ளேன் என்று கூறினார்.

April 6, 2016, 7:50 AM

குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் அவசியம்:- நீதிபதி பரிந்துரை!

குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்:

-    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை!

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

இஸ்லாமிய மார்க்கம் காட்டுமிராண்டிகளின் மார்க்கம்; அதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; பிற்போக்கானவை; மனித தன்மையற்ற சட்டங்கள் என்றெல்லாம் யார் யார் பேசினார்களோ அவர்களது வாய்களில் இருந்தே, “குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்” என்ற இஸ்லாத்தின் நிலைப்பாட்டை வல்ல இறைவன் வரவைத்துள்ளான். இஸ்லாம் கூறும் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அது குறித்த  விபரங்கள் இதோ:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

காப்பகம்:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன். இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு ‘செக்ஸ்’ தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.

போலீசில் புகார்:

பின்னர், அவனை டெல்லியிலேயே விட்டு விட்டு, லண்டன் சென்று விட்டார். அந்த மாணவன் பலரது உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளான்.

அவனிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, பாலியல் கொடுமை நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி போலீசில், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செயதுள்ளனர். ஜான்சனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர்,இந்த பிடிவாரண்டு அடிப்படையில் ஜான்சன் தேடப்படும் நபர் என்று இன்டர்போல் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதிகாரம் இல்லை:

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தேடப்படும் நபர் என்று சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஜான்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’தண்டனையையும் வழங்கவேண்டும்.

இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.

ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.2012–ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2013–ம் ஆண்டு 58 ஆயிரத்து 224வழக்குகளாகவும், 2014–ம் ஆண்டு 89 ஆயிரத்து 423 வழக்குகளாகவும் அதிகரித்துள்ளது.

இந்த கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு, கொடூரமான தண்டனை வழங்கினால்தான், குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கண்டிப்பாக கூச்சல் போடுவார்கள் என்பது நன்றாக எனக்கு தெரியும்.

ஆனால், அப்படிப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

அறிவிப்புக்கு தடை:

மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை ஜான்சன் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, ஜான்சன் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, ஜான்சன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

காட்டுமிராண்டி தண்டனை:

கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால்,காட்டுமிராண்டித்தமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள்.

ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே,இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்.

பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே,மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஆண்மை அகற்றுதல்:

இந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதாவது குற்றங்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து விட்டு மனிதாபிமானம் பேசக்கூடியவர்கள்; பாதிக்கப்பட்டவரது நிலையில் இருந்து பாருங்கள்; அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ள கருத்துக்களை போலி மனிதநேயம் பேசுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் அவரது தீர்ப்பில், “பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும்.” என்று கூறியுள்ள வரிகள் இன்னும் நாம் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டவை.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் கொஞ்ச நெஞ்சமல்ல; ஆண்கள் தான் பெண்களுக்கு பொறுப்பாளர்கள்; அவர்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் என்று இஸ்லாம் கூறும் தீர்ப்பை அப்படியே மேலும் வழிமொழிந்துள்ளார்.

என்னதான் இஸ்லாத்தை எதிர்த்து எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்தாலும் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் தான் மனித வாழ்வில் நடக்கும் அத்துனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பதை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்....

October 29, 2015, 10:44 PM

நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி!

ஆய்வகங்களில் பெண்களால் தொல்லை:
- உண்மையை உடைத்துச் சொன்ன விஞ்ஞானி!

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!)


ஆய்வுக் கூடங்களில் உடன் பணியாற்றும் பெண்கள் பல்வேறு விதமாக ஆண்களுக்கு தொல்லை அளிப்பதாக விஞ்ஞானி டிம் ஹன்ட் கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட். இவருக்கு வயத 72. தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி டிம் ஹன்ட் இவ்வாறு கூறினார்.


மேலும் அவர் கருத்தரங்கில் பேசும்போது, "விஞ்ஞானிகள் பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களில் பணியாற்ற வேண்டும். பெண்களுடன் ஆய்வு கூடங்களில் பணியாற்றும் சக ஆண் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
 
உதாரணத்துக்கு, அவர்கள் 3 விதங்களில் தொல்லை அளிப்பார்கள்.
முதலில், நாம் அவர்களோடு காதல் வசப்பட்டுவிடுவோம். இரண்டாவது, அவர்களுக்கு நம் மீது காதல் வரும்.
மூன்றாவது, அவர்களை நாம் விமர்சித்தால், உடனடியாக அழுதுவிடுவார்கள். இதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றவே முடியாது.
 
அழுவதை பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. அவர்களது எண்ணம் தவறு" என்றார்.
 
டிம் ஹன்ட்டின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
 
அதில் அவர் கூறும்போது, "நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். எங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளை கூறினேன். பிரச்சினைகளில் நான் கூறியதும் ஒன்று. நான் கூறியது முற்றிலும் உண்மை. உண்மையில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. ஆய்வகத்தில் பணியாற்றும் பெண்களிடம் காதலில் விழுந்து உள்ளேன். அவர்களுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்.
 
ஆய்வகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். உணர்வை கட்டுப்படுத்த முடியாது. இதனால் விஞ்ஞானிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
 
எனது தவறு என்னவென்றால், பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்தில் நான் சிறிது யோசித்து பேசியிருக்க வேண்டும். உணர்ச்சி மிகுதியால் வாழ்க்கை கடினமாகி விடும். நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியுள்ளார்.
 
இந்த விஞ்ஞானி தான் கூறிய கருத்துக்கு மனிதர்களுக்குப் பயந்து மன்னிப்புக் கோரிய போதும், அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் நிலையில் ஒரு பென்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பானேயானால் மூன்றாவதாக அங்கே ஷைத்தான் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள்
ஆதாரம்: (திர்மிதீ 1091)

 
விஞ்ஞானக்கூடங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? ஆண்களும் பெண்களும் தனித்திருந்தால் அங்கே விஞ்ஞான ஆய்வு நடக்காது. வேறு மாதிரியான ஆய்வுகள் தான் நடக்கும் என்பதற்கு விஞ்ஞானியின் அனுபவமே ஆதாரம்.


மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் இன்னும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகÜல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
 
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) 
நூல்: புகாரி 5232

 
அன்னியப்பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆணும் பெண்ணும் கலந்து வேலை செய்யும் போது ஆண்களிடம் பெண்களும், பெண்களிட்த்தில் ஆண்களும் தனித்திருக்கும் நிலை ஏற்பட்டால் ஒழுக்க்க் கேடுகள் அதிகமாகும் என்பதை  நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். யார் யாரோடெல்லாம் தனித்திருக்கலாம்; யார் யாரோடெல்லாம் தனித்திருக்க்க் கூடாது என்று இஸ்லாம் ஒரு தனிப்பட்டியலையே போட்டுள்ளது.
 
மேற்கண்ட இஸ்லாத்தின் வழிகாட்டுதல் நூற்றுக்கு நூறு சதவீதம் மிக மிகச் சரியானதுதான் என்பதை விஞ்ஞானி   டிம் ஹன்ட் அவர்கள் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் தெளிவுபடுத்தியுள்ளார். இதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.
மனிதன் சந்திக்கும் அனைத்துப் பிரச்சைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பது விஞ்ஞானி டிம் ஹன்ட்டின் வார்த்தைகளால் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.
அல்குர் ஆன் 18:54

June 18, 2015, 3:54 PM

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 அலர்ஜியைத் தடுக்கும் மீன்

மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்!

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!

தொடர்ந்து படிக்க June 26, 2013, 12:37 AM

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்!!

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப்பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படிக்க June 23, 2013, 12:36 AM

எறும்புக்கு அறிவு உண்டா?

எறும்புக்கு அறிவு உண்டா?  

சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.

தொடர்ந்து படிக்க May 30, 2013, 5:11 PM

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான ��

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.

தொடர்ந்து படிக்க January 12, 2013, 2:13 PM

உண்மையை உணர மறுக்கும் உலகம்

உண்மையை உணர மறுக்கும் உலகம் மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)

தொடர்ந்து படிக்க January 5, 2013, 12:59 PM

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து! உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க December 25, 2012, 7:37 PM

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா! விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

தொடர்ந்து படிக்க December 25, 2012, 7:33 PM

தாடியின் நன்மைகள்

தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து படிக்க December 19, 2012, 9:02 AM

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப

தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!    இஸ்லாத்தை  உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள் தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசுக்கள்  கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்ந்து படிக்க December 17, 2012, 3:55 PM

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்

டாக்டர் த முஹம்மது கிஸார்

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து படிக்க December 17, 2012, 8:45 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top