ஏகத்துவம் 2011 ஜனவரி

தலையங்கம் 

எஸ்.யூ. கானின் இந்து மத அழைப்பு

உலகத்தில் ஏகத்துவக் கருத்தை இறைத் தூதர்கள் மக்களிடம் எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு இறை மறுப்பாளர்கள் அளித்த பதில், "எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள்; இல்லையேல் நாங்கள் உங்களை ஊரை விட்டு வெளியேற்றுவோம்'' என்பது தான்.

தொடர்ந்து படிக்க January 4, 2011, 8:32 PM

பிப்வரரி மாத ஏகத்துவம் - 2011

மார்க்கத்தை மறந்ததால் ஆட்சியை இழக்கும் அரபுத் தலைவர்கள் 

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து படிக்க February 10, 2011, 4:11 PM

மார்ச் 2011 ஏகதுவம்

மதி மயங்கும் மாணவர்கள்

மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படிக்க March 5, 2011, 5:02 PM

ஏப்ரல் 2011

தலையங்கம் உள் வாங்கும் பூமி உயிர் வாங்கும் சுனாமி ஜப்பானிய மொழியில் பள்ன் (சு) என்றால் துறைமுகம்! சஹம்ண் (நாமி) என்றால் அலை! தீவுகள் அடங்கிய ஜப்பான், அடிக்கடி சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாவதால் அம்மொழியின் பெயரே அனைத்து மொழிகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. அதற்கேற்றாற்போல் மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் கடற்கரை நகரமான சென்டாய் நகரிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் நில நடுக்கம் ஏற்படுகின்றது. நில நடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டர் ஆகும். கி.பி. 1900 ஆண்டுக்குப் பிறகு உலகம் சந்தித்த ஐந்தாவது மிகப் பெரிய நில நடுக்கமாகும்.

தொடர்ந்து படிக்க April 6, 2011, 8:15 PM

மே 2011

 தலையங்கம்

சாகாதவனே சத்தியக் கடவுள்

கடவுள் என்றால் யார்? இறை வேதமான திருக்குர்ஆன் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.

"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112வது அத்தியாயம்)

தொடர்ந்து படிக்க May 5, 2011, 2:42 PM

ஏகத்துவம் ஜூன் 2011

தலையங்கம்

சோதனையின்றி சொர்க்கமில்லை

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்குத் தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து படிக்க June 9, 2011, 11:39 PM

ஏகத்துவம் ஜூலை 2011

தலையங்கம்

ஈமான் பதிவாகும் எஃகு உள்ளங்கள்

அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான்.

இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து ஒரு சிலர் விடுபடுவதும், விலகுவதும் உள்ளே இருக்கின்ற கொள்கைச் சகோதரர்களில் சிலரது உள்ளத்தில் ஒருவித விரக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. "இவர்களே இப்படிப் போய் விட்டார்களே! நமது நிலை என்ன?' என்று எண்ணத் தலைப்பட்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அருமருந்தாக, அற்புத அரணாக இந்த வசனம் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)

அல்லாஹ்வின் எதிரிகளை, அவனது தூதரின் எதிரிகளைத் தமது எதிரிகளாகப் பாவிப்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசுகளையும் பலன்களையும் பார்ப்போம்.

தொடர்ந்து படிக்க July 3, 2011, 11:13 AM

ஏகத்துவம்_2011_ஆகஸ்ட்

தலையங்கம்

இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தி

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

தொடர்ந்து படிக்க August 6, 2011, 3:35 AM

செப்டம்பர் ஏகத்துவம் 2011

தலையங்கம்

அல்லலூயாவின் அர்த்தம் என்ன?

இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி.

தொடர்ந்து படிக்க September 6, 2011, 5:30 PM

அக்டோபர் ஏகத்துவம் 2011

பரமக்குடி துப்பாக்கிச் சூடு காரணம் தீண்டாமையே!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பச்சேரி (பள்ளர் சேரி என்பது தான் பச்சேரி என்று அழைக்கப்படுகின்றது) என்ற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனி குமார் (வயது 16) கொலை செய்யப்படுகின்றான்.

தொடர்ந்து படிக்க October 4, 2011, 12:08 PM

ஏகத்துவம் நவம்பர் 2011

ஏகத்துவம் நவம்பர் 2011

தலையங்கம்

இறைவனுக்குத் தேவை இரத்தமல்ல! ஏகத்துவமே!

மந்தை மந்தையாக ஆடு, மாடுகள் சந்தைகளில் சரி விலைக்கு விற்பனையாகின்றன. ஆடு, மாடு பண்ணை வைத்திருப்போர் இந்த ஹஜ் காலங்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி விடுகின்றனர். கடந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்ற மாடு இந்த ஆண்டு 9000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. 5000 ரூபாய்க்கு விற்ற ஆடு இந்த ஆண்டு 7000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

தொடர்ந்து படிக்க October 31, 2011, 5:27 PM

ஏகத்துவம் டிசம்பர் 2011

ஏகத்துவம் டிசம்பர் 2011 தலையங்கம்

கொள்கைவாதிகளைக் குறி வைக்கும் ஷைத்தான்

ஒருவர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் அவரை நோக்கி பொதுமக்களின் புலனாய்வுப் பார்வை பொழுதனைத்தும் பின்தொடரத் தொடங்கி விடும். நம்முடைய கடந்த கால வாழ்க்கைப் பக்கங்களை நாம் கூட மறந்து விடுவோம். ஆனால் ஏகத்துவத்தின் எதிரிகள் அதை நமக்கு முன்னால் புரட்டிப் போடுவர்.

தொடர்ந்து படிக்க December 5, 2011, 9:10 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top