ஜனவரி 2009 ஏகத்துவம்

அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும்

அறிவியல் வளர்ந்து விட்டது; அன்றைய காலத்தில் இது போன்ற வளர்ச்சி இல்லை; இன்று மக்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரடி ஒளிபரப்பாக அப்படியே தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்; ஹாஜிகள் அரஃபாவில் என்றைக்கு ஒன்று கூடுகின்றார்களோ அன்றைய நாளில் தானே நாம் நோன்பு நோற்க வேண்டும் என்று ஜாக்கினரும், பிறை விஷயத்தில் மட்டும் அவர்களுடன் ஒத்தக் கருத்தில் இருந்தவர்களும் வினாக்களைத் தொடுத்தனர். இவ்வாறு அவர்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கக் காரணம், நாம் இங்கு காணும் பிறையின் அடிப்படையில் துல்ஹஜ் 9ஆம் நாளில் நோன்பு நோற்கிறோம் என்பதால் தான்.

தொடர்ந்து படிக்க January 28, 2010, 6:09 AM

பிப்ரவரி 2009 ஏகத்துவம்

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

ஜனவரி 4, 2009 அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநிலச் செயற்குழுவில், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரை தலைமைக் கழகப் பேச்சாளராகப் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்ததை மாநில செயற்குழு ஒருமனதாக ஒப்புக் கொண்டது. அவர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து படிக்க January 28, 2010, 6:59 AM

மார்ச் 2009 ஏகத்துவம்

புடம் போடும் புறக்கணிப்புகள்

 

மீலாது விழா புறக்கணிப்பு!

மவ்லிது விழா புறக்கணிப்பு!

திருமண விழா புறக்கணிப்பு!

நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு!

பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு!

கத்னா விழா புறக்கணிப்பு!

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு!

இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு!

இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு!

புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் அதையும் புறக்கணிக்கும் நிர்ப்பந்தம்.


தொடர்ந்து படிக்க February 2, 2010, 5:35 AM

ஏப்ரல் 2009 ஏகத்துவம்

தேர்தலா? மாறுதலா?

ஒரு நோயாளி, மருத்துவரிடம் காய்ச்சல் என்று வருகின்றார். உடனே மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறார். அதே நோயாளி கண் பார்வை மங்குகின்றது என்று வருகின்றார். மருத்துவர் கண் நோய்க்கு மருந்து கொடுக்கின்றார். காதில் சீழ் என்று அடுத்து வருகின்றார். அப்போது காதுக்காக மருந்து கொடுக்கின்றார். கையில் ஆறாத புண், காலில் காயம் என்று அதே நோயாளி மீண்டும் மீண்டும் வருகின்றார். மருத்துவரும் அந்தந்த நோய்க்கு மருந்து கொடுத்து அனுப்புகின்றார். அவர் மருந்து கொடுத்த எந்த நோயும் தீரவில்லை, புண்களும் ஆறவில்லை என்றால் அந்த மருத்துவரை யாராவது நம்புவார்களா?

தொடர்ந்து படிக்க February 2, 2010, 5:55 AM

மே 2009 ஏகத்துவம்

நாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்

தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.


தொடர்ந்து படிக்க February 3, 2010, 3:50 AM

ஜுன் 2009 ஏகத்துவம்

மானமிழந்த ம.ம.க.

1992, டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு இந்திய முஸ்லிம்கள் அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். தமிழக முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல!

தொடர்ந்து படிக்க February 3, 2010, 5:05 AM

ஜுலை 2009 ஏகத்துவம்

 

 

தேர்தல் முடிந்தது தேனிலவும் முடிந்தது

 

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்து, அதற்கான ஆணையம் அமைத்ததற்காக, 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அணியை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் ஆதரித்தது. அந்த அணியின் வெற்றிக்காகப் பாடுபட்டது. எனினும் அந்த அணி தோல்வியடைந்து ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் ஆனது.

தொடர்ந்து படிக்க February 4, 2010, 5:43 AM

ஆகஸ்ட் 2009 ஏகத்துவம்

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.


தொடர்ந்து படிக்க February 4, 2010, 6:02 AM

செப்டம்பர் 2009 ஏகத்துவம்

பைபிள் இறை வேதமா?

அருள்மிகு ரமளான் மாதத்தில் தான் புனிதமிகு அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே இம்மாத ஏகத்துவம், திருக்குர்ஆன் மலராக மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றது.


தொடர்ந்து படிக்க February 5, 2010, 5:29 AM

அக்டோபர் 2009 ஏகத்துவம்

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா? - ஓர் ஆய்வு

ஒவ்வொரு ரமளான் மாதத்தின் போதும் ஏகத்துவம் மாத இதழ் ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையப்படுத்தி, திருக்குர்ஆன் சிறப்பிதழாக வெளிவரும். இவ்வாண்டு ரமளான் மாத இதழ், திருக்குர்ஆன் - பைபிள் ஒப்பீட்டு இதழாக மலர்ந்தது. இந்த இதழிலும் அதன் தொடர்ச்சி வெளிவந்து நிறைவு பெறுகின்றது.


தொடர்ந்து படிக்க February 5, 2010, 5:42 AM

நவம்பர் 2009 ஏகத்துவம்

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று உலகுக்கு உணர்த்திய பகுத்தறிவுப் பகலவன்! சிலை வணக்கத்தின் சிம்ம சொப்பனம்!


தொடர்ந்து படிக்க February 6, 2010, 5:28 AM

டிசம்பர் 2009 ஏகத்துவம்

பொங்கி வழிகின்ற பெருநாள் திடல்கள்

தவ்ஹீத் ஜமாஅத் எங்கும், எதிலும் குர்ஆன் ஹதீஸ் என்ற பார்வையைச் செலுத்துகின்ற தனித்தன்மை மிக்க ஓர் இயக்கம். அதன் அடிப்படையில் தான் தனது கிளைகள் தோறும் பெருநாள் தொழுகைகளைத் திடல்களில் தொழுவதற்கு ஏற்பாடு செய்கின்றது.

தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல்களில் நடத்தப்பட்ட பெருநாள் தொழுகையில் மக்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டனர். பத்திரிகைகளில் பெருநாள் தொழுகை குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களில் தவ்ஹீத் ஜமாஅத் பெரும் இடத்தை ஆக்கிரமித்திருந்தது இதற்கு ஒரு சான்று!


தொடர்ந்து படிக்க February 6, 2010, 6:49 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top