ஏப்ரல் 2016 தீன்குலப் பெண்மணி

தலையங்கம் - அரசியல்  ஓர் சாக்கடை

தொட முடியாத அருவெருப்பும்

அணுக முடியா துர்நாற்றமும்

தேள்களும் 

பல்லிகளும் 

விஷபூச்சிகளும்

எலிகளும்

பெருச்சாளிகளும்

நிறைந்த அரசியல் சாக்கடை.

இதை சுத்தம் செய்யப் போகிறோம் என்று போனவர்கள் அதிலேயே குடியிருக்கக் கற்றுக் கொண்டார்கள்.

நீதி, நேர்மை, நாணயம், சுயமரியாதை அனைத்தையும் இழந்து பணத்தையும், பதவியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பதவி என்பது தோளில் போடும் துண்டு, மானம் என்பது இடுப்பில் கட்டும் துண்டு என்பார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு மானம் என்பது தோளில் போடும் துண்டைப் போன்றது. உதறிவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் பதவி என்பது இடுப்பில் கட்டும் துண்டைப் போன்று ஒரு போதும் இழந்துவிடத் துணிய மாட்டார்கள்.

எவ்வளவு கேவலம் வந்தாலும் சரி, பதவியும், பணமும் வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.

கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். நேற்று காரி உமிந்தவர்களுடன் இன்று காரில் இணைந்து போவார்கள். கேட்டால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தரப் பகைவனும் கிடையாது என்று அருவருக்கத்தக்க பழமொழியைச் சொல்வார்கள்.

இது பொதுவான அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும். சமுதாயக் கடமை செய்பவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் மானம் மிக்கவர்கள், மரியாதை உள்ளவர்கள், சமுதாயத்திற்காக எதையும் இழப்பார்களே தவிர, பதவிக்காக சோரம் போக மாட்டார்கள் என்று முஸ்லிம் சமுதாயம் நம்பிக் கொண்டு வந்ததை தற்போதைய அரசியல் நிலவரம், இவர்கள் அரசியலில் கொட்டை போட்டவர்களைத் தூக்கி முழுங்கி விடுவார்கள் என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

முதலில் தி.மு.க. பின்னர் அ.தி.மு.க. பின்னர் தி.மு.க. பின்னர் அ.தி.முக. பின்னர் தி.மு.க. என்று நேரத்திற்கு ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து தாங்களும் கைதேர்ந்த அரசியல்வாதிகள் என்று நிரூபித்து விட்டார்கள்.

அரசியலில் கரைகண்டவர்கள் கூட இவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்புவரை ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் எங்கள் லட்சியம், அதற்குத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம் என்று பேசிவிட்டு, அந்தக் கட்சியின் கதவுகள் திறக்காததால் இமாலய ஊழல் செய்தவர்கள் இவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தால் தமிழகம் தாங்காது என்று விமர்சித்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார்கள்.

அரசியலுக்குப் போனார்கள், சமுதாயத்திற்காக எதையாவது சாதிக்க முடிந்ததா? ஜால்ரா அடிக்க மட்டும்தான் முடிந்தது. ஜால்ரா அடித்தால் சாதிக்கலாம் என்று எண்ணியவர்களுக்கு சாவுமணிதான் அடித்தார்களே தவிர, சமுதாயத்திற்கு எதையும் செய்யவில்லை.

இவற்றை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? "அரசியலுக்குப் போகாதீர்கள் என்று சொன்ன நல்லவர்களின் அறிவுரையைக் கேட்காமல் சாதித்துக் கிழிப்போம் என்று போய் மண்ணைக் கவ்விக் கொண்டு வந்துவிட்டோம். இனி அரசியலுக்குப் போக மாட்டோம்" என்று சொல்லியிருந்தால், சமுதாய மக்கள் ஏற்றிருப்பார்கள்.

ஆனால் கொள்கையை விட சீட்டு முக்கியம், பதவி முக்கியம் என்று பேசினால் இவர்களை விட மோசமானவர்கள் யார் இருக்க முடியும்?

அரசியல் என்று யார் போனாலும் அவர்கள் அந்த சாக்கடையில் மூழ்கிப் போவார்கள் என்பதற்கு இன்றைய அரசியல் நிகழ்வு தெளிவான சான்று. எனவே அரசியலில் போனால் நல்லது என்று எண்ணியவர்களுக்கு தெளிவான எச்சரிக்கை. அது போன்ற சமுதாய இயக்கங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

 

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?

ஏகத்துவக் கொள்கை தமிழகம் உட்பட பல நாடுகளில் உள்ளது. இதை உள்ளபடி தெளிவாகச் சொன்ன ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த ஜமாஅத்தின் தன்னலமற்ற மார்க்கச் சேவையினால் ஏராளமான மக்கள் இந்தக் கொள்கையின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அசத்தியக் கொள்கையில் இருக்கும் அமைப்புகள் ஆட்டம் காண, இந்த நிலையை தொடரவிடக் கூடாது என்று ஏராளமான அவதூறுகளை அள்ளி நம் மீது வீசுகின்றன.

அவற்றில் ஒன்றுதான் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டம் என்று நம்மைக் குறிப்பிடுவது.

பரலேவிகள், சலபுகள், ஜாக் போன்ற இயக்கங்கள் இத்தகைய அவதூறுகளைச் சொல்லும் சில அமைப்புகளாகும்.

தமிழகத்தில் இணைவைப்புக் கொள்கை நிறைந்து, மார்க்கம் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இன்று எண்ணற்ற மக்கள் திருக்குர்ஆன், நபிமொழிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்தப் பணி தொய்வின்றி நடந்து வருகின்றது.

மறந்திருந்த, மறைக்கப்பட்ட ஏராளமான நபிவழியை உயிர்ப்பித்திருக்கின்றோம்.

ஆனால் நபிமொழிகளைப் பகிரங்கமாக புறக்கணிக்கும் கூட்டமும், நபிமொழிகளைக் கேலி செய்யும் கூட்டமும், நபிமொழிகளை அலட்சியப்படுத்தும் கூட்டமும் நம் மீது அவதூறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

ஹதீஸ்களை நாம் மறுத்தோமா?

நாம்  நபிமொழிகளை மறுக்கிறோம் என்று மக்களிடம் பேசிவரும் கும்பலைப் பார்த்துக் கேட்கிறோம். நாங்கள் ஹதீஸ்கள் என்று நம்பிய செய்திகளை மறுக்கிறோமா? அல்லது அது நபிமொழி அல்ல என்று கூறி மறுக்கிறோமா?

ஒருவன் நபிமொழி என்று தெரிந்து கொண்டு, அதை நம்பிக் கொண்டும் அதன்படி செயல்பட மாட்டேன், ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று கூறலாம்.

ஆனால் ஏராளமான ஆதாரப்பூர்மான நபிமொழிகளை நடைமுறைப் படுத்திவிட்டு, நபிமொழி என்று சொல்லப்படும் சில செய்திகள் நபிமொழியல்ல, இது நபிகளார் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று சொல்லி அதை மறுத்தால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று எப்படிச் சொல்ல முடியும்?

சில நபிமொழிகள் என்ற பட்டியலில் உள்ள செய்தி நபிகளார் சொன்ன செய்தி அல்ல. அதற்கு இன்னென்ன காரணங்கள் என்று விளக்குகிறோம்.

நபிமொழி என்று எதைச் சொல்ல வேண்டும்?

நபிகளார் ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று கூறினால் அதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

ஒன்று அறிவிப்பாளர் தொடர்பானவை.

இரண்டு சொல்லப்படும் செய்தி தொடர்பானவை.

அதன் அறிவிப்பாளர்களும் அதன் அறிவிப்பாளர் வரிசையும், நம்பகமானவையாக இருக்க வேண்டும்.

அறிவிக்கப்படும் செய்தி குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுக்கும், திருக்குர்ஆனுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மேலும் எவ்விதத்திலும் அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அந்த செய்தி அமைந்திருக்கக் கூடாது.

இந்த இரண்டு முக்கியமான காரணங்களில் ஒன்று சரியில்லையானால் அது நபிமொழிப் பட்டியலில் இடம்பெறாது.

இந்த நிபந்தனைகளை விதித்தது யார்?

நபிமொழிகள் அறிவிப்பாளர்கள் நம்பகமானவராக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்ற விதியை நாம்தான் முதலில் கொண்டு வந்தோம் என்று சிலர் கூறுவது தவறாகும். இது ஹதீஸ் கலை நூல்களில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.

திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது

இந்த விதி நபித்தோழர்கள் காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த விதியை வைத்தே சில நபிமொழிகளை நிராகரித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அவர்கள் கூறியதாவது:

மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகள் இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கு அருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ரு (ரலி) அவர்களிடம் நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' எனக் கூறியுள்ளார்கள் என்றார்.

 உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்து வா!' என உமர் (ரலி) என்னை அனுப்பினார்கள்.

நாம் அங்கு சென்று பார்த்த போது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவரை என்னிடம் அழைத்து வா' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் மூமினின்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்' எனக் கூறினேன்.

பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்கள் குற்றுயிராய்க் கிடந்தபோது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களல்லவா?'  என்றார்கள். உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறை நம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை.

மாறாக குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளருக்கு (காஃபிர்) வேதனை மிகுதியாக்கப்படும்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' எனும் (6:164ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே என்றும் கூறினார்கள்.

இதைக் கூறி முடித்த பொழுது சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவனும் அவனே' (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய இச்சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை' என்று இப்னு அபீமுலைக்கா  அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 1286, 1287 & 1288)

குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான் என்று நபிகளார் சொன்னதாக உமர் (ரலி) சொன்ன செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கும் போது, இது நபிகளாரின் சொல் அல்ல என்பதற்கு ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் என்ற குர்ஆன் வசனமே போதுமானது என்று கூறியுள்ளார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறியது நபிகளாரின் கூற்று அல்ல என்பதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு அது மாற்றமாக உள்ளது என்பதையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

இதே விதியை ஹதீஸ் கலையின் வல்லுநர்களின் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்நுக்தா என்ற நூலில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும்போது பின் வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்.

النكت على كتاب ابن الصلاح ـ محقق - (2 / 846)

ومنها: أن يكون مناقضا لنص الكتاب

இறைவேதத்திற்கு முரணாக அமைந்திருக்கும்.

நூல் அந்நுக்தா, பாகம் 2, பக்கம் 846

இமாம் நவவீ அவர்களின் அத்தக்ரீப் வத்தைஸீர் லி மஃரிபத்தில் பஷீருன் நதீர் ஃபீ உசூலில் ஹதீஸ் (சுருக்கமாக தக்ரீப் என்று கூறுவர்) என்ற ஹதீஸ் கலை நூலுக்கு விரிவுரை நூலான இமாம் சுயூத்தி அவர்களின் தத்ரீபுர்ராவீ என்ற நூலிலும் இக்கருத்து சொல்லப்பட்டுள்ளது.

تدريب الراوي - (1 / 276)

أو يكون منافيا لدلالة الكتاب القطعية

உறுதியான வேதத்தின் ஆதாரங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்.

நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 276

(இமாம் நவவீ அவர்கள் இறப்பு ஹிஜ்ரீ 676, சுயூத்தி பிறப்பு 849)

இமாம் பைஹகீ அவர்களின் கருத்து

الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع - (2 / 250)

812- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ الدُّورِيُّ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ ، مَوْلَى أُمِّ سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي ، فَقَالَ : خَلَقَ اللَّهُ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ ، وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ ، وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الإِثْنَيْنِ ، وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاثَاءِ ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ ، وَبَثَّ فِيهَا مِنَ الدَّوَابِّ يَوْمَ الْخَمِيسِ ، وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ آخِرَ الْخَلْقِ ، فِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு, " அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக் குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்'' என்று கூறினார்கள்.

(நூல் அஸ்மா வஸ்ஸிஃபாத், பாகம்: 2, பக்கம்: 250)

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.

இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.

முஸ்லிம் உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி ஏற்க முடியாது என்பதற்கு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று குறிப்பிடவில்லை. மாறாக விரிவுரையாளர்களின் கருத்துக்கும் வரலாற்று ஆய்வாளரின் கருத்துக்கும் முரணாக உள்ளது என்கிறார்கள். விரிவுரையாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தால் ஒரு ஹதீஸை நிராகரிக்கலாம் என்று பைஹகி கூறுவது போல் நாம் கூறவில்லை. குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் தான் நிராகரிக்கப்படும் எனக் கூறுகிறோம்.

(இமாம் பைஹகீ அவர்கள் ஹிஜ்ரி 384 ல் பிறந்தவர்கள்)

முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

النكت على مقدمة ابن الصلاح - (2 / 269)

وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به

இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ் கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்குக் காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறுநாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

நூல் : அந்நுக்தா, பாகம்: 2, பக்கம்: 269

இதைப் போன்று புகாரியின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியை திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று இஸ்மாயீலீ அவர்கள் மறுத்துள்ளதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3350)

புகாரியில் உள்ள இந்தச் செய்திக்கு விரிவுரை வழங்கும்போது பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்கள் கருத்தை எடுத்துரைக்கிறார்கள்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இது அடிப்படையில் சிக்கல் உள்ளதாகும் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறிவிட்டு இதன் நம்பகத்தன்மையில் குறையுள்ளது என்று சொல்லியுள்ளார்கள்.

பின்னர் அவர் இந்தச் செய்தியை பதிவு செய்து விட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும்போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கேட்கிறார்கள். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாத மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தொடர்பான இந்தச் செய்தி சரியானது அல்ல என்று குறிப்பிடும் இஸ்மாயீலீ மற்றும் பல அறிஞர்கள் இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர் இருக்கிறார் என்று கூறாமல் திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கூறியே இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள்.

இதைப் போன்று இமாம் மாலிக் அவர்களும் திருக்குர்ஆனுக்கு முரண் என்றால் அதை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் இருந்துள்ளார்கள்.

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (1854)

இந்தச் செய்தியின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு மாலிக் இமாம் அவர்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணியின் ஹதீஸின் வெளிப்படையான கருத்து. திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக உள்ளது என்று மாலிக் இமாம் அவர்கள் கூறி, திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள் என்று குர்துபீ அவர்கள் கூறினார்கள்.

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3 :97)  என்ற வசனம் சக்தியில்லாதவர்களுக்குக் கடமையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் புகாரியின் ஹதீஸ் செய்ய வேண்டுமென கூறுகிறது.

இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும், இந்தச் செய்தி புகாரியில் இருந்தாலும் திருக்குர்ஆன் கருத்துக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் இமாம் மாலிக் அவர்கள்.

(இமாம் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93-ல் பிறந்து 179 ல் இறந்தார்கள்)

அன்னை ஆயிஷா (ரலி), இமாம் மாலிக், இஸ்மாயீலீ, பைஹகீ போன்ற அறிஞர்களையும் ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்வார்களா?

நம்பகமான அறிவிப்பாளர்கள் தவறிழைப்பார்களா?

இறைவனைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தவறிழைப்பவர்கள் என்று நம்புவதுதான் இறைநம்பிக்கை. அந்த அடிப்படையில் நபித்தோழர்கள் உட்பட அனைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

உயிருள்ளவர்கள் அழுவதால் மய்யித்திற்கு வேதனை செய்யப்படுகிறது என்ற உமர் (ரலி) அவர்களின் கருத்தை மறுத்த பின்னர் பின்வருமாறு கூறுகிறார்கள்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 43)

لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ قَالَتْ إِنَّكُمْ لَتُحَدِّثُونِّى عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلاَ مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ.

உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது "நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 1693)

நம்பகத் தன்மையில் முதலிடம் இருக்கும் நபித்தோழர்களுக்கே தவறு வரும் என்றால் புகாரி இமாமுக்கோ அல்லது அவர்கள் நூலில் உள்ள அறிவிப்பாளர்களுக்கோ தவறு வராதா?

நம்பகமான அறிவிப்பாளர்களிடமும் தவறு வர வாய்ப்புள்ளது என்பதை மிகத் தெளிவாக ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான தத்ரீபுர் ராவீ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

تدريب الراوي - (1 / 75)

( وإذا قيل ) هذا حديث ( صحيح فهذا معناه ) أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد ( لا أنه مقطوع به ) في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة

ஒரு செய்தியை இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்லப்பட்டால் அதன் பொருள், அறிவிப்பாளர் வரிசை இணைந்து நாம் கூறிய நிபந்தனைகள் அதில் உள்ளன என்பதாகும். எனவே வெளிப்படையான அறிவிப்பாளர் வரிசையைக் கவனத்தில் கொண்டு நம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது முழுக்க முழுக்க சரியான செய்தி என்பது பொருள் அல்ல. ஏனெனில் நம்பகமானவருக்கும் தவறும் மறதியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்.

(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம்: 1, பக்கம்: 75)

நம்பகமான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்று தெளிவாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.

الموضوعات لابن الجوزي - (1 / 106)

واعلم أنه قد يجئ في كتابنا هذا من الاحاديث ما لا يشك في وضعه، غير أنه لا يتعين لنا الواضع من الرواة، وقد يتفق رجال الحديث كلهم ثقاة والحديث موضوع أو مقلوب أو مدلس،

அறிந்து கொள்:  இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லாத செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும். ஆனால் அறிவிப்பாளரில் இட்டுக்கட்டியவர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் சிலவேளை எதார்த்தமாக அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக அமைந்து விடுவர். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாக அல்லது புரட்டப்பட்டதாக அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டதாக இருக்கும்.

நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106

அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தாலும் பல செய்திகள் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம். யார் இட்டுக்கட்டியவர் என்று கண்டுபிடிக்க முடியாது என்று இந்தத் துறையில் நிபுணரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் விளக்கம் மிகத் தெளிவானது.

அறிவு ஏற்கவில்லை என்றால் நிராகரிக்க வேண்டுமா?

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் இறைவன் வழியாக வருபவைதான். அந்தச் செய்தி முற்றிலும் உண்மையானதாகவே இருக்கும். பொய்யான செய்தி வராது.

ஒரு செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தால் அதைப் படிக்கும்போது நபிகளார் பொய் சொல்லி விட்டார்கள் என்ற மிகப்பெரிய அவதூறு சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டி வரும். இதனால்தான் ஹதீஸ்கலை வல்லுநர்கள் அறிவுக்குப் பொருந்தாத செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.

நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை இனம் காட்டியவர்களில் முதன்மையானவரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

الموضوعات لابن الجوزي - (1 / 106)

فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.

நீர் பார்க்கும் ஒவ்வொரு ஹதீஸும் அறிவுக்கு முரணாக அமைந்திருந்தால் அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாக அமைந்திருந்தால், விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.எனவே அந்தச் செய்தி தகுதியானதா (என்று ஆய்வு செய்து) சிரமப்படாதே. (நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106)

இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ஹிஜ்ரி 510 ல் பிறந்தவர்கள். அவர்கள் காலத்திலேயே இந்தக் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்தக் கருத்தை பல ஹதீஸ் கலை நூல்களிலும் எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் இதே கருத்தை வேறு வார்த்தைகளில் எழுதியுள்ளார்கள்.

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளும் முறைபற்றி குறிப்பிடும்போது

تدريب الراوي - (1 / 276)

عن الخطيب عن أبي بكر بن الطيب أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة

அறிவுக்குப் பொருந்தாமல் இருப்பதும், ஏற்றுக் கொள்ளும் வகைளில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருப்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கண்டறிவதற்கான சான்றுகளில் ஒன்றாகும். ஐம்புலன்களும், நேரடி காட்சிகளும் எதை மறுக்குமோ அதுவும் இட்டுக்கட்டப்பட்டதில் சேரும்.

(தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் (276)

அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக, அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருந்தால் அந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படை விதி நாம் உருவாக்கியது கிடையாது. ஹதீஸ்கலை மேதைகள் உருவாக்கியதுதான் என்பதை மறுக்க முடியாது.

 

பார்த்தவுடன் தெரியும் பொய்ச் செய்திகள் அரபியை ஏசுபவன் இணை வைப்பாளனா?

சல்மான், நான்காம் ஆண்டு மாணவர், இஸ்லாமியக் கல்லூரி

شعب الإيمان - (3 : 161)

أَخْبَرَنَا أَبُو سَهْلٍ مُحَمَّدُ بْنُ نَصْرَوَيْهِ الْمَرْوَزِيُّ، حدثنا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ الطَّغَامِيُّ، حدثنا أَبُو شِهَابٍ مَعْمَرُ بْنُ مُحَمَّدٍ الصُّوفِيُّ، حدثنا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حدثنا مُطَرِّفُ بْنُ مَعْقِلٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ سَبَّ الْعَرَبَ فَأُولَئِكَ هم الْمُشْرِكُونَ ” ” تَفَرَّدَ بِهِ مُطَرِّفٌ هَذَا، وَهُوَ مُنْكَرٌ بِهَذَا الْإِسْنَادِ ”

யார் அரபுகளைத் திட்டுகிறாரோ அவர்கள் இணை வைத்தவர்கள் ஆவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்தச் செய்தி شعب الإيمان;  என்ற நூலில் 3ஆம் பாகம் 161ஆம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பார்த்தவுடனே இது பொய்யான செய்தி என்பதை நாம் அறிய முடியும்.

இந்தச் செய்தி அரபியர்களை உயர்ந்தவர்களாகவும், மற்றவர்களை மட்டமாகவும் சித்தரிக்கிறது. எந்தளவிற்கென்றால், இறைவனுக்கு இணை வைத்தவரும் அரபியர்களை திட்டுபவர்களும் சமம் என்று சொல்லும் அளவிற்கு இந்தச் செய்தி அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒரு போதும் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்மால் கூற முடியும்.

மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே. அவர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை என்ற அடிப்படைக் கருத்தை மறுக்கும் விதமாக இது உள்ளது.

இன வெறியை எதிர்க்கும் இஸ்லாம்:

இஸ்லாம் மார்க்கம் தனிச் சிறப்பு பெற்றிருப்பதற்குக் காரணமே மக்கள் அனைவரும் சமம். நிறத்தாலோ, குலத்தாலோ, பாரம்பரியத்தாலோ, மொழியாலோ எவரும் சிறந்தவர் அல்ல என்று அல்லாஹவின் தூதர் அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தினார்கள்.

مسند أحمد بن حنبل - (5 : 411)

حدثنا عبد الله حدثني أبي ثنا إسماعيل ثنا سعيد الجريري عن أبي نضرة حدثني من سمع : خطبة رسول الله صلى الله عليه و سلم في وسط أيام التشريق فقال يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد إلا لا فضل لعربي على أعجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே உங்களுடைய இறைவன் ஒருவனே. உங்கள் தந்தை ஒருவரே எந்த அரபிக்கும் அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. வெள்ளையனை விட கருப்பனுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. கருப்பனை விட வெள்ளையனுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. என்றார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், பாகம்: 5, பக்கம்: 411

மேலும் இறைவன் தன்னுடைய திருமறையில் இனத்தால் உயாந்தவர். சிறந்தவர் அல்ல. மாறாக இறையச்சத்தால் உயர்ந்தோரே உங்களில் சிறந்தவர் என்று கூறுகிறான்.

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன் நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

இஸ்லாம் உருவத்தையோ, மொழியையோ பார்க்காமல். இறையச்சத்தை மட்டும்தான் பார்க்கிறது. இதன் காரணமாகத்தான் அடிமை குலத்திலிருந்த பிலால் (ரலி)யை பள்ளிவாசலுக்கு மக்களை அழைக்கும் அழைப்பாளராக நிறுத்தி அழகு பார்த்தது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் கருத்துப்படி அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்காமலேயே இது இட்டுக்கட்டப்பட்டது என்று கூறிவிடலாம்.

الموضوعات لابن الجوزي - (1 / 106)

فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.

நீர் பார்க்கும் ஒவ்வொரு செய்தியும் அறிவுக்கு முரணாகவோ, அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாகவோ அமைந்திருந்தால் விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று. எனவே அதன் நம்பகத் தன்மையை (ஆய்வு செய்ய) சிரமத்தை எடுத்துக் கொள்ளாதே.

நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106

என்றாலும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் வரிசையிலும் கோளாறு இருப்பதைக் காணமுடிகிறது. இந்த அறிவிப்பில் இடம் பெறக்கூடிய முதர்ரிஃப் பின் மஃகில் என்பவர் இவரைப் பற்றி ஹதீஸ்கலையில் மறுக்கப்பட்டவர் என்றும் இட்டுகட்டக் கூடியவர் என்றும் இமாம் உகைலீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரும் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இந்தச் செய்தியை இவர் மட்டும் தான் தனித்து அறிவிக்கிறார்.

ஆதாரம் : லுஅஃபா பாகம் 4 பக்கம் 217, லிஸானுல் மீஸான் பாகம் 8 பக்கம் 83, மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 157

 

தொழுகையைத் திருந்தத் தொழுவீர்

சபீர் அலி. எம்.ஐ.எஸ்.சி

இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களும், தூய எண்ணத்துடன் செயல் ரீதியாக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளும் உள்ளன.

இவ்வாறு செயல் வடிவில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும்.

தொழுகை என்பது இறைவனுக்காக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு நாளைக்கு குறித்த நேரத்தில் குறிப்பிட்ட முறையில் ஐவேளை செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

தொழுகையைத் தவறவிடாமல் சரியான முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இறைவனிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.

“தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”.

அல்குர்ஆன்(4:162).

மேலும், தொழுகையைப் பேணாமல் தவறவிட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன்(74: 40 - 44).

தொழுகையாளிகளுக்கு கூலிகளும், தொழாதவர்களுக்கு தண்டனைகளும் இருப்பதைப் போன்றே தொழுதும் அலட்சியத்தையும், சோம்பலையும் தவிர்க்காதவர்களுக்கு கடும் கண்டனத்தையும் திருக்குர்ஆன் பதிவு செய்கிறது.

“தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”.

அல்குர்ஆன் (107: 4, 5).

“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”.

அல்குர்ஆன் (4: 142).

இன்றைக்கு மக்கள் தங்களின் அலட்சியத்தால் தொழுகையில் செய்யும் தவறுகளைத்தான் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

1. நிதானமாக வாருங்கள்.

தொழுகைக்குத் தாமதமாக வரும் மக்கள் இமாம் நிலையில் இருக்கும் போது நிதானத்துடன் நடந்து வருகிறார்கள்.

அதே வேளையில் இமாம் ருகூஃவிற்குச் சென்று விட்டால், தொழும் இடமே அதிரும் அளவிற்கு தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக நிதானம் இழந்து வேகமாக ஓடி வருவதைப் பார்க்கின்றோம்.

அதிலும் இரு மாடி கட்டிட பள்ளிவாசல்களாக இருந்தால் மேல் கட்டிடத்தில் ருகூஃவில் இணைய ஓடி வருபவர்களின் சலசலப்பு கீழ் கட்டிடத்தில் நின்று தொழக்கூடியவர்களைத் திசைதிருப்பும் விதமாக அமைகிறது.

இந்த இடத்தில் இவர்கள் தொழுகை தவறிவிடும் என்கின்ற ஆர்வத்தில் ஓடி வருகின்றார்கள் என்று சொல்வதை விட தங்களையும் அறியாமல் பின்வரும் நபிமொழியை அலட்சியம் செய்கின்றனர் என்பதே சரியானது.

(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடித்ததும், "உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)'' என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் - அபூ கதாதா(ரலி)

நூல் - புகாரி 635.

இவ்வாறு ருகூஃவில் இணைவதற்காக வேகம் எடுக்கும் சிலர், முதல் வரிசையைப் பூர்த்தி செய்யாமலே அடுத்த ஒரு வரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இதுவும் தவறான காரியமாகும்.

2. கிடைத்ததில் இணையுங்கள்.

ருகூஃவில் இணைய வேண்டும் என்று வேகம் எடுக்கும் மக்கள் இணைவதற்கு முன்பே ருகூஃவிலிருந்து இமாம் எழுந்துவிட்டால் அவர்களின் வேகம் எங்கு செல்கின்றது என்று தெரியவில்லை.

ஆம், இமாம் ஸஜ்தா செய்து எழுந்து, மற்றொரு ஸஜ்தா செய்து எழுந்து நிலைக்கு வரும் வரை ஸஃப்பில் தொழுகையில் இணையாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.

அதிலும் இரண்டாம் ரக்அத்தாக இருந்து இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து விட்டால் அத்தஹிய்யாத் முடித்து தக்பீர் கட்டுகின்றவரை தொழுகையில் இணைய மறுக்கின்றனர்.

இது தவறாகும். நாம் தொழுகையின் ஸஃப்பிற்கு வந்தவுடன் எது நமக்கு கிடைக்கிறதோ அதில் இணைந்து விட வேண்டும்.

அது ஒரு ரக்அத்தாகக் கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் கிடைத்ததில் இணைந்து விட வேண்டும்.

இதற்கு மேலே நாம் சொன்ன ஹதீஸிலேயே ஆதாரம் இருக்கிறது.

“(இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

3. இரு கைகளையும் சரியாக உயர்த்துங்கள்

தொழுகையில் குறிப்பிட்ட இடங்களில் கைகைளை தோல் புஜங்களுக்கு நேராகவோ, அல்லது காதுகளின் நுணி பகுதிக்கு நேராகவோ உயர்த்த வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும்போதும்) இவ்வாறு செய்யமாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).

அறிவிப்பாளர் - அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

நூல் - புகாரி 735.

“நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி (தொழுகையை ஆரம்பித்தாலும்), ருகூஃவு செய்தாலும் தனது இரு கைகளையும் தனது இரு காதின் (கீழ் பகுதி)க்கு நேராக உயர்த்துவார்கள். மேலும், ருகூஃவிலிருந்து தனது தலையை உயர்த்தும்பொழுது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி அவ்வாறே இரு கைகளையும் உயர்த்துவார்கள்”.

அறிவிப்பாளர் - மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி).

நூல் - முஸ்லிம் 589.

தொழுகையில் கைகளை உயர்த்தும்பொழுது ஒன்று தோல் புஜங்களுக்கு நேராக அல்லது காதுகளின் கீழ் பகுதிக்கு நேராக உயர்த்த வேண்டும்.

ஆனால், இன்று அதிகமானவர்கள் அலட்சியமாக நெஞ்சோடு தங்கள் கைகளை உயர்த்தி இறக்கி விடுகிறார்கள்.

கைகளை உயர்த்துவதில் கூட கஞ்சத்தனத்தை மேற்கொள்ளக்கூடிய காட்சியைப் பார்க்கின்றோம்.

அதிலும் சிலர் கைகளை உயர்த்தும்பொழுது கைகளை நீட்டாமல் மூடிக் கொள்கின்றனர்.

“நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தனது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்”.

அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா (ரலி).

நூல் - திர்மிதீ 223.

இதுவும் நமது தொழுகையில் நாம் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.

4. நன்றாகத் திரும்புங்கள்

தொழுகையை இடது புறமும், வலது புறமும் ஸலாம் சொல்லி நிறைவு செய்ய வேண்டும்.

அவ்வாறு ஸலாம் கொடுக்கும்போது நமது கழுத்தை நன்றாகத் திருப்ப வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு அவரகள் தமது இடபுறமும் வலதுபுறமும் (திரும்பி) ஸலாம் கொடுத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் - ஸஅது (ரலி).

நூல் - 1021.

ஆனால் இன்றைக்கு சிலர் ஸலாம் கொடுக்கும்போது தங்களது கழுத்தை நன்றாகத் திருப்புவதற்குக் கூட யோசிக்கின்றார்கள்.

5. ஸஜ்தாவைச் சரி செய்யுங்கள்

ஸஜ்தா செய்வதற்கென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட முறையை கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் - இப்னு அப்பாஸ் (ரலி).

நூல் - புகாரி 812.

இவ்வாறு ஸஜ்தா செய்கின்றபொழுது முழங்கைகளை தரையில் சிலர் விரித்து வைக்கின்றனர். இதுவும் தவறாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது”.

அறிவிப்பவர் - அனஸ்(ரலி)

நூல் - புகாரி 532(சுருக்கம்)

மேலே நாம் சுட்டிக்காட்டிய தவறுகளும், இது அல்லாமல் உளு செய்யும் போது தலைமுடி களையாமல் மஸஹ் செய்தல், குதிகால்களைக் கழுவுவதில் அலட்சியம் செய்தல், தொழுகை வரிசையில் நெருங்கி நிற்பதில் அலட்சியம், இவை போன்ற இன்னும் ஏராளமான தவறுகளும் பல தடவைகள் மக்களுக்கு சுட்டிக்காட்டபட்டிருந்தாலும், அதில் போதிய கவனம் மக்களுக்கு இன்னும் வரவில்லை என்பதினாலே மீண்டும் மீண்டும் இவைகளை எடுத்துச் சொல்கிறோம்.

இந்தத் தவறுகள் அனைத்துமே விதிவிலக்கல்லாமல் எல்லா ஊர்களிலும் சிலரால் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் பலன் தவறிவிடாமல் இருப்பதற்காக அதிக கவனம் செலுத்துகின்ற நாம், நாளை மறுமையில் நமக்கு அதிக நன்மையை வழங்கக் கூடிய இந்தத் தொழுகையிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

 

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

எது முரண்பாடு?

முரண்பாட்டின் வரையறைகள் என்ன?

தொடர் 3, அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.ஸி.

இதுவரை என்னென்ன காரணங்களால் போலி முரண்பாடுகள் தோன்றுகின்றன என்பதை விரிவாகப் பார்த்தோம்.

முரண்பாடு தொடர்பாக நமது அறிவை இன்னும் விசாலப்படுத்திக் கொள்வதற்காக முரண்பாடு என்று எதைச் சொல்வது? என்பதை சுருக்கமாகக் காண்போம்.

ஏனெனில் இன்றைய காலத்தில் முரண்பாடு பற்றிய போதிய தெளிவு இல்லாமல் அதிகமானோர் உள்ளனர்.

கூடுதலான தகவலைக் கூட முரண்பாடு என்று இத்தகையோர் கருதி விடுகின்றனர்.

எனவே ஒரு விஷயத்தில் முரண்பாடு உள்ளது என்று சொல்வதாக இருந்தால் அதற்கான நிபந்தனைகள் என்ன?

முரண்பாடு என்று குறிப்பிடும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? உள்ளிட்ட விவரங்களை அறிஞர்கள் வகுத்துக் கூறியுள்ளனர்.

அறிஞர்கள் குறிப்பிடும் அத்தகைய நிபந்தனைகளின் விவரத்தைக் காண்போம்.

சொல்லப்பட்ட இடத்தைக் கவனித்தல்

செய்யுங்கள் என்றும் செய்யாதீர்கள் என்றும் இரு கட்டளைகளைக் காண்கிறோம். ஒரு கட்டளை பொதுவானதாக இருக்கிறது. இன்னொரு கட்டளை குறிப்பிட்ட இடத்துக்கானதாக இருக்கிறது என்றால் அந்தப் பொதுவான கட்டளையில் இருந்து இது விதிவிலக்கு என்று கருத முடியும். அப்போது முரண்பாடு இல்லாமல் ஆகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மல ஜலம் கழிக்கும்போது கிப்லா(கஅபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; அதைப் பின்னோக்கவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),

நூல்கள் முஸ்லிம் 439,  புகாரி 144

இந்தச் செய்தி கிப்லாவை முன்னோக்கி, அல்லது பின்னோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்று தடை செய்கிறது.

ஆனால் பின்வரும் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கிப்லாவைப் பின்னோக்கி சிறுநீர் கழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நான் என் தேவையொன்றிற்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸிருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் ரலி,

நூல் : புகாரி 148

கிப்லாவைப் பின்னோக்கி மலஜலம் கழிக்கக் கூடாது என்பதும், நபிகள் நாயகமே கிப்லாவை பின்னோக்கி மலஜலம் கழித்தார்கள் என்பதும் மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடாகத் தெரியும்.

ஆனால் ஒன்று பொதுவானதாகவும் மற்றொன்று குறிப்பிட்ட இடத்திற்கானதாகவும் உள்ளது.

வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மலம் ஜலம் கழிக்கக் கூடாது. இதைத் தான் முதல் செய்தி தடுக்கிறது.

வீட்டில், தடுப்புள்ள இடத்தில் எப்படி வேண்டுமானாலும் மலஜலம் கழித்துக் கொள்ளலாம். மேற்கண்ட தடை இவ்விடத்தில் பொருந்தாது.  நபிகளார் கிப்லாவைப் பின்னோக்கி சிறுநீர் கழித்தது இந்த அடிப்படையில்தான்.

காலத்தைக் கவனித்தல்

செய்யலாம் என்றும் செய்யக் கூடாது என்றும் இரு கட்டளைகளைக் காண்கிறோம். ஒன்று காலத்தால் முந்தியதாக உள்ளது; மற்றொன்று காலத்தால் பிந்தியது என்றும் ஆதாரம் கிடைக்கிறது. இப்போது முரண்பாடில்லாத விளக்கம் நமக்குக் கிடைத்து விடும்.

கூடும் கூடாது என்று ஒரே காலத்தில் சொல்லப்பட்டால்தான் முரண்பாடாகக் கருத இயலும். ஒரு காலத்தில் கூடும் என்றும் பிறிதொரு காலத்தில் கூடாது என்றும் சொல்லப்பட்டால் அதை முரண்பாடாகக் கருத முடியாது.

நோய்வாய்ப்பட்ட குழந்தை, ஐஸ்கிரீம் வாங்கிக் கேட்கும் போது சாப்பிடக் கூடாது என்று  கூறுவோம்.

அதே குழந்தை வளர்ந்து, ஆரோக்கியமாகி விட்ட போது ஐஸ்கிரீம் கேட்டால் வாங்கிக் கொடுப்போம்.

அப்போது ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது என்றீர்கள், இப்போது சாப்பிடலாம் என்கிறீர்கள். முரண்பாடாகப் பேசுகிறீர்களே என்று யாரும் கேட்க மாட்டோம்.

சாப்பிடக் கூடாது என்று சொன்னதும் சாப்பிடலாம் என்றதும் ஒரே காலத்தில் அல்ல.

சாப்பிடக் கூடாது என்று சொன்னது நோய் வாய்ப்பட்ட காலத்திலாகும்.

சாப்பிடலாம் என்று சொன்னது ஆரோக்கியமாக இருந்த போதாகும்.

எனவே முரண்பாடு என்று தீர்ப்பளிக்கும் முன் முரணாகக் கருதப்படும் இரு செய்திகள் காலத்தால் வேறுபட்டதாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4 43

ஆனால் 5:90 வசனத்தில் மதுபானம் அருந்துவதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறி மதுபானங்கள் முற்றாகத் தடுக்கப்பட்டு விட்டன.

மது அருந்தினாலும் தொழுகையின் போது போதை இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும், அறவே மதுபானங்களை அருந்தக் கூடாது என்ற கட்டளையும் நேர்முரணாக இருந்தாலும் இது இரு வேறு காலகட்டங்களில் சொல்லப்பட்டதாகும்.

ஆரம்ப காலத்தில் தொழுகை நேரத்தில் மட்டும் போதையாக இருக்க வேண்டாம் என்று கட்டளை போடப்பட்டது. பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டுவிட்டது. முந்திய சட்டம் மாற்றப்பட்டு விட்டது. இப்படி புரிந்து கொள்ளும் போது முரண்பாடு நீங்கிவிடும்.

தெளிவான முரண்பாடு

அதே போன்று எந்தச் செய்தியை முரண்படுகிறது எனக் கூறுகிறோமோ அது தெளிவான முரண்பாடாக அமைந்திடல் அவசியமாகும்.

ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் தான் அது முரண்பாடாகும்.

அது அல்லாமல் ஒரு விஷயத்தை ஆம் என்றும் இன்னொரு விஷயத்தை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது முரண்பாட்டில் சேராது.

வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் அப்துல் காதர் மட்டன் சாப்பிட்டார்.

இப்போது அவர் சிக்கன் சாப்பிட்டாரா? அல்லது மட்டன் சாப்பிட்டாரா? என்று குழப்பமாவதால் இது முரண்பாடு என்று தீர்ப்பளித்து விடக் கூடாது.

ஏனெனில் இதில் முரண்பாடு இருப்பது போல் மயக்கம் ஏற்பட்டாலும் இதில் முரண்பாடு இல்லை. ஒரு நாளில் ஒரு இடத்தில் சிக்கனும் மட்டனும் சாப்பிடுவது சாத்தியமானதுதான்.

குறித்த நாளில், குறித்த இடத்தில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிட்டார் என்றும் அதே நாளில், அதே இடத்தில் அப்துல் காதர் சிக்கன் சாப்பிடவில்லை என்றும் வந்திருந்தால் தான் தெளிவான முரண்பாடாகக் கருத முடியும்.

அதுவல்லாமல் சிக்கன் சாப்பிட்டார்-  மட்டன் சாப்பிட்டார் என்று வந்திருந்தால் இரண்டையும் சாப்பிட்டிருக்கிறார் என்றே கருத இயலும்.  ஏனெனில் ஒரே விஷயத்தை ஆம் என்றும் இல்லை என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே ஒரே விஷயத்தை ஆம் - இல்லை என்று மறுக்கும் வகையில் இருந்தால் தான் அது தெளிவான முரண்பாடாகக் கருத முடியும்.

நாம் முன்பு குறிப்பிட்ட பல ஹதீஸ்கள் இதற்குரிய உதாரணமாக பொருந்தக் கூடியதே.

ஓரளவு முரண்பாட்டின் வரையறைகளைப் பார்த்து விட்டோம். இனி அடுத்தடுத்து முரண்படும்படியான ஹதீஸ்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஹதீஸ் 1

குர்ஆனில் கல்லெறி தண்டனை உண்டா?

என்னென்ன காரணங்களால் போலியான முரண்பாடுகள் தோன்றுகிறது என்பதை இதுவரை பார்த்தோம்.

ஒரு சிலர் முரண்பாடாகக் கருதும் ஹதீஸ்களையும் அதற்கான விளக்கத்தையும் இனி காண்போம்.

விபச்சாரம் செய்தோருக்கு நூறு கசையடிகள் வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.  (அல்குர்ஆன் 24:2)

அதே வேளை திருமணம் செய்தவர்கள் விபச்சார குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

கல்லெறி தண்டனை தொடர்பாக குர்ஆனில் எதுவும் கூறப்படவில்லை.

கல்லெறி தண்டனை தொடர்பாக நபிகளார் கூறும் பின்வரும் ஹதீஸை சிலர் குர்ஆனுக்கு முரணாக உள்ளதாகக் கருதுகின்றனர்.

இவர்கள் பிரச்சனைக்குரியதாக கருதும் வாசகத்தை பெரிதுபடுத்திருக்கிறோம். நன்கு கவனிக்கவும்.

 (ஒரு முறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, "உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியை சுட்டிக் காட்டி), "என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், "உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன்.

பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், "உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும்தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, "உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள்.

அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப் பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி),

புகாரி  2696

நாம் பெரிதுபடுத்தியிருக்கும் வாசகத்தின் அரபி மூலத்தில் பி கிதாபில்லாஹி என்று உள்ளது.

கிதாப் என்றால் வேதம். பி கிதாபில்லாஹி என்றால் அல்லாஹ்வின் வேதப்படி என்று அர்த்தமாகும்.

விபச்சாரம் குறித்து அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்குமாறு இருவரும் நபிகளாரிடம் முறையிடுகின்றனர்.

நபிகள் நாயகம் அவர்களும் நான் அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்கின்றேன் என்று கூறுகிறார்கள்.

அதன் பிறகு விபச்சார குற்றத்தில் ஈடுபட்ட அவர்களில் திருமணமான பெண்ணுக்கு கல்லெறி தண்டனை என்றும் திருமணமாகாத இளைஞனுக்கு கசையடி என்றும் தீர்ப்பளிக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் வேதப்படி தீர்ப்பளிக்கின்றேன் என்று சொல்லி இரு தண்டனைகளைக் குறிப்பிடுகிறார்கள். அதில் கசையடி பற்றி மட்டுமே குர்ஆனில் உள்ளது.

கல்லெறி தண்டனை பற்றி குர்ஆனில் எதுவும் இல்லை. அப்படியிருக்க இந்தத் தீர்ப்பை அல்லாஹ்வின் வேதப்படியிலான தீர்ப்பு என்று எப்படிச் சொல்லலாம்?

கல்லெறி தண்டனை பற்றி குர்ஆனில் இருக்கிறது எனும் கருத்தை இந்த ஹதீஸ் தோற்றுவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு சட்டம் குர்ஆனில் இல்லை. எனவே இது குர்ஆனுக்கு முரண் என ஒரு சிலர் கருதுகின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் உண்மையில் இதில் எந்த முரண்பாடும் இல்லை.

அல்லாஹ்வின் வேதப்படி என்று இவர்கள் மொழிபெயர்க்கும் இடங்களில் பி கிதாபில்லாஹ் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிதாப் என்பதற்கு வேதம், குர்ஆன் எனும் அர்த்தம் இருப்பதைப் போலவே சட்டம் எனும் அர்த்தமும் உண்டு.

இதற்கு பின்வரும் வசனத்தை உதாரணமாகக் காணலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம்.

(அல்குர்ஆன் 4 23,24)

இந்த வசனத்தில் யார்? யார்? திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்கள் என்பதை இறைவன் பட்டியலிடுகிறான். இறுதியில் கிதாபல்லாஹ் - (இது) அல்லாஹ்வின் சட்டம் என்று கூறுகிறான்.

உங்கள் மீது இறைவன் விதித்த சட்டப்படி இவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்கள் என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

இங்கே கிதாப் என்பது சட்டம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுவதை அறியலாம்.

அதே போல குதிப எனும் சொல்லும் கிதாப் எனும் சொல்லின் வகையைச் சார்ந்ததுதான்.

குதிப என்பது கடமை, சட்டம் எனும் பொருளில் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்க குதிப எனும் சொல்லே குர்ஆனில் வந்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [البقرة : 183]

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2 183

பழி வாங்குதல் கடமை என்பதை குறிக்கவும் இதே குதிப எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ [البقرة : 178]

நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2 178

வஸிய்யத் கடமை என்பதை அல்லாஹ் சொல்லும் போதும் குதிப எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளான்.

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ [البقرة : 180]

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2 180

மேலும் பார்க்க 2 216, 2 246, 4 127

இப்படி நிறைய சான்றுகளைக் குறிப்பிட இயலும்.

எனவே கிதாப் என்ற சொல்லிற்கு குர்ஆன் எனும் பொருள் இருப்பதைப் போல சட்டம் - கடமை எனும் பொருள் உண்டு என்பது தெளிவாகிறது.

இதன்படி குர்ஆனுக்கு முரணானதாக சிலர் கருதும் மேற்கண்ட ஹதீஸில் பி கிதாபில்லாஹி என்பதற்கு அல்லாஹ்வின் வேதப்படி என்று பொருள் அல்ல. அல்லாஹ்வின் சட்டப்படி என்று அர்த்தம் ஆகும்.

அல்லாஹ்வின் வேதப்படி என்பதற்கும் அல்லாஹ்வின் சட்டப்படி என்பதற்கும் இடையில் சற்று வித்தியாசம் உள்ளது.

அல்லாஹ்வின் வேதம் குர்ஆனாகும். அல்லாஹ்வின் வேதப்படி என்பது குர்ஆனில் உள்ளபடி என்ற கருத்து வரும். அல்லாஹ்வின் வேதத்தின் படி என்று எதைச் சொன்னாலும் அது குர்ஆனில் இருந்தாக வேண்டும்.

அதே வேளை அல்லாஹ்வின் சட்டத்தின் படி என்றால் அல்லாஹ் அருளிய சட்டப்பிரகாரம் என்பதாகும்.

அல்லாஹ் அருளிய சட்டம் என்பது குர்ஆனை மட்டும் குறிக்காது. நபிகள் நாயகம் சொல்லும் சட்டமும் அல்லாஹ் அருளிய சட்டமே.

நபிகள் நாயகம் சொல்லும் விளக்கங்கள், சட்டங்கள் யாவும் இறைவனின் புறத்திலிருந்தே வருகிறது என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் சான்றளிக்கின்றன.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53 3,4

"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3 32

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

அல்குர்ஆன் 47 33

உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.

அல்குர்ஆன் 4 65

நபிகள் நாயகம் தம் புறத்திலிருந்து சட்டம் இயற்ற இயலாது. அவர்கள் ஒரு சட்டம் சொன்னால் அது அல்லாஹ் சொன்ன - அருளிய சட்டமே.

எனவே மேற்கண்ட ஹதீஸில் திருமணமாகிய நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு கல்லெறி தண்டனை என்று நபிகள் நாயகம் தீர்ப்பளிக்கின்றார்கள் எனில் இது அல்லாஹ் அருளிய சட்டமேயாகும்.

இதன்படி கல்லெறி தண்டனை தீர்ப்பை அல்லாஹ்வின் சட்டத்தின் படி உள்ள தீர்ப்பு என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. குர்ஆனோடு முரண்படவும் இல்லை.

வேறு பார்வை

ஹதீஸில் இடம் பெறும் பி கிதாபில்லாஹ் எனும் வார்த்தையை வைத்துக் கொண்டு குர்ஆனுக்கு முரண் எனக் கூறுவோருக்கான பதிலைத்தான் மேலே கண்டோம்.

இன்னொரு சாரார் இதை குர்ஆனுக்கு முரண் என்பதில் வேறொரு பார்வையை முன்வைக்கின்றனர்.

திருக்குர்ஆன் விபச்சாரம் எனும் குற்றத்திற்கு பொத்தாம் பொதுவாக கசையடி தண்டனையை உறுதிப்படுத்தி விட்டது.

ஆனால் மேற்கண்டோ ஹதீஸோ விபச்சாரத்திற்கு கசையடி - கல்லெறி தண்டனைகள் என இரு வகையான தண்டனைகளை வகைப்படுத்துகிறது.

குர்ஆன் விபச்சாரத்திற்கு ஒரு தண்டனையை நிர்ணயித்திருக்க நபிமொழி இரு தண்டனைகளை வகுப்பது குர்ஆனுக்கு முரணாகும் என்பது இவர்கள் முன் வைக்கும் மற்றொரு கோணமாகும்.

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனில் இல்லாத, அதில் உள்ளதை விட அதிகமானதை நபி சொல்கிறார் எனில் அதை குர்ஆனுக்கு முரணாகப் பார்க்கப் கூடாது.

ஏனெனில் குர்ஆனை விளக்கவே நபிகள் நாயகம் அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.

குர்ஆனில் உள்ள தகவலை விட அதிகமானதை நபி சொல்கிறார்கள் எனில் அவையாவும் குர்ஆனுக்கு நபிகள் நாயகம் அளிக்கும் விளக்கங்களாகும்.

குர்ஆனுக்கு நபிகள் நாயகம் அளிக்கும் விளக்கமும் இறைச்செய்தி எனவும் அவற்றை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். திருக்குர்ஆன் இவ்வாறே போதிக்கின்றது.

எனவே குர்ஆனில் இல்லாத, குர்ஆனில் உள்ளதை விட அதிகமான தகவலை குர்ஆனுக்கு முரண் என்று கருதுவது அறிவீனமாகும்.

இது பற்றி முந்தைய தொடரிலேயே விளக்கியுள்ளோம்.

அறிஞர் பி.ஜே அவர்கள் தனது தர்ஜுமா மொழிபெயர்ப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

ஆண்களோ, பெண்களோ விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

பார்க்க : புகாரி - 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829

குர்ஆனில் விபச்சாரத்தின் தண்டனையாக நூறு கசையடிகள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளதால் விபச்சாரக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடையாது எனச் சிலர் வாதிடுகின்றனர். விபச்சாரத்திற்கான தண்டனையை இரண்டு வகைகளாக ஹதீஸ்களில் பிரித்திருப்பது குர்ஆனுக்கு முரணானது எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

"விபச்சாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான் தண்டனை என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று அல்லாஹ் வேறுபடுத்திடவில்லை. எனவே விபச்சாரம் செய்வோர் திருமணம் ஆனவர்களோ, திருமணம் ஆகாதவர்களோ அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது'' என்பது இவர்களின் வாதம்.

விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற்றொரு சான்றையும் முன் வைக்கின்றனர்.

திருமணமான அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியளவு அப்பெண்களுக்கு விதிக்கப்படும் என்று 4:25 வசனத்தில் கூறப்படுகிறது.

நூறு கசையடிகள் அவர்களுக்குரிய தண்டனை என்று வைத்துக் கொண்டால் ஐம்பது கசையடியை அதில் பாதி என்று கூறலாம். அவர்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்று வைத்துக் கொண்டால் அதில் பாதி என்பது என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்களை ஏற்க முடியாது என்பது சரியான நிலைப்பாடுதான். ஆனால் விபச்சாரத்துக்கு மரண தண்டனை என்பது குர்ஆனுக்கு முரணானது அல்ல என்பதால் இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கு இரு வகையான தண்டனைகள் எனக் கூறியதும், நடைமுறைப்படுத்தியதும் குர்ஆனுக்கு எதிரானதா? இவர்களின் இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளவை தாமா? என்றால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

4:25 வசனத்தின் ஒரு பகுதியாகிய "விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்'' என்பதுதான் இவர்களது வாதத்திற்குரிய சான்றாக இருக்கிறது.

திருக்குர்ஆனில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை யாரும் மறுக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர்கள், தவறாக மொழிபெயர்த்ததன் அடிப்படையிலேயே இவ்வாதம் எழுப்பப்பட்டுள்ளது.

4:25 வசனத்தில் "விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்களுக்கான தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு உண்டு'' என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சொல் பல அர்த்தங்களைக் கொண்டதாகும். பயன்படுத்தும் இடத்திற்கேற்ப இதன் பொருள் மாறுபடும். ஒரு இடத்தில் செய்த அர்த்தத்தை எல்லா இடத்திலும் செய்ய முடியாது.

இதை விளங்காத காரணத்தினால், அல்லது போதுமான கவனமில்லாத காரணத்தினால் இவ்வசனத்தில் இடம் பெறும் அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு விவாகம் செய்யப்பட்ட பெண்கள் என்று பலரும் தமிழாக்கம் செய்து விட்டனர். இந்தத் தமிழாக்கத்தை அடிப்படையாக வைத்து மேற்கண்ட வாதம் எழுப்பப்படுகிறது.

அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்தால் இங்கே எவ்வாறு பொருள் கொள்வது சரியானதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

4:25 வசனத்தில் அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது போலவே அதற்கு முந்தைய வசனமான 4:24 வசனத்திலும் இடம் பெற்றுள்ளது.

4:24 வசனம், வல்முஹ்ஸனாத் என்று துவங்குகின்றது. யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று அதற்கு முந்தைய வசனத்தில் பட்டியலிட்ட இறைவன், அதன் தொடர்ச்சியாக "முஹ்ஸனாத்களும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்கள்'' என்று கூறுகிறான்.

கணவனுடன் வாழ்பவள் அல்லது பிறரது மனைவி என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம். அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும். இன்னொருவனின் மனைவியாக இருப்பவளை மணந்து கொள்ளக் கூடாது என்று இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்கிறோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு 5:5 வசனத்தைப் பாருங்கள். இந்த வசனத்திலும் அதே அல்முஹ்ஸனாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கூறும்போது அந்தத் தொடரில் "முஹ்ஸனாத்களும் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள்'' என்று இவ்வசனம் கூறுகிறது.

"முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாகாது'' என்று 4:24 வசனத்தில் கூறி விட்டு "முஹ்ஸனாத்களை மணந்து கொள்ளலாம்'' என்று 5:5 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

4:24 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 5:5 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பிறருடைய மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஆகி விடும்.

5:5 வசனத்தில் "கணவனில்லாத பெண்கள் முஹ்ஸனாத்கள்'' எனப்படுகின்றனர்.

4:24 வசனத்தில் "கணவனுடன் வாழும் பெண்கள் முஹ்ஸனாத்கள்'' எனப்படுகின்றனர்.

இங்கே செய்த அர்த்தத்தை அங்கே செய்வதும், அங்கே செய்த அர்த்தத்தை இங்கே செய்வதும் அறியாமையாகும்.

அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது என்ற இரு வேறு வாசக அமைப்புகளை வைத்து அதற்கேற்றவாறு பொருள் கொள்கிறோம். இரண்டுமே இவ்வார்த்தைக்குரிய அர்த்தம் என்றாலும் இடத்திற்கேற்ற ஒரு அர்த்தத்தைத்தான் செய்ய முடியும்.

அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இவ்விரு அர்த்தங்கள் தவிர வேறு அர்த்தமும் உள்ளது. அத்தகைய இடங்களில் இவ்விரு அர்த்தங்களும் பொருந்தாமல் போய் விடும்.

முஹ்ஸனாத் பெண்கள் மீது யார் அவதூறு கூறுகிறார்களோ... என்று திருக்குர்ஆன் 24:4, 24:23 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

"திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ'' என்று இங்கே அர்த்தம் கொள்ள முடியாது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் திருமணமாகாத பெண்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.

"திருமணம் ஆகாத பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ'' என்றும் பொருள் கொள்ள முடியாது. இவ்வாறு பொருள் கொண்டால் திருமணம் ஆனவர்கள் மீது அவதூறு கூறலாமா என்ற கேள்வி பிறக்கும்.

"கற்பொழுக்கத்தைப் பேணுபவர்கள்'' என்பதுதான் இங்கே பொருள். இவ்வார்த்தைக்கு இந்தப் பொருளும் உள்ளது. கற்பு நெறியுடன் வாழும் பெண்கள் மீது அவதூறு கூறுவோர் மேற்கண்ட இரு வசனங்களில் எச்சரிக்கப்படுகின்றனர்.

"முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதித் தண்டனை அடிமைப்பெண்களுக்கு உண்டு'' என்ற 4:25 வசனத்தில் இடம் பெறும் முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா? கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா?

இரு விதமாகவும் பொருள் கொள்ள வாசக அமைப்பு இடம் தருகிறது என்றாலும் இந்த இடத்தில் கணவன் இல்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதற்கு நியாயமான காரணமும் இருக்கின்றது.

அல்முஹ்ஸனாத் என்ற சொல் இதற்கு முந்தைய வசனத்தில் கணவன் உள்ள பெண்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதை முன்னர் சுட்டிக் காட்டியுள்ளோம்.

முந்தைய வசனத்தில் மட்டுமின்றி இதே வசனத்தின் துவக்கத்திலும் அல்முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இவ்வசனத்தில் (4:25) இரண்டு இடங்களில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"உங்களில் யாருக்கு முஹ்ஸனாத்களை மணந்து கொள்ள சக்தியில்லையோ''

"முஹ்ஸனாத் பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி''

ஆகியவையே அந்த இரு இடங்கள்.

முதலில் இடம் பெற்ற அல்முஹ்ஸனாத் என்பதற்கு "கணவனுள்ள பெண்களை மணமுடிக்க யாருக்குச் சக்தியில்லையோ'' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் கணவனுள்ள பெண்களை மணந்து கொள்வது அறவே கூடாது. எனவே "கணவனில்லாத பெண்களை மணக்க யாருக்குச் சக்தியில்லையோ'' என்று தான் பொருள் கொள்ள முடியும்.

எனவே இதற்கு முந்திய வசனத்தில் முஹ்ஸனாத் என்பது கணவனுள்ள பெண்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் இவ்வசனத்தின் துவக்கத்தில் கணவனில்லாத பெண்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வசனத்தில் இரண்டாவது தடவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள அல்முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இதே வசனத்தில் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட அல்முஹ்ஸனாத்துக்குரிய பொருளைத்தான் கொடுக்க வேண்டும்.

முந்தைய வசனத்தில் அல்முஹ்ஸனாத் என்ற சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விட இவ்வசனத்தில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்வதே சரியானது.

எனவே முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்ற இடத்தில் "திருமணம் ஆன பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி'' என்று பொருள் கொள்வதை விட "திருமணம் ஆகாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி'' என்று பொருள் கொள்வதே சரியாகும்.

இவ்வாறு சரியாகப் பொருள் கொண்டால் இவர்கள் எடுத்து வைத்த வாதம் அடியோடு வீழ்ந்து விடுகிறது. ஏனெனில், திருமணம் ஆகாத பெண்கள் விபச்சாரம் செய்யும்போது அவர்களுக்குரிய தண்டனை நூறு கசையடிகள்தான். அதில் பாதி ஐம்பது கசையடிகளாகும்.

கணவனுள்ள பெண்கள், கணவன் இல்லாத பெண்கள் என்று முரண்பட்ட இரண்டு அர்த்தங்கள் தரும் இவ்வார்த்தைக்கு இரண்டாவது அர்த்தம்தான் இவ்வசனத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

விபச்சாரத்திற்குரிய தண்டனையில் பாதி எனக் கூறாமல் "முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை, முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனை என இரண்டு வகையான தண்டனை இருந்தால் மட்டுமே இவ்வாறு கூற முடியும்.

இரு வகையான தண்டனை இல்லாமல் அனைவருக்கும் ஒரு தண்டனைதான் என்றிருந்தால் முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி எனக் கூறாமல் விபச்சாரத்தின் தண்டனையில் பாதி என்று இறைவன் கூறியிருப்பான்.

இதிலிருந்து விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனைகள் இருப்பதைச் சந்தேகமற நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் முஹ்ஸனாத்களின் தண்டனையில் பாதி எனக் கூறப்பட்டால் எது பாதியாக ஆக முடியுமோ அது பற்றியே கூறப்படுகிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எது பாதியாக ஆகாதோ அது பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனவே, முஹ்ஸனாத் என்பதற்கு இவ்விடத்தில் திருமணமாகாத பெண்களின் தண்டனையில் பாதி என்றுதான் பொருள் கொள்ள முடியும். திருமணமான பெண்களுக்கு வேறு தண்டனை உள்ளது என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

அதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை என விளக்கியுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது இவ்வசனத்திற்கு (4:25) விளக்கம்தானே தவிர, முரண் இல்லை என்பதை ஐயமற அறியலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்...

 

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு

وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.

(அல்குர்ஆன் 46 : 15 )

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.

நூல் : முஸ்லிம் (138)

உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து '' நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை '' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5971)

பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் ஆகும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார்.  நபி (ஸல்) அவர்கள் ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

 அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்றுகேட்பீராக!

(அல்குர்ஆள் 17 : 23 , 24)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

(அல் குர்ஆன் 31 : 14)

பெற்றோருக்காகச் செலவிடுதல்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

(அல் குர்ஆன் 2 : 215 )

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸாயீ (2485)

மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்

பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , '' அல்லாஹ்வின் தூதரே நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.            

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி (2762)

பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின் மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629)

பெற்றோருக்கு செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள  குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள் , ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர்.

 அவர்களில் ஒருவர், ''இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.  ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா. நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து '' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.                    

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (2215)

பெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''

அறிவிப்பவர் : முகீரா பின் ஸுஹஃபா (ரலி) நூல் : புகாரி (2408)

'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : அஹ்மத் ( 6208)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2653)

பெற்றோர்களை சபிப்பது பெரும்பாவமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' தன் பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்துவிட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக்கல்லை மாற்றியவனை  அல்லாஹ் சபித்துவிட்டான் ''

அறிவிப்பவர் : அலீ (ரலி)   நூல் : முஸ்லிம் (3657)

''ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது '' அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)'' என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)

பெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமுடியாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான். 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர். 2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண் 3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர். இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள் 1.தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர் 2. நிரந்தரமாக மது அருந்துபவன் 3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸயீ (2515)

பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களையும் இணைத்து வாழவேண்டும்.    

அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். 

நூல் : புகாரி (2620)

பாவமான காரியங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுவது கூடாது என்றாலும் மற்ற வி‏ஷயங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல் குர்ஆன் 29 : 8)

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்

.  (அல் குர்ஆன் 31 :, 15 )

ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு '' அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறிளாள்.

இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள்.  அப்போதுதான் அல்லாஹ்  ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' (அல் குர்ஆன் 29 : 8)  என்று வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் : முஸ்லிம் (4432)

பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!''

(அல் குர்ஆன் 17 : 28)

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

(அல் குர்ஆன் 14 : 41)

"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக''

(,அல் குர்ஆன் 71 : 28)

"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்''

 (அல் குர்ஆன் 46 : 15)

 

April 15, 2016, 7:29 PM

மார்ச் தீன்குலப் பெண்மணி 2016

தலையங்கம்

இஷ்ரத் ஜஹான் தீவிரவாதியா?

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தில் ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக 15 ஜூன், 2004 அதிகாலை இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷாய்க் என்னும் பிரணேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ராணா, ஜீஷன் ஜோஹர் ஆகிய நான்கு பேரின் சடலங்கள் அகமதாபாத் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டன.

மோடியைக் கொல்வதற்காக வந்த தீவிரவாதிகள்தான் இவர்கள். இவர்களைத் தடுத்து நிறுத்தும் போது ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.ஜி. வன்சாரா தெரிவித்தார்.

ஆனால் காவல்துறையின் வாதத்தைத் தடயவியல் ஆய்வுகளும், மருத்துவப் பரிசோதனைகளும் நிராகரித்துவிட்டன. அரை மணி நேரத்துக்கு மேல் மோதல் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட அந்த நெடுஞ்சாலையில் அப்படி ஒரு போராட்டம் நடைபெற்றதற்கான எந்த ஒரு சுவடும் காணப்படவில்லை. நான்கு பேர் கொல்லப்பட்ட பிறகும் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை, சாட்சியங்களைப் பதிவு செய்யவில்லை. வழக்கு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை.

இந்த அசாதாரணமான செயல் (அல்லது செயலற்ற தன்மை) இயல்பாகவே பல சந்தேகங்களை நாடு முழுக்கக் கிளப்பிவிட்டது.

பல போராட்டங்களுக்குப் பிறகு விசாரணை ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டு முதன்முறையாக அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கை,  இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் 12 ஜூன் 2004 அன்று கடத்தி வரப்பட்டு, காவல்துறைக் கண்காணிப்பில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இரண்டு தினங்கள் கழித்தே சடலங்கள் நெடுஞ்சாலைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தது. வன்சாரா தொடங்கி 22 காவல் துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை சிபாரிசு செய்தது.

செப்டம்பர் 2010ல் குஜராத் உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமித்தது. நடைபெற்றது மோதல் அல்ல, திட்டமிட்ட படுகொலைதான் என்று குஜராத் ஐபிஎஸ் அதிகாரியும் எஸ்ஐடி உறுப்பினருமான சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார். அரசியல் தலையீடு காரணமாக வழக்கை நடத்த முடியவில்லை என்றும் அவர் வருந்தினார். பிகார் ஐபிஎஸ் அதிகாரி ராஜிவ் ரஞ்சன் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட மற்றொரு எஸ்ஐடி குழுவும், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோர் போலி என்கவுண்டர் செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்தியது. வழக்கை விசாரித்த சிபிஐயும் இதே முடிவுக்குதான் வந்து சேர்ந்தது.

பிறகு கைதுப் படலங்கள் தொடங்கின. இஷ்ரத் ஜஹான் வழக்கு மட்டுமின்றி வேறு பல என்கவுன்டர் வழக்குகளிலும் வன்சாராவுக்குத் தொடர்பு இருந்ததால்,  அவர் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். தான் பதவி விலகியபோது எழுதிய கடிதத்தில், அமித் ஷா தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும் மோடியையே தான் நம்பியிருப்பதாகவும் வன்சாரா குறிப்பிட்டிருந்தார். தன்னை ஓர் இந்து தேசியவாதி என்று அறிவித்துக் கொண்ட வன்சாரா, மோடியைக் கடவுள் என்று அழைத்திருந்தார். 

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்னும் பட்டப்பெயரைப் பெற்றிருந்த வன்சாரா, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தபோது, குஜராத் சிங்கம் என்று ஆரவாரத்துடன் முழங்கி, மாலை மரியாதையுடன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

இது இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் கொல்லப்பட்ட பின்னணி. இவர் கொல்லப்பட்ட பின்னர் நடுநிலையாளர்கள் மோடியை மோசக்கார கொலையாளியாக பார்க்கத் தொடங்கினர். இதைத் துடைப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்த மோடிக்கு கிடைத்த வாய்ப்புதான் ஹெட்லியின் வாக்கு மூலம்.

2008 மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படுபவர் டேவிட் ஹெட்லி. அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்ஃபர‌ன்ஸிங் மூலம் விசாரித்த போது இர்ஷத் ஜஹான் என்ற பெண்மணி லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று வாக்கு மூலம் அளித்தாராம்.

ஹெட்லி வாக்கு மூலம் அளித்தாரா அல்லது நிர்பந்திக்கப்பட்டு வாக்கு மூலம் தந்தாரா என்று கேள்வி அவரிடம் விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞரான உஜ்வல் நிகம் அவரின் கேள்வியும் ஹெட்லியும் பதிலும் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

உஜ்வல் நிகம் : லஷ்கர் இ தொய்பாவில் பெண்களும் இருக்கிறார்களா?

ஹெட்லி : ஆம்

உஜ்வல் நிகம் : பெண் தற்கொலைப் போராளிகளும் இருக்கிறார்களா?

ஹெட்லி : எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது.

உஜ்வல் நிகம் : இந்தியாவில் லஷ்கர் ஏதேனும் திட்டத்துடன் வந்து  அது நிறைவேறாமல் போனது பற்றி ஏதாவது தெரியுமா?

ஹெட்லி : ஆமாம், அப்படியொரு திட்டம் இருந்ததாகவும் அது காவல் துறையினரால் முறியடிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் ஒருவர் பெண் என்றும் தெரிந்து கொண்டேன்.

இந்த பதிலைச் சொன்னபோதுதான் உஜ்வல் நிகம் இர்ஷத் ஜஹான் உட்பட மூன்று பெண்களின் பெயர்களைக் கூறி இதில் யார் என்று கேட்டாராம். அப்போது ஹெட்லி இர்ஷத் ஜஹான் என்று கூறினாராம்.

இந்தத் தகவலை வைத்துத்தான் இர்ஷத் ஜஹான் என்ற அப்பாவி பெண்ணைத் தீவிரவாதி என்று மோடிக் கூட்டம் பரப்பி வருகிறது.

உஜ்வல் நிகமின் கேள்வியைப் பார்த்தாலே தெரிந்துவிடும் இது திட்டமிட்டு இர்ஷத் ஜஹான் பெயரைக் கொண்டு வருவதறகாக கேட்கப்பட்ட கேள்வி என்று. ஹெட்லியும் தான் கேள்விப்பட்டதாக தான் கூறுகிறார். அதுவும் இர்ஷத் ஜஹான் என்ற பெயரை அவர் குறிப்பிடவில்லை. உஜவல் நிகம் சொன்ன மூன்று பெயர்களில் ஒன்றை தான் சொல்லியுள்ளார். வேறு மூன்று பேரை சொல்லியிருந்தால் அதிலிருந்து ஒன்றைச் சொல்லியிருப்பார்.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டவும் பயங்கரவாதி மோடி கூட்டம் தப்பிக்கவும் செய்த செட்டப்புதான் ஹெட்லி வாக்கு மூலம்.

 

கேள்வி - பதில்

?இஸ்லாத்தில் பொய் சொல்ல அனுமதியுள்ளதா? நபிகளார் எப்போதாவது பொய் சொல்லியுள்ளார்களா?

தஸ்தகீர், அமெரிக்கா

!உண்மையே பேச வேண்டும் என்றும் பொய் சொல்லக்கூடாது என்றும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் வலியுறுத்தின்றன.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

(அல்குர்ஆன் 9 :119)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (8 / 30)

6094- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (6094)

இது போன்று திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் பல உண்டு. என்றாலும் சில நேரங்களில் பொய் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 28)

 حَدَّثَنِى حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّ أُمَّهُ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ بْنِ أَبِى مُعَيْطٍ وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الأُوَلِ اللاَّتِى بَايَعْنَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- أَخْبَرَتْهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « لَيْسَ الْكَذَّابُ الَّذِى يُصْلِحُ بَيْنَ النَّاسِ وَيَقُولُ خَيْرًا وَيَنْمِى خَيْرًا யு. قَالَ ابْنُ شِهَابٍ وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِى شَىْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلاَّ فِى ثَلاَثٍ الْحَرْبُ وَالإِصْلاَحُ بَيْنَ النَّاسِ وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا.

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ  அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).

2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.

3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 58)

2947- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ كَعْبٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ قَالَ : سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَلَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُرِيدُ غَزْوَةً إِلاَّ وَرَّى بِغَيْرِهَا

கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். ”தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்” என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த- அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் அறிவித்தார்.

நூல்: புகாரி (2947)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 77)

3030- حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَرْبُ خُدْعَةٌ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்,

நூல்: புகாரி(3030)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 59)

2948 - وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَلَّمَا يُرِيدُ غَزْوَةً يَغْزُوهَا إِلاَّ وَرَّى بِغَيْرِهَا حَتَّى كَانَتْ غَزْوَةُ تَبُوكَ فَغَزَاهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا وَاسْتَقْبَلَ غَزْوَ عَدُوٍّ كَثِيرٍ فَجَلَّى لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ لِيَتَأَهَّبُوا أُهْبَةَ عَدُوِّهِمْ وَأَخْبَرَهُمْ بِوَجْهِهِ الَّذِي يُرِيدُ.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். 

நூல் : புகாரி 2947

சண்டைக்காரர்களாக இருக்கும் இரு சகோதரர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தச் சொல்லும் பொய், தண்டனைக்குரிய குற்றத்தில் சேராது. இந்தப் பொய் சுயநலத்திற்காக அல்லது அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட பொய் அல்ல. நன்மையைக் கருதி சொல்லப்பட்டதால் நபிகளார் இது பொய் அல்ல என்று கூறுகிறார்கள்.

மகிழ்ச்சிக்காக அல்லது குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி இருவரும் சொல்லும் பொய்யும் தவறாகாது என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள்.

இதைப் போன்று போர்க்களங்களில் பொய் சொல்லி எதிரிகளை வீழ்த்த திட்டம் தீட்டுவதும் தவறாகாது.

நபிகளாரும் போர்க்கள நேரத்தில் இதுபோன்று நிலையை எடுத்துள்ளார்கள் என்று கஅப் (ரலி) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

எனவே நபிகளார் அனுமதித்த இடங்களில் பொய் சொல்வது குற்றமாகாது.

 

?சிறந்த பெண்மணி யார் என்று நபிகளாரிடம் கேட்ட போது, எந்தப் பெண் ஆண்களைப் பார்த்திருக்க மாட்டாளோ, எந்த ஆண்களும் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார்களோ அந்தப் பெண்ணே சிறந்த பெண் என்று நபிகளார் கூறினார்கள் என்று நபிமொழி இருக்கிறதா?

யூசுஃப், சென்னை.

!இந்தக் கருத்தில் சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் பலவீனமானதாகும்.

حلية الأولياء 430 - (2 / 41)

حَدَّثَنا إبراهيم بن أحمد بن أبي حصين حَدَّثَنا جدي أَبُو حَصِينٍ حَدَّثَنا يحيى الحماني حَدَّثَنا قيس عن عَبْد الله بن عُمَران عن علي ابن زيد عن سعيد بن المسيب عن علي أنه قال لفاطمة ما خير للنساء قالت لا يرين الرجال ولا يرونهن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما فاطمة بضعة مني.

அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடம் அலீ (ரலி) கேட்ட போது (அக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில்) பாத்திமா என் சதைத் துண்டாவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,

நூல் ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 2, பக்கம் 41)

இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்.

تقريب التهذيب - (2 / 401)

4734- علي ابن زيد ابن عبدالله ابن زهير ابن عبدالله ابن جدعان التيمي البصري أصله حجازي وهو المعروف بعلي ابن زيد ابن جدعان ينسب أبوه إلى جد جده ضعيف من الرابعة مات سنة إحدى وثلاثين وقيل قبلها بخ م 4

அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 401

مجمع الزوائد ومنبع الفوائد . محقق - (6 / 444)

وفيه يحيى الحماني وهو ضعيف.

மேலும் இச்செய்தியில் இடம் பெறும் யஹ்யா அல்ஹிமானீ என்பவரும் பலவீனமானவராவார்.

(மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்:6, பக்கம் :444)

வேறு அறிவிப்பாளர் வரிசையிலும் இதே போன்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

حلية الأولياء 430 - (2 / 40)

حَدَّثَنا عَبْد الله بن محمد بن عثمان الواسطي حَدَّثَنا يعقوب بن إبراهيم بن عباد ابن العوام حَدَّثَنا عَمْرو بن عون حَدَّثَنا هشيم حَدَّثَنا يونس عن الحسن عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم ما خير للنساء فلم ندر ما نقول فسار علي إلى فاطمة فأخبرها بذلك فقالت فهلا قلت له خير لهن أن لا يرين الرجال ولا يرونهن فرجع فأخبره بذلك فقال له من علمك هذا قال فاطمة قال إنها بضعة مني.

இந்தச் செய்தியில் இடம் பெறும் யஃகூப் பின் இப்ராஹீம் என்பவர் யார்? இவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்பது பற்றிய விவரங்கள் இல்லை. எனவே இவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர். இவருடைய செய்திகள் ஆதாரமாகாது.

இதே செய்தி பஸ்ஸார் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

مسند البزار 18 مجلد كاملا - (2 / 159)

526- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْكُوفِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا قَيْسٌ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عِمْرَانَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : أَيُّ شَيْءٍ خَيْرٌ لِلْمَرْأَةِ ؟ فَسَكَتُوا ، فَلَمَّا رَجَعْتُ قُلْتُ لِفَاطِمَةَ : أَيُّ شَيْءٍ خَيْرٌ لِلنِّسَاءِ ؟ قَالَتْ : أَلاَّ يَرَاهُنَّ الرِّجَالُ ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنَّمَا فَاطِمَةُ بِضْعَةٌ مِنِّي رَضِيَ اللَّهُ عَنْهَا. وَهَذَا الْحَدِيثُ لاَ نَعْلَمُ لَهُ إِسْنَادًا عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، إِلاَّ هَذَا الإِسْنَادَ.

இந்தச் செய்தியிலும் அலீ பின் ஸைத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்தச் செய்தியைப் பற்றி ஹைஸமீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

مجمع الزوائد ومنبع الفوائد . محقق - (9 / 138)

15200- وعن علي أنه كان عند رسول الله صلى الله عليه وسلم فقال: "أي شيء خير للمرأة؟". فسكتوا، فلما رجعت قلت لفاطمة: أي شيء خير للنساء؟ قالت: لا يراهن الرجال. فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال:

"إنما فاطمة بضعة مني - رضي الله عنها - ". رواه البزار وفيه من لم أعرفه.

இந்தச் செய்தியை பஸ்ஸார் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். நான் அறியாதவர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள். (மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்:9, பக்கம்: 138)

?மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் அதிகமாகப் பெண்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்படுகிறது. அதிலே ஒரு பெண்ணுக்கு நரக நெருப்பு வாய் வழியாகச் செலுத்தப்பட்டு வெந்து கொண்டிருக்கின்ற குடலை இழுத்துக் கொண்டு மலத்துவாரம் வழியாக வெளியே வருகிறது. தலை வெடித்து மூளையில் நுழைந்து சிதறி சின்னாபின்னமாக வெளியே வருகிறது.

உடனே நபி (ஸல்) அவர்கள், தன்னை அழைத்து வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடத்திலே கேட்கிறார்கள். அவர்கள் பதில் சொல்கிறார்கள். நபியே இந்தப் பெண் உலகில் விபச்சாரம் செய்தவள் அல்ல! வட்டி வாங்கியோ அல்லது கொடுத்தவளோ அல்ல! புறம் பேசியவளல்ல! ஜக்காத் கொடுக்காதவள் அல்ல! பிறரை இழிவுபடுத்தியவள் அல்ல! நபியே இந்தப் பெண் உலகில் அல்லாஹ் மறைக்கச் சொன்னபடி தலைமுடியை மறைக்ககாதவள் ஆவாள் என்றார்கள்.

இவ்வாறு நபிமொழி உள்ளதா?

பர்ஹானா, கோவை

الكبائر - الذهبي - (1 / 172)

 و قال علي بن أبي طالب رضي الله عنه : [ دخلت على النبي صلى الله عليه و سلم أنا و فاطمة رضي الله عنها و وجدناه يبكي بكاء شديدا فقلت له : فداك أبي و أمي يا رسول الله ما الذي أبكاك ؟ قال : يا علي ليلة أسري بي إلى السماء رأيت نساء من أمتي يعذبن بأنواع العذاب فبكيت لما رأيت من شدة عذابهن و رأيت امرأة معلقة بشعرها يغلي دماغها و رأيت امرأة معلقة بلسانها و الحميم يصب في حلقها و رأيت امرأة قد شدت رجلاها إلى ثدييها و يداها إلى ناصيتها و رأيت امرأة معلقة بثدييها و رأيت امرأة رأسها رأس خنزير و بدنها بدن حمار عليها ألف ألف لون من العذاب و رأيت امرأة على صورة الكلب و النار تدخل من فيها و تخرج من دبرها و الملائكة يضربون رأسها بمقامع من نار

 فقامت فاطمة رضي الله عنها و قالت : حبيبي و قرة عيني ما كان أعمال هؤلاء حتى وضع عليهن العذاب ؟ فقال صلى الله عليه و سلم : يا بنية أما المعلقة بشعرها فإنها كانت لا تغطي شعرها من الرجال و أما التي كانت معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها و أما المعلقة بثدييها فإنها كانت تفسد فراش زوجها و أما التي تشد رجلاها إلى ثدييها و يداها إلى ناصيتها و قد سلط عليها الحيات و العقارب فإنها كانت لا تنظف بدنها من الجنابة و الحيض و تستهزىء بالصلاة و أما التي رأسها رأس خنزير و بدنها بدن حمار فإنها كانت نمامة كذابة و أما التي على صورة الكلب و النار تدخل من فيها و تخرج من دبرها فإنها كانت منانة حسادة (

தாங்கள் குறிப்பிட்ட கருத்தில் மேற்குறிப்பிட்ட  செய்தி தஹபீ அவர்களின் அல்கபாயிர் என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் அலீ (ரலி) அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களும் நபிகளார் இடத்தில் இருந்தபோது நபிகளார் இவ்வாறு கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

இதற்கு முழுமையான அறிவிப்பாளர் வரிசை கிடையாது. இது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.

 

முஹைதீனும் முட்டாள்களும்

ஆசிரியைகள், தவ்ஹீத் பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி, மதுரை.

அகில உலகத்தை ஆட்சி செய்யும் மன்னாதி மன்னன் நித்தியஜீவன் பெருமைக்குச் சொந்தக்காரன் பேரறிவாளனாகிய அல்லாஹ்வுக்கு பசியோ, தாகமோ, தூக்கமோ, துக்கமோ, சோர்வோ, மறதியோ, நோயோ, முதுமையோ உள்ளிட்ட எந்தப் பலகீனமும் இல்லை. தாய், மனைவி, மக்கள், அண்ணன், தம்பி என்ற எந்த உறவும் இல்லை என்பன உள்ளிட்ட கடவுளின் தகுதிகளையும் இலக்கணங்களையும் வகுத்து வைத்திருக்கும் மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் என்பதை பிறமத சகோதரர்கள் கூட ஒப்பு கொள்கின்றனர்.

ஆனால் இஸ்லாமியனாகப் பிறந்த, அல்லாஹ்வின் அடிமை (அப்துல்லாஹ்) என்று பெயர் சூட்டிக் கொண்டு முஹைதீன் ஆண்டவருக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்ச்சி அடையும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை எள்ளளவும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் கணக்கிலடங்காதவை.

முஹைதீனின் தந்தை ஒரு நாள் கடும் பசியுடன் காட்டில் நடந்து செல்லும் போது ஆப்பிள் ஒன்று ஆற்றில் மிதந்து வர அதை எடுத்து சாப்பிட்டு பசி தீர்த்துக் கொள்கிறார். யாருடைய ஆப்பிள் என்று தெரியவில்லை என்ற உறுத்தல் வரவே அந்த ஆறு ஓடி வரும் திசையை நோக்கி பல மைல் தூரம் நடந்து சென்று ஒரு வீட்டை அடைந்தாராம்.

அந்த மரத்தின் உரிமையாளரிடம் அதைச் சப்பிட்டதை ஹலாலாக்கித் தாருங்கள் என்று கேட்கிறார். அவர் என் மகளைத் திருமணம் செய்தால் ஹலால் ஆக்குகிறேன். ஆனால் அவள் குருடி, ஊமை, நொண்டி, இரண்டு கையும் சூகை என்கிறார். பரவாயில்லை. என் உடலில் ஹராமான ஒரு உணவு கூட இருக்கக் கூடாது. அதை ஹலாலாக்கி விடுங்கள்; அதற்காக என்ன பரிகாரத்தையும் நான் ஏற்கத் தயார் எள்றார்களாம்.

திருமணம் முடிந்து மணமகளைப் பார்த்து பரவசம் அடைந்தார். ஏனெனில் அழகென்றால் அழகு! அவ்வளவு அழகு!! ஒரு குறையும் இல்லை. பிறகு ஏன் உன் தந்தை இப்படிச் சொன்னார்? என்றதற்கு அந்த மாது விளக்கம் சொன்னார். என் தந்தை சொன்னது உண்மைதான். என் கண்கள் தீமைகளைப் பார்க்காத குருடுதான். என் கைகள் தீயவற்றைச் செய்யாத ஊனம்தான். என் கால்கள் பாவத்தின் பக்கம் நடக்காத நொண்டிதான்.

இந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்கள் தான் அப்துல்காதிர் ஜிலானியாம். கடும் பசி நேரத்திலும் ஹராமான உணவை உண்டுவிடக்கூடாது என்ற பரிசுத்தமான தந்தை எந்த நேரத்திலும் தீமைகளை நினைத்துக்கூட பார்க்காத தாய் இவர்களின் உதிரத்தில் உதித்தவரும் உத்தமராகத்தானே இருப்பார்? என்று கதை விடுகின்றனர் கப்ரு வணங்கிகள்.

சிந்தனையாளர்களே சிந்தித்துப் பாருங்கள் ஓர் ஆப்பிலுக்காக ஆற்றைக் கடந்தாராம் நம்பமுடிகிறதா? நம்பிக்கைக்குரிய நபிகளார் கூறுகிறார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 164(

2431- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ عَنْ طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرَةٍ فِي الطَّرِيقِ قَالَ لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ تَكُونَ مِنَ الصَّدَقَةِ لأَكَلْتُهَا.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள் . இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.

(நூல் புகாரி (2431)

மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக தெருவில் கிடக்கும் அற்பமான பொருளைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறியலாம். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது நபிவழிக்கு மாற்றம் செய்கிறார் முஹைதீனின் தந்தை. இவர் எப்படி பரிசுத்த தந்தையாக இருப்பார்?

முஹைதீனைப் பற்றி முட்டாள் தனமான முன்னறிவிப்பு

ஸஹாபாக்கள், வலிமார்கள், இமாம்கள், சகிதம் குத்பு நாயகத்தின் தந்தையின் கனவில் தோன்றிய பெருமானார் (ஸல்) அவர்கள், உங்களுக்குப் பிறக்கப் போகின்ற குழந்தை என் அன்பரும் அல்லாஹ்வின் அன்பாளரும் ஆவார்கள் என சுபசோபனம் கூறினார்கள் என்று கட்டுக் கதையை கட்டவிழ்த்து உள்ளனர்.

கேட்பவன் கேனயனாக இருந்தால் கேன்சருக்கு மருந்து கேசரி என்பது போல் கேலியாக உள்ளது இந்தச் செய்தி.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பதாக இருந்தால் அண்ணலாரை, அவர் நேரில் கண்டிருக்க வேண்டும். அவர்களின் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் முஹைதீன் தந்தை நபிகளாரின் காலத்தில் வாழ்ந்ததுமில்லை. நபியவர்களை நேரில் கண்டதுமில்லை. பிறகு எப்படி அவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டிருப்பது சாத்தியமாகும். இது முற்றிலும் அப்பட்டமான பொய்யே!

எளிய மார்க்கத்தை ஏளனப்படுத்தியவர்

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கிச் சென்றார். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம் செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றைக் கொடுப்பார். அதை அணிந்து கொண்டே நாட்களைப் போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும். முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள்.

ஒரு வருடம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல் எதுவும் சாப்பிடாமல் தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் உளூவுடன் சுப்ஹ் தொழுகையையும் தொழுவார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு அருகிலுள்ள ஒரு துணியில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படிச் செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்போது  பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபுஹ் தொழுகையையும் தொழுவார்கள் என்று அடுக்கடுக்கான அபத்தங்களைப் மொழிகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் முஹைதீன் அப்துல் காதிர் ஜிலானி துறவறம் மேற்கொண்டதாக உள்ளது. ஆனால் இஸ்லாம் துறவறத்தை அணுவளவும் அனுமதிக்கவே இல்லை.

ஏனெனில் இதனால் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் பாழ்படுத்தப்படுகின்றன.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (4 / 129)

3470 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِىِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ سَعْدِ بْنِ أَبِى وَقَّاصٍ قَالَ رَدَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது;

துறவறம் மேற்கொள்ள உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்கு) அனுமதி அளித்திருந்தால் நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

(முஸ்லிம் 2716)

நபி (ஸல்) அவர்களின் கூற்று மூலம் துறவறத்தை இஸ்லாம் தூர வீசுகின்றது எனப் புரியலாம்.

மேலும் முஹைதீன் ஆண்டவர் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதாகவும், ஓர் இரவு முழுவதும் ஒற்றைக் காலில் நின்று வணங்கியதாகவும் உள்ளது. இவரின் செயல் இறைத்தூதரின் வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதைப் பின்வரும் பொன்மொழியில் காணலாம்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (6 / 242)

5052- حَدَّثَنَا مُوسَى ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مُغِيرَةَ عَنْ مُجَاهِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ : أَنْكَحَنِي أَبِي امْرَأَةً ذَاتَ حَسَبٍ فَكَانَ يَتَعَاهَدُ كَنَّتَهُ فَيَسْأَلُهَا عَنْ بَعْلِهَا فَتَقُولُ نِعْمَ الرَّجُلُ مِنْ رَجُلٍ لَمْ يَطَأْ لَنَا فِرَاشًا وَلَمْ يُفَتِّشْ لَنَا كَنَفًا مُذْ أَتَيْنَاهُ فَلَمَّا طَالَ ذَلِكَ عَلَيْهِ ذَكَرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ الْقَنِي بِهِ فَلَقِيتُهُ بَعْدُ فَقَالَ كَيْفَ تَصُومُ قَالَ كُلَّ يَوْمٍ قَالَ وَكَيْفَ تَخْتِمُ قَالَ كُلَّ لَيْلَةً قَالَ صُمْ فِي كُلِّ شَهْرٍ ثَلاَثَةً وَاقْرَإِ الْقُرْآنَ فِي كُلِّ شَهْرٍ ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الْجُمُعَةِ قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ أَفْطِرْ يَوْمَيْنِ وَصُمْ يَوْمًا ، قَالَ : قُلْتُ أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ صُمْ أَفْضَلَ الصَّوْمِ صَوْمِ دَاوُدَ صِيَامَ يَوْمٍ وَإِفْطَارَ يَوْمٍ وَاقْرَأْ فِي كُلِّ سَبْعِ لَيَالٍ مَرَّةً فَلَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَذَاكَ أَنِّي كَبِرْتُ وَضَعُفْتُ فَكَانَ يَقْرَأُ عَلَى بَعْضِ أَهْلِهِ السُّبْعَ مِنَ الْقُرْآنِ بِالنَّهَارِ وَالَّذِي يَقْرَؤُهُ يَعْرِضُهُ مِنَ النَّهَارِ لِيَكُونَ أَخَفَّ عَلَيْهِ بِاللَّيْلِ ، وَإِذَا أَرَادَ أَنْ يَتَقَوَّى أَفْطَرَ أَيَّامًا وَأَحْصَى وَصَامَ مِثْلَهُنَّ كَرَاهِيةَ أَنْ يَتْرُكَ شَيْئًا فَارَقَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَيْهِ.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் நபியவர்களின் துணைவியரிடம் (சென்று), நபியவர்கள் தனிமையில் செய்யும் வழிபாடுகள் குறித்து வினவினர். அவர்கள் கூறிய மறுமொழியைக் கேட்ட பின் நபியவர்கள் செய்யும் வழிபாடுகளைக் குறைவாக எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவர் “நான் பெண்களை மணமுடிக்க மாட்டேன்” என்றார்.

இன்னொருவர் நான் புலால் உண்ண மாட்டேன் என்றார் இன்னொருவர் நான் படுக்கையில் உறங்க மாட்டேன்“ என்றார். இதை அறிந்த நபி {ஸல்} அவர்கள் இறைவனை வாழ்த்திப் போற்றி விட்டு சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால் நான் {இரவில்} தொழுகிறேன்: உறங்கவும் செய்கிறேன் : நோன்பும் நோற்கிறேன்:நோன்பை விடவும் செய்கிறேன், பெண்களை மணந்தும் கொள்கிறேன். என்வழியை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்றார்கள்.

(புகாரி 5052)

ஒருவர் அயராது தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டோ, தொழுது கொண்டோ இருப்பது பார்ப்பதற்கு வேண்டுமானால் பக்தி பரவசமாகத் தெரியலாம். ஆனால் இது இஸ்லாத்தின் பார்வையில் நபிவழியை விட்டு துரத்தி அடிக்கும் பாரதூரமான காரியம்.

அரபி அல்லாத அஜமி

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ஆம் இரவன்று முஹைதீனின் கனவில் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தோன்றி “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்.“ எனக் கேட்டார்கள். அதைக் கேட்டுத் திடுக்கிட்ட அப்துல் காதிர் {முஹைதீன்} “யா ரசூலல்லாஹ்!! நான் அரபி இல்லையே! அஜமிதானே “ எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபி மொழியில் பேசத் தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக் கேட்ட அண்ணல் நபி {ஸல்} அவர்கள் சிரித்த முகத்துடன் முஹைதீன் ஆண்டவரின் வாயை திறக்கச் சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலைத் துப்பினார்கள். அதற்குப் பிறகு முஹைதீன் ஆண்டவரின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத் தொடங்கியது என்று கதை அள்ளி வீசுகின்றனர்.

நபிகளாரிடம் நேரடியாகப் பாடம் பெற்ற நபித்தோழர்களுக்கு திருக்குர்ஆனை ஒதி அதில் உள்ள சட்டங்களை விளக்கி மார்க்கத்தைச் சொன்னார்களே தவிர, அவர்களின் வாய்களில் எச்சிலைத் துப்பி மார்க்க போதனைகளைச் சொல்லிக் கொடுக்கவில்லை. நபித்தோழர்களுக்கு இவ்வாறு செய்யாதவர்கள் கனவில் வந்து எச்சில் துப்பி மார்க்கத்தைப் போதிப்பார்களா?

மரணம்

முஹைதீன் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்த பொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு குளித்துவிட்டு இஷா தொழுகையைத் தொழுதார்கள். நீண்ட நேரம் ஸுஜுதிலிருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தகாரர்களுக்கும், தன் முரீதுகளுக்கும் முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள்.

ஸுஜுதிலிருந்து அவர்கள் தலையை உயர்த்தியதும் சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக, என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக“ என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது.

கடைசி நேரம் வந்து விட்டதை உணர்ந்த அவர் தன் வாயால் திருக்கலிமாவைக் கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோட தன் 91 வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11 அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள் என்று கதை நீண்டு செல்கிறது.

இவ்வுலகத்தில் மிகச் சிறந்தவர்கள் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள்.  இந்த இறைத்தூதர்கள் இறந்த போது இது போன்று மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களைப் பார்க்க வந்து கொண்டிருந்தனவா?. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தனவா?

இறைத்தூதர்களுக்கும் நபித்தோழர்களுக்கு இல்லாத சிறப்பு அப்துல் காதிர் ஜீலானிக்கு எப்படி வந்தது? இந்தக் கதைகளைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.

ஆலிம் பெருமக்கள்,

அவ்லியாக்களின் நேசகர்கள்,

போலி ஆசாமிகள்,

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஆண்டாண்டாய் வழிபடும் கப்ர் வணக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்..!!

இன்ஷா அல்லாஹ்

 

சூனிய பாதிப்பு வரும், ஆனால் வராது

என்பது போல் தலைப்பு அமைந்துள்ளதில் ஆச்சரியப்பட வேண்டாம்.

சூனியம் குறித்த சவூதி அரசின் செயல்பாடுகளும் கொள்கை முடிவும் இப்படித்தான் உள்ளது.

அதன் விபரம் இதுதான்.

இது சவூதியில் இருந்து வெளியாகும் அல் யவ்ம் என்ற நாளிதழில் வெளியான செய்தி.

لقتل عقوبة جرائم السحر والشعوذة أو السجن 15 عاما

السحر والشعوذة آفة خطيرة تهدد كيان المجتمع (اليوم)

فيصل الفريان ـ الدمام

انتهت الرئاسة العامة لهيئة الأمر بالمعروف والنهي عن المنكر مؤخرا من إعداد مشروع لائحة نظام مكافحة السحر والشعوذة بالتنسيق مع استشاري متخصص في صياغة اللوائح والأنظمة، حيث تم استقصاء المخالفات والملاحظات من العاملين في الميدان ، واتضح أهمية مكافحة هذه الظاهرة الخطيرة لما لها من آثار سيئة على الفرد والمجتمع وتم رفعها الى هيئة التحقيق والادعاء العام لتطبيقها،

و"اليوم" تنفرد بنشر أهم بنود لائحة مكافحة آفة السحر والشعوذة والعقوبات المقررة والتي تصل على من ثبت شرعا قيامه بارتكاب جريمة السحر بالقتل, واذا رأت المحكمة المختصة - لأسباب تقدرها - عدم ايقاع عقوبة القتل فيعاقب بالسجن مدة لا تقل عن خمس عشرة سنة وبغرامة لا تقل عن ثلاثمائة الف ريال, ولا تزيد على خمسمائة الف ريال.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கான துறை சூனியம், சோதிடம், மாந்திரீகம், தாயத்து தகடு ஆகிய குற்றங்களைத் தடுப்பதற்காக அதற்கான தண்டனை பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதன் மூலம் தனி நபரையும் இந்தக் குற்றங்களில் மூலம் விளைகின்ற அபாயகரமான விளைவுகளிலிருந்து காப்பாற்ற முடியும்.

சூனியம் செய்தவருக்கு மரண தண்டனை!

இதற்குரிய நீதிமன்றம் மரண தண்டனை தேவையில்லை என்று கருதினால் 15 வருடங்களுக்குக் குறையாமல் சிறைத் தண்டணையும், மூன்று இலட்ச ரியால்களுக்குக் குறையாமலும் 5 லட்ச ரியால்களை விட அதிகமாகாமலும் அபராதத் தொகை விதிக்கப்படும் என்று சவூதி அரசு சட்டம் இயற்றியுள்ளது.

இது தவிர சோதிடம், தாயத்து, தகடு உள்ளிட்ட செயல்களும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றத்துக்கும் உரிய தண்டனைகளும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சூனியத்துக்கு மரண தண்டனையும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தண்டனையும் அளிக்கும் சட்டம் வரவேற்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இச்சட்டத்தில் சூனியத்துக்கு அளித்துள்ள விளக்கம் தான் விநோதமாக உள்ளது.

السحر: عقد ورقي وأدخنه وكلام يتكلم به او كتابة تكتب او عمل يعمل, بقصد التأثير في بدن المسحور او قلبه او عقله بمباشرة او غير مباشرة, وطرقه وانواعه قديمة ومتجددة ومنه ما هو تخييل وما هو حقيقة فمنه ما يقتل وما يمرض, ومنه ما يفرق بين المرء وزوجه وما يبغض احدهما

சூனியத்தின் விளக்கம்:

முடிச்சுப் போடுதல்; மந்திரித்தல்; புகை போடுதல்; சிஹ்ருக்குரிய வார்த்தைகளை மொழிதல், அல்லது எழுதுதல், அல்லது சிஹ்ர் வைக்கப்படுபவனின் உடலில், அல்லது உள்ளத்தில், அல்லது அறிவில் நேரடியாகவோ, அல்லது மறைமுகமகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அதற்குரிய காரியத்தைச் செய்தல், இதனுடைய வழிமுறைகள் புதிதாகவோ பழையதாகவோ இருக்கலாம். அவற்றில் உண்மையானவையும் உண்டு. வெறும் மாயையும் உண்டு;

கொலையை ஏற்படுத்துபவையும் உண்டு; நோயை ஏற்படுத்துபவையும் உண்டு; கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினையையும் பகைமையை ஏற்படுத்துபவையும் உண்டு. மனிதனின் உடலில் மட்டும் இல்லாமல் மனதிலும், மூளையிலும் சூனியத்தின் மூலம் பாதிப்பு எற்படுத்த முடியும். சூனியம் செய்யப்படுபவனைத் தொடாமலும் தொட்டும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று சூனியம் பற்றி இச்சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

சூனியத்துக்கு தரப்பட்ட விளக்கமும், அதற்கு தண்டனை வழங்கும் சட்டமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.

சூனியத்தின் மூலம் ஒருவனைக் கொல்ல முடியும்; சூனியத்தின் மூலம் நோயை ஏற்படுத்த முடியும்; கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியும். மனிதனின் உடலில் மட்டும் இல்லாமல் மனதிலும், மூளையிலும் சூனியத்தின் மூலம் பாதிப்பு எற்படுத்த முடியும். சூனியம் செய்யப்படுபவனைத் தொடாமலும் தொட்டும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்

என்று இந்த விளக்கத்தை சவூதி அரசு நம்பினால் சூனியத்துக்கு எதிராக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது.

சூனியக்காரன் சவூதி மன்னரை சூனியத்தால் சாகடித்து விட முடியும்; சவூதி போலீஸாருக்கும் சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும்; நீதிபதியையே சூனியத்தின் மூலம் கிறுக்கனாக ஆக்க முடியும் என்று சவூதி அரசு நம்பினால் இப்படி ஒரு சட்டமே கொண்டு வந்திருக்க முடியாது.

சூனியக்காரனால் மெய்யாகவே இப்படிச் செய்ய முடியும் என்று சவூதி உலமாக்கள் கருதி இருந்தால் நமக்கு சூனியக்காரனால் ஏதும் ஆகி விடுமோ என்ற அச்சமே இப்படி சட்டம் போடுவதைத் தடுத்து விடும்.

மேலும் யாரையும் தொடாமலே சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றால் உலகில் யாருக்கும் தெரியாத வகையில் சூனியக்காரன் எதையாவது செய்து நம்மைக் கொன்று விட்டால், நோயாளியாக்கி விட்டால் கிறுக்கனாக்கி விட்டால் நம் நிலை என்னாகும் என்று கருதுவது தான் மனிதனின் இயல்பு.

அப்படி இருந்தும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? சூனியக்காரனால் ஒரு முடியைக் கூட பிடுங்க முடியாது என்று சவூதி உலமாக்கள் உள்ளூர நம்புகிறார்கள்; அங்குள்ள ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள். இதனால் தான் தைரியமாக இப்படி ஒரு சட்டத்தை இவர்களால் கொண்டு வர முடிந்துள்ளது.

சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று வெளிப்படையாகச் சொன்னால் மூட சுன்னத் ஜமாஅத்துக்காரன்கள் சவூதிக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத் தான், "வரும், ஆனால் வராது" என்ற இந்தச் சட்டம்.

சூனியக்காரனால் கடுகளவும் எங்களுக்குத் தீங்கு செய்ய முடியாது என்று இச்சட்டத்தின் மூலம் சவூதி அரசு ஒப்புக் கொள்கிறது.

மெய்யாகவே ஒருவனுக்கு எங்கோ இருந்து கொண்டு நம்மைப் பாதிக்கச் செய்யும் ஆற்றல் இருந்தால் அதற்கு அஞ்சுவது தான் அறிவுடமை. எங்கோ இருந்து கொண்டு நம்மை ஓய்த்து விடும் ஆற்றல் சூனியக்காரனுக்கு இருப்பதாக நம்பினால் அவனால் பாதிப்பு ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவனுடன் மோதக் கூடாது.

அப்படி மோதவும், அவனைக் கொல்லவும் நாம் துணிந்தால் அவனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று நாம் நம்புகிறோம் என்பதுதான் பொருள்.

 

சோதனைக்குப் பின் மக்கா வெற்றி

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்குச் சோதனை காலம் ஏற்பட்டது. அவர்களில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் அவர்களும், அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்கு ஆளானார்கள்.

கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்ல நபிகளார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

இந்த ஹிஜ்ரத்திற்குப் பின்னர் நபிகளாருக்கு ஓரளவு துன்பங்கள் குறைந்தன. மதீனா வாழ்க்கையில் எட்டு வருடங்கள் இருந்த நிலையில் நபிகளாருக்கு இன்னொரு மகத்தான வெற்றியை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தான். அதுதான் மக்கா வெற்றி. அந்த வெற்றி பற்றிய விரிவான செய்தியைக் காண்போம்.

மக்காவை நோக்கி படையெடுக்கக் காரணம்

ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனத்து முஸ்லிம்களுக்கும், மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும், பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களைத் தாக்கவும் செய்தனர்.

உடனடியாக பனூ குஸாஆ குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்கா இறைமறுப்பாளர்களைத் தட்டிக் கேட்க தங்கள் தோழர்களைத் தயார்படுத்தினார்கள்.

மக்காவை நோக்கி

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடியை சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (5 / 99)

3983- حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ قَالَ : سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَبَا مَرْثَدٍ وَالزُّبَيْرَ وَكُلُّنَا فَارِسٌ قَالَ انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ فَإِنَّ بِهَا امْرَأَةً مِنَ الْمُشْرِكِينَ مَعَهَا كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا حَيْثُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : فَقُلْنَا الْكِتَابُ فَقَالَتْ مَا مَعَنَا كِتَابٌ فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا فَقُلْنَا مَا كَذَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَتُخْرِجِنَّ الْكِتَابَ ، أَوْ لَنُجَرِّدَنَّكِ فَلَمَّا رَأَتِ الْجِدَّ أَهْوَتْ إِلَى حُجْزَتِهَا وَهْيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتْهُ فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللهِ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلأَضْرِبْ عُنُقَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ حَاطِبٌ وَاللَّهِ مَا بِي أَنْ لاَ أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي وَلَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلاَّ لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَ ، وَلاَ تَقُولُوا لَهُ إِلاَّ خَيْرًا فَقَالَ عُمَرُ إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمُ الْجَنَّةُ ، أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.

அலீ (பின் அபீ தாலிப்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், நீங்கள் “ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணை வைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணை வைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்) என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், கடிதம் (எங்கே? அதை எடு) என்று கேட்டோம். அவள், எம்மிடம் கடிதம் எதுவுமில்லை என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல  மாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உனது ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும் என்று நாங்கள் சொன்னோம்.

விடாப்பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர் என்று கூறினார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள் என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று (மீண்டும்) கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது'... அல்லது உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்'.... என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா? என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள்.

(புகாரி 3983)

மக்கா வெற்றிக்கான பயணம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமளான் மாதம் கி. பி. 630 இல் நடைபெற்றது. நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ரமலான் மாதம் என்ற காரணத்தினால் அனைவரும் நோன்பு நோற்றிருந்தனர். மக்காவிற்குச் செல்லும் வழியில் கதீத் என்னும் இடத்தில் நோன்பை விட்ட நபி (ஸல்) அவர்கள், பிறகு அந்த மாதம் முடியும் வரை நோன்பை வைக்கவில்லை. இதிலே நபியவர்களுடன் பல குலத்தவர்களும் சேர்ந்து கொண்டனர். அப்போது, நபியவர்களுக்கு மிக சுலபமான முறையில் மக்கா வெற்றி கிடைத்தது. எதிர்ப்புகள் ஒன்றும் இருக்கவில்லை. பெரும்பாலும் மக்காவாசிகள் அனைவர்களும் பயந்தே இருந்தனர்.

இது பற்றிய விளக்கம் அறிய பார்க்க (புகாரீ 4272, 1948, 1944, 4279, 3983, 4274, 3007, 4286, 4280, 4290, 3171, 4287, 2988, 4305, 4306, 4307, 4308, 6641, 4302, 2434, 2432, 2236, 1176, 1175, 4298, 4299)

பயணத்தில் நோன்பை விடுதல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.  இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது- நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் கதீத்' என்னுமிடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள்.  -இந்த இடம் உஸ்ஃபானுக்கும் குதைத்' எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்- (அங்கு) நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

(புகாரி 4275)

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்ஃபான்' எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டு வரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காணவேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

(புகாரி 4279)

அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் படையெடுத்து வரும் செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு மர்ருழ் ழஹ்ரான்' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன.

அப்போது அபூசுஃப்யான், இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, இது (குபா'வில் குடியிருக்கும் குஸாஆ' எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள் என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை) என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

(புகாரி 4280)

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (3 / 123)

3023 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَامَ الْفَتْحِ جَاءَهُ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ بِأَبِى سُفْيَانَ بْنِ حَرْبٍ فَأَسْلَمَ بِمَرِّ الظَّهْرَانِ فَقَالَ لَهُ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ يُحِبُّ هَذَا الْفَخْرَ فَلَوْ جَعَلْتَ لَهُ شَيْئًا. قَالَ « نَعَمْ مَنْ دَخَلَ دَارَ أَبِى سُفْيَانَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَغْلَقَ عَلَيْهِ بَابَهُ فَهُوَ آمِنٌ யு.

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே ! அபூ சுஃப்யான் (மதிப்பு, மரியாதை என்ற) இந்தப் பெருமிதத்தை விரும்பக் கூடியவர். எனவே அவருக்காக ஏதாவது ஆக்குங்கள்! என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஆம் ! (குரைஷிகளில்)  யார் அபூ சுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர். யார் தன்னுடைய வீட்டின் கதவினைத் தாழிட்டுக் கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர் என்று கூறினார்கள்.

(அபூதாவூத் 2626)

மக்காவிற்குள் இஸ்லாமியப் படை நுழைதல்

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க்கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (7 / 188)

5808- حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، حَدَّثَنَا مَالِكٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள்.

 (புகாரி 5808)

வழி குறுகலாக உள்ள கத்முல் ஜபல்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார்.

இது பற்றி புகாரியில் வந்துள்ள அறிவிப்பைக் காண்போம்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (5 / 186)

4280- حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا سَارَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ وَحَكِيمُ بْنُ حِزَامٍ وَبُدَيْلُ بْنُ وَرْقَاءَ يَلْتَمِسُونَ الْخَبَرَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ فَقَالَ أَبُو سُفْيَانَ مَا هَذِهِ لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ نِيرَانُ بَنِي عَمْرٍو فَقَالَ أَبُو سُفْيَانَ عَمْرٌو أَقَلُّ مِنْ ذَلِكَ فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ فَأَتَوْا بِهِمْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ احْبِسْ أَبَا سُفْيَانَ عِنْدَ حَطْمِ الْخَيْلِ حَتَّى يَنْظُرَ إِلَى الْمُسْلِمِينَ فَحَبَسَهُ الْعَبَّاسُ فَجَعَلَتِ الْقَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَمُرُّ كَتِيبَةً كَتِيبَةً عَلَى أَبِي سُفْيَانَ فَمَرَّتْ كَتِيبَةٌ قَالَ يَا عَبَّاسُ مَنْ هَذِهِ قَالَ هَذِهِ غِفَارُ قَالَ مَا لِي وَلِغِفَارَ ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ قَال مِثْلَ ذَلِكَ ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُذَيْمٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ وَمَرَّتْ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்) என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் அப்பாஸே! இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர் என்று பதிலளித்தார்கள். (உடனே,) எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!) என்று அபூசுஃப்யான் கூறினார்.

பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் (ரலி) அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.)

கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்க, இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும் என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு) என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர், (அல்லாஹ்வின் தூதர் -ஸல்- அவர்களிடம்) சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள்.

இப்படி... இப்படி... எல்லாம் கூறினார் என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார் என்று சொல்லிவிட்டு, மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கிய மான) நாள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) "ஹஜூன்' என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான கதா' என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குதா' வழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர்.

(புகாரி 4280)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, "அபூஹுரைரா நீயா?'' என்று கேட்டார்கள். நான், "(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அப்போது அவர்கள், "ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)'' என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்''

 (முஸ்லிம் 3647)

குறைஷிகளுக்கு அபயமளித்தல்

அன்சாரிகளின் படை நபியவர்களைச் சுற்றிக் குழுமியது.  இந்தப் படையைக் கண்டதும் குறைஷியர் கடும் அச்சம் கொண்டனர். இது பற்றி முஸ்லிமில் இடம் பெற்றுள்ள செய்தியைக் காண்போம்.

(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, "இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பி வைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்து கொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்'' என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம் படையினரிடம்) "நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)'' என்று கூறிவிட்டு, தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, "நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்''

பிறகு "நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை "ஸஃபா' மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்'' என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை. முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.

 (முஸ்லிம் 3647, 3648, 3649)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்க மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்து கொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டு விட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார். யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக் கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார்'' என்று கூறினார்கள்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

அன்சாரிகளின் குறையும் நபியவர்களின் உரையும்

நபியவர்கள் குரைஷிகளுக்கு அபயம் அளித்தார்கள். அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் "இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது'' என்று பேசிக்கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "வஹீ' வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது "வஹீ' முடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்த மாட்டார்.

அவ்வாறே "வஹீ' வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரி சமுதாயமே!' என்று அழைத்தார்கள். அம்மக்கள் "இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். "இம்மனிதருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னீர்கள்(தானே)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்; அவ்வாறு கூறவே செய்தோம்'' என்று (உண்மை) சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறாயின் (முஹம்மத் - புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன்' 'நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்'' என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்'' என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்' என்று சொன்னார்கள். அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (5 / 173)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِى عُمَرَ - وَاللَّفْظُ لاِبْنِ أَبِى شَيْبَةَ - قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ ابْنِ أَبِى نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِى مَعْمَرٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ دَخَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَكَّةَ وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ كَانَ بِيَدِهِ وَيَقُولُ « (جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا) (جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ) زَادَ ابْنُ أَبِى عُمَرَ يَوْمَ الْفَتْحِ.

 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் "உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது'' (17:81) என்றும் "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப் போவதில்லை'' (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.

(முஸ்லிம 3650)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்' எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே "உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது'' என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் "ஸஃபா' குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

(புகாரி 1601)

மக்கா வெற்றியின் போது மாநபியின் நிலை

பொதுவாக எந்த வெற்றியின் போதும் எந்தத் தலைவனாக இருந்தாலும் ஆர்ப்பரிப்பதும், கொக்கரிப்பதும்தான் நடைபெறும். ஆனால் அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்கள் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதைக் கண்டு இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (6 / 169)

4835- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ سُورَةَ الْفَتْحِ فَرَجَّعَ فِيهَا. قَالَ مُعَاوِيَةُ لَوْ شِئْتُ أَنْ أَحْكِيَ لَكُمْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَفَعَلْتُ.

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது  ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) "அல்ஃபத்ஹ்' எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் "தர்ஜீஉ' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.

(புகாரி 4835)

இப்னு கதல் கொல்லப்படுதல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொன்று விடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள்.

(புகாரி 1846)

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி . . .

மக்கா வெற்றி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு என்பதை நாம் அறிவோம். காரணம் அரபுலகில் பலரும் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றி எனும் இந்நிகழ்வையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய நிகழ்வு நடைபெற்றதும் அலைஅலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தனர்.

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், "மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?'' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், "அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக.... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்.... கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், "அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார்.

புகாரி 4302

கஃபாவின் சாவியை வேண்டுதல் -

நபித்தோழர்களுடன் தொழுகை

மக்காவில் நுழைந்ததும் கஃபாவின் சாவியைக் கேட்டு வாங்கி, தாமே கஃபாவைத் திறந்தார்கள். பிறகு உள்ளே தொழுதார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது "கஸ்வா' எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம்  "(கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபி (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கி, பிறகு வெளியேறினர்.

மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு(உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?'' என்று கேட்டேன். அவர்கள், "அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்'' என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?'' என்று கேட்க மறந்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது

(புகாரி 4400)

மக்காவின் புனிதம் பற்றி பொது அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், "இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்கா வெற்றி நாளில், "(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது.

அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக்கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! "இத்கிர்' புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) "இத்கிரை'த் தவிர'' என்று விடையளித்தார்கள்.

(முஸ்லிம் 2632)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹுதஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்டஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிர என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

 (புகாரி 2434)

உயர் குலப் பெண்ணின் திருட்டும் நபியவர்களின் உத்தரவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது.

அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்? என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி) அவர்கள், எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.

(புகாரி 4304)

அதன் பிறகு சில நாட்கள் நபிகள் நாயகம் மக்காவில் தங்கி முக்கிய போதனைகளைச் செய்தார்கள். இதுதான் மக்கா வெற்றியின் சுருக்க நிகழ்வுகளாகும். இணை வைப்பு எனும் அசத்தியம் அழிந்து ஏகத்துவம் எனும் சத்தியம் வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றி முஸ்லிம்களுக்கு வலிமையையும் கண்ணியத்தையும் அளித்தது. அது நாள் வரையிலும் மக்காவில் அடிமைப்பட்டுக்கிடந்த முஸ்லிம்கள் கண்ணியத்தைப் பெற்றார்கள்.

முழு அரபுலகமும் இஸ்லாமின் வசமானது.  முஸ்லிம்களின் நற்பண்புகளால் இஸ்லாம் மென்மேலும் வளர்ச்சியை அடைந்தது.

 

நபித்தோழர்கள் மூலம்தானே குர்ஆன் கிடைத்தது?

பீ.ஜைனுல் ஆபிதீன்

சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானுக்கு CERTIFICATE கொடுத்தது அவர்கள்தானே? அவர்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குரானின் மீது சந்தேகம் ஏற்படுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது சரியான கேள்வி போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இக்கேள்வி சிந்தனைக் குறைவினால் ஏற்பட்டதாகும். இதில் உண்மையும் இல்லை. எந்த லாஜிக்கும் இல்லை.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும், திருக்குர்ஆனின் அற்புதநடை காரணமாகவும், தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம்தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.

நபித்தோழர்கள்தான் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதிமன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?

நீதிமன்ற உத்தரவை இவர்தான் என்னிடம் கொண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படிக் கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?

உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும் உங்கள் வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.

குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்து தந்திருந்தும் நபித்தோழர்கள் தான் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்கிறீர்களே அதுவாவது உண்மையா?

கேள்வி கேட்கும் உங்களுக்கும் எனக்கும் நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?

நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்குச் சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா?

இதையே இன்னும் தீவிரமாகச் சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.

இப்படியெல்லாம் கூர்மையாகச் சிந்தித்தால் உங்கள் வாதம் பொருளற்றது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற வாதங்களுக்குப் பதிலாக நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கருத்து வேறு தகவல் வேறு என்ற ஆய்வுக் கட்டுரை கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இன்னும் தெளிவு கிடைக்கும்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோரின் தவறான வாதங்களுக்குப் பதில் அறிய நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலை வாசிக்கவும்.

March 12, 2016, 1:37 PM

பிப்ரவரி தீன்குலப் பெண்மணி 2016

ஓயாது ஓரிறைப்பணி

மனிதன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தலையாய கடமை அவனுக்கு எந்தப் பொருளையும் இணையாக்காமல் வணங்குவதாகும். இந்த அடிப்படைக் கொள்கையை உலகக்குத் தெளிவுபடுத்த வந்தவர்கள்தான் இறைத்தூதர்கள்.

உயிரையும் துச்சமாக மதித்து இந்தக் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்தார்கள். இதனால் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பலர் தங்கள் உயிரையும் இழந்தார்கள்.

இறைத்தூதர்கள், நல்லடியார்களின் சிறந்த பணியினால் இன்றும் ஓரிறைக் கொள்கை நிலைத்து நிற்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓரிறைக் கொள்கையை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களின் எதிர்க்கும் விதமும் கடுமையாக இருக்கத்தான் செய்யும். என்றாலும் மன உறுதிமிக்க ஏகத்துவக் கொள்கையாளர்கள் அவர்களின் அனைத்து சதிகளையும் வென்று இவ்வுலகில் இக்கொள்கை நிலைபெறச் செய்வார்கள்.

என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) அவர்களிடம் வரும்.

இந்த இறைத்தூதரின் வாக்குப்படி ஏகத்துவச் சொந்தங்கள் எத்தனை எதிர்ப்பு வந்தாலும், இந்தக் கொள்கையில் நீடித்தும் இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்து கொண்டும் இருப்பார்கள்.

பணத்தாலும், பதவியாலும், உடலாலும் எண்ணற்ற துன்பங்களை இணைவைப்பாளர்கள் செய்து வந்தாலும், இந்தக் கொள்கையை அல்லாஹ் ஒளிரச் செய்வான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும், அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும், அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்

(அல்குர்ஆன் 61:8,9)

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்

இஸ்லாமிய வரலாறு கண்ட புரட்சிப் பெண்கள்

எம்.எஸ். ஜீனத் நிஸா,

ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்.

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அவர்களில் பெரும்பாலானோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன்:12:106

பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இந்த இணைவைப்பில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்களே! இதற்கு எடுத்துக்காட்டாக லூத் மற்றும் நூஹ் நபியின் மனைவிமார்களைக் குறிப்பிடலாம்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. "இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!'' என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

இணைவைப்பை ஆதரித்தவர்களும் பெண்கள்தான். இந்த இணைவைப்பைக் கடுமையாக கண்டித்து அதற்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும் பெண்கள்தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றிருந்த பெண்கள் கூட எதை இழந்தாலும் இழப்போம் பகட்டு வாழ்க்கையை மட்டும் இழக்க மாட்டோம் என்று இறுமாப்புடன் இருந்த பெண்களெல்லாம் வரலாற்றை வென்றெடுத்த பெண்களாக மாறி சரித்திரத்தில் சாதனை படைத்துள்ளார்கள் என்பதற்கு ஃபிர்அவ்னின் மனைவி சிறந்த எடுத்துக்காட்டாவார்.

இணைவைப்புக்கு எதிராக பிர்அவ்னின் மனைவி

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 66:11

மன்னனின் மனைவியாக இணைவைப்பில் இருப்பதை விட படைத்தவனின் அடிமையாக இருப்பதே மேல் என்று எண்ணற்ற துன்பங்களை ஏற்றவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அம்மையார் ஆவார்கள்.

இவ்வுலக இன்பத்தை விட மறு உலக இன்பமே மேல் என்பதை விளங்கி இணைவைப்புக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைக்குப் பயந்து இறை நம்பிக்கையாளருக்கு முன்மாதிரியாகத் திழந்தவர்கள் அன்னை ஆஸியா அம்மையார். உலக மக்கள் இவ்விசயத்தில் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும்.

இணைவைப்புக்கு எதிராக உடன்படிக்கை செய்த நபித்தோழியர்கள்

நபிகளார் காலத்தில் கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த பெண்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை கொடுக்கும்போது அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று உடன்படிக்கை செய்து இணை வைப்பிற்கு எதிராகக் களமிறங்கிய காட்சியை நாம் காணமுடிகின்றது. அதுவே அவர்களின் உடன்படிக்கைகளில் முதன்மையாகவும் இருந்தது.

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 60:12

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உறுதிமொழி அளித்தால், அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள் எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க  மாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

நூல் : புகாரி (7214)

இவ்வாறாக இணைவைப்புக் கொள்கையை எதிர்ப்பதில் காலம் காலமாக பெண்களின் பங்களிப்பு இருந்து கொண்டே இருந்தது. இத்தகைய பட்டியலில் உள்ளவர்கள்தாம் சத்திய சஹாபியப் பெண்மணிகளும். அவர்கள் தம் உயிரிலும் மேலான இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக சந்தித்த சோதனைகள் ஏராளம். ஆரம்ப காலத்தில் எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளின் போதும், மக்கத்து குரைஷிகள் முஸ்லிம்களிடத்தில் நடந்து கொண்ட வெறித்தனமான செயல்களின் போதும், ஹிஜ்ரத், ஜிஹாத் போன்ற முக்கியமான காலகட்டங்களின்போதும் ஸஹாபியப் பெண்மணிகளிடம் காணப்பட்ட உறுதியும், பொறுமையும், சகிப்புத் தன்மையும் சொல்லி மாளாதவைகளாகும்.

தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓர் மகத்தான இஸ்லாமியப் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் சஹாபியப் பெண்மணிகள் ஆற்றிய சேவை மகத்தானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நபித்தோழியர்களின் வாழ்க்கைப் பாதையை இன்றைய இஸ்லாமியப் பெண்மணிகளும் பின்பற்றி சமூக சீர்த்திருத்தப் பணியில் எழுச்சியூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக ஸஹாபியப் பெண்மணிகள் எவ்வாறு வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் வரலாறு கூறும் படிப்பினைகள் என்னவென்பதை இன்றைய பெண்மணிகள் அறிந்திட வேண்டும். நபித்தோழியர்கள் எவ்வாறு தங்களின் வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அறிவுரைகளை ஏற்று அதன்படி செயல்பட முன் வரவேண்டும்.

 

இணைவைப்பு தொடர்பான நபிமொழிகள்

ரூபான் எம்.ஐ.எஸ்.ஸி

முதல் கடமை இணைவைக்காமல் இருப்பது

قال فإن حق الله على العباد أن يعبدوه ، ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: புகாரீ 2856

மிகப்பெரிய பாவம்

حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ قُلْتُ ثُمَّ أَيُّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ رواه البخاري 4477

அப்துல்லாஹ்பின்மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், "நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லி விட்டு, "பிறகு எது?'' என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4477)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 225)

2654- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلاَثًا قَالُوا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَجَلَسَ ، وَكَانَ مُتَّكِئًا فَقَالَ أَلاَ وَقَوْلُ الزُّورِ قَالَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை) என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

நூல் : புகாரி (யீ2654)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 / 15)

32- حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ (ح) قَالَ : وَحَدَّثَنِي بِشْرٌ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدٌ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ عَبْدِ اللهِ ، قَالَ : لَمَّا نَزَلَتِ : {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَيُّنَا لَمْ يَظْلِمْ فَأَنْزَلَ اللَّهُ : {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள் எங்களில் (தமக்குத் தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (32)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 12)

2766- حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الْمَدَنِيِّ ، عَنْ أَبِي الْغَيْثِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا : يَا رَسُولَ اللهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.

நூல்: புகாரி (2766)

5708حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (5708)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 162)

3334- حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ ، عَنْ أَنَسٍ يَرْفَعُهُ أَنَّ اللَّهَ يَقُولُ لأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ أدَمَ أَنْ لاَ تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلاَّ الشِّرْكَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ஆம் என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுவான்.

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி) நூல் :புகாரி ( 3334)

இணைவைப்பு இல்லாதவர்களுக்கே மன்னிப்பு

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 67)

5215 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الأَعْمَشُ عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّى شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّى ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِى يَمْشِى أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِى بِقُرَابِ الأَرْضِ خَطِيئَةً لاَ يُشْرِكُ بِى شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً யு. قَالَ إِبْرَاهِيمُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْحَدِيثِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்து விடுவேன்.

யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச் செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணைவைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்: முஸ்லிம் (5215)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 11)

5013 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلاَّ رَجُلاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ فَيُقَالُ أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا யு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது  "இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்'' என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (5013)

இணைவைத்திருந்தால் இறைத்தூதர்களின் பெற்றோருக்கும் நரகமே

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (1 / 132)

347 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ أَبِى قَالَ « فِى النَّارِ யு. فَلَمَّا قَفَّى دَعَاهُ فَقَالَ « إِنَّ أَبِى وَأَبَاكَ فِى النَّارِ யு.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்'' என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (347)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 65)

2304 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ زَارَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ فَقَالَ « اسْتَأْذَنْتُ رَبِّى فِى أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِى وَاسْتَأْذَنْتُهُ فِى أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِى فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ யு.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன்.  எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1777)

சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே

سنن الترمذى - مكنز - (5 / 1)

1079 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِى سَلَمَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا யு. رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),

நூல் திர்மிதி (1079)

உதவி தேடுதல் அல்லாஹ்விடமே

سنن الترمذي - شاكر + ألباني (4/ 667)

إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله

நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ (2440)

அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றுதல்

1341حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَمَّا اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ أُولَئِكِ إِذَا مَاتَ مِنْهُمْ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّورَةَ أُولَئِكِ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறித்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்முசலமா (ரலி), உம்முஹபீபா (ரலி)  ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரது உருவப் படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (1341)

1599حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ آخِرُ مَا تَكَلَّمَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْرِجُوا يَهُودَ أَهْلِ الْحِجَازِ وَأَهْلِ نَجْرَانَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَاعْلَمُوا أَنَّ شِرَارَ النَّاسِ الَّذِينَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ رواه احمد

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள். மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான்.

அறிவிப்பவர் : அபூஉபைதா (ரலி)

நூல் : அஹ்மத் (1599)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 67)

أَلاَ وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ أَلاَ فَلاَ تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ إِنِّى أَنْهَاكُمْ عَنْ ذَلِكَயு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள். நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கின்றேன்.

அறிவிப்பவர். ஜூன்துப் (ரலி)

நூல்: முஸ்லிம் (918)

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (2/ 169)

1746 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ نَافِعٍ أَخْبَرَنِى ابْنُ أَبِى ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لاَ تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا وَلاَ تَجْعَلُوا قَبْرِى عِيدًا وَصَلُّوا عَلَىَّ فَإِنَّ صَلاَتَكُمْ تَبْلُغُنِى حَيْثُ كُنْتُمْ யு.

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் பெருநாளாக ஆக்கிவிடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 1746,

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (2/ 111)

عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : في مرضه الذي مات فيه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مسجدا

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர். ஆயிஷா ரலி

நூல். புகாரி 1330

தர்ஹாக்களை இடித்தல்

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 61)

1764 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبِ بْنِ أَبِى ثَابِتٍ عَنْ أَبِى وَائِلٍ عَنْ أَبِى الْهَيَّاجِ الأَسَدِىِّ قَالَ قَالَ لِى عَلِىُّ بْنُ أَبِى طَالِبٍ أَلاَّ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِى عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ لاَ تَدَعَ تِمْثَالاً إِلاَّ طَمَسْتَهُ وَلاَ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ.

அபுல் ஹய்யாஜ் அல் அஸதி அறிவிக்கிறார்கள்.

அலி (ரலி) அவர்கள், என்னிடம் நபி ஸல் அவர்கள் எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு உன்னை அனுப்புகிறேன். எந்தச் சிலையையும் அதனை அழிக்காமலும் உயர்த்தப்பட்ட எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமலும் விட்டு விடாதே! என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1764)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (3/ 61)

1765 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

நபி (ஸல்) அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்:  ஜாபிர் ரலி

நூல்: முஸ்லிம்  (1765)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 61)

1763 - وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ ح وَحَدَّثَنِى هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِى عَمْرُو بْنُ الْحَارِثِ - فِى رِوَايَةِ أَبِى الطَّاهِرِ - أَنَّ أَبَا عَلِىٍّ الْهَمْدَانِىَّ حَدَّثَهُ - وَفِى رِوَايَةِ هَارُونَ - أَنَّ ثُمَامَةَ بْنَ شُفَىٍّ حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِأَرْضِ الرُّومِ بِرُودِسَ فَتُوُفِّىَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ بِقَبْرِهِ فَسُوِّىَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْمُرُ بِتَسْوِيَتِهَا.

ஸுமாமா பின் ஷுஃபை அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள "ரோடிஸ்' தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்றைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்  (1763)

 

நோய் நிவாரணம் அழிப்பவன் அவனே

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (7/ 157)

5675 حدثنا موسى بن إسماعيل ، حدثنا أبو عوانة عن منصور ، عن إبراهيم ، عن مسروق ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا ، أو أتي به- قال أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (7 / 172)

5744- حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ ، حَدَّثَنَا النَّضْرُ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ : أَخْبَرَنِي أَبِي ، عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَرْقِي يَقُولُ امْسَحِ الْبَاسَ رَبَّ النَّاسِ بِيَدِكَ الشِّفَاءُ لاَ كَاشِفَ لَهُ إِلاَّ أَنْتَ.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைத் துடைப்பாயாக! நிவாரணம் உன் கரத்தில்தான் உள்ளது. உன்னைத் தவிர துன்பத்தை நீக்குபவர் வேறு எவரும் இல்லை என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள்.

நூல்: புகாரி (5744)

நேர்ச்சை அல்லாஹ்விற்கே

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 177)

عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه.

அல்லாஹ்விற்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்.: ஆயிஷா (ரலி)

நூல்:  புகாரி (6696, 6700)

அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (6/ 84)

وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான்.

அறிவிப்பவர். அலீ பின் அபீ தாலிப் ரலி

நூல்: முஸ்லிம்  (4001)

மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே!

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (6/ 99)

أن رسول الله صلى الله عليه وسلم قال : مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم ما في غد إلا الله ، ولا يعلم ما تغيض الأرحام إلا الله ، ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ، ولا تدري نفس بأي أرض تموت ، ولا يعلم متى تقوم الساعة إلا الله.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

அறிவிப்பவர். இப்னு உமர் ரலி

நூல். புகாரி 4697

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (5 / 105)

4001- حَدَّثَنَا عَلِيٌّ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான்  அவர்களிடம்) எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள் (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4001)

سنن ابن ماجة ـ محقق ومشكول - (3 / 91)

1897- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي الْحُسَيْنِ اسْمُهُ : الْمَدَنِيُّ ، قَالَ : كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدَّفِّ وَيَتَغَنَّيْنَ ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ، فَقَالَتْ : دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي ، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ ، وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ : وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ ، فَقَالَ : أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ.

நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமண நாளன்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில் எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார் என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹுஸைன்,

நூல்: இப்னுமாஜா (1897)

பாவங்களை மன்னிப்பவன்

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (1 / 211)

834- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا ، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்

இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்! என்றார்கள்.

நூல் புகாரி (834)

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (8 / 83)

6306- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا الْحُسَيْنُ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ عَنْ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ ، قَالَ : حَدَّثَنِي شَدَّادُ بْنُ أَوْسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَيِّدُ الاِسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي اغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ قَالَ ، وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهْوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهْوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன்.

நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ, அவர் சொர்ககவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல்: புகாரி (6306)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (2/ 185)

وَاعْتَرَفْتُ بِذَنْبِى فَاغْفِرْ لِى ذُنُوبِى جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை (என்று தொழுகையில் நிற்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

நூல்: முஸ்லிம் (1419)

தாயத்து

16781حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَنْصُورٍ عَنْ دُخَيْنٍ الْحَجْرِيِّ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا قَالَ إِنَّ عَلَيْهِ تَمِيمَةً فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا فَبَايَعَهُ وَقَالَ مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ رواه أحمد

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். (அவர்களில்) ஒன்பது நபர்களிடம் நபியவர்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்தீர்கள். ஒருவரை விட்டு விட்டார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒன்பது பேரிடம் பைஅத் செய்தீர்கள் ஒருவரை விட்டு விட்டீர்களே? என்று கேட்டார்கள். (அதற்கு) அவர் மீது தாயத்து                                                                     இருந்தது என்று நபியவர்கள் கூறிவிட்டு தனது கையை நுழைத்து அதை அறுத்தார்கள். (பிறகு) அவரிடம் பைஅத் செய்தார்கள். மேலும், யார் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (16781)

இணைவைப்பு வாசகம் இருந்தால் அனுமதியில்லை

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَرَى فِي ذَلِكَ فَقَالَ اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ يَكُنْ فِيهِ شِرْكٌ رواه مسلم 4079

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்து வந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப் பார்ப்பதை என்னிடம் சொல்லிக் காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்  பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4427)

சகுணம் பார்த்தல்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود 3411

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)

நூல்: அபுதாவுத் (3411)

5757- حدثنا محمد بن الحكم ، حدثنا النضر ، أخبرنا إسرائيل ، أخبرنا أبو حصين ، عن أبي صالح ، عن أبي هريرة ، رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم قال : لا عدوى ، ولا طيرة ، ولا هامة ، ولا صفر.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது.

அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)

நூல்: புகாரி (5757)

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني - (3 / 236)

3316 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ مِقْسَمٍ الثَّقَفِىُّ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ حَدَّثَتْنِى سَارَّةُ بِنْتُ مِقْسَمٍ الثَّقَفِىِّ أَنَّهَا سَمِعَتْ مَيْمُونَةَ بِنْتَ كَرْدَمٍ قَالَتْ : خَرَجْتُ مَعَ أَبِى فِى حَجَّةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَسَمِعْتُ النَّاسَ يَقُولُونَ : رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَجَعَلْتُ أُبِدُّهُ بَصَرِى فَدَنَا إِلَيْهِ أَبِى وَهُوَ عَلَى نَاقَةٍ لَهُ مَعَهُ دِرَّةٌ كَدِرَّةِ الْكُتَّابِ فَسَمِعْتُ الأَعْرَابَ وَالنَّاسَ يَقُولُونَ : الطَّبْطَبِيَّةَ الطَّبْطَبِيَّةَ فَدَنَا إِلَيْهِ أَبِى فَأَخَذَ بِقَدَمِهِ قَالَتْ : فَأَقَرَّ لَهُ وَوَقَفَ فَاسْتَمَعَ مِنْهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ إِنِّى نَذَرْتُ إِنْ وُلِدَ لِى وَلَدٌ ذَكَرٌ أَنْ أَنْحَرَ عَلَى رَأْسِ بُوَانَةَ فِى عَقَبَةٍ مِنَ الثَّنَايَا عِدَّةً مِنَ الْغَنَمِ. قَالَ : لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهَا قَالَتْ خَمْسِينَ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- : « هَلْ بِهَا مِنَ الأَوْثَانِ شَىْءٌ யு. قَالَ : لاَ. قَالَ : « فَأَوْفِ بِمَا نَذَرْتَ بِهِ لِلَّهِ யு. قَالَتْ : فَجَمَعَهَا فَجَعَلَ يَذْبَحُهَا فَانْفَلَتَتْ مِنْهَا شَاةٌ فَطَلَبَهَا وَهُوَ يَقُولُ : اللَّهُمَّ أَوْفِ عَنِّى نَذْرِى. فَظَفِرَهَا فَذَبَحَهَا.

'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத் 2881,

மரத்தின் மீது நம்பிக்கை வைத்தல்

سنن الترمذي - شاكر + ألباني (4/ 475)

 2180 - حدثنا سعيد بن عبد الرحمن المخزومي حدثنا سفيان عن الزهري عن سنان بن أبي سنان عن أبي واقد الليثي : أن رسول الله صلى الله عليه و سلم لما خرج إلى خيبر مر بشجرة للمشركين يقال لها ذات أنواط يعلقون عليها أسلحتهم فقالوا يا رسول الله أجعل لنا ذات أنوط كما لهم ذات أنواط فقال النبي صلى الله عليه و سلم سبحان الله هذا كما قال قوم موسى اجعل لنا إلها كما لهم آلهة والذي نفسي بيده لتركبن سنة من كان قبلكم

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாங்கள் குஃப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் இலந்தை மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.

அந்த இடத்தைக் கடக்க நேரிட்டபோது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்: ‘அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போன்று நமக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று அவர்கள் கேட்டனர். (அதற்கு மூஸா நபி) நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). என்று கூறினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறிவிட்டு ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவீர்கள்’

அறிவிப்பவர். அபுவாகித் அல்லைஸி (ரலி)

நூல். திர்மிதீ 2180

ஜோதிடனிடம் குறி கேட்பது

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (7/ 37)

4488 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى - يَعْنِى ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

அறிவிப்பவர். ஸஃபிய்யா

நூல்: முஸ்லிம் (4488)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (2 / 70)

935 - عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِىِّ ஞ்قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ. قَالَ « فَلاَ تَأْتِهِمْ யு. قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ.قَالَ « ذَاكَ شَىْءٌ يَجِدُونَهُ فِى صُدُورِهِمْ فَلاَ يَصُدَّنَّهُمْ யு.

... நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?'' என்றேன். அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்'' என்றார்கள். நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?'' என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்களின் எண்ணமாகும். இது உங்களை' (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி),

நூல்: முஸ்லிம் (935)

9171حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَوْفٍ قَالَ حَدَّثَنَا خِلَاسٌ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه احمد

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

குறிகாரன் அல்லது வருங்காலத்தைக் கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என யாரேனும் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை நிராகரித்து விட்டான்.

அறிவிப்பவர். அபூஹூரைரா(ரலி) நூல்: அஹ்மது (9171)

சூனியத்தை நம்புதல்

36212حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ رواه أحمد

(பெற்றோரை) நோய்வினை செய்பவன், சூனியத்தை (உண்மையென) நம்புபவன், மதுவில் (குடிப்பதில்) மூழ்கியவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

நூல்: அஹ்மத் (36212)

5764 حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سُلَيْمَانُ عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِي الْغَيْثِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : اجْتَنِبُوا الْمُوبِقَاتِ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணை வைப்பதும், சூனியமும் அவற்றில் அடங்கும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி (5764)

வரம்புமீறி புகழக்கூடாது

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (4/ 204)

3445- حدثنا الحميدي ، حدثنا سفيان قال : سمعت الزهري يقول ، أخبرني عبيد الله بن عبد الله ، عن ابن عباس سمع عمر ، رضي الله عنه ، يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்:  புகாரி 3445

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 231)

2662- حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ أَثْنَى رَجُلٌ عَلَى رَجُلٍ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ قَطَعْتَ عُنَقَ صَاحِبِكَ مِرَارًا ثُمَّ قَالَ - مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لا مَحَالَةَ فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا وَاللَّهُ حَسِيبُهُ ، وَلاَ أُزَكِّي عَلَى اللهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர் என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, உங்களில் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்துதான்  ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன் என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (2662)

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (8 / 228)

5730 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى جَمِيعًا عَنِ ابْنِ مَهْدِىٍّ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ حَبِيبٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِى مَعْمَرٍ قَالَ قَامَ رَجُلٌ يُثْنِى عَلَى أَمِيرٍ مِنَ الأُمَرَاءِ فَجَعَلَ الْمِقْدَادُ يَحْثِى عَلَيْهِ التُّرَابَ وَقَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ نَحْثِىَ فِى وُجُوهِ الْمَدَّاحِينَ التُّرَابَ.

அபூ மஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், "அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்று கூறினார்கள்

நூல் : முஸ்லிம் (5730)

நட்சத்திரத்தால் மழை பொழிந்தது என்று நம்புவது

846حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ رواه البخاري

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா' எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர்.

அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி (846)

3406حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُسَدَّدٌ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اقْتَبَسَ عِلْمًا مِنْ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنْ السِّحْرِ زَادَ مَا زَادَ رواه أبو داود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டார். அதிகப்படுத்துபவன் அதிகப்படுத்திக் கொள்கிறான்.

நூல்: அபுதாவுத் (846)

அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்ய வேண்டாம்.

3829 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ الْحَسَنَ بْنَ عُبَيْدِ اللَّهِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ قَالَ سَمِعَ ابْنُ عُمَرَ رَجُلًا يَحْلِفُ لَا وَالْكَعْبَةِ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ رواه أبو داود

கஅபாவின் மீது சத்தியமாக என்று ஒரு மனிதர் சத்தியம் செய்வதை இப்னு உமர் (ரலி) செவியுற்றார்கள். அப்போது யார் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்கிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான் என்று நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

நூல்: அபுதாவுத் (3829)

3836 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللَّهِ فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا فَقَالَ لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள்  அவர்கள் கூறியதாவது:

"எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் "உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்'என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (3836)

6646 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْرَكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَهُوَ يَسِيرُ فِي رَكْبٍ يَحْلِفُ بِأَبِيهِ فَقَالَ أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்து கொண்டிருந்த போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள். "அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (6646)

4860- حدثنا عبد الله بن محمد ، أخبرنا هشام بن يوسف ، أخبرنا معمر ، عن الزهري عن حميد بن عبد الرحمن ، عن أبي هريرة ، رضي الله عنه ، قال رسول الله صلى الله عليه وسلم : من حلف فقال في حلفه واللات والعزى فليقل لا إله إلا الله ، ومن قال لصاحبه تعال أقامرك فليتصدق.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறி விட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்.

அறிவிப்பவர். அபூஹூரைரா (ரலி)

நூல். புகாரி 4860

பிறருக்காக எழுந்து நிற்பது

2679حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا قَبِيصَةُ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ وَابْنُ صَفْوَانَ حِينَ رَأَوْهُ فَقَالَ اجْلِسَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ وَفِي الْبَاب عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ مُعَاوِيَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ رواه الترمذي

தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர். முஆவியா (ரலி)

நூல்கள். திர்மிதீ 2679, அபூதாவூத் 4552

مسند أحمد بن حنبل (3/ 151)

12548 - حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد ثنا حماد عن حميد عن أنس قال : كان رسول الله صلى الله عليه و سلم يقبل وما على الأرض شخص أحب إلينا منه فما نقوم له لما نعلم من كراهيته لذلك

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும்போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

பிறருக்கு காட்டுவதற்காக தொழுவது

مسند أحمد بن حنبل (4/ 125)

رسول الله صلى الله عليه و سلم يقول من صلى يرائي فقد اشرك ومن صام يرائي فقد اشرك ومن تصدق يرائي فقد اشرك فقال

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறருக்குக் காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணை கற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.

நூல். அஹ்மத் 17180

مسند أحمد بن حنبل (5/ 428)

23680 - حدثنا عبد الله حدثني أبي ثنا يونس ثنا ليث عن يزيد يعنى بن الهاد عن عمرو عن محمود بن لبيد ان رسول الله صلى الله عليه و سلم قال : ان أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر يا رسول الله قال الرياء يقول الله عز و جل لهم يوم القيامة إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء

“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள் என அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 23006

 

உன்னத இறைவனுக்கு உவமை கற்பிக்கும் இழிசெயலை வெறுத்த உம்மு ஸுலைம் (ரலி)

- ஜவாஹிரா, காயல்பட்டிணம்.

இன்று ஏகத்துவவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையில் சறுகக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று, அவர்களுடைய திருமண விஷயத்தில் ஆகும்.

தங்களுக்கு ஆதாயம் கிடைக்கின்றதென்றால் கொள்கையைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதுவரையிலும் தவ்ஹீதைக் குறித்து வீராவேசமாகப் பேசித் தள்ளியவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு மனோ இச்சைக்கு மயங்கி விடுவார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணை, கொள்கை வாதியா, இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. தமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும் என்ற மனோநிலையே அவர்களிடம் குடிகொண்டிருக்கும்.

ஆனால், செம்மல் நபியவர்களால் 'சுவனத்துப் பெண்' எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதைப் பின்வரும் சம்பவம்  மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது.

அறிவிப்பவர்: அனஸ் (ரளி) (நூல்: நஸாயி 3289)

இந்தச் சம்பவத்திலே நமக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. உம்மு ஸுலைம் அவர்கள் ஏற்கனவே மாலிக் இப்னுந் நள்ர் என்பவருக்கு மனைவியாக இருந்து வந்தார்கள். அவர் மரணித்த பிறகு விதவையாக, அதுவும் பல குழந்தைகளுக்குத் தாயாக இருந்த சூழ்நிலையில் தான் இந்தச் சம்பவம் நடைபெறுகின்றது.

அபூ தல்ஹா அவர்கள், மதீனாவாசிகளில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராகத் திகழ்ந்தார். அப்படியிருந்தும் கூட ஏற்கனவே ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட உம்மு ஸுலைமை விரும்பிப் பெண் கேட்க முன்வந்துள்ளார். இங்குதான் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் கொள்கை உறுதி, வியப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

'நாமோ பல குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஆதரவற்ற விதவையாக இருக்கின்றோம். இவரை விட்டு விட்டால் நமக்கு மறுவாழ்வு கிடைப்பது கஷ்டம். எனவே வலிய வந்த இந்த வரனைத் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக் கொள்வோம்: அவர் எந்தக் கொள்கையில் இருந்தால் தான் என்ன?' என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. 'ஏகத்துவம்' என்னும் தூய கொள்கையை ஏற்றுக் கொண்ட நமக்கு, 'இணைவைப்பு' என்னும் அசுத்தமான செயலைச் செய்யக்கூடிய ஒருவர் எப்படி வாழ்க்கைத் துணையாக வரமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிடவே, தம்முடைய எண்ணத்தை அபூ தல்ஹாவிடம் மிகத் துணிச்சலாக வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்கள்.

அவர்களுடைய இத்தகைய துணிச்சலுக்குக் காரணம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இவ்வுலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையே மேலானது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இதோ இறைமறை இயம்புகின்றது:

இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன் 2:221)

இந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம்தான், உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூ தல்ஹாவை ஏற்க மறுத்ததற்கு முக்கிய காரணம். ஆனால், ஸஹாபியப் பெண்மணிகளின் வரலாற்றை வானளாவப் புகழும் நம் சமுதாயப் பெண்மணிகள், திருமணம் என்று வந்துவிட்டால் தம்முடைய ஈமானையே அடகு வைத்து விடுகின்றனர். கன்னிப் பெண்களுக்கே வாழ்க்கைத் துணை அமைவது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது என்பது மிகவும் அரிது என்பதால் 'யாராக இருந்தால் என்ன? அவர் எந்தக் கொள்கை உடையவராக இருந்தால் என்ன? நமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும்' என்றே அவர்கள் தமக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர்.

ஆண்களும் இதில் விதிவிலக்கல்ல. 'பெற்றோர் சொன்னார்கள்; உற்றார் சொன்னார்கள்; எனவே, அவர்கள் மனம் கோணும்படி நடக்கக் கூடாது' என சால்ஜாப்பு சொல்லி, கொள்கையைத் தூக்கி எறிந்து விடுகின்றனர்.

ஆனால், இவர்களெல்லாம் நம்மைப் படைத்த  நாயன் முன்னிலையில் தம்முடைய செயலுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 'தமக்கு ஏற்ற கொள்கைவாதிகள் தம்மை மணம் முடிக்க முன்வரமாட்டார்களா?' என்று தவ்ஹீதையே தம்முடைய உயிர் மூச்சாகக் கொண்டுள்ள பல கன்னியரும், விதவையரும் காத்துக் கொண்டிருக்க, இவர்கள் அந்தப் பெண்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு, கொள்கையற்ற வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால்  வாழ்க்கைத் துணை அமையப் பெறாத அந்தப் பெண்களின் கண்ணீருக்கு இவர்கள் காரணமில்லையா? பாதிக்கப்பட்ட அவர்கள் இறைவனிடத்தில் இவர்களுக்கு எதிராகக் கையேந்தி விட்டால், இவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பத்தான் முடியுமா?

எனவே, வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில், ஏகத்துவ வாதிகள், உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் வார்த்தைகளைத் தம் மனக்கண் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டும்.

'இணை வைக்கும் இழிசெயலுக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம்; இணை வைக்கும் பெரும் பாவத்தில் வீழ்ந்து கிடப்போரை எம் வாழ்க்கைத் துணையாக ஏற்கவே மாட்டோம்; இணை வைத்தலை நஞ்சாய் வெறுப்போம்; அணுவளவும் அதற்கு இடம் கொடோம்; அதன்  சாயல் கூட எம் மீது படிய விடோம்' என அனைவரும் சபதம் ஏற்போம்.

 

கேள்வி பதில்

?நான் லண்டனில் வசித்து வருகிறேன். இங்கு என்னால் முடிந்தவரையில் ஹராமான வருமானத்தைத் தவிர்த்து நேர்மையாக உழைக்கிறேன் . ஆனால்  என்னைச்  சுற்றி  உள்ளவர்கள்  அவ்வாறு இல்லாமலும்  என்னைக்  குறை சொல்லிக்  கொண்டும்  இருக்கிறார்கள். மேலும்  அவர்களைவிட  எனக்கு  சோதனை  அதிகமாகவும்  நெருக்கடி அதிகமாகவும்  உள்ளன. சமயத்தில்  எனக்கு  அவர்களைப்  போல் இருந்து விடலாம்  போலும்  தோன்றுகிறது. இந்நிலையில்  நான்  என்ன செய்வது? தயவு  செய்து  நல்ல  விளக்கம்  தரவும். எனக்காக துவாசெய்யவும் .

இப்ராஹிம், மின்அஞ்சல் வழியாக

!பொதுவாக இந்த உலகம் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம்,இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

அறிவிப்பவர்  அபூ ஹூரைரா (ரலி)

நூல் முஸ்லிம் (5663)

சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிகவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு இந்த உலகவாழ்க்கையும்.

மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் இறைவனுக்கு மாறுசெய்பவர்கள் செல்வச் செழிப்புகளுடன் அலங்காரத்துடனும் சுற்றித் திரிவது இறைவழியில் செல்வதை விட்டும் நம்மை ஒரு திசை திருப்பி விடக்கூடாது.

இறைவனுக்கு மாறுசெய்பவர்கள் இவ்வுலகில் நன்றாக இருப்பதைப் போன்று தெரிந்தாலும், மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் கிடைக்காமல் இருப்பதற்காகத்தான் இறைவன் அவர்களுக்கு வாரிவழங்குகிறான். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் முஃமின்களுக்கு எச்சரிக்கை செய்கின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதி. பின்னர் அவர்களின் புகலிடம் நரகம். தங்குமிடத்தில் அது கெட்டது. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

(அல்குர்ஆன் 3 : 196 - 198)

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அவர் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறாரா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.

நாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும்போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை அல்லாஹ் சோதிக்கக் கூடும். இது போன்ற நேரங்களில் நாம் தடம் புரண்டு விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெறமுடியும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் (2 : 155, 156, 157)

இவ்வுலகின் வறுமை போன்ற துன்பங்களைக் காட்டி ஷைத்தான் நம்மை தவறான பாதையில் அழைத்துச் செல்வற்கு முயற்சி செய்வான். நாம் ஒருபோதும் ஷைத்தானின் மாயவலையில் வீழ்ந்து விடக் கூடாது.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2 : 268

இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக்கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான்

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது. ''இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

அல்குர்ஆன் (2 : 14, 15)

பெரும்பாலும் இவ்வுலகில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசைதான் மனிதர்கள் மார்க்கம் தடை செய்த காரியங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

பணம் சம்பாதிக்கும் விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் மிகச் சிறந்த உபதேசத்தை நமக்குச் செய்துள்ளார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலளித்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,)வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்துக் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு ஜீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

நூல் : புகாரி (6427)

அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நன்னோக்கத்தில் வாழ்ந்தால் யாரும் நம்மை வழிகெடுத்துவிட முடியாது. உள்ளம் நேர்வழியின் மீது நிலைத்திருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் (3: 8)

 

?ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அந்தப் பெண்ணுடைய தாயார் பூப்பெய்த பெண்ணின் தகப்பனுக்குக்  கூட சொல்லக் கூடாது என்கிறார்கள். இது போல் ஏதாவது ஹதீஸ் உள்ளதா?

ஒரு பெண் வயதிற்கு வரும் போது மார்க்கம் என்று நினைக்காமல் கலாச்சாரம் என்ற அடிப்படையில் நெருங்கிய உறவினர்களை அழைக்கலாமா? இது பிற சமயத்திற்கு ஒப்பானதல்ல. ஹிந்து சமுதாயத்தினர் அந்தப் பெண்ணை ஒதுக்குப் புறமாக தங்க வைத்து விடுவார்கள். நாம் அவ்வாறு செய்வதில்லை. இது தொடர்பாக விளக்கம் தேவை.

ரிஃபா, மதுரை 

!ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்தச் செய்தியை தேவை என்ற அடிப்படையில் யதார்த்தமான முறையில் பிறரிடம் தெரிவிப்பதற்கு மார்க்க அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை. வயதிற்கு வந்த பெண்ணுடைய தகப்பனாரிடம் கூட தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவது மூடநம்பிக்கையாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பருவமடைந்தார்கள். அதன் பிறகு நபியவர்கள் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள் என்பது போன்ற தகவல்கள் புகாரி, முஸ்லிம் போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

ஒரு பெண் பருவமடைந்ததை தேவை என்ற அடிப்படையில் யதார்த்தமான முறையில்  மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் தவறில்லை என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

பெண்கள் வயதிற்கு வருதல் என்பது இன்று புதிதாக ஏற்பட்ட ஒன்றல்ல. அல்லாஹ் இவ்வுலகில் பெண்களைப் படைத்த காலம் முதல் பெண்கள்  வயதிற்கு வருதல் என்பது இயற்கையாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண்மக்களை வழங்கியிருந்தான். நான்கு பெண்மக்களுமே பருவ வயதை அடைந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்மக்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.

பெண்கள் பருவ வயதை அடையும் போது, அதற்கு விழா எடுக்க வேண்டும் என்பதோ அல்லது உறவினர்களை அழைக்க வேண்டும் என்பதோ அவசியமாக இருந்திருந்தால் நபியவர்கள் அதற்கு முன்மாதிரியாக இருந்திருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அருமை ஸஹாபாக்களோ பெண்கள் பூப்பெய்தலுக்காக எந்த ஒரு சடங்கும் செய்ததில்லை.

பெண்கள் பூப்பெய்தால் உறவினர்களை அழைக்க வேண்டும் என்பது கலாச்சாரம் கிடையாது. ஒரு வாதத்திற்கு கலாச்சாரம் என்று வைத்துக் கொண்டாலும் முட்டாள் தனமான ஒரு காரியத்தை கலாச்சாரம் என்ற போர்வையில் செய்வது கூடாது. நாம் மலம் ஜலம் கழிப்பது எப்படி ஒரு இயற்கையான நிகழ்வோ அது போன்றுதான் ஒரு பெண் வயதிற்கு வருதல் என்பது இயற்கையான ஒரு நிகழ்வாகும். இது போன்ற நிகழ்வுகள் வயதிற்கு வந்த பெண்ணிற்கு மாதா மாதம் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இதனை உறவினர்களை அழைத்து தெரிவிக்க வேண்டும் என்பது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? மூடத்தனமான காரியங்களை கலாச்சாரம் என்ற பெயரில் செய்வதற்கு மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

பெண்கள் பருவவயதை அடைந்தால், அவர்களுக்குச் சடங்கு செய்தல் என்பதும், பூப்புனித நீராட்டு விழா நடத்த வேண்டும் என்பதும் மாற்று சமுதாய மக்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட முட்டாள்தனமான கலாச்சாரம் ஆகும்.

“யார் மாற்றுமதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : பஸ்ஸார்.

எனவே இது போன்ற பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான காரியங்களை கலாச்சாரம் என்ற பெயரில் கூட ஒரு முஃமின் செய்வது கூடாது.

?மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்?

பைசுல் ரஹ்மான், மதுரை

!மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாதவரை நாம் நேசித்துக் கொள்ளலாம்.

நாம் யாரை நேசித்தாலும் பகைத்தாலும் அல்லாஹ்விற்காக எந்த அடிப்படையிலே அமைந்திருக்க வேண்டும். இறை நேசத்தை விட வேறு எதுவும் நம்மிடம் மோலோங்கி விடக்கூடாது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1.அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.             

2.ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3.நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறை மறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறிவிப்பவர் :  அனஸ் (ரலி) 

நூல் : புகாரி (16)

நாம் அல்லாஹ்வைப் போன்று யாரையும் நேசிப்பது கூடாது.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது  போல்  அவர்களை  விரும்புவோரும்  மனிதர்களில்  உள்ளனர். நம்பிக்கை  கொண்டோர்  (அவர்களை விட)  அல்லாஹ்வை  அதிகமாக நேசிப்பவர்கள்.  அநீதி இழைத்தோர்  வேதனையைக்  காணும்போது அனைத்து  வல்லமையும்  அல்லாஹ்வுக்கே  என்பதையும்,  அல்லாஹ் கடுமையாகத்  தண்டிப்பவன்  என்பதையும்  கண்டு  கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 2:165)

அல்லாஹ்வை நேசிக்க வேண்டுமென்று மட்டும் சொல்லாமல்,அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கலாகாது என்றும், அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். மற்ற எவரையும், எதனையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்களே மூமின்கள் என்றும் இங்கே விளக்கம் தருகிறான்.

யார் அல்லாஹ்வை நேசிப்பது போல் அல்லாஹ் அல்லாதவர்களை நேசிக்கின்றாரோ அவர் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கியவராவார். இய்யாக நஃபுது' (இறைவா உன்னையே வணங்குகிறோம்) எனும் உறுதிமொழியை மீறியவராவார். இறைவனளவுக்கு மற்றவர்களை நேசிப்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த காஃபிர்களுடைய (இஸ்லாத்தை ஏற்காதவர்களுடைய) கொள்கையாக இருந்திருக்கின்றது என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும்போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்அன் 39:45)

இறைவனின் பெயரைக் கூறும்போது ஏற்படாத மகிழ்ச்சி இறைவனல்லாத மற்றவர்களைக் கூறும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால் இறைவனின் அழைப்பை, பாங்கைக் கேட்கும் போது ஏற்படாத பக்தி சமாதிகளைக் காணும்போது ஒருவனுக்கு ஏற்படுமானால், அவனது உள்ளத்தில் இறைவனின் நேசத்தை விட மற்றவர்களின் நேசமே அதிகமாகக் குடி கொண்டுள்ளது என்று பொருள். இய்யாக நஃபுது' என்பதை அவன் பூரணமாக ஏற்கவில்லை.

இறைவனது கட்டளை இதுதான் என்று கூறப்படும்போது எனது தந்தை,எனது தாய், எனது மனைவி இப்படிக் கூறுகிறார்களே என்று ஒருவன் கூறத் துணிந்து விட்டால், அவனது உள்ளத்திலும் இறை நேசத்தை விட அவனது குடும்பத்தினர் மீது அதிக நேசம் இருக்கிறது என்று பொருள்! இய்யாக நஃபுது' என்பதற்கும் இவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

பின்வரும் வசனங்களில் நாம் இறைவனை விட வேறு யாரையும் நேசிக்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும்,உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும்,நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும்வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 9 : 24)

அல்லாஹ்வை நேசித்தல் என்பது இறைச் செய்திகளைப் பெற்றுத் தந்த நபிகள் நாயகத்தை நேசிப்பதையும் உள்ளடக்கியதாகும்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்.  உங்கள்  பாவங்களை  மன்னிப்பான். அல்லாஹ்  மன்னிப்பவன்;  நிகரற்ற  அன்புடையோன்''  என்று கூறுவீராக! அல்லாஹ்வுக்கும்,  இத்தூதருக்கும்  கட்டுப்படுங்கள்!  நீங்கள் புறக்கணித்தால்  (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்''எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 3 : 31, 32)

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி  (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

(அல்குர்ஆன் 33 : 6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (15)

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும்வரை (நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (6632)

 

?ஜும்மா தொழுகையில் கலந்துகொள்ள முடியாமல் போனால் 2 ரக்அத் தொழ வேண்டுமா? அல்லது நான்கு ரக்அத்  லுஹர்  தொழவேண்டுமா?

அனீஸ்,இராம்நாட்

!ஜூம்ஆ உட்பட எந்தத் தொழுகையாக இருந்தாலும் இரண்டு பேர் இருந்தால்  ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி)

நூல்கள்  திர்மிதி (204) அபூதாவூத் 487

மேற்கண்ட ஹதீஸில் இரண்டு நபர்கள் சேர்ந்து தொழுவதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். இது ஜூம்ஆ தொழுகை உட்பட நாம் ஜமாஅத்தாகத் தொழக்கூடிய அனைத்து தொழுகைகளுக்கும் உரிய சட்டம்தான்.

எனவே ஜூம்ஆ தொழுகை தாமதமாகிவிட்டால் இரண்டு நபர்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் உரை நிகழ்த்தி இருவரும் ஜமாஅத்தாக இரண்டு ரக்அத் ஜூம்ஆ தொழுது கொள்ளலாம்.

தொழுவதற்கு யாருமே இல்லையென்றால் லுஹராக நான்கு ரக்அத்துகள் தொழுது கொள்ள வேண்டும்.                                  

?வீடு  வாங்குவது  வரதட்சனையாகுமா?   ஏனெனில்  நபி (ஸல்) அவர்கள் பதினோரு திருமணம் செய்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மனைவியருக்கும்  வீடு கட்டி  கொடுத்து  இருக்கிறார்களா?  அல்லது ஏதாவது  ஒரு மனைவிக்கு வீடு கொடுத்து இருக்கிறார்களா? விளக்கம்தேவை.

முஹம்மது இஹ்சாஸ்,  இலங்கை

!உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக இருக்கிறது. கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்வதற்காக தன்னுடைய உழைப்பில் வீடு கட்டிக் கொள்வதோ அல்லது மனைவிக்கு வழங்குவதோ மார்க்க அடிப்படையில் தவறானது கிடையாது.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக அப்பெண் வீட்டாரிடம் ஒரு வீட்டையே வரதட்சணையாகப் பெறும் கொடுமை சில முஸ்லிம் ஊர்களில் நிலவி வருகிறது. இது மாபெரும சமூகக் கொடுமை ஆகும். இதைத்தான் நாம் வரதட்சணைக் கொடுமை என்று கூறிவருகிறோம்.

நபியவர்கள் மரணிப்பதற்கு முன்னால் உயிருடன் இருந்த அனைத்து மனைவிமார்களும் தனித்தனி வீடுகளில் வசித்ததாக நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். இது நபியவர்கள் தம்முடைய மனைவிமார்களுக்கு செய்து கொடுத்த வசதிதானே தவிர, நபியவர்கள் தம்முடைய மனைவியின் குடும்பத்தாரிடமிருந்து பெற்றவை அல்ல.

நபியவர்களின் மனைவிமார்கள் வசித்தது அனைத்துமே நபியவர்களின் வீடுதான் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلَالِ ثُمَّ الْهِلَالِ ثَلَاثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتْ الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنْ الْأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ فَيَسْقِينَا

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் தவிர, அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2567, 6459)

 

February 14, 2016, 4:58 PM

ஜனவரி தீன்குலப் பெண்மணி 2016

தலையங்கம்

வெள்ளம் ஏற்பட என்ன காரணம்?

கடந்த மாதம் சென்னை, கடலூரை பெரும் வெள்ளம் புரட்டிப் போட்டு விட்டது.

ஒரு நூற்றாண்டு வரை இது போன்ற வெள்ளத்தை சென்னை நகரம் கண்டதில்லை. இவ்வளவு பெரும் வெள்ளம் ஏற்பட என்ன காரணம்?

ஏராளமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

இயற்கையான நீர்நிலைகளைப் பராமரிப்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

ஏராளமான ஏரிகளும், குளங்களும் காணமல் போனாலும் இருக்கும் ஏரிகளையும் குளங்களையும் சரிவர பராமரித்து ஆழப்படுத்தி அதிக கொள்ளளவு இருக்கும் வகையில் ஏரி, குளங்களை அமைக்காததால் ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டது.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டிருந்தால், சென்னையானது இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம்.

சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன, சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன. இந்த வெள்ளத்திலிருந்து விழித்துக் கொள்ளவில்லையானால் இது போன்று பெரும் நகரங்கள் பாதிப்புக்குள்ளாவது நிச்சயம்.

இரண்டாவது முக்கிய காரணம், பெரும் மழை ஏற்படும் என்று வானிலை அறிக்கை எச்சரித்திருந்தும் அதற்குரிய முன்னேற்பாடுகளை அரசும், அதிகாரிகளும் உரிய வகையில் செய்யாததால் உரிழப்பும் எண்ணற்ற துன்பங்களும் ஏற்பட்டுள்ளன.

அதிகாரிகளும் மந்திரிகளும் கால சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விரைவான நடவடிக்கையை எடுக்காமல் மேலிட உத்தரவுக்காக பல நாட்கள் காத்திருந்தது, வெள்ளப்பாதிப்புகளை அதிகப்படுத்திவிட்டது.

எதற்கு காத்திருக்க வேண்டும், எதை விரைவில் செய்ய வேண்டுமென்ற சமயோசித புத்தி இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதால் இன்று மக்களின் பெரும் கோபத்திற்கு ஆளாகி நிற்கின்றனர்.

வரும் காலத்திலாவது இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் தமிழகத்தில் எங்கும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பாக்கிறார்கள். அரசு செய்யுமா என்று காத்திருந்து பார்ப்போம்.

 

கேள்வி கேட்பது குற்றமா?

மூஸா (அலை) அவர்களிடம் கேட்க தடைசெய்யப்பட்டது எது?

தொடர் 2

எம். முஹம்மது சலீம், MISc, மங்கலம்.

வாதம் 2:

இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை) மறுப்பாக மாற்றுபவர் நேர் வழியை விட்டு விலகி விட்டார்.

(திருக்குர் ஆன் 2:108)

மேலிருக்கும் வசனத்தை காட்டி கேள்வி கேட்கக் கூடாது என்று வாதம் வைக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே விரிவான விளக்கமான பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஜமாஅத்தின் மூத்த அறிஞர் சகோ. பீ.ஜே அவர்கள் இந்த வசனத்திற்கு குர்ஆன் விளக்கவுரை பகுதியில் கொடுத்திருக்கும் பதிலை இங்கு காண்போம்.

மூஸாவிடம் கேட்கப்பட்டது என்ன? :

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று2:108 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

அந்த நான்கு விஷயங்களையுமே இவ்வசனம் குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் முழுமையான விளக்கமாக அமையும்.

1. மூஸா நபியவர்களையும் அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸாவின் சமுதாயத்தினர் கண்டார்கள்.

"மூஸாவே! இவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக'' என்று கேட்டனர்.

(திருக்குர்ஆன் 7:138)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணை கற்பிக்கும் மக்களுக்கு உரியது. "தாத்து அன்வாத்' என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணை கற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்கவிடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு "தாத்து அன்வாத்' எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்'' என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன். "அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக' என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன் சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்'' என்று கூறினார்கள்.

(நூல்: திர்மிதீ 2106)

இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும் போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்ற கருத்தை இவ்வசனம் தாங்கி நிற்கின்றது. கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு,மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால் கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 நாட்களில் சடங்குகள் செய்தல்,ஷைகுமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பல கடவுள்களைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்தித்தால் விளங்கலாம்.

2. மூஸா நபியின் சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக் கண்ட பின்னர் "அல்லாஹ்வை எங்கள் கண்முன்னே காட்டுவீராக!'' என்று மூஸாவிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு மூர்ச்சையானார்கள்.

(திருக்குர்ஆன் 4:153)

மனிதர்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று இறைவன் அறிவித்திருக்கும்போது, அதை மாற்றியமைக்குமாறு இறைவனிடம் கேட்பது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

எதைத் தனது முடிவாக இறைவன் அறிவித்திருக்கிறானோ அதை மாற்றுமாறு கோரக் கூடாது என்பதையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.

3. இறைவன் எந்தச் சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம் இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸாவிடம் கேட்டுள்ளனர்.

மூஸா நபியின் காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால் இறந்தவர் மீது அடியுங்கள்; இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.

ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் ஏதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன? நிறம் என்ன? தன்மை என்ன என்று தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:67-71)

4.வஹீ அருளப்படும் காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.

திருக்குர்ஆன் 5:101, 102 வசனங்களில் இது தெளிவாகவும் குறிப்பிடப்படுகின்றது.

"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டு விட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான் அழிந்து போயினர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

(நூல்: புகாரி 7288)

"தடை செய்யப்படாத ஒன்றைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டு அக்கேள்வி யின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால் அந்த மனிதர்தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

(நூல்: புகாரி 7289)

மூஸா நபியிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபிகள் நாயகத்திடம் கேட்கக் கூடாது என்பது மேற்கண்ட நான்கு விஷயங்களையும் உள்ளடக்கும்.

நபிமார்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என்ற கருத்தைத்தான் இவ்வசனம் கூறுகின்றது.

தங்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது; தாங்கள் கூறுவதைக் கண் மூடி நம்ப வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைப் போலி அறிஞர்கள் ஆதாரமாக்க முயல்கின்றனர். நபிமார்களிடம் கேள்வி கேட்டால் அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து அது ஹலாலாகவோ, ஹராமாகவோ ஆகிவிடும். ஆனால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லாததால் அவர்களிடம் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் எந்த அறிஞரிடம் கேள்வி கேட்டாலும் அதன் காரணமாக ஹலாலான எதுவும் ஹராம் ஆகாது. ஹராமான எதுவும் ஹலால் ஆகி விடாது. எனவே மார்க்க அறிஞர்கள், தம்மிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு இவ்வசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது.

கேள்வியின் நோக்கமும் விதமும்

மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை. இஸ்லாம் கேள்வி கேட்பதை அனுமதித்து இருக்கிறது. அதேசமயம், எப்படி வேண்டுமானாலும் கேள்வியைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதிலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்லும் மார்க்கம், கேள்வி கேட்பதிலும் சில கட்டுப்பாடுகளை வரையறையை வைத்துள்ளது.கேட்கப்படும் கேள்விகள் அவசியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். மார்க்கம் தொடர்பாக தமக்குள்ளும் சரி,பிறர் மத்தியிலும் சரி தேவையில்லாமலும் அறிவற்ற முறையிலும் கேள்விகளைக் கேட்கும் பழக்கம் நம்மிடம் இருக்கவே கூடாது.

மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இறுதியில், "அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?'' என்றுகூடக் கேட்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி (7296)

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்'' என்று கூறுவார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள்,  (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப்) பேசுவது, அதிகமாகக் (கேள்வி அல்லது யாசகம்) கேட்பது,செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

நூல்: புகாரி (2408) (6473)

திருக்குர்ஆனை, நபிமொழிகளைப் படித்தால் நமக்குப் புரியாது; மக்களின் கேள்விகளைத் தொகுத்து விளக்கம் கொடுத்திருக்கும் இமாம்களைப் பின்பற்றுங்கள் என்று ஒருபுறம் சொல்கிறார்கள். இன்னொரு புறம், மார்க்கம் தொடர்பாக யாரிடமும் கேள்விகளை கேட்கக் கூடாது என்கிறார்கள். இவர்கள் இப்படி முரண்பட்டுப் பேசுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களைப் போன்று மார்க்கத்தில் இல்லாத பொல்லாத செய்திகளை எல்லாம் சொல்லி இவர்களால் மக்களை ஏமாற்ற முடிவதில்லை. இப்போது பெரும்பாலான மக்கள் எந்தவொரு செயலுக்கும் சரியான ஆதாரம் இருக்கிறதா? என்று சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலை மலர தவ்ஹீத்வாதிகளை அல்லாஹ் காரணமாக ஆக்கியிருக்கிறான் என்றால் அது மிகையல்ல, (அல்ஹம்துலில்லாஹ்). எனவே, சத்திய மார்க்கத்தை கண்மூடித்தனமாக அணுகாமல், சீரிய முறையில் சிந்தித்து தூய மூறையில் பின்பற்றுவோமாக.

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

முரண்படக் காரணம் என்ன?

தொடர் 2

அப்துல் கரீம், MISc

அறிவிப்பாளர்கள் செய்யும் தவறு  - மூன்றாம் காரணம்

குர்ஆன், ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்படும் படியான போலித்தோற்றம் ஏன் தோன்றுகிறது என்பதற்கான காரணங்களை பார்த்துவருகிறோம். சென்ற தொடரில் இரு காரணங்களை அதற்குரிய உதாரணங்களுடன் விரிவாகக் கண்டோம். இனி அடுத்தடுத்த காரணங்களைக் காண்போம்.

அறிவிப்பாளரின் தவறால் முரண்பாடாகத் தோன்றும்

சில தருணங்களில் ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் செய்கிற தவறும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து விடும்.

ஒரு அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்து விடுவார். 

இன்னும் சில நேரத்தில் அந்த மொத்த செய்தியையே நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் அறிவிப்பாளரின் தவறினால்அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு சொல்லப்பட்ட வாசகம் மற்றும் செய்தி குர்ஆனோடு மோதும் வகையில் மல்லுக்கட்டி கொண்டு நிற்பது மட்டுமின்றி நமக்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

இது போன்ற செய்திகளைச் சற்று கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்து, சிக்கலை ஏற்படுத்தும் அச்சொல் யாருடையது என்பதைக் கண்டுபிடித்து விட்டால் அப்போது உதயமான முரண்பாடு அடுத்த வினாடியில் அஸ்தமனமாகிவிடும்.

இதற்கு உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்.

ஒருவர் பாவத்தை மற்றவர் சுமப்பாரா?

ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் பல இடங்களில் தெளிவுபடச் சொல்கிறது.

"அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6 164

அவர்கள், சென்றுவிட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2 134

மேலும் பார்க்க அல்குர்ஆன் 17 15, 35 18, 39 7

குர்ஆன் கூறும் இந்த அடிப்படை சித்தாந்தத்திற்கு மாற்றமாக, முரணாக சில ஹதீஸ்களின் சொற்பிரயோகங்கள் உள்ளதை பின்வரும் செய்தியின் வாயிலாக அறியலாம்.

 (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இறந்தபோது அவர்களுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அழுதார். அப்போது நான்"அருமை மகளே! பொறுமையாக இரு! "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?'' என்று கேட்டேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் 1687

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுவதால் மண்ணறையில் (கப்று) அவர் வேதனை செய்யப்படுவார்.

அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 1688.

ஒருவர் செய்த பாவத்திற்கு இன்னொருவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று குர்ஆன் கூறுகிறது.

ஆனால் குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார், அதாவது குடும்பத்தார் செய்த பாவத்திற்காக? சம்பந்தமே இல்லாத இறந்தவர் தண்டிக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தெளிவான முரண்பாடாகும்.

ஆழ்ந்த சிந்தனையோடு இதை அணுகவில்லையென்றால் குர்ஆனை விளக்குவதற்காக வந்த நபிகள் நாயகம் (ஸல்) ஏன் குர்ஆனுக்கு முரணாக இவ்வாறு சொன்னார்கள் என்று நாம் இடியாப்ப சிக்கலில் சிக்கி, முரண்பாட்டிலேயே உழன்று கொண்டிருப்போம்.

இந்த முரண்பாடு தோன்றியதற்கு அடிப்படைக் காரணம், நபிகளார் சொல்லாததை நபியின் சொல்லாக அறிவிப்பாளர் தவறுதலாக அறிவித்ததேயாகும்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்.

"குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனைசெய்யப்படுகின்றார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.) "இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் :  உர்வா பின் ஸுபைர் (ரஹ்), நூல் : புகாரி 3978

அதாவது குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்பது நபியின் வார்த்தை அல்ல.

பாவத்தின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தார்களோ அழுது கொண்டிருக்கிறார்கள் என்று தான் நபிகள்நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இந்த வாசகத்தை மாற்றியமைத்து குடும்பத்தார் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று அறிவிப்பாளர் தவறுதலாகக் கூறிவிட்டார்.

தவறாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தைதான் குர்ஆனோடு முரண்பட்டு நிற்கின்றது. நபியின் கூற்று முரண்பட்டு நிற்கவில்லை.

அறிவிப்பாளரால் தவறுதலாக அறிவிக்கப்பட்ட அந்த வார்த்தையை நபியின் வார்த்தை என்று எடுத்துக் கொள்வதால் குர்ஆனுக்கு முரணாக நபியின் சொல் அமைந்துவிட்டதுபோல தோற்றம்  ஏற்பட்டு விடுகிறது.

ஆக இங்கே தீராத முரண்பாடு தோன்றுவதற்கு அறிவிப்பாளர்கள் அறியாமல் செய்த தவறே பிரதான காரணமாக அங்கம் வகிக்கின்றது என்பதைப் புரியலாம்.

அது அறிவிப்பாளரிடமிருந்து ஏற்பட்ட தவறு என்பது புலப்படும் போது முரண்பாடு இல்லாமல் போய் விடுகிறது.

அறிவிப்பாளரின் தவறினாலும் முரண்பாடுகள் முளைக்கின்றன என்பதற்கு உதாரணமாக பின்வரும் நபிமொழியையயும் குறிப்பிடலாம்.

சகுனம் உண்டா?

நன்மை, தீமை எல்லாமே ஏற்கனவே இறைவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றது. அல்லாஹ் ஏற்படுத்திய விதியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

இக்கருத்து பல குர்ஆன் வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:47

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9 51

இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது.இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

அல்குர்ஆன் 57 22

இந்தக் குர்ஆன் வசனங்களோடு மோதும் வகையில் பின்வரும் செய்தி அமைந்துள்ளது.

"அபசகுனம் என்பது குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே. என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல் : புகாரி 2858

சகுனம் பார்க்கக் கூடாது, எல்லாமே இறைவிதிப்படி நடக்கின்றது என்று குர்ஆனும், இல்லையில்லை,  சிலவற்றில் சகுனம் பார்க்கலாம் என்று நபிமொழியும்  ஒன்றுக் கொன்று முரண்படான கருத்தை போதிக்கின்றது.

(குறிப்பு சகுனம் பார்த்தல் இணை வைத்தலாகும் என்று நபிகளாரே கூறிவிட்டபடியால், இணை வைப்பில் விதிவிலக்கு இருக்காது என்பதை கவனத்தில் கொள்க.)

இத்தகைய முரண்பாட்டிற்கும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்ட தவறே காரணமாகும்.

ஹதீஸ் அறிவிப்பாளர் நபியின் சொல்லை சரியாக அறிவிக்காததும் நபி சொல்லாததை தவறுதலாக நபியின் சொல்லாக அறிவித்ததுமே இதற்குக் காரணம் என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும்தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு இந்த பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.

 அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்), நூல் : அஹ்மத் (24894)

குறிப்பிட்ட மூன்றிலும் சகுனம் உண்டு என நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் புறத்திலிருந்து ஏற்பட்டதவறு என்றும் அறியாமைக் காலத்தில் இந்த மூன்றிலும் மக்கள் சகுனம் பார்த்து வந்தார்கள் என்பதைத்தான் நபியவர்கள் கூறினார்கள் என்றும் அன்னை ஆயிஷா விளக்கமளிக்கின்றார்கள்.

 மூன்றில் சகுனம் உண்டு என்று நபியின் சொல்லாக அறிவிக்கப்பட்டது முற்றிலும் அறிவிப்பாளர்களின் தவறே என்பதை அனைத்து அறிஞர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இப்படி அறிவிப்பாளர்கள் செய்யும் அறியாப் பிழையும் குர்ஆனோடு சில ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்க  முக்கிய காரணமாகும்.

சொல்லப்போனால் அதிகமான ஹதீஸ்களுக்கிடையில் பொய்யான முரண்பாடு தோன்ற இந்த வகை காரணமே அதிகமானது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்து கொள்கிறோம். அறிவிப்பாளர்களின் பிழைகள் கண்டுணரப்படும்போது இந்த வகை முரண்பாடுகள் இயல்பாக கழன்று போகும்.

மாறுபட்ட சூழல் - நான்காம் காரணம்

முரண்பாடு தோன்ற இன்னொரு காரணம் செய்தி சொல்லப்பட்ட சூழலை நாம் அறியாமல் இருப்பதாகும்.

இரண்டு வெவ்வேறு, காலச் சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரண்டு செய்திகளை ஒரே சூழலில் சொல்லப்பட்டதைப் போன்று பொதுவாக ஒப்பு நோக்கிப் பார்ப்பது, தெளிவற்ற முரண்பாடு தோன்ற காரணமாக உள்ளது.

ஒரு பொருளுக்கு ஒரு சூழ்நிலையில் ஒரு சட்டமும், வேறு ஒரு சூழ்நிலையில் அதற்கு மாற்றமான சட்டமும் சொல்லப்பட்டிருக்கும்.

இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட இரு சட்டங்களை ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்ட இரு சட்டங்களைப் போன்று பார்த்தால் முரண்பாடாகத்தான் தெரியும். இரண்டையும் பிரித்து அணுகும் போது முரண்பாடு அற்றுப் போவதை கண்கூடாகக் காணலாம்.

குர்பானி இறைச்சியை சேமிக்கக் கூடாதா?

பின்வரும் நபிமொழிகள் மூன்று நாள்களுக்கு மேல் குர்பானி இறைச்சிகளை சேமித்து வைக்கக் கூடாது என்று தடை செய்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரும் தமது குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாம்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 3984

நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்குமுன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானிஇறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்),

நூல் : முஸ்லிம் 3982

மேற்கண்ட நபிமொழிக்கு முரணாக இறைச்சியை அதிக நாள்கள் சேமித்து வைக்க நபிகள் நாயகம் அனுமதி வழங்கியதாக மற்றொரு செய்தி கூறுகிறது.

நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்து வந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்:  முஸ்லிம் 3989

மேலோட்டமாக இந்த இரு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் முரண் இருப்பதைப் போன்று எண்ணத்தோன்றும்.

ஆனால் உண்மை நிலை என்னவெனில், இரண்டு சட்டங்களும் இரு வேறு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதாகும்.

ஏழை மக்கள் பசி பட்டினியுடன் கிடந்த காலச்சூழ்நிலையில் இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து உண்ணக் கூடாது என்று நபியவர்கள் தடுத்தார்கள். அப்போதுதான் அந்த இறைச்சிகள் மூலம் ஏழைகள் பயன் அடைவார்கள் என்பதற்காக இப்படியொரு ஏற்பாடு.

பசி, பட்டினி காலம் இல்லாமற்போய், வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்ட போது இனி குர்பானி இறைச்சிக்கு அத்தகைய எந்த வரையறையும் சட்டமும் இல்லை, எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் சேமித்து வைத்து சாப்பிடலாம் என்ற பொது சலுகையை வழங்கி விட்டார்கள்.

இந்த விளக்கம் நம்முடைய சொந்த விளக்கம் அன்று.

ஹதீஸ்களில் நபிகள் நாயகமே இதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானிஇறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்ற வற்றை அருந்தாதீர்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம் 1778

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அல்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு)வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்'' என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ணவேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்து வையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 3986

குர்பானி இறைச்சியை சேமித்து வைக்கக் கூடாது என்பதும், சேமித்து வைக்கலாம் என்பதும் இரு வேறு மாறுபட்ட சூழ்நிலைகளில் சொல்லப்பட்ட செய்திகளாகும். இரு சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதைப் பிரித்தறியாமல் ஒரே சூழ்நிலையில் சொல்லப்பட்டதைப் போன்று அணுகுவோமேயானால் அப்போது மங்கலான முரண்பாடு தோன்றுவதைத் தவிர்க்க இயலாது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.

இதற்கு மற்றொரு உதாரணமாகப் பின்வரும் செய்தியையும் குறிப்பிடலாம்.

நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கலாமா?

நபிமார்களில் சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாகவும், ஒரு நபிக்கு இல்லாத சிறப்புகள், உயர் அந்தஸ்துகள் சில நபிமார்களுக்கு தான் வழங்கியிருப்பதாகவும் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகிறான்.

இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம்.

அல்குர்ஆன் 2 253

வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை விட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம்.தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதத்தைக்) கொடுத்தோம்.

அல்குர்ஆன் 17 55

நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு உண்டு என்கிற கருத்து இதில் வெளிப்படுகிறது.

பின்வரும் வசனம் இன்னும் தெளிவாக இக்கருத்தை வெளிப்படுத்துகிறது.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.

அல்குர்ஆன் 68 48,49,50.

இப்படி அனைத்து இறைத்தூதர்களும் சமமான அந்தஸ்தில் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக பின்வரும் நபிமொழிகளை பார்க்கும்போது இதற்கு முரணான கருத்து தொனிப்பதை கவனிக்கலாம்.

"அல்லாஹ்வின் தூதர்களுக்கிடையில் ("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6916

நபிமார்கள் அனைவரும் சமமான அந்தஸ்த்தில் இல்லை, அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு உண்டு என திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

அதற்கு மாற்றமாக நபிமார்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று இந்நபிமொழிகள் சொல்கின்றன.

இதனடிப்படையில் பார்க்கும்போது அல்லாஹ் எந்த நபிமார்களுக்கு தனிச்சிறப்பை வழங்கியிருக்கிறானோ அவற்றை குறிப்பிடக் கூடாது என்பது போன்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை என 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அதுபோல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்று2:124, 2:125, 4:125, 11:73, 16:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் மகாமு மஹ்மூத் எனும் புகழத்தக்க மதிப்பை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குவான் என 17:79 வசனம் கூறுகிறது.

ஹவ்லுல் கவ்ஸர் எனும் நீர்த்தடாகம் நபியவர்கள் பொறுப்பில் விடப்படும் என 108:1 வசனம் கூறுகிறது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க:புகாரி: 99, 335, 438, 3340)

இப்படி பல்வேறு இறைத்தூதர்களுக்கு தனிச்சிறப்புகளை இறைவன் வழங்கியிருக்கிறான். இவற்றைக் குறிப்பிட்டு சொல்வதும் கூட தவறு என்ற மறைமுகக் கருத்து மேற்கண்ட நபிமொழியில் உள்ளது.

ஏனெனில் ஒருவருக்கான சிறப்பை எடுத்துச் சொல்லும்போது அது இன்னொருவருக்கு இல்லை என்கிற கருத்தையும் சேர்த்தே சொல்கிறோம். இந்த வகையில் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைப் போன்று தெரிகின்றது.

இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று கூறும்  நபிமொழிகளும், ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்று பல திருக்குர்ஆன் வசனங்களும் கருத்து தெரிவித்து ஒன்றுக் கொன்று முரண்பட்டு நிற்பதைப் போல வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.

இந்த முரண்பாடு தோன்றுவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட சூழலை கவனத்தில் கொள்ளாதது ஒரு காரணமாகும். ஏனெனில் நபிமார்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது குறிப்பிட்ட ஓர் சூழலில் சொல்லப்பட்டது. அது எந்தச் சூழல் என்பது தெரியவரும் போது எது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாகும்? எம்மாதிரியான ஏற்றத்தாழ்வு கூடாது என்பதை விளங்கி விடலாம்.

இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சூழலில் இதை கூறினார்கள் என்பதைப் பாருங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், "(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக)மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, "நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீது சத்தியமாக!' என்றா நீ கூறுகிறாய்?'' என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல் காசிம் அவர்களே! (என் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?'' என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே, நபி (ஸல்)அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, "அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே("ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்' என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள்.

அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி 3414

ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி இன்னொரு இறைத்தூதரை உயர்த்தும் போக்கு இந்த சம்பவத்தில் வெளிப்படுகிறது.

யூதர் நபிகள் நாயகத்தை மட்டம் தட்டி மூஸாவை உயர்த்துகிறார். முஸ்லிமோ அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை உயர்த்திப் பிடிக்கிறார்.

அதனால்தான் யூதருக்கும் முஸ்லிமுக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.

அதுமட்டுமின்றி அல்லாஹ், ரசூல் சொன்ன சிறப்புகளை எடுத்துப் பேசாமல் தங்கள் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு தத்தமது இறைத்தூதர்களை இருவரும் சிறப்பித்து சொல்கிறார்கள் என்பதும் இதில் புரிகிறது.

இது நபிகளாரின் கவனத்திற்கு வரும்போதே இறைத்தூதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.

நபிகள் நாயகம் சொன்ன செய்தியை இந்தச் சூழலோடு இணைத்து புரியும் போது ஒரு இறைத்தூதரை மட்டம் தட்டி, அவரை அற்பமாகக் கருதி இன்னொரு இறைத்தூதரை உயர்த்துவதே கண்டிக்கத்தக்கது என்பது தெளிவாகப் பளிச்சிடுகிறது.

மட்டம் தட்டும் நோக்கமின்றி, நாமாக எதையும் சொல்லாமல் இறைவன் யார் யாருக்கு என்னென்ன சிறப்புத் தகுதிகளை வழங்கினானோ அவற்றை அப்படியே குறிப்பிடுவது ஏற்றத்தாழ்வு கற்பிப்பதாக ஆகாது என்பதையும் இது விளக்கி விடுகிறது.

எனவே எந்த இரு ஆதாரங்கள் முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் அங்கே மாறுபட்ட சூழல் இருக்கின்றதா என்பதிலும் ஒரு கண் வைக்கவேண்டும். இதைக் கவனிக்கும் போது மேலோட்டமாகத் தோன்றிய முரண்பாட்டை எளிதாக அகற்றி விடலாம்.

நேரடிப் பொருளும் இலக்கியப் பொருளும் - ஐந்தாம் காரணம்

குர்ஆன், ஹதீஸ் என இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு தோன்ற மற்றுமொரு காரணம் இலக்கியப் பொருள் அறியாததாகும்.

ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.

இதை பகுத்துணராமல் இரண்டையுமே நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளும் போது முரண்பாடு தலைதூக்கவே செய்யும்.

என்னது இலக்கியம் தெரியாவிட்டால் முரண்பாடு வருமா? இஸ்லாத்திற்கும் இலக்கியத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம்? என்று யோசிக்கிறீர்களா?

முதலில் நாம் கூறும் இலக்கியம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்.

கவிஞர்கள், புலவர்கள் இலக்கியம் என்கிற பேரில் யாருக்கும் புரியாத பாஷையில் பிதற்றிக் கொண்டிருப்பார்களே??

நாடக - சினிமா நடிகர்கள் தூய தமிழில் பத்து பக்க அளவில் வசனங்களை மூச்சு விடாமல் ஒப்புவித்துக் கொண்டிருப்பார்களே??

கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை, இருந்தால் நன்றாயிருக்கும் என்கிறேன் என்கிற பாணியில் கலைஞர் போன்றவர்கள் கூட அவ்வப்போது உளறுவார்களே?

சர்வ நிச்சயம் இந்த இலக்கியத்தைப் பற்றி நாம் பேசவில்லை. குர்ஆன், ஹதீசும் இதைச் சொல்லவில்லை.

நாம் கூறும் இலக்கியம் எது வென்றால்,

எந்த ஒரு வார்த்தையும் சில நேரங்களில் அதன் நேரடிப் பொருளிலும் மற்ற சில நேரங்களில் அதன் மறைமுகப் பொருளிலும் பயன்படுத்தப்படும். இந்த வழக்கு எல்லா மொழியிலும் உண்டு.

விலங்குகள் சரணாலயத்தில் சிங்கத்தைப் பார்த்தேன்

தலைவர் ஒரு சிங்கம்

இதில் விலங்குகள் சரணாலயத்தில் உள்ள சிங்கம் என்பது நேரடிப் பொருள். அது நான்கு கால் சிங்கத்தையே குறிக்கிறது.

தலைவர் ஒரு சிங்கம் என்பதில் உள்ள சிங்கம் மறைமுகப் பொருள். இது நான்கு கால் சிங்கத்தை குறிக்கவில்லை. மாறாக தலைவர் சிங்கத்தைபோன்று வீரமுள்ளவர் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே சிங்கம் என்பது மறைமுகப் பொருளில் வீரன் எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் அல்லாமல் மறைமுகப் பொருளில் பயன்படுத்தப்படுவதே இலக்கியப் பொருள் என்கிறோம்.

இவை பெரும்பாலும் வர்ணனைகளின் போதே அதிகளவில் இடம்பெறும்.

பெண்ணை நிலா மற்றும் மான் போன்றவைகளுக்கு ஒப்பிடுவதும் இந்த வகையைச் சார்ந்ததே.

அதிகம் பேசுபவனை வாய் நீளம் என்றும் எதற்கெடுத்தாலும் அடிப்பவனை கை நீளம் என்று வர்ணிப்பதும் இலக்கியப் பொருள் கொள்ளும்வகையில் உள்ளதே.

இப்படி குர்ஆனிலும் ஹதீஸிலும் கூட நிறைய உதாரணங்கள் இலக்கியப் பொருள்களில் கையாளப்பட்டுள்ளது.

இலக்கியப் பொருள் பற்றி இந்த அளவு புரிந்து கொள்வது போதும்.

இனி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு சான்று நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மற்றொரு சான்று இலக்கியப் பொருளில் கையாளப்பட்டிருக்கும்.

இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நேரடிப் பொருளில் புரியும் போது முரண்பாடு தோன்றுகிறது.

உதாரணத்திற்கு பின்வரும் குர்ஆன், ஹதீஸ் சான்றுகளை கவனியுங்கள்.

மறுமை நாளின் திடுக்கம் எப்போது நிகழும்?

 மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

அல்குர்ஆன் 22 1,2

மறுமை நாளின் திடுக்கத்தில் பாலூட்டும் தாய் தன் குழந்தையை மறந்து விடுவாள், கர்ப்பிணிப் பெண் கருவை ஈன்று விடுவாள் என்று பல நிகழ்வுகள் இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உலகம் அழிந்து மறுமை ஏற்படும் நேரத்தில் இது நிகழும் என்று இவ்வசனத்தை வைத்து புரிந்து கொள்கிறோம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் இது தொடர்பான ஹதீஸைப் படித்தால் இதற்கு முரணான நேரம் - அதாவது மனிதர்கள் அனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்டு,நரகிற்கு செல்வதற்கு முன் - இம்மாதிரியான திடுக்கிடும் நிகழ்வுகள் ஏற்படும் என்பது போன்று சொல்லப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) "ஆதமே!' என்று அழைப்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்'' என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் "(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்''என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள் "எத்தனை நரகவாசிகளை?'' என்று கேட்பார்கள். அதற்கு அவன் "ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)'' என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை (பீதியின்காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 6530

நரகிற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்திடுங்கள் என்று ஆதம் நபிக்கு அல்லாஹ் சொல்வான் என்று இதில் சொல்லப்படுகிறது.

அப்படியெனில் உலகில் வாழ்ந்து மரணித்த எல்லா மக்களும் எழுப்பப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் போதே இது நடைபெறும் என்று விளங்குகிறது. ஏனெனில் அப்போதுதான் ஆதம் நபியிலிருந்து நரகில் செல்லவிருக்கிற அனைத்து மக்களும் ஒன்று திரட்டப்பட்டிருப்பார்கள்.

அந்த நேரத்தின் போது தான் கர்ப்பிணிப் பெண் பிரசவித்து விடுவாள் என்றும் இந்த ஹதீஸில் சொல்லப்படுகிறது.

கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகுள்ள நிலையில் எப்படி ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பாள், பாலூட்டும் நிலையில் கையில் குழந்தையுடன் எப்படி இருப்பாள்? கர்ப்பமாக இருந்து குழந்தையைப் பெற்றெடுப்பது, பாலூட்டுவது போன்ற நிலைகள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு இல்லை.

நிலை இவ்வாறிருக்க, மேற்கண்ட செய்தி மக்களனைவரும் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி கருவை பெற்றெடுப்பதும், பாலூட்டும் தாய் தன் பிள்ளையை மறந்து விடுவதுமான நிகழ்வுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றது.

இத்தகைய முரணான கருத்து தோன்றுவதற்கு அச்சாரமாக விளங்கியது எது?

இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டதுதான்.

அந்தக் குர்ஆன் வசனம் மக்கள் கப்ரிலிருந்து எழுப்பப்பட்ட பிறகு நடக்கவிருக்கிற நிகழ்வுகளைத் தான் குறிப்பிடுகிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அதற்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தியை மேலே நாம் கண்டோம். (புகாரி 6530)

ஆனால் கப்ரிலிருந்து உலக மக்கள் அனைவரும் எழுப்பப்பட்ட பிறகு கர்ப்பிணி பிரசவித்து விடுவாள், பாலூட்டுபவள் மறந்து விடுவாள் என்று நபி கூறுவதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் அப்போது ஏற்படும் திடுக்கம் இந்த அளவு பயங்கரமானதாக இருக்கும் என்று மறைமுகப் பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை அவ்வசனத்தின் இறுதியில் உள்ள வாசகம் தெளிவாக விளக்குகின்றது.

போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனைகடுமையானது.

அல்குர்ஆன் 22 1,2

போதை வயப்பட்டவராக மக்கள் இருப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் உண்மையான போதையில் இருக்கமாட்டார்கள் என்றும் வசனத்தின் இறுதி தெரிவிக்கின்றது.

போதை வயப்பட்டோர் என்பது நேரடிப் பொருள் அல்ல, இலக்கிய பொருள் தான் என்பது இதில் உறுதியாகிறது.

அது போலவே வேதனையின் கடுமை எந்த அளவு உச்சத்தைத் தொடும் என்பதைவிளக்கும் போது,

கர்ப்பிணி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுத்து விடுவாள்.

பாலூட்டும் தாயாக இருந்தால் அவள் கூட தன் குழந்தையை மறந்து விடுவாள்.

அந்த அளவு அல்லாஹ்வின் வேதனை மிகுதியானதாய் இருக்கும்.

இவ்வாறு இலக்கியப் பொருளில் சொல்லப்பட்டதாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் கூட இவ்வாறு பல தருணங்களில் பேசவே செய்கிறோம்.

இவன் படுத்துன பாட்டில் உயிரே போய் விட்டது என்போம்.

என்னப்பா உயிருடன் தான் இருக்கிறாய் ஆனால் உயிரே போய் விட்டது என்கிறாயே என்று யாரும் கேட்டதில்லை, கேட்கவும் மாட்டார்கள்.

உயிர் போகும் அளவு இவன் என்னை துன்புறுத்தி விட்டான் என்பது தான் இந்த வார்த்தையின் பொருள்.

இதே பாணியில் தான் மேற்கண்ட  வசனமும் அதற்கு விளக்கமான ஹதீசும் அமைந்துள்ளது.

இதற்கு இலக்கியப் பொருள் கொள்ளா விட்டால் கப்ரிலிருந்து எழும் போது எப்படி ஒரு பெண் கர்ப்பமாக இருப்பாள்?

அந்த நேரத்தில் எப்படி பாலூட்டுபவளாக அதுவும் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு இருப்பாள்? என்பன போன்ற கேள்விகள் எழும்.

இலக்கியப் பொருளில் பயன்படுத்தப்பட்டதை சரியாக இனம் கண்டு கொண்டால் வீண் கேள்விகள் எழுவதையும் போலி முரண்பாடுகள் உருவாகுவதையும் முற்றாகத் தவிர்த்து விடலாம்.

ஆய்வாளரின் தவறான புரிதல் - ஆறாம் காரணம்

இறுதியாக இன்னும் ஒரு காரணத்தை அலசி விடுவோம்.

இரு சான்றுகளுக்கிடையில் போலி முரண்பாடு உருவெடுக்க சான்றுகளை மையப்படுத்திய பல காரணங்களை அடுக்கினோம். பல நேரங்களில் சான்றுகள் சரியாக இருப்பினும் ஆய்வாளரின் தவறான புரிதல் கூட முரண்பாடு தோன்றக் காரணமாக அமைந்து விடும்.

குர்ஆன், ஹதீஸை ஆய்வு செய்யும் ஆய்வாளர், தான் ஆய்வு செய்யும் விவகாரம் தொடர்பாக எல்லா ஆதாரங்களையும் ஒருங்கே, திரட்டியிருக்க மாட்டார். சில முக்கிய தரவுகளை திரட்டத் தவறியிருப்பார்.

தான் திரட்டிய முழுமை பெறாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யும் பட்சத்தில் பிற சான்றுகளுடன் முரண்பாடான கருத்து தோன்ற அரிதான வாய்ப்புண்டு.

ஒரு சில நேரத்தில் ஆய்வாளர் அனைத்துத் தகவல்களையும் திரட்டியிருப்பார். எனினும் மனிதன் என்ற அடிப்படையில் சில சான்றுகளை தவறாகப் புரிந்து கொள்வதாலும், குர்ஆனுக்கு முரண் போன்ற தோற்றம் ஏற்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இது போன்ற தவறான புரிதலின் காரணத்தினால் குர்ஆனுக்கு முரண்பாடாக கருதிய சம்பவங்கள் உண்டு.

அப்போது நபியவர்கள் அதை குர்ஆனுக்கு முரண் அல்ல என்பதை தக்கவாறு விளக்கி இருக்கிறார்கள்.

அதற்கான ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு:-

 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ் நாடினால் அந்த மரத்தின் கீழ் வாக்குப்பிரமாணம் அளித்தவர்களில் யாரும் நரகத்திற்குள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு ஹஃப்ஸா (ரலி) அவர்கள்"அல்லாஹ்வின் தூதரே! அப்படியல்ல'' என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், ஹஃப்ஸா (ரலி) அவர்களைக் கண்டித்தார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் அ(ந்தநரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், "பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72) என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பவர் : உம்மு முபஷ்ஷிர் (ரலி), நூல் : முஸ்லிம் 4909

பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்ற நபித்தோழர்கள் இறைவன் நாடினால் நரகிற்குச் செல்ல மாட்டார்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லும் போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இது குர்ஆனுக்கு முரண் எனக் குறுக்கிடுகிறார்கள்.

"உங்களில் யாரும் அ(ந்த நரகத்)தைக் கடக்காமல் இருக்க முடியாது'' (19:71) எனும் வசனத்தை ஓதிக் காட்டி இந்த வசனத்திற்கு முரணாக தங்கள் கருத்து உள்ளது என்கிறார்கள்.

உடனே நபியவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் புரிதல் தவறானது என்பதை அதற்கு அடுத்த குர்ஆன் வசனத்தைக் கொண்டு விளக்கிவிடுகிறார்கள்.

"பின்னர் (நம்மை) அஞ்சி நடந்தோரை நாம் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டுவிடுவோம்'' (19:72)என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

பைஅத்துர் ரிள்வானில் பங்கேற்றவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தவர்களின் பட்டியலில் இணைந்து இறைவனால் காப்பாற்றப்படலாம் எனவே நான் சொன்னது முரணான கருத்தல்ல என்பதை தெளிவாக்குகிறார்கள்.

இங்கே ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் சொன்னதை குர்ஆனுக்கு முரண் என்று கருதியது அவர்களின் தவறான புரிதலின் காரணத்தினாலேயே என்பதை அறியலாம்.

இதே போன்ற நிகழ்வு ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது. இதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் "எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள்.நான் "அல்லாஹ் (தன் வேதத்தில்) "வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமைப் பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 6536

மறுமையில் துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை பெறுவார் என்று நபிகளார் கூறியதும் இக்கருத்தை குர்ஆனுக்கு முரணாக அன்னை அவர்கள் கருதுகிறார்கள். காரணம் வலது கையில் பதிவேடு வழங்கப்பட்டவரும் விசாரிக்கப்படவே செய்வார். ஆனால் அவர் வேதனை பெறமாட்டார் என்று 84 8 வசனம் குறிப்பிடுகின்றது.

இதற்கு முரணாக நபியவர்களின் கருத்தை ஆயிஷா (ரலி) கருதுகிறார்.

உடனே நபியவர்கள் அது விசாரணை அல்ல, பதிவேடு வழங்கப்படும் நிகழ்வு தான். தாம் சொல்வது விசாரணையின் போது யார் துருவி துருவி கேட்கப்படுவானோ அவனைப் பற்றியது என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

இப்படி சில சான்றுகளைச் சரியாகக் கவனிக்காமல், அல்லது முழுமையான தகவல்களைத் திரட்டாமல் தவறாகப் புரிந்து கொள்வதும் குர்ஆனுக்கு முரணாக உள்ளது போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே நேரம் குர்ஆனுக்கு முரண் என்ற வாதத்திற்குப் பின்னால் தவறான புரிதல் மட்டும்தான் உள்ளது என்கிற வாதம் ஏற்புடையதல்ல.

ஒரு சில சான்றுகள் தெளிவாக, எந்த விளக்கமும் அளிக்க முடியாத படி குர்ஆனுக்கு முரண்படவே செய்கிறது.

அவைகளை நாம் இதுவரை குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் விரிவஞ்சி இத்தொடரில் நாம் குறிப்பிடாத இன்னும் பல வழிமுறைகளைக்கையாண்டும் எவ்வித இணக்கமான கருத்தும் காண முடிவதில்லை. அப்படியான சூழல் ஒரு ஆய்வாளருக்கு நேரும் போது குறிப்பிட்ட அந்தசெய்தியை நபிகள் நாயகம் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுப்பதே சரியான வழிமுறையாகும்.

நமக்கு முன் வாழ்ந்த ஆய்வாளர்கள், நல்லறிஞர் பெருமக்கள் இந்த வழிமுறையையே கடைப்பிடித்துள்ளார்கள்.

இது பற்றி விரிவாக அறிந்து கொள்ள பின்வரும் லிங்கில் பார்க்கவும்.

http://www.onlinepj.com/books/hadith_kuranirku_muranpaduma

- வளரும் இன்ஷா அல்லாஹ்...

 

கேள்வி பதில்

?

ஒருவர் விபச்சாரக் குற்றத்தின் விபரீதத்தை உணராமல் இளம் வயதில் ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து விடுகிறார். இப்போது அதற்காக மனம் வருந்துகிறார். இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும்?

ஜமான்,புதுக்கோட்டை

பதில்

விபச்சாரக் குற்றம் என்பது உலகில் தண்டனைக்குரிய மாபெரும் குற்றமாகும். இஸ்லாமிய ஆட்சியில் விபச்சாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திருமணம் செய்தவர்களுக்கு கல்லெறிதல் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கப்படும். ஒருவர் விபச்சாரம் செய்து அதனை அல்லாஹ் வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடப்படுகின்றார். அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான். அல்லாஹ் நாடினால் அவரை தண்டிப்பான். இதனை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்...

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தபோது  ''அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்;  விபச்சாரம் புரியமாட்டோம்;  திருடமாட்டோம் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?'' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

மேற்கூறப்பட்ட (விபச்சாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும்.  மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி) நூல் : புகாரி (4894)

அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்று வருகின்ற காரணத்தினால் விபச்சாரக் குற்றம் என்பது இறைவனின் மன்னிப்பிற்குரிய பாவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

விபச்சாரக் குற்றம் செய்தவர் இணை கற்பிக்காத நிலையில் மரணித்திருந்தால் அல்லாஹ் அவரை மன்னித்து விட்டால் உடனே சொர்க்கம் செல்வார். அல்லாஹ் மன்னிக்காவிட்டால் அதற்கான தண்டனையைப் பெற்ற பின் இறுதியில் சொர்க்கம் செல்வார்.  இதனை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:  ''எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது 'எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், ''அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?'' எனக் கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான்'' என்று பதிலளித்தார்கள்.'

அறிவிப்பவர் : அபூதர் (ரலி­), நூல் : புகாரி (1237)

மேற்கண்ட நபி மொழியிலிருந்தும் விபச்சாரக் குற்றம் பெரும் பாவமாக இருந்தாலும் இறைவனின் மன்னிப்பிற்குரிய குற்றம்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் விபச்சாரம் செய்த பின்னர் மனம் வருந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக இறைவன் அந்தப் பாவத்தை மன்னிப்பான். இறைவனின் கருணையிலிருந்து நாம் நிராசையடைந்து விடக்கூடாது.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும்,ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன் 4:17,18)

(முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால்''உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்'' எனக் கூறுவீராக! உங்கள் இறைவன் அருள் புரிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

 (அல்குர்ஆன் 6 : 54)

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்துவிட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான்.அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 

(அல்குர்ஆன் 16 : 119)

 தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! 

(அல் குர்ஆன் 39 : 53)

மேற்கண்ட திருமறை வசனங்கள் அனைத்தும் அறியாமையினால் ஒருவர் ஒரு பாவத்தைச் செய்த பிறகு மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் நிச்சயமாக இறைவன் அவரை மன்னிப்பான் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

 மேலும் விபச்சாரம் செய்தவர்கள் செய்கின்ற நற்காரியங்களின் காரணமாகவும் இறைவன் அவர்களது பாவங்களை மன்னிப்பான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3467)

 விபச்சாரம் செய்து விட்டு நாய்க்கு தண்ணீர் புகட்டினால் போதும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. அல்லாஹ் நாடினால் சில நல்லறங்கள் காரணமாக தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்கலாம் என்றுதான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

?

ஒரு தேவை நிறைவேறுவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நபில் தொழுவதாக   நேர்ச்சை  செய்யலாமா?  அவ்வாறு  செய்வதற்கு அனுமதி  இருந்தால்  நான்கு  நான்கு ரக்அத்துகளாகத் தொழலாமா?

அப்துல் ஹமீத், காரைக்கால்

பதில்

'இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன்' என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.

இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

'இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்'என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

'உனக்காக நான் இதைச் செய்கிறேன்' என்று இறைவனிடம் நாம் கூறும் போது'அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.

எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 6608, 6693

நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 6692

நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவதுதான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்ன தான் செய்ய வேண்டும்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.

'இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?' என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.

உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு 'இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக' என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.

வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழி காட்டுகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 2:153)

நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்

'நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது' என்றும் 'நேர்ச்சை செய்யாதீர்கள்' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் 'அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது' என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

(அல்குர்ஆன் 2:270)

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

(அல்குர்ஆன் 76:7)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

(அல்குர்ஆன் 22:29)

'உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 6696

மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வணக்கங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே ஒருவர் குறிப்பிட்ட ரக்அத்துகள் தொழுவதாக நேர்ச்சை செய்திருந்தால் அந்த நேர்ச்சையை அவர் நிறைவேற்ற வேண்டும்.

நபியவர்கள் நஃபிலான வணக்கங்களை நான்கு ரக்அத்துகளாகத் தொழுததாக ஆதாரப் பூர்வமான எந்த அறிவிப்புகளும் இல்லை. எனவே நபிஃலான வணக்கங்களை இரண்டிரண்டு ரக்அத்துகளாகத்தான் தொழ வேண்டும்.

 

?

 சஹாபாக்களைப் பின்பற்றக்கூடாது என்றால் குர்ஆனுக்கு சர்ட்டிஃபிகேட் கொடுத்தது அவர்கள் தானே! அவர்களைப் பின்பற்றக்கூடாது  என்றால்  குர்ஆனின்  மீது  சந்தேகம்  ஏற்படுமே?

முஹம்மது இஹ்சாஸ், இலங்கை.

பதில்

ஒருவர் தன்னுடைய சுயகருத்தாகக் கூறுவதற்கும், இன்னொருவருடைய கருத்தை தகவலாக எடுத்துக் கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் நாம் எதைப் பின்பற்றுகிறோம் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நீங்கள்  ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பத்து வரும் என்கிறீர்கள். ஒருவர் இதனை மறுத்து ஒன்பதுதான் வரும் என்கிறார். இப்போது அவர் உங்களுடைய கருத்தை மறுத்து விட்டதாகக் கருதுவீர்கள். அப்துர் ரஹ்மான் என்பவர் ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்று கூறுகிறார். அப்துர் ரஹ்மான் இவ்வாறு கூறினார் என்ற தகவலை நீங்கள் இன்னொருவரிடம் எடுத்துக் கூறுகிறீர்கள். அவர் அதனை மறுத்து ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பத்துதான் என்று கூறுகிறார். அப்துர்ரஹ்மான் கூறியதாக நீங்கள் பொய் சொல்லி விட்டீர்கள் என்பது இதன் பொருளல்ல. அவர் கூறியதைத் தான் நீங்கள் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள் என்பதை அவர் நம்புகிறார். அவர் உங்களுடைய  நாணயத்தை மறுத்ததாக நீங்கள் கருதமாட்டீர்கள். மாறாக அப்துர் ரஹ்மான் தவறான கருத்தைச் சொல்லி உள்ளார் என்று மறுத்ததாகத்தான் கருதுவீர்கள்.

அப்துர் ரஹ்மான் கூறியது தவறு. ஆனால் அப்துர் ரஹ்மானுடைய கருத்தை நீங்கள் அப்படியே எடுத்துரைத்ததால் நீங்கள்தான் தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று யாரும் கருதமாட்டார்கள்.

 நம்முடைய கருத்தாக நாம் சொல்வதை ஒருவர் ஏற்றுக் கொண்டால் அவர் நம்மைப் பின்பற்றுகிறார் என்று நாம் கருதுவோம். மறுத்தால் நமக்கு மாறு செய்கிறார் என்று கருதுவோம்.

நாம் இன்னொருவருடைய கருத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லும் போது அவர் அதை ஏற்றுக் கொண்டால் நம்முடைய கருத்தை ஏற்றுக் கொண்டார் என்றோ மறுத்து விட்டால் நம்முடைய கருத்தை மறுத்து விட்டார் என்றோ கூறமாட்டோம். மாறாக அந்தக் கருத்தை யார் கூறினாரோ அவரைத்தான் மறுத்ததாகவோ ஏற்றுக்  கொண்டதாகவோ குறிப்பிடுவோம்.

 ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் எடுத்துரைக்கும் போது நாம் எடுத்துரைத்ததைத் தவிர நம்முடைய பங்கு அதில் எதுவும் கிடையாது.

 திருமறைக்குர்ஆனை அல்லாஹ்வுடைய வேதம் என்று நாம் கூறுகிறோம். திருமறைக் குர்ஆனை நபிகள் நாயகம் மக்களுக்கு ஓதிக்காட்டிய காரணத்தினால் நபிகள் நாயகம் தான் குர்ஆனை அருளினார்கள் என்று நாம் கூறுவதில்லை.  மாறாக அல்லாஹ்வின் வேதத்தை நபிகள் நாயகம் ஓதிக்காட்டினார்கள் என்றே கூறுகிறோம்.

 உண்மையாளராக உள்ள ஒருவர் மற்றொருவர் கூறிய கருத்தை நமக்கு எடுத்துரைத்தால் அதில் பொய் சொல்ல மாட்டார் என்பதால் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான் என்று நம்புகிறோம்.

 நபித் தோழர்கள் உண்மையாளர்கள். அவர்கள் நபிகள் நாயகம் கூறியதாக எடுத்துரைக்கும் தகவல்கள் அவர்களுடைய சொந்தக் கருத்து கிடையாது.

 உண்மையாளர்களான ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக நமக்கு கூறியதை நாம் ஏற்றுக் கொண்டால் நாம் அந்தக் கருத்தைக் கூறிய நபிகள் நாயகத்தைத்தான் பின்பற்றுகிறோமே தவிர ஸஹாபாக்களின் கருத்தை அல்ல.

ஆனால் உண்மையாளராக உள்ள ஒருவர் தன்னுடைய அறிவால் சிந்தித்து சொந்தக் கருத்தாகக் கூறும்போது அது தவறாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஸஹாபாக்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்  என்று கூறியது அவர்கள் தாமாகச் சிந்தித்து கூறியவை அல்ல. நபிகள் நாயகம் கூறியதை அவர்கள் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள் அவ்வளவுதான். எனவே குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றுவது ஸஹாபாக்களை பின்பற்றுவதாக ஆகாது.

நபிகள் நாயகம் சொன்னதாகச் சொல்லாமல்  தம்முடைய சொந்தக் கருத்தாக நபித்தோழர்கள் கூறுவதைப் பின்பற்றினால்தான் அது அவர்களைப் பின்பற்றியதாக ஆகும்.

எனவே நபித் தோழர்கள் சுயமாகக் கூறியவை மார்க்கமாகாது என்று கூறுவதினால் அவர்கள் நபிகள் நாயகம் கூறியதாக நமக்கு எடுத்துரைத்தவற்றிலும் சந்தேகம் ஏற்படும் என்று கருதமுடியாது. ஏனென்றால் இறையச்சத்திலும் வாய்மையிலும் மிக உயர்ந்தவர்களான நபித்தோழர்கள் தம்முடைய சொந்தக் கருத்தை நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்றே நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அது போன்றுதான் ஸஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்றால் ஸஹாபாக்கள் தொகுத்த குர்ஆனை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்றும் சிலர் கேட்கின்றனர்.

ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதுகிறார். அந்தப் புத்தகத்திற்கு மற்றொருவர் பைண்டிங் செய்கிறார். இப்போது அந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்களை ஏற்றுக் கொண்டால் பைண்டிங் செய்தவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டோம் என்று யாராவது கருதுவார்களா? அப்படிக் கருதினால் அது அறிவார்ந்த கருத்தாக இருக்குமா?

அல்லது ஒருவர் ஒரு புத்தகத்திற்கு பைண்டிங் செய்ததினால் புத்தகத்தின் கருத்துக்களைப் போன்று பைண்டிங் செய்தவர் கருத்தையும் ஏற்க வேண்டும் என்று யாராவது கருதுவார்களா?

புத்தகத்திற்கு பைண்டிங் செய்தவர் சொன்ன கருத்துக்களை மறுத்தால் புத்தகத்தின் கருத்தையும் மறுக்க வேண்டும் என்று யாரும் கருதமாட்டார்கள்.

 அல்லாஹ் திருமறைக்குர்ஆனை அருளிளான். ஸஹாபாக்கள் அதனை ஒன்றிணைத்து  தொகுத்துத் தந்தார்கள். இப்போது குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம் என்று ஏற்றுக் கொள்வதினால் ஸஹாபாக்கள் சொந்தமாகக் கூறியவற்றையும் மார்ககமாகக் கருதவேண்டும் என்பது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும்?

ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் வேதமாகத் தொகுத்தது அவர்களுடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. மாறாக அல்லாஹ்வுடைய வார்த்தைகளைத்தான். எனவே ஸஹாபாக்கள் சுயமாகக் கூறியவற்றை மார்க்கம் இல்லையென்று கருதுவதினால் அவர்கள் ஒன்றிணைத்த குர்ஆனையும் மறுக்கவேண்டும் என்பது கிடையாது.

நாம் இறைச் செய்தியை மட்டும்தான் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும். அல்லாஹ்வுடைய வஹியைத் தவிர வேறு எதையும் மார்க்கமாகப் பின்பற்றக் கூடாது. நாம் யாரை நல்ல மக்கள் என்று கருதுகிறோமோ அவர்கள் நபியின் பெயரால் இட்டுக் கட்டிக் கூறினார்கள் என்றால் அவர்களின் நாணயத்தைப் பாதிக்கும். ஆனால் நல்ல மக்களாக இருந்த நபித்தோழர்கள் ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்று கூறினால் அது அவர்களின் நாணயத்தைப் பாதிக்காது. ஒருவர் தனது கருத்தைக் கூறுவதற்கும் மற்றவரின் கூற்றை எடுத்துச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்காத காரணத்தால் தான் இந்தக் கேள்வி எழுகிறது.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் : 6:106

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் : 7:3

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்' என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் : 10:15

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்..

திருக்குர்ஆன் : 33:2

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்

திருக்குர்ஆன் : 39:58

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை' எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் : 46:9

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் : 49:16

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது 'செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்..

திருக்குர்ஆன் : 24:51,52

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்..

திருக்குர்ஆன் : 5:3

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..

திருக்குர்ஆன் : 16:116

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் : 42:21

?

அகீகா எத்தனையாவது நாள் கொடுக்க வேண்டும்? சிலர் நமக்கு நாமே அகீகா கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். இது மார்க்க அடிப்படையில் சரியானதா?

- அப்துல் கஃபூர், சென்னை.

பதில்

أخبرنا عمرو بن علي ومحمد بن عبد الأعلى قالا حدثنا يزيد وهو ابن زريع عن سعيد أنبأنا قتادة عن الحسن عن سمرة بن جندب عن رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى

'ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸம்ரத் பின் ஜுன்துப் (ரலி) நூல்: நஸாயீ 4149

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆடு அறுத்துப் பலியிட வேண்டும். அதே நாளில் குழந்தைக்குப் பெயரிட்டு, தலை முடியைக் களைய வேண்டும்.

அகீகா தொடர்பாக வரக் கூடிய செய்திகளில் ஏழாவது நாள் கொடுக்க வேண்டும் என்று இடம் பெறும் செய்தி மட்டுமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. 14, 21 ஆகிய நாட்களில் அகீகா கொடுக்கலாம் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமானவையாக உள்ளன. எனவே குழந்தை பிறந்த ஏழாவது நாள் அகீகா கொடுப்பதுதான் சுன்னத்தாகும். மற்ற நாட்களில் கொடுப்பதற்கு ஆதாரம் இல்லை.

அகீகா பற்றிய விரிவான விவரங்களைக் காண

மூன்று வயது குழந்தைக்காக அகீகா கொடுக்கலாமா?

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/moonru_vayathu_kuzanthaiku_akeeka

அகீகா கொடுப்பது எப்படி?

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/akeeka_koduppathu_eppadi

அகீகா கொடுப்பது சுன்னத்தா?

http://onlinepj.com/kelvi_pathil/kuzanthai_valarpu/aqeeqa_kodupathu_sunnatha

ஒருவர் தனக்காக அகீகா கொடுக்கலாமா?

நபியவர்கள் தமக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில செய்திகள் இடம் பெற்றுள்ளன. சிலர் இவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் தனக்காக அகீகா கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நபியவர்கள் தமக்காக அகீகா கொடுத்தார்கள் என்று வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.

 இது பின்வரும் நூற்களில் இடம் பெற்றுள்ளது.

مصنف عبد الرزاق - (ج 4 / ص 329)

 7960 - عبد الرزاق عن عبد الله بن محرر عن قتادة عن أنس قال عق رسول الله صلى الله عليه و سلم عن نفسه بعد ما بعث بالنبوة

السنن الكبرى ت :محمد عبد القادر عطا - (ج 9 / ص 300)

 19056 - أخبرنا أبو الحسن محمد بن الحسين بن داود العلوي رحمه الله أنبأ حاجب بن أحمد بن سفيان الطوسي ثنا محمد بن حماد الأبيوردي ثنا عبد الرزاق أنبأ عبد الله بن محرر عن قتادة عن أنس رضي الله عنه : أن النبي صلى الله عليه و سلم عق عن نفسه بعد النبوة قال عبد الرزاق إنما تركوا عبد الله بن محرر لحال هذا الحديث قال الفقيه رحمه الله وقد روي من وجه آخر عن قتادة ومن وجه آخر عن أنس وليس بشيء

مسند البزار ( من أوله ثم من 10 إلى 14 ) - (ج 6 / ص 193)

7281- حدثنا سهيل بن إبراهيم الجارودي أبو الخطاب نا عوف بن محمد المراري نا عبد الله بن المحرر عن قتادة عن أنس : أن النبي صلى الله عليه وسلم عق عن نفسه بعدما بعث نبيا .

وحديثا عبد الله بن محرر لا نعلم رواهما أحد عن قتادة عن أنس غيره وهو ضعيف الحديث جدا وإنمايكتب من حديثه ما ليس عند غيره .

 நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்  அனஸ் (ரலி)

நூற்கள் :

முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம் 4 பக்கம் 329)

அஸ்ஸூனனுல் குப்ரா (பாகம்9 பக்கம் 300)

முஸ்னதுல் பஸ்ஸார் (பாகம் 6 பக்கம் 193)

மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனம் ஆனவர் ஆவார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஒரு போதும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தகுந்தவை இல்லை.

 الكامل في الضعفاء - (ج 4 / ص 132)

973 - عبد الله بن محرر جزري عامري سمعت أبا عروبة يقول قال لي هلال بن العلاء عبد الله بن محرر الجزري مولى بني عقيل ولاه أبو جعفر قضاء الرقة ثنا محمد بن عبد الرحمن الدغولي ثنا محمد بن عبد الله بن قهزاد سمعت أبا إسحاق الطالقاني يقول سمعت عبد الله بن المبارك يقول لو خيرت بين أن أدخل الجنة وان ألقى عبد الله بن محرر لاخترت لقاءه ثم أدخل الجنة فلما رأيته كانت بعرة أحب الي منه ثنا بن حماد ثنا معاوية عن يحيى قال عبد الله بن محرر ضعيف حدثنا محمد بن علي ثنا عثمان بن سعيد قال يحيى بن معين عبد الله بن محرر ليس بثقة ثنا أحمد بن علي ثنا عبد الله بن الدورقي سمعت يحيى يقول عبد الله بن محرر ليس بثقة سمعت محمد بن أحمد الأنصاري يقول قال السعدي عبد الله بن محرر هالك وقال عمرو بن علي عبد الله بن محرر متروك الحديثثنا الجنيدي ثنا البخاري قال عبد الله بن محرر العامري الجزري عن قتادة منكر الحديث وقال النسائي عبد الله بن محرر يروي عن قتادة متروك الحديث

 அப்துல்லாஹ் பின் முபாரக் கூறுகிறார்:  சொர்க்கத்தில் நுழைதல் மற்றும் அப்துல்லாஹ் பின் முஹர்ரரைச் சந்தித்தல் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டால் நான் அவரைச் சந்திப்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணிணேன். நான் அவரைப் பார்த்த போது அவரை விட கால்நடைகளின் விட்டை எனக்கு மிகவும் நேசத்தியத்திற்குரியதாகிவிட்டது.

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் பலவீனமானவர், உறுதியானவர் இல்லை என இமாம் யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.

அப்துல் பின் முஹர்ரர் ஹதீஸ் துறையில் நாசமாகிவிட்டார். என அஸ்ஸஃதீ கூறுகிறார்.

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் ஹதீஸ் துறையில் கைவிடப்பட்டவராவார் என அம்ர் பின் அலீ கூறுகிறார்.

இவர் கதாதா வழியாக நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் புகாரி கூறுகிறார்.

அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பார் கதாதா வழியாக அறிவிப்பவை ஹதீஸ்களில் விடப்படவேண்டியவை என இமாம் நஸாயீ கூறுகிறார்.

நூல்  அல்காமில் ஃபில் லுஅஃபாயி  (பாகம் 4 பக்கம் 132)

எனவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானதாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பாதாக மற்றொரு அறிவிப்பாளர் வரிசையிலும் இந்தச் செய்தி வருகின்றது.

المعجم الأوسط - (ج 1 / ص 298)

 994 - حدثنا أحمد قال حدثنا الهيثم قال حدثنا عبد الله عن ثمامة عن أنس : أن النبي عق عن نفسه بعد ما بعث نبيا

நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்  அனஸ் (ரலி)

நூற்கள்

அல் முஃஜமுல் அவ்ஸத்  (பாகம் 1 பக்கம் 298)

இதே அறிவிப்பாளர் தொடர் வரிசையுடன் வேறு சில நூற்களிலும் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையில் அப்துல்லாஹ் பின் முஸன்னா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் புகாரியுடைய அறிவிப்பாளராக இருந்தாலும் இவர் அறிவிக்கும் செய்திகள் உறுதியானவை என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எந்தச் சான்றுகளும் இல்லை.

 ميزان الاعتدال - (ج 2 / ص 499)

4590 - [ صح ] عبدالله بن المثنى [ خ، ت، ق ] الانصاري.عن عمومته.وعنه ابنه محمد بن عبدالله قاضى البصرة.قال أبو حاتم: شيخ. وقال أبو زرعة: صالح الحديث. وقال أبو داود: لا أخرج حديثه. وقال زكريا الساجى: فيه ضعف لم يكن صاحب حديث. وقال الازدي: روى مناكير ثم رويا له حديث: كان قيس بن سعد من النبي صلى الله عليه وسلم بمنزلة صاحب الشرطة من الامير. وهذا فقد أخرجه البخاري. وقد ذكره العقيلى في الضعفاء، وقال: لا يتابع على أكثر حديثه، ثم قال: حدثنا الحسين ابن عبدالله الذارع، حدثنا أبو داود، سمعت أبا سلمة التبوذكى يقول: حدثنا عبدالله ابن المثنى - ولم يكن من القريتين بعظيم - كان ضعيفا منكر الحديث. وقال ابن معين: صالح الحديث. وروى أحمد بن زهير،عن ابن معين: ليس بشئ. وقال النسائي: ليس بالقوى.

இமாம் அபூஹாத்திம் இவரை வயோதிகர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய செய்திகள் துணைச்சான்றாகக் கொள்வதற்குத்தான் ஏற்றவை என அபூ ஸூர்ஆ கூறியுள்ளார்.

இவருடைய ஹதீஸ்களை நான் பதிவு செய்ய மாட்டேன் என அபூ தாவூத் கூறியுள்ளார்.

இவரிடத்தில் பலவீனம் உள்ளது. இவர் ஹதீஸ்களை அறிவிக்க தகுதியானவராக இல்லை ஸகரிய்யா அஸ்ஸாஜீ கூறியுள்ளார்.

இவர் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என அல்அஸதீ கூறியுள்ளார்.

இவருடைய செய்திகளை புகாரி பதிவு செய்துள்ளார்.

இவரை பலவீனமானவர்களில் இமாம் உகைலி குறிப்பிட்டுள்ளார். இவருடைய அதிகமான ஹதீஸ்களை துணைச் சான்றாகக் கொள்ள முடியாது. இவர் பலவீனமானவரும், ஹதீஸ்துறையில் நிராகரிக்கத்தக்கவரும் ஆவார் என்றும் உகைலி கூறியுள்ளார்.

இவர் ஒரு பொருட்டாக கொள்ளத் தக்கவரில்லை என்று இப்னு மயீன் கூறியுள்ளார்.

இவர் உறுதியானவர் இல்லை என்று நஸாயீ கூறியுள்ளார்.

நூல்: மீஸானுல் இஃதிதால்  (பாகம்  2 பக்கம் 499)

 எனவே நபியவர்கள் தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று வரக்கூடிய இரண்டு அறிவிப்புகளுமே மிகவும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இதனை நபிவழியாகக் கருத முடியாது.

 

?

கேள்வி  மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?

- ஃபாத்திமா, காஞ்சிபுரம்

பதில் :

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 228

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு, அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது.

குளிப்பது கட்டாயமில்லை என்றாலும் தொடர் உதிரப் போக்கு ஏற்பட்ட பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு  ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது (அதற்காக குளியல் கடமை இல்லாவிட்டாலும் நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக்கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்த நாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.

 நூல்: புகாரி (327)

 தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாஙகள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

நூல்: புகாரி 2037

 

?

சிலருக்கு மாதவிடாய் 7 நாட்களில் நின்று விடுகிறது. சில நேரங்களில் 7 நாட்களுக்குப் பிறகும் உதிரப் போக்கு தொடர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பாவமா?

- அப்துல் காதிர், கூடுவாஞ்சேரி

பதில் :

 மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த பிறகே, அவர்களுடன் கணவன்மார்கள்  உடலுறவு கொள்ள வேண்டும் என்று  குர்ஆன்  கூறுகின்றது.

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222) 2

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே  மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்!  அவர்கள்  தூய்மையாகும்வரை அவர்களை  நெருங்காதீர்கள்!  அவர்கள்  தூய்மையாகி  விட்டால் அல்லாஹ்  உங்களுக்குக்  கட்டளையிட்டவாறு  அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.தூய்மையாக இருப்போரையும்  விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (2 : 222)

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். இது போன்ற காலகட்டங்களில் இல்லற வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 228

இதுபோன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு, தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதும் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது.

எனவே உங்கள் மனைவிக்கு வழக்கமாக மாதவிடாய் எத்தனை நாட்களுக்கு வருமோ அதற்கு அதிகமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால் அது தொடர் உதிரப் போக்காகும். மாதவிடாய் இரத்தம் அல்ல. எனவேதான் மார்க்கம் தொழுவதற்கு அனுமதிக்கிறது. ஏனெனில் மாதவிலக்கிலிருந்து தூய்மையடையாமல் தொழுவது கூடாது.

இதன் அடிப்படையில் வழக்கமாக ஏற்படும் மாதவிடாய் நாட்கள் முடிந்த பிறகு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது மார்க்க அடிப்படையில் தவறல்ல. அதே நேரத்தில் மருத்துவ ரீதியில் இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்று உறுதி செய்யப்பட்டால் அந்நேரத்தில் இல்லறத்தைத் தவிர்ந்து கொள்வதே சிறந்ததாகும்.

January 2, 2016, 12:22 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top