டிசம்பர் தீன்குலப் பெண்மணி 2014

ஆசிரமத்தில் அதிர வைக்கும் ஆயுதக் குவியல்

மத்ரஸாக்கள் இந்தியாவின் தேசியச் சின்னங்கள், இந்தியச் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மத்ரஸா கல்வி முறையே விளங்கி வந்தது. இந்திய நாட்டில் ஒழுக்கம் சார்ந்த வாழ்வு முறையை மத்ரஸாக்கள் கற்பித்து வந்தன. ஆனால் தற்போது மத்ரஸாக்களின் வளர்ச்சி விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இந்நேரத்தில் மத்ரஸாக்களில் ஜிஹாத் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதைக் கண்காணிப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

ஒழுக்கம் சார்ந்த கல்வியைப் போதிக்கும் மத்ரஸாக்களை எத்தனை கண்கொண்டு பார்த்தாலும் அதில் தீவிரவாதம் இருக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் தீவிரவாதம் வேரூன்றியுள்ள சாமியார் மடங்களை மத்திய அரசு கண்காணிக்காமல் விட்டு வந்ததன் விளைவு இன்று இந்து சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் அதிர வைக்கும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா டவுனில் சண்டிகார்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி,12 ஏக்கர் பரப்பளவில் அவரது ‘சத்லோக்’ ஆசிரமம் அமைந்துள்ளது.

அதன் நுழைவாயிலில் பக்தர்களைச் சோதனையிட ‘மெட்டல் டிடெக்டர்’ வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமம், கோட்டை போன்று கட்டப்பட்டுள்ளது. சுற்றிலும் உயர்ந்த காம்பவுண்டு சுவர்கள் உள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாமியாருக்கு தனியார் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தின் மையப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்ட பிரார்த்தனை அரங்கம் கட்டப்பட்டது. அது, 50ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டது.

அரங்கத்தின் நடுவில், உயரமான மேடை போன்ற அமைப்பு உள்ளது. அங்கு குண்டு துளைக்காத கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதனுள் அமர்ந்துதான் சாமியார் ஆன்மீக போதனைகளை நிகழ்த்துவார்.

பிரார்த்தனை அரங்கத்தைச் சுற்றிலும் உறுதியான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு புறம் ஆண்களுக்கும், மறுபுறம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாமியாரின் போதனைகளைத் திரையில் காண்பிக்க 3டி புரொஜக்டர் வசதியும் உள்ளது.

ஆசிரமத்தில், 24 குளுகுளு அறைகள் உள்ளன. அவை நட்சத்திர ஓட்டல் அறைகளைப் போன்று உள்ளன. அனைத்திலும் குளியலறை இணைப்பு உள்ளது. ஓர் அறையில் ‘மசாஜ்’ படுக்கை உள்ளது.

மற்றொரு அறையில் ‘ட்ரெட்மில்’ வசதி உள்ளது. 4மாடி கொண்ட குடியிருப்பு கட்டடத்தில், குளுகுளு வசதியுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகத்தைக் கற்றுத் தருவதற்கு இவ்வளவு ஆடம்பரச் செலவுகளா? என்று கேட்கும் அளவுக்கு, அளவு கடந்த செலவுகள் செய்யப்பட்டுள்ளன.

இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன. 2006ஆம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த கொலை தொடர்பாக ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன.

நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்  ஆஜராகாததால்  காவல்துறையினர் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது ஆசிரமும் சோதனையிடப்பட்டது, சோதனையில் ஆசிரமத்தில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 ரிவால்வர்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் ஆயுதங்களும் சிக்கின.

இது தவிர மிளகாய்த் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பபட்ட சிரஞ்சிகள், ஹெல்மட்டுகள், கைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க், ஆகியவையும் இருந்தன.

மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டியுள்ள அறையில் சோதனையிட்டபோது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. அங்கு மிளகாய்ப் பொடி, மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன. இதைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்நது போனார்கள்.

ஆன்மீகத்தைப் போதிக்கும் ஆசிரமத்தில் ஆயதங்கள் எதற்கு? கர்ப்ப சோதனை கருவிகள் எதற்கு?

இதுபோன்று ஏராளமான சாமியார் மடங்கள், ஆசிரமங்கள் இந்தியா முழுவதிலும் பல்கிப் பெருகியுள்ளன. இந்த மடங்களைச் சரியாக சோதனை செய்தால் ராம்பால் ஆசிரமத்தில் கிடைத்ததைவிட அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கும்.

முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து தாக்குவதை விட்டு விட்டு உண்மை தீவிரவாதிகளை ராஜ்நாத் சிங் கண்காணித்தால் நன்றாக இருக்கும்.

 

ஹிஜாப் - தவறான வாதங்களும் விளக்கமும்

உள்ளங்களுக்குத் துய்மையானது என்பதின் பொருள்

மாற்றுக் கருத்துடையவர்களின் வாதம்

”நபியின் மனைவிமார்களிடம் திரைக்கு அப்பால் இருந்து பேசினால் ”உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் தூய்மையாக்கி வைக்கும்” என்று ஆண்களையும், பெண்களையும் இணைத்து இறைவன் கூறுவது இது பொதுச்சட்டம் என்பதை அறிவிக்கிறது”  என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கூறுகின்றனர்.

விளக்கம் :

மாற்றுக் கருத்துடையவர்களின் மேற்கண்ட வாதம் தவறானதாகும்.

(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது.                            (அல்குர்ஆன் 33 : 53)

என்று அல்லாஹ் குறிப்பிடுவது நபியின் மனைவியருக்கும், அந்நிய ஆண்களுக்கும் இடையிலான தொடர்பை மட்டும்தான்.

ஏனெனில் ”நபியுடைய மனைவியர் முஃமின்களுக்கு அன்னையர் ஆவர்”. அவர்களைப் பற்றிய தவறான எண்ணம் முஃமின்களின் உள்ளத்தில் ஏற்படுவது கூடாது.

பிற பெண்களைப் பற்றிய மோகம் ஒருவன் உள்ளத்தில் ஏற்படுவது இயல்பானதுதான்.

ஆனால் இதுபோன்ற ஒரு கவர்ச்சி நபியுடைய மனைவியர் விசயத்தில் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. நபியின் மனைவியருக்கும் அது போல் ஏற்படக்கூடாது. அவ்வாறு ஏற்பட்டு அது ஒரு தீமைக்கு வழிவகுக்குமென்றால். அது கற்பனை கூட செய்யமுடியாத பெரும் அழிவில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இதன் காரணமாகத்தான் அல்லாஹ் திரைக்கு அப்பால் இருந்து பேசுவதை நபியுடைய மனைவியரின் உள்ளத்திற்கும் பிற அந்நிய ஆண்களின் உள்ளத்திற்கும் பரிசுத்தமானது என்று குறிப்பிடுகிறான்.

அதே நேரத்தில் நபியுடைய மனைவியர் அல்லாத பிற பெண்களைப் பொருத்தவரை தேவையின்றி அவர்களின் முகத்தினைப் பார்க்காமல் இருப்பதுதான் நம்முடைய உள்ளத்திற்கு பரிசுத்தமானதாகும்.

முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 24 : 30)

மேலும் அதிகமான ஹதீஸ்களில் அந்நியப் பெண்களைப் பார்க்கும் போது பார்வையைத் தாழ்த்த வேண்டும் என்று கட்டளை வந்துள்ளது.

இவ்வசனத்திலிருந்து  நபியுடைய மனைவியர் அல்லாத பிற பெண்களுக்கு திரைக்கு அப்பால் இருந்துதான் பேச வேண்டும் என்ற கட்டளையோ, அல்லது முகத்தை மறைத்துத்தான் வெளியே வர வேண்டும் என்ற கட்டளையோ கிடையாது என்பதையும், தேவையின்றி அவர்களின் முகத்தினைப் பார்க்க நேர்ந்தால் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் பரிசுத்தமானது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மாற்றுக் கருத்துடையோரின் கேள்வி : 2

33 : 53 வது வசனத்தில் கூறப்படும் ”ஹிஜாப்” உடைய சட்டம்  நபியுடைய மனைவியருக்கு மட்டும் உரிய சட்டம் கிடையாது. அது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவான சட்டம்தான் என்று வாதிக்கும் மாற்றுக் கருத்துடையவர்கள் அதனை நிலைநாட்ட பின்வரும் கேள்விகளைக் கேட்கின்றனர்.

அல்அஹ்சாப் 33 வது அத்தியாயம் 32, 33, 34 வது வசனங்களில் ஒன்பது விசயங்களைக் கடைபிடிக்குமாறு நபியுடைய மனைவியருக்கு அல்லாஹ் கூறுகிறான்.

1. அந்நிய ஆண்களிடத்தில் குழைந்து பேசக்கூடாது.

2. அந்நிய ஆண்களிடத்தில் நேர்மையாகப் பேசுதல்.

3. வீடுகளில் தங்கியிருத்தல்.

4. அலங்காரத்தை வெளிப்படுத்தி வெளியில் சுற்றித்திரிவது கூடாது.

5. ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றுதல்.

6. ஜகாத்தை நிறைவேற்றுதல்.

7. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிதல்.

8. வீடுகளில் ஓதப்படும் வசனங்களையும், ஞானத்தையும் நினைவு கூர்தல்.

9. பரிசுத்தமாகவும் பத்தினித்தனமாகவும் இருத்தல்.

இந்த ஒன்பது விசயங்களையும் நபியுடைய மனைவியரை மட்டும் அழைத்து அல்லாஹ் கூறுவதால் இது அவர்களுக்கு மட்டும் உரிய சட்டம் என்று கூற முடியுமா? மற்ற பெண்கள் இந்த விசயங்களைப் பேண வேண்டியதில்லை என்று கூறுவார்களா? அப்படியானால் இந்த எட்டு விசயங்களில் எதை மற்ற பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது என்பதை பிரித்துக் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிகள், முஃமின்களின் தாய்மார்கள். பரிசுத்தமானவர்கள். பத்தரை மாற்றுத் தங்கங்கள். உத்தமபத்தினிகள். மற்றெல்லாப் பெண்களையும் விட அமலிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவர்கள். அவர்களைப் பாரத்து அல்லாஹ் இப்படிக் கூறி இருக்கிறான் என்றால், இது எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த  விஷயம் என்பதை மற்ற பெண்களுக்கு உணர்த்துவதற்காகவும், அதன் பெறுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மேற்கூறப்பட்ட விசயங்கள் நபியுடைய மனைவியருக்கு மட்டும் உரித்தானதல்ல. அனைத்துப் பெண்களுக்கும் உரிய பொதுவான சட்டம்தான்.

இவ்விரு வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளுக்குரிய தனிச் சட்டங்களைத்தான் அறிவிக்கிறது என்று கூறுபவர்கள் மற்றெல்லாப் பெண்களும் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள்  என்றும் நபியுடைய மனைவியர்கள் அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்றும் கூறிட முனைகிறார்களா?

நபியுடைய மனைவிகளுக்குரிய விசேட சட்டம் என்றிருக்குமானால் அது எப்படி இருக்க வேண்டுமென்றால் நபியின் மனைவிகள் கோஷா இடவேண்டியதில்லை, அவர்கள் அந்நிய ஆண்களுக்கு மத்தியில் வரலாம் என்ற இறைவன் மற்றப் பெண்களுக்கு விதித்த விதிமுறைகளிலிருந்து விதிவிலக்குச் செய்து கூறியிருக்க வெண்டும். அப்படி கூறி இருந்தால்தான் அதனை விசேட சட்டம் என்று ஏற்றக் கொள்ள முடியும்.

எனவே மேற்கண்ட 9 விதிமுறைகளைக் கூறி நபியுடைய மனைவியரை அல்லாஹ் எச்சரிக்கை செய்திருக்கிறான் என்றால் அவர்கள் சமுதாயத்தில் உள்ள மற்றப் பெண்களுக்கு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே இச்சட்டங்களைப் பெற்றுக் கொள்வதில் மற்ற பெண்களே முன்னுரிமை உள்ளவர்.

இவ்வாறு மாற்றுக் கருத்துடையவர்கள் தமது வாதங்களை வைக்கின்றனர்.

நமது பதில்

அல்அஹ்சாப் 33 வது அத்தியாயம் 32, 33, 34 வது வசனங்களில் கூறப்படும் ஒன்பது விசயங்களைப் பட்டியிலிட்டு கேள்விகள் கேட்ட மாற்றுக் கருத்துடையவர்கள் அவ்வசனத்தில் கூறப்பட்ட பல விசயங்களை இருட்டடிப்பு செய்துள்ளனர்.

முதலில் அவ்வசனங்களை முழுமையாகக் காண்போம்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.                  (அல்குர்ஆன் 33 : 32, 33, 34)

அல்லாஹ் ”நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்” என்று அழைக்கின்றான். இவ்வாறு ஏன் அழைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபியுடைய மனைவியர் தெளிவான வெட்கக்கேடான காரியத்தைச் செய்து விட்டால் அவர்களுக்கு இருமடங்கு வேதனை அளிக்கப்படும் என்று 33 : 33 வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அதுபோன்று நபியுடைய மனைவியர் அல்லாஹ் ரசூலுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்களுக்கு இருமடங்கு கூலி என்று அல்லாஹ் 33 : 31 வது வசனத்தில் கூறுகிறான்.

இதன் காரணமாகத்தான் நபியுடைய மனைவியர் ஏனைய பெண்களைப் போன்று கிடையாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபியுடைய மனைவியர் அல்லாத ஏனைய பெண்களிடம் சில தவறுகள் ஏற்பட்டு விடலாம். ஆனால் நபியுடைய மனைவிமார்களிடம் அந்தத் தவறுகள் வந்துவிடக்கூடாது.

நபியுடைய மனைவியர் அல்லாத பிற பெண்கள் சில நல்லறங்களில் பொடுபோக்காக இருந்து விடலாம். ஆனால் நபியுடைய மனைவியர் அது போன்று இருந்து விடக்கூடாது என்று அல்லாஹ் அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றான்.

மாறாக நபியுடைய மனைவியர் அல்லாதவர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், நபியுடைய மனைவியர் அவர்களை விட அந்தஸ்தில் தாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அல்லாஹ் இதுபோன்ற விதிமுறைகளை நபியுடைய மனைவியருக்கு விதியாக்கவில்லை.

மேலும் அல்அஹ்சாப் 33 வது அத்தியாயம் 32, 33, 34 வது வசனங்களில் கூறப்படும் அனைத்து விசயங்களும் நபியுடைய மனைவியருக்கு மட்டும் உரிய விசயங்கள்தான். இதனை நாம் முன்னர் விரிவாக விளக்கியுள்ளோம்.

அதே நேரத்தில் இதில் கூறப்படும் அனைத்து விசயங்களும் பிற பெண்களும் பின்பற்ற வேண்டியவைதான். அதற்குரிய ஆதாரம் மேற்கண்ட வசனங்கள் அல்ல.

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் அனைத்து விசயங்களும் நபியுடைய மனைவியர்களுக்கு மட்டும் உரியவையாகும்.

நபியுடைய மனைவியர் அல்லாத பிற பெண்களும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பது பிற நபிமொழிகள் மூலம் பெறப்படுகிறது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில்  வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.  தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,  ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.                    (அல்குர்ஆன் 24 : 31)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.       (அல்குர்ஆன் 33 : 35)

அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :   இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு அதன் மூலம் மக்களை அடிப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (4316)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எந்த ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் நறுமணத்தை ஒரு கூட்டத்தார் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களைக் கடந்து செல்கிறாளோ அவள் நடத்தை கெட்ட பெண் ஆவாள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) நூல் : நஸாயீ (5036)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்;  நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.                       (அல்குர்அன் 60 : 12)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.      அறிவிப்பவர் :  இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (8)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.

(நூல் : புகாரி (6243)

மேற்குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் பெண்கள் அலங்காரத்தைக் காட்டிக் கொண்டு திரியக்கூடாது, தவறான எண்ணங்கள் ஏற்படும்படி பேசுவது கூடாது, ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும், ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும், அல்லாஹ் ரசூலின் கட்டளைகளுக்குக் கீழ்படிய வேண்டும், அல்லாஹ்வை நினைவு கூர வேண்டும், விபச்சாரம் செய்யாமல் பத்தினித்தனமாக இருக்க வேண்டும் போன்ற அனைத்துக் கட்டளைகளும் கூறப்பட்டுள்ளது. இவற்றிற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் நபியுடைய மனைவியருக்கு மட்டும் கூறப்பட்ட சட்டங்களைப் பிற பெண்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறோம்.

 

கஅபாவும் பிற பள்ளிகளும் ஒன்றா?

கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும் என்று சிலர் கேட்கலாம். ஆனால் இதில் இருக்கிற மிகப்பெரும் அறிவியல் உண்மையை ஆராய்ந்தால் இந்த வசனங்களெல்லாம் இறைவேதம் என்பதற்கான சான்றாக நிச்சயம் இருக்கும்.

بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ - சூடேற்றப்பட்ட கற்களைப் பறவைகள் வீசியதாக அல்லாஹ் கூறுகிறான். வெப்பம் ஊட்டப்பட்ட கற்கள் என்கிறான். சிஜ்ஜீல் என்றால் கடும் வெப்பம் என்று பொருள். கடும் வெப்பம் என்றால் அணு ஆயுதத்தைதான் குறிக்கும். அது வெடித்தால் ஏற்படும் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும். அதனால்தான் அணுகுண்டின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அழிந்து நாசமாகிவிடுகிறார்கள். கருகி சாம்பலாகி விடுகிறார்கள்.

ஒரு சிறிய கல்லில் கடும் வெப்பத்தை ஏற்றலாம் என்றும் கடும் வெப்பத்தை ஏற்றினாலும் அதைத் தூக்கிக் கொண்டு போகலாம், தூக்கிக் கொண்டு போகிறவருக்கு ஒன்றும் ஏற்படாது. அதை ஒன்றின் மீது போட்டால்தான் வெடிக்கும் அதனால் பாதிப்பு வரும் என்பது இதிலிருந்து தெரிகிறது. அணு ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு அப்படியே இறக்கி தரையில் வைத்தால் வெடிக்காது. மேலிருந்து கீழே போட்டால்தான் வெடிக்கும் என்ற அறிவியல் தத்துவம் இதில் இருக்கிறது.

அதாவது இந்தக் கல்லைப் பறவைகளிலில்லாமல் கழுதையிடமோ நாயிடமோ அனுப்பியிருந்தால் அருகிலிருந்து போடும். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியெனில் அணு ஆயுதங்களை எறிவதற்கு வேகம் வேண்டும். உயரம் போகப் போக புவிஈர்ப்பு சக்தி கூடும். போர்ஸாக இழுக்கிற ஒரு இயற்பியல் தத்துவம் அதில் உண்டாக வேண்டும். அதாவது ஒரு வெடி மருந்தைக் கொண்டு எதிரிப் படைகளை அழிப்பதற்கு என்னென்ன நிபந்தனைகள் வேண்டுமோ அவற்றையெல்லாம் இறைவன் இந்த அத்தியாயத்தில் கூறுகிறான்.

இப்போது இந்த அர்த்தங்களை வைத்துக் கொண்டு இந்த அத்தியாயத்திற்கு பொருள் கொண்டால் மிகச் சரியாக பொருந்தும்.

أَلَمْ تَرَى - சிந்திக்கவில்லையா?

இங்கு பார்க்கவில்லையா? என்று பொருள் வைத்தால் விரிந்த பொருள் வராது. பார்க்கவில்லையா? என்று அர்த்தம் செய்தாலும் அதன் கருத்து சிந்திக்கவில்லையா? என்றுதான் இருக்கும். இருக்க வேண்டும்.

كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ - உமது இரட்சகன் யானைப் படையினரை எப்படி நடத்தினான் என்பதை (நபியே) நீர் சிந்திக்கவில்லையா?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ - அவன் அவர்களின் சூழ்ச்சியை வீணாணாக ஆக்கவில்லையா?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ - அபாபீல் பறவைகளை அவர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தான்.

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ - கடும் சூடேற்றப்பட்ட வெப்பமூட்டப்பட்ட கற்களை அவைகள் அவர்களின் மீது விசியெறிந்தன.

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ - அவன் அவர்களை மென்று உமிழப்பட்ட வைக்கோல் போன்று (மனிதக் கூழாக) ஆக்கிவிட்டான்.

பலூன் பெரிதாக இருக்கும். அதை உடைப்பதற்கு சிறிய குண்டூசி போதும். தவ்ஹீத் என்பது குண்டூசிதான். ஷிர்க் என்பது பலூன் போன்று பெரிதாக இருக்கும். ஷிர்க்கில், பித்அத்தில், வழிகேட்டில் எந்தப் பலூனைக் கொண்டு வந்தாலும், அவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் ஆனால் சத்தியத்திற்கு முன்னால் தோற்கும். வெருண்டோடும். அல்லாஹ் இதைத் திருமறையில் இன்னும் தெளிவாகக் கூறுகிறான். 

قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَاأُولِي الْأَلْبَابِ لَعَلَّكُـمْ تُفْلِحُوْنَ سورة المائدة 100

"கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன் 5:100)

وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيّئَةُ  سورة الفصلت

நன்மையும், தீமையும் சமமாகாது.

(அல்குர்ஆன் 41:34)

فَمَا لَهُمْ عَنْ التَّذْكِرَةِ مُعْرِضِينَ كَأَ نَّـهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.

(அல்குர்ஆன் 74:49,50,51)

அல்லாஹ் சொல்வதைப் போன்று கெட்டது அதிகமாக இருக்கும். அதனால் கெட்டதும் நல்லதும் சமமாகாது. கெட்டது நிற்காது. ஏகத்துவத்தின் வீரியத்திற்கு முன்னால், அதனுடைய சக்திக்கு முன்னால், அபாபீலுக்கு முன்னால் யானைகளெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். இதைத்தான் இந்த வரலாறு சொல்கிறது.

இதைத்தான் நபிகளார் கண்ட முதல் பத்ருக் களத்தில் பார்த்தோம். 300 க்கு முன்னால் 1000 நிற்க முடியவில்லை. அதுவும் அபாபீல் பறவை சம்பவம் போன்றதுதான். உருப்படியான ஆயுதங்கள் எதுவும் கிடையாது. எல்லாம் உடைந்த ஆயுதங்களும் கம்புகளும் மட்டும்தான். ஆனால் வீரியம் முழு வீச்சில் இருந்தது. இது என் மறுமை வெற்றிக்கான ஏகத்துவக் கொள்கை. இதில் நான் வளைந்துவிட மாட்டேன்; இதில் சமரசம் செய்ய மாட்டேன்; இதற்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உத்வேகம் காரணமாக அல்லாஹ் மகத்தான் வெற்றியை அளித்தான். இதைத்தான் இந்த வரலாற்றில் அல்லாஹ் நமக்குப் பாடம் சொல்லித் தருகிறான்.

எனவே எந்த ஒரு கட்டத்திலும் அதிகமான எண்ணிக்கையை வைத்து சரி என்று முடிவெடுத்தால் யானைப் படைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் என்பதை புரிந்து நடக்க வேண்டும். இதையும் சிந்திக்கத்தான் வேண்டும்.

வெறுமனே அறிவியலை மட்டும் சிந்திக்க இந்த அத்தியாயம் அருளப்படவில்லை. யானைப் படையுடன் ஒப்பிடும் போது பறவை எத்தனை மடங்கு சிறியது. ஆனாலும் பறவையிடமிருந்த வீரியம் யானையை வீழ்த்துகிறது. அதுபோன்றுதான் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அதனால் என்ன? சத்தியத்திற்கு முன்னால் தவ்ஹீதுக்கு முன்னால் வழிகேடும் அசத்தியமும் சுக்குநூறாக நொருங்கும்.

கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால் அடி உதைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்; ஓடமாட்டார்கள்; நிற்பார்கள்; ஜெயிலுக்குப் போவதற்குக் கூட நிற்பார்கள்; தியாகத்திற்கு நிற்பார்கள்; சாவதற்கும் வந்து நிற்பார்கள்.

கொள்கையில் நம்பிக்கையற்ற கூட்டத்தினர் சொகுசாக இருக்கும் போது வந்து நிற்பார்கள்; சிக்கல் வருகிறபோது நெல்லிக்காய் மூட்டை போன்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சிதறிவிடுவார்கள். இந்தப் பாடத்தையும்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் சொல்லித் தருகிறான்.

கஅபாவும் பிற பள்ளிகளும் ஒன்றா?

இதில் இன்னொரு பாடமும் இருக்கிறது. யாராவது பள்ளிவாசலை இடிக்க வந்துவிட்டார்களெனில், கஃபாவைக் காப்பாற்றிய அபாபீல் பறவைக் கூட்டம் வரும் என்று வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கக்கூடாது. எந்த அபாபீலும் வராது. உலகில் எந்த ஆலயத்தை யார் இடிக்க வந்தாலும் அதை அவர்களாகவேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் கஃபாவைக் காப்பாற்றிய இறைவன் குரைஷிகளுக்காகக் கொடுத்த கண்ணியம், அவர்களைத் தவிர வேறெவருக்கும் இல்லை என்பதைக் குறிப்பதற்குத்தான் لِإِيلَافِ قُرَيْشٍ (லிஈலாஃபி குரைஷின்) குரைஷிகளை மகிழ்விப்பதற்காக என்று அடுத்த அத்தியாயத்தில் மீதியைச் சொல்லி முடிக்கிறான் இறைவன்.

உலகத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கெல்லாம் இப்படி அபாபீல் வராது. நான் அனுப்ப மாட்டேன் என்றும் உங்களது பள்ளியை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இறைவன் லீஈலாஃபி குரைஷ் அத்தியாயத்தின் மூலம் பிரகடனப்படுத்துகிறான்.

கஃபாவைக் காப்பற்றியதற்குக் காரணம், அல்லாஹ்வே அதை அபய பூமி என்கிறான். பாதுகாக்கப்பட்ட பள்ளி என்கிறான். அந்த வாக்குறுதியைக் காப்பற்றத்தான் இப்படியெல்லாம் அபாபீல்களை அனுப்பினான்.

وَقَالُوا إِنْ نَتَّبِعْ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ

"நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

(அல்குர்ஆன் 28:57)

أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ الله يَكْفُرُونَ

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

(அல்குர்ஆன் 29:67)

எனவே கஃபா ஆலயத்தினை தான் காப்பாற்றுவதாக அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். அதில் யாரும் கையை வைக்க முடியாது. யாராவது அந்த ஆலயத்தைக் கைப்பற்றிய வரலாறு உண்டா? வரலாறு உண்டு என்றாலும் கூட, முஸ்லிமுக்கு எதிராக முஸ்லிம் கைப்பற்றிய வரலாறுதான் உண்டு. ஒரு முஸ்லிம் கஃபாவை ஆட்சி செய்து கொண்டிருப்பான், இன்னொரு முஸ்லிம் படையைத் திரட்டிப்போய் அவனை காலிசெய்துவிட்டு படை திரட்டிய முஸ்லிம் கைப்பற்றி ஆட்சி நடத்துவான். அந்த வரலாறுதான் உண்டே தவிர, அமெரிக்க, ரஷ்ய வல்லூருகள் போன்றவர்கள் கைப்பற்றிய வரலாறுகள் உண்டா? கிடையாது.

அந்த ஆலயத்தை சிதைத்த வரலாறும், அதன் மீது கை வைத்த வரலாறும் கிடையாது. அதை அழிக்கும் அளவுக்கு வெறி கொண்டு அலைந்த காலமெல்லாம் இருந்தது. இன்றைக்கெல்லாம் அது கிடையாது. அனைத்து சக்திகளும் சேர்ந்து கொண்டு அழிக்க நினைத்த காலத்தில் உலக வரலாற்றில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக மைனாரிட்டிகளாக இருந்தோம். அப்படிப்பட்ட காலகட்டத்திலும் கூட அதை அழிக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இறைவன் அதைக் காப்பாற்றினான். அதற்குக் காரணம் அது அதற்கே உள்ள தனிச் சிறப்பு. மற்றவைகளுக்கெல்லாம் நாமாகத்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த அத்தியாயத்தை வைத்துக் கொண்டு, பாபர் மஸ்ஜிதை இந்துத்துவா சக்திகள் இடித்து விட்டார்களே, அபாபீல் பறவைகளைக் காணோமே என்றெல்லாம் கூட முஸ்லிம்களே கேட்டார்கள். பிற மதத்தவர்களும் கேட்டார்கள். உன் கடமையை நீ செய்யவில்லை. நீதானே காப்பாற்றியிருக்க வேண்டும். நமது வீட்டைத் தடுக்க வருகிற போது உயிரைக் கொடுத்து காப்பாற்றுவதைப் போல் நாம்தான் காப்பாற்றியிருக்க வேண்டும். அப்படி நாம்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் இறைவன் கூறுகிறான்.

وَلَوْلَا دَفْعُ الله النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.

(அல்குர்ஆன் 22:40)

மனிதர்களில் ஒருவர் மூலமாக இன்னொருவரைத் தடுத்திருக்காவிட்டால் சர்ச்சுகளும், மத ஆலயங்களும், கோவில்களும், பள்ளிவாயில்களும் இருந்திருக்காது என்று இறைவன் சொல்வதிலிருந்து மனிதன்தான் தங்களது மத ஆலயங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். அல்லாஹ் நமது பள்ளிவாசல்களுக்கு எந்த உத்திரவாதத்தையும் தரவில்லை. அல்லாஹ் உத்திரவாதம் தந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றுவான். பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கோவில்களை அதற்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

சர்ச்சுக்களை அதற்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் காப்பாற்ற வேண்டும். பள்ளிவாசலை எவனும் தொடமுடியாது என்கிற சவாலையெல்லாம் விடமுடியாது. எவனும் தொடலாம், அழிக்க வரலாம், நாம்தான் நமது இடத்தை நமக்குச் சொந்தமானதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளிவாசலை அழிக்க வந்தவர்களுக்கு தண்டனை மறுமையில் கிடைக்கும். ஆனால் இந்த உலகில் அவனுக்கு ஏதாவது நடக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கமுடியாது. இந்தச் செய்தியையும் இந்த அத்தியாயம் நமக்கு படிப்பினையாக தருகிறது.

அரபியர்களின் யானை ஆண்டு கணக்கு

இதில் இன்னொரு செய்தியையும் தெரிந்து கொள்ள வேண்டும். அரபியர்கள் வருடத்தைக் குறிப்பிடும்போது இந்த யானைப் படை அழிக்கப்பட்ட சம்பவத்தை வைத்துத்தான் பேசுவார்கள். தற்போது உலக வழக்கிலுள்ள கி.பி 2000, கி.பி 2003 என்றெல்லாம் பேசிக் கொள்ளும் ஆண்டு முறை, ஏசு வந்து போன வரலாற்றை வைத்துப் பேசுகிறோம். கி.பி என்றால் கிறித்து பிறந்த பின் என்று பொருள். கி.மு என்றால் கிறித்து பிறப்பதற்கு முன் என்று பொருள்.

நபியவர்கள் மரணிக்கும் வரைக்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்க யானை ஆண்டு 1, யானை ஆண்டு 2 (عام الفيل - ஆமுல் ஃபீல்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தார்கள். யானை ஆண்டு என்ற பெயரில்தான் எழுதியும் வந்தார்கள். வரலாற்றில் நபியவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 1ல் பிறந்தார்கள் என்று எழுதுவார்கள். நபியவர்கள் எப்போது நபியானார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 40 என்பார்கள். எப்போது நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 53 என்பார்கள். எப்போது நபியவர்கள் மரணித்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 63 என்பார்கள். நபியவர்கள் மரணிக்கும் வரைக்கும் இந்த யானை ஆண்டுதான் இஸ்லாமிய வரலாறாகவே இருந்தது.

நபியவர்கள் மரணித்த பிறகு அபூபக்கர் ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தது. அதன் பிறகு உமர் ரலியின் ஆட்சி காலத்தில் யானை ஆண்டை எடுத்துவிட்டு, ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியை ஆண்டின் பெயராக அறிவித்தார்கள். அன்றிலிருந்து உலக முஸ்லிம்கள் அனைவரும் ஹிஜ்ரியை இஸ்லாமிய ஆண்டாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.

இன்னும் சொல்லப்போனால் நபியவர்களின் அங்கீகாரம் பெற்றது என்றால் யானை ஆண்டைத்தான் சொல்ல வேண்டும். நபியவர்கள் எங்காவது தனது ஹிஜ்ரத்திலிருந்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. தனது பிறப்பிலிருந்தும் ஆரம்பியுங்கள் என்றும் சொல்லவில்லை. தனது நுபுவ்வத் (நபித்துவ ஆரம்பம்) ஆரம்பித்திலிருந்து ஆரம்பியுங்கள் என்றும் சொல்லவில்லை. தனது மரணித்திலிருந்தும் ஆண்டுகளை எண்ணுங்கள் என்றும் சொல்லவில்லை.

உமர் (ரலி) தான் யானை ஆண்டு என்பது நமக்கும் அவர்களுக்கும் எல்லோருக்கும் பொதுவானது. நமக்கு என தனியாக ஒரு ஆண்டு எண்ணிக்கை வேண்டும் என்று ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டார்கள்.

நபியவர்களின் 53 வது ஆண்டுதான் இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரத்தின் முதலாம் ஆண்டு. அப்படியெனில் ஹிஜ்ரி 5 என்றால் இஸ்லாமிய வரலாறு 5 என்று நம்பிவிடக் கூடாது. ஹிஜ்ரி 5 என்றால் நபியவர்கள் பிறந்ததிலிருந்து 58 வது வருடம் என்று பொருள். எனவே ஹிஜ்ரியை விட யானை ஆண்டைத்தான் நபியவர்கள் ஆதரித்து உள்ளார்கள். அவர்கள் அதை மாற்ற விரும்பவில்லை. நபியவர்களே பயன்படுத்தும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி குர்ஆனிலேயே அல்லாஹ் நினைவுபடுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டுதான் யானை சம்பவம் என்பதையும் இதில் தெரிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் கூறியதாக பதிவு செய்யபட்ட ஹதீஸ் நூற்களில் தேடினால், இந்தச் சம்பவத்தைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார்கள். ஒரு பிராயணத்தில் போகும் போது கஸ்வா என்ற அவர்களின் குதிரை சண்டித்தனம் செய்கிறது. எப்படி விரட்டினாலும் அடம்பிடித்துக் கொண்டு போகாமல் இருக்கிறது. அப்போதுதான் நபியவர்கள் யானைப் படையைத் தடுத்தவன்தான் இதையும் தடுத்து நிறுத்தி விட்டான் என்கிறார்கள்.

அதாவது யானைப் படையை அல்லாஹ் அழித்ததை ஞாபகப்படுத்திக் காட்டுகிறார்கள். இலேசாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2734 حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ وَمَرْوَانَ يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ قَالَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَقَالَ النَّاسُ حَلْ حَلْ فَأَلَحَّتْ فَقَالُوا خَلَأَتْ الْقَصْوَاءُ خَلَأَتْ الْقَصْوَاءُ فَقَالَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَا خَلَأَتْ الْقَصْوَاءُ وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ  رواه البخاري

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ...... இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் ("மிரார்' என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள்  (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல்ஹல்' என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், " "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது, "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே இதையும் தடுத்து வைத்திருக்கின்றான்'' என்று கூறினார்கள். பிறகு, "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில்  சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி),

புகாரி 2731,2732

யானைப் படையைத் தடுத்து நிறுத்தியவன்தான் இந்த ஒட்டகத்தையும் தடுத்து நிறுத்தி வைத்துள்ளான். அல்லாஹ் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக இப்படியெல்லாம் செய்கிறான் என்று நபியவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தியில்தான் யானைப் படையைப் பற்றி சின்ன துணுக்கை நமக்கு நபியவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நபியவர்கள் செய்த முதலும் கடைசியுமான விடைபெறும் ஹஜ்ஜில் பேசிய உரையிலும் யானைப்படையைச் சுட்டிக் காட்டினார்கள்.

2434 حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ قَالَ لَمَّا فَتَحَ الله عَلَى رَسُولِهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ الله حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ فَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ فَقَامَ أَبُو شَاهٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اكْتُبُوا لِأَبِي شَاهٍ قُلْتُ لِلْأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, "அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன்மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ, அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிர'' என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.

புகாரி 2434

இவைதாம் இந்த அத்தியாயத்தைப் பற்றி நபியவர்கள் சொன்ன செய்திகளாகும்.

இப்போது ஃபீல் அத்தியாயத்தையும் குரைஷி அத்தியாயத்தையும் இணைத்துப் பொருள் கொண்டால் முழுமையாக செய்தி புரிந்து கொள்ளும்.

أَلَمْ تَرَى - நீ சிந்திக்கவில்லையா? என்று நபியைப் பார்த்து அல்லாஹ் சொன்னாலும் நம்மையும் சேர்த்துத்தான் சொல்கிறான். நாமும்தான் அதில் சிந்திக்க வேண்டும்.

كَيْفَ فَعَلَ رَبُّكَ - உமது இரட்சகன் எப்படிச் செய்தான் என்பதைப் பார்க்கவில்லையா?

بِأَصْحَابِ الْفِيلِ - யானைப் படையினரை என்ன செய்தான் என்பதை சிந்தித்துப் பார் என்று கூறுகிறான்.

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ - அபாபீல் பறவைகளை அவர்களுக்கு எதிராக அவன் அனுப்பிவைத்தான்.

அதனையும் சிந்திக்கவில்லையா?

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ - சூடேற்றப்பட்ட கற்களை அ(ப்பற)வைகள் அவர்களின் மீது எறிந்தன.

அதனையும் சிந்திக்கவில்லையா?

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ - மென்று உமிழப்பட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவன் ஆக்கினான்.

அதனையும் சிந்திக்கவில்லையா?

இவைகளையெல்லாம் ஏன் செய்தேன் என்றால்.. لِإِيلَافِ قُرَيْشٍ (லீஈலாஃபி குரைஷி) என்று அடுத்த அத்தியாயத்தில் பதில் சொல்கிறான்.

لِإِيلَافِ قُرَيْشٍ - குரைஷிகளை மகிழ்விப்பதற்காக, அவர்களுக்குப் பேருபகாரம் செய்வதற்காக, அவர்களுக்கு கருணை காட்டுவதற்காக

சண்டை நடந்தால் யாருக்கு நஷ்டம்? மக்காவில் உள்ளவர்களுக்குத்தான் நஷ்டம். அவர்களிடம்தான் இறைவன் உங்களைக் காப்பதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்தேன் என்று கூறுகிறான்.

யானைப் படையைத் தோற்கடித்து நாசமாக்கியதை அல்லாஹ் நினைவுபடுத்திவிட்டு, இவ்வளவு செய்தும் எனக்கு நன்றி மறந்து கல்லையும் மண்ணையும் வணங்குகிறீர்களே என்று கேட்கிறான். 

இப்படி மேற்சொன்ன ஃபீல் அத்தியாயத்துடன் சேர்ந்த செய்தியைச் சொல்வதினால்தான் பல அறிஞர்கள் இரண்டு அத்தியாயங்களும் ஒன்று என்கிறார்கள்.

அத்தியாய எண்ணிக்கைக்காக இரண்டு சூராக்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கருத்துக்காகவும் செறிந்த பொருளுக்காவும் ஒரே அத்தியாயமாக ஆக்குகிறார்கள்.

ஃபீல் அத்தியாயத்தின் அர்த்தம் லீஈலாஃபி குரைஸ் அத்தியாயத்துடன் இணைகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் குரைஷிகள் வர்த்தகப் பிரயாணம் மேற்கொள்வார்கள். இப்படிப் பிரயாணத்தில் வியாபாரத்திற்காக ஒட்டகங்களில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள். கொண்டு போகும் நேரத்தில்தான் மக்காவாசிகளுக்கு அருள் செய்யவேண்டும். எப்படி அருள் செய்திருக்கிறான் என்பதைத்தான் இறைவன் சொல்கிறான்.

யானைப் படையினர் கஃபாவைத் தகர்த்தும் மக்காவாசிகளை அழித்துமிருந்தால் அருள் செய்யப்பட்டிருக்க முடியாது. யானைப் படையினரைத் தோற்கடித்ததின் காரணமாகத்தான் குரைஷிகள் அருள் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் இதில் ஒரு பிண்ணனியும் இருக்கிறது. அந்தக் காலங்களில் வர்த்தகக் கூட்டங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமான ஒன்று.  இப்படி வர்த்தகக் கூட்டம் பிரயாணம் செய்தால் கொள்ளைக் கூட்டம் சூரையாடிச் சென்றுவிடுவார்கள். இந்தக் கொள்ளைக் கூட்டம் மக்காவாசிகள், குரைஷிகள் என்று தெரிந்தால் கை வைக்க மாட்டார்கள். ஏனெனில் மக்காவைத் தகர்க்க வந்த யானைப் படையினரை அல்லாஹ் பறவையை அனுப்பி காப்பாற்றிவிட்டான் என்ற காரணத்தினால் அவர்கள் மீது யாரும் கை வைக்க மாட்டார்கள் கொள்ளைக் கூட்டத்தினர். இப்படி பயமற்று வியாபாரத்திற்குப் போகிறவர்கள் மக்காவாசிகள்தான்.

இந்த யானைப் படை அழிப்பு சம்பவத்திற்குப் பிறகு மக்காவிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் இப்படியொரு பேருபகாரத்தை, உதவியைச் செய்துவிட்டான். இப்படியொரு கண்ணியத்தை அந்த சமுகத்திற்கு இறைவன் வழங்கியிருந்தான்.

அதனால்தான் இறைவன் கோடை கால மற்றும் குளிர் கால பிரயாணத்தின் போது குரைஷிகளுக்கு அருள் புரிவதற்காக என்று கூறுகிறான். பிரயாணத்தில் உங்களுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காகவும்தான் யானைப் படையை இறைவன் அழித்தான். யானைப் படையை அழித்த சம்பவத்தினால்தான் பயமில்லாமல் மக்காவாசிகள் பிரயாணம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் உபகாரம் செய்தேனே? சிந்தித்துப் பார்க்கமாட்டாயா? என்று அர்த்தம்.

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ - எனவே அவர்கள் (மக்கா வாசிகள்) இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும்.

இந்த வசனம் கஃபாவுடன் சம்பந்தப்பட்டுத்தான் வருகிறது. மேலே ஃபீல் அத்தியாயத்தில் கஃபாவைக் காப்பாற்றிய வரலாற்றைச் சொல்லிவிட்டுத்தான் லீஈலாஃபி குரைஷ் அத்தியாயத்தில் இப்படிச் சொல்கிறான்.

எல்லா பள்ளி வாசல்களுக்கும் அல்லாஹ்தான் இறைவன். இருந்தாலும் மக்காவிலுள்ள கஃபாவிற்குத் தனிச் சிறப்பை இறைவன் வைத்திருப்பதினால் "இந்த ஆலயத்தின் இறைவனை வணங்கட்டும்' என்கிறான். எந்த ஆலயத்தை பிறர் தகர்க்கமுடியாமல் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ அந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும் என்கிறான்.

الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ -அவனே பசிக்கும்போது அவர்களுக்கு உணவளிக்கிறான்.

கற்பனை செய்து பார்த்தால் மக்காவில் ஒருவருக்கும் சோறு கிடைக்கவே செய்யாது. மரணித்து இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு இயற்கை வளம் எதுவும் கிடையாது. அன்றைக்கு மக்காவில் ஒன்றும் கிடையாது. ஒரு ஊர் என்றிருந்தால் தோட்டந்துறவு, வயல் வரப்பு, வாய்க்கால் தண்ணீர் என்று இருந்தால்தான் அதனை ஊர் என்போம். இவை எதுவும் இல்லாததுதான் மக்கா என்ற ஊர். ஆனால் மக்காவில் எல்லாப் பொருட்களும் உலகத்தின் பல பாகங்களில் இருந்து அளவிலா வகையில் வந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் அதை ஒரு சுற்றுலாத் தளம் போன்று இறைவன் ஆக்கியிருக்கிறான். அதனால்தான் மக்காவிற்கு சாப்பாடு கிடைக்கிறது.

وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ - மேலும் அச்சத்திலிருந்து (பயத்திலிருந்து) அவர்களை அவன் பாதுகாத்திருக்கிறான்.

அரபுப் பிரதேசத்தில் பயமில்லாமல் படுத்துறங்குகிற ஊர் மக்காதான். எங்கு அணுகுண்டு போட்டாலும் சரி; மக்காவில் போடமுடியாது. ஏனெனில் இறைவன் கட்டுப்பாட்டில் அந்த ஊர் உள்ளது. இப்படியெல்லாம் அருள் செய்த அல்லாஹ்வாகிய என்னை அவர்கள் வணங்கட்டும் என்று கூறுகிறான். முதலில் நபியவர்கள் எந்தக் குரைஷிகளுக்காக அனுப்பப்பட்டார்களோ அவர்களிடம்தான் அல்லாஹ் சொல்கிறான். அப்போதுதான் அவர்களுக்கு சொன்ன செய்தி. பிறகு நபியவர்கள் முழு மனித குலத்திற்கும் தூதராக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

இப்படி இரண்டு சூராக்களையும் சேர்த்தால்தான் சரியான அர்த்தம் வருகிறது. பிண்ணனியுடன் புரிய வேண்டிய செய்திகளும் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போவதையும் காண்கிறோம்.

இதுபோக பொதுவான இன்னொரு படிப்பினையும் இருக்கத்தான் செய்கிறது. அல்லாஹ் ஏதாவது ஒரு உதவியை நமக்குச் செய்தால் தொழுதோ, திக்ரின் மூலமாகவோ, நோன்பு வைத்தோ, தர்மம் செய்தோ, பிரார்த்தனை மூலமாகவோ மார்க்கம் அனுமதித்த எதாவது ஒரு முறையில் அல்லாஹ்வுக்காக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

இறைவன் நமக்குச் செய்கிற உபகாரங்களுக்கும் உதவிகளுக்கும் வணக்கத்தின் மூலமாக அவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும் என்கிற பாடத்தையும் அல்லாஹ் நமக்கு இந்த அத்தியாயத்தில் கற்றுத் தருகிறான். அல்லாஹ் கற்றுத் தருகிற பாடத்தை விளங்கி நடக்கிற நன்மக்களாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!

 

இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்

ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்

481 حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ أَصَابِعَهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.

(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி), நூல் : புகாரி (481)

திருக்குர்ஆனை ஓதுவார்

5059 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالْأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ وَالْمُؤْمِنُ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ وَيَعْمَلُ بِهِ كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلَا رِيحَ لَهَا وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَالْحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ أَوْ خَبِيثٌ وَرِيحُهَا مُرٌّ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது' அல்லது அருவருப்பானது.' அதன் வாடையும் வெறுப்பானது.

அறிவிப்பவா : அபூமூசா (ரலி),

நூல் : புகாரி (5059)

தேவையான அளவே சாப்பிடுவார்

5393 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ عَنْ نَافِعٍ قَالَ كَانَ ابْنُ عُمَرَ لَا يَأْكُلُ حَتَّى يُؤْتَى بِمِسْكِينٍ يَأْكُلُ مَعَهُ فَأَدْخَلْتُ رَجُلًا يَأْكُلُ مَعَهُ فَأَكَلَ كَثِيرًا فَقَالَ يَا نَافِعُ لَا تُدْخِلْ هَذَا عَلَيَّ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ண மாட்டார்கள். ஆகவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவா : நாஃபிஉ,

நூல் : புகாரி (5393)

சோதனையின் போது தளரமாட்டார்

5643حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ عَنْ سَعْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنْ الزَّرْعِ تُفَيِّئُهَا الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالْأَرْزَةِ لَا تَزَالُ حَتَّى يَكُونَ انْجِعَافُهَا مَرَّةً وَاحِدَةً وَقَالَ زَكَرِيَّاءُ حَدَّثَنِي سَعْدٌ حَدَّثَنَا ابْنُ كَعْبٍ عَنْ أَبِيهِ كَعْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி (5643)

6122حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ شَجَرَةٍ خَضْرَاءَ لَا يَسْقُطُ وَرَقُهَا وَلَا يَتَحَاتُّ فَقَالَ الْقَوْمُ هِيَ شَجَرَةُ كَذَا هِيَ شَجَرَةُ كَذَا فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ وَأَنَا غُلَامٌ شَابٌّ فَاسْتَحْيَيْتُ فَقَالَ هِيَ النَّخْلَةُ وَعَنْ شُعْبَةَ حَدَّثَنَا خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ ابْنِ عُمَرَ مِثْلَهُ وَزَادَ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ فَقَالَ لَوْ كُنْتَ قُلْتَهَا لَكَانَ أَحَبَّ إِلَيَّ مِنْ كَذَا وَكَذَا رواه البخاري

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்று கூறினர். அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அது பேரீச்ச மரம் என்று சொன்னார்கள்.

நுல் : புகாரி (6122)

ஏமாற மாட்டார்

6133حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ  رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்பட மாட்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (6133)

அனைத்திலும் நன்மையைப் பெறுவார்

5318حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَاللَّفْظُ لِشَيْبَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.

அறிவிப்பவா : ஸுஹைப் (ரலி),

நூல் :முஸ்லிம்  (5726)

நற்குணம் நிறைந்திருக்கும்

4166حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ وَحَفْصُ بْنُ عُمَرَ قَالَا حَدَّثَنَا ح و حَدَّثَنَا ابْنُ كَثِيرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ عَنْ عَطَاءٍ الْكَيْخَارَانِيِّ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ حُسْنِ الْخُلُقِ قَالَ أَبُو الْوَلِيدِ قَالَ سَمِعْتُ عَطَاءً الْكَيْخَارَانِيَّ قَالَ أَبُو دَاوُد وَهُوَ عَطَاءُ بْنُ يَعْقُوبَ وَهُوَ خَالُ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ يُقَالُ كَيْخَارَانِيٌّ وَكَوْخَارَانِيٌّ  رواه ابوداود

(இறைநம்பிக்கையாளனின்) தாரசில் நற்குணங்களைவிட அதிக எடையுடையது வேறு எதுவும் இருக்காது.

அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி),

நூல்: அபூதாவூத் (4166)

1082حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا قَالَ وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

இறைநம்பிக்கையில் முழுமை பெற்றவர் அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் அவர்கள் மனைவியிடம் சிறந்தவராக இருப்பவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவார் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : திர்மிதீ (1082)

இறைநம்பிக்கையாளனின் சகோதரர்

2536و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ اللَّيْثِ وَغَيْرِهِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ عَلَى الْمِنْبَرِ يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ فَلَا يَحِلُّ لِلْمُؤْمِنِ أَنْ يَبْتَاعَ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَخْطُبَ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَذَرَ  رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறை நம்பிக்கையாளரின் சகோதரர் ஆவார். எனவே, தம் சகோதரர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் (குறுக்கிட்டு) வியாபாரம் செய்ய ஓர் இறைநம்பிக்கையாளருக்கு அனுமதி இல்லை. தம் சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது (இடைமறித்துத் தமக் காக) அவர் பெண் பேசமாட்டார். சகோதரர் அதைக் கைவிடும்வரை (பொறுத்திருப்பார்).

அறிவிப்பவார் : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் :முஸ்லிம்  (2765)

குறைகூற மாட்டார்

1900حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللهِ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ رواه الترمذي

குறைசொல்பவனாக, சபிப்பவனாக, கெட்ட செயல் செய்பவனாக, கெட்ட வார்த்தைகள் பேசுபவனாக இறைநம்பிக்கையாளன் இருக்க மாட்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),

நூல்: திர்மிதீ (1900)

பயனளிப்பதையே ஆசைப்படுவான்

4816حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்'' என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) "லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.

அறிவிப்பவா : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் :முஸ்லிம்  (5178)

உலக ஆசை

அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) என்னற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான்.

உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியிலிடுகிறான்.

உலகத்தின் நிலை

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

அல்குர்ஆன் 3:14

"விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 57:20

இவ்வுலகத்திலுள்ள இன்பங்களை மனிதன் விரும்பினாலும், இவ்வுலக வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை, நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்து விட கூடாது என்பதற்காகவும், மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டவும் இவ்வுலகத்தை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உலகத்தை அஞ்சுதல்

இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ  இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : முஸ்லிம் 5292

நபி (ஸல்) அவர்களின் பயம்

பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, "ஜிஸ்யா' (காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும் படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.

அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக் கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்து விட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, "அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்றார்கள்.

அதற்கு அன்சாரிகள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்'' என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.

ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல் ; முஸ்லிம் 5668

இவ்வுலகத்தில் பொருளாதரம் அதிகமாக வழங்கப்பட்டால் நன்மைகளை செய்யாமல், மறுமையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியிருப்போம் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

எந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்களோ அதைத்தான் மனிதன் அதிக அதிகமாக விரும்பக் கூடியவனாக இருக்கிறான்.

மனிதனின் விருப்பம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முதியவரின் மனம் கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும், மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 1894

உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள்.

என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் நிறந்தரம் இல்லை

அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.  நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, "இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!'' என்று (பாடியபடி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி), நூல் : புகாரி 6414

அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னோற கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.

இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை

இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோயிச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : முஸ்லிம் 5663

சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.

இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணாக காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6487

 (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் "சூழ்ந்துள்ள' அல்லது "சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

 நூல் : புகாரி 6417

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.

தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்

பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.

இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1898

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : முஸ்லிம் 1903

நபிகளின் நிலை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.

உஹது மலை அளவு

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, "இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர'' என்று கூறினார்கள். பிறகு, "(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; "(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்' என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : புகாரி 2388

நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' என்று கூறினார்கள்.

அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்'' எனக் கூறினேன்.

ஆபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலிலி) அவர்கள் "முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!' எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி), நூல் : புகாரி 1472

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடைய நிலை

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருக்கு போதுமான உணவுகளை வழங்க முடியமால் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். மறுமையிலுள்ள வாழ்வு தான் நிரந்தர வாழ்வு என்று அவர்கள் விரும்பிய காரணத்தால்தான் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 5688

நபி (ஸல்) அவர்கள் மனைவிக்குக் கூறிய அறிவுரை

நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படும்போது ஒரு மாத காலம் அவர்களுடன் ஒன்று சோராமல் இருந்தார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களை சந்திக்கும்போது உங்களுக்கு உலக வாழ்க்கை வேண்டுமா? மறுமை வாழ்க்கை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, நீங்கள் உலக வாழ்க்கை விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துவிடுகிறோன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களும், மற்ற மனைவிமார்களும் இவ்வுலக வாழ்க்கை விரும்பாமல், மறுமை வாழ்க்கையை தேர்வு செய்தார்கள் என்ற செய்தி பின்வரும் ஹதிஸின் மூலம் அறியலாம்.

(ஹதிஸின் சுருக்கம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அப்போதுதான், ("நபி (ஸல்) அவர்களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மண பந்தத்திலிருந்து விலகி விடுவது' ஆகிய இரு விஷயங்கஜல்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, "உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றேன்: நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும்வரை அவசரப்படத் தேவையில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், "என் தாய் தந்தையர் தங்களை விட்டுப் பிரிந்து வாழும் படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், "நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: "நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்' என்று அல்லாஹ் கூறுகின்றான். (ஆகவே, உங்கள் முடிவு என்ன?)'' என்று கேட்டார்கள். நான், "இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை உலகையும்தான் விரும்புகின்றேன்'' என்று கூறினேன். பிறகு, தம் மனைவிமார்கள் அனைவருக்கும் ("தம்முடன் வாழ்வது, தம்மை விட்டுப் பிரிந்து விடுவது' ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் ; புகாரி 2468

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதிஸ்களை நினைவில் கொண்டு, இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டும்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது நோக்கம் இருக்கும். எந்த மனிதனும் நோக்கம் இல்லாமல் வாழமாட்டான். குறிப்பாக இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக நோக்கம் இருக்கும்.

நாம் எந்தவித நரகத்தினுடைய தீண்டுதலும் இல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கம்தான் அது. எந்த முஸ்லிமும் சிறிது காலம் நரகத்தில் வேதனையை அனுபவித்துவிட்டு பிறகு சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கக்கூட மாட்டோம். கேள்வி கணக்குகள் இருந்தாலும் அதை முடித்துவிட்டு சொர்க்கம் செல்லவே நாம் ஆசைப்படுவோம்.

இந்த சொர்க்கத்தை நாம் அடைவதற்கு இஸ்லாம் நமக்கு ஒரு சில கட்டளைகளை இடுகிறது.

நபி(ஸல்) அவர்கள் எந்தெந்த காரியங்களைச் செய்தால் உங்களுக்கு சொர்க்கத்தை நான் வாக்களிக்கிறேன் என்று சொன்னார்களோ அப்படிப்பட்ட சிறிய காரியங்களையும் செய்வதற்கு நாம் முன் வரவேண்டும். அந்த காரியங்க்ளைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் சொர்க்கத்தைப் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது அவசிமாகும்.

 

சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தை விளங்குதல்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், “இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை” என்று கூறுவார் என்றார்கள்.                     

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி)    நூல் : முஸ்லிம் 5407

சொர்க்கத்தை விளங்குவதற்காக இந்த சம்பவத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காண்பிக்கிறார்கள்.

சொர்க்கத்தில் இடம் கிடைப்பது

இன்னும் இலகுவாக சொர்க்கம் என்பது நிலையானது என்றும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.

“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் பின் சஅத்(ரலி) நூல் :  புகாரீ 6415

இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?

ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.

சொர்க்கத்தின் பிரம்மாண்டம்

சொர்க்கத்தில் இருக்கக்கூடிய இடங்களை நாம் யோசித்து பார்த்தால் அது போன்று இடங்களெல்லாம் இருக்குமா என்று நாம் கேட்கும் அளவிற்கு அதன் பிரம்மாண்டத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூசயீத்(ரலி)

நூல் :  புகாரீ 6553

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல. வேகமாக ஓடக்கூடிய குதிரை     நூறு வருடங்கள் ஓடினாலும் அதன் நிழலைக்கூட கடக்க முடியாது என்றால் சொர்க்கம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் அதிகபட்சம் ஐநூறு நபர்கள் உட்காரும் அளவிற்கு கூட ஒரு மரத்தை காண்பது அரிது. ஆனால் சொர்க்கம் அப்படிப்பட்டது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்டதெல்லாம் கிடைக்கும்

இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.

அல்குர்ஆன் 25:17

என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.

முதல் உணவு

ஒரு சந்தோஷமான காரியம் நடக்கிறது என்றால் அதில் முதல் காரியம் எதுவாக இருக்குமோ அதை நினைவில் வைத்துக்கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம். அது போன்றே சொர்க்கவாசிகள் முதன் முதலில் சாப்பிடக்கூடிய உணவும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

“சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல் : புகாரி 4480

இளமை இளமை

சொர்க்கத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் இளமை அழியவே அழியாது. என்றும் இளமையோடு இருக்கும் இடமாக சொர்க்கம் இருக்கும் என்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காண்பிக்கிறார்கள்.

“அவரது இளமை அழிந்துபோகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் :  முஸ்லிம் 5456

இந்த உலகத்தில் போன வருடம் எடுத்த புகைப்படத்தைக் கூட நாம் இப்போது பார்க்க இயலாது. நாம்தானா என்ற சந்தேகம் கூட நமக்கு வரும். போன வருடம் உடல் பருமன் இருந்திருக்கும். ஆனால் இந்த வருடம் உடல் மெலிந்து போய் இருக்கும். கேட்டால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பதில் கூறுவதைப் பார்க்கிறோம். எனவே இந்த உலகத்தில் நமது இளமை மாறிக்கொண்டே செல்கிறது. அடையாளம் தெரியாத அளவிற்கு செல்கிறது.  தலைமுடிகள் உதிர்வதையும், அதன் நிறங்கள் மாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதைத் திரும்பப் பெறவே இயலாது என்பதே இந்த உலக வாழ்க்கை. ஆனால் இளமை மாறாமல் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.

நோய் இல்லை

சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.

“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 5451

இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.

சொர்க்கவாசிகளின் துணைகள்

சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.

“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.”

அல்குர்ஆன் 55:56

மற்றொரு வசனத்தில்,

“மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.”                             அல்குர்ஆன் 56:23

 என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த உலகத்தில் யாரையாவது முத்துக்களைப் போன்று இருக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா? கண்டிப்பாக சொல்ல இயலாது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,

“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: புகாரி 6568

நம்முடைய வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் தீப்பெட்டி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். வீட்டில் கணவன், மனைவி இருந்தாலும் அவர்களின் முகத்தில் வெளிச்சம் கிடைக்குமா என்ன? அவர்கள் அருகில் இருந்தாலும் கூட பார்க்கவே இயலாதே. ஆனால் சொர்க்கத்தில் இருக்கும் ஒரு பெண் எட்டிப்பார்த்தால் வானம், பூமியெல்லாம் மின்னக்கூடிய வகையில் இருக்குமென்றால் அவர்களை எந்த அளவு அழகாக அல்லாஹ் படைத்திருப்பான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சொல்வதாகயிருந்தால் சொர்க்கவாசிகளுக்கு அழகு கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

“சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5448

எனவே சொர்க்கவாசிகளின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டே போகும். அவர்களின் அழகு குறையாது என்பதை மேலுள்ள செய்தி மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இப்படி சொர்க்கத்தைப் பற்றி எந்த விஷயத்தை நாம் பேசினாலும் அதனை முழுமையாக உணரவும் முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொர்க்கத்தைப் பற்றி நமக்கு அறிவித்தது கொஞ்சம் தான்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 5439

எனவே சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக நினைத்து இந்த உலக வாழ்வில் அல்லாஹ்வை மறந்துவிடாமல் கடமைகளை நாம் செய்ய வேண்டும்.

நபிகளாரின் பிரச்சாரத்திலும் இதுபோன்ற அணுகுமுறை இருந்ததை திருக்குர்ஆன் உறுதி செய்கிறது.

 

சத்தியத்தைச் சொல்லும் முறைகள்

ஒன்று திரட்டும் நாளில் அவன் உங்களை ஒன்று திரட்டுவான். அதுவே நஷ்டமளிக்கும் நாள். அல்லாஹ்வை நம்பி நல்லறம் செய்பவரின் தீமைகளை அவரை விட்டும் அவன் நீக்குவான். அவரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.                        திருக்குர்ஆன் 64:9

சத்தியத்தை ஏற்பதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்யும் யுக்தியை திருக்குர்ஆன் அதிகமாக வலியுறுத்துகிறது.  அதற்குரிய சான்றுகள் குர்ஆனில் எண்ணிடலங்காத வகையில் உள்ளன.

அச்சுறுத்தும் எச்சரிக்கைகள்

அன்பான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஆர்வமூட்டும் பரிசுகளை எடுத்துரைத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நாம் கூறியதால் மார்க்கம் அவர்களுக்கு தெரிவிக்கும் கண்டனத்தை மறைக்க வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

மாறாக சத்தியத்தை சொல்லும் முறைகளில் மார்க்கம் கூறும் எச்சரிக்கைகளை தயவு தாட்சயமின்றி எடுத்துச் சொல்வதும் மிக முக்கிய ஒன்றாகும்.

மார்க்கம் விடுக்கும் எச்சரிக்கைகளுடன் சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது அசத்தியத்தில் உள்ளவர்களுக்கு அது கிலியை ஏற்படுத்தும். தாங்கள் இருக்கும் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி வருவதற்கு இத்தகைய அச்சம் அடித்தளம் அமைக்கும்.

ஆகவே சத்தியப் பிரச்சாரத்தின்போது அசத்தியத்தில் இருப்பதால் அவர்களுக்கு உண்டாகும் கேடு, இறைவனின் தண்டனை ஆகியவற்றை தவறாமல் கரிசனத்துடன் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள், நயவஞ்சகர்கள், இறைமறுப்பாளர்கள் என முத்தரப்பு மக்களை திருக்குர்ஆன் எதிர்கொண்டது. இவர்கள் அனைவரையும் எச்சரித்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை சொல்லும் வசனங்கள் திருக்குர்ஆனில் அதிகமாகவே இடம் பெற்றுள்ளன.

முஸ்லிம்களுக்கு வட்டியைப் பற்றி குர்ஆன் எச்சரிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன் 2:278 279

முனாஃபிக்குகளுக்கான எச்சரிக்கை

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்

திருக்குர்ஆன் 4:45

இறைமறுப்பாளர்களுக்குரிய எச்சரிக்கை

இறைமறுப்பாளர்களுக்கு சத்தியத்தை சொல்லும் விதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டதால் அவர்களுக்குரிய எச்சரிக்கைகளே திருக்குர்ஆனில் நிரம்ப இருக்கின்றது. உதாரணத்திற்கு சில வசனங்கள்

அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து, நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

திருக்குர்ஆன் 3:21. 22

(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் "ஆம்'' என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது. 

திருக்குர்ஆன் 33:71

தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).

திருக்குர்ஆன் 22 19-22

இறைவனின் கட்டளையின்படி இறைத்தூதர்கள் இத்தகைய வழிமுறையை தங்கள் பிரச்சாரத்தில் கடைபிடித்துள்ளனர்.

நபி நூஹ் அலை அவர்கள் தம் சமுதாயத்தாருக்கு சத்தியப்பிரச்சாரம் செய்யும்போது சத்தியத்தை ஏற்காது போனால் ஏற்படும் அல்லாஹ்வின் வேதனையை பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 7 59

நபி இப்றாஹீம் அலை அவர்களும் தம் தந்தைக்கு எச்சரிக்கையூட்டி பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன்'' (என்றார்.)                           திருக்குர்ஆன் 19 45

இவற்றை இத்தனை ஆதாரங்களுடன் பட்டியலிட மிக முக்கிய காரணம் முஸ்லிம்களில் ஒரு சாரார் மக்கள் செய்யும் தவறைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது. அவற்றை விமர்சிக்கக் கூடாது, நல்லதை மக்களுக்கு ஏவினாலே போதும், அவர்களாக தங்கள் தவறை திருத்திக் கொள்வார்கள் என்று கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தவே இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளை எச்சரிக்கைக் குரலாக நாம் மக்களிடையே பதிவு செய்யும் போது அதை குறைகாண்பவர்களின் போக்கு தவறானது என்பதை நாம் பட்டியலிட்ட இத்தனை வசனங்களும் சந்தேகமற உணர்த்துகின்றது. எனவே பிரச்சார முறைகளில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் முக்கியமான ஒரு வகையே.

 

சிந்தனையூட்டும் வாதங்கள்

இஸ்லாத்திற்கும் ஏனைய மதங்களுக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு சிந்தனை சார்ந்த விஷயத்தில் உள்ளது. பிற மதங்கள் யாவும் மனிதனின் சிந்தனையைத் தூண்டும்படியோ அது போதிக்கும் மதக்கோட்பாடுகளை சிந்தனைக்கு உட்படுத்தும் படியோ போதிப்பதில்லை. இஸ்லாம் மட்டுமே மனிதர்களின் சிந்தனையைத் தூண்டும் மார்க்கமாக தன்னிகரற்று விளங்குகிறது.

கண்மூடித்தனமாக ஒருவன் இஸ்லாத்தில் இணைவான் எனில் இஸ்லாம் அதை விரும்பவில்லை. இஸ்லாத்தின் கோட்பாடுகளை, அது போதிக்கும் போதனைகளை சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் படியே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 4 82

சிந்தனைக்கு முக்கியத்துவம் வழங்குகிற மார்க்கமாக இஸ்லாம் விளங்குவதால் சத்தியப் பிரச்சாரத்தின் போதும் மக்களின் சிந்தனையைத் தூண்டும் வாதங்கள் நிரம்பி வழிய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

தன் தூதர்களுக்கு இத்தகைய வாதங்களை இறைவன் கற்றுக் கொடுத்து இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

நபி ஹூத் அலை அவர்கள் மக்களிடையே சத்தியத்தை எடுத்து சொல்லும்  போது இந்த பிரச்சாரத்திற்காக உங்களிடம் நான் காசு பணம் கேட்கவில்லை. எனக்கு இதில் எந்த உலக ஆதாயமும் இல்லையே அப்படியிருந்தும் உங்களை நான் அழைக்க வேண்டிய அவசியம் என்பதை சிந்திக்க மாட்டீர்களா என்ற வாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்துள்ளார்.

"என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி உள்ளது. விளங்க மாட்டீர்களா?''

திருக்குர்ஆன் 11 51

சிலைகள் பேசாது என்பதை அதை வணங்குபவர்களின் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்குமளவு சிந்தனைப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்து இப்றாஹீம் அலை பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

"இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர்தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர். "அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார். "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' (என்றும் கேட்டார்.)

திருக்குர்ஆன் 21 62-67

பகலை நிரந்தரமாக்கி விட்டால் இரவை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரால் கொண்டு வர முடியும்? இதைப்பற்றி சிந்திக்குமாறு அல்லாஹ் மக்களுக்கு அறிவுறுத்துகிறான்.

"கியாமத் நாள் வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 28 72

அல்லாஹ்வைத் தவிர்த்து ஏனையவைகளை வணங்குகிறீர்களே அவைகளுக்கு நடக்கும் கால்கள் உண்டா? என்பது உள்பட பல்வேறு சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை முன் வைத்து சத்தியப்பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு இறைவன் கட்டளையிடுகின்றான்.

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 7 195

சாமிரி என்பவன் காளைக்கன்று சிற்பம் ஒன்றை செய்து மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. உடனே இதுதான் கடவுள் என மக்களை அவன் வழிகேட்டிற்கு தள்ளினான்.

அதற்கு மறுப்பளிக்கும் இறைவன் அந்த சிற்பம் கடவுள் என்றால் அது பேசாதே, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாதே இதை சிந்திக்க மாட்டீர்களா என்று வினா எழுப்புகிறான்.

"நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான். அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்'' என்றான். "அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

திருக்குர்ஆன் 20:87 88 89

அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறப்பட்ட போது இல்லை எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம் என்று மக்கள் பதிலளித்தனர். அதற்கு முட்டாள்களாக இருந்தாலுமா முன்னோர்களை பின்பற்றுவீர்கள் என்று சிந்தனா பூர்வமான கேள்வியை முன்வைத்து இறைவன் பதிலளிக்கின்றான்.

பார்க்க திருக்குர்ஆன் 2:170

அல்லாஹ்வுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் கடவுள்களுக்குள் சண்டை ஏற்பட்டு உலகில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்ற சிந்தனையூட்டும் வாதத்தை முன் வைத்து ஓரிறைக் கொள்கையே சரியானது என்று அல்லாஹ் நிறுவுகிறான்.

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.             திருக்குர்ஆன் 23:91

இவ்வாறாக சிந்தனையூட்டும் வாதங்கள் பலவற்றை முன்வைத்து சத்தியப்பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்று இதன் வாயிலாக இறைவன் கற்றுத்தருவதை அறியலாம்.

வாயடைக்கச் செய்யும் விவாதங்கள்

சத்தியத்தை சொல்வதற்கு விவாதக்களங்களும் மிகச் சிறந்த வழிமுறைகளாகும்.

ஆனால் சத்தியத்தை நிலைநாட்ட விவாதத்திற்கு வாருங்கள் என்று மாற்றுக்கருத்துடையோரை அழைத்தால் இவர்களுக்கு வேறு வேலையில்லை, ஆ ஊ என்றால் விவாதம் என்பார்கள் என அங்கலாய்க்கிறார்கள். ஏதோ விவாதம் புரிவது பழிப்பிற்குரிய செயல் போன்று இவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளது. இன்னும் சிலர் இஸ்லாத்தில் விவாதத்திற்கு அனுமதியில்லை என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இது போன்றவர்களை காணும் போது உண்மையில் ஆச்சரியமே நம்மை தொற்றிக் கொள்கிறது.

காரணம் சத்தியத்தை பிரச்சாரம் செய்வதில் ஆக்கபூர்வ விவாதத்திற்கு பெரும் பங்கிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது.

அழகிய முறையில் விவாதம் செய்து சத்தியத்தை பரப்புமாறு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.

அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!

திருக்குர்ஆன் 16 125

வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 29 46

சத்தியப் பிரச்சார பயணத்தில் எதிர்த் தரப்புகளின் எதிர்ப்புகளை இறைத்தூதர்கள் விவாதம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்து எதிர்கொண்டிருக்கின்றார்கள் என்பதை திருக்குர்ஆன் உறுதிபடத் தெரிவிக்கின்றது.

நபி நூஹ் அலை அவர்கள் விவாதம் புரிந்திருக்கின்றார்கள்

"நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர். "அல்லாஹ் நாடினால் அவன் தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் (அவனை) வெல்ல முடியாது'' என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11:32. 33

நபி இப்றாஹீம் அலை விவாதம் புரிந்திருக்கிறார்கள்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறியபோது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 2:258

நபி மூஸா அலை அவர்களும் பிர்அவ்னுடன் வாதம் புரிந்திருக்கிறார்கள். மூஸா அலை அவர்களுக்கும் பிர்அவ்னுக்கும் இடையில் நடைபெற்ற வாதப்பிரதி வாதங்களை (குர்ஆன் வசனங்களை) புரிவதற்காக பின்வருமாறு தருகிறோம்.

பிர்அவ்ன் "அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?''

மூஸா அலை "நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள், பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்''

பிர்அவ்ன் தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?''

மூஸா அலை "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்''

பிர்அவ்ன் "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்''

மூஸா அலை "நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்கு, மேற்கு, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்''

பிர்அவ்ன் "என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்''

மூஸா அலை "தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?''

பிர்அவ்ன் "நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்''

மூஸா அலை தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது

பிர்அவ்ன்  தம்மை சுற்றியுள்ள சபையோரிடம் "இவர் திறமை மிக்க சூனியக்காரர்''

பார்க்க திருக்குர்ஆன் 26 23-34

இப்படி விவாதம் புரிய எண்ணற்ற ஆதாரங்கள் குர்ஆனில் நிறைந்துள்ள போதும் தங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை, எதிர்கொள்ள தெம்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டால் விவாதம் கூடாது என்று கூறி பின்வாங்கி விடுகிறார்கள்.

தங்களிடம் இருப்பது சத்தியம் என்று உறுதியாக நம்புபவர்கள் விவாதக் களங்களை கண்டு அஞ்ச மாட்டார்கள். துணிந்து எத்தனை விவாதக்களங்களையும் சந்திப்பார்கள். அத்தகைய துணிவு இல்லாதோர் இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்றோ அல்லது விவாதம் இஸ்லாத்தில் கூடாது என்றோ கூறிக்கொண்டே காலத்தை கடத்தி விடுவார்கள்.

இது போன்றவர்கள் மேற்கூறிய இறைவசனங்களை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும்.

நம் தரப்பு கருத்தை ஆதாரங்களுடன் நிலைநாட்டுவது

எதிர்த்தரப்பு கருத்துக்களுக்கு தகுந்த மறுப்பளிப்பது

எதிராளிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பது

மாற்றுக் கருத்துடையோரின் கருத்துக்கு ஆதாரம் வேண்டுவது இவையாவும் விவாதத்தில் அடங்கியிருக்கும் பகுதிகளாகும். இத்தகைய பாணிதான் திருக்குர்ஆன் முழுக்க கடைபிடிக்கப்பட்டுள்ளது என்பதை அதை படிக்கும் யாரும் புரிந்து கொள்ள இயலும்.

சரியான சவால்கள்

சவால்களை விடுவதும் எதிர்த்தரப்பால் விடப்படும் சவால்களை துணிந்து எதிர்கொள்வதும் சத்தியப்பிரச்சார முறைகளில் மற்றுமொரு முக்கிய அங்கமாகும்.

திருக்குர்ஆனையும் சவால்களையும் பிரித்துப் பார்க்க இயலாது எனுமளவு திருக்குர்ஆன் பல்வேறு சவால்களைக் கொண்டே தன்னை இறைவேதம் என்பதை நிரூபணம் செய்கின்றது.

ஏராளமான சவால்கள் திருக்குர்ஆனில் நிறைந்துள்ளன. அந்த சவால்களில் எதுவும் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை மட்டுமல்ல, இனி எப்போதும் அவை முறியடிக்கப்பட மாட்டாது. ஏனெனில் அவையாவும் சர்வ வல்லமை கொண்ட படைத்தாளும் இறைவனின் சவால்களாகும். அவன் விடுக்கும் சவால்களில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டது என்பதில் சந்தேகம் கொண்டால் குர்ஆனைப் போன்று ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வருமாறு உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் சவால் விடுத்துள்ளான்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 2:23 24

அல்லாஹ் அல்லாத இறந்துபோன மனிதர்களையும் கற்சிலைகளையும் வணங்குவோரை நோக்கி  அவர்களை அழையுங்கள். பதிலளிப்பார்களா என்று பார்ப்போம் என சவால் விடுத்துள்ளான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!       திருக்குர்ஆன் 7:194

பல கடவுள் கோட்பாடு கொண்ட மக்களை நோக்கி அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என சவால் விடுக்குமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 27:64

நாங்கள் வணங்கிய கடவுள்கள் தாம் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்திவிட்டன என்று நபி ஹூத் அலை அவர்களை நோக்கி அவரது சமுதாயம் கூறிய போது

முடிந்தால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள் உங்கள் கடவுள்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஹூத் அலை அவர்கள் சவால் விட்ட நிகழ்வை திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

ஹூதே! நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை. நீர் சொல்வதற்காக எங்கள் கடவுள்களை நாங்கள் விடுவோராக இல்லை. நாங்கள் உம்மை நம்புவோராகவும் இல்லை. "எங்கள் கடவுள்களில் சிலர் உமக்குக் கெடுதி செய்து விட்டார்கள்'' என்றே கூறுகிறோம் (என அவர்கள் கூறினர்). "நான் (இதற்கு) அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்களும் சாட்சியாக இருங்கள்! அவனையன்றி நீங்கள் எதை இணை கற்பித்தீர்களோ அதை விட்டும் நான் விலகியவன்; எனவே அனைவரும் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! பின்னர் எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள்!'' என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 11 53 54 55

அதே போன்று நபி நூஹ் அலை அவர்களும் நீங்கள் வணங்கும் பொய் கடவுள்களால் எனக்கு எதுவும் ஆகாது. முடிந்தால் சூழ்ச்சி செய்து பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளதாக திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

 

December 1, 2014, 4:45 PM

நவம்பர் தீன்குலப் பெண்மணி 2014

மகாராஷ்டிரா தேர்தல் தரும் பாடம்

            சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 122 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 42 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வென்றுள்ளன.

122 இடங்களைப் பெற்றதால் பாஜக மகிழ்ச்சியடைய முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கணக்கைப் பார்த்தால் ஓட்டு சதவிகிதம் சரிந்துள்ளது தெளிவாகும். மோடி ஆட்சி இன்னொரு காங்கிரஸ் ஆட்சிதான் என்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

மாகாரஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் மோசமான ஆட்சிதான் பாஜகவிற்கு ஓரளவு கைகொடுத்துள்ளது.

முஸ்லிம்களின் ஓட்டுக்களை நம்பிய காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் மரணஅடி கொடுத்துள்ளது. முஸ்லிம்களுக்கு வெறும் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றலாம் என்று எண்ணி வந்த காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள்.

மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 14 தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கைப்பற்றுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை காங்கிரஸுக்கு 5 இடங்களே கிடைத்தன. தேசியவாத காங்கிரஸுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.

ஆனால் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். இது, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் மும்பையிலுள்ள 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 28 இடங்களில் போட்டியிட்டது. இதில், மத்திய அவுரங்காபாத் மற்றும் பைகுலா ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

அவுரங்காபாத்தில் மகாராஷ்டிராவின் பிரபல பத்திரிகையாளரான சையது இம்தியாஸ் ஜலீல், சிவசேனா கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். பைகுலாவில், வழக்கறிஞரான வாரீஸ் யூசூப் பத்தான், பாஜக வேட்பாளர் மது சவாணை தோற்கடித்துள்ளார்.

மத்திய அவுரங்காபாத் தொகுதி, முஸ்லிம் மற்றும் தலித் வாக்காளர்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இங்கு காங்கிரஸ் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. பைகுலாவில், காங்கிரஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து ஏமாற்றி வந்த காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளனர் என்பதைத்தான் இந்த முடிவுகள் காட்டுகிறது.

கொடுத்த வாக்கின்படி இட ஒதுக்கீடு கொடுத்திருந்தால், மும்பைக் கலவர குற்றவாளிகளுக்கு எதிராக நீதிபதி கிருஷ்ணா கமிஷன் அறிக்கையின்படி காவிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ந்து முஸ்லிம்களை வஞ்சித்து வந்த காங்கிரஸ் தற்போது நல்ல பாடம் படித்துக் கொண்டிருக்கிறது.

 

ஃபீல் மற்றும் குரைஷ் அத்தியாயங்களின் விரிவுரை

திருக்குர்ஆனின் பின்பகுதியிலிருந்து சூரத்துன்னாஸ், பலக், இக்லாஸ், லஹப், குல்யா அய்யுஹல் காஃபிரூன், சூரா அல் கவ்ஸர், கடைசியாக சூரத்துல் மாவூன் வரை பார்த்துள்ளோம்.

இந்தத் தொடரில் திருக்குர்ஆனின் பின்பகுதியிலிருந்து கீழிருந்து மேல் என்ற அடிப்படையில் சூரத்துல் மாவூனுக்குப் பிறகு குரைஷ் என்ற அத்தியாயத்தைத்தான் விளக்குவதற்கு நாம் எடுத்திருக்க வேண்டும். குரைஷி என்ற அத்தியாயத்திற்குப் பிறகு சூரத்துல் ஃபீல் இருக்கிறது. அதாவது கீழிருந்து மேலாக மாவூன், குரைஷ், ஃபீல் என்றுதான் வரவேண்டும். ஆனால் தற்போது அலம் தர கைஃப என்ற சூரத்துல் ஃபீலை முடித்து விட்டுத்தான் சூரத்துல் குரைஷியைப் பார்க்கப் போகிறோம்.

ஏனெனில் சூரத்துல் ஃபீல் என்ற அத்தியாயத்தின் கருத்தில் பாதி சூரத்துல் குரைஷியில் சம்பந்தப்பட்டிருப்பதால் அதாவது இரண்டு அத்தியாயமும் சேர்ந்துதான் ஒரு கருத்தைத் தருவதால் இரண்டையும் சேர்த்துத்தான் நாமும் பார்க்கப் போகிறோம்.

இந்த இரண்டு அத்தியாமும் ஒரு சூராவா? அல்லது இரண்டு சூராவா? என்று கருத்து வேறுபாடும்கூட சில அறிஞர்களுக்கு மத்தியில் இருந்திருக்கிறது. ஏனெனில் லீ ஈலாஃபி குரைஷி - குரைஷிகளை மகிழ்விப்பதற்காக என்று ஆரம்பிக்கிறது. மகிழ்விப்பதற்காக என்ன? என்கிற செய்திக்குப் பதில் யானைப் படையை அழித்தான் என்று அடுத்த சூராவிற்குப் போகிறது. காரணம் இங்கே (குரைஷி அத்தியாயத்தில்) இருக்கிறது. காரியம் அங்கே (ஃபீல் அத்தியாயத்தில்) இருக்கிறது. எனவே இரண்டு அத்தியாயங்களையும் இணைத்து, அலம் தர கைஃபவிலிருந்து ஆரம்பித்து குரைஷிக்கு வந்தால்தான் அர்த்தம் முழுமையாகக் கிடைக்கும்.

தற்போது சூரத்துல் ஃபீலைப் பற்றி முதலில் பார்ப்போம். இந்த அத்தியாயம் மிகவும் அற்புதமான அத்தியாயம். இஸ்லாம் அல்லாஹ்வால் அருளப்பட்ட உண்மையான மார்க்கம் என்பதற்குரிய அற்புதம், ஒரு முன்னறிவிப்பு இந்த சூராவில் அடங்கியிருக்கிறது. இந்த அத்தியாயத்தில் நல்லதொரு வரலாறும் அமைந்துள்ளது. பெரியதொரு படிப்பினையும் உள்ளது.

இந்தச் சமூகம் எந்தப் படிப்பினையை எடுத்துக் கொள்வதற்குத் தவறியதோ, அந்தப் படிப்பினை இதில்தான் உள்ளது.

ஆனால் தங்களது தவறான கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக பலர் இந்த அத்தியாயத்தைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான விளக்கங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

أَلَمْ تَرَى - நீர் பார்க்கவில்லையா?

كَيْفَ فَعَلَ رَبُّكَ - உமது இறைவன் என்ன செய்தான்? எப்படி நடத்தினான்? என்று

بِأَصْحَابِ الْفِيلِ - யானைப் படையினரை

உமது இறைவன் யானைப் படையினரை எப்படி நடத்தினான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

என்று இந்த சூரா ஆரம்பமாகிறது.

முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு வழிகெட்டுப் போன சிலர் இதை தங்களின் தீய கொள்கைக்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இதில் கூறப்படுகிற சம்பவம் நபிகள் நாயம் பிறப்பதற்கு முன் நடந்ததாகும்.

இந்தச் சம்பவத்தைச் சொல்லும்போது, யானைப் படையினரை இறைவன் என்ன செய்தான் என்பதை நபியே நீர் பார்க்கவில்லையா? என்று இறைவன் கேட்கிறான்.

ஒருவர் பிறப்பதற்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது பிறக்காத ஒருவர் பார்த்திருக்க முடியாது.  ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இதில் விதிவிலக்கானவர்கள். இதனால்தான் நீர் பார்க்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான். அதாவது நபிகள் பிறப்பதற்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியை அவர்கள் பார்த்துள்ளார்கள். எனவே தான் நீர் பார்க்கவில்லையா என்று அல்லாஹ் கேட்கிறான். இதுதான் அந்த வழிகேடர்கள் எடுத்து வைக்கும் வாதமாகும்.

நபியவர்களுக்கு நேற்று நடந்தது தெரியும். இப்போது நடப்பது தெரியும். நாளை நடக்க இருப்பதுவும் தெரியும் என்று இவர்கள் வாதம் புரிகின்றனர்.

இவர்கள் சொல்வது தவறான கருத்தாகும். ஏனெனில் இந்த أَلَمْ تَرَى - (அலம் தர) நீர் பார்க்கவில்லையா? என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் வருகிறது. நீ பார்க்கவில்லையா? அவன் பார்க்கவில்லையா? அவர்கள் பார்க்கவில்லையா? இதுபோன்ற சொற்கள் வாக்கியங்கள் இரண்டு அர்த்தத்தில் முழுக் குர்ஆனிலும் பயன்படுத்தப்படுகிறது. குர்ஆனில் மட்டும் அல்ல, அரபி மொழி முழுவதிலும் இந்தச் சொல் இரண்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்படும். அரபி மொழி மட்டுமல்ல, நமது தாய் மொழி தமிழ் மொழியில்கூட இந்தச் சொல் இரண்டு கருத்தில் பயன்படுத்தப்படும்.

பார்க்கவில்லையா? என்றால் கண்ணால் பார்க்கவில்லையா? என்பதற்கும் சொல்லலாம்.

சிந்திக்கவில்லையா?  விளங்கவில்லையா? என்கிற கருத்திலும் பார்க்கவில்லையா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம்.

சில இடங்களில் அல்லாஹ் திருக்குர்ஆனில் அவர்களுக்குக் கண்கள் இருக்கும். ஆனால் அதைக் கொண்டு அவர்கள் பார்க்க மாட்டார்கள் என்று சொல்கிறான். பார்த்துக் கொண்டிருப்பவரைத்தான் அல்லாஹ் இப்படிச் சொல்கிறான். இந்த இடத்தில்  சிந்திக்க மாட்டார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

இப்போது கூட நாம் அப்படிச் சொல்லலாம். கொடுங்கோலன் ஃபிர்அவ்னுக்கு நடந்த கதியை நீங்கள் பார்க்கவில்லையா? என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் ஃபிர்அவ்னைப் பார்த்திருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஃபிர்அவ்னை அல்லாஹ் மூழ்கடித்ததையும், மூஸா நபியையும் அவர்களது கூட்டத்தாரையும் அல்லாஹ் காப்பாற்றியதையும் நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்டால் பிர்அவ்னையும், மூஸா நபியையும் கண்ணால் பார்த்திருக்கிறீர்கள் என்ற அர்த்தம் வைக்கக் கூடாது. அதையெல்லாம் குர்ஆனில் படித்தோ பிறர் சொல்லக் கேட்டோ விளங்கி வைத்திருக்கிறீர்களா? என்றுதான் அர்த்தம்.

நபியவர்களிடம் அல்லாஹ் கேட்ட அதே வார்த்தையைப் பயன்படுத்தி நபியல்லாத மற்றவர்களிடமும் அல்லாஹ் கேட்கிறான். அதற்கும் இதுதான் அர்த்தமா? அன்றைக்கு வாழ்ந்த காஃபிர்களான அபூஜஹ்லிடமும் அவனது கூட்டத்தாரிடமும் அல்லாஹ் கேட்கிறான் எனில் சிந்திக்கவில்லையா என்ற பொருளில்தான் என்பது தெளிவான விசயம்.

أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ .. (6) سورة الأنعام

எத்தனை சமூகங்களை இதற்கு முன் அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் பார்க்கவில்லையா?

அல்லாஹ்வே பார்க்கவில்லையா? என்று கேட்கிறான் என்று கூறி, அபூஜஹ்லுக்கு ஆது சமூகமும், ஸமூது சமூகமும் அழிக்கப்பட்டதை அபூஜஹ்ல் பிறப்பதற்கு முன்னாலேயே பார்த்தான் என்று அர்த்தம் செய்வார்களா?

أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا(15) سورة نوح

ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?

(அல்குர்ஆன் 71:15)

வானம் அடுக்காக அமைக்கப்பட்டிருப்பதை யார் பார்த்தார்? அதாவது வானம் அடுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது எப்படி என்பதை சிந்தித்துப் பார்? ஆய்வு செய்துபார்? அடுக்காக இருப்பதைப் போன்று யாருக்கும் தெரியவில்லை. நாம் பார்க்கும் போது ஒன்றுதான் தெரிகிறது. இதுபோன்ற வசனங்கள் குர்ஆனில் அதிகமான இடங்களில் வருகிறது.

أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ(77) سورة يس

மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான்.

(அல்குர்ஆன் 36:77)

ஒவ்வொரு மனிதனும் தான் விந்துத் துளியிலிருந்து படைக்கப்பட்டதை கண்களால் பார்த்துக் கொண்டிருந்தானா? ஒவ்வொரு மனிதனும் தான் படைக்கப்பட்டதை எப்படி பார்க்க முடியும்? என்னை அல்லாஹ் எப்படிப் படைத்தான் என்பதை நான் பார்க்க முடியாது. அதுபோன்று உங்களை இறைவன் எப்படிப் படைத்தான் என்பதை உங்களால் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. அப்படியெனில் பார்க்கவில்லையா? என்ற வாசகத்திற்கு சிந்திக்கவில்லையா? என்பதுதான் பொருள்.

எனவே أَلَمْ تَرَى - (அலம் தர) நீர் பார்க்கவில்லையா? என்ற வாசகத்திற்குப் பொருள், சிந்திக்கவில்லையா? தெரியாதா? என்ன கதியை ஏற்படுத்தினான் என்பதை வழி வழியாகச் சொல்வதை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்பதுதான் பொருள்.

كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ - உமது இரட்சகன் யானைப் படையினரை எப்படி நடத்தினான் என்பதை (நபியே) நீர் சிந்திக்கவில்லையா?

அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் ஆக்கவில்லையா?

அவர்கள் சூழ்ச்சி செய்து யானைப் படையுடன் வந்தார்கள். அதை உமது இறைவன் தோல்வியில் ஆக்கவில்லையா? என்று யானைப் படையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

யானைப் படைக்கு எதிராக அபாபீல் என்ற பறவைகளை அவன் அனுப்பினான்.

அபாபீல் பறவைகள் நன்கு சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது வீசியது.

அவர்கள் மீது பறவைகள் சூடேற்றப்பட்ட கற்களை வீசியதினால் என்ன ஆனார்கள்?

பறவைகள் மூலம் கற்களை வீச வைத்து, அல்லாஹ் அவர்களை மென்று போடப்பட்ட வைக்கோலைப் போன்று ஆக்கினான்.

மாடு வைக்கோலை வாயினால் நன்றாக அசை போட்டு தின்று மென்று விட்டு பிறகு துப்பும். அதில் எதையும் உருப்படியாக எடுக்க முடியாது. அதுபோன்று இவர்கள் கூழாகிவிட்டார்கள். மனிதக் கூழ் போன்று இறைவன் அல்லாஹ் ஆக்கவில்லையா? என்று அல்லாஹ் முஹம்மது நபியிடம் கேட்கிறான்.

இதுதான் சூரத்துல் ஃபீல் (யானை அத்தியாயத்தின்) அர்த்தம்.

இந்த அத்தியாயம் நமக்கு என்ன சொல்கிறது? என்று ஆராய்ந்தால் அல்லாஹ் திருக்குர்ஆனில் இதுபற்றி வேறெந்த இடத்திலும் விளக்கம் தரவே இல்லை. யானைப் படை என்றால் என்ன? அதைக் கொண்டு வந்தவன் யார்? எதற்காக வந்தான்? எத்தனை பேர்கொண்ட படைகளுடன் வந்தான்? என்பதை அல்லாஹ்வுடைய ரசூலும் நமக்குக் கூறவில்லை. இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிற யானைப் படை செய்திகளான அப்ரஹா என்றொரு மன்னன், யானைப் படைகளுடன் வந்தான், கஃபாவை அழிக்க வந்தான் போன்ற அனைத்தும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் சொல்லாததும்தான்.

அதே நேரத்தில் உமக்குத் தெரியாதா? நீ அறியவில்லையா? என்று நபிகளாரைப் பார்த்து அல்லாஹ் கேட்பதிலிருந்து அந்தக் காலத்து மக்கள் அதைப் பற்றிய செய்தியை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இன்றைக்கு வேண்டுமானால் யானைப் படை பற்றி நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்தச் செய்தி நடக்கும்போது நேரடியாகப் பார்த்த மக்களிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்க முடியாது.

இதைப் புரிந்து கொள்வதாக இருப்பின், ராஜுவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி உங்களுக்குத் தெரியாதா? என்று உங்களிடம் கேட்டால், இதில் 40 வயதைத் தாண்டிய எவரும் ராஜுவ் காந்தி கொலையைப் பற்றித் தெரியாமல் இருக்க மாட்டார். ராஜுவ் காந்தி படுகொலையின்போது நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனக் கண்ணில் வந்து தெரியும்.

"ராஜுவ் காந்திக்கு ஸ்ரீ பெரும்புதூரில் நடந்தது என்னவென்று தெரியுமா?' என்று ஒரு வார்த்தையில் கேட்டாலே போதுமானது. என்ன நடந்தது என்று விளக்கத் தேவையில்லாமலே புரிந்து கொள்வார்கள்.

எனவே எந்தச் செய்தியை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்களோ அந்தச் செய்தியை தொட்டுத்தான் காட்டுவார்கள். முழு விபரங்களைச் சொல்ல மாட்டார்கள். அதே போன்றுதான் இறைவன் நபியவர்களிடம் யானைப் படையினருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா? என்று கேட்கிறான். ஏனெனில் அந்தச் செய்தியை அனைவரும் அறிந்திருந்தார்கள். யானைப் படைக்கு என்ன நேர்ந்தது என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த மக்கா நகரிலுள்ள மக்களனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள். எல்லோருக்கும் தெரியும் என்பதினால் அந்தச் சம்பவத்தின் முழுச் செய்தியையும் அல்லாஹ் சொல்லவில்லை. இதை முதலாவதாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் யானைப் படை அழிக்கப்பட்ட சம்பவத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள் எனில், 200 ஆண்டுகளுக்கு முன்பாக உள்ளதை தெரிந்து வைத்திருந்தார்கள் என்று புரியக் கூடாது. சம்பவம் நடந்த சில வருடங்களில் என்று பொருள்.

கைஸ் பின் மக்ரமா அவர்கள், நானும் நபிகள் நாயகமும் ஒரே ஆண்டில் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். அது எந்த ஆண்டு எனில் யானை ஆண்டுதான் என்று கூறுகிறார். அதாவது யானைப் படை அழிக்கப்பட்டதாக அல்லாஹ் சொல்கிற அந்த ஆண்டில்தான் தானும் நபிகள் நாயகம் அவர்களும் பிறந்ததாகச் சொல்கிறார். நபிகள் நாயகம் தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னால் 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம்தான் அது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள், இலட்சக் கணக்கான ஆண்டுகளெல்லாம் கடக்கவில்லை. ஏனெனில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்ததாக இருந்தால்தான் சம்பவம் முழுவதையும் விளக்கிச் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவம் நடக்கும் ஆண்டில்தான் நபிகள் நாயகம் பிறக்கிறார்கள் எனில், அந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள் பல நூறு பேர் இன்றும் (சூரத்துல் ஃபீலைச் சொல்லும் நாளிலும்) இருந்திருப்பார்கள்.

ரசூல் (ஸல்) அவர்கள் பிறந்து தனது 40 வயதில் தம்மை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்கிறார்கள். நபியவர்கள் பிறக்கும்போது அதாவது பிறந்த ஆண்டு இந்த யானை சம்பவம் நடக்கிறது. இந்த யானைப் படை சம்பந்தமாக அருளப்பட்ட அத்தியாயத்தின் வசனங்கள் மக்காவில்தான் அருளப்படுகிறது.

ஏனெனில் لِإِيْلَافِ قُرَيْشٍ (லிஈலாஃபி குரைஷின்) குரைஷிகளை மகிழ்விப்பதற்காக என்று குரைஷிகளைப் பற்றி வருவதால் அந்த வசனம் மக்காவில்தான் அருளப்பட்டது என்பதற்கான சான்றாக ஆகிவிடுகிறது. குரைஷிகளை ஆர்வமூட்டுவதற்காக அருளப்பட்டிருப்பதிலிருந்து இந்த வசனங்கள் மக்காவில் அருளப்பட்டிருப்பது உண்மையாக இருந்தாலும் எந்தத் தேதியில்? எந்தக் கிழமையில்? என்று குறிப்பு இல்லை. நபியவர்களின் 40 ஆவது வயதிலிருந்து 53 வயது வரைக்குமுள்ள மக்கா வாழ்க்கையில் இறைவனால் அருளப்பட்டிருக்கும். இந்த 13  ஆண்டுகளில் ஏதாவது ஒரு நாளில்தான் இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த அலம் தர ஃகைப என்ற யானை அத்தியாயமும் குரைஷி அத்தியாயமும் நபியவர்களின் 40 வயதுக்கு முன்னாலும் நபியவர்களின் 53 க்குப் பின்னாலும் அருளப்பட வாய்ப்பே கிடையாது.

அப்படியெனில் நபியவர்களின் 45 ஆவது வயதில் இந்த வசனங்கள் அருளப்படுகிறது என்று வைத்துக் கொண்டால், நபியவர்கள் பிறக்கும் போது யானைச் சம்பவத்தைப் பார்த்த 20 வயது இளைஞர் நபியவர்களின் 45 ஆவது வயதில் 65 வயதுடையவராக இருப்பார். சம்பவம் நடக்கும் போது 5 வயதுடையவராக இருந்தவர் 50 வயதாகவும், 10 வயதுடையவராக இருந்தவர் 55 வயதுடையவராகவும், 15 வயதுடையவராக இருந்தவர் 60 வயதுடையவராகவும் இப்படி நேரடியாக யானைச் சம்பவத்தைப் பார்த்தவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

இந்த யானைச் சம்பவத்தைப் பொறுத்த வரை, அதை நேரடியாகப் பார்த்த மக்களே மக்காவில் இருந்தார்கள். அப்படி நேரடியாகப் பார்த்தவர்களில் அந்தச் சமூகத்தில் பாதி மக்கள் இருந்தனர். கண்ணால் நேரடியாகப் பார்த்தவர்களே அங்கே இருந்ததினால்தான் அல்லாஹ் சம்பவம் முழுவதையும் சொல்லவில்லை.

அந்த மக்களில் யார் அறிவித்தாலும் அதையே ஆதாரமாகக் கொள்ளலாம் என்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். வேறு வழிமுறைகள் இல்லை. அதையே ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். அதனால் வஹீயைப் பின்பற்றவில்லை என்றாகாது.

அதாவது இந்த யானைப் படை பற்றி சஹாபாக்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ அவையெல்லாம் அல்லாஹ் சொல்கிற இந்த வசனங்களுக்குரிய ஆதாரமாக ஆகிவிடும். மாறாக வணக்க வழிபாடுகளுக்கெல்லாம் ஆதாரமாக ஆகாது. அவர்கள் என்ன தெரிந்து வைத்திருந்தார்களோ அதை இவ்வசனத்தின் மூலமாக இறைவன் சரிதான் என்று ஒத்துக் கொண்டுதான் இப்படிச் சொல்லாமல் விட்டுவைத்துள்ளான். எனவே அல்லாஹ் ஒத்துக் கொண்டான் என்றால் அவர்கள் எதை அறிவிக்கிறார்களோ அதைத்தான் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இந்தச் சம்பவத்திற்குரிய ஆதாரமாகும்.

அல்லாஹ்வே அந்த வரலாற்றை ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டான். அந்த வகையில் இந்த யானைச் சம்பவத்தை இப்னு அப்பாஸ் ரலியவர்கள் நமக்கு விளக்குகிறார்கள். அவரும் ஒரு நபித்தோழர். இப்னு அப்பாஸின் தந்தை நபியவர்களின் பெரிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) அவர்கள் கண்டிப்பாக யானைப் படைச் சம்பவத்தைப் பார்த்திருப்பார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மதினாவிற்கு ஹிஜ்ரத்தும் செய்துள்ளார்கள். ஆகையால் அவர் இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பாகப் பார்த்து இருப்பார். அவரது மகன்தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அதனால்தான் இப்னு அப்பாஸ் அவர்களின் சொல்லையும் இந்த விசயத்திற்கு அத்தாட்சியாக ஆதாரமாக எடுத்துக் கொள்கிறோம்.

இப்னு அப்பாஸ் என்ன சொல்கிறார்கள் என்று பைஹகீயில், அபூ நயீம் அவர்களின் ஹில்யா என்ற நூலில், இப்னு மர்தவைஹீ, முஸ்னத் அப்து இப்னு ஹமீத் என்கிற நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் சாராம்சம் என்னவெனில், இன்றைக்கு நமக்கெல்லாம் எப்படி மக்கா என்ற நகரம் புனிதமாகவும் பிரபல்யமாகவும் இருக்கிறதோ நபியவர்கள் காலத்து மக்களுக்கும் அப்படித்தான் இருந்தது. மக்கா புனிதம் என்பது நபியவர்கள் தூதராக ஆக்கப்பட்டதற்குப் பிறகு ஏற்பட்டதல்ல. பல தெய்வங்கள் பிற்காலத்தவர்களால் மக்காவில் உள்ள காஃபாவிற்குள் இருந்திருந்தாலும் அதன் மீது மக்களிடம் நன்மதிப்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்தது. மிகவும் புனிதமானது என்று அரபுகள் அங்கே ஒன்று குழுமுகிற பிரபல்யமான ஒரு இடம்தான் கஃபா. அங்கே முன்னூறுக்கும் மேற்பட்ட சிலைகளை வணங்குவதற்காக மக்கள் மக்காவிற்கு வருவார்கள்.

அந்நிலையில் யமன் தேசத்தில் தனி ஆட்சி நடந்து  கொண்டிருந்தது. அப்போதைய அதன் தலைநரகம் ஸன்ஆ. அந்த ஸன்ஆ என்ற தலைநகரை அப்ரஹா என்ற மன்னன் ஆட்சி செய்கிறான். அவ்விடத்தில் ஒரு புனிதக் கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்கு மக்களிடம் வரவேற்பில்லை. யாரும் முக்கியத்துவம் கொடுத்து போகாமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்காவிலுள்ள கஃபாவிற்கு எல்லோரும் போகிறார்கள். மக்கள் கூட்டம் வந்தால் அதிகமான காணிக்கைகள் சேரும். நிறைய சுற்றுலாத் தளங்களை அதை வைத்து உருவாக்கி விடுவார்கள். இப்படியொரு நிலை தமது நகரத்திற்கு கிடைத்தால் தமதூர் மக்கள் செழிப்படைவார்கள் என்பதற்காக ஒரு கோவிலைக் கட்டி வைத்துக் கொண்டு வழிபாடுகள் நடத்தி விளம்பரப்படுத்திப் பார்க்கிறான் மன்னன் அப்ரஹா. ஆனாலும் மக்கள் யாரும் அதை ஏற்கவில்லை. வழிபடவில்லை. அப்போதுதான் கஃபாவை இடித்துத் தரைமட்டமாக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டால், அடுத்ததாக பெரிய இடம் நமது கோவில்தான். அங்கு மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைத்து கஃபாவை இடிப்பதற்கு யானைப் படையைத் திரட்டிக் கொண்டு மக்காவிற்கு செல்கிறான்.

யானைப் படை என்றால் யானைப் படையில் மனிதர்கள் செல்கிறார்கள் என்று அர்த்தம். குதிரைப் படை என்றால் குதிரை போய் சண்டை போடாது. மனிதர்கள் குதிரையில் ஏறிப்போனால் குதிரைப் படை என்போம். யானையில் ஏறிப்போனால் யானைப் படை என்போம்.

இப்படி யானைப் படைகளுடன் வந்து கஃபாவை இடிக்க எத்தனிக்கும் போதுதான், அல்லாஹ் அதைப் பொறுத்துக் கொள்ளாமல் அந்தப் படைகளை அழிக்கிறான். அல்லாஹ் ஏன் கஃபாவை இடிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், உலகில் அல்லாஹ்வை வணங்குவதற்காக முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் என்பதினால்தான். மக்கா என்ற ஊர் புனித பூமி, பாதுகாக்கப்பட்ட தளம் என்பதினால் அதுவும் உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே அபய பூமி என்பதினால் அதை இறைவன் பாதுகாக்கிறான்.

இதை இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான். இந்த வசனம் இறைவேதம் என்பதற்கான சான்றாக இருக்கிறது. அல்லாஹ் கொடுத்த வாக்குறுதியை உடைப்பதற்கும் தகர்த்திடவும் யானைப் படையைக் கொண்டு வருகிறான் அப்ரஹா மன்னன். அதே நேரத்தில் அந்த மன்னரை எதிர்த்து போராடுகிற அளவுக்கு மக்கத்து மக்களிடமும் கஃபாவை நிர்வாகம் செய்கிற பொறுப்பாளிகளிடமும் வலிமை கிடையாது.

யானை என்கிற பிராணியை பார்த்திருக்கவே மாட்டார்கள் மக்கத்து மக்கள். யானையைப் பார்த்தவுடனே பெரும் பயம் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும். இன்றைக்கு வேண்டுமானால் யானையுடன் மனிதன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டான். அப்ரஹா மன்னன் மக்காவைத் தகர்த்த வந்தபோது மக்களிடம் கடும் பயமும் இனம் புரியாத பீதியும் இருந்தது. கஃபா இடிக்கப்பட்டு ஊர் அழிக்கப்படும் என்றிருந்த நேரத்தில்தான், கையறு நிலையில் இருக்கும்போதுதான் அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவதற்காக அபாபீல் பறவைக் கூட்டங்களை அனுப்பி வைத்தான். அவைகள் சூடேற்றப்பட்ட கற்களைச் சுமந்து வந்து யானைப் படையின் மீது வீசுகிறது. இப்படி கற்களை பறவைகள் படையின் மீது போட்டதும் அவர்கள் மென்று உமிழப்பட்ட வைக்கோல் போன்று சக்கையாக்கப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இப்படியொரு சம்பவம் நடந்ததை நபியே நீர் பார்க்கவில்லையா? பார்க்கவில்லையா என்றால் அதை சிந்தித்துப் பார்க்க மாட்டாயா? என்று அர்த்தம். இந்த ஆலயத்திற்கும் இந்த மக்களுக்கும் அல்லாஹ் எவ்வளவு அருள் புரிந்திருக்கிறான். இதை ஏன் செய்தேன் தெரியுமா? அதற்குப் பதில்தான் அடுத்த அத்தியாயத்தில் لِإِيْلَافِ قُرَيْشٍ (லிஈலாஃபி குரைஷின் - குரைஷிகளை மகிழ்விப்பதற்காக) என்று சொல்கிறான்.

அதனால்தான் ஃபீல் அத்தியாயத்தையும் குரைஷி அத்தியாயத்தையும் ஒன்று சேர்த்து விரிவுரை செய்கிறோம்.

குரைஷிகளுக்கு கண்ணியத்தை ஏற்படுத்துவதற்காக இக்காரியத்தைச் செய்தும் என்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கிறான். எவ்வளவு பெரிய அருள் செய்து ஒரு தூதரை உங்கள் சமூகத்தில் தேர்ந்தெடுத்து உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்? யானைப் படைகூட நிற்க இயலாத அளவுக்கு விரட்டியடித்து எனது ஆற்றலை கண்கூடாகக் கண்டும் இந்தத் தூதரை ஏற்காமல் இருக்கிறீர்களே என்று கேட்பதற்காகத்தான் யானைப் படையை அல்லாஹ் என்ன செய்தான் என்பதைச் சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்கிறான்.

இன்னும் சொல்லப்போனால் நபிகள் நாயகம் பிறப்பதற்காகக் கூட அல்லாஹ் இப்படிச் செய்திருக்கலாம். யானைப் படையைக் கொண்டு வந்து அனைவரையும் அழித்திருந்தால் வெற்றி பெற்றிருந்தால் நபியவர்களின் தாயும் தந்தையும் மரணித்திருப்பார்கள். நபியவர்களும் பிறந்திருக்க முடியாது. ஏனெனில் நபிகளார் யானை ஆண்டில்தான் பிறக்கிறார்கள். இப்படியொரு அர்த்தத்திலும் விளக்கம் கூறலாம். அதனால்தான் அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்கிறான். இதுதான் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிற வரலாறு.

நவீன போர்கருவிகளின் முன்னறிவிப்பு

இந்த வரலாறிலிருந்து நாம் பெறும் பாடம் அதிகமிருக்கிறது. முதல் விசயம், இந்த அத்தியாயத்தில் மிகப் பெரிய அறிவியல் முன்னறிவிப்பு இருக்கிறது. யானை எவ்வளவு பெரியது? படைகள் என்றாலேயே யானை, குதிரையைத்தான் பிரதானமாகப் பயன்படுத்துவார்கள். அந்தக் காலங்களில் பீரங்கிகள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், அணுகுண்டுகள், ஆகாய விமானங்கள், போர் விமானங்கள் போன்றவை எதுவும் கிடையாது. ஆகையால் யானைப் படைகள் குதிரைப் படைகள்தான் மிகவும் வலிமையான படைகளாக அன்றைய காலங்களில் கருதப்பட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் கஃபாவை இடிப்பதற்கு பிரமாண்டமான படைகளுடன் அப்ரஹா வருகிறான். மக்காவிலுள்ள மக்களிடம் எந்த ஆயுதங்களும் கிடையாது. இவ்வளவு பெரிய யானைப் படைகளை இறைவன் அபாபீல் பறவைகள் மூலமாகத்தான் அழிக்கிறான். அப்படி அழித்துவிட்டு أَلَمْ تَرَى சிந்திக்க மாட்டீர்களா? என்று ஆரம்பிக்கிறான்.

இதில் ஏதோ விசயம் இருப்பதாக இறைவன் கூறுகிறான். இந்தச் சம்பவங்களை இறைவன் சொல்லாமல் அதைப் பற்றி சிறிதளவு எடுத்துக்காட்டி விட்டு சிந்திக்கவில்லையா? என்று கேட்கிறான். 

அதற்கு என்ன பொருள் என்றால்? யானைப் படையைச் சிந்திக்கவில்லையா? பறவைகளைச் சிந்திக்வில்லையா? அவைகள் சூடேற்றப்பட்ட கற்களை வீசியதைச் சிந்திக்கவில்லையா? மென்று உமிழப்பட்ட வைக்கோலைப் போல் மாறியதைச் சிந்திக்கவில்லையா? என்றெல்லாம் அல்லாஹ் கேட்கிறான்.

இவைகளையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள் என்று இறைவன் கூறுகிறான். அன்றைக்கே இதில் இறைவன் என்ன சொல்கிறான் என்பதை சிந்தித்து இருந்தார்கள் எனில் அமெரிக்கா இன்று வல்லரசாக இருந்திருக்குமா?  இருக்காது. அரபுகள்தான் வல்லரசாக இருந்திருப்பார்கள். சூடேற்றப்பட்ட, வெப்பத்தை ஏற்றப்பட்ட கற்களை வீசினால் எவ்வளவு பெரிய படைகளாக இருந்தாலும் ஒன்றுமில்லாமல் அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதில் அணுஆயுதம் பற்றி முன்னறிவிப்பு இருக்கிறது. கல் சூடேற்றப்பட்டதாக இருந்தாலும் அதைத் தூக்கும்போது சுடாது. வெடிகுண்டை கையில் எடுத்துச் சென்றால் சுடாது. துப்பாக்கிகளின் புல்லட் ரவைகளை கையில் தொட்டாலோ பையில் வைத்தாலோ சுடாது. வெடித்தால்தான் சுடும்.

இன்றைக்கு இருக்கிற நவீன கருவிகளை எவ்வாறு கைக்கொள்வது என்பதைத்தான் அல்லாஹ் சொல்கிறான். இன்றைக்கு அமெரிக்கா ஈராக்கைப் பயம்காட்டக் காரணம் எது எனில், வான்வழித் தாக்குதல்தான். அதை மேலிருந்துதான் போடவேண்டும். பறந்துகொண்டுதான் போடவேண்டும். அப்போதுதான் அது சரியாக இருக்கும். ஒரு பறவை தூக்கிசெல்லும் அளவுடையதைக் கொண்டு பெரிய யானையைக் கூட அழித்துவிட முடியும்.

இவைகளைத்தான் அன்றே இறைவன் சிந்தியுங்கள் என்று கூறுகிறான்.

எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான். அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தெரிந்ததாக இருந்தாலும் சிந்திக்காமல் இருப்பதினால்தான் இறைவன் சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்கிறான். கடந்த காலத்தில் நடந்த ஒன்றில் இறைவன் சிந்தியுங்கள் என்று கூறினால் அதில் எதிர்காலத்தில் ஏதோ விசயம் இருக்கிறது என்று அர்த்தம். தகவலுக்காக மட்டும் அல்லாஹ் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே இன்றைய நவீன உலகில் நவீன ஆயுதங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போர் விமானங்களைச் செய்ய முடியும் என்கிற செய்தி இந்த அத்தியாயத்தில் இருக்கிறது என்று சிந்திக்கச் சொல்கிறான். இதை ஒரு முன்னறவிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறலாமா?

உதவி செய்தவர்களுக்கு ”ஜஸாக்கல்லாஹுகைர் “ என்று கூறிய உடன், வஇய்யாக  பாரக்கல்லாஹு ஃபீஹும்   அஹ்ஸன் அல்லாஹு இலைக் என்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் இன்று நடைமுறையில் மக்களுக்கு மத்தியில் காணப்படுகிறது.

”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறியவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி பதில் கூறுவது ”பித்அத்” ஆகும்.

நபி மொழிகளில் ”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறியவருக்கு அதே வார்த்தையை பதிலாகக் கூறலாம் என்பதற்கு சில ஆதாரங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் எவை ஸஹீஹானவை , பலஹீனமானவை என்பதைக் காண்போம்.

முதலாவது ஆதாரம்

பரா இப்னு ஆசிப் (ரலி) அவர்கள் வாயிலாக மண்ணறை விசாரணை பற்றி நீண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் இருந்து ஆதாரமாக முன்வைக்கப்படும் பகுதியை மட்டும் நாம் மொழிபெயர்ப்பு செய்துள்ளோம்.

تهذيب الآثار للطبري (2 / 212، بترقيم الشاملة آليا) :

171 - حدثنا ابن حميد الرازي ، وابن وكيع ، قالا : حدثنا جرير بن عبد الحميد الضبي ، عن الأعمش ، عن المنهال بن عمرو ، عن زاذان ، عن البراء بن عازب ، قال : خرجنا في جنازة رجل من الأنصار مع النبي صلى الله عليه وسلم فانتهينا إلى القبر ஞ் .

ثم يأتيه آت حسن الوجه طيب الريح حسن الثياب قال : فيقول له : يا هذا : أبشر برضوان الله وجنات فيها نعيم مقيم . قال : فيقول : وأنت فبشرك الله بخير ، فمن أنت ؟ لوجهك الوجه يبشر بالخير . قال : يقول : أنا عملك الصالح . فوالله ما علمت إن كنت لسريعا في طاعة الله ، بطيئا عن معصية الله ، فجزاك الله خيرا قال : فيقول : وأنت فجزاك الله خيرا . ஞ்

பிறகு அவரிடம் அழகிய முகமும், நறுமணமும், அழகிய ஆடையும் அணிந்த ஒருவர் வருவார்.  அவர் அவனிடம் ”இன்னாரே ! அல்லாஹ்வின் திருப்பொருத்தைக் கொண்டும், நிரந்தரமான இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளைக் கொண்டும் நீ நற்செய்தி பெற்றுக் கொள்” ! என்று கூறுவார். அதற்கவர் ” அல்லாஹ் உமக்கும் நல்லதைக் கொண்டு நற்செய்தி கூறுவானாக ! நீ யார்? உன்னுடைய முகம் நல்லதை நற்செய்தி கூறுபவரின் முகம் போன்று உள்ளதே”! என்று கூறுவார். அதற்கவர் ”நான்தான் உன்னுடைய நல்லமல்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அறிந்தவரை நீ இறைவனுக்கு வழிப்படும் காரியங்களில் விரைந்து செல்பவனாகவும், இறைவனுக்கு மாறுசெய்யும் காரியங்களை தவிர்ந்து கொள்பவனாகவும் இருந்தாய். ”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” (இறைவன் உமக்கு நற்கூலி வழங்குவானாக)” என்று கூறுவார். உடனே அவர் ””வஅன்த்த ஃபஜஸாக்கல்லாஹூ ஹைரா” (அவ்வாறே அல்லாஹ் உமக்கும் நற்கூலி வழங்குவானாக)” என்று பதிலளிப்பார்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)

நூல் : தஹ்தீபுல் ஆஸார் லித்தப்ரீ

ஹதீஸ் எண் : 171 பாகம் : 2 பக்கம் : 212

மேற்கண்ட மண்ணறை விசாரணை பற்றிய சம்பவம் இதுவல்லாத பிற ஸஹீஹான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறியவருக்கு பதிலாக ”வஅன்த்த பஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறியதாக இந்தச் செய்தியில் மட்டும்தான் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும்.

இந்தச் செய்தியை ”இப்னு ஹூமைத் அர்ராஸி” என்பாரும் , ”இப்னு வகீவு” என்பாரும் நூலாசியருக்கு கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இந்த இருவருமே ”பொய்யர்கள்” ஆவர். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும.

”இப்னு ஹூமைத் அர்ராஸி” என்பார் தொடர்பாக இடம்பெற்றுள்ள விமர்சனங்களைக் காண்போம்.

وَقَال يعقوب بن شَيْبَة السدوسي  : محمد بن حميد الرازي كثير المناكير.   وقَال البُخارِيُّ  : حديثه في نظر.وَقَال النَّسَائي  : ليس بثقة. وَقَال إبراهيم بن يعقوب الجوزجاني  : ردئ المذهب غير ثقة. - تهذيب الكمال 742 (25 / 102(

”முஹம்மது பின் ஹூமைத் அர்ராஸி” மறுக்கத்தக்க செய்திகளை அதிகம் அறிவிப்பவர்” என யஃகூப் பின் ஸைபா அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

”இவருடைய ஹதீஸில் ஆட்சேபணைகள் உள்ளன” என இமாம் புகாரி கூறியுள்ளார்.

”இவர் உறுதியானவர் இல்லை” என இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.

”இவர் மோசமான வழிமுறையைக் கொண்டவர், உறுதியற்றவர்” என இப்ராஹிம் பின் யஃகூப் அல்ஜவ்சஜானீ விமர்சித்துள்ளார்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 25 பக்கம் : 102)

وَقَال أبو العباس أحمد بن محمد الازهري  : سمعت إسحاق بن منصور يقول : أشهد على محمد بن حميد وعُبَيد بن إسحاق العطار بين يدي الله أنهما كذابَان.-  تهذيب الكمال 742 (25 / 103( :

இஸ்ஹாக் இப்னு மன்சூர் கூறுகிறார் : ”முஹம்மது பின் ஹூமைத்” என்பாரும், ”உபைத் இப்னு இஸ்ஹாக் அல்அத்தார்” என்பாரும் இரண்டு பெரும் பொய்யர்கள் என்று நான் அல்லாஹ்வை முன்னிருத்தி சாட்சி கூறுகிறேன்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 25 பக்கம் : 103)

وَقَال أبو القاسم عَبد الله  بن محمد بن عبد الكريم الرازي ابن أخي أبي زرعة : سألت أبا زرعة عن محمد بن حميد فأومأ فأصبعه إلى فمه. فقلت له : كان يكذب ؟ فقال برأسه ، نعم. - تهذيب الكمال 742 (25 / 104( :

அபுல்காசிம் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அவர்கள் கூறுகிறார்கள் ”நான் அபூ சுர்ஆ அவர்களிடம் ”முஹம்மத் பின் ஹூமைத்” அவர்களைப் பற்றிக் கேட்டேன். அவர் தனது விரலை தன்னுடைய வாயை நோக்கி கொண்டு சென்று சுட்டிக் காட்டினார்கள். நான் ”அவர் பொய்யுரைப்பவராக இருந்தாரா?“ என்று கேட்டேன். அதற்கவர் ”ஆம்” என்று தம்முடைய தலையை அசைத்தார்.

 (நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 25 பக்கம் : 104)

فذكروا ابن حميد فأجمعوا على أنه ضعيف في الحديث جدا ، وأنه يحدث بما لم يسمعه ، وأنه يأخذ أحاديث لاهل البصرة والكوفة فيحدث بها عن الرازيين. وَقَال أبو العباس بن سَعِيد  : سمعت داود بن يحيى يقول : حَدَّثَنَا عنه يعني محمد بن حميد - أبو حاتم قديما ، ثم تركه بأخرة. قال : وسمعت عبد الرحمن بن يوسف بن خراش يقول : حَدَّثَنَا ابن حميد وكان والله يكذب. ) تهذيب الكمال 742 (25 / 105(

இப்னு ஹூமைத் ஹதீஸ்களில் மிகவும் பலவீனமானவர் என்று அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர். அவர் தான் செவியேற்காதவற்றையெல்லாம் அறிவிப்பவராக இருந்தார்.

அப்துர்ரஹ்மான் பின் யூசுஃப் கூறுகிறார் ” இப்னு ஹூமைத் எங்களுக்கு அறிவித்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் பொய்யுரைப்பவராக இருந்தார்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 25 பக்கம் : 105)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ”இப்னு ஹூமைத் அர்ராஸி” என்பார் பெரும் பொய்யர் என்பது தெளிவாகிறது.

இப்னு வகீவு என்பார் தொடர்பான விமர்சனங்கள்.

قال البخاري  : يتكلمون فيه لاشياء لقنوه. وَقَال عبد الرحمن بن أَبي حاتم (2) : سألت أبا زرعة عنه فقال : لا يشتغل به. قيل له : كان يكذب ؟ قال : كان أبوه رجلا صالحا. قيل له : كان يتهم بالكذب ؟ قال : نعم   ) تهذيب الكمال 742 (11 / 202( :

இவர் தல்கீன் செய்பவராக இருந்தார் (அதாவது பிறர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே கூறுவார்.) என்று அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள்.

”இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என்று இமாம் அபூ சுர்ஆ கூறியுள்ளார். ”இவர் பொய்யர் என்று சந்தேகிக்கப்படுபவராக இருந்தாரா?” என்று அபூ சுர்ஆ அவர்களிடம் வினவப்பட்ட போது  ”ஆம்” என்று பதிலளித்தார்கள்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 11 பக்கம் : 202)

மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ”இப்னு வகீவு” என்பார் பலவீனமானர் என்பது தெளிவாகிவிட்டது.

எனவே மேற்கண்ட அறிவிப்பு பலவீனமானதாகும். இதை ஆதாரமாகக் கொள்வது கூடாது.

இரண்டாவது அறிவிப்பு

المعجم الكبير للطبراني  - ومما أسند أسيد بن حضير رضي الله عنه

 حديث : ‏567‏   17693  

 حدثنا الفضل بن العباس الأصبهاني ، ثنا بشار بن موسى الخفاف ، ح وحدثنا الحسن بن علي المعمري ، ثنا مسروق بن المرزبان ، قالا : ثنا يحيى بن زكريا بن أبي زائدة ، ثنا محمد بن إسحاق ، عن حصين بن عبد الرحمن بن عمرو بن سعد بن معاذ ، عن محمود بن لبيد ، عن ابن شفيع ، وكان طبيبا ، قال : قطعت من أسيد بن حضير عرق النسا ، فحدثني حديثين قال : أتاني أهل بيتين من قومي ، فقالوا : كلم لنا رسول الله صلى الله عليه وسلم ، يقسم لنا من هذا التمر ، فأتيته فكلمته ، فقال : " نعم نقسم لكل أهل بيت شطرا ، وإن عاد الله علينا عدنا عليهم " فقلت : جزاك الله عنا خيرا ، قال : " وأنتم فجزاكم الله عني معاشر الأنصار خيرا ، فإنكم ما علمت أعفة صبر ، أما إنكم ستلقون بعدي أثرة ، فاصبروا حتى تلقوني " *

மருத்துவராக இருந்த இப்னு ஷஃபீவு என்பார் அறிவிக்கின்றார்கள் நான் ”உஸைத் பின் ஹூலைர் (ரலி) அவர்களுக்கு தொடையின் தசைப்பகுதயில் இருந்த வலிக்கு  (மருத்துவம் செய்து) குணப்படுத்தினேன். அவர் எனக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்.

உஸைத் பின் ஹூலைர் அவர்கள் கூறினார்கள் : என்னுடைய சமுதாயத்தைச் சார்ந்த இரண்டு வீட்டினர் என்னிடம் வந்து (நபி (ஸல்) அவர்களிடம் வந்துள்ள) இந்த பேரீத்தம் பழங்களிலிருந்து (ஒரு பங்கினை) நமக்கு பங்கிட்டு தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் நமக்காக பேசுங்கள்” என்று என்னிடம் கூறினர். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அது தொடர்பாக) அவர்களிடம் பேசினேன்.  அதற்கு நபியவர்கள் ” ஆம் ! ஒவ்வொரு வீட்டாருக்கும் ஒரு பகுதியை வழங்குவோம். அல்லாஹ் நமக்கு மீண்டும் வழங்கினால் அவர்களுக்கு மீண்டும் வழங்குவோம்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ! (அன்சாரிகளாகிய) எங்கள் சார்பாக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! (ஜஸாக்கல்லாஹூ அன்னா ஹைரன்) என்று நான் கூறினேன். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”அன்சாரிகளே ! அவ்வாறே என் சார்பாக அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக ! (ஜஸாக்குமுல்லாஹூ அன்னீ கைரன்) , நான் அறிந்த வரை (அன்சாரிகளாகிய) நீங்கள்” சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும் தடாகத்தின் அருகே) என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்.

நூற்கள் : அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானீ  (567)  முஸ்னத் அபூ யஃலா (908),  இப்னு ஹிப்பான் (7386), அல்ஆஹாது வல்மஸானி லிஇப்னி அபீ ஆஸிம் (1574), அல்மதாலிபுல் ஆலியா (4224)

மேற்கண்ட செய்தியில் ”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறிய உஸைத் பின் ஹூலைர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அதே வார்த்தையை பதிலாகக்  கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு ஆதாரப்பூர்வமானது கிடையாது.  அனைத்து நூற்களிலும் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியில் ”இப்னு ஷஃபீவு” என்பார் இடம் பெற்றுள்ளார்.  இவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள் தமது ”அத்தாரீகுல் கபீர் ” (பாகம் : 8 பக்கம் : 439) என்று நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனார் இவரைப் பற்றிய குறை, நிறைகள் எதையும் குறிப்பிடவில்லை. இவரைப் பற்றி மற்ற எந்த அறிஞரும் நம்பக்மானவர் என்று சொல்லவில்லை. எனவே இவருடைய நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இவருடைய அறிவிப்புகள் அனைத்தும் பலவீனமாகி விடுகின்றன.

மூன்றாவது அறிவிப்பு

மேற்கண்ட உஸைத் பின் ஹூலைர் (ரலி) அவர்கள் தொடர்பான சம்பவம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும்.

السنن الكبرى للنسائي  - كتاب المناقب

 مناقب أصحاب رسول الله صلى الله عليه وسلم من المهاجرين والأنصار -  ذكر خير دور الأنصار رضي الله عنهم

 حديث : ‏8070‏     18227  

 أخبرنا علي بن حجر قال : أخبرنا عاصم بن سويد بن عامر بن زيد بن جارية ، عن يحيى بن سعيد ، عن أنس بن مالك قال : جاء أسيد بن حضير الأشهلي النقيب إلى رسول الله صلى الله عليه وسلم ، وقد كان قسم طعاما ، فذكر له أهل بيت من بني ظفر من الأنصار فيهم حاجة فقال لي رسول الله صلى الله عليه وسلم : " أسيد تركتنا حتى إذا ذهب ما في أيدينا ، فإذا سمعت بشيء قد جاءنا ، فاذكر لي أهل ذلك البيت " قال : فجاءه بعد ذلك طعام من خيبر شعير وتمر قال : " فقسم رسول الله صلى الله عليه وسلم في الناس ، وقسم في الأنصار فأجزل ، وقسم في أهل ذلك البيت " فأجزل فقال له أسيد بن حضير مستشكرا : جزاك الله أي نبي الله أطيب الجزاء ، أو قال : " خيرا " فقال له رسول الله صلى الله عليه وسلم : " وأنتم معشر الأنصار ، فجزاكم الله أطيب الجزاء " أو قال : " خيرا ، فإنكم ما علمت أعفة صبر ، وسترون بعدي أثرة في الأمر والقسم ، فاصبروا حتى تلقوني على الحوض " *

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை (மக்களுக்கு) பங்கீடு செய்து (முடித்துவிட்ட நிலையில்), (அகபா உடன் படிக்கையில் கலந்து கொண்ட)தலைவர்களில் ஒருவரான உஸைத் பின் ஹூலைர் அல்அஸ்ஹலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் பனீ லுஃப்ர் கோத்திரத்தைச் சார்ந்த வீட்டாரைப் பற்றியும் அவர்களின் வறுமையைப் பற்றியும் கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ”உஸைதே” நம்முடைய கையில் இருந்தவை காலியாகும் வரை நீர் நம்மை விட்டுவிட்டு (இப்போது வந்துள்ளீர்கள்). எனவே நம்மிடம் ஏதாவது பொருள் வந்ததாக நீங்கள் செவியேற்றால் அந்த வீட்டாரைப் பற்றி என்னிடம் நினைவூட்டுங்கள்” என்று கூறினார்கள்.  அதற்குப் பிறகு கைபரிலிருந்து கோதுமை, பேரீத்தம் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த்து.  அதனை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்க்ள. அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உஸைத் பின் ஹுலைர் (ரலி) அவர்கள் ”ஜஸாக்கல்லாஹூ ஹைரன் நபியல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்களுக்க நற்கூலி வழங்குவானாக) என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ”அன்சாரிகளே ! அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக ! (ஜஸாக்குமுல்லாஹூ கைரன்) நான் அறிந்த வரை (அன்சாரிகளாகிய) நீங்கள் ” சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்    நூல் : அஸ்ஸூன்னுல் குப்ரா லின்னஸாயீ (870)

மேற்கண்ட ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களும் உறுதியானவர்கள் ஆவர்.

இதன் அறிவிப்பாளர்கள் வருமாறு

1.         அனஸ் பின் மாலிக் (ரலி)

2.         யஹ்யா இப்னு ஸயீத்

3.         ஆஸிம் இப்னு சுவைத் இப்னு ஆமிர்

4.         அலி இப்னு ஹூஜ்ர்

இவர்களைப் பற்றிய விமர்சனங்களைக் காண்போம்.

அனஸ் பின் மாலிக் (ரலி)

ஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை.

யஹ்யா பின் ஸயீத் பற்றிய விமர்சனம்

இவர் மிகச் சிறந்த அறிவிப்பாளர் ஆவார். இவரைப் பற்றி ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

وَقَال يحيى بن المغيرة الرازي  ، عن جرير بن عبدالحميد : لم أر من المحدثين إنسانا كان أنبل عندي من يحيى بن سَعِيد الأَنْصارِيّ.

என்னிடத்தில் யஹ்யா பின் ஸயீத் அவர்கள்தான் மிகவும் புத்திசாலியான முஹத்திஸ் ஆவார். அவரை விடச் சிறந்த ஒருவரை நான் பார்க்கவில்லை என ஜரீர் பின் அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார்கள். 

وَقَال سُلَيْمان بن حرب ، عن حماد بن زيد : قدم أيوب مرة من المدينة فقيل له : يا أبا بكر من تركت بالمدينة ؟ قال : ما تركت بها أحدًا أفقه من يحيى بن سَعِيد.

ஹம்மாத் பின் ஸைத் கூறுகிறார்  : ஒருதடவை அய்யூப் என்பார் மதீனாவிலிருந்து வந்தாரகள். அவரிடம் அபூ பக்ர் அவர்களே ! நீங்கள் மதீனாவில் யாரை விட்டு வந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கவர் ”நான் அங்கே யஹ்யா பின் ஸயீத் அவர்களை விட ஞானமுடைய எந்த ஒருவரையும் விட்டு வரவில்லை” என்று கூறினார்கள்.

وَقَال الليث بن سعد ، عن سَعِيد بن عبد الرحمن الجمحي : ما رأيت أحدًا أقرب شبها بابن شهاب من يحيى بن سَعِيد

الأَنْصارِيّ ولولاهما لذهب كثير من السنن. وَقَال أبو الحسن بن البراء ، عن علي ابن المديني : لم يكن بالمدينة بعد كبار التابعين أعلم من ابن شهاب يحيى بن سَعِيد الأَنْصارِيّ وأبي الزناد ، وبكير بن عَبد الله بن الاشج.

وَقَال عبد الرحمن بن أَبي حاتم : سئل أبي عن يزيد بن عَبد الله بن قسيط ويحيى بن سَعِيد ، فقال : يحيى يوازي الزُّهْرِيّ.

وَقَال يحيى بن سَعِيد القطان ، عن سفيان الثوري : كان يحيى بن سَعِيد الأَنْصارِيّ أجل عند أهل المدينة من الزُّهْرِيّ.

ஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜூம்ஹி அவர்கள் கூறுகிறார்கள்  : இப்னு ஷிஹாப் ஷூஹ்ர் அவர்களுக்கு மிகவும் ஒப்பானவராக யஹ்யா பின் ஸயீதை விட வேறு யாரையும் நான் பார்தத்தில்லை. அந்த இருவரும் இல்லையென்றால் ஹதீஸ்களில் அதிமானவை அழிந்திருக்கும்.

”முதல் தலைமுறை தாபியீன்களுக்கு அடுத்தபடியாக இப்னு ஷிஹாப். யஹ்யா பின் ஸயீத் அல்அன்சாரி, அபுஸ் ஸினாத், புகைர் பின் அப்தில்லாஹ் இப்னு அஸஜ்ஜூ ஆகியோர்களை விட மிக அறிந்தவர்கள் மதீனாவில் யாரும் கிடையாது” என அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள்.

யஹ்யா அவர்கள் ஷூஹ்ரிக்கு நிகரானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் ஷூஹ்ரி அவர்களை விட சிறந்தவர் என சுஃப்யானுஸ் ஸவ்ரீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 31 பக்கம் : 351)

இன்னும் ஏராளமான அறிஞர்கள் இவரைப் பற்றி மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

ஆஸிம் பின் சுவைத் பின் ஆமிர் பற்றிய விமர்சனம்

تهذيب التهذيب ـ محقق (5 / 39(

ذكره ابن زبالة في علماء المدينة وقال أبو حاتم شيخ محله الصدق.    روى حديثين منكرين وذكره ابن حبان في الثقات.

له عنده حديث سترون بعدي اثرة.  وله قصة طويلة.قلت: وقال عثمان بن سعيد على ابن معين لا اعرفه، قال ابن عدي انما لم يعرفه لانه قليل الرواية جدا لعله لم يرو غير خمسة احاديث.

இவர்கள் மதீனாவினுடைய அறிஞர்களில் ஒருவர் என இப்னு ஸபாலா அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் மூத்த அறிஞர், உண்மையாளர் என்ற நிலையில் இருப்பவர் , இரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர்களில் ஒருவராகக் கூறியுள்ளார்.

இவரை யாரென்று நான் அறியவில்லை என இமாம் இப்னு மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் கூறியுள்ளார்.

இமாம் இப்னு அதீ கூறுகிறார்  இப்னு மயீன் அவர்கள் இவரை நான் யாரென்று அறியவில்லை என்று கூறுவதற்கு காரணம் இவர்கள் மிகவும் குறைவாக அறிவித்துள்ளார் என்பதினாலேயே ஆகும். இவர் ஐந்து ஹதீஸ்களைத் தவிர அறிவிக்கவில்லை.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 5 பக்கம் 39)

இமாம் இப்னு மயீன் இவரை யார் என்று அறியவில்லை என்று கூறியிருந்தாலும் இமாம் அபூ ஹாதிம் அவர்கள் இவரை உண்மையாளர் என்றும் கூறியுள்ளதால் இப்னு மயீன் அவர்களின் விமர்சனம் நீங்கிவிடும்.

மேலும் இப்னு ஸபாலா என்பாரும் இவரை மதீனாவினுடைய அறிஞர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் அபூ ஹாத்திம் கூறுவது நாம் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட செய்தி அல்ல. எனவே இவரும் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் வந்து விடுகிறார்.

அலி இப்னு ஹஜர் பற்றிய விமர்சனம்

تهذيب الكمال 742 (20 / 355) :

4036 - خ م ت س : علي بن حجر بن إياس بن مقاتل بن مخادش بن مشمرج بن خالد السعدي (2) ، أبو الحسن المروزي. ولجده مشمرج صحبة.سكن بغداد قديما ثم انتقل إلى مرو فنزلها ، ونسب إليها ، وانتشر حديثه بها ، وكان متيقظا حافظا ثقة مأمونا.  وَقَال النَّسَائي  : ثقة ، مأمون ، حافظ.وَقَال أبو بكر الخطيب  : كان سكن بغداد قديما ، ثم انتقل إلى مرو ، فنزلها ، واشتهر حديثه بها ، وكان صادقا متقنا حافظا.

இவர் விழிப்புணர்வுமிக்கவராகவும், ஹாஃபிழாகவும், நம்பகத்தன்மைமிக்கவராகவும், உறுதிமிக்கவராகவும் இருந்தார் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் கூறுகிறார்கள்.  இவர் உறுதியானவர், நம்பகமானவர் என்றும், ஹாஃபிழ் என்றும் இமாம் நஸாயீ கூறியுள்ளார்.  இவர் உண்மையாளராகவும், உறுதிமிக்கவராகவும், ஹாஃபிழாகவும் இருந்தார் என அபூபக்ர் அல்ஹதீப் கூறியுள்ளார்.

(நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் : 20  பக்கம் : 355)

மேற்கண்ட ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களும் உறுதியானவர்கள் ஆவர். எனவே இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.

இதே செய்தி அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வழியாக ஏனைய அறிவிப்பாளர்கள் தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ”ஜஸாக்கல்லாஹூ ஹைரா” என்று கூறுபவர்களுக்கு நாம் அதே வாழ்த்தை பதிலாகக் கூறலாம் என்பதை மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

حدثنا الحسين بن الحسن المروزي بمكة و إبراهيم بن سعد الجوهري قالا حدثنا الاحوص بن جواب عن سعير بن الخمس عن سليمان التيمي عن أبي عثمان النهدي عن أسمة بن زيد قال : قال رسول الله صلى الله عليه و سلم من صنع إليه معروف فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்கு ஜஸாக்கல்லாஹூ ஹைரா  (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!) என்று கூறினால் அவர் (உதவி செய்தவருக்கு) மிகச் சிறந்த நன்றியைச் செலுத்தி விட்டார்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல் : திர்மிதி (2035)

 

33 : 53 வது வசனம் நபியின் மனைவிமார்களுக்கு மட்டும் உரியதா?

33 : 53 வது வசனத்தில் நபியின் மனைவியரை அழைத்துக் கூறப்படும் சட்டங்கள் அனைத்தும் நபியுடைய மனைவியருக்கு மட்டும் கூறப்படும் பிரத்யோகமான சட்டங்களாகும். இவை அனைத்து பெண்களையும் பொதுவாக அழைத்து கூறப்படும் சட்டங்கள் கிடையாது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.

”அல்அஹ்சாப்” என்ற இந்த 33வது அத்தியாத்தில் நபியுடைய மனைவியரை அழைத்து அல்லாஹ் பல்வேறு உபதேசங்களைக் கூறுகிறான். அதில் கூறப்படும் பல விசயங்கள் நபியுடைய மனைவியருக்கு மட்டுமே உரியதாகும். அவை பிற பெண்களையும் கட்டுப்படுத்தும் என்று யாராலும் ஒரு போதும் கூறமுடியாது.

நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.  (நபியின் மனைவியரான) உங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நல்லறம் செய்பவருக்கு அவரது கூலியை இரண்டு தடவை வழங்குவோம். அவருக்கு மதிப்புமிக்க உணவையும் தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன் 33 : 30, 31)

நபியுடைய மனைவியர் வெட்கக் கேடான காரியத்தைச் செய்தால் இருமடங்கு வேதனை என்று அல்லாஹ் கூறுகிறான். நபியுடைய மனைவியருக்கு கூறப்படும் இந்தச் சட்டம் பிற பெண்களுக்கும் உண்டு,  அவர்களும் வெட்கக் கேடான காரியத்தை செய்தால் ”இருமடங்கு வேதனைதான்” என்று யாராவது கூறமுடியுமா?

இது போன்று நபியுடைய மனைவியர் அல்லாஹ்வுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் பிறபெண்களுக்குக் கிடைக்கும் நற்கூலியைப் போன்று இருமடங்கு என்று அல்லாஹ் கூறுகிறான். நபியுடைய மனைவியருக்கு கிடைக்கும் இதுபோன்ற கூலி பிறபெண்களுக்கும் உண்டு என்று யாராவது கூறமுடியுமா?

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் சட்டங்கள் நபியுடைய மனைவியருக்கு மட்டும் உரித்தானவை , இது பிற பெண்களைக் கட்டுப்படுத்தாது என்று அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்ததுபோல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33 : 32, 33, 34)

மேற்கண்ட வசனத்தில் ” நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்” என்று குறிப்பிட்டு அல்லாஹ் நபியின் மனைவியரை அழைக்கின்றான். இதிலிருந்தே இது நபியுடைய மனைவியருக்கு மட்டும் கூறப்படும் பிரத்யோகக் கட்டளை என்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்தக் கட்டளை அனைத்துப் பெண்களுக்கும் உரிய பொதுவான கட்டளை என்றால் அல்லாஹ்” ”நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்” என்று அல்லாஹ் குறிப்பிடுவது பொருளற்றதாகிவிடும்.

மேலும் ” இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்!”  என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

”இவ்வீட்டினர்” என்பதற்கு அரபி மூலத்தில் ”அஹ்லுல் பைத்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது நபியுடைய குடும்பத்தினரை மட்டும் குறிப்பதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள்;

பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள். பிறகு (மருமகனும் தமது வீட்டில் வளர்ந்தவருமான) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டார்கள்.

பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்'' (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நூல் : முஸ்லிம் (4807)

”இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.” என்று அல்லாஹ் குறிப்பிடுவது நபியுடைய மனைவி மக்கள் உட்பட உள்ள குடும்பத்தை மட்டும்தான் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அல்லாஹ் கூறுவது அனைத்து குடும்பங்களுக்கும் உரித்தானது கிடையாது.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் 

. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது.                          (அல்குர்ஆன் 33 : 53)

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களைவிட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்

 (அல்குர்ஆன் 33 : 6)

மேற்கண்ட வசனத்தில் நபியுடைய மனைவியரை நபிக்குப் பிறகு யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அது போன்று நபியுடைய மனைவியர் முஃமின்களுக்கு அன்னையர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இதில் பிற பெண்கள் நபியுடைய மனைவியர்களுடன் கூட்டாக முடியும் என்று யாராவது கூறமுடியுமா?

மேற்கண்ட விவரங்களை நாம் சற்று வரிசைப்படுத்துவோம்.

1. நபியுடைய மனைவியர் மானக்கேடான காரியங்களைச் செய்தால் அவர்களுக்கு இருமடங்கு வேதனை

2. நபியுடைய மனைவியர் அல்லாஹ் மற்றும் ரசூலுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவர்களுக்கு இருமடங்கு நன்மை

3. நபியுடைய மனைவியர் பிற பெண்களைப் போன்று கிடையாது

4. ”அஹ்லுல் பைத்” ”இவ்வீட்டினரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்த நாடுகிறான்” என்பது நபியுடைய குடும்பம் மட்டுமே. அனைத்துக் குடும்பங்களையும் அல்ல.

5. நபியுடைய மனைவியர் பிற முஃமின்களுக்கு அன்னையர்

6. நபியுடைய மரணத்திற்குப் பிறகு நபியுடைய மனைவியரை திருமணம் செய்வது கூடாது.

இதில் எந்த ஒரு சட்டத்திலும் நபியுடைய மனைவியரோடு பிற பெண்கள் கூட்டாக முடியாது .இவை அனைத்தும் நபியுடைய மனைவியருக்கு மட்டும் கூறப்பட்ட பிரத்யோக சட்டங்களாகும்.

அது போன்றுதான்,

(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது  (அல்குர்ஆன் 33 : 53) என்று அல்லாஹ் குறிப்பிடும் ”ஹிஜாப்” உடைய சட்டம் நபியுடைய மனைவிமார்களுக்கு மட்டும் உரியதாகும். இது நபியுடைய மனைவிமார்களுக்கு மட்டும் உரிய சட்டம்தான் என்பதற்கு நாம் ஹதீஸ்களிலிருந்தும் ஏராளமான சான்றுகளை முன்னர் கூறியுள்ளோம்.

மாற்றுக் கருத்துடையோரின் கேள்வி :

”ஹிஜாப்” வசனம் நபியுடைய மனைவியருக்கும் மட்டும் உரித்தான சட்டமல்ல. அது அனைத்துப் பெண்களுக்கும் உரிய சட்டம்தான் என்று கூறுபவர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்கின்றனர்.

33 : 53 வது வசனத்தில் அல்லாஹ் ஆறு விசயங்களைக் கூறுகிறான் : 1. நபி (ஸல்) அவர்களது வீடுகளுக்கு அனுமதியின்றி உள்ளே நுழைவது கூடாது.

2. நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைத்திருந்தாலும் விருந்து தயாராகும் முன் அங்கு சென்று காத்திருக்கக் கூடாது.

3. விருந்து சாப்பிட்டுவிட்டால் உடனே வெளியேறிவிட வேண்டும்.

4. விருந்து சாப்பிட்ட பின் பெரும் பேச்சுக்கள் பேசிக் கொண்டே நேரத்தைக் கடத்தி நபி (ஸல்) அவர்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது.

5. நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடம் எதைக் கேட்டாலும் திரைக்கு அப்பால் இருந்தே கேட்க வேண்டும்.

6. இப்படி நடந்தால் உங்கள் உள்ளங்களிலும் அவர்கள் உள்ளங்களிலும் எந்த வித கெட்ட ஊசலாட்டமும் ஏற்படாமல் மிகத் தூய்மையானதாக இருக்கும்.

இந்த ஆறு விசயங்களிலும் எந்த விசயத்தை நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிமார்களுக்கும் தனிச்சட்டத்தை அறிவிக்கும் வசனம் என்று கூறுகிறீர்கள்?

நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிகளுக்கும் உரிய தனிச்சட்டம் என்றால் அவர்களின் வீடுகள் தவிர மற்றவர்களின் வீடுகளில் யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி நுழையலாமா?

விருந்து வைபவத்தில் விருந்துக்கு முன்பும், விருந்துக்கு பின்பும் நபி (ஸல்) அவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்பது தனிச்சட்டமானால் அவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தொல்லை தரலாமா?

நபியின் மனைவிமார்களிடம் மட்டும்தான் திரைக்கு அப்பால் இருந்து கேட்க வேண்டும் என்று சொன்னால் நபியின் மனைவியர் அல்லாத பிற பெண்களிடம் அந்நிய ஆண்கள்  திரையின்றி பேசுவதும், பார்ப்பதும் கூடுமா? என்பது போன்ற கேள்விகளை மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.

நபியின் மனைவிமார்களிடம் திரைக்கு அப்பால் இருந்து பேசினால் ”உங்கள் உள்ளங்களையும், அவர்கள் உள்ளங்களையும் தூய்மையாக்கி வைக்கும்” என்று ஆண்களையும், பெண்களையும் இணைத்து இறைவன் கூறுவது இது பொதுச்சட்டம் என்பதை அறிவிக்கிறது. எனவே இது நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிமார்களுக்கும் உரிய தனிச்சட்டம் என்பது தவறான வாதமாகும். என்றும் மாற்றக் கருத்துடையோர் கூறுகின்றனர்.

நமது பதில் ;

33 : 53 வசனத்தில் கூறப்படும் அனைத்து விசயங்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டிலும், நபி (ஸல்) அவர்களின் மனைவியர் விசயத்திலும் பேணப்பட வேண்டிய விசயங்கள்தான். இந்த வசனத்தில் மட்டும் கூறப்படும் விசயங்களை வைத்து பொதுவான சட்டம் எடுப்பது கூடாது.

33: 53 வது வசனத்தில் இருந்து ஆறு விசயங்களைக் குறித்து கேள்வி எழுப்பும் மாற்றுக் கருத்துடையவர்கள் அவ்வசனத்தில் கூறப்பட்ட முக்கியமான ஒரு விசயத்தை மறைத்து விட்டனர்.

அவ்விசயமாகிறது :- அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.                             

(அல்குர்ஆன் 33 : 53)

நபியின் மனைவிமார்களை மற்றவர்கள் திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதை அடிப்படையாக வைத்து நபியுடைய மனைவியர் அல்லாத மற்ற பெண்களையும் அவர்களின் கணவன்மார்கள் இறந்துவிட்டால் திருமணம் செய்வது கூடாது என்று சட்டம் எடுப்பார்களா? நிச்சயமாக இக்கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க இயலாது.

நபியுடைய மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்வது கூடாது என்பது எவ்வாறு அவர்களுக்கு மட்டும் உரித்தான சட்டமோ அது போன்றுதான் அவ்வசனத்தில் கூறப்படும் ஏனைய விசயங்களும் நபியவர்களின் வீடுகளிலும், அவர்களின் மனைவியர் விசயத்திலும் அவர்களுக்கு மட்டும் குறிப்பாக கூறப்பட்ட விசயங்கள்தான். இதிலிருந்து பொதுவான சட்டம் எடுப்பது கூடாது.

நபியவர்களின் வீடு அல்லாத மற்ற வீடுகளுக்கு அனுமதியின்றி நுழையலமா? விருந்து வைபவத்தில் பேசிக்கொண்டிருந்து அவர்களுக்குத் தொல்லை தரலாமா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

நபியுடைய வீடுகள் அல்லாத மற்றவர்களின் வீடுகளுக்கும் அனுமதியின்றி நுழைவது கூடாது. விருந்து வைபவத்தில் பேசிக்கொண்டிருந்து அவர்களுக்கு தொல்லை தருவது கூடாது என்பதே நமது நிலைப்பாடாகும்.

ஆனால் அதற்குரிய ஆதாரம் நபியுடைய வீடுகள் மற்றும் அவர்களின் மனைவியர்களுக்கு மட்டும் உரித்தான சட்டங்களைக் கூறும் மேற்கண்ட வசனம் அல்ல. மாறாக பொதுவாகக் கூறப்படும் பிற வசனங்கள் மற்றும் ஹதீஸ்களிலிருந்து தான் அச்சட்டங்களை நாம் எடுக்கின்றோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

(அல்குர்ஆன் 24 : 27, 28, 29)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.  

(நூல் : புகாரி (5232)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.     (நூல் : புகாரி 12)

மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                          ( நூல் : புகாரி 5218)

மேற்கண்ட 24 : 27, 28, 29 வசனங்களிலிருந்தும், இன்ன பிற ஹதீஸ்களில் இருந்தும்தான் பிறருடைய வீடுகளுக்குள் அனுமதி பெற்று நுழைய வேண்டும், அவர்களுக்கு தொல்லை தரும் வகையில் பேசிக்கொண்டிருப்பது கூடாது, அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்வது கூடாது என்று கூறுகிறோம்.

நபியுடைய மனைவிமார்களிடம் மட்டும்தான் திரைக்கு அப்பால் இருந்து கேட்க வேண்டும் என்றால் மற்ற பெண்களிடம் திரையில்லாமல் கேட்பது கூடுமா? என்று கேட்கின்றனர்.

நபியுடைய மனைவிமார்கள் திரையில்லாமல் அந்நிய ஆண்களுடன் பேசினால் அது பெரும்பாவம் ஆகும். ஆனால் பிற பெண்கள் முறையாக பர்தா அணிந்து தனிமையில் இல்லாமல் அந்நிய ஆண்களுடன் பேசினால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

 ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (5233)

இவ்வாறு பல நபித்தோழியர்கள் திரை இல்லாமல் நபி (ஸல்) அவர்களிடமும், இன்ன பிற நபித்தோழர்களிடமும் உரையாடியுள்ளனர்.

ஆனால் நபியுடைய மனைவிமார்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தாலும் சரி அல்லது திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்டவர்களுடன் இருந்தாலும் சரி அவர்கள் அந்நிய ஆண்கள் முன்பு திரையில்லாமல் , அல்லது முகத்தை மறைக்காமல் பேசுவது கூடாது.

அது போன்று நபியுடைய மனைவியர் அல்லாத பிற பெண்கள் பர்தா அணியாமலோ, அல்லது தனிமையிலோ இருந்தால் அவர்கள் திரைக்கு அப்பால் இருந்து அந்நிய ஆண்களுடன் உரையாடினால் அது தவறில்லை. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்தும் வசனத்திலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.                     (நூல் : புகாரி (5232)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.                    

(அல்குர்ஆன் 24 : 58. 59)

மேற்கண்ட வசனங்களில் இருந்து பிற பெண்கள் பர்தா அணியாமலோ, அல்லது தனிமையிலோ இருந்தால் அவர்கள் திரைக்கு அப்பால் இருந்து அந்நிய ஆண்களிடம் பேசிக்கொள்ளலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். நேரடியாகப் பேச வேண்டுமென்றால் பர்தா அணிந்தும், தனிமையில் இல்லாமல் மஹ்ரமானவர்கள் உடனிருக்கும் போதும் மட்டும்தான் பேச வேண்டும்.  ஆனால் நபியுடைய மனைவியர் எந்நிலையிலும் திரைக்கு அப்பால் இருந்துதான் அந்நிய ஆண்களிடம் பேச வேண்டும்.                வளரும் இன்ஷா அல்லாஹ்

 

இறைநம்பிக்கையாளர்கள் யார்?

இறைநம்பிக்கைக்குப் பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள்

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ (15) [الحجرات : 15]

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்.                     (அல்குர்ஆன் 49:15)

இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள்

لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ (28) [آل عمران : 28]

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

(அல்குர்ஆன் 3:28)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 60:8)

அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்கள்

وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (122) [آل عمران : 122]

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 3:122)

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (160) [آل عمران : 160]

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 3:160)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ هَمَّ قَوْمٌ أَنْ يَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ فَكَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَاتَّقُوا اللَّهَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (11) [المائدة : 11]

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்ட போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 5:11)

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (51) [التوبة : 51]

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 9:51)

إِنَّمَا النَّجْوَى مِنَ الشَّيْطَانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا وَلَيْسَ بِضَارِّهِمْ شَيْئًا إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (10) [المجادلة : 10]

இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 58:10)

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ (13) [التغابن : 13]

இறைவனைப்பற்றி கூறினால் பயம் ஏற்படும்

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (4) [الأنفال : 2 - 4]

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

அவர்களே  உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன் 8:2-4)

இறைவழியில் தியாகம் செய்வார்கள்

وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (74) [الأنفال : 74]

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

(அல்குர்ஆன் 8:74)

மார்க்கக் கல்வியை பயில்வார்கள்

وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ (122)  [التوبة : 122]

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.

 (அல்குர்ஆன் 9:122)

வெற்றிபெற்ற இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள்

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11) [المؤمنون : 1 - 11]

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 23:1-11)

அவதூறுகளை நம்பமாட்டார்கள்

لَوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنْفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَذَا إِفْكٌ مُبِينٌ (12) [النور : 12]

இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா?

(அல்குர்ஆன் 24:12)

எதிரிகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள்

وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا (22)  [الأحزاب : 22]

22. நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்டபோது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.      (அல்குர்ஆன் 33:22)

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார்கள்

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10) [الحجرات : 10]

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 49:10)

இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்,அருளுடையவன்

وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ (68) [آل عمران : 68]

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.

(அல்குர்ஆன் 3:68)

وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ (152) [آل عمران : 152]

நம்பிக்கை கொண்டோர் மீது அல்லாஹ் அருளுடையவன்.

(அல்குர்ஆன் 3:152)

இறைநம்பிக்கையாளர்கள் கூலி வீணாகாது

يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ (171) [آل عمران

நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

(அல்குர்ஆன் 3:171)

وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا (146) مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا (147)  [النساء : 145 - 147]

நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:146,147)

குறித்த நேரத்தில் தொழுவார்கள்

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا (103)  [النساء : 103 ، 104]

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது

(அல்குர்ஆன் 4:103)

இறைநம்பிக்கையாளருடன் அல்லாஹ் இருக்கின்றான்

وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ (19) [الأنفال : 19]

நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

 (அல்குர்ஆன் 4:103)

இறைநம்பிக்கையாளர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்

وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (72)  [التوبة : 72]

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:72)

இறைநம்பிக்கையாளர்கள் பரிகாசிக்கப்படுவார்கள்

الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ (79)  [التوبة : 79]

தாராளமாக (நல்வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 9:79)

இறைநம்பிக்கையாளர்களின் உயிர், செல்வங்களை அல்லாஹ் வாங்கியுள்ளான்

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (111)  [التوبة : 111]

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். . அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும், குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.

 (அல்குர்ஆன் 9:111)

இறைநம்பிக்கையாளர்கள் வெற்றிபெறுவார்கள்

ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا كَذَلِكَ حَقًّا عَلَيْنَا نُنْجِ الْمُؤْمِنِينَ (103) [يونس : 103]

பின்னர் நமது தூதர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றினோம். நம்பிக்கை கொண்டோரை இவ்வாறு காப்பாற்றுவது நமது கடமை.                        (அல்குர்ஆன் 10:103)

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87) فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ (88)  [الأنبياء : 87 - 89]

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.                   (அல்குர்ஆன் 21:87,89)

இணைவைப்பவர்களை திருணம் செய்யமாட்டார்கள்

الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ (3)  [النور : 3]

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 24:3)

அல்லாஹ்வுக்கும் அவன் துதருக்கும் முழுமையாக கட்டுப்படுவார்கள்

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (51) [النور : 51]

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.            (அல்குர்ஆன் 24:51)

இறை உதவி நிச்சயம் உண்டு

وَلَقَدْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُمْ بِالْبَيِّنَاتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ (47) [الروم : 47]

நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.                             (அல்குர்ஆன் 30:47)

வாக்கை நிறைவேற்ற எதிர்பார்த்திருப்பார்கள்

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا (23) لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (24) [الأحزاب : 23 ، 24]

அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.

(அல்குர்ஆன் 33:23,24)

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் முக்காடுகளை அணிந்து செல்வார்கள்

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (59) [الأحزاب : 59]

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (யாரென) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.''அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

நல்ல அறிவுரைகளை ஏற்று நடப்பார்கள்

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ (55) [الذاريات : 55]

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.                            

(அல்குர்ஆன் 60:55)

 

கேள்வி பதில்

தொழுகையில் ருகூவில் இருந்து எழும்போது சவூதியில் உள்ள பல அறிஞர்கள் கை கட்டியே இருக்கிறார்கள் அவர்களிடம் ஆதாரங்கள் கேட்டால் நாம் எந்த ஹதீஸைக் காட்டுகிறோமோ அதையே காட்டுகிறார்கள் ...நாம் மொழி பெயர்ப்பு செய்து விளங்கி வைத்திருப்பது தவறா அல்லது அவர்கள் செய்வது தவறா என்பதை ஹதீஸ் விளக்கத்துடன் பதில் தரவும்.

பாஷில் பின் அப்துல்லாஹ்- கிளியனூர்

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன்பிறகு சஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். சஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிதுநேர நிலையின் போது கைகளைத் தொங்கவிட வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் தற்காலத்தில் வந்தவரான அப்துல்லாஹ் பின் பாஸ் என்ற அறிஞர் இந்தநிலையில் கைகைள கீழே தொங்கவிடாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவூதி அரசாங்கத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இதை சவூதி மக்களில் கனிசமானவர்கள் பின்பற்றுகின்றனர். விடுபட்ட நபிவழி என்ற பெயரில் தமிழ் உட்பட பல மொழிகளில் கோடிக்கணக்கான இலவச புத்தகத்தை அச்சிட்டு சவூதி அரசாங்கத்தின் மூலம் வினியோகம் செய்தனர். ஜாக் இயக்கத்துக்கும் தமிழில் இந்த நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் 1990ஆம் ஆண்டு சவூதி மூலம் அனுப்பப்பட்டன. ஆனால் ஜாக் இயக்கம் இவற்றை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டதால் தமிழகத்தில் இது அவ்வளவாக பரவவில்லை.

இந்தக் கூற்றுக்கு ஏற்கத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் யார் கூறினாலும் அதைக்கடைப்பிடிப்பது ஒரு முஃமினுடைய கடமை. ஆனால் இந்தச் சட்டத்தை கூறிய இவரும் இவரைப் பின்பற்றி இச்சட்டத்தைக் கூறுபவர்களும் தொழுகை பற்றி வந்துள்ள அனைத்து நபிமொழிகளையும் சரியாக ஆராயவில்லை. ஒரு நபிமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டதின் அடிப்படையில் இப்படிப்பட்ட தவறான சட்டத்தை மக்களிடம் வைத்துள்ளனர்.

ருகூவுக்கு பிறகுள்ள நிலையில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்ற கருத்தில் நேரடியாக ஒரு நபிமொழி கூட இல்லை. இவர்கள் இந்த வாதத்திற்கு பின்வரும் நபிமொழியை மட்டுமே ஆதாரம் காட்டுகின்றனர்.

877أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ الْعَنْبَرِيِّ وَقَيْسِ بْنِ سُلَيْمٍ الْعَنْبَرِيِّ قَالَا حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ وَائِلٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல் : நஸாயீ (877)

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் வலது கையை இடதுகையின் மீது வைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ருகூவுக்குப் பிறகு நிலைக்கு வருவதால் இந்தப் பொதுவான ஹதீஸ் அடிப்படையில் இந்த நிலையிலும் கைகளைக் கட்ட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

நிற்குதல் என்பது தொழுகையை ஆரம்பித்தவுடன் நிற்பதைத் தான் குறிக்கும் என்பதை இவர்கள் விளங்காததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

10087حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ تَرَكَ النَّاسُ ثَلَاثَةً مِمَّا كَانَ يَعْمَلُ بِهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا ثُمَّ سَكَتَ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيَّةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் கைகளை உயர்த்துவார்கள். பிறகு ஓதுவதை ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மது (10087)

நிற்கும் போது கைகளைக் கட்டிக் கொள்வார்கள் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் ருகூவுக்குப் பிறகு நிற்கும் போதும் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இவர்களின் வாதப்படி மேற்கண்ட ஹதீஸையும் புரிந்து கொள்வார்களா? அதாவது ருகூவில் இருந்து எழுந்து நிற்கும் போது அதில் குர்ஆன் ஓதுவார்களா?

இந்த ஹதீஸிலும் நின்றால் என்று பொதுவாகத் தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை ருகூவைக் குறிக்காது. குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையை மட்டுமே குறிக்கும் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்.

 வலது கையை இடது கையின் மீது வைத்து கைகட்டுவது தொடர்பாக வரும் நபிமொழியைப் படித்தால் இந்த செயலை குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் செய்யவேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் செய்யக் கூடாது என்பதை தெளிவாக அறியலாம்.

608حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ وَمَوْلًى لَهُمْ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَصَفَ هَمَّامٌ حِيَالَ أُذُنَيْهِ ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنْ الثَّوْبِ ثُمَّ رَفَعَهُمَا ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَلَمَّا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ فَلَمَّا سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ رواه مسلم

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன். பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள்"ருகூஉ'ச் செய்ய விரும்பிய போது தம் கைகளை ஆடையிலிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிரும் போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்றுகூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தாச்செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(களை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே(நெற்றியை வைத்து) சஜ்தாச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 671

இந்த நபிமொழி தொழும் முறையை விவரிக்கின்றது. வலது கையை இடது கையின்மீது எப்போது வைக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விவரிக்கின்றது. நபி (ஸல்)அவர்கள் முதல் நிலையில் தான் கைகளைக் கட்டிய நிலையில் நின்றுள்ளார்கள்.இதே செய்தி ருகூவுக்குப் பிறகுள்ள நிலையைப் பற்றியும் பேசுகின்றது. ஆனால் இங்கே நபி (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டினார்கள் என்று கூறப்படவில்லை.

எனவே குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் தான் கைகளை கட்ட வேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளை கட்டாமல் தொங்க விட வேண்டும். இதுதான் நபிவழி. இதற்கு மாற்றமாக ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளைக் கட்டினால் அது நபியவர்கள் செய்து காட்டிய தொழுகைக்கு மாற்றமான பித்அத்தானசெயலாகும்.

 

காது குத்தாமல் இருப்பதுதான் சிறந்தது என்று முடிவெடுத்து என் மகளுக்கு இதுவரை காதுகுத்தாமல் இருந்து வருகிறேன் இது மார்க்க அடிப்படையில் சிறந்ததா?

மு.சேக்அப்துல்லா பார்த்திபனூர்

திருக்குர்ஆனின் வசனங்களைப் படித்தால் காது குத்தாமல்தான் இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.

அல்லாஹ் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்தாகக் கூறுகிறான்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

(அல்குர்ஆன் 95:4)

மனிதனை அழகிய வடிவில் அல்லாஹ் படைத்துள்ளான் என்றால் வெள்ளையாக படைத்துள்ளான் என்பது பொருளல்ல. எந்த உயிரனத்திற்கும் இல்லாத வகையில் மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு கை எங்கு இருப்பது சிறந்ததோ அதை அந்த இடத்தில் வைத்துள்ளான். வாய் எங்கு இருப்பது சரியாக இருக்குமோ அந்த இடத்தில் அதை வைத்துள்ளான். இப்படி மனிதனின் உறுப்புகளை அதனுடைய இடத்தில் வைத்து அவனை அழகிய படைப்பாக படைத்துள்ளான் என்பதுதான் திருக்குர்ஆனின் கருத்தாகும்.

மனிதனின் உடலில் பல இடங்களில் ஓட்டை வைத்து படைத்துள்ளான். வாய், காது, மூக்கு என்று பல இடங்களில் ஓட்டை வைத்த இறைவனுக்கு காதில் ஒரு ஓட்டை போடுவது கஷ்டமான காரியம் அல்ல. எனினும் அதில் ஓட்டை போடாமல் படைத்ததே அங்கு ஓட்டை போட வேண்டியதில்லை என்று இறைவன் எண்ணியுள்ளான் என்பதை விளக்கிறது.

சில இடங்களில் நபி (ஸல்) உடல் உறுப்புகளை வெட்டச் சொல்லியுள்ளார்கள். உதரணமாக கத்னா செய்தல். இதுபோன்று நபிகளார் தெளிவாகச் சொல்லியிருந்தால் அதுவும் இறைவனின் கட்டளை என்ற அடிப்படையில் செய்யலாம். ஆனால் இவ்வாறு காது குத்த திருக்குர்ஆனிலோ நபிமொழிகளிலோ ஆதாரம் இல்லாததால் காது குத்தாமல் இருப்பதே சிறந்தது.

மேலும் இறைவனின் படைப்பில் மாற்றம் செய்வது ஷைத்தானின் வேலை என்றும் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.         

(அல்குர்ஆன் 4:118,119)

அல்லாஹுவின் உதவியால் நான் ஹதீஸ் கித்தாபுகளை படித்துகொண்டு வருகிறேன் சில கித்தாபுகளில் அந்த ஆசிரியர் ஸஹீஹான ஹதீஸ் என்று கூறிய விஷயம் சில நேரங்களில் லையீஃபன ஹதீஸ் என்று தெரிய வருகின்றது ,நான் அவ்வபோது நான் படிக்கும் ஹதீஸ்களை முக நூல் மற்றும் ஷ்லீணீtsணீஜீஜீயில் பதிகிறேன், சில சகோ அது லையீஃபன ஹதீஸ் என்று கூறுவர்கள் அப்போது நான் இல்லை இது ஸஹீஹனவையான ஹதீஸ் என்று அந்த ஆசிரியரே கூறி இருக்கிறார்கள் என்று கூறுவேன் அப்போது ஹதீஸ் கலை அறிஞர்கள் உடைய விமர்சனங்கள் காட்டுவார்கள் நான் அதை வாபஸ் வாங்கி கொள்ளுவேன்.

நான் எப்படி ஒரு ஹதீஸ் சரியானதா என்பதை தீர்மானிப்பது

 

அந்த ஹதீஸ் கிதாபில் உள்ள ஆசிரியர் சரி கண்ட ஹதீஸையா? அல்லது ஹதீஸ் கலை அறிஞர்கள் கருத்தையா ? ஹதீஸ் கலை என்றால் நான் எந்த கித்தாபுகள் வைத்து பார்க்க வேண்டும் என்பதை சொல்லவும்

முஹம்மது பாசில், மின்அஞ்சல் வழியாக

நபிமொழித் தொகுப்பு நுல்களில் ஒரு அறிஞர் ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதை மட்டும் வைத்து அந்த செய்தி ஆதாரப்பூர்வமானது என்று நாம் முடி செய்து விடமுடியாது. அது ஆதாரப்பூர்வமானதாகவும் இருக்கலாம். பலவீனமாதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகக்கூட இருக்கலாம்.

இருக்கும் செய்திகளில் அதிகம் ஆதாரப்பூர்வமான செய்திகள் இடம் பெறும் நுல்களில் முதலிடம் புகாரி, முஸ்லிமைக் குறிப்பிடலாம். இதிலும் கூட பலவீனமான செய்திகள் உண்டு. அறிவிப்பாளர் விமர்சனம் செய்யப்பட்ட செய்திகள் உண்டு.

உதரணமாக புகாரியின் அறிவிப்பாளரில் நுற்றுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளரை இமாம் தாரகுத்னீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (புகாரியின் விரிவுரை நுலான பத்ஹீல் பாரியின் முன்னுரையில் இதைக் காணலாம்.)

எனவே நுலாசிரியரின் முடிவை மட்டும் வைத்து ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று முடிவு செய்ய முடியாது. இது தொடர்பாக மற்ற அறிஞர்கள் கூறிய கருத்துக்களையும் வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

ஹதீஸ் கலையைப் பற்றி அரபி மொழியில் ஏரளமான நூல்கள் உள்ளன. அவற்றில் பின்வரும் நூல்கள் சிறந்த நூல்களாகக் கருதப்படுகிறது.

تدريب الراوي في شرح تقريب النووي

نخبة الفكر في مصطلح أهل الأثر- ابن حجر العسقلاني

معرفة أنواع علوم الحديث، ويُعرف بمقدمة ابن الصلاح

 

சத்தியத்தை சொல்லும் முறைகள்

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு யாரையும் வணங்குதல் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக் கோட்பாடாகும்.

இந்த சத்தியக் கொள்கையை மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எண்ணற்ற இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான். இறைவனால் அனுப்பபட்ட எல்லா இறைத்தூதர்களும் இந்தக் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்தார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

                                                திருக்குர்ஆன் 16 36

இறைத்தூதர்களில் இறுதியானவராக முஹம்மது ஸல் அவர்களை மக்களிடையே அனுப்பி இந்த கொள்கையை பிரச்சாரம் செய்யப் பணித்தான்.

முஹம்மது நபிக்கு பிறகு எந்த இறைத்தூதரும் வரமாட்டார் என்பதால் அவர் செய்த சத்தியப் பிரச்சாரப் பணியை  அவருடைய சமுதாயத்தாராகிய நாம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் விதித்து, அதனால் சிறந்த சமுதாயம் என்ற அந்தஸ்தை அடைவீர்கள் என்றும்  அல்லாஹ் தெரிவித்துள்ளான்.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!                            திருக்குர்ஆன் 3 110

நல்லதை ஏவி தீயதைத் தடுக்கும் சத்தியப் பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று இவ்வசனம் கட்டளையிடுகிறது.

இதை நபிகள் நாயகமும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

"என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்".

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர், புகாரி 3461

சத்தியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியே உலகில் சிறந்த, மிக அழகிய பணி என்று அல்லாஹ் பாராட்டுகிறான்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

                                                                        திருக்குர்ஆன் 41 33

சத்தியத்தை மக்களிடையே எடுத்துரைப்பது அழகிய பணி என்பதோடு நிறுத்திவிடாமல் அதை எவ்வாறு அழகிய முறையில் சொல்வது என பல வழிமுறைகளையும் இறைவன் கற்றுத் தந்துள்ளான்.

திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தனையுடன் படிப்பவர்கள் சத்தியப் பிரச்சாரத்திற்கு பல வழிமுறைகள் கையாளப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.

சத்தியப் பிரச்சாரம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியமாகும். எந்தெந்த வழிமுறைகளில் சத்தியத்தைச் சொல்லலாம் என்று அறிந்து அதன் வழியில் செயல்படும் போது மக்களிடையே உளப்பூர்வமான தாக்கத்தையும் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

அதே வேளை நாம் செய்யும் பிரச்சார முறைகள் குர்ஆனும் நபிமொழியும் போதிப்பவை தானா? என்று நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளவும் இது உதவும்.

அன்பான வார்த்தைகள்

நாம் சொல்லும் சத்தியத்தை மக்கள் ஏற்க வேண்டும் எனில் முதலில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். அவர்களின் கவனத்திற்குச் செல்லும் வகையில் நமது பிரச்சாரம் அமைந்தால்தான் அவர்களை சத்தியத்தின் பால் ஈர்க்க முடியும். அவர்களின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதற்கும், உள்ளத்தளவில் நம்மோடு அவர்களை நெருக்கமாக்கி வைப்பதற்கும் அன்பான வார்த்தைகள் உதவுகின்றன.

அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி சத்தியத்தைச் சொல்லும்போது அவர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்க இயலுகிறது. அதற்கு மாறாக வசவு வார்த்தைகளைப் பயன்படுத்தினால் மக்கள் அதிலேயே பிரச்சாரத்தை விட்டும் விலகி விடுகிறார்கள். இவர்கள் திட்டுகிறார்கள் என்று தங்கள் கவனத்தை ஒரு போதும் பிரச்சாரம் செய்வோரின் பக்கம் திருப்ப மாட்டார்கள். சொல்லப்படும் சத்தியக் கருத்துக்களை கவனிக்கவோ, உள்வாங்கவோ மாட்டார்கள்.

எனவே பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வார்த்தைகளை, வசவுகளை முற்றிலுமாக தவிர்த்து நம்மீது கவனத்தை திருப்பும் வகையில் அன்பான மென்மையான, வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த அணுகுமுறையை இறைத்தூதர்களின் பிரச்சாரத்திலிருந்து அறிகிறோம்.

எல்லா இறைத்தூதர்களும் தங்களது பிரச்சாரத்தின் போது மக்களை தங்களளவில் ஈர்ப்பதற்காக என் சமுதாயமே என் சமுதாயமே என்று நெருக்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் அழைத்து பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்பதை திருக்குர்ஆனில் அதிகமாகவே காண்கிறோம்.

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னிடம் கூட இது போன்ற அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு அல்லாஹ் மூஸா அலை அவர்களுக்கு கூறியுள்ளான்.

"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)

                                                            திருக்குர்ஆன் 20 44

மக்களை நமது பிரச்சாரத்தின் பால் ஈர்க்க அன்பான வார்த்தைகள் பெரிதும் உதவும் இயலும் என்பதை இதிலிருந்து உணரலாம்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.             திருக்குர்ஆன் 16 125

ஆர்வமூட்டும் பரிசுகள்

சத்தியத்தைப் பிரச்சாரம் பண்ணும் போது அதை ஏற்பதால் மக்களுக்குக் கிடைக்கும் இம்மை, மறுமை பலன்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொதுவாகவே இதைச் செய்தால் இன்ன பரிசு கிடைக்கும் என்று அறிவித்தால் பரிசுப் பொருளை பெறும் நோக்கில் குறிப்பிட்ட செயலை செய்யும் ஆர்வம் மக்களுக்கு அதிகரிப்பது இயல்பான ஒன்றாகும்.

அந்த வகையில் சத்தியத்தை ஏற்பதால் கிடைக்கவிருக்கும் பரிசுகளை, வெகுமதிகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் போது சத்தியத்தை ஏற்க மக்கள் ஆர்வம் கொள்வார்கள்.

சத்தியத்தை ஏற்றால் வானம் பூமியை விட பிரம்மாண்டமான சொர்க்கம் கிடைக்கும் என அல்லாஹ் ஆர்வமூட்டி சத்தியத்தை நோக்கி மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.    திருக்குர்ஆன் 3 133

தூதருக்கு கட்டுப்பட்டால் அல்லாஹ்வின் மன்னிப்பு என்ற பரிசு கிடைக்கும் என அல்லாஹ் ஆர்வமூட்டி அழைக்கிறான்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3 31

இறைவனை அஞ்சி நடந்தால் இறையருள் கிடைக்கும் என்று பரிசு அறிவித்து அல்லாஹ் மக்களை அழைக்கிறான்

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7 96

நபி நூஹ் அலை அவர்கள் தம் சமுதாய மக்களை சத்தியத்தை நோக்கி அழைக்கும் போது நீங்கள் புரிந்த குற்றச் செயலுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள் என்று கூறி இவ்வாறு செய்யும் போது பாவ மன்னிப்பு, மழை, பொருளாதாரம், மக்கள் செல்வம் ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு பரிசாகத்  தருவான் என்று ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்ததாக திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.

பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன். உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்.        குர்ஆன் 71:9,10,11,12

வளரும் இன்ஷாஅல்லாஹ்

November 20, 2014, 6:32 PM

அக்டோபர் 2014

பாஜகவின் தொடர் தோல்விகள்

காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்காலும், ஒழுங்கற்ற ஆட்சியாலும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. எதிர்கட்சியாக இருந்த போது காங்கிரஸை எந்த விஷயங்களுக்காக விமர்சனம் செய்ததோ அதே காரியத்தை இன்று பாஜக செய்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படிக்க October 8, 2014, 4:42 PM

செப்டம்பர் 2014

பூரண மதுவிலக்கு வேண்டும்

"மாநில அரசு உணவுச் சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும் தேவையானவற்றைத் தனது தலையாய கடமையாகக் கருத வேண்டும்.

தொடர்ந்து படிக்க September 9, 2014, 3:45 PM

ஆகஸ்ட் 2014

தலையங்கம்

தொடரட்டும் இறையச்சம்

இறைவனின் பேரருளால் அருள்மழை பொழியும் ரமலான் மாதத்தை நிறைவு செய்துள்ளோம். இம்மாதத்தில் நம்மால் முடிந்த அளவு இறைவணக்கத்தையும் நல்லறங்களையும் செய்துள்ளோம். வேறு எந்த மாதங்களிலும் செய்யாத அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டதோடு ஷைத்தானின் தீய செயல்களிலிருந்து விடுபட்டும் இருந்துள்ளோம்.

தொடர்ந்து படிக்க October 29, 2014, 5:59 PM

ஜுலை 2014

ஹிஜாப் என்றால் என்ன?

தொடர்  10

அப்துந்நாஸர் எம்.ஐ.எஸ்.ஸி

மனிதநேயத்தை வளர்க்க வேண்டிய மதத்தலைவர்கள் இன்று மத மோதல்களை உருவாக்கி பிறமதத்தவர்களை அழிக்கும் செயலைத் தொடர்ந்து செய்து வருகின்றன.

தொடர்ந்து படிக்க October 26, 2014, 12:26 PM

ஜுன் 2014

மோடி அலையா? காங்கிரஸ் எதிர்ப்பு சூறாவளியா?

இந்தியாவில் 16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

தொடர்ந்து படிக்க June 4, 2014, 6:31 PM

மே 2014

தேர்தலும் தேர்தல் கமிஷனும்

ஒரு வழியாக தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலுக்காக பல ஆயிரம் கோடிகள் செலவு செய்துள்ளார்கள் வேட்பாளர்கள். அதை அறுவடை செய்யக் காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க April 30, 2014, 5:23 PM

ஏப்ரல் 2014

முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு?

வரும் நாடளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஐமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், அதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. திமுக, பாஜக ஆகிய கட்சிகள் பல சிறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன.

தொடர்ந்து படிக்க April 7, 2014, 6:18 PM

மார்ச் 2014

தலையங்கம்

தொடரும் அநீதிகள்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதி மன்றம் நீதி(?) வழங்கியுள்ளது.

தொடர்ந்து படிக்க March 1, 2014, 6:04 PM

பிப்ரவரி 2014

தூய்மையைப் பேணாத மக்களும் அரசும்

மனிதன் நோயின்றி வாழ்வதற்கு தூய்மை மிகவும் அவசியமாகும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மை ஈமானின் ஓர் அம்சம் என்று கூறியுள்ளார்கள்.

தொடர்ந்து படிக்க February 13, 2014, 5:47 PM

ஜனவரி 2014

ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது

ஓரினச்சேர்க்கை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு, அதற்கு எதிராக உச்சநீதி மன்றத் தீர்ப்பு என்று பரபரப்பாக செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தொடர்ந்து படிக்க February 13, 2014, 5:31 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top