தீன்குலப்பெண்மணி ஜூன்2012
தீன்குலப்பெண்மணி ஜூன்2012அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?
ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார். மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்; நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா.
ஒரு வருடத்தை இவர் பூர்த்தி செய்துள்ள நிலையில் தன் ஆட்சியின் சாதனையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக சட்டசபை நாட்களை இரண்டு நாட்கள் அதிகமாக்கி ஜால்ராக்களை வைத்து முதல்வர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்ளும் மமக பேராசிரியர், புகழின் உச்சத்திற்கே போய் பேசியுள்ளார். ஓய்வின்றி உறக்கமின்றி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் என்று ஜவாஹிருல்லாஹ் பேசும் போது, ஆளும் கட்சியின் மேசை தட்டுதல் விண்ணைத் தொட்டது. மேலும் நேரடியாகவும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும் கூறி வந்துள்ளார்.
ஓய்வின்றி உறக்கமின்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் என்று புகழ்ந்த ஜவாஹிருல்லாஹ், ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பேன் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இடஒதுக்கீட்டின் அளவை இதுவரை உயர்த்தினாரா? அல்லது அது தொடர்பாக ஒரு வார்த்தையாவது பேசினாரா?
பிறகு எதற்காக இந்த ஜால்ரா?
ஜெயா அரசின் ஒரு வருட சாதனைகள்தான் என்ன?
விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், பசுமைவீடுகள், மின்விசிறி, கறவைமாடுகள், விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டம், தாலிக்குத் தங்கம் என்று தங்கள் சாதனைகளை கூறியுள்ளார்கள்.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசங்கள் கிடைக்கும் என்று அறிவித்தவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் ஏராளமான புதிய விதிகளைச் சேர்த்து ஏராளமானோருக்குக் கிடைக்காமல் இருக்கும் வேலை செய்தனர்.
தமிழகத்தில் ஒருகோடிக்கு மேல் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்த இலவசங்கள் வழங்கினார்களா? இல்லை. இதில் பத்து சதவிகித மக்களுக்குக்கூட வழங்கவில்லை. விளம்பரத்திற்கு பத்து நபர்களுக்கு கொடுத்துவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறார்கள்.
ஜெயா அரசின் வேதனைகள் என்ன?
மூன்று மாதத்தில் மின்வெட்டைச் சரிசெய்வேன் என்று கூறினார். ஆனால் வருடம் ஒன்று ஓடிவிட்டது. மின்வெட்டு அதிகரித்தது தான் மிச்சம்.
மின்வெட்டு அதிகரித்ததுடன் மின்கட்டணமும் கடுமையாக உயர்வு
மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலை கடும் உயர்வு
பத்திரக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு
வரலாறு காணாத அளவுக்கு பேருந்து கட்டண உயர்வு
பல பொருட்களுக்கு வாட் வரி உயர்வு
இப்படி ஏராளமான பொருட்களின் விலை உயர்வை இந்த ஓராண்டு கால ஜெயா அரசின் சாதனையாகக் கூறலாம்.
மேலும் வங்கிக் கொள்ளைகள், கொலைகள், வழிப்பறிகள் என்று தொடராக சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பது.
இந்த விலை உயர்வு தொடர்பாக குறைநிறைகளைப் பேச சட்டசபையில் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பூட்டு.
அமைச்சர்கள் வாய்திறக்க வாய்பில்லாத நிலை.
அனைத்துக்குமே முதல்வர் 110 விதியின் கீழ் அறிக்கை வாசிக்கும் நிலை.
குறை நிறைகளைத் தெரிந்து கொள்ள வாரத்திற்கு ஒரு முறை பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த முதல்வர் இரண்டு மூன்று முறை சந்தித்ததோடு நிறுத்திக் கொண்ட சாதனை.
அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நாள்தோறும் பந்தாடிவருவது.
இது போன்ற சாதனைகள்தான் ஜெயல்லிதா அரசில் ஓராண்டில் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில் நல்லாட்சி செய்ய முதல்வர் விரும்பினால் சட்டசபை குறைநிறைகளை விவாதிக்கும் இடமாக மாற இடமளிக்க வேண்டும். ஜால்ரா தட்டிகளை அடக்கி வைக்க வேண்டும்.
மக்களின் நலன் பயக்கும் திட்டங்களைத் தீட்டுவதோடு அதனைச் செயல்படுத்த வேண்டும். நேர்மையாக விமர்சனம் செய்யும் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் படித்து அதன் உண்மை நிலைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜால்ரா தட்டிகளை மட்டும் வைத்து ஆட்சி நடத்த எண்ணினால் திமுகவிற்கு ஏற்பட்ட நிலையைவிட மோசமான நிலையை அதிமுக சந்திக்க நேரிடும்.
அல்லாஹ்வை எப்படி நம்புவது? தொடர் :5
திருக்குர்ஆனை தாயத்தில் எழுதி தொங்கவிடலாமா?
உரை : பி. ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை
அல்லாஹ்வின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் அந்த வார்த்தைக்கு நோயை நீக்கும் ஆற்றல் உள்ளது என்று நம்பினால் அது அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாகும். அதற்கு மாற்றமாக இன்று மனிதர்கள் அல்லாஹ்வின் வார்த்தைக்கு கொடுக்கும் மதிப்பை மனிதனுக்குக் கொடுத்து அவர்களுக்கும் நோயை நீக்கும் தன்மை உள்ளதாக நினைக்கின்றோம்.
இன்னின்னாரிடத்தில் சென்று ஓதிப் பார்த்தால் நோய் நீங்கும் என்று நினைத்தால் இது புரோகிதம் ஆகும். இப்படி நினைக்கும் போது அல்லாஹ்வின் வசனங்களுக்கு சக்தி இருப்பதாகக் கருதாமல் அதை ஓதும் மனிதனுக்கு விஷேச சக்தி உள்ளதாக கருதும் நிலை இதனால் ஏற்படும்.
சாதாரண நோய்களை நீக்கும் மாத்திரைகளை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். நோய் ஏற்படும் போது சிறிய நோய்களுக்கு சின்ன சின்ன நோய் நிவாரணிகளை இன்றைய உலகில் நாம் பயன்படுத்தி வருவது போல் நோய் ஏற்படும் போது ஓதும் சிறிய சூராக்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் வார்த்தையின் மூலம் ஓதிப் பார்ப்பதற்கு ஏராளமான சிறப்புக்கள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நோய் நிவாரணத்திற்கு ஓதிப் பார்ப்பதென்பது சிறந்ததா? என்றால் அது உயர்ந்த நிûயில் உள்ளதா என்றால் இது தான் ஈமானில் தாழ்ந்த பலகீனமான நிலையாகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள். ஓதிப் பார்க்காமல் இருப்பவர்களுக்குரிய நிலைமையைப் பற்றிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படி நமக்கு கற்றுத் தருகின்றார்கள் என்பதைப் பாருங்கள்:
விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேர்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத் தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை நான் கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். அப்போது, இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை நான் பார்த்தேன். மீண்டும் என்னிடம், இங்கும் இங்கும் பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, ""இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் ""நாமோ இறைவனுக்கு இணைகற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர் என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது.
அப்போது அந்த எழுபதாயிரம் பேர்களை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:
அவர்கள், (விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்க மாட்டார்கள்; தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டு விட்டார். என்று சொன்னார்கள்.
ஆதாரம் : புகாரி 5752
எடுத்த காரியத்தை பூனை குறுக்கே பாய்ந்ததற்காகவோ மற்ற சகுனங்களைப் பார்த்தோ அவைகளை சகுனமாகக் கருதக் கூடாது. நபிகள் நாயகம் காலம் முதல் மறுமை நாள் வரை உள்ள கோடானு கோடி மக்களில் நபிகளாரின் சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர்கள் தான் விசாரணையின்றி சுவனம் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமது வாழ்க்கையில் ஓதிப்பார்த்தவராகவோ அல்லது சகுனம் பார்த்தவர்களாகவோ நாம் இருந்திருப்போம். இப்படி ஓதி பார்ப்பது சிறப்பு என்று நினைத்து விடக் கூடாது இந்த செயல்களுடன் தொடர்பு அற்றவர்கள் தான் அந்த எழுபதாயிரத்தில் அடங்குவார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மறுமையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் நபித் தோழர்களின் நிலை
உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். மறுமையில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் நபித் தோழர்களின் அளவில்லா ஆசையை இவரின் இந்தச் செயலின் மூலம் நாம் பார்க்க முடிகிறது. உக்காஷா (ரலி) அவர்களைப் பொறுத்தவரை இந்தச் செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் நபிகளார் இவ்வாறு விளக்கிக் கூறிய பின்னர் நானும் அதில் ஒருவனா என்று கேட்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. மற்றொரு நபித்தோழர் எழுந்து அவரும் உக்காஷா (ரலி) அவர்களுக்குக் கிடைத்த அந்த அந்தஸ்து தனக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார். என்று சொன்னார்கள். இதில் இருந்து அல்லாஹ்வின் தூதருக்கு ஒருவர்தான் என்று வஹீ வந்தது அதனால் தான் அவர்கள் உக்காஷா முந்திவிட்டார்கள் என்று பிறகு கேட்ட மனிதருக்கு விடையளித்தார்கள்.
நோய் நிவாரணத்திற்காக வேண்டி ஓதிக் கழுத்தில் கட்டிக் கொள்ளலாமா?
நோயில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி தாயத்துக்கட்டுதல், தட்டுகளில் எழுதிக் குடித்தல், பேப்பர்களில் எழுதிய அதை வெள்ளிக் கூடுகளில் வைத்துக் கழுத்தில் கட்டிக் கொள்ளுதல் போன்றவற்றிக்கு மார்க்கத்தில் எந்த ஒரு அனுமதியுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்ய ஒன்பது நபர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தினர் வந்த போது அவர்களில் ஒருவருக்கு மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் உறுதிப் பிரமாணம் செய்யவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதரே ஒன்பது பேரில் அனைவர்களுக்கும் உறுதிப் பிரமாணம் அளித்து விட்டு இவருக்கு மாத்திரம் ஏன் உறுதிப் பிரமாணம் செய்து கொடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது? அப்போது அவரின் மீது தாயத்து இருக்கிறது என்று கூறி தம்முடைய கையை நுழைத்து அந்தத் தாயத்தை அறுத்த பின்பு அவருக்கு உறுதி மொழி கொடுத்தார்கள் பின்பு கூறினார்கள் யார் தாயத்துக் கட்டுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்.
ஆதாரம் அஹ்மத் 16781
தாயத்துக் கட்டினால் அவருக்கு அதனால் நிவாரணம் ஏற்பட்டாலும் அந்த தாயத்தால் தான் நிவாரணம் ஏற்படுகிறது என்று அவருக்கு நம்பிக்கை ஏற்படுமே தவிர அல்லாஹ்தான் அவருக்கு நிவாரணத்தை ஏற்படுத்தினான் என்று அவர் நம்பிக்கை கொள்ள மாட்டார். இதனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சக்திக்கு அப்பால் ஒரு சக்கி இருக்கும் என்று மனிதன் நினைக்கும் போது இணைவைப்பின் பால் மிக இலகுவாக அவன் சாய்ந்து விடுவதால் இது போன்று செயல்படுவதைத் தடைசெய்தார்கள்.
திருமறைக் குர்ஆனின் தோற்றுவாய் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப் பார்ப்பதற்குத்தான் மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அதை ஓதிக் கழுத்தில் கட்டிக் கொள்வதற்கு அனுமதியில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் எதையாவது ஒன்றைத் தொங்க விடுகிறாரோ அவர் அதன் பால் பொறுப்புச் சாட்டப்படுவார்.
ஆதாரம் : திர்மிதீ
எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆளானாலும் கையில் கட்டிக் கொள்வதற்கோ, கழுத்தில் தாயத்துப் போடுவதற்கோ, தோள் பட்டையில் போடுவதற்கோ, இடுப்பில் கட்டிக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்த அனுமதியுமில்லை. அவ்வாறு செய்வார்களானால் அவர்கள் பாவியாகி விடுவார்கள். நோய் ஏற்பட்டால் நோய்க்கு மருத்துவம் செய்ய வேண்டும் அல்லது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பாத்திஹா, குல் எனத் துவங்கும் மூன்று சூறாக்களை ஓதிக் கொள்ளலாம்.
மற்றும் சில பிரார்த்தனைகளையும் ஓதிக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
தாயத்துப் போடுவதற்கு எள்ளளவிற்கும் அனுமதியில்லை. சில நேரங்களில் அல்லாஹ் சோதனைக்காக நமது ஈமான் எந்த அளவுக்கு அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் ஆற்றல் உள்ளவன் என்பதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக வேண்டி இந்த இந்த தீய செயலில் நன்மை இருப்பது போன்று காட்டி விடுவான். ஒருவர் தாயத்தைக் கட்டி இருப்பதால் அவருக்கு சுகம் அளித்து விடுவான். இதைப் பார்த்த நாம் தாயத்திற்கு இப்படி ஒரு சக்தி இருப்பதாக நம்புவோம். இப்படி நாம் நினைப்பதற்காக ஒன்றிரண்டை அல்லாஹ் விதி விலக்காகக் காட்டுவான்.
எனவே அவ்வாறு செயல்படுதை விட்டு விட்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ள பிரார்த்தனைகளில் ஏதாவது ஒன்றை மனனம் செய்து வைத்துக் கொண்டு நோய் ஏற்படும் போது ஓதி வரவேண்டும். அந்தப் பிரார்த்தனையை அரபு மொழியில்தான் கேட்க வேண்டும் என்று இல்லை முடியுமானால் மனனம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதன் அர்த்தத்தை விளங்கி வைத்து அதில் உள்ளவாறும் பிரார்த்திக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாயில் இருந்து வந்த அதே வார்த்தையைச் சொன்னால் அதற்கு என்று தனியான ஒரு வலிமை உள்ளது. மனனம் செய்ய முடியவில்லையென்றால் அதனுடைய அர்த்தத்தை தமிழில் சொன்னால் அல்லாஹ் மனிதர்களின் பலவீனத்தை அறிந்து கொண்டவன் அவன் ஏற்றுக் கொள்வான்.
நபி (ஸல்) அவர்கள் இன்னொரு பிரார்த்தனையை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் ""அபூ ஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ""அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), ""சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)'' என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், ""அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
ஆதாரம் புகாரி 5742
நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் முஆத் என்ற நபித் தோழரை நோய் விசாரிக்கச் சென்று ஒரு வார்த்தையின் மூலம் அவர்களுக்கு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தார்கள் ""இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.
ஆதாரம் புகாரி 5659
பெரிய துஆக்களை ஓதத் தெரியவில்லையென்றாலும் ஸஅத் (ரலி) அவர்களுக்காக நபிகள் செய்த துஆவில் அல்லாஹும்ம்ஷ்பீ (இறைவா! இவருக்கு நோய் நிவாரணத்தைக் ஏற்படுத்து) என்று மனனம் செய்து வைத்துக் கொண்டு நாம் யாரையாவது நோய் விசாரிக்கச் சென்றால் ஓதிக் கொள்ள முடியும். யார் நோயாளியாக இருக்கிறாரோ அவரும் இந்தப் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளலாம்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உடல் வலியாக இருப்பதாக முறையிட்டார் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இன்று எதற்கு எடுத்தாலும் இந்த ஆலிம்களிடம் செல்லும் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையாகக் காணப்படுகிறார்கள் இவர்களிடம் செல்வதைத் தவிர்த்து விட்டு நாம் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிராத்தனையை ஓதிக் கொண்டு உடல் நிவாரணத்தை தேடவேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
தகவல் களஞ்சியம்
யார் இவர்?
1 நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்களில் இவரும் ஒருவர்.
2 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் அல்குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில் நியமிக்கப்பட்டவர்.
3 இவரிடம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்'' என்று கூறினார்கள்.
4 குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை நான் செய்வதை விடவும் ஒரு மலையைத் தகர்க்குமாறு கூறினால் அதை நான் செய்து விடுவேன் என்று கூறியவர்
5 உஹ‚த் யுத்தத்தில் முனாபிக்குகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நபித்தோழர்களிடம் கருத்து முரண் ஏற்பட்டது என்ற செய்தியை அறிவித்தவர்.
6 நபியவர்கள் சூரத்துன் நஜ்மை ஓதிய போது சஜ்தா செய்யவில்லை என்பதை அறிவித்தவர்.
7 நபியவர்கள் மஃரிப் தொழுகையில் நீளமான அத்தியாயங்களை ஓதியதாக அறிவித்தவர்.
8 நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனப் (ரலி) அவர்களின் குழந்தை மரணித்த போது இவரையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றார்கள்.
9 அஹ்ஸாப் அத்தியாயத்தின் ஒரு வசனத்தை குஸைமா பின் சாபித் அல் அன்சாரீ அவர்களிடம் எடுத்து எழுதியவர்.
10 உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல நபித் தோழர்களையும் இவரையும் சேர்ந்து குர்ஆனை பிரதியெடுக்குமாறு கட்டளையிடப்பட்டவர்கள். விடை 16ம் பக்கம்
சொற்பொழிவு குறிப்புகள்
அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும்
தொகுப்பு : இப்னு மர்யம்
6018 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :புகாரி (6018)
தொல்லை தராதீர்
5186 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِي ... رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ,
நூல் :புகாரி (5185)
6016 عَنْ أَبِي شُرَيْحٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَاللَّهِ لَا يُؤْمِنُ وَاللَّهِ لَا يُؤْمِنُ وَاللَّهِ لَا يُؤْمِنُ قِيلَ وَمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لَا يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ رواه البخاري
அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ""அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ""அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ""எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (6016)
தொல்லை கொடுத்தால் சொர்க்கம் இல்லை
66 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (73)
கொடுத்துதவுங்கள்
2566 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும், பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :புகாரி (2566)
4758 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ رواه مسلم
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக'' என்று சொன்னார்கள்.
நூல் ; முஸ்லிம் (5120)
அண்டைவீட்டார் முதல் தகுதியுள்ளவர்
2259 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي جَارَيْنِ فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا رواه البخاري
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு என்றார்கள்.
நூல் : புகாரி (2259)
விட்டுக் கொடுங்கள்
2463 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللَّهِ لَأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ رواه البخاري
அல்அஃரஜ் அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள், ""என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறுவார்கள்.
நூல் ; புகாரி (2463)
விற்பனை செய்வதற்குத் தகுதியானவர்
6977 عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ سَمِعْتُ عَمْرَو بْنَ الشَّرِيدِ قَالَ جَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى مَنْكِبِي فَانْطَلَقْتُ مَعَهُ إِلَى سَعْدٍ فَقَالَ أَبُو رَافِعٍ لِلْمِسْوَرِ أَلَا تَأْمُرُ هَذَا أَنْ يَشْتَرِيَ مِنِّي بَيْتِي الَّذِي فِي دَارِي فَقَالَ لَا أَزِيدُهُ عَلَى أَرْبَعِ مِائَةٍ إِمَّا مُقَطَّعَةٍ وَإِمَّا مُنَجَّمَةٍ قَالَ أُعْطِيتُ خَمْسَ مِائَةٍ نَقْدًا فَمَنَعْتُهُ وَلَوْلَا أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ مَا بِعْتُكَهُ أَوْ قَالَ مَا أَعْطَيْتُكَهُ قُلْتُ لِسُفْيَانَ إِنَّ مَعْمَرًا لَمْ يَقُلْ هَكَذَا قَالَ لَكِنَّهُ قَالَ لِي هَكَذَا وَقَالَ بَعْضُ النَّاسِ إِذَا أَرَادَ أَنْ يَبِيعَ الشُّفْعَةَ فَلَهُ أَنْ يَحْتَالَ حَتَّى يُبْطِلَ الشُّفْعَةَ فَيَهَبَ الْبَائِعُ لِلْمُشْتَرِي الدَّارَ وَيَحُدُّهَا وَيَدْفَعُهَا إِلَيْهِ وَيُعَوِّضُهُ الْمُشْتَرِي أَلْفَ دِرْهَمٍ فَلَا يَكُونُ لِلشَّفِيعِ فِيهَا شُفْعَةٌ رواه البخاري
அம்ர் பின் ஷரீத் அவர்கள் கூறியதாவது: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தமது கையை வைத்து, (என் மாமா) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமையான அபூராஃபிஉ (ரலி) அவர்கள் மிஸ்வர் (ரலி) அவர்களிடம், ""என் வீட்டிலுள்ள ஓர் அறையை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளுமாறு சஅத் அவர் களுக்கு நீங்கள் யோசனை கூற மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ""நான் (வாங்குவதாக இருந்தால்) அவ ருக்கு (பொற்காசுகளில்) நானூறைவிட அதிகமாகத் தரமாட்டேன்; அதையும் பல தவணைகளில்தான் தர முடியும்'' என்று கூறினார்கள். அபூராஃபிஉ (ரலி) அவர்கள், ""(இந்த வீட்டை விலைக்குக் கேட்டு) எனக்கு ரொக்கமாக ஐநூறு (வெள்ளி அல்லது பொற்காசுகள்) தரப்பட்டது. ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. ""அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமைபடைத்தவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மட்டும் நான் கேட்டிராவிட்டால், இந்த வீட்டை உங்களுக்கு நான் ""விற்க' அல்லது ""கொடுக்க' முன்வந்திருக்க மாட்டேன்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (6977)
அனுமதி பெற்றுச் செல்லுங்கள்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ(27) فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمْ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ(28) سورة النور
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ""திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 24:27,28)
6241 عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ اطَّلَعَ رَجُلٌ مِنْ جُحْرٍ فِي حُجَرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ فَقَالَ لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ إِنَّمَا جُعِلَ الِاسْتِئْذَانُ مِنْ أَجْلِ الْبَصَرِ رواه البخاري
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர் களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். நபி (ஸல்)அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், ""நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்று சொன்னார்கள்.
நூல் ; புகாரி (6241)
தனித்திருக்கும் பெண்களின் வீட்டிற்கு செல்லாதீர்கள்
5232 عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ رواه البخاي
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ""அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ""கணவருடைய (சகோதரன் போன்ற
