77-ஆடை அணிகலன்கள்1

அத்தியாயம் : 77

ஆடை அணிகலன்கள்1

பாடம் : 1

"(நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக அüத்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், உணவு வகைகüல் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?'' எனும் (7:32ஆவது) இறைவசனம்.2

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்ணுங்கள்; பருகுங்கள்; உடுத்துங்கள்; தானம் செய்யுங்கள். (ஆனால்,) விரயம் செய்யாதீர்கள்; தற்பெருமை கொள்ளாதீர்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

விரயம் அல்லது தற்பெருமை ஆகிய இரண்டும் உன்னை அண்டாத வரை நீ விரும்பியதை உண்ணலாம்; நீ விரும்பியதை உடுத்தலாம்.

5783 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 2

தற்பெருமையின்றி ஒருவர் தமது கீழங்கியை இழுத்துச் செல்வது.3

5784 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்கின்றரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்'' என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்கüல் ஒன்று கீழே சரிந்துவிடுகின்றது'' என்று சொன் னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்'' என்று கூறினார்கள்.4

 

5785 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அவசரத்துடன் எழுந்து தமது ஆடையை இழுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள் (பள்ளி வாசலில் இருந்து சென்றுவிட்ட) மக்கள் அனைவரும் திரும்பி வந்தனர். நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணம் விலகும் வரை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகüல் இரு சான்றுகளாகும். அவற்றில் (கிரகணங்கüல்) ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அதை அகற்றும் வரை அவனிடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார்கள்.5

பாடம் : 3

ஆடையை வரிந்து கட்டுவது

5786 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பிடி போட்ட) ஒரு கைத்தடியைக் கொண்டுவந்து அதை (பூமியில் தடுப்பாக) நட்டு வைத்துப் பிறகு, தொழுகைக்கு "இகாமத்' சொல்வதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு (தம் அறையிலிருந்து) வெüயே வந்ததை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் கைத்தடி நடப்பட்டிருந்த திசையை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மக்களும் (வாகனப்) பிராணிகளும் கைத்தடிக்கு அப்பால் நபி (ஸல்) அவர்களுக்கு முன் நடந்து செல்வதை நான் பார்த்தேன்.6

பாடம் : 4

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும்.

5787 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

பாடம் : 5

தற்பெருமையினால் ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் செல்வது.

5788 அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கர்வத்தோடு தனது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாüல் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.7

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5789 "நபி (ஸல்) அவர்கள்' அல்லது "அபுல் காசிம் (ஸல்) அவர்கள்' கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக்கொண்டு தற்பெருமை யுடன் நடந்து சென்றுகொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5790அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு மனிதர் தமது கீழங்கியை (தற்பெருமையுடன் தரையில்) இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்த போது அவரை பூமியில் புதைந்துபோகும்படி செய்யப்பட்டது. அவர் அப்படியே (தமது உடல்) குலுங்கியபடி மறுமை நாள் வரை பூமியினுள் அழுந்திச் சென்றுகொண்டேயி ருப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

..... ஜரீர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களுடன் அவர்களுடைய வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கüடம் மேற் சொன்ன ஹதீஸைப் போன்று கேட்டதாகக் கூறியதை நான் செவியேற்றேன்'' என்றார்கள்.

5791 ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்களைக் குதிரையொன்றின் மீது சென்றுகொண்டிருந்தபோது சந்தித்தேன். அவர்கள் (கூஃபாவில்) தாம் தீர்ப்பüக்கும் இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். நான் அவர்கüடம் (மேற்கண்ட) இந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:

"யார் தற்பெருமையின் காரணத்தால் தமது ஆடையை(த் தரையில்படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமை நாüல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன். அப்போது நான் முஹாரிப் (ரஹ்) அவர்கüடம், "தமது கீழங்கியை'' என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது அறிவிப்பில் சொன்னார்களா?'' என்று வினவினேன். அதற்கு அவர்கள், " "கீழங்கி' என்றோ, "(முழு நீளச்) சட்டை' என்றோ அன்னார் குறிப்பிட்டுச் சொல்லவில்லை'' என்று பதிலüத்தார்கள்.

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பாடம் : 6

குஞ்சம் வைத்த கீழங்கி9

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்), அபூபக்ர் பின் முஹம்மத் (ரஹ்), ஹம்ஸா பின் அபீஉசைத் (ரஹ்), முஆவியா பின் அப்தில்லாஹ் பின் ஜஅஃபர் (ரஹ்) ஆகியோர் குஞ்சம் வைத்த ஆடைகளை அணிந்தார்கள் என்று கூறப்படுகிறது.

 

5792 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள்

இருக்க, நான் (அங்கு) அமர்ந்திருந்தபோது ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கüன் துணைவியார் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ அவர்கüன் மனைவியாக இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்து விட்டார். ஆகவே, நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அவர்களை மண முடித்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றது தான், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொல்லிவிட்டுத் தமது முகத் திரையின் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார்.

காலித் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லை வாசலில் நின்ற படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதியüக்கப்படவில்லை. அப்போது காலித் அவர்கள், "அபூபக்ரே! இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடத்தில்  பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாது என்று நீங்கள் தடுக்கக்கூடாதா?'' என்று (வெü

யிலிருந்தவாறே) கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்ததற்கு மேலாக வேறொன்றும் செய்யவில்லை. அப்பெண்ணிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ (உன் பழைய கணவர்) ரிஃபாஆ விடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது'' என்று சொன்னார்கள். பிறகு (இவ்விஷயத்தில்) இதுவே (சட்ட) வழிமுறையாகிவிட்டது.10

பாடம் : 7

மேல்துண்டுகள்

"கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்கüன் மேல்துண்டை(ப் பிடித்து) இழுத்தார்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.11

5793 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

....பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது மேல் துண்டைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டார்கள். பிறகு நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர, நபி (ஸல்) அவர்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்கள் இருந்த வீட்டிற்குச் சென்று (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அங்கு இருந்தவர்களும் இவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.12

 

பாடம் : 8

(முழு நீளச்) சட்டை அணிதல்

(இறைத் தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை எடுத்துரைக்கும்போது அல்லாஹ் கூறுகின்றான்:

என்னுடைய இந்த (முழு நீள)ச் சட்டையை நீங்கள் எடுத்துச் சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண் பார்வை வந்துவிடும் (என்று யூசுஃப் கூறினார்). (12:93)

5794 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று ஒரு மனிதர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணிய மாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்கா விட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும்'' என்று பதிலளித் தார்கள்.13

 

5795 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் மண்ணறைக்குள் வைக்கப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவரை வெüயே எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் வெüயே எடுக்கப்பட்டு நபி (ஸல்) அவர்கüன் முழங்கால்கüன்

மீது வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது உமிழ் நீரை அவர் மீது உமிழ்ந்து தமது (முழுநீளச்) சட்டையை அவருக்கு அணிவித்தார்கள். (இதன் காரணத்தை) அல்லாஹ்வே அறிவான்.14

5796 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்கüன் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்ட போது அவருடைய புதல்வர் ளஅப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்ன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே தங்களது (முழு நீளச்) சட்டையை என்னிடம் கொடுங்கள். அதில் நான் அவருக்குக் "கஃபன்' (பிரேத ஆடை) அணிவிப்பேன். மேலும், அவருக்காகத் தாங்கள் தொழவைத்து பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது (முழுநீளச்) சட்டையை வழங்கி (அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிப்) பணிகளை நீங்கள் முடித்து விட்டால் எனக்குத் தெரிவியுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் (தம் தந்தையின் இறுதிப் பணிகளை) முடித்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுதிட வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை இழுத்து "நயவஞ்சகர்களுக்குத் தொழவைக்கக் கூடாது என்று அல்லாஹ் தங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?'' என்று கேட்டுவிட்டு, "நீங்கள் (நயவஞ்சகர்களான) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் ஒன்றுதான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி, அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவேமாட்டான்'' என அல்லாஹ் கூறுகிறான் என்று சொன்னார்கள். உடனே "நயவஞ்சகர்கüல் இறந்துவிட்டவர் எவருக் காகவும் ஒருபோதும் (நபியே!) நீங்கள் தொழுவிக்க வேண்டாம். அவர்களுடைய மண்ணறையருகே நிற்கவும் வேண்டாம்'' எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது. இதையடுத்து நயவஞ்சகர்களுக்கு  (ஜனாஸா) தொழுவிப்பதை நபியவர்கள் கைவிட்டார்கள்.15

பாடம் : 9

நெஞ்சுப் பகுதியில் சட்டைக் கழுத்து அமைந்திருப்பது.

5797 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்கüன் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரு மனிதர்கüன் நிலை போன்றதாகும். அவர் கüன் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப் பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும்போதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதத் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி) இவ்வாறு சுட்டிக் காட்டினார்கள். மேலும், "அவன் தனது நீளங்கியை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்படை வாய்; ஏனெனில்) அது விரியாது'' என்றும் கூறினார்கள்.16

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மற்றுமோர் அறிவிப்பில் ("இரண்டு நீளங்கிகள்' என்பதற்கு பதிலாக) "இரண்டு கவசங்கள்' என வந்துள்ளது.

பாடம் : 10

சட்டைக் கை குறுகலான நீளங்கியை (ஜுப்பா) பயணத்தில் அணிவது.

5798 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தின் போது) தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர்கொண்டேன். பிறகு அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள்.

அப்போது அவர்கள் வாய்கொப்பüத்து நாசிக்குத் தண்ணீர் செலுத்திவிட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் சட்டைக் கைகüலிருந்து வெüயே எடுக்கப்போனார்கள். ஆனால், சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே, தம் இருகைகளையும் அவர்கள் நீளங்கியின் கீழிருந்து வெüயே எடுத்து அவற்றைக் கழுவிக்கொண்டார்கள். மேலும், தலையை (ஈரக் கையால் "மஸ்ஹ்' செய்து) தடவிக்கொண்டார்கள். ("மோஸா' எனும்) காலுறையையும் (ஈரக் கையால்) தடவிக் கொண்டார்கள்.17

பாடம் : 11

புனிதப் போரின்போது கம்பü நீளங்கி (ஜுப்பா) அணிவது.

5799 முஃகீரா பின் ஷுஅபா (ரலி)  அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம் (இருக்கிறது)'' என்று பதிலüத்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருüல் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள்மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பü நீளங்கி அணிந்திருந்தார்கள். இதனால் அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெüயே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, அவற்றை அங்கியின் கீழிருந்து வெüயே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி(மஸ்ஹ் செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்கüன் (மோஸா எனும்) காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், "அவற்றை விட்டுவிடுவீராக. ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத் திருந்தேன்'' என்று சொல்லி, (ஈரக்கையால் அவற்றைத்) தடவி (மஸ்ஹ் செய்து) கொண்டார்கள்.18

பாடம் : 12

("கபா' எனும்) வெüப்புற மேலங்கியும் ("ஃபர்ரூஜ்' எனும்) நீண்ட பட்டு உடுப்பும்.

இந்தப் பட்டு உடுப்பே "கபா' ஆகும். பின்பக்கம் திறப்பு உள்ள அங்கிக்கே "ஃபர்ரூஜ்' என்று சொல்லப்படுவதுண்டு.

5800 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("கபா' எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்),  "அன்பு மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் என்னை அழைத்துச்செல்'' என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துச் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) "நீ உள்ளே போய்  நபி (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா'' என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்கüடம் வரும்படி நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்கüடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர் கüடம் அந்த அங்கிகüல் ஒன்று இருந்தது. மேலும், நபியவர்கள் "உங்களுக்காக இதை எடுத்து வைத்தேன்'' என்று சொன்னார்கள்.  மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "மக்ரமா திருப்தி அடைந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.19

5801 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("ஃபர்ரூஜ்' எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பüப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்த படியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் 

அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, "இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று'' எனக் கூறினார்கள்.20

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 13

முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்)21

5802 சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் மீது முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்) ஒன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பü கலந்த பட்டால் ஆனதாக இருந்தது.

5803 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முழுநீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸாக்கள்) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறை கள் (மோஸாக்கள்) அணிந்து கொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால் களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம்  மற்றும் "வர்ஸ்' எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்'' என்று சொன்னார்கள்.22

பாடம் : 14

முழுக்கால் சட்டை

5804 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஹ்ராம் கட்டியவர்கüல்) கீழங்கி கிடைக்காதவர் முழுக்கால் சட்டை அணிந்து கொள்ளட்டும்; காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை (மோஸாக்களை) அணிந்து கொள்ளட்டும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5805 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது எந்த ஆடையை அணிய வேண்டும் என்று தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள், "(முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, தலைப் பாகைகள், முக்காடுள்ள மேலங்கிகள், ("மோஸா' எனும்) காலுறைகள் ஆகியவற்றை அணியாதீர்கள். ஒருவரிடம் காலணிகள் இல்லையென்றால் அவர் மட்டும் காலுறை களை (மோஸாக்களை) கணுக்கால்களுக்குக் கீழ் இருக்கும்படி அணிந்துகொள்ளட்டும். குங்குமப்பூச் சாயம் மற்றும் "வர்ஸ்' எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள்'' என்று சொன்னார்கள்.23

பாடம் : 15

தலைப்பாகைகள்24

5806 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; தலைப்பாகையையும் முழுக்கால் சட்டையையும் முக்காடுள்ள மேலங்கியையும் அணியமாட்டார். குங்குமப்பூச் சாயம்

மற்றும் "வர்ஸ்' எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையையும் (மோஸாக்கள் எனும்) காலுறைகளையும் அணியமாட்டார்; காலணிகள் கிடைக்காத வரைத் தவிர. காலணிகள் கிடைக்கவில்லை யெனில் அவர் (மேலிருந்து) கணுக்கால் களுக்குக் கீழே காலுறை (மோஸா) இருக்கும் படி கத்தரித்து (அணிந்து) கொள்ளட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.25

பாடம் : 16

(தலையையும் முகத்தின் பெரும் பகுதியையும் மறைக்கும்) முக்காடு அணிதல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப் பட்டிருந்தபோது வீட்டிலிருந்து பள்ளி வாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் மீது ஒரு கறுப்புக் கட்டு (தலையில்) இருந்தது.26

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் ஒரு சால்வையின் ஓரத்தைக் கட்டியிருந் தார்கள்.27

5807 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலிருந்த) முஸ்லிம்கüல் சிலர் அபிசீனியாவுக்குன் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்ய ஆயத்தமானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று பொறுங்கள். ஏனெனில், எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அனுமதியை(த்தான்) எதிர்பார்க்கின்றீர் களா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று பதிலüத்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்காகத் தம்மைக் கட்டுப் படுத்திக்கொண்டார்கள். மேலும், (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரு வாகன(ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந் தழையைத் தீனியாகப் போட்டு (வளர்த்து) வந்தார்கள்.

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஒருமுறை நண்பகல் நேரத்தின் மத்தியில் எங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டிந்தபோது அபூபக்கர் (ரலி)  அவர்கüடம், "இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையில் முக்காடிட்டபடி நம்மை நோக்கிலிநம்மிடம் வருகை தந்திராத நேரத்தில்லிவந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று ஒருவர் கூறினார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதரே!) தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை ஏதோ ஒரு (முக்கியமான) விஷயம்தான் இந்த நேரத்தில் இங்கே வரச்செய்திருக்க வேண்டும்'' என்று சொல்லிக்கொண்டார்கள். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி வழங்க அவர்களும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழையும்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கüடம், "உங்கüடம் இருப்பவர்களை வெüயே அனுப்புங்கள்'' என்று சொல்ல, அபூபக்ர் (ரலி) அவர்கள், "இங்கிருப்பவர்கள் உங்கள் (துணைவி யாருடைய) குடும்பத்தினர்தாம். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், அல்லாஹ் வின் தூதரே!'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்கு (ஹிஜ்ரத்) புறப்பட அனுமதியüக்கப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அப்படியென்றால் தங்களுடன் நானும் வர விரும்புகிறேன். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்; அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள், "சரி'' என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என் இரு வாகன (ஒட்டக)ங்கüல் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்'' என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து முடித்தோம். இருவருக்கும் ஒரு தோல் பையில் பயண உணவை வைத்தோம். (என் சகோதரி) அஸ்மா பின்த் அபீபக்ர் தன் இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அந்தத் தோல் பையின் வாயில் வைத்துக் கட்டினார். இதனால்தான் "இரு கச்சுடையாள்' ("தாத்துந் நிதாக்கைன்') என்று அவர் பெயர் சூட்டப்பட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் "ஸவ்ர்' எனும் மலையிலுள்ள ஒரு குகையை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் தங்கினார்கள். அவர்களுடன் (என் சகோதரரர்) அப்துல்லாஹ் பின் அபீபக்ரும் இரவில் தங்கியிருப்பார். அப்துல்லாஹ் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். அவர் அவ்விருவரிடமிருந்தும் (வைகறைக்கு முந்திய) "ஸஹர்' நேரத்தில் (விடைபெற்றுப்) புறப்பட்டு விடுவார். இரவு (மக்காவில்) தங்கியிருந்த வரைப் போன்று குறைஷிகளுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவருக்கெதிரான (குறைஷியரின்) சூழ்ச்சிகள் எதுவாயினும் அதைக் கேட்டு நினைவில் இருத்திக்கொண்டு இருள் கலக்கும் நேரத்தில் அவர்கüடம் அதைக் கொண்டு செல்வார்.

அவர்கள் இருவருக்காகவும் பாலை அன்பüப்பாகக் கறந்துகொள்ள இரவல் கொடுக்கப்பட்ட ஆடொன்றை அபூபக்ர் (ரலி) அவர்கüன் (முன்னாள்) அடிமையான ஆமிர் பின் ஃபுஹைரா அவர்கள் மேய்த்து வந்தார்கள். அவர் இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழிப்பார்கள். அந்த ஆட்டை ஆமிர் பின் ஃபுஹைரா இரவின் இருள் இருக்கும் போதே விரட்டிச் சென்றுவிடுவார். இதை (அவ்விருவரும் அக்குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகüல் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார்.28

பாடம் : 17

இரும்புத் தொப்பி

5808 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள்.29

 

 

பாடம் : 18

சால்வைகள், (பருத்தியாலான) யமன் நாட்டு சால்வை  மற்றும் மேல்போர்வை.

கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் (மக்காவில் இருந்தபோது இணைவைப்பாளர்களால் நாங்கள் அடைந்து வந்த துன்பங்கள் குறித்து) நபி (ஸல்) அவர்கüடம் முறையிட்டோம். அப்போது நபியவர்கள் (கஅபாவின் நிழலில்) தம்முடைய சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்துகொண்டிருந்தார்கள்.30

5809 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட "நஜ்ரான்' நாட்டுன் சால்வையொன்றை போர்த்தி யிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விüம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோüன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன்.

பிறகு அந்தக் கிராமவாசி, "முஹம்மதே! உங்கüடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளை யிடுங்கள்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.31

5810 அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"ஒரு பெண்மணி "புர்தா' (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இதை என் கையால் நெய்தேன். இதைத் தாங்கள் அணிவதற்காக வழங்கு கிறேன்' என்று சொன்னார்'' என சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "புர்தா' என்றால் என்ன என்று தெரியுமா? எனக் கேட்டார்கள். (அங்கிருந்தவர்கள் "தெரியும்' என்று சொல்ல,) "ஆம். அது கரை வைத்து நெய்யப்பட்ட போர்வை'' என சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள். (பின்னர் தொடர்ந்து அவர்கள் சொன்னார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது தமக்குத் தேவையென்று கருதி அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, அதைக் கீழங்கியாக அணிந்துகொண்டு நபி (ஸல்) அவர்கள் எங்கüடம் வந்தார்கள். அப்போது மக்கüல் ஒருவர் அதைத் தொட்டுப் பார்த்து (அதன் அழகை ரசித்தவராக) "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணியக்கொடுங்கள்'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "சரி'' என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் நாடிய (நேரம்)வரை அந்த அவையில் அமர்ந்திருந்துவிட்டு (தமது வீட்டுக்கு)த் திரும்பினார்கள். பிறகு அந்தச் சால்வையை மடித்து அந்த மனிதருக்குக் கொடுத்தனுப்பினார்கள். மக்கள், "நீ செய்தது சரியல்ல. நபி (ஸல்) அவர்கள்  தம்மிடம் கேட்பவரை (வெறுங்கையோடுத்) திருப்பி அனுப்புவதில்லை என்று தெரிந்துகொண்டே அவர்கüடம் (ஏன்) இதைக் கேட்டாய்'' என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைக் கேட்டதெல்லாம் நான் இறக்கும் நாüல் என் (உடலில் அணிவிக்கப்படும்) கஃபனாக இது இருக்கட்டும் என்பதற்காகத்தான்'' என்றார். அவ்வாறே அது அவருக்குக் கஃபனாக ஆயிற்று.32

5811 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் சந்திரன் பிரகாசிப்பது போல் முகங்கள் பிராகாசித்த படி சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ  (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்கüல் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! இவரையும் அவர்கüல் ஒருவராக ஆக்குவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகüல் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்கüல் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்'' என்று சொன்னார்கள்.33

5812 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்கüடம், "எந்த ஆடை நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?'' என்று கேட்டேன். அவர்கள், "(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை'' என்று பதிலüத் தார்கள்.

5813 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.

 

5814 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்கüன் உடல் (பருத்தி யாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது'' என்று நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரான  ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

 

பாடம் : 19

கெட்டியான ஆடைகளும் (சதுர வடிவிலான) கறுப்புக் கம்பü ஆடைகளும்.

5815,5816 ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் .கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கி விட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பü ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக்கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தம் இறைத்தூதர்கüன் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதைக்) குறித்து எச்சரித்தார்கள்.34

5817 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு  தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடு களைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) சலாம் கொடுத்தவுடன், "எனது இந்த கறுப்புக் கம்பü ஆடையை (இதை எனக்கு அன்பüத்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், சற்று முன்பு அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது. அபூஜஹ்மின் (மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.

லிஅவர் அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா பின் ஃகானிம் என்பவர் ஆவார்.லி35

5818 அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்கüடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக் காட்டி, "இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர் கüன் உயிர் பிரிந்தது'' என்று சொன்னார்கள்.36

பாடம் : 20

ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோüல் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டு விடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ).

5819 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்)  அவர்கள் "முலாமஸா' மற்றும் "முனாபதா' ஆகிய வியாபார முறைகளுக்குத் தடை விதித்தார்கள்.37 ஃபஜ்ருக்குப் பிறகு சூரியன் உயரும் வரை தொழுவது, அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரை தொழுவது ஆகிய இரு (நஃபில்) தொழுகைகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மர்ம உறுப்பு வானுக்குத் தெரியும்படி ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக்கொண்டு இரு முழங்கால்களையும் நட்டு வைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால் கட்டியபடி) உட்கார்வதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோüல் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டு விடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ) தடை விதித்தார்கள்.38

5820 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும், வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் "முலாமஸா' மற்றும் "முனாபஃதா' ஆகிய முறைகளைத் தடை செய்தார்கள். "முலாமஸா' என்றால், இரவிலோ பகலிலோ (ஒரு பொருளை வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். (அவ்வாறு தொட்டுவிட்டாலே வியாபாரம் உறுதியாகி விடும் என்ற நிபந்தனையின் பேரில்) அதைத் தொட்டதோடு முடித்துக்கொண்டு விரித்துப் பார்க்காமலேயே வாங்குவதாகும்.

"முனாபதா' என்பது, ஒருவர் மற்றொரு வரை நோக்கித் தமது துணியை எறிய அந்த மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமி டையிலான வியாபார(ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.

ஆடை அணியும் முறைகள்  இரண்டும் வருமாறு:

1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. அதாவது ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்கüல் ஒன்றில் போட்டுக்கொள்ள அவருடைய உடலின் இரு பக்கங்கüல் ஒன்று துணியின்றி வெüயே தெரிவதாகும்.

2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெüயே தெரிய (அதைத் துணியால் மறைக்காமல்) அமர்ந்திருப்பதாகும்.

பாடம் : 21

ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (முழங்கால்களைக் கட்டியபடி) அமர்வது (இஹ்திபா).39

5821 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு விதமாக ஆடை அணிவதைத் தடை செய்தார்கள். மர்ம உறுப்பு வெüயே தெரியும்படி ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதையும் (இஹ்திபா), ஒரே துணியை (இரு தோள்கüல் ஒன்றில்) சுற்றிக்கொண்டு ஒரு பக்கம் துணியில்லாமல் இருப்பதையும் (இஷ்திமால்) தடை செய்தார்கள். (வியாபார முறைகüல்) முலாமஸாவையும், முனாபதா வையும் தடை செய்தார்கள்.40

 

5822 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோüல் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்)  போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெüயே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.41

பாடம் : 22

கறுப்பு நிறக் கம்பü ஆடை

5823 உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கüடம் ஆடைகள் சில கொண்டுவரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிறக் கம்பüயாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை நாம் யாருக்கு அணிவிக்கப்போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் (பதில் கூறாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல, அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டுவரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும், "(இந்த ஆடையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு'' என்று கூறிவிட்டு, "உம்மு காலிதே! இது "சனாஹ்' (அழகாயிருக் கிறது)'' என்று சொன்னார்கள்.

ளநபி (ஸல்) அவர்கள் கூறியன "சனாஹ்எனும் சொல், அபிசீனிய மொழிச் சொல்லாகும்.

அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.42

5824 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர் களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள் "அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (இனிப்புப் பொருளை) மென்று இவனது வாயிலிடுவதற்காக இவனை நபி (ஸல்) அவர்கüடம் எடுத்துச் செல்லும் வரை இவன் எதையும் சாப்பிட்டுவிட வேண்டாம்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவனை நபி (ஸல்) அவர்கüடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் "ஹுரைஸ்' (அல்லது "ஜவ்ன்') குலத்தார் தயாரித்த கறுப்பு நிறக் கம்பü மேலங்கியை அணிந்துகொண்டு மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த தமது வாகன(ஒட்டக)த்திற்கு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.43

பாடம் : 23

பச்சை நிற ஆடைகள்44

5825 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மை அடித்ததால் தமது மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார்.

லி(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படிலி

ளநபி (ஸல்) அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே!ன நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்த தில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரது (பச்சை நிற முகத் திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது'' என்று சொன்னேன். (இதற்கிடையில்)லிஅப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்கள் தம் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். ஆகவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார்.

அப்பெண்மணி, "(அல்லாஹ்வின் தூதரே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமி ருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை'' என்று கூறி, தமது ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் பின் ஸபீர், "பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் வின் தூதரே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்'' என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ "அனுமதிக்கப் பட்டவள்' அல்லது "ஏற்றவள்' அல்லள்'' என்று சொன்னார்கள். அப்துர் ரஹ்மான் அவர் களுடன் இருந்த அவர்களுடைய இரு மகன் களையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். "இவர்கள் உங்கள் புதல்வர்களா?'' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட் டார்கள். அவர், "ஆம்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்'' என்று சொன்னார்கள்.45

பாடம் : 24

வெண்ணிற ஆடைகள்46

5826 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின்போது நான் நபி (ஸல்) அவர்களுடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களைப் பார்த்தேன். அதற்கு  முன்பும்  அவர்களை நான் பார்த்ததில்லை; அதற்குப் பின்பும் அவர்களை நான் பார்க்கவில்லை.47

 

5827 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்கüடம் சென்றேன். அப்போது, "லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன் னார்கள். நான், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்துஅலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது "அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே'' என்று கூறிவந்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

(விபசாரம், திருடு போன்ற குற்றம் புரிந்த) ஒருவர் இறக்கும்போதோ அதற்கு முன்போ மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி "லாஇலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற் குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)'' என்று சொல்லியிருந் தால்தான் அவருக்கு இவ்வாறு மன்னிப்பு அüக்கப்படும்.48

பாடம் : 25

ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அளவும்.49

 

5828 அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர் களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்கüடம் உமர் (ரலி) அவர் களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் அறிந்த வரை (அவர்கள் குறிப்பிட்ட "இந்த அளவு' என்பது, ஆடை கüன் கரைகüல் செய்யப்படும்) வேலைப் பாட்டைக் குறிக்கிறது.

5829 அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு, "நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. மேலும், (அந்த அளவை விவரிக்கும் வகையில்) தம் இரு விரல்களை வரிசைப்படுத்திக் காட்டினார்கள்'' என்று கடிதம் எழுதினார்கள்.

(அறிவிப்பாளர்கüல் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்) நடுவிரலையும் சுட்டு விரலையும் உயர்த்திக் காட்டினார்கள்.

5830 அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர் களுடன் (ஆதர்பைஜானில்) இருந்தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், "இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று சொன்னார்கள்.

..... மற்றோர் அறிவிப்பில், "அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

 

5831 அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) மதாயின் (தைஃபூன்) நகரில் இருந்தார்கள். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூஸி யான) ஊர்த் தலைவர் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர் கüடம்) "நான் இவரை(ப் பல முறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்க்காத காரணத்தால்தான் நான் இதை அவர் மீது வீசியெறிந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தங்கம், வெள்ளி, சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு ஆகிய இவையெல்லாம் இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று சொன்னார்கள்'' எனக் கூறினார்கள்.50

5832 ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள், "நான்  அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்'' என்று (பின்வரும் ஹதீஸை) அறிவிக்கலானார்கள். உடனே நான், "நபி (ஸல்) அவர்கüட மிருந்தா?'' என்று கேட்க, அதற்கு அவர்கள் உறுதியான தொனியில், "(ஆம்) நபி (ஸல்) அவர்கüடமிருந்துதான்'' என்று கூறிவிட்டு, "(ஆண்கüல்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் ஒரு போதும் அதை அணியமாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்கள்.

5833 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "முஹம்மத் (ஸல்) அவர்கள், "(ஆண்கüல்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்' என்று சொன்னார்கள்'' எனக் கூறக் கேட்டேன்.

5834 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், "(ஆண்கüல்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணியமாட்டார்'' என்று கூறியதாக உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வாயிலாகவே அறிவிக்கப்பட் டுள்ளது.

 

 

5835 இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்கüடம் பட்(டா)டை குறித்துக் கேட்டேன். அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கüடம் (சென்று) கேளுங்கள்'' என்று சொன்னார்கள். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கüடம் (சென்று) கேட்டேன். அவர்கள், "இப்னு உமர் (ரலி) அவர்களைக் கேளுங்கள்'' என்று கூற நான் இப்னு உமர் (ரலி) அவர்கüடம் கேட்டேன்.

அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூஹஃப்ஸ், அதாவது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், "மறுமையில் யாருக்கு எந்தப் பங்குமில்லையோ அவர்தாம் இம்மையில் பட்(டா)டை அணிவார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.

(இதைக் கேட்ட) நான், "உண்மையே சொன்னார்; அபூஹஃப்ஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைக்கவில்லை'' என்று சொன்னேன்.

இதே ஹதீஸ் இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்) அவர்கüடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 26

பட்டாடையை அணியாமல் தொட்டுப் பார்ப்பது.

இது குறித்து நபி (ஸல்) அவர்கüட மிருந்து அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பொன்று உள்ளது.51

5836 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டாடை யொன்று அன்பüப்பாக வழங்கப்பட்டது. நாங்கள் அதைத் தொட்டு அதன் (மென்மை மற்றும் தரம்) காரணமாக வியக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா?'' என்று கேட்க நாங்கள், "ஆம்'' என்றோம்.  நபி (ஸல்) அவர்கள் "சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் இதைவிடச் சிறந்தவை ஆகும்'' என்று சொன்னார்கள்.52

பாடம் : 27

பட்டுத் துணியை விரிப்பாகப் பயன் படுத்துதல்.

அபீதா பின் அம்ர் அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பட்டை விரிப்பாகப் பயன்படுத்தவது, அதை அணிவதைப் போன்று(தடை செய்யப்பட்டது)தான்.

5837 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பொன்

மற்றும் வெள்ளிப் பாத்திரங்கüல் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53

 

 

பாடம் : 28

"கஸ்' வகைப் பட்டு அணிவது54

அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்:

நான் அலீ (ரலி) அவர்கüடம், " "கஸ்' வகைத் துணி என்றால் என்ன?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது ஷாம் (சிரியா) நாட்டிலிருந்தோ எகிப்திலிருந்தோ எங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் இருக்கும்; அதில் பட்டும் கலந்திருக்கும். நாரத்தையைப் போன்ற (தடித்த வளைந்த) கோடுகள் அதில் இருக்கும். "மீஸரா' என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக மென்பட்டுத் திண்டுகளைப் போன்று தயாரித்து வந்த விரிப்புகளாகும்'' என்று பதிலüத்தார்கள்.

ஜரீர் பின் அப்தில்ஹமீத் (ரஹ்)

அவர்கள் யஸீத் (ரஹ்) அவர்கüடமிருந்து அறிவிக்கும் ஹதீஸில் (பின்வருமாறு) காணப்படுகிறது: "கஸ்' வகைத் துணி என்பது விலா எலும்புகளைப் போன்று வரி வரியாகக் கோடுகள் போடப்பட்ட எகிப்திலிருந்து கொண்டு வரப்படுகின்ற ஒரு வகைத் துணியாகும். அதில் பட்டு கலந்திருக்கும். "மீஸரா' என்பது விலங்குகüன் தோல்களாகும்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய) நான் கூறுகிறேன்:

"மீஸரா' தொடர்பாக ஆஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) கருத்தே அதிகமான அறிவிப்பாளர்தொடர் கüல் வந்துள்ளதாகும்; (யஸீத் அவர்கள் கூறியுள்ள விலங்குகüன் தோல் என்பதை விடச்) சரியானதும் ஆகும்.

5838 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையும் ("மீஸரா), "கஸ்' வகைப் பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.

 

 

பாடம் : 29

சொறி சிரங்குக்காக ஆண்கள் பட்டு அணிய அனுமதிக்கப்படுவர்.

5839 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த சொறி சிரங்கின் காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியüத்தார்கள்.55

பாடம் : 30

பெண்களுக்குப் பட்டாடை (அனுமதிக்கப் படும்).56

5840 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கி னார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெüயே புறப்பட்டேன். அப்போது அவர்கüன் முகத்தில் கோபக் குறியை நான் கண்டேன். ஆகவே, அதைப் பல துண்டு களாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்கüடையே பங்கிட்டுவிட்டேன்.57

இந்த ஹதீஸ் இரு வழிகüல் அறிவிக்கப் பட்டுள்ளது.

5841 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால், தங்கüடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக் கிழமையின்போதும் அணிந்துகொள்ளலாமே'' என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், "(மறுமையில்) எந்தப் பேறும் இல்லாதவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்'' என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர் (ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற் போன்று கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். எனவே உமர் (ரலி) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதரே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!'' என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், "அதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தது அதை நீங்கள் விற்றுக் கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத் தரவோதான்'' என்று பதிலüத்தார்கள்.58

5842 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் புதல்வியார் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள்59 கோடுகள் போட்ட பட்டு சால்வையொன்றை அணிந்திருந்ததை நான் கண்டேன்.

 

பாடம் : 31

நபி (ஸல்) அவர்கள் தமது வசதிக்கேற்ப பயன்படுத்திவந்த ஆடைகளும் விரிப்பு களும்.60

5843 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நபி (ஸல்) அவர்களுக்கெதிராக (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரு துணைவியர் யார்?'' என உமர் (ரலி) அவர்கüடம் கேட்க வேண்டுமென ஒரு வருட காலமாக நான் (நினைத்துக்கொண்டு) இருந்தேன். ஆயினும், உமர் (ரலி) அவர்கள் மேல் (மரியாதை கலந்த) அச்சம் கொள்ளலானேன். இவ்வாறிருக்கையில் (ஹஜ்ஜுக்கு வந்த) உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் ("மர்ருழ் ழஹ்ரான்' எனும்) ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது (தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) அராக் (மிஸ்வாக்) மரத்தடிக்குச் சென்றார்கள். அவர்கள் (தமது தேவையை முடித்துக் கொண்டு) வந்தபோது அவர்கüடம் நான் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவும் ஹஃப்ஸாவுமே (அந்த இரு துணைவியர்)'' என்று பதிலüத்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அறியாமைக் காலத்தில் நாங்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே மதித்த தில்லை. இஸ்லாம் வந்து, அல்லாஹ் பெண்களைக் குறித்து (அவர்களுடைய உரிமைகளையும் கடமைகளையும் பேணுமாறு தனது வேதத்தில்) குறிப்பிட்டபோதுதான் பெண்களுக்கு எங்கள் மீதுள்ள உரிமையை அறிந்துகொண்டோம். ஆயினும், எங்கள் விவகாரங்கள் எதிலும் தலையிட பெண்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

(இந்நிலையில் ஒருநாள்) எனக்கும் என் மனைவிக்குமிடையே (காரசாரமான) வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர் என்னைக் கடுமையாகப் பேசிவிட்டார். உடனே நான் "நீ அங்கேயே (உன் இடத்திலேயே) இரு! (என் விஷயத்தில் தலையிடாதே)'' என அவரிடம் சொன்னேன். அவர் "என்னிடம்தான் நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். (ஆனால்,) உங்கள் புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) நபி (ஸல்) அவர்களை (எதிர்த்துப் பேசி) மன வேதனைக்குள்ளாக்கியுள்ளார்'' என்றார். உடனே நான் (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்ய வேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களை மன வேதனைக்குள்ளாக்கிய விஷயத்தில் முதலில் நேராக ஹஃப்ஸாவிடமே சென்றேன். அடுத்து ளநபி (ஸல்) அவர்கüன் இன்னொரு துணைவியாரும் என் உறவினருமானன உம்மு சலமாவிடம் சென்று (ஹஃப்ஸாவிடம் சொன்னது போன்றே) கூறினேன். உடனே அவர், "உமரே! உம்மைக் கண்டு நான் வியப்புறுகிறேன். எங்கள் விவகாரங்கள் அனைத்திலும் நீங்கள் தலையிட்டுவிட்டு, இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவி யருக்கும் இடையிலான விவகாரத்தையும் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை'' என்று கூறி (என்னை) மடக்கிவிட்டார்.

மேலும், அன்சாரிகüல் (எனக்கு நண்பர்) ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் அவையில் அவர் இல்லாமல்போய் நான் அங்கு இருந்தால் அங்கு நடப்பதை நான் அவருக்குத் தெரிவிப்பேன். (இதைப் போன்றே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் நான் இல்லாமல் அவர் இருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüட மிருந்து கிடைக்கும் தகவல்களை அவர் எனக்குத் தெரிவிப்பார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றியிருந்த(அரசர்கள் மற்றும் குலத் தலை)வர்கள் அனைவரும் அவர்களுடன் சுமுக உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். (அன்றைய) ஷாம் நாட்டின் "ஃகஸ்ஸான்' அரசன் ஒருவனைத் தவிர வேறு யாரும் (பகைமை கொண்டு) இருக்கவில்லை. அவன் (எங்கள் மீது போர் தொடுக்க) வரலாம் என நாங்கள் அச்சம் கொண்டிருந்தோம். (இந்நிலையில் ஒருநாள்) அந்த அன்சாரி (நண்பர்) திடீரென்று வந்து "ஒரு சம்பவம் நடந்துவிட்டது'' என்றார். நான் "என்ன அது? ஃகஸ்ஸானிய(மன்ன)ன் (படையெடுத்து)வந்து விட்டானா?'' என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "அதைவிட மிகப் பெரிய சம்பவம் நடந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்'' என்றார். உடனே நான் (புறப்பட்டு) வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர் அனைவரின் அறைகüலிருந்தும் அழுகைச் சத்தம் வந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களோ தமது மாடியறைக்கு ஏறி விட்டிருந்தார்கள். மாடியின் தலைவாசலில்  பணியாளர் (ரபாஹ்) அமர்ந்துகொண்டிருந்தார்.

நான் அவரிடம் வந்து, "எனக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் செல்ல) அனுமதி கேள்'' என்றேன். (அவரும் உள்ளே சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியüத்தார்கள். நான் (படியிலேறி அறைக்குள்) சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் (ஈச்சம்) பாயில் (படுத்து) இருந்தார்கள். அந்தப் பாய் அவர் களுடைய விலாவில் சுவடு பதித்திருந்தது.

அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அங்கு (அவர்களது தலை மாட்டில்) பதனிடப்படாத தோல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. (கால்மாட்டில்) கருவேல இலைகள் இருந்தன. அப்போது ஹஃப்ஸா, உம்மு சலமா ஆகியோரிடம் நான் கூறியதையும், உம்மு சலமா என்னிடம் கூறிய பதிலையும் நபி (ஸல்) அவர்கüடம் எடுத்துச் சொன்னேன். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். (அந்த மாடியறையில்) நபி (ஸல்) அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் (தங்கி) இருந் தார்கள். பிறகு (அங்கிருந்து) இறங்கினார்கள்.61

5844 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) இரவு (திடீரென) விழித்தெழுந்து "வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை. இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள்தாம் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன! (என் துணைவியரில்) இந்த அறைகüல் (உறங்கிக்கொண்டு) உள்ளோரை எழுப்பி உணர்வூட்டுகின்றவர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருக்கும் எத்துணையோ பெண்கள், மறுமை நாüல் (துணியே கிடைக்காமல்) நிர்வாணமாய் இருப்பார்கள்'' என்று கூறினார்கள்.62

 

பாடம் : 32

புத்தாடை அணிந்தவருக்காகச் செய்யப்படும் பிரார்த்தனை.63

5845 உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஆடைகள் சில கொண்டு வரப்பட்டன. அவற்றில் கறுப்பு நிறக் கம்பüயாடை ஒன்றும் இருந்தது. அவர்கள், "இந்த ஆடையை நாம் யாருக்கு அணிவிப்போம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்று கேட்க, மக்கள் (பதில் பேசாமல்) மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உம்மு காலிதை என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். உடனே (சிறுமியாக இருந்த) நான் நபி (ஸல்) அவர்கüடம் கொண்டு செல்லப்பட்டேன். உடனே அவர்கள் அந்த ஆடையைத் தமது கையால் எனக்கு அணிவித்து, "(இதை நீ உடுத்தி பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச்செய்துவிடு'' என்று இரு முறை சொன்னார்கள். பிறகு அந்த ஆடையின் வேலைப்பாட்டைக் கவனித்துப் பார்க்கலா னார்கள். பிறகு என் பக்கம் தமது கையால் சைகை காட்டி, "உம்மு காலிதே! இது "சனா' (அழகாயிருக்கிறது)'' என்று சொல்லலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட "சனா' எனும் அபிசீனியச் சொல்லுக்கு "அழகு' என்று பொருள்.

அறிவிப்பாளர் இஸ்ஹாக் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஆடையை உம்மு காலித் (ரலி) அவர்கள் அணிந்திருந் ததைப் பார்த்ததாக எங்கள் குடும்பப் பெண் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.64

பாடம் : 33

ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.

5846 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.65

 

பாடம் : 34

குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடை

5847 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"இஹ்ராம்' கட்டியவர் "வர்ஸ்' எனும் வாசனைச் செடியின் சாயம், அல்லது குங்குமப்பூச் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.66

பாடம் : 35

சிவப்பு ஆடை

5848 பராஉ ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அதிக உயரமாகவு மில்லாமல் குட்டையாகவும் இல்லாமல்) நடுத்தர உயரமுள்ளவர்களாய் இருந்தர்கள். நான் அவர்களைச் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதைவிட அழகான (அங்கி) எதையும் நான் பார்த்ததில்லை.67

 

பாடம் : 36

சிவப்பு நிற மென்பட்டுத் திண்டு (மீஸரா)

5849 பராஉ  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோயாளியை நலம் விசாரிப்பது, "ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்லிஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்கமுகல்லாஹ்லிஅல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் கூறுவது உள்ளிட்ட ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, "கஸ்' எனும் பட்டு கலந்த (எகிப்தியப்) பஞ்சாடை, தடித்த பட்டு, மென்பட்டுத் திண்டுகள் (மீஸரா) உள்ளிட்ட ஏழு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.68

பாடம் : 37

(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்

5850 சயீத் அபூமஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்கüடம், "நபி (ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?'' என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (தொழுதுவந்தார்கள்)'' என்று சொன்னார்கள்.69

5851 உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கüடம், "நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன். உங்கள் தோழர்கüல் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை'' என்று கூறினேன். அவர்கள் "அவை யாவை? இப்னு ஜுரைஜே!'' எனக் கேட்டார்கள். நான் "(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகüல் "ஹஜருல் அஸ்வத்' மற்றும் "ருக்னுல் யமானி' ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக் கண்டேன். மேலும், (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ் மாத) பிறை பார்த்தவுடன் "இஹ்ராம்' கட்டினாலும் நீங்கள் மட்டும் (துல்ஹஜ்) எட்டாவது நாள் வரும்வரை  இஹ்ராம் கட்டாமலிருப்பதை  நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)'' என்று கேட்டேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலüத்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன். (அதனால்தான் நானும் அப்படிச் செய்கிறேன்.) (முடி அகற்றப்பட்ட) செருப்பு களைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கசுத்தி (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனால்  (தம் ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (என் ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹஜ் எட்டாம் நாள்) இஹ்ராம் கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் (துல்ஹஜ் எட்டாம் நாள்) பயணத்திற்குத் தயாராகி நிற்கும் வரை இஹ்ராம் கட்டி நான் பார்த்ததில்லை.70

5852 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியவர் குங்குமப்பூச் சாயம் அல்லது "வர்ஸ்' எனும் வாசனைச் செடியின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், "(இஹ்ராம் கட்டியிருக்கும்போது) காலணிகள் கிடைக்காதவர், (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்'' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.71

5853 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இஹ்ராமின்போது) கீழங்கி இல்லாதவர் முழுக்கால் சட்டை அணிந்துகொள்ளட்டும். காலணிகள் இல்லாதவர் (மோஸாக்கள் எனும்) காலுறைகளை அணிந்துகொள் ளட்டும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.72

 

 

பாடம் : 38

முதலில் வலது கால் காலணியை அணிய வேண்டும்.

5854 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும், தலைவாரிக்கொள்ளும் போதும், காலணி அணிந்துகொள்ளும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்கு வதையே விரும்பிவந்தார்கள்.73

 

 

பாடம் : 39

முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.

5855 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 40

ஒரேயொரு காலணியில் நடக்கலாகாது.

5856 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்.

 

பாடம் : 41

ஒரு காலணியில் இரண்டு வார்களும் இருக்கலாம்; ஒரே வாரும் இருக்கலாம்.

 

5857 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கüன் காலணிக்கு இரண்டு வார்கள் இருந்தன.

 

5858 ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு வார்கள் கொண்ட இரு காலணிகளை எங்களுக்குக் காட்டினார்கள்.

(பின்னர் இது குறித்துக் கூறுகையில்) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், "இதுதான் நபி (ஸல்) அவர்கüன் காலணியாகும்'' என்று சொன்னார்கள்.74

பாடம் : 42

பதனிடப்பட்ட தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரம்.

5859 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு சிவப்புக் கூடாரத்தில் இருந்தபோது நான் அவர்கüடம் சென்றேன். பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள்  அங்கசுத்தி (உளூ) செய்த தண்ணீரை எடுத்ததை நான் பார்த்தேன். மக்கள் அந்தத் தண்ணீருக்காகப் போட்டி யிட்டனர். அதில் சிறிது கிடைக்கப்பெற்றவர் அதைத் (தமது மேனியில்) தடவிக்கொண்டார். அதிலிருந்து சிறிதும் கிடைக்கப்பெறாதவர் தம் தோழர் கையிலிருந்த ஈரத்தை எடுத்து (தடவி)க்கொண்டார்.75

 

5860 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் .கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோல் கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள்.76

 

 

 

பாடம் : 43

பாய் முதலானவற்றின் மீது அமர்வது.

5861 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக்கொண்டு (அதில்) தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் (கீழே) விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள்.

மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் (இவ்வாறு இரவில் வந்து தொழும்) மக்கள் (எண்ணிக்கை) அதிகமாகி விடவே, நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மக்களே! உங்களால் இயன்ற (நற்) செயல்களையே செய்துவாருங்கள். ஏனெனில், நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படையமாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில், குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்'' என்று சொன்னார்கள்.77

 

 

பாடம் : 44

தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட ஆடை

5862 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், "என் அன்பு மகனே! நபி (ஸல்) அவர்கüடம் மேலங்கிகள் சில வந்திருப்ப தாகவும் அவற்றை அவர்கள் (மக்களிடையே) பங்கிட்டுக்கொண்டிருப்பதாகவும் எனக்குச் செய்தி எட்டியுள்ளது. ஆகவே, எம்மை அவர்கüடம் அழைத்துச் செல்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சென்று நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய வீட்டில் கண்டோம். அப்போது என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், "என் அருமை மகனே! எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு'' என்று சொன்னார்கள். அதை மரியாதைக் குறைவாகக் கருதிய நான், "உங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூப்பிடுவதா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் அன்பு மகனே! (நபி லிஸல்) அவர்கள் சர்வாதிகாரி அல்லர்'' என்று சொல்ல, நான் நபி (ஸல்) அவர்களைக் கூப்பிட்டேன். அப்போது அவர்கள் தங்கப் பித்தான் பொருத்தப்பட்ட அலங்காரப் பட்டு மேலங்கியொன்றை எடுத்துக் கொண்டுவந்து, "மக்ரமாவே! இதை உங்களுக்காக நான் எடுத்து வைத்தேன்'' என்று சொல்லி மக்ரமாவிடம் அதைக் கொடுத் தார்கள்.78

பாடம் : 45

தங்க மோதிரங்கள்

5863 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"தங்க மோதிரம்' அல்லது "தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப் பட்டு, அலங்காரப் பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்)அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாüகளை நலம் விசாரிப்பது, "ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்லி எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் லிஅல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்ட வருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல் களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.79

5864 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரத்தை அணியவேண்டாமென்று (ஆண்களுக்குத்) தடை விதித்தார்கள்.

இது மற்றோர்  அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

5865 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள் பக்கமாக அமையும்படி) வைத்துக்கொண் டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து) கொண்டார்கள். (இதைக் கண்ட)  நபி (ஸல்) அவர்கள் தமது தங்க மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து(அணிந்து)கொண்டார்கள்.80

பாடம் : 46

வெள்ளி மோதிரம்

5866 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தங்க மோதிரம்' அல்லது "வெள்ளி மோதிரம்' ஒன்றைத் தயாரித்து(அணிந்து)கொண் டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங் கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும் படி) வைத்துக்கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று (இலச்சினை) பொறித் தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து(அணிந்து) கொண்டனர். மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து)கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, "நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்'' என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண் டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்துகொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான்

(ரலி) அவர்களும் அணிந்துகொண்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கüடமி ருந்து அது "அரீஸ்' எனும் கிணற்றில்ன் (தவறி) விழுந்துவிட்டது.81

பாடம் : 47

5867 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கமோதிரம் ஒன்றை அணிந்துகொண்டி ருந்தார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்து விட்டு, "நான் இதை இனி ஒருபோதும் அணிய மாட்டேன்'' என்று சொன்னார்கள். மக்களும் தங்களுடைய (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள்.

 

 

5868 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கையில் வெள்ளிமோதிரம் ஒன்றை நான் கண்டேன். பிறகு மக்கள், (அதைப் போன்று)  வெள்ளி மோதிரங்களைச் செய்து (அணிந்து)கொண்டார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் அணிந்திருந்த) தமது (தங்க) மோதிரத்தை(க் கழற்றி) எறிந்தார்கள். பின்னர் மக்களும் தம் (தங்க) மோதிரங்களை(க் கழற்றி) எறிந்துவிட்டனர்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 48

மோதிரக் (கல் பதிக்கும்) குமிழ்

5869 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கüடம், "நபி (ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?'' என்று கேட்கப்பட் டது. அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களுடைய (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக் கிறீர்கள்.)நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத்  தொழுகையிலேயே உள்ளீர்கள். (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)'' என்று சொன்னார்கள்.82

5870 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய மோதிரம் வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதன் (கல் பதிக்கும்) குமிழும் வெள்ளியில் ஆனதாகவே இருந்தது.

இது மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பாடம் : 49

இரும்பு மோதிரம்

5871 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "என்னைத் தங்களுக்கு அன்பüப்பாக வழங்கிட(லிமஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ளலி)வே வந்துள்ளேன்'' என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டுக் பார்வையைத் தாழ்த்திக்கொண்டார்கள்.

அவர் நீண்ட நேரமாக  நின்றுகொண்டி ருப்பதைக் கண்ட ஒருமனிதர் "(அல்லாஹ்வின் தூதரே!) இவர் தங்களுக்குத் தேவையில்லை யென்றால் எனக்கு இவரை மணமுடித்துத் தாருங்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் "இவருக்கு மஹ்ராகலிமணக் கொடையாகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார்கள்.  அம்மனிதர், "ஏதுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(ஏதேனும் கிடைக்குமா என்று) பார்'' என்றார்கள். அந்த மனிதர் (எங்கோ) போய்விட்டுத் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "போய்த் தேடுங்கள். இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரியே'' என்று சொல்ல, அந்த மனிதர் போய்விட்டுத் திரும்பி வந்து, "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை'' என்றார்.

அவர் கீழங்கி அணிந்திருந்தார். அவருக்கு மேல்துண்டு கூட இருக்கவில்லை. அந்த மனிதர், "எனது கீழங்கியை அவளுக்கு நான் மணக் கொடையாக வழங்குகிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமது கீழங்கியா? அதை இவள் அணிந்து கொண்டால் அதிலிருந்து உம் மீது ஏதும் இருக்காது. அதை நீர் அணிந்துகொண்டால் அதிலிருந்து இவள் மீது ஏதும் இருக்காது'' என்று சொன்னார்கள். உடனே அம்மனிதர் சற்று ஒதுங்கி அமர்ந்துகொண்டார். பிறகு அவர் திரும்பிச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரச்சொல்ல அவரும் அழைத்து வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?'' என்று கேட்க, அவர் இன்னின்ன அத்தியாயங்கள் என்று சில அத்தியாயங்களை எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக் காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் செய்துவைத்தேன்'' என்று சொன்னார்கள்.83

பாடம் : 50

மோதிரத்தில் இலச்சினை (சின்னம்) பதித்தல்

5872 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாதவர் களான (ரோம் நாட்டைச் சேர்ந்த) "ஒரு குழுவினருக்கு' அல்லது "மக்கüல் சிலருக்கு'க் கடிதம் எழுத விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், "அரபியரல்லாதோர் முத்திரையுள்ள கடிதத்தையே ஏற்றுக் கொள்வார்கள்'' என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித் தார்கள். இப்போதும் நான் "நபி (ஸல்) அவர்கüன் விரலில்' அல்லது "அவர்கüன் கையில்' அந்த மோதிரம் மின்னியதைப் பார்ப்பது போன்றுள்ளது.

5873 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அது (அவர்கüன் வாழ்நாüல்) அவர்களுடைய கையில் இருந்தது. பிறகு, அபூபக்ர் (ரலி) அவர் களுடைய கையில் இருந்தது. பிறகு, உமர் (ரலி) அவர்களது கையில் இருந்தது. பிறகு, உஸ்மான் (ரலி) அவர்களுடைய கையில் இருந்தது. இறுதியில் அது "அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்றிருந்தது.84

பாடம் : 51

சுண்டு விரலில் மோதிரம் அணிதல்

5874 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மோதிரம் ஒன்றை தயார் செய்து, "நாம் மோதிரம் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதில் ("முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்ற) இலச்சினை ஒன்றைப் பொறித்துள்ளோம். ஆகவே, அதைப் போன்று வேறெவரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடைய சுண்டுவிரலில் அது மின்னியதை இப்போதும் நான் (என் மனத் திரையில்) பார்க்கின்றேன்.85

 

பாடம் : 52

முத்திரை பதிப்பதற்காக, அல்லது வேதக் காரர்கள் முதலானோருக்கு மடல் வரைவதற் காக மோதிரம் தயாரித்(து அணி)தல்.86

5875 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பிய போது அவர்கüடம், "தங்கள் கடிதம் முத்திரையிடப்படாமலிருந்தால் அதை ரோமர்கள் ஒருபோதும் படிக்கமாட்டார்கள்'' என்று கூறப்பட்டது.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களுடைய கையில் (பிரகாசித்த) அதன் வெண்மையை (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது.87

பாடம் : 53

மோதிரக் குமிழை உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்துகொள்வது.

5876 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைச் செய்து, அதன் குமிழைத் தமது உள்ளங்கைப் பக்கமாக வைத்து அணிந்து கொண்டார்கள். மக்களும் (அவ்வாறே) தங்க மோதிரங்களைச் செய்தனர். (இதற்கிடையில் ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நான் அதைச் செய்திருந்தேன். ஆனால் அதை நான் இனி அணியமாட்டேன்'' என்று கூறிவிட்டு அதை(க் கழற்றி) எறிந்துவிட்டார்கள். மக்களும் எறிந்து விட்டனர்.88

(அறிவிப்பாளர்கüல் ஒருவரான) ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் ளநபி (ஸல்) அவர்கள் மோதிரத்தைத்ன தமது வலக் கையில் அணிந்துகொண்டார்கள்'' என்று சொன்னதாகவே நான் எண்ணுகிறேன்.

பாடம் : 54

"எனது மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

5877 அனஸ் பின் மாலிக் (ரலி)அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், "நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என இலச்சினை பொறித்துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.89

 

பாடம் : 55

மோதிரத்தில் மூன்று வரிகüல் இலச்சினை பொறிக்கலாமா?

5878 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபா (ஆட்சித் தலைவராக) ஆக்கப்பட்டபோது அவர்கள் (ஸகாத்தின் அளவை விளக்கி) எனக்குக் கடிதம் எழுதினார்கள். அப்போது (அதில் காணப்பட்ட) மோதிர (முத்திரையின்) இலச்சினை மூன்று வரிகள் கொண்டதாயி ருந்தது. "முஹம்மது' என்பது ஒரு வரியிலும், "ரசூல்' என்பது ஒரு வரியிலும், "அல்லாஹ்' என்பது ஒரு வரியிலும் இருந்தது.

5879 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய மோதிரம் (அவர்களது வாழ்நாüல்) அவர்களுடைய கரத்திலேயே இருந்தது. அவர்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்கüன் (ஆட்சிக் காலத்தில் அபூபக்ரின்) கரத்தில் இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின் உமர் (ரலி) அவர்கüன் (ஆட்சிக் காலத்தில் உமரின்) கரத்தில் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கüன் ஆட்சிக் காலம் வந்தபோது அவர்கள் (ஒரு முறை) அரீஸ் எனும் கிணற்றின் (விளிம்பின்) மீது அமர்ந்திருந்த சமயத்தில் (ஏதோ சிந்தைனையில் தம்மையறியாமல்) மோதிரத்தைக் கழற்றுவதும் அணிவதுமாக இருந்தார்கள். அப்போது அது (தவறி கிணற்றுக்குள்) விழுந்துவிட்டது. (அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக) உஸ்மான்

(ரலி) அவர்களுடன் நாங்கள் மூன்று நாட்கள் (அங்கு) போய்வந்துகொண்டிருந்தோம்.

பிறகு, கிணற்று நீரை இரைத்து(த் தூர்வாரி)ப் பார்த்தார்கள். அப்போதும் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை.90

பாடம் : 56

பெண்கள் மோதிரம் அணிவது

ஆயிஷா (ரலி) அவர்கள் தங்க மோதிரங்களை அணிந்திருந்தார்கள்.

5880 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (நோன்புப்) பெருநாü(ன் தொழுகையி)ல் கலந்துகொண்டேன். அவர்கள் (அன்று) உரையாற்றுவதற்கு முன்பாகத் தொழுதார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

"பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட் டார்கள். உடனே பெண்கள் (தம்) மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால்  (ரலி) அவர்களின் துணியில் போடலானார்கள்'' என்று இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் அதிகப் படியாக இடம்பெற்றுள்ளது.91

பாடம் : 57

பெண்கள் கழுத்தணிகளையும் நறுமண மாலைகளையும் அணிதல்.

இது (சந்தன மாலை போன்ற) நறுமண மாலைகளைக் குறிக்கும்.

5881 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (தொழுகைத் திடலுக்குப்) புறப்பட்டுவந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் (தொழுகை எதுவும்) தொழவில்லை. பிறகு பெண்கüடம் வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்கு உத்தர விட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காதணிகளையும் நறுமண மாலைகளையும் (கழற்றி) தர்மமாகத் தரலானார்கள்.

 

பாடம் : 58

கழுத்து மாலைகளை இரவல் வாங்குதல்

5882 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடமிருந்து) அஸ்மா (ரலி) அவர் கüன் மாலையொன்று (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்)ன் தொலைந்து போய்விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள். (தேடிச் சென்றபோது) தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்கüடம் அங்கசுத்தி (உளூ) செய்யத் தண்ணீர் இல்லை. (அந்த இடத்தில்) அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவுமில்லை. அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள்.  இந்த விஷயத்தை அவர்கள் (திரும்பி வந்து) நபி (ஸல்) அவர்கüடம் சென்னார்கள். அப்போது அல்லாஹ் "தயம்மும்' (செய்து கொள்ள அனுமதி வழங்கும்) வசனத்தை அருüனான்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், "அந்தக் கழுத்து மாலையை நான் (என் சகோதரி) அஸ்மாவிடமிருந்து இரவல் வாங்கியி ருந்தேன்'' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.92

பாடம் : 59

பெண்கள் கம்மல் அணிவது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் காதுகளையும் கழுத்துகளையும் நோக்கி (அவற்றிலுள்ள நகைகளைக் கழற்றித் தர கைகளைக் கொண்டு) சென்றதை நான் கண்டேன்.93

5883 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நோன்புப்) பெருநாளன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவர்கள் (கூடுதலாக) எதையும் தொழ வில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கüடம் (மகளிர் பகுதிக்கு) வந்து தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். உடனே, ஒரு பெண் தனது கம்மலை(க் கழற்றி)ப் போடலானார்.

 

பாடம் : 60

குழந்தைகளுக்கான நறுமண மாலைகள்

5884 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் ("பனூ கைனுகா' கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ளஃபாத்திமா (ரலி) அவர்கüன் வீட்டுக்குச்ன செல்லவே நானும் (அவர் களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) "பொடிப் பையன் எங்கே?'' என்று மும்முறை கேட்டார்கள். பிறகு "அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி  நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்த படி ளநபி (ஸல்) அவர்களை அணைத்திடன அவர்களை நோக்கி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்த பிறகு அலீயின் புதல்வர் ஹசன் (ரலி) அவர்களை விட வேறெவரும் எனக்கு அதிகப் பிரியமான வராக இருக்கவில்லை.94

பாடம் : 61

பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களும் ஆண்களைப் போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களும்.

5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்கüல் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்கüல் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடம் : 62

பெண்களைப் போன்று நடந்துகொள் பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெüயேற்றுதல்.

5886 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், "அவர்க(üல் அலிக)ளை உங்கள் வீடுகüலிருந்து வெüயேற்றுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெüயேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெüயேற்றினார்கள்.95

5887 (நபியவர்களுடைய துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) "அலி' ஒருவர் இருந்த போது நபி (ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா விடம் "அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றி யüத்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "(அலிகளான) இவர்கள் உங்கüடம் ஒரு போதும் வர வேண்டாம்'' என்று சொன் னார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகüன் காரணத்தால் "முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்'' என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகüன் ஓரங்கள் இரு புறங்கüலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் "பின்பக்கம் எட்டு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்'' என்று கூறினார்.96

"தரஃப்' (ஓரம்) எனும் சொல் ஆண்பாலாயினும், அது வெüப்படையாகக் குறிப்பிடப்படாததால் "அர்பஉ' (நான்கு), "ஸமான்' (எட்டு) ஆகிய எண்கள் (இலக்கண விதிக்கு மாறாக) ஆண்பாலாகவே (மூலத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளன.

பாடம் : 63

மீசையைக் கத்தரிப்பது

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.

 

5888 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

5889  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக்கொள்வது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகüல் அடங்கும்

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 64

நகங்களை வெட்டுதல்

5890 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியன இயற்கை மரபுகüல் அடங்கும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

5891 நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:

இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்துகொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவைதாம் அவை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

5892 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ளஇதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

பாடம் : 65

தாடிகளை அப்படியே வளரவிடுதல்

(7:95ஆவது இறைவசனத்தின் மூலத்தி லுள்ள) "அஃபவ்' எனும் சொல்லுக்கு "அவர்கள் பெருகினார்கள்; அவர்களுடய செல்வங்களும் பெருகின' என்று பொருள்.98

5893 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

பாடம் : 66

நரை பற்றிய குறிப்பு

5894 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்கüடம், "நபி (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்)அவர்களுக்குச் சிறிதளவே நரை ஏற்பட்டிருந்தது'' என்று பதிலüத்தார்கள்.99

5895 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கüடம், "நபி (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களுக்குச் சாயம் பூசுகின்ற அளவிற்கு நரைக்கவில்லை. அவர்களுடைய தாடியிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும்'' என்று பதிலüத்தார்கள்.

5896 உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கüடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்கüன் முடிகüல் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டு விட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்கüடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர் கüன் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாü குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.

அறிவிப்பாளர் இஸ்ராயீல் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள், (சிமிழின் அளவைக் காட்டும் விதத்தில்) தம் மூன்று விரல்களை மடித்துக் காட்டினார்கள்.

5897 உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மு சலமா (ரலி) அவர்கüடம் சென்றேன். அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் முடிகüலிருந்து சாயமிடப்பட்ட ஒரு முடியை எங்கüடம் எடுத்துக் காட்டினார்கள்.

 

 

 

5898 உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் முடியை சிவப்பானதாக எனக்குக் காட்டினார்கள்.100

 

பாடம் : 67

(நரை முடிக்குச்) சாயமிடுதல்101

5899 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடி களுக்குச்) சாயமிடுவதில்லை; ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.102

 

பாடம் : 68

சுருள் முடி

5900 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை; குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர் களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. (மாறாக, இவற்றில் நடுநிலையாளராக இருந்தார்கள்.) நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் தூதராக நியமித்தான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் (வஹீ நின்றுபோன மூன்று ஆண்டுகள் நீங்கலாக) பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள். அவர் களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.103

5901 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிவப்பு நிற ஆடையில் நபி (ஸல்) அவர்களைவிட  அழகானவராக வேறெவரை யும் நான் பார்க்கவில்லை.

 அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்:

மாலிக் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்கüடமிருந்து என் தோழர்களில் ஒருவர், "நபி (ஸல்) அவர்கüன் தலைமுடி (நீண்டு வளர்ந்திருக்கும் சமயத்தில்) அவர் களுடைய தோள்களைத் தொட்டுக்கொண்டி ருந்தது'' என்று அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஇஸ்ஹாக்  அம்ர் பின் அப்தில்லாஹ் அஸ்ஸபீஈ (ரஹ்)  அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை பராஉ (ரலி) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அறிவிப்பதை நான் கேட்டிருக்கிறேன். இதை அறிவிக்கும் போதெல்லாம் அவர்கள் சிரிக்காமல் இருந்த தில்லை. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிட மிருந்து  ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், "நபி (ஸல்) அவர்கüன் (தலை) முடி அவர்களுடைய  காதின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது'' என்று இடம்பெற்றுள்ளது.104

5902 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்கüல் மா நிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மா நிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட முடிகüல் நீ பார்த்த வற்றிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டி ருந்தது. அவர் "இரு மனிதர்கüன் மீது சாய்ந்த படி' அல்லது "இரு மனிதர்கüன் தோள்கள் மீது சாய்ந்தபடி' இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். நான், "யார் இவர்?'' என்று கேட்டேன். மர்யமின் குமாரர் மஸீஹ் (ஈசா)''  என்று பதிலüக்கப்பட்டது. அப்போது அங்கே கடும் சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், "யார் இவன்?'' என்று கேட்டேன். "மஸீஹுத் தஜ்ஜால்'' என்று பதிலளிக்கப்பட்டது.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105

5903 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கüன் (தலை) முடி அவர்களுடைய தோள்கüல் பட்டுக் கொண்டிருந்தது.

 

5904 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கüன் (தலை) முடி அவர்களுடைய தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தது.

5905 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கüடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லைசுருள் முடியாகவும் இல்லை; அவர்கüன் காது மடல்களுக்கும் அவர்களுடைய தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டி ருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

5906 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள் உடையவர்களாக இருந்தார்கள். அவர் களுக்குப் பின் அவர்களைப் போல (வேறு யாரையும்) நான் பார்க்கவில்லை. நபி (ஸல்) அவர்களுடைய (தலை) முடி அலையலை யானதாக இருந்தது. படிந்ததாகவும் இல்லைசுருள் முடியாகவும் இல்லை.

5907 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:       நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போல (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களுடைய உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.

5908,5909 அனஸ் பின் மாலிக் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பருத்த பாதங்களை     உடையவர்களாகவும் அழகிய முகம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போல் (வேறெவரையும்) நான் பார்க்கவில்லை.

5910 அனஸ் (ரலி) அவர்கள் கூறியாவது:

நபி (ஸல்) அவர்கள் உறுதியான பாதங்களும் (உறுதியான) உள்ளங்கைகளும் உடையவர்களாக இருந்தார்கள்.

5911,5912 அனஸ் (ரலி), அல்லது ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பருத்த உள்ளங் கைகளும் பருத்த பாதங்களும் உடையவர் களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பின் அவர்களைப் போன்றவர் எவரையும் நான் பார்க்கவில்லை.

5913 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தார்கள். அப்போது ஒருவர், "அவனுடைய இரு கண்களுக்குமிடையே "காஃபிர்' (இறை மறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்'' என்று சொன்னார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நான் இவ்வாறு கேள்விப்பட்ட தில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், "(இறைத் தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய) உருவ அமைப்பில் இருந்தார் என்று அறியவேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னைப்) பாருங்கள். மூசா (அலைலி அவர்கள் எத்தகையவர் என்றால்) அவர்கள் பழுப்பு நிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்ட வர்கள்; ஈச்ச மர நாரினால் மூக்கணாங் கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) "தல்பியா' கூறியபடி ("அல்அஸ்ரக்' எனும்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக்  கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பது போன்று உள்ளது'' என்று சொன்னார்கள் எனத் தெரிவித்தார்கள்.106.

பாடம் : 69

தலைமுடியைக் கüம்பு தடவிப் படிய வைத்தல் (தல்பீத்).107

5914 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், "(தலையில்) சடை வளர்த்திருப்பவர் (ஹஜ்ஜின் முடிவில் தலை முடியை) மழித்துக் கொள்ளட்டும். (சடை வளர்ப்பதன் மூலம்) கüம்பு தடவித் தலை முடியைப் படிய வைப்பவர்களுக்கு ஒப்பாகிவிட வேண்டாம்'' என்று சொல்ல நான் கேட்டேன்.

ளஇதை அறிவிப்பவரான சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன

(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலை முடியைக் கüம்பு தடவிப் படிய வைத்துக்கொண்டதை நான் பார்த்தேன்'' என்று கூறுவார்கள்.108

5915 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோது) தலை முடியைக் கüம்பு தடவிப் படியவைத்தவர் களாக, "லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க, லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக்க, இன்னல் ஹம்த வந்நிஅமத்த ல(க்)க வல்முல்(க்)க, லா ஷரீ(க்)க லக்க'' என்று கூற நான் கேட்டேன். இந்த வார்த்தைகளைவிட அதிகமாக அவர்கள் எதையும் கூறவில்லை. (பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன். இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். இணையில்லாதோனே! உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாணவர் எவருமில்லை).109

5916 நபி (ஸல்) அவர்கüன் துணைவியார்   ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ள"விடைபெறும்' ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கüடம்ன, "அல்லாஹ்வின் தூதரே! மக்கüன் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து இன்னும் விடுபடாமலிருக்க அவர்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் கüம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். மேலும், என் தியாக(குர்பானி)ப்பிராணிக்கு (அடையாள) மாலை தொங்கவிட்டுவிட்டேன்.ஆகவே, நான் (ஹஜ் செய்து, அந்தப் பிராணியை) அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்'' என்று பதிலüத்தார்கள்.110

பாடம் : 70

தலை முடியில் வகிடு எடுத்தல்

5917 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) எந்த விஷயங்கüல் தமக்கு (இறைக்) கட்டளை ஏதும் இடப்பட வில்லையோ அந்த விஷயங்கüல் வேதக் காரர்களுடன் ஒத்துப்போவதை விரும்பி வந்தார்கள். வேதக்காரர்கள் தங்களது தலை முடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்கள் தங்கள் தலை (முடி) களை வகிடு எடுத்துப் பிரித்துவந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (முதலில்) முன் தலைமுடியை (நெற்றியில்) தொங்கவிட்டு வந்தார்கள். பிறகு அதை (வகிடெடுத்து)ப் பிரித்தார்கள்.111

5918 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோது அவர்கüன் தலை வகிடுகüல் (அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு முன் பூசியிருந்த) நறுமணப் பொருள் மின்னியதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அப்துல்லாஹ் பின் ரஜாஉ (ரஹ்) அவர்கüன் அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கüன் வகிட்டில்'' என்று (ஒருமையாக) வந்துள்ளது.

பாடம் : 71

தொங்கும் முடிகள்

5919 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன என் சிறிய தாயார் மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கüன் இல்லத்தில் நான் ஓரிரவு தங்கினேன்.  அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்கüடம் தங்கியிருந்தார்கள். இரவில் ("தஹஜ்ஜுத்' தொழுகை) தொழுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நான் (எழுந்து) அவர்களுக்கு இடப் பக்கமாக(ப் போய்) நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் தொங்கும் முடியைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் என்னை நிறுத்திக்கொண்டார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூபிஷ்ர் (ரஹ்) அவர்களுடைய இந்த அறிவிப்பில், "என் தொங்கும் முடியைப் பிடித்து' அல்லது "என் தலையைப் பிடித்து' என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.112

பாடம் : 72

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது).

5920 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி ("கஸஉ') வைத்துக்கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர் கüடம் " "கஸஉ' (குடுமி) என்றால் என்ன?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஒருவர் சிறுவனின் தலை முடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கும் அங்குமாக (சிற்சில இடங்கüல் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்'' என்று கூறி, தமது நெற்றி முடி மற்றும் தலையின் இரு பக்கங்களையும் எங்கüடம் சுட்டிக் காட்டினார்கள்.

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கüடம், "சிறுமி, சிறுவன் இருவருக்கும் இதே சட்டம் தானா?'' என்று கேட்கப்பட்டது? அவர்கள் "எனக்குத் தெரியாது. ஆனால், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் "சிறுவன்' என்று (மட்டும்)தான் சொன்னார்கள்'' என பதிலüத்துவிட்டு, "இது தொடர்பாக உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கüடம் திரும்பத் திரும்ப நான் கேட்டதற்கு அவர்கள், "சிறுவனுக்கு நெற்றியின் இருபக்க முடி களையும் பிடறி முடிகளையும் அப்படியே விட்டுவிடுவதால் எந்தத் தவறும் இல்லை. ஆனால், "கஸஉ' என்பது அவனது தலையில் முடி எதுவும் இல்லாதிருக்க அவனுடைய நெற்றியில் மட்டும் முடியை அப்படியே விட்டுவிடுவதாகும் (இதுதான் கூடாது). இவ்வாறே தலையின் ஒரு பக்கம் மட்டும் முடியை மழித்து மறுபக்கம் அப்படியே விட்டு விடுவதும் கூடாது'' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.

5921 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

பாடம் : 73

மனைவி தன் கரங்களால் கணவனுக்கு நறுமணம் பூசுவது.

5922 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்' கட்டிய போது நான் அவர்களுக்கு என் கையால் நறுமணம் பூசிவிட்டேன். மேலும், (இஹ்ராமி லிருந்து அவர்கள் விடுபட்டபோதும்) "மினா'வில்ன் வைத்து (அங்கிருந்து) அவர்கள் (தவாஃபுஸ் ஸியாரத் செய்ய) புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.

 

பாடம் : 74

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

5923 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்கு, அவர்கüடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருüன் மினுமினுப்பை  அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

 

 

பாடம் : 75

சீப்பினால் தலை வாருதல்

5924 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக  நபி (ஸல்) அவர்கüன் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்'' என்று சொன்னார்கள்.

பாடம் : 76

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன் கணவருக்குத் தலை வாரிவிடுவது.

5925 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தலையை நான் வாரிவிட்டிருக்கிறேன்.

 

 

..... இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கüட மிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.113

 

பாடம் : 77

தலை வாருவதும், அதை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதும்.

5926 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தலைவாரிக் கொள்ளும்போதும் சரி, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யும்போதும் சரி இயன்ற வரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.114

 

பாடம் : 78

கஸ்தூரி பற்றிய குறிப்பு

5927 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(அல்லாஹ் கூறுகின்றான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பும் அளவிற்கு) நானே பிரதிபலன் அüக்கிறேன்.

ளமேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ன

நோன்பாüயின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையைவிட அல்லாஹ் விடம் நறுமணமிக்கதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115

பாடம் : 79

விரும்பத்தகுந்த நறுமணப் பொருள்

5928 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய போது நான் அவர்களுக்கு என்னிடமிருந்த திலேயே மிக நல்ல வாசனைப் பொருளைப் பூசிவந்தேன்.116

பாடம் : 80

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

5929 ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (தமக்கு அன்பüப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள் வார்கள். மேலும், அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அன்பüப்பாக அüக்கப் பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை'' என்று கூறினார்கள்.117

 

பாடம் : 81

("தரீரா' எனும்) வாசனைத் தூள்118

5930 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) "விடைபெறும்' ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரு கைகளால் அவர்களுக்கு ("தரீரா' எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

 

பாடம் : 82

அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள்.119

5931 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! நபி (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அல்லாஹ்வின் வேதத்திலும் அது உள்ளதே! "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கி விலகியிருங்கள்'' ளஎன்பதே அந்த (59:7ஆவது) வசனம்ன.120

பாடம் : 83

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்வது.

5932 ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற் பொழிவு மேடையின் மீது நின்றுகொண்டு (மெய்க்) காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்துக் காட்டி, "(மதீனாவாசிகளே!) உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடை செய்து, "பனூஇஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் அவர்களுடைய பெண்கள் இதைப் பயன்படுத்தியபோதுதான்' என்று சொல்ல நான் கேட்டேன்'' எனக் கூறினார்கள்.121

 

 

5933 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

5934 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம்  கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும்  அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)'' என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கüட மிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122

 

 

 

 

5935 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து, "நான் என் மகளுக்கு மணமுடித்துவைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். ஆகவே, அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?'' என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின்

தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.

5936 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்  ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்ப வளையும் ("அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்' என்று) சபித்தார்கள்.

 

5937 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்            கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும்  ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்ப வளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.)

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "பல் ஈறுகüலும் பச்சை குத்தப் படுவதுண்டு'' என்று சொன்னார்கள்.

5938 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, "இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செயவதை நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் இதை போலி ("ஸூர்') என அழைத்தார்கள்'' என்று ஒட்டுமுடி வைப்பதைக் குறிப்பிட்டுச் சொனனார்கள்.123

 

பாடம் : 84

(அழகிற்காக) முகத்தின் முடியை நீக்கிக் கொள்ளும் பெண்கள்.124

5939 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக் கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள். (இதைக் கேள்விப் பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், "என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?'' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார் களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?'' என்று கேட்டார் கள். அதற்கு அந்தப் பெண், "அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்'' (எனும் 59:7ஆவது வசனமே அது) என்று பதிலüத்தார்கள்.125

பாடம் : 85

ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்126

5940 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்ப வளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள்.

5941 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கüடம் ஒரு பெண்மணி,         "அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத் தால் அவளுடைய தலைமுடி கொட்டி விட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து கின்றான்)'' என்று சொன்னார்கள்.127

5942 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

 

 

5943 அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத் தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!'' என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே'' என்று சொன்னார்கள்.128

பாடம் : 86

பச்சை குத்திவிடும் பெண்

5944    அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்'' என்று சொன்னார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.129

 

.....        இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

5945 அவ்ன் பின் அபீஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ளஅபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவருடைய குருதி உறிஞ்சு கருவிகளை உடைத்தபோதுன அவர்களை நான் கண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்).130

பாடம் : 87

பச்சை குத்திக்கொள்ளும் பெண்

5946 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்கüடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் வின் பொருட்டால் உங்கüடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்கüடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (யாராவது உங்கüல்) இருக்கின்றாரா?'' என்று (எங்கüடம்) கேட்டார்கள். நான் எழுந்து, "இறைநம்பிக்கையாளர்கüன் தலைவரே! நான்செவியுற்றிருக்கிறேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "என்ன செவியுற்றீர்கள்?'' என்று கேட்க, "(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் எனக் கூறினேன்.

5947 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்ப வளையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள்.

5948 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன்

சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளது.131

பாடம் : 88

உருவப் படங்கள்

5949 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.132

இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

பாடம் : 89

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாüல் கிடைக்கும் வேதனை.

5950 முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யசார் பின் நுமைர் (ரஹ்) அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது யசார் (ரஹ்) அவர்கüன் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கண்டார்கள்.

உடனே "அல்லாஹ்விடம் மறுமை நாüல் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்'' என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

5951அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படு வார்கள். அவர்களிடம், "நீங்கள் படைத்த வற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 90

உருவப் படங்களைச் சிதைத்தல்

5952 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்த தில்லை.

 

 

5953 அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக் காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்'' என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், "அபூஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?'' எனக் கேட்க, அவர்கள், "(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும் போது அக்குள்வரை) வெண்மை பரவும்'' ளஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ன என்றார்கள்.

பாடம் : 91

காலால் மிதிபடும் உருவப் படங்கள்

5954 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த எனது திரைச் சீலையொன்றால் நான் எனது அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்'' என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.133

 

5955 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்க விட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி விடும்படி என்னைப் பணித்தார்கள். ஆகவே, நான் அதைக் கழற்றிவிட்டேன்.

5956 ளமேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:ன

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (அள்ளி, ஒன்றாகக்) குüத்துவந்தோம்.

பாடம் : 92

உருவப் படங்கள் மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள்.

5957 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (உயிரினங்களின்) உருவப் படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், "நான்

செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "இந்தத் திண்டு என்ன?'' என்று கேட்டார்கள். நான், "இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், "இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாüல் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கüடம், "நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.134

 

5958 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்கüன்) உருவப் படம்  உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்கüல் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர் களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம்.  அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கüடம் , "உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?'' என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், "துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர' என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டார்கள்.135

இந்த ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்கüடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 93

உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவது வெறுக்கப்பட்டதாகும்.

5959அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கüடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந் தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், "இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப் படங்கள் என் தொழுகை யில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக் கின்றன'' என்று சொன்னார்கள்.136

 

பாடம் : 94

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.

5960 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கüடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்கüத்திருந்தார்கள். ஆனால், அவரது வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (ஸல்) அவர்களுக்குத் கவலை உண்டானது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் வெüயே புறப்பட ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல் (அலை) அவர்கüடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், "(வானவர்களாகிய) நாங்கள் உருவப் படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்.137

பாடம் : 95

உருவப் படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது.

5961 நபி (ஸல்) அவர்கüன் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர் கüன் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது. நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விட மும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?'' என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்ன திண்டு இது?'' என்று கேட்டார்கள். நான், "நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வதற் காகவும்தான் இதை வாங்கினேன்'' என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாüல் வேதனை செய்யப்படுவார்கள். அவர்கüடம், "நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என்று சொல்லப்படும்'' எனச் சொன்னார்கள்.

மேலும், உருவப் படங்கள் இருக்கும் வீட்டினுள் (இறைக் கருணையை கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்'' என்றும் சொன்னார்கள்.138

பாடம் : 96

உருவப் படம் வரைவோரைச் சபித்தல்

5962 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவருடைய குருதி உறிஞ்சு கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள். மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்ப வளையும் உருவப் படங்களை வரைகின்ற வனையும் சபித்தார்கள்.139

பாடம் : 97

உருவப் படம் வரைகின்றவன் மறுமை நாüல் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது.

5963 நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கüடம் இருந்தேன். அவர்கüடம் மக்கள் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்கம்) கேட்கப்படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூற மாட்டார்கள்.

அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலüக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "உலகில் ஓர் உருவப் படத்தை வரைகின்றவர் மறுமை நாüல் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப் படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது'' என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

பாடம் : 98

வாகனத்தில் ஒருவர் தமக்குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது.

5964 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது "ஃபதக்' நகர் முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டார்கள்.140

 

 

பாடம் : 99

ஒரே வாகனப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது.

5965 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம் அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்கüல்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தமது ஒட்டகத்தில்) அமர்த்திக்கொண்டார்கள்.

பாடம் : 100

வாகனப் பிராணியின் உரிமையாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது.

(அறிஞர்கüல்) சிலர் கூறினர்: வாகனத்தின் உரிமையாளரே அதன் முற்பகுதியில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் தம்முடன் அமர்பவருக்கு முற்பகுதியில் உட்கார அனுமதியüத்தால் அவர் உட்காரலாம்.

5966 அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இக்ரிமா (ரஹ்) அவர்கள் முன்னிலையில், "(வாகனப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக்கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?'' என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது இக்ரிமா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது மக்காவுக்கு) வந்தார்கள். ளஅவர்களை வரவேற்ற சிறுவர்கüல் அப்பாஸ் (ரலி) அவர்கüன் புதல்வர்களானன "குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்' அல்லது "ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்' நபி (ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) "யார் தீயவர்?' அல்லது "யார் நல்லவர்?' என்று கூறமுடியுமா?'' என்று கேட்டார்கள்.

பாடம் : 101

(வாகனத்தில்) ஒருவருக்குப் பின்னால் ஒருவர் அமர்வது.

5967 முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்துகொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஆதே!'' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், "முஆதே'' என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) "முஆதே!' என்றார்கள். (அப்போதும்) நான் "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)'' என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், "மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "மக்கள் மீது அல்லாஹ்வுக் குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும்'' என்றார்கள்.

இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபலே'' என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (சொல்லுங்கள்)'' என்று பதில் கூறினேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல்) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) மக்களை அவன்  (மறுமையில்) வேதனைப்படுத்தாமல் இருப்பது தான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும்'' என்று சென்னார்கள்.141

பாடம் : 102

(வாகனத்தில்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்து கொள்வது.

5968 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா

(ரலி) அவர்கள் சென்றுகொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்துகொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய வாகனத்தில்) அவர்கüன் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது (நபியவர்கüன்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் "(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!'' என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உங்கள் அன்னை'' என்று சொனனார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன்.  உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை "நெருங்கியபோது' அல்லது "பார்த்தபோது' நபி (ஸல்) அவர்கள் "பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கிறோம்)'' என்று கூறினார்கள்.142

பாடம் : 103

மல்லாந்து படுப்பதும், ஒரு காலை மற்றொரு கால் மீது வைத்துக்கொள்வதும்.

5969 அப்துல்லாஹ் பின் ஸைத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்கüல் ஒன்றை மற்றொன்றின் மீது தூக்கி வைத்த வர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை நான் பார்த்தேன்.143

 

November 6, 2009, 9:49 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top