67-திருமணம்4

 

பாடம் : 101

கன்னிகழிந்த பெண்(ணான மனைவி) இருக்க கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால்...?

5213 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாட்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாட்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் (கா-த், அல்லது அபூ கிலாபா) கூறுகிறார்: இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் ளஅது தவறாகாது; எனினும், அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதன்படி நபிவழி' என்று கூறியுள்ளேன்.ன

பாடம் : 102

கன்னிப் பெண்(ணான மனைவி) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை ஒருவர் மணந்தால்...?

5214 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கன்னிகழிந்த பெண் (ஒருத்தி மனைவியாக) இருக்க, கன்னிப் பெண்ணை மணந்து கொண்டால் முதலில் கன்னிப் பெண்ணிடம் ஏழு நாட்கள் தங்குவார். பிறகு (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார்.

ஒருவர் கன்னிப் பெண் (ஒருத்தி மனைவி யாக) இருக்க, கன்னிகழிந்த பெண்ணை மணந்தால் (முதலில்) கன்னிகழிந்த பெண்ணி டம் மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகுதான் (மற்ற மனைவிக்கு இரவை) ஒதுக்குவார். இதுவே நபிவழியாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் நினைத்தால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொல்ல முடியும். (அது தவறாகாது. ஆயினும், முறைப் படி அனஸ் அவர்கள் கூறிய பிரகாரமே அறிவித்துள்ளேன்.)

மற்றோர் அறிவிப்பில், கா-த் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நினைத்தால் இதை நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்று சொல்லமுடியும்.

பாடம் : 103

ஒரே குளியலில் ஒருவர் தம் மனைவியர் அனைவரிடமும் சென்றுவருவது.146

5215 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் எல்லா துணைவியரிடமும் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அப்போது அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.147

பாடம் : 104

ஒருவர் தம் துணைவியரைச் சந்திக்க பகலில் செல்வது

5216 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் தம் துணைவியரிடம் செல்வார்கள். அப்போது அவர்களில் சிலருடன் நெருக்கமாக இருப் பார்கள். அவ்வாறே (ஒரு நாள்) தம் துணைவி யாரான ஹஃப்ஸாவிடம் சென்று வழக்க மாகத் தங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தங்கினார்கள்.

பாடம் : 105

ஒருவர் தம் துணைவியரில் குறிப்பிட்ட ஒருவரது இல்லத்தில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற (மற்றவர்களிடம்) அனுமதி கோரி, அவர் களும் அவருக்கு அனுமதியளித்தால் (அது செல்லும்).

5217 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்? என்று எனது (முறைவரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கிக்கொள்ளலாம் என அவர்களுக்கு அனுமதியளித்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை எனது வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் தான் என் வீட்டில் வைத்து இறப்பெய்தினார்கள். எனது நெஞ்சுக்கும் நுரையீரலுள்ள பகுதிக்கும் இடையே அவர்களது தலை இருந்த போது, (மிஸ்வாக் குச்சியை என் வாயால் கடித்து மென்மைப்படுத்திக் கொடுத் திருந்ததால்) அவர்களின் உமிழ்நீர் என் உமிழ் நீருடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.148

பாடம் : 106

ஒருவர் தம் துணைவியரில் ஒருவரை மற்றவரை விட அதிகமாக நேசிப்பது.

5218 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளஎன் அண்டை வீட்டு அன்சாரி நண்பர், நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விவாகவிலக்குச் செய்துவிட்டதாகத் தந்த தவறான தகவலையடுத்து நான் என் மகள்ன ஹஃப்ஸாவிடம் சென்று, என்னருமை மகளே! தம் அழகும், தம் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டுள்ள அன்பும் யாரைக் குதூகலப்படுத்தியுள்ளதோ அவர் -ஆயிஷா- (நபியவர்களிடம் சற்று கூடுதல் உரிமை எடுத்துக்கொள்வது) கண்டு நீ ஏமாந்துவிடாதே! என்று கூறினேன். பிறகு இந்தச் சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் எடுத்துரைத்த போது அவர்கள் புன்னகைத்தார்கள்.149

பாடம் : 107

தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக்கொள்வதும், தடைசெய்யப்பட்ட சக்களத்திப் பெருமையும்.

5219 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கிய தாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமா குமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிற வர், போ-யான இரு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போ-யான மேல் மற்றும் கீழ் ஆடை களை) அணிந்து கொண்டவர் போலாவார் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

பாடம் : 108

ரோஷம்கொள்வது.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு வியப்படைகின்றீர்களா? நான் சஅதை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிடவும் ரோஷக்காரன் என்று சொன்னார்கள்.

5220 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் யாருமில்லை. அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.150

5221 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் சமுதாயமே!

தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபடுவதைக் கண்டாலும் அல்லாஹ்வைவிடக் கடுமையாக ரோஷம் கொள்பவர் வேறெவருமிலர்.

முஹம்மதின் சமுதாயமே!

நான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிமாக அழுவீர்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.151

5222 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடை யவர் யாருமில்லை.

இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

5223 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயம் அல்லாஹ் ரோஷம்கொள்கி றான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வது தான் .

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5224 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்ட கத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமை களும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து-நானே பேரீச்சங்கொட்டை களை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.152

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங் கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந் தேன். (வழியில்) நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர்தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக இஃக், இஃக் என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக் காரராக இருந்தார். நான் வெட்கப் படுவதைப் புரிந்து கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து (வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டை களிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர் களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன் என்று கூறினேன். அதற்கு என் கணவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான்  எனக்குக் கடினமானதாக இருக்கிறது என்று கூறினார்.

(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற் கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக் காக) அனுப்பிவைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.

5225 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண் டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்ட முள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.153 (அப்போது) நபி (ஸல்) அவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியா ளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்றுசேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), உங்கள் தாயார் ரோஷப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்தி விட்டு தாமிருந்த வீட்டுக்கார(துணைவியா) ரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரி டம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட் டார்கள்.154

5226 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், (கனவில்) நான் சொர்க்கத்தினுள் நுழைந் தேன்' அல்லது சொர்க்கத்திற்குச் சென்றேன்'. அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், இது யாருடையது? என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), இது உமர் பின் கத்தாப் அவர்களுடையது என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள்.155

5227 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருநாள்)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டி ருந்தோம். அப்போது அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது(கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) மாளிகை ஒன்றின் அருகில் ஒருபெண் (உலகில் தான் இறைவணக்கம் புரிபவளாய் இருந்துவந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொ-வையும் மெருகேற்றிக்கொள்ளவும்) உளூ'ச் செய்து கொண்டிருந்தாள். அப்போது நான், இந்த மாளிகை யாருக்குரியது? என்று கேட்டேன். (வானவர்) ஒருவர், இது உமருக்குரியது என பதிலளித்தார். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமர் அவர்களின் ரோஷம் என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன் என்று கூறினார்கள். அங்கு அவையிலிருந்த உமர் (ரலி) அவர்கள் (இதைக்கேட்டு) அழுதார்கள். பிறகு, தங்களிடமா நான் ரோஷம் காட்டு வேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள்.156

பாடம் : 109

பெண்களின் ரோஷமும் கோபமும்.157

5228 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதற்கு நான், எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது (பேசினால்), முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய் என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று) என்று கூறினேன்.

5229 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (இதர) துணைவியர் எவர்மீதும் நான் ரோஷப் பட்டதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜாவை அதிகமாக நினைவுகூர்ந்து, அவரை (அடிக்கடி) புகழ்ந்து பேசிவந்தார்கள். கதீஜா அவர்களுக்கென சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவருக்கு நற்செய்தி கூறும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ' மூலம் உத்தரவிடப் பட்டது.158

பாடம் : 110

ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும், நீதி கோரியும் வாதிடுவது.

5230 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதா-ப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீ தா-ப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்க மாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வ தாகும்; அவரை மன வேதனைப்படுத்துவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.159

பாடம் : 111

(இறுதிக் காலத்தில்) ஆண்கள் குறைந்து விடுவர்; பெண்கள் அதிகரித்துவிடுவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாள் நெருங்கும் இறுதிக் காலத்தில்) ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்வதைநீ காண்பாய்! ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரித்துவிடுவதனால் ஆண்களிடம் அபயம் தேடியே இவ்வாறு செல்வர்.

இதை அபூ மூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.160

5231 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்கமுடியாத, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன். அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை ம-ந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு- அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.161

பாடம் : 112

(மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் தவிர (வேறு) எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது; கணவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணிடம் செல்லலாகாது.

5232 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறு கின்றீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரான வர்கள் என்று கூறினார்கள்.162

5233 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரு டன் (அவள்) இருக்கும் போது தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், (போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக் கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக! என்று கூறினார்கள்.163

பாடம் : 113

மக்கள் அருகிலிருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாக(ப் பேசிக் கொண்டு) இருப்பது அனுமதிக்கப்பட்டதே!

5234 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமான வர்கள் என்று சொன்னார்கள்.

பாடம் : 114

பெண்களைப் போல நடந்துகொள்கின்ற வர்(களான அ-)கள் ஒரு பெண்ணிடம் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

5235 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்துகொள்ளும்) அ-' ஒருவனும் இருந்து கொண்டிருந்தான். அந்த அ-' என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய164 மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள் என்று (அவளது மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், இவன் உங்களிடம் ஒரு போதும் வரக்கூடாது என்று சொன்னார்கள்.165

பாடம் : 115

(அந்நிய ஆடவர்களான) அபிசீனியர்கள் போன்றவர்களைக் குழப்பத்திற்கிடமில்லா திருப்பின் ஒரு பெண் பார்க்கலாம்.

5236 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளி வாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளை யாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக் கொண்டி ருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள் ளுங்கள்.166

பாடம் : 116

தம் தேவைகள் நிமித்தம் பெண்கள் வெளியே செல்லலாம்.

5237 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களுடைய துணைவியா ரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் (பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின் ஒரு நாள்) இரவு நேரத்தில் வெளியே சென்றார்கள். அவர்களைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் அடையாளம் புரிந்து கொண்டு, சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக் குத் தெரியாமலில்லை என்று சொன்னார்கள். உடனே சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அது குறித்து அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது அறையில் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு (வஹீ-வேத அறிவிப்பு) அருளப்பெற்று (வழக்கம் போல் அதனால் ஏற்படும் சிரம நிலை) அகற்றவும் பட்டது. அப்போது அவர்கள், (என் துணைவியரே!) நீங்கள் உங்களது தேவை களுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான் என்றார்கள்.167

பாடம் : 117

பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பெண் தன் கணவரிடம் அனுமதி கோருவது.

5238 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168

பாடம் : 118

பால்குடி உறவு முறையுள்ள ஒரு பெண்ணி டம் செல்வதும், அவளைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.

5239 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) என் பால்குடித் தந்தை (அபுல் குஐஸ்) அவர்களுடைய சகோதரர் (அஃப்லஹ் என்பார்) வந்து என் வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதரிடம் கேட்காமல் அவருக்கு அனுமதியளிப்ப தில்லை என்று நான் இருந்துவிட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் அது குறித்துக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாமே! அவருக்கு உள்ளே வர அனுமதி கொடு! என்று சொன்னார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தப் பெண்தானே எனக்குப் பாலூட்டினார். இந்த ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே! (பாலுட்டிய தாயின் கணவரும் அவருடைய சகோதரரும் எனக்கு எந்த வகையில் உறவினர் ஆவார்கள்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உன்னுடைய (பால் குடித்) தந்தையின் சகோதரர்தாம். எனவே, அவர் உன்னிடம் (உன் வீட்டுக்குள்) வரலாம் என்று சொன்னார்கள்.

-இது எங்களுக்கு பர்தா' அணியும் சட்டம் விதியாக்கப்பட்ட பின்னால் நடந்தது.-

(மேலும்,) இரத்த உறவின் காரணத்தால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படுவது போன்றே பால் குடியினாலும் நெருங்கிய உறவு ஏற்படும்.169

பாடம் : 119

ஒரு பெண் மற்றொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவுவதும், அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் வர்ணித்துக் கூறுவதும் கூடாது.

5240 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம்-அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5241 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம்-அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.170

பாடம் : 120

ஒருவர் நான் இன்றிரவு என் துணைவியர் அனைவரிடமும் (தாம்பத்திய உறவுக்காகச்) சென்றுவருவேன் என்று கூறுவது.

5242 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்), இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்' என்று கூறவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்' என்று கூறியிருந்தால் அவர் தமது சத்தியத்தை முறித்திருக்க மாட்டார். (சபதத்தை நிறைவேற்றி யிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார் என்று கூறினார்கள்.171

பாடம் : 121

நீண்ட பயணத்திலிருந்து திரும்புகின்றவர் இரவில் திடீரென தமது வீட்டினுள் நுழையலாகாது. தம் வீட்டார் மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்திடவும், அவர்களின் குற்றங் குறைகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு நேர்ந்திடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

5243 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாயிருந்தார்கள்.

5244 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் நீண்ட நாட்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம்.172

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 122

குழந்தைத் தேட்டம்.173

5245 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்த போது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு

நான் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) உமக்கு என்ன அவசரம்? என்று கேட்டார்கள். நான் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவன் என்றேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்) என்றேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே! என்றார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போன போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இஷா நேரம் வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலை வாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.174

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர் களிடம், புத்திசா-த்தனமாக நடந்துகொள் என்றார்கள். அதாவது குழந்தையைத் தேடிக்கொள் என்றார்கள் என நம்பத் தகுந்த (அறிவிப்பாளர்) ஒருவர் என்னிடம் கூறினார்.

5246 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டி ருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமை யாயிரு!) என்று கூறிவிட்டு, புத்திசா-த்தன மாக நடந்து(குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசா-த்தனமாக நடந்துகொள் என்று சொன்னார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர்அறிவிப்பாளர் தொடர்வழியாவும் வந்துள்ளது.

பாடம் : 123

(கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக் கத்தியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; தலைவிரி கோலமாக இருந்தவள் தலைவாரிக்கொள்ள வேண்டும்.

5247 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பிவந்த நாங்கள் மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக் கொண்டி ருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து வாகனத்தில் ஒருவர் என்னை வந்தடைந்து தம்மிடமிருந்த கைத் தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ கண்ட ஒட்டகங்களிலேயே அதிவிரைவாக ஓடக் கூடியது போல ஓடியது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களே இருந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் ஆனவன் என்றேன். நபி (ஸல்) அவர்கள், திருமணம் செய்து கொண்டு விட்டாயா? என்று கேட்க, நான், ஆம் என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)? என்று கேட்டார்கள். நான், இல்லை. கன்னி கழிந்த பெணணைத்தான் (மணந்தேன்) என்றேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு நீயும், உன்னோடு அவளுமாய்க் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்க லாமே! என்றார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு) வந்து (ஊருக்குள்) நுழைய முற்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களை சென்றடைய) இஷா நேரம் வரைப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும் என்றார்கள்.175

பாடம் : 124

தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய புதல்வர்கள், தங்கள் கணவன்மார்களின் புதல்வர்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் (உடன் நெருங்கிப் பழகும்) பெண்கள், தங்களுடைய அடிமைகள், (பெண்கள் மீது) வேட்கையில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், பெண்களின் அந்தரங்க விஷயங் களைப் பற்றி ஏதும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களது அழகை இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் வெளிக்காட்ட வேண்டாம் (எனும் 24:31ஆவது இறைவசனம்).

5248 அபூ ஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஹுத் போர் நாளில் (காயமுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதி (ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -சஹ்ல் (ரலி) அவர்கள் மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள்.-அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

மக்களிலேயே இது குறித்து என்னை விட நன்கறிந்தவர் எவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. (உஹுத் போரில் காயமடைந்த) நபி (ஸல்) அவர்களின் முகத்தி லிருந்து (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களே இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. பிறகு (கரிக்கப் பட்ட பாயின்) சாம்பலை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது.176

பாடம் : 125

உங்களில் பருவ வயதை அடையாத (சிறு)வர்கள் (உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் மட்டும் அனுமதி பெற்றுக் கொள்ளட்டும்! எனும் 24:58ஆவது வசனத் தொடர்).

5249 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், தாங்கள் (பெருநாட்களான) ஈதுல் அள்ஹாவிலோ, ஈதுல் ஃபித்ரிலோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கின்றீர்களா? என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆம் (இருந்திருக்கிறேன்). (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந் திருப்பின் சிறுவனாக இருந்த நான் (பெரு நாள் தொழுகையில்) அவர்களுடன் கலந்து கொண்டு (பெண்கள் பகுதிவரை சென்று) இருக்கமுடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று (மக்களுடன் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள்.

-இந்த இடத்தில் இப்னு அப்பாஸ்

(ரலி) அவர்கள் (அத்தொழுகைக்கு முன்) பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதாகக் கூறவில்லை.-

பிறகு நபி (ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து (மார்க்க விஷயங் களையும், மறுமை நாளையும்) நினைவூட்டி உபதேசம் புரிந்தார்கள். மேலும், (ஏழை எளியோருக்கு) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப்பெண்கள், தங்களின் காதுகளுக்கும் கழுத்துகளுக்கும் தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களிடம் கொடுப்பதை நான் கண்டேன். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.177

பாடம் : 126

ஒருவர் தம் நண்பரிடம் இன்றிரவு தாம்பத்திய உறவைத் தொடங்கினீர்களா? என்று கேட்பதும்,178 ஒருவர் தம் புதல்வியைக் கண்டிக்கும் போது இடுப்பில் குத்துவதும்.

5250 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தமது கரத்தால் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது மடியில் தலைவைத்து படுத்திருந்தது தான்  என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்து விட்டது.179

November 5, 2009, 7:52 PM

67-திருமணம்1

அத்தியாயம் : 67

67-திருமணம்1

பாடம் : 1

மணமுடித்துக்கொள்ள ஆர்வமூட்டுதல்

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3)

5063 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட் டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கி றேன்; மேலும், நான் பெண்களை மணமுடித் தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோஅவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.

5064 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக்கொள்ள லாம். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக்கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும் எனும் (4:3ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப் பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (காப்பளாரான) அவர், மற்றவர்கள் அவளுக்கு வழங்குவது போன்ற (விவாகக் கொடையான) மஹ்ரை விடக் குறைவானதை வழங்கி அவளை மணமுடித்துக்கொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்). இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மஹ்ரை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக்கொள் ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப் பட்டது என்று பதிலளித்தார்கள்.3

பாடம் : 2

தாம்பத்தியம் நடத்த சக்தியுள்ளவர் திருமணம் செய்துகொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் எனும் நபிமொழியும், திருமண ஆசை இல்லாதவர் திருமணம் செய்துகொள்ளலாமா என்பதும்.

5065 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது மினா'வில் அன்னாரை உஸ்மான் (ரலி) அவர்கள் சந்தித்து, அபூ அப்திர் ரஹ்மானே! (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான் (ரலி) அவர்கள் ளஅப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம்ன அபூ அப்திர் ரஹ்மானே! உங்களது இளமைக் காலத்தை நினைவு படுத்துகின்ற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா? என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவை யில்லை என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கருதிய போது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி அல்கமாவே! என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது ளஉஸ்மான் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்ன அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறியுள்ளார்கள்:

இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும் என்று தெரிவித்தார்கள்.4

பாடம் : 3

தாம்பத்தியம் நடத்த சத்திபெறாதோர் நோன்பு நோற்கட்டும்!

5066 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

பாடம் : 4

பலதார மணம்5

5067 அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதிப் பிரார்த்தனையில்) நாங்கள் சரிஃப்' எனும் இடத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம்.6 அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார்.

இவரது (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும் போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப் பேருக்கு இரவைப் பங்கிட்டு வந்தார்கள். ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.7

5068 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள். (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர்.8

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

5069 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மணமுடித்தீரா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அவர்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத் திலேயே சிறந்தவர் ளஆன முஹம்மத் (ஸல்) அவர்கள்ன அதிகமான பெண்களை மண முடித்தவராவார் என்று சொன்னார்கள்.

பாடம் : 5

ஒருவர் ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) மேற் கொண்டாலோ, அல்லது ஏதேனும் நல்லறம் புரிந்தாலோ அவர் எண்ணியது தான் அவருக்குக் கிடைக்கும்.

5070 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எண்ணத்தைப் பொறுத்தே செயல் அமைகின்றது;

ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணி யது தான்  கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்து வதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.

இதை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

பாடம் : 6

குர்ஆனையும் இஸ்லாத்தையும் தம்முடன் வைத்துள்ள ஓர் ஏழைக்கு மணமுடித்து வைத்தல்.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமி ருந்து சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் உண்டு.10

5071 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்க வில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.11

பாடம் : 7

ஒரு மனிதர் தம் சகோதரரிடம், என் இரு மனைவியரில் யாரை நீ விரும்புகிறாயோ கூறு, உனக்காக அவளை விவாக விலக்குச் செய்து (திருமணம் முடித்துத்) தருகிறேன் என்று சொல்வது.

 இது குறித்து அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.12

5072 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களுக்கும் இடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த சஅத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். ஆகவே சஅத் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிலும் தம் செல்வத்தி லும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்! என்று சொன்னார்கள்.

பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மீது (வாசனைத் திரவியத் தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, என்ன இது அப்துர் ரஹ்மானே? என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணம் புரிந்து கொண்டேன் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்? என்று கேட்க, ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள்,ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து கொடு! என்று சொன்னார்கள்.13

பாடம் : 8

துறவறமும் (ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) காயடித்துக்கொள்வதும் வெறுக்கத்தக்கவை ஆகும்.

5073 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

5074 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

5075 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக்கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக்கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (5:87)14

5076 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதரே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும் நான் முன் போலவே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காவது முறையாக) முன் போலவே நான் கேட்ட போது, அபூஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத் தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக்கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான்.) என்று சொன்னார்கள்.

பாடம் : 9

கன்னிப்பெண்ணை மணமுடித்தல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உங்களைத் தவிர வேறு எந்தக் கன்னிப்பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக்கொள்ள வில்லைஎன்று சொன்னார்கள்.

இதை இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

5077 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு பள்ளத் தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடை களினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கின்றீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்! என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எதில் ஏற்கெனவே மேயவிடப் படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்) என்று பதிலளித்தார்கள்.

தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

5078 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு தடவை உன்னை நான் கனவில் கண்டேன். ஒரு மனிதர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் இவர் உங்கள் (வருங்கால) மனைவி என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்கு வான் என்று சொல்லிக் கொண்டேன்.

பாடம் : 10

கன்னிகழிந்த பெண்ணை மணமுடித்தல்.

(அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) என்னிடம், (முந்தைய கணவன்மார்களின் மூலம் உங்களுக்குப் பிறந்த) உங்களுடைய பெண் மக்களையோ, அல்லது உங்களுடைய சகோதரிகளையோ திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கோராதீர்கள் என்று சொன்னார்கள்.16

5079 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தபூக்) போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லக்கூடிய எனது ஒட்டகத்தின் மீது இருந்து கொண்டு அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனம் ஒன்றில் வந்து சேர்ந்து தம்மிடமிருந்த கைத் தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர் ரகமானது போன்று ஓடலாயிற்று. (உடனே நான் திரும்பிப் பார்த்தேன்.) அங்கு நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), என்ன அவசரம் உனக்கு? என்று கேட்டார்கள். நான் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவன் என்றேன். நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்ணையா? அல்லது கன்னி கழிந்த பெண்ணையா (மணந்தாய்)? என்று கேட் டார்கள். நான் கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்) என்று சொன்னேன். கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே! என்று கேட்டார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா வந்து சேர்ந்து ஊருக்குள்) நுழையப்போன போது நபி (ஸல்) அவர்கள், (நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு -இஷா- நேரம் வரும் வரை சற்று பொறுத்திருங்கள்! தலைவிரிகோலமாயிருக் கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும் என்று சொன்னர்கள்.17

5080 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திருமணம் செய்து கொண்டேன். (சில நாட்களுக்குப் பின்) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யாரை மணமுடித் தாய்? என்று கேட்டார்கள். நான் கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன் என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் இந்த ஹதீஸை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே! என்று கேட்டார்கள்.

பாடம் : 11

(வயதில்) சிறியவர்களைப் பெரியவர்களுக்கு மணமுடித்துவைத்தல்.

5081 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால்- மணமுடிக்க அனுமதிக்கபட்டுள்ள வர்தாம் என்று சொன்னார்கள்.

பாடம் : 12

யாரை மணமுடிப்பது? பெண்களில் சிறந்தவர் யார்? தன் வாரிசைச் சுமப்பதற்காக (நல்ல பெண்ணை)த் தேர்ந்தெடுப்பது விரும்பத்தக்கது- இவையெல்லாம் கட்டாயமின்றி (விருப்பத்தின்பாற்பட்டவை).

5082 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்ட வர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்.18

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

அடிமைப் பெண்களை அமர்த்திக்கொள்வதும் ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து மணமுடித்துக்கொள்வதும்.

5083 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்பித்து, அதையும் நன்கு கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நளினமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்து கொண்டால் அவருக்கு (விடுதலைசெய்தது மற்றும்

மணந்து கொண்டதற்காக) இரு நற்பலன்கள் கிடைக்கும்.

வேதக்காரர்களில் உள்ள ஒருமனிதர் தம்முடைய (சமூகத்திற்கு நியமிக்கப்பட்டி ருந்த) இறைத்தூதரையும் நம்பிக்கை கொண்டு என்னையும் (இறைத்தூதரென) நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கும் இரு நற் பலன்கள் கிடைக்கும்.

மேலும், ஓர் அடிமை தன் எஜமானுக்குச் செய்யவேண்டிய கடமையையும் தன் இறைவனின் கடமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவாராயின் அவருக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும்.

இதை அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ளஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சா-ஹ் பின் சா-ஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:ன

(இந்த நபி மொழியை எனக்கு அறிவித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், பிரதிபலன் ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காக வெல்லாம் சிலர் மதீனா வரை பயணம் சென்றதுண்டு என்றார்கள்.

இன்னோர் அறிவிப்பில் (அடிமைப் பெண்ணின் எசமான் குறித்து), அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மஹ்ரும் கொடுத்(து மணமுடித்)தால் (...இரு நற்பலன்கள் உண்டு) என்று காணப்படுகிறது.19

5084 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று முறையே உண்மைக்குப் புறம்பாகப் பேசினார்கள். தம்முடன் (துணைவியார்) சாரா இருக்க இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு சர்வாதிகார அரசனைக் கடந்து சென்றார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள். அதில், ஹாஜர் அவர்களை, சாரா அவர்களுக்கு (பணியாளாகக்) கொடுத்தான் என்றும், அல்லாஹ் அந்த இறைமறுப்பாள(னான அரச)னின் கரத்தைத் தடுத்து, ஆஜரை எனக்குப் பணியாளாகக் கொடுத்தான் என சாரா கூறினார்கள் என்றும் காணப்படுகிறது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: வான் மழை (பிரதேச) மக்களே! அவர்(ஹாஜர்)தாம் உங்கள் அன்னை.20

5085 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை' அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண் டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா'-மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்ட போது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள் (ஹைஸ்' எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது). இதுவே நபி (ஸல்) அவர்களின் வலீமா -மணவிருந்தாக அமைந்தது.

அப்போது முஸ்லிம்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை(-நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா? என்று பேசிக் கொண்டனர். அப்போது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப்' -திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளை யி)ட் டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ள-நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்-ன ஒருவர்; அப்படி அவர்களுக்குத் திரை(யிட்.டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர்.

நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம்கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கும் மக்களுக்கு மிடையே திரையிட்டு இழுத்து (மூடி) விட்டார்கள்.21

பாடம் : 14

ஒருவர் தம் அடிமைப்பெண்ணை விடுதலை செய்வதையே மஹ்ர்' ஆக்குவது.

5086 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது.

(கைபர் போர்க் கைதியான) ஸஃபிய்யாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்தார்கள். மேலும் அவர்களை விடுதலை செய்ததையே மஹ்ர் (விவாகக் கொடையாக) ஆக்கி (தாமே அவர்களை மணந்து) கொண்டார்கள்.22

பாடம் : 15

ஏழைக்கு மணமுடித்து வைத்தல்.

அல்லாஹ் கூறுகிறான்:

(ஆணாயினும் பெண்ணாயினும்) உங்களில் எவருக்கு வாழ்க்கைத் துணை இல்லையோ அவர்களுக்குத் திருமணம் செய்துவிடுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணையில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு அவர்களைச் சீமானாக்கிவைப்பான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக விசாலமானவனும் (மனிதர்களின் நிலைமையை) நன்கு அறிந்தோனுமாக இருக்கிறான். (24:32)

5087 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கி தம் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள்.

தம் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்! என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) (மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்று பதில் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், உம் குடும்பத் தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்! என்றார்கள்.

அவர் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்)பார்! என்றார்கள்.

அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின்மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை; ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது என்றார்.

-அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை; அதனால்தான் தமது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமது வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? அந்த வேட்டியை நீ உடுத்திக் கொண்டால் அவள் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உன் மீது அதில் ஏதும் இருக்காது. (உமது வேட்டியை கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?) என்று கேட்டார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ட போது அவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப் பாடமாக) உள்ளது? என்று கேட்டார்கள்.

அவர், (குர்ஆனில்) இன்ன இன்ன அத்தியாயங்கள் என்னுடன் உள்ளன என்று எண்ணி எண்ணிச் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவற்றை நீ மனப்பாடமாக ஓதுவாயா? என்று கேட்டார்கள். ஆம் (ஓதுவேன்) என்று அவர் பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள், உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்! என்று சொன்னார்கள்.23

பாடம் : 16

(மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்.)24

அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (ஒருதுளி) நீரிலிருந்து மனிதனைப் படைத்தவன் அவனே! பிறகு, (பிறப்பினால் வந்த) இரத்த உறவையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவையும் அவன் ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பெரும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான். (25:54)

5088 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள், (பாரசீகரான மஅகில் என்பாரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர்.25 நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் ளசா-மை அபூ ஹுதாஃபா (ரலி) அவர்கள் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள்.ன

மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்க மும், அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

ஆகவே, நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அது தான் அல்லாஹ்விடத்தில் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கின்றார்கள் எனும் (33:5ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர், வளர்ப்புப் பிள்ளைகள் அவர் களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப் பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகி தராகவும் மார்க்கச் சகோதராரகவும் ஆனார்.

பிறகு, அபூஹுதைஃபா பின் உத்பா

 (ரலி) அவர்களுடைய துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சா-மை (எங்களுடைய) பிள்ளை யாகவே கருதிக் கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5ஆவது) வசனத்தை அருளிவிட்டான் என்று தொடங்கும் ஹதீஸை ளஅறிவிப்பாளர் அபுல் யமான் பின் ஹகம் (ரஹ்) அவர்கள் முழுமையாகக்ன கூறினார்கள்.26

5089 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன் என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம்' கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாத வாறு) என்னைத் தடுக்கிறாயோ அது தான்  நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும் என்று சொல்லிவிடு! எனக் கூறினார்கள்.

ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார்.27

5090 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5091 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர் களிடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர் என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அபபோது நபி (ஸல்) அவர்கள், இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கா மலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப் படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர் என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர் எனக் கூறினார்கள்.

பாடம் : 17

பொருளாதாரத்தில் பொருத்தம் பார்ப்பதும், ஏழைக்குப் பணக்காரியை மணமுடித்து வைப்பதும்.

5092 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா

(ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால்... எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்ந்து வருகின்ற அநாதைப் பெண் ஆவாள்.

அப்பால் அவளது அழகையும் செல்வத்தையும் கண்டு ஆசைப்பட்டு (காப்பாளரான) அவர் (அவளை மணமுடித்துக்கொள்ள) விரும்புகிறார். (ஆனால்) அவளுக்குரிய (தகுதி யான) மஹ்ரை(விவாகக் கொடையை)க் குறைத்துவிட விரும்புகிறார். இத்தகைய பெண்களுக்கு உரிய மஹ்ரை நிறைவாகச் செலுத்தும் விஷயத்தில் நீதி தவறாது நடந்து கொண்டால் தவிர, அவர்களை மணந்து கொள்ளக் கூடாது என்று (காப்பாளர்களுக்கு இவ்வசனத்தின் மூலம்) தடை விதிக்கப்பட்டது. மேலும், இந்தப் பெண்கள் அல்லாத (மனதுக்குப் பிடித்த) இதரப் பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படியும் கட்டளையிடப்பட்டது.

இதற்குப் பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டார்கள். உயர்ந்தவனான அல்லாஹ் அப்போது, பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின் றனர் என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான். அதாவது ஓர் அநாதைப் பெண் அழகும் செல்வமும் உள்ளவளாக இருந்தால் நிறைவான மஹ்ரை (விவாகக் கொடையை) அளித்து அவளை மணந்துகொள்ளவும் அவளுடன் உறவு முறையை ஏற்படுத்திக்கொள்ளவும் காப்பா ளர்கள் விரும்புகின்றனர். (அதே சமயம்) அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருப்பதால் விரும்பத்தகாதவளாக இருப்பின், அவளை விட்டுவிட்டு வேறு பெண்களைப் பிடித்துக்கொள்கின்றனர்' என்று அல்லாஹ் அவர்களுக்கு அருளினான்.

அவர்கள் அப்பெண்ணை விரும்பாத நேரம் (மணந்துகொள்ளாமல்) விட்டு விடுவது போல், அவளை விரும்பும் நேரம் மஹ்ர் விஷயத்தில் அவளது உரிமையை நிறைவாக வழங்கி, அவளிடம் நீதியுடன் நடந்து கொண்டாலே ஒழிய அவளை மணந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று இவ்வசனத்தின் மூலம் இறைவன் தெரிவித்தான்.28

பாடம் : 18

பெண்ணின் அப சகுனத்திலிருந்து தவிர்ந்து கொள்ளல்.

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய துணைவி யரிலும், பிள்ளைகளிலும் (உங்களை இறை வழியிலிருந்து திருப்பிவிடும்) பகைவர்கள் உங்களுக்கு உள்ளனர். (64:14)

5093 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப சகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில்தான் (இருக்க முடியும்).

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29

 

5094 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் மக்கள் அப சகுனம் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப சகுனம் எதிலேனும் இருக்குமானால், வீட்டிலும் பெண்ணிலும் குதிரையிலும்தான் இருக்கும் என்று சொன்னார்கள்.

5095 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அப சகுனம் எனும்) அது எதிலாவது இருக்குமானால் குதிரையிலும் பெண்ணிலும் குடியிருப்பிலும்தான்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5096 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.

இதை உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 19

ஓர் அடிமை, சுதந்திரமான பெண்ணை மணந்துகொள்வது.

5097ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாயிருந்து விடுதலைபெற்ற) பரீராவினால் மூன்று வழிமுறைகள் (நமக்கு) கிட்டின:

1. அவர் விடுதலைசெய்யப்பட்ட போது (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.30

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

விடுதலை செய்தவருக்கே அடிமையின் வாரிசுரிமை கிட்டும் என்றார்கள்.

3. நெருப்பின் மேல் பாத்திரம் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. உடனே அவர்கள், நான் (நெருப்பின் மேல்) பாத்திரத்தைக் கண்டேனே (அது என்ன வாயிற்று?) என்று கேட்டார்கள். அதற்கு, அது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி. தர்மப் பொருளைத் தாங்கள் உண்ணமாட்டீர்களே? என்று சொல்லப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அது பரீராவிற்குத்தான் தர்மம். நமக்கு அது அன்பளிப்பு! எனறு சொன்னார்கள்.31

பாடம் : 20

ஒருவர் நான்கு பெண்களைவிட அதிகமான வர்களை மணமுடிக்கக் கூடாது.32

அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3)

அதாவது இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக என அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இதைப் போன்றுதான் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடைய வானவர்களை எனும் (35:1ஆவது) வசனமும்.

5098 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

ஓர் அநாதைப் பெண் ஒரு மனிதரிடம் (அவரது பொறுப்பில்) இருப்பாள். அவரே அவளுடைய காப்பாளர் ஆவார். அவளை அவர் அவளது செல்வத்திற்காக மணந்து கொண்டு அவளுடன் மோசமான முறையில் உறவாடுவார்; அவளது செல்வம் தொடர் பான விஷயத்தில் நீதிசெலுத்த மாட்டார். இத்தகைய பெண்ணைக் குறித்தே இந்த (4:3ஆவது) வசனம் பேசுகிறது. அந்தக் காப்பாளர், (இவளை விட்டுவிட்டு) இவளல் லாத அவரது மனதுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, அல்லது மும்மூன்றாக, அல்லது நான்கு நான்காக மணமுடித்துக்கொள்ளட்டும் (என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகின்றான்)33

பாடம் : 21

உங்களுக்குப் பாலூட்டிய செவி-த் தாய்மார் களையும் (நீங்கள் மணப்பது விலக்கப்பட் டுள்ளது) (எனும் 4:23ஆவது இறைவசனம்).

இரத்த உறவினால் மணமுடிக்கக் கூடாத வர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கக் கூடாது.

5099 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். அப்போது நான் ளநபி (ஸல்) அவர்களிடம்ன அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் இன்னார் என நான் கருதுகிறேன். என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சென்னார்கள். நான் இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே! என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்! (முடியும்.) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக் குமோ அந்த உறவுகளையெல்லாம் பால் குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும் என்று சொன்னார்கள்.34

5100 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் தாங்கள் ஹம்ஸா (ரலி) அவர்களுடைய புதல்வியை மணமுடித்துக்கொள்ளக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்.) அவர்கள், அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள் என்று கூறினார்கள்.35

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

5101 உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர் களிடம், அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி யான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்! என்று கூறினேன். அதற்கவர்கள், இதை நீயே விரும்புகிறாயா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன் என்றேன்.

அதற்கு அவர்கள், எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று என்றார்கள். நான் தாங்கள் அபூசலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே! என்று கேட்டேன். (அதாவது என் துணைவியார்) உம்முசலமா விற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா? என நபியவர்கள் கேட்க, நான் ஆம்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவள் (-உம்முசலமாவின் மகள்-) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோத ரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டினார். ஆகவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரி களையோ (மணமுடித்துக்கொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.36

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப் பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன? என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

பாடம் : 22

பால்குடி என்பது இரண்டு வயதுக்குப் பின் கிடையாது' என்போரின் கருத்து.

(அல்லாஹ் கூறுகின்றான்:) (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக்காகத் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு நிறைவான இரண் டாண்டுகள் அமுதூட்டுவார்கள். (2:233)

பால்குடியில் சிறிதளவும் அதிகளவும் நெருங்கிய உறவை (மஹ்ரம்) ஏற்படுத்தும்.

5102 ஆயிஷா( ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்)தான் என்று சொன்னார்கள்.37

பாடம் : 23

ஆணின் பால்குடி உறவு.38

5103 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ஹிஜாப் (பர்தா) சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.39

பாடம் : 24

பாலூட்டிய செவி-த் தாயின் சாட்சியம்.

5104 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (உம்மு யஹ்யா பின்த் அபீ இஹாப் எனும்) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். பின்னர் ஒரு கறுப்பு நிற (அடிமைப்) பெண் எங்களிடம் வந்து நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும் உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டினேன். (இந்த வகையில் நீங்கள் இருவரும் சகோதரத்துவ உறவுடைய வர்கள்) என்று கூறினாள். ஆகவே (இப் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, நான் இன்னவர் மகள் இன்னவளை மணந்து கொண்டேன். அப்பால் ஒரு கறுப்பு நிறப் பெண் எங்களிடம் வந்து என்னை நோக்கி நான் உங்கள் இருவருக்கும் பாலூட்டி யிருக்கிறேன்' என்று பொய் சொல்கிறாள் என்று சொன்னேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் (முகம் திருப்பிக் கொண்டு) என்னைப் புறக்கணித்தார்கள். மீண்டும் நான் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து அவள் பொய்தான் சொல்கிறாள் என்றேன். நபி (ஸல்) அவர்கள், அவள் உங்கள் இருவ ருக்கும் பாலூட்டியதாக சொல்லிவிட்ட நிலையில் அந்தப் பெண்ணுடன் நீ எப்படி (இல்லறம் நடத்த முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விட்டுவிடு! என்று (யோசனை) சொன்னார்கள்.40

அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(எனக்கு இதை அறிவித்த) இஸ்மாயில் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ளநபி (ஸல்) அவர்கள் விட்டுவிடு' என்று கூறி சைகை செய்ததைன அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் எடுத்துரைத்தபடி தமது சுட்டுவிரல் மற்றும் நடுவிரலால் சைகை செய்து காட்டினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த அறிவிப்பை நான் (சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய) உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்று விட்டேன். ஆயினும், நான் உபைத் பின் அபீ மர்யம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பையே நன்கு நினைவில் நிறுத்தியுள்ளேன்.

பாடம் : 25

(மணமுடிக்க) அனுமதிக்கப்பட்ட பெண்களும் அனுமதிக்கப்படாதவர்களும்.

அல்லாஹ் கூறுகின்றான்: (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்வியர்; சகோதரியின் புதல்வியர்... (4:23)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (4:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வல் முஹ்ஸனாத்து மினன் னிஸா' என்பதன் கருத்தாவது: (ஏற்கெனவே திருமணமாகி) கணவன்மார்கள் இருக்கும் (அடிமையல்லாத) சுதந்திரமான பெண்களை மணமுடிப்பது விலக்கப்பட்டதாகும். இல்லா மா மலக்கத் அய்மானுக்கும்' (உங்கள் கைவசம் வந்து விட்ட அடிமைப்பெண்களைத் தவிர) என்பதன் கருத்தாவது: ஒருவர் தம் அடிமைப் பெண்ணை (அவளுடைய கணவரான) தம் அடிமையின் மண பந்தத்திலிருந்து விலக்கி விடுவது குற்றமன்று.

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் (ஏகத்துவ நம்பிக்கை) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (2:221)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் தாய், தம் புதல்வி, மற்றும் தம் சகோதரியை மணமுடிப்பது விலக்கப்பட்டிருப்பது போன்றே நான்கை விட அதிகமான பெண்களை மணமுடிப்பதும் விலக்கப்பட்டதாகும்.

5105 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இரத்த உறவினால் ஏழு பேரும், திருமண உறவினால் ஏழு பேரும் மணமுடிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளனர்41 என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி விட்டு, (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள்... எனும் (4:23ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களுடைய புதல்வியையும், அலீ (ரலி) (அவர்களுக்குப் பின்) அவர்களுடைய மனைவியையும் ஒரே நேரத்தில் மணந்து கொண்டார்கள் என்றும் கூறினார்கள்.42

ஒருவர், ஒரு பெண்ணையும் அவளு டைய கணவரின் (இன்னொரு மனைவிக்குப் பிறந்த) மகளையும் ஒரே நேரத்தில் மண முடிப்பது குற்றமன்று என இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இது வெறுக்கப்பட்ட செயலாகும் என முதலில் கூறிவந்த ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள், பின்னர் (தம் கருத்தை மாற்றிக் கொண்டு) இதனால் குற்றமில்லை என்று கூறினார்கள்.

ளஅலீ (ரலி) அவர்களுடைய பேரரானன ஹஸன் பின் ஹஸன் பின் அலீ (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் இரு சகோதர்களின் புதல்வியரை ஒரே இரவில் மணந்து கொண்டார்கள்.43

இதனால் (சக்களத்தி சண்டை ஏற்பட்டு) உறவு முறிய வாய்ப்புண்டு என்பதால் இத் திருமணத்தை ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் வெறுத்தார்கள். ஆனால் (இத் திருமணம்) தடைசெய்யப்பட்டதன்று. ஏனெனில், அல்லாஹ் (மணமுடிக்கத் தகாத பெண்களின் பட்டியலைச் சொல்லிவிட்டு) இவர்களைத் தவிர மற்ற பெண்களை (மஹ்ர் கொடுத்து) அடைந்துகொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது (4:24) என்று கூறுகின்றான்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

ஒருவன் தன் மனைவியின் சகோதரியை விபசாரம் செய்வதால், அவனுடைய மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக (ஹராமாக) ஆகிவிட மாட்டாள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.44

ஒருவன் ஒரு சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை செய்துவிட்டால், அச்சிறுவனு டைய தாயை மணமுடிப்பது செல்லாது என ஷஅபீ (ரஹ்) அவர்களும், அபூ ஜஅஃபர் (ரஹ்) அவர்களும் கூறியதாக யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த யஹ்யா நேர்மையானவரா என்பது அறியப்பட வில்லை. இந்த அறிவுப்புக்கு பக்கபலமாக அமையும் மற்ற அறிவுப்புகளும் கிடையாது.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: ஒருவன் தன் மனைவியின் தாயுடன் விபசாரம் புரிந்துவிட்டால், மனைவி அவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆக மாட்டாள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆனால், விலக்கப்பட்டவளாக ஆகி விடுவாள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அபூ நஸ்ர் (ரஹ்) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபூ நஸ்ர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றாரா என்பது அறியப்படவில்லை.

விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்' என்பதே இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இராக் அறிஞர்களில் சிலர் ஆகியோரது கருத்தாகும்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்ணை உடலுறவு கொண்டால் மட்டுமே அவளுடைய மகள் இவனுக்கு விலக்கப்பட்டவள் ஆவாள். (வெறுமனே தொடுவதற்கும், கட்டி அணைப்பதற்கும் இச்சட்டம் பொருந்தாது.) (இந்நிலையில் அப்பெண்ணின்) மகளை மணமுடிப்பது செல்லும்' என இப்னுல் முஸய்யப், உர்வா, ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோர் கூறினர்.

அவளை மணமுடிப்பது விலக்கப்பட வில்லை' என அலீ (ரலி) அவர்கள் சொன்ன தாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசை முறிவு கண்டது (முர்சல் எனும் முன்கத்திஉ) ஆகும்.

November 5, 2009, 7:40 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top