65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

 

அத்தியாயம் : 65

65-திருக்குர்ஆன் விளக்கவுரை1

(பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதிலுள்ள) அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்ரஹீம் (நிகரற்ற அன்புடை யோன்) ஆகிய இரு சொற்களும் ரஹ்மத் (கருணை) எனும் (வேர்ச்) சொல்லிலிருந்து பிறந்த இரு பெயர்ச் சொற்களாகும்.2 அர்ரஹீம், அர்ராஹிம் ஆகிய இரண்டும் ஒரே பொருளு டையவைதாம். இவை, (பொருள் தருவதில்) ஆலிம் மற்றும் அலீம் (அறிந்தவன்) எனும் சொற்களைப் போன்றவையாகும்.3

பாடம் : 1

குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை.

இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.4

(இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மா-கி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே, பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) கமா ததீனு துதானு (நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக் கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கின்றது.)

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்5 கூறுகின்றார்கள்:

அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கி றீர்கள் எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள தீனை என்பதற்குச் செயல் களுக்கான விசாரணையை என்று பொருள்.

(56:86ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மதீனீன் எனும் சொல்லுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் என்று பொருள்.6

4474 அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாச-ல் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனு டைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார்கள்.7 பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களி லேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாச-லிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொல்ல வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்து-ல்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்.8 எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

 

பாடம் : 2

(அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர் களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும் 1:7ஆவது இறைவசனம்).9

4475 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வ லள்ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள், ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற(நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

பாடம் : 1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடை யோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் (எனும் 2:31 ஆவது வசனத் தொடர்).2

4476 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள்.3 நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென் றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.

உடனே, இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனி டத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படு வார்கள்.4 பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் ளஇப்ராஹீம் (அலை) அவர் களிடம்ன செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, இறை நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்.5 பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவி டம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், குர்ஆன் தடுத்து விட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப் பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.6

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர் ஆனில் யாரைக் குறித்து), நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிட் டுள்ளானோ அவர்களையே குர்ஆன் தடுத்து விட்டவர்கள் எனும் சொற்றொடர் குறிக்கிறது.

இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.

பாடம் : 2

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:7

(2:14ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள்.

(2:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹீத்துன் பில் காஃபிரீன் (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண் டிருக்கின்றான்) எனும் சொற்றொடருக்கு, இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர் களால் தப்ப முடியாது) என்று பொருள்.

(2:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸிப்ஃகத் (வர்ணம்) எனும் சொல்லுக்கு தீன் - மார்க்கம் என்று பொருள்.

(2:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலல் காஷியீன் (உள்ளச்சமுடையோர் மீது) எனும் சொற்றொடருக்கு உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது என்று பொருள்.

(2:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகுவ்வத்தின் (உறுதியாக) எனும் சொல் லுக்கு, வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள் என்று பொருள்.

அபுல் ஆ-யா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:8

(2:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மரள் (நோய்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.

(2:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வமா கல்ஃபஹா (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்) என்று பொருள்.

(2:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா ஷியத்த (மறு இல்லாதது) எனும் சொல் லுக்கு, வெண்மையில்லாதது என்று பொருள்.

அபுல்ஆ-யா (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(2:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யசூமூனக்கும் (கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்) எனும் சொல் லுக்கு, உங்களை ஆட்டிப் படைத்துக் கொண் டிருந்தனர் என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான) அல்வலாயா எனும் சொல், அல்வலாஃ என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு இறையாண்மை என்று பொருள். அல்விலாயா என்று அதனை வாசித்தால், அதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள்.

(2:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபூம் (கோதுமை) எனும் சொல், உண்ணப்படுகின்ற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.9

(2:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப பாஊ (இறைமுனிவுக்கு ஆளாகிவிட் டார்கள்) எனும் சொல்லுக்கு, அவர்கள் (இறை முனிவுடன்) திரும்பினார்கள் என்று பொருள்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:

(2:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஸ்தஃப்திஹூன (வெற்றியளிக்கும்படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, உதவி தேடினர் என்று பொருள்.

(2:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள வாங்கினார்கள் என்ற சொற்பொருள் கொண்ட) ஷரவ் எனும் சொல்லுக்கு, விற்றார்கள் என்று பொருள்.

(2:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ராஇனா எனும் சொல், ருஊனத் (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி, ராஇனா (மடையனே) என்று சொல்வார்கள்.

(2:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள போதாது எனும் சொற்பொருள் கொண்ட) லா தஜ்ஸீ எனும் சொல்லுக்குப் பயனளிக்க முடியாது என்று பொருள்.

(2:168ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள எட்டுகள் எனும் சொற்பொருள் கொண்ட) குத்வாத் எனும் சொல், கத்வ் எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்குக் கால் சுவடுகள் என்று பொருள்.

(2:124ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள கஷ்டம் கொடுத்தான் எனும் சொற்பொருள் கொண்ட) இப்தலா எனும் சொல்லுக்குச் சோதித்தான் என்று பொருள்.

பாடம் : 3

ஆகவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பிக்காதீர்கள் எனும் (2:22ஆவது) வசனத் தொடர்.

4477 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் விடம் பாவங்களில் மிகப் பெரியது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது என்று சொன்னார்கள். நான், நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு, பிறகு எது? என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது என்று சொன்னார்கள். நான், பிறகு எது? என்று கேட்க, அவர்கள், உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது என்று சொன்னார்கள்.10

பாடம் : 4

மேலும், நாம் உங்கள் மீது மேகத்தை நிழ-டும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள் (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக் கொன்றும் அவர்கள் தீங்கி ழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள் எனும் (2:57ஆவது) இறைவசனம்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மன்னு என்பது வேலம் பசை ஆகும். சல்வா என்பது பறவை ஆகும்.11

4478 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (தானாக வளர்வதில்) மன்னு வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.12

இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

 

பாடம் : 5

மேலும், (அங்கிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பன வற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர் களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை உங்களுக்கு நாம் மன்னித்து விடுவோம். மேலும், நல்லவர்களுக்கு அதிகமாக வழங்குவோம் என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள் (எனும் 2:58ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ரஃகதன் (தாரளமாக) எனும் சொல்லுக்கு விசாலமாகவும் அதிகமாகவும் என்று பொருள்.

4479 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, (ஊருக்குள் நுழையும் போது) அதன் தலைவாயி-ல் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். ஹித்தத்துன் (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள் (2:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.13

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 6

(நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ் வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார். (இவ்வேதம்) தனக்கு முன்னிருந்த வேதங்களை உண்மைப்படுத்துவதுடன், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற் செய்தியாகவும் நேர்வழியாகவும் விளங்குகிறது எனும் (2:97ஆவது) இறை வசனம்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.14

(ஜிப்ரயீல், மீக்காயில், இஸ்ராஃபீல் ஆகிய வானவர்களின் பெயர்களில் தொடக் கத்திலுள்ள) ஜப்ர், மீக், சராஃப் ஆகியன அடிமை எனும் பொருளுடையவை. இறுதியில் உள்ள ஈல் எனும் சொல்லுக்கு அல்லாஹ் என்று பொருள். (அதாவது அல்லாஹ்வின் அடியார் என்பது இவற்றின் பொருளாகும்.)15

4480 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார்கள். பிறகு, 1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் இருப்பது எதனால்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளிக்க, வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே! என்று அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எவர் ஜிப்ரீலுக்குப் பகைவரோ (அவர் அல்லாஹ்வுக்கும் பகைவரே). ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களது இதயத்தில் இறக்கி வைத்தார் எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த்துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்க வாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாய-ல், அல்லது தாயின் சாய-ல் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனது சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளது சாயலைப் பெறுகின்றது என்று பதிலளித்தார்கள்.

(உடனே) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். ளஉடனே, அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.ன பிறகு, நபி (ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), உங்களில் அப்துல்லாஹ் பின் சலாம் எத்தகைய மனிதர்? என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வரு மாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் சலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக! என்று சொன்னார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து, வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறெவரு மில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று சொன்னார்கள். உடனே யூதர்கள், இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார் என்று அப்துல்லாஹ் பின் சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள்.16

பாடம் : 7

எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? எனும் (2:106ஆவது) இறைவசனம்.17

4481 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் (ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞான முடையவர் அலீ (ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றி விட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளான்.18

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன் (எனும் 2:116ஆவது வசனத் தொடர்).19

4482 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகன் (-மனிதன்-) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, எனக்குக் குழந்தை உண்டு என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக் கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன் என்று அல்லாஹ் கூறினான்.20

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 9

மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்றுகூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம் எனும் (2:125ஆவது) வசனத் தொடர்.

(இவ்வசனத்தின் மூலத்தில் ஒன்றுகூடும் இடம் என்ற பொருளைக் குறிக்கும்) மஸாபத்தன் எனும் சொல்லுக்கு மீளுமிடம் என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸுபூன எனும் சொல்லுக்கு மீண்டு(ம் மீண்டும்) வருவார்கள் என்று பொருள்.21

4483 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ் வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன் அல்லது என் இறைவன் மூன்று விஷயங் களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான். நான் ளநபி (ஸல்) அவர்களிடம்ன அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும் போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே! என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக் கொள்ளும்படி அல்லாஹ் வும் வசனத்தை அருளினான்.) மேலும் நான், (அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லா வகை மனிதர்களும்) வருகின்றார்கள். ஆகவே, (தங்கள் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே! என்று கேட்டேன். உடனே, அல்லாஹ் பர்தா (சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. ஆகவே, அவர்களிடம் நான் சென்று, நீங்கள் ளநபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதைன நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான் என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களுடைய துணைவியரில் ஒருவரிடம் நான் சென்ற போது, உமரே! தம்முடைய துணைவியருக்கு உபதேசம் செய்ய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்! என்று கேட்டார். அப்போது அல்லாஹ், இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்து விட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்-மான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம் எனும் (66:5ஆவது) வசனத்தை அருளினான்.22

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 10

மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத் தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய் (எனப் பிரார்த்தித்தார்கள்) எனும் (2:127ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கவாஇத் (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: காஇதா ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கின்ற அல்கவாஇத் எனும் சொல்லின் ஒருமை, காஇத் என்பதாகும்.

4484 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்,) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி(சற்று உள்ளடக்கி)விட்டதை நீ காணவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதைத் தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா? எனக் கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற் சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப் படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.23

பாடம் : 11

(நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ் வையும் எங்களுக்கு அருளப்பெற்ற(இவ் வேதத்)தையும், மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபி மார்கள்) மீது அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்ட வற்றையும், (இதர) அனைத்து இறைத் தூதர்களுக்கும் தங்களுடைய இரட்சகனிட மிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையி லும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர் களாக இருக்கின்றோம் என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்).

4485 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோ ருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த வர்களாக இருக்கிறோம் (2:136) என்று கூறினார்கள்.24

பாடம் : 12

அவர்கள் முன்னர் (முன்னோக்கிக் கொண்டு) இருந்த தமது கிப்லா - தொழும் திசையிலிருந்து அவர்களைத் திருப்பியது எது? என மக்களில் அறிவீனர்கள் வினவுவார்கள். (நபியே) நீர் கூறுவீராக: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுகின்ற வர்களை அவன் நேரான வழியில் செலுத்து வான் (எனும் 2:142ஆவது இறைவசனம்).

4486 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள்(ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர் களின் விருப்பமாக இருந்தது. (ஆகவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144ஆவது வசனத்தை அருளினான்.) உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன் னோக்கி)த் தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர் களுடன் தொழுதிருந்தவர்களில் ஒரு மனிதர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாச-ல் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்த வர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர். அவர், அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கின்றேன். நான், நபி (ஸல்) அவர்களு டன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல, அவர்கள், அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்து விட்டிருந்தனர் அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்கு கின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனு மாவான் எனும் (2:143ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

பாடம் : 13

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 2:143ஆவது வசனத் தொடர்.)

4487 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், இதோ வந்து விட்டேன்; என் இறைவா! கட்ளையிடு; காத்திருக்கிறேன் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், (நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத் துரைத்து விட்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அவர்கள், ஆம் (எடுத்துரைத்து விட்டேன்) என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், உங்க ளுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத் தாரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், உங்களுக்கு சாட்சியம் சொல் கின்றவர் யார்? என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும் என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள் என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது.

நடுநிலையான (வசத்) என்பதற்கு நீதியான என்று பொருள்.26

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 14

இறைத்தூதரைப் பின்பற்றுகின்றவர் யார்; தம் குதிகால் புறமாகத் திரும்பிவிடுகின்றவர் யார் என்பதைப் பிரித்தறிவதற்காகவே நீங்கள் முன்பிருந்த கிப்லாவை(த் தொழும் திசையாக) ஆக்கி(பின்பு மாற்றி)னோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களுக்கேயன்றி (மற்றவர்களுக்கு) இது நிச்சயம் பளுவாகவே இருந்தது. மேலும் அல்லாஹ் உங்களது நம்பிக்கையை வீணாக்குகின்றவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர் களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான் (எனும் 2:143ஆவது வசனத் தொடர்).

4488 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சுப்ஹுத்தொழுகையை மஸ்ஜிது குபாவில் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, கஅபாவை (த்தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான் என்று சொன்னார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அம் மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக் கொண்டனர்.27

பாடம் : 15

(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புங்கள். மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பட்டவர்கள் அது தங்களுடைய இறைவனி டமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். மேலும், அவர்கள் செய்கின்ற வற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:144ஆவது இறைவசனம்).

4489 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுத வர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

 

பாடம் : 16

(நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோ ராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக் காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 2:145ஆவது இறைவசனம்).

4490 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட)உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.29

பாடம் : 17

எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கின் றோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளை களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் அதை/அவரை (-கஅபாவை அல்லது நபி முஹம்மதை-) நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கி றார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனி டமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிடவேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்).

4491 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்த போது அவர்களிடம் ஒருவர் வந்து, சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவி லுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்க ளுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள் என்று சொன்னார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசை யான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

பாடம் : 18

ஒவ்வொரு(மதத்த)வருக்கும் அவரவர் திரும்பக் கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கி ருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டிக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன் றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்).30

4492 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

 

 

பாடம் : 19

மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள பாதி எனும் சொற்பொருள் கொண்ட) ஷத்ர் எனும் சொல்லுக்கு நோக்கி (திசையில்) என்று பொருள்.

4493 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையிலிருந்த போது, ஒரு மனிதர் வந்து, சென்ற இரவுளநபி (ஸல்) அவர்களுக்குன குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

பாடம் : 20

மேலும், (நபியே!) நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமேத் திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத் தொடர்).33

4494 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

பாடம் 21

நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர் மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக அறிபவனுமா வான் எனும் (2:158 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷஆயிர் (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு அடையா ளங்கள் என்று பொருள். அதன் ஒருமை ஷஈரா என்பதாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸஃப்வான் எனும் சொல்லுக்கு கற்கள் என்று பொருள்.

எதையும் முளைக்கவிடாத வழுக்குப் பாறைகளும் ஸஃப்வான் எனப்படுவதுண்டு. இதன் ஒருமை ஸஃப்வானா என்பதாகும். இதுவும் ஸஃபாவும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) ஸஃபா என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

4495 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கின் றார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமி டையே சுற்றி வருவது குற்றமில்லை என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருது கிறீர்கள்? எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி), (என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த முஷல்லல் எனும் குன்றில் உள்ள) மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) குதைத் எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்த போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை என்ற (2:158) இந்த வசனத்தை அருளினான்.34

4496 ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின் போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்த போது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில் லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமி டையே சுற்றிவருவதில் குற்றமில்லை எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான் என்று பதிலளித்தார்கள்.35

பாடம் : 22

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர் எனும் (2:165 ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அன்தாத் (இணைகள்) எனும் சொல்லுக்கு நேர் எதிரானவைகள் (அள்தாத்) என்று பொருள். இதன் ஒருமை நித்து என்பதாகும்.

4497 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறாரோ அவர் நரகம் புகுவார் என்று கூறினார்கள். (அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்து விடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார் என்று நான் சொன்னேன்.36

பாடம் : 23

இறை நம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாக வும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் யாராவது வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உஃபிய (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு விட்டுக் கொடுக்கப் பட்டால் என்று பொருள்.

4498 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்து விடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் ளமுஹம்மத் (ஸல்) அவர்களின்ன இந்தச் சமுதாயத்திற்கு, கொலை செய்யப்பட்டவர்களுக்ககாகப் பழிவாங்குவது உங்க ளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும் என்று கூறுகிறான்.

மன்னிப்பளித்தல் (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.

இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள் மீது கடைமையாக்கப் பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகின்றானோ அவனுக்கு- அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கின் றானோ அவனுக்கு- துன்புறுத்தும் வேதனை உண்டு. (2:178)

இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4499 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொலைக் குற்றத்தில்)அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.37

4500 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரி (அத்தை) ருபய்யிஉ (பின்த் நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட் டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்து விட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்து விடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்து விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரது முன்பல் உடைக்கப் படக்கூடாது என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்கு வதாகும் என்று சொன்னார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்து விட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு(எதை யேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறை வேற்றி (மெய்யாக்கிக் காட்டி)விடுகின்றான் என்று கூறினார்கள்.38

பாடம் : 24

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்க ளுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக் கப்பட்டதைப் போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; நீங்கள் தூய்மை அடையும்பொருட்டு (எனும் 2:183ஆவது இறைவசனம்).

4501 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமை யான போது நபி (ஸல்) அவர்கள், (ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம் என்று சொன்னார்கள்.

4502 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39

4503 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்த போது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே! என்று (நான் நோன்பு நோற்கா மல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், ரமளான் (நோன்பு) கடமை யாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையான போது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கை விடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள் என்று சொன்னேன்.

4504 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்த போது அந்நாளில் தாமும் ƒநான்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையான போது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்க மாகி, ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆகிவிட்டது.40

பாடம் : 25

(நோன்பு நோற்கவேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில் தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளவேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவ ளிப்பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம்.

அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப் பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் விட்டுவிடலாம் என்று அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்.41

ஹஸன் அல்பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42

(குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கார்ப்பிணிப்பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பை விட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம்.

தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பை விட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்து விட்ட பின்னால், ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக் கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள்.

(இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள சிரமப்படுகின்றவர்கள் எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் யுதீகூனஹு என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை(குர்ஆன் அறிஞர்களின் நிலை)யாகும்.43

4505 அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வஅலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன் ளரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்ன எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 26

உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத் தொடர்).

4506 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்பதன் மூலத்தை) ஃபித்யத்து தஆமி மஸாகீன என்று (ஏழைகள் எனப் பன்மை யாக) ஓதிக்காட்டி இது, சட்டம் மாற்றப்பட்டு விட்ட வசனமாகும் என்று கூறினார்கள்.

4507 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்ட போது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்! என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44

அபூ அப்துல்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின்அபீ உபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45

பாடம் : 27

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியி ழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும் விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) ஒன்று கூடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக் கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத் தொடர்).

4508 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாத நோன்பு கடமையான போது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ், (இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்து விட்டான் எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

 

 

பாடம் : 28

இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும் போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புக ளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்கு கிறான் எனும் (2:187ஆவது) வசனத் தொடர்.

இஃதிகாஃப் இருப்பவர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.

4509 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இந்த 2:187ஆவது வசனம் அருளப்பட்ட வுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலை யானதும் ளநபி (ஸல்) அவர்களிடம் சென்று,ன அல்லாஹ்வின் தூதரே! என் தலையணையின் கீழே (இந்த இரு கயிறுகளையும்) வைத்திருந் தேன். (ஆயினும் இரண்டையும் பிரித்தறிய முடியவில்லையே?!) என்று சொன்னேன். அதற்கு அவர்கள், வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.47

4510 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை என்ற (2:187ஆவது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள்தாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந் தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்)தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, (அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பக-ன் வெண்மையுமாகும் என்று கூறினார்கள்.

4511 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பத்தில்) வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள் எனும் (2:187ஆவது வசனத்தின்) தொடர் விடிய-ன் (மினல் ஃபஜ்ர்) எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக் கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், மினல் ஃபஜ்ர் (விடிய-ன்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும்தான் இது குறிக்கிறது என்று அறிந்து கொண்டார்கள்.48

 

 

 

பாடம் : 29

நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் (எனும் 2:189ஆவது வசனத் தொடர்).

4512 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டி ருந்தார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள் எனும் (2:189ஆவது) வசனத்தை அருளினான்.49

பாடம் : 30

குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள். அவர்கள் (குழப்பத்திலிருந்து) விலகிக் கொண்டால் அப்பால் அநீதி இழைப்போர் மீதேயன்றி போர்தொடுத்தல் என்பது இல்லை (எனும் 2:193ஆவது இறைவசனம்).

4513 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப(வருட)த்தில் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இரு மனிதர்கள் வந்து, மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர் (ரலி) அவர்களின் புதல்வரும் நபி (ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது? என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும்,

 குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள் என்று (2:193ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூற வில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ளஆம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில்ன குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால் (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகின் றீர்கள்! என்றார்கள்.50

4514 நாஃபிஉ (ரஹ்) அவர்கள்கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம், (காரி ஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு ஹஜ் செய்கின்றீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கை விட்டுவிடுகின்றீர்களே, ஏன்?அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்! என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது. 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர் இறையில்ல மான) கஅபாவில் ஹஜ் செய்தல் என்றார்கள்.

அந்த மனிதர், அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தனது வேதத்தில் இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்புமீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ் வுடைய கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள் என்றும் (49:9), குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள் என்றும் (2:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுறமாட்டீர்களா? என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், (நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின்படி) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட) ஒருவர் தமது மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆன போது குழப்பம் ஏதும் இருக்கவில்லை என்றார்கள்.

4515 அந்த மனிதர், அலீ (ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான் (ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின் போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்து விட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள்தாம் விரும்பவில்லை. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி (ஸல்) அவர்களின் மருமகனுமாவார் என்று கூறியவாறே, (நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கின்றீர்களே இது தான் அலீ அவர்களின் வீடாகும் என்று தமது கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.

பாடம் : 31

மேலும், நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள். இன்னும் உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள். (நல்லெண்ணத்துடன்) சிறந்த முறையில் செயல்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ், சிறந்த முறையில் செயலாற்றக்கூடியவர் களை நேசிக்கின்றான் எனும் (2:195ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தஹ்லுகா (அழிவு) எனும் சொல்லும் ஹலாக் எனும் சொல்லும் ஒன்றேயாகும். (இரண்டும் அழிவு எனும் பொருள் கொண்ட வேர்ச் சொற்களேயாகும்.)

4516 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் செல விடுங்கள். உங்கள் கரங்களால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள் எனும் (2:195ஆவது) இறைவசனம் (இறைவழியில்) செலவிடுவதைக் (கைவிடுவது) குறித்து அருளப்பட்டது.51

 

 

பாடம் : 32

ஆயினும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்களில் யாரேனும் நோயாளியாக, அல்லது தம் தலையில் பிணி ஏதும் உள்ளவராக இரு(ந்து பலியிடுவதற்கு முன்பே தலை முடியைக் களைய வேண்டிய கட்டாயம் நேரிட்டிரு)ந்தால், அதற்குப் பரிகாரம் நோன்பு நோற்றல், அல்லது தர்மம் வழங்குதல், அல்லது பலிகொடுத்தல் ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).

4517 அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இந்தப் பள்ளிவாச-ல் - அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாச-ல் - கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை என்று கூறிவிட்டு, உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ஸாவு உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, இந்த (2:196ஆவது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும் என்று சொன்னார்கள்.52

பாடம் : 33

எவரேனும் உம்ரா(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப்பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாத வர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமை யான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).53

4518 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தமத்துஉ (ஹஜ் தொடர்பான இந்த 2:196ஆவது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. ஆகவே, நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடைசெய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைத் தமது (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.

முஹம்மது பின் இஸ்மாயீல் புகாரீ யாகிய நான் கூறுகிறேன்: அவர் உமர் (ரலி) அவர்கள்தாம் என்று சொல்லப்படுகின்றது.54

பாடம் : 34

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) நீங்கள் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது (எனும் 2:198ஆவது வசனத் தொடர்).

4519 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உகாழ், மஜன்னா, மற்றும் ஃதுல்மஜாஸ் ஆகியன அறியாமைக் காலத்துச் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பிறகு) மக்கள் ஹஜ்ஜுப் பருவத்தில் (அங்கு) வியாபாரம் செய்வதைப் பாவச் செயலாகக் கருதினர். ஆகவே, ஹஜ் பருவத்தில், உங்கள் இறைவனின் அருளை (வியாபாரத்தின் மூலம்) தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது எனும் (2:198ஆவது) வசனத் தொடர் அருளப்பட்டது.55

 

பாடம் : 35

பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகின்ற (அரஃபாத் எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிவாருங்கள் (எனும் 2:199ஆவது வசனத் தொடர்).

4520 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்த-ஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள் எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்து விட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள் எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.56

 

4521 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலேயே தங்கியிருப்பவர், அல்லது தமத்துஉ ஹஜ் செய்கின்ற எண்ணத்தில் உம்ராவை முடித்து அதற்கான இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் இருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடுத லாக) இறையில்லம் கஅபாவை அவர் தவாஃப் செய்யலாம் (சுற்றி வரலாம்.) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றி) அரஃபா பயணமாகிவிட்டால் அவர் தம்மால் இயன்ற குர்பானியைக் கொடுக்கவேண்டும். அது ஒட்டகம், அல்லது மாடு, அல்லது ஆடு இவற்றில் அவர் விரும்பும் எதுவாகவும் இருக்கலாம். குர்பானிப் பிராணி கிடைக்க வில்லையென்றால் ஹஜ் நாட்களில் அரஃபா நாளுக்கு முன்பாக மூன்று நோன்புகள் நோற்க வேண்டும். (மூன்று நோன்புகளில்) கடைசி நோன்பு அரஃபா நாளில் வந்து விட் டாலும் பரவாயில்லை. பிறகு மக்காவிலிருந்து புறப்பட்டு அரஃபாத்திற்கு அவர் செல்லட்டும். அங்கு அஸ்ருத் தொழுகையிலிருந்து இரவின் இருள்படரும் வரைத் தங்கியிருக்கட்டும். பிறகு அரஃபாத்திலிருந்து மற்ற மக்களெல் லாம் புறப்பட்டு திரும்பிச் செல்லும் போது அவரும் திரும்பிச் செல்லட்டும். பிறகு மக்கள் அனைவருடனும் சேர்ந்து இரவை முஸ்த-ஃபாவில் கழிக்கட்டும். பிறகு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூரட்டும்! (அவர் மட்டுமன்றி) நீங்கள் (அனைவரும்) விடியும் வரை அதிகமாக அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும், லாஇலாஹா இல்லல்லாஹு (வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்றும் கூறி இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். பிறகு அங்கிருந்து திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், மக்களும் அங்கிருந்து தான் திரும்பிக் கொண்டிருந்தனர். உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வந்து, அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கருணையுள்ளவனும் ஆவான்(2:199)

(அதாவது,) நீங்கள் (ஷைத்தானுக்குக்) கல்லெறியும் வரை (திரும்பிச் செல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.)

 

பாடம் : 36

(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக! எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 2:201ஆவது இறைவசனம்).

4522 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக? எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

 

பாடம் : 37

அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத் தொடர்).

(2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஸ்ல் எனும் சொல்லுக்கு உயிரினம் என்று பொருள் என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

4523 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்பவனே யாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாடம் : 38

உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).

4524 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது எனும் (12:110ஆவது) வசனத்தில் (குஃத்திபூ -இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள்- என்று வாசிக்காமல்) குஃதிபூ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்) என்று வாசித்து விட்டு அவ்வசனத்திலிருந்து, இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அலைக் கழிக்கப்பட்டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது) எனும் (2:214ஆவது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.58

பிறகு நான் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் ளகுஃதிபூ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்ன அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.

4525 அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்த தில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்து கொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற் படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன என்று சொன்னார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், வ ழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் குஃத்திபூ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.59

பாடம் : 39

உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர் கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள்தாம் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம்.

4526 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும் வரை (வேறு எதுவும்) பேச மாட்டார்கள். ஒரு நாள் (அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த போது) அவர்களை (ஓதவிடாமல்) நான் பிடித்துக் கொண்டேன். அவர்கள் அல்பகரா அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி இந்த வசனம் எந்த விஷயத்தில் அருளப்பட்டது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்றேன். அதற்கு அவர்கள், இன்ன இன்ன விஷயத்தில் அருளப்பட்டது என்று கூறிவிட்டு பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.60

4527நாஃபிஉ(ரஹ்)அவர்கள் கூறியதாவது:

 ஆகவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள் எனும் (2:223ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி) அவர்கள், மனைவியிடம் அவளுடைய ..... கணவன் புணரலாம் என்று குறிப்பிட்டார்கள்.61

 

4528 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, உங்கள் பெண்கள் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள் எனும் (2:223ஆவது) இறைவசனம் இறங்கியது.62

 

 

பாடம் 40

நீங்கள் (உங்களுடைய) மனைவியரை விவாகரத்துச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா)தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம் (எனும் 2:232 ஆவது வசனத் தொடர்).

4529 மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண் கேட்டு வந்தனர்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் விவாகரத்துச் செய்து இத்தா காலம் கழியும் வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார். ளஆகவே, இது முழு விவாகரத்து (தலாக் பாயின்) ஆகும்.ன பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்ப மிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் மணமுடித்துக் கொடுக்க) மறுத்து விட்டார்கள்.

அப்போது தான் , அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம் எனும் (2:232 ஆவது) வசனம் இறங்கிற்று.63

பாடம் 41

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்து கொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர் களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்).

(2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யஅஃபூன (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு அன்பளிப் பாகக் கொடுத்தால் என்று பொருள்.

4530 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்யட்டும்! ஆயினும், அவர்களாகவே வெறியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டால் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மிகைத்தோனும் விவேகமிக்கவனும் ஆவான் எனும் (2:240 ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறை வசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங் களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? அல்லது இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன் என்று பதிலளித்தார்கள்.64

4531 அப்துல்லாஹ் பின் அபீ நஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களு டைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப் பார்கள் (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(கணவன் இறந்துபோன) அந்தப் பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த இத்தாவைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் உங்களில் மனைவி யரை விட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப் பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப) மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால்(நான்கு மாதம் பத்து நாட்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத் தான் வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார் களாக. ஆயினும், அவர்களாகவே வெளி யேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) இத்தா கால வரம்பு கணவனை இழந்த கைம் பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் இத்தா இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருப்பாள். இதையே (தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக எனும் இந்த இறைவசனத் தொடர் குறிக்கின்றது.

ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்ன அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் இத்தா இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெயியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் சாசனம் செய்து தர வேண்டுமென்ற முறை)யை மாற்றி விட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66

இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற் சொன்ன கருத்தைப் போலவே அதாஉ அவர்கள் வழியாக இப்னு அபீ நஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

4532 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67 அப்போது அப்துர்ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக் கொண்ட தில்லையே என்று சொன்னார்.

உடனே நான் உரத்த குரலில், கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்ச லுடையவன்தான் என்று சொன்னேன்.68 பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) மாலிக் பின் ஆமிர் அல்லது மாலிக் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னை விட்டு (கணவன்) இறந்து விட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், (கணவன் இறந்து விட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள அல்பகரா எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (அத்தலாக் எனும்) சிறிய அத்தியாயம் இறங்கிற்று என்று கூறினார்கள்.69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், (வழியில்) நான் அபூ அதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன் என்று (சந்தேகமின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

பாடம் : 42

(நம்பிக்கை கொண்டவர்களே!) அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

4533 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், நம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்திவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறு களையும் நெருப்பால் நிரப்புவானாக! என்று சொன்னார்கள்.70

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத்துடன் (அல்லது அவர்களுடைய வயிறுகளையும் என்று) சொன்னார்கள்.71

 

 

 

 

பாடம் : 43

மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் (எனும் 2:238ஆவது வசனத் தொடர்).

(இதன் மூலத்திலுள்ள) கானித்தீன் எனும் சொல்லுக்குக் கீழ்படிந்தவர்களாக என்று பொருள்

4534 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள் எனும் (2:238 ஆவது) வசனம் இறங்கும் வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் இறங்கியவுடன் பேசாம-க்கும் படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

பாடம் : 44

நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர்களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்த பிரகாரம் அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள் (எனும் 2:239ஆவது இறை வசனம்).

இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:73

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) குர்சிய்யுஹு (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு அவனது அறிவு என்று பொருள்.

(2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பஸ்தத்தன் (அதிகம்) எனும் சொல்லுக்கு கூடுதல், சிறப்பு என்று பொருள்.

(2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃப்ரிஃக் (பொழிவாயாக!) எனும் சொல்லுக்கு இறக்கியருள் என்று பொருள்.

(2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) வலா யஊதுஹு (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு (வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம் பெற்றுள்ள) ஆதனீ என்பதற்கு எனக்குப் பளுவாகிவிட்டது என்று பொருள். ஆது என்பதற்கும் அய்த் என்பதற்கும் பலம் என்று பொருள்.

(அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) சினா எனும் சொல்லுக்குச் சிற்றுறக்கம் என்று பொருள்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

(2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃப புஹித்த (வாயடைத்துப் போனான்) என்பதற்கு அவனது ஆதாரம் போய்விட்டது என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காவியா (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, மக்கள் சஞ்சாரமற்ற என்று பொருள். உரூஷிஹா (முகடுகள்) என்பதற்கு அதன் கட்டடங்கள் என்று பொருள்.

 (2:259ஆவது வசனத்தின் மூலத்தில்

ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) நுன்ஷிருஹா எனும் சொல்லுக்கு அதை வெளிப்படுத்துகிறோம் என்று பொருள்.

(2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) இஃஸார் (சூறாவளி) எனும் சொல்லுக்குத் தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்:

(2:264ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸல்த் (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப்பாறை) என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(2:265ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வாபில் என்பது பெருமழையும் அத்தல்லு என்பது தூறலும் ஆகும். இது இறை நம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும்.

(2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) என்பதற்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.

4535 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:

(முத-ல்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப் பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்து விட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாத வர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இது வரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுது கொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக,

இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுது விட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

 

இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருது கிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74

பாடம் : 45

உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார் களாக! (எனும் 2:240ஆவது வசனத் தொடர்).

 

4536 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்ப வர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக! எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறை வசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்ற மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.75

பாடம் 46

இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு! எனக் கூறிய போது, அவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். திண்ணமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்றான் (எனும் 2:260 ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுர்ஹுன்ன (அவற்றை உங்களிடம் வைத்து) எனும் சொல்லுக்கு அவற்றைப் பல துண்டுகளாக்கி என்று பொருள்.

4537 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம்கொள்ள அதிகத் தகுதியுடைவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்க வில்லை.) ஏனெனில், என் இறைவா! மரித்த வர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76

பாடம் : 47

நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக் கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந் தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகை யான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலு வில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்பு வாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான் எனும் (2:266 ஆவது) இறைவசனம்.

4538 (அப்துல் அஸீஸ் பின் அப்தில் ம-க்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுலைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிட மிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:

உமர் (ரலி) அவர்கள் ஒரு நாள் நபித் தோழர்களிடம், நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து... (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்? என்று கேட்க, அவர்கள், அல்லாஹ்வே அறிந்தவன் என்று பதிலளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் கோபமடைந்து, எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டி லொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள் என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்ப மாகக் கருதிக் கொள்ளாதீர்கள் என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், என்ன செயல்? என்று கேட்க, இப்னு அப்பாஸ், ஒரு செயலுக்கு என்று (மீண்டும்) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ் வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்து விட்டது; (அதைத் தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்) என்று சொன்னார்கள்.77

பாடம் : 48

(பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத் தொடர்).

(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான் என்று சொல்வதற்கு அல்ஹஃப அலய்ய என்று (அரபுகள்) கூறுவர். இச் சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் இல்ஹாஃப் (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.

4539 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட் டார்கள் எனும் (இந்த 2:273ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 49

வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர்கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே எனக் கூறியதனாலேயாம். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்மஸ்ஸு (தீண்டல்) எனும் சொல்லுக்குப் பைத்தியம் என்று பொருள்.

4540 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி

வாச-ல் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.78

 

 

 

பாடம் : 50

அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும் 2:276ஆவது வசனத் தொடர்).

(அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றான்.

4541 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாச-ல் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.

 

 

 

பாடம் : 51

(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விட மும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 2:279ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃபஃதனூ எனும் சொல்லுக்கு அறிந்து கொள்ளுங்கள் என்று பொருள்.79

4542 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச-ல் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.

பாடம் : 52

(உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின், தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலான தாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்).

4543 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.80

 

 

 

பாடம் : 53

ஒரு நாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281 ஆவது இறைவசனம்).

4544 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 2:281ஆவது) வசனம் ஆகும்.81

 

 

பாடம் : 54

உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத் தொடர்).

4545 மர்வான் அல் அஸ்ஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தாம் - உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் எனும் இந்த (2:284 ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள்.82

பாடம் : 55

(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்.) (இவர்கள்) யாவரும், அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங் களையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்றுச் சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்ட மாட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம்; வழிப்பட்டோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது என்றும் வேண்டுகிறார்கள் (எனும் 2:285 ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(2:286ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இஸ்ரன் (பளு, சுமை) எனும் சொல்லுக்குப் பொறுப்பு என்று பொருள்.

November 30, 2009, 1:46 PM

65-திருக்குர்ஆன் விளக்கவுரை2

பாடம் : 1

 இ(ந்தவேதத்)தில் தெளிவான கருத்துள்ள வசனங்களும் இருக்கின்றன (எனும் 3:7ஆவது வசனத் தொடர்).

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

 (தெளிவான கருத்துள்ள வசனங்கள் என்பது) ஹலால், ஹராம் (அனுமதிக்கப்பட்டவை, தடை செய்யப்பட்டவை பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்) ஆகும்.

(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ உகரு முதாஷாபிஹாத் (ஒன்றையொன்று ஒத்த வேறுவசனங்களும் உள்ளன) எனும் தொடருக்கு ஒன்றினையொன்று உறுதிப்படுத்துகின்ற வசனங்கள் என்று பொருள்.

எடுத்துக்காட்டாக, இன்னும் துன்மார்க் கர்களைத் தவிர (எவரையும்) அவன் வழி தவறச் செய்வதில்லை என்று (ஒரு வசனத்தில் -2:26) அல்லாஹ் கூறுகின்றான். (மற்றொரு வசனத்தில்-10:100) சிந்தித்துணராதவர்கள் மீதே அவன் பாவச் சுமையை வைக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (இன்னுமொரு வசனத்தில்-47:17) எவர் நேர்வழி பெற்றிருக் கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியை இன்னும் அதிகமாக அளிக்கின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். (இவ்வசனங் களில் ஒன்று மற்றொன்றின் கருத்தை வ-யுறுத்துகின்றன.)3

(3:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸைஃக் (கோணல்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) இப்திஃகாஅல் ஃபித்னத் எனும் சொல்லுக்குக் குழப்பம் செய்ய விரும்புதல் என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) அர்ராஸிகூன ஃபில் இல்மி எனும் தொடரின் பொருளாவது: அறிவில் முதிர்ந்தவர்களும் அவற்றின் விளக்கத்தை அறிவார்கள். இவற்றை நாங்கள் நம்பினோம் என்றும் கூறுவார்கள்.4

4547ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் கோணல் உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்ய விரும்பி யதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வை யன்றி எவரும் அறியார். அறிவில் முதிந்தவர் களோ இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளி களன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை எனும் (3:7ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, முத ஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கை யாயிருங்கள் என்று சொன்னார்கள்.5

பாடம் : 2

இன்னும் நான் இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன் (என இறைவனை வேண்டினார் இம்ரானின் துணைவியார்- எனும் 3:36ஆவது வசனத் தொடர்).6

4548 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டு வதால் அக்குழந்தை உடனே கூக்குரலெ ழுப்பும். (ஆனால்,) மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால், இந்தக் குழந்தையையும் இதன் வழித் தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத் தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்) எனும் (3:36ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.7

பாடம் : 3

அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவு மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்க ளுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு (எனும் 3:77ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தில் ஃபஈல் எனும் வாய் பாட்டில் அமைந்த துன்பம் தரும் என்ற பொருளைக் குறிக்கும்) அலீம் எனும் சொல்லுக்கு முஃப்இல் வாய்பாட்டில் அமைந்த முலீம் என்பதன் பொருளாகும். (அதாவது) துன்புறுத்துகின்ற (என்று பொருள்.)

4549 & 4550 அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 ஒரு முஸ்-மான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின் போது துணிவு டன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், இறுதி நாளில் அல்லாஹ், அவர்களிடம் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவு மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவு மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு எனும் (3:77ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்பால், அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து, அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்கிறார்? என்று கேட்க, நாங்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள் என்று பதிலளித்தோம்.

(அதற்கு) அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மைதான்.) என் தொடர்பாகத் தான் அந்த (3:77ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. ளஅந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டுசென்றோம்.ன நபி (ஸல்) அவர்கள், உனது (இரு) சாட்சி(கள்); அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ் வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகிறது.) என்று சொன்னார்கள்.

உடனே நான், அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,எவர் ஒரு பிரமாண(வாக்குமூல)த்தின் போது அதன் மூலம் ஒரு முஸ்-மான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக் கொள் வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில்தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார் என்று சொன்னார்கள்.8

4551 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத ஒன்றைக் கொடுத்து வாங்கியதாக (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்தார். (வாங்க வந்த) முஸ்லிம்களில் ஒருவரைக் கவர்(ந்து அவரிடம் தம் பொருளை விற்பனை செய்)வதற்காக இப்படிச் செய்தார்! அப்போது அல்லாஹ்வின் உடன்படிக் கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை எனும் (3:77 ஆவது) இறைவசனம் இறங்கியது.9

4552 இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இரு பெண்கள் ஒரு வீட்டில் அல்லது ஓர் அறையில் (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டுவிட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலிகொள்ளப்பட்டுப்) போய்விடும் என்று சொன்னார்கள் எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலை யைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறு மில்லை எனும் (3:77ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள், பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

பாடம் : 4

(நபியே!) கூறுக: வேதக்காரர்களே! எங்களுக் கும் உங்களுக்கும் மத்தியிலுள்ள பொதுவான விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வை யன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர் களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற வர்கள்-) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள் (எனும் 3:64ஆவது இறைவசனம்).

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) சவாஇன் (பொதுவான) எனும் சொல்லுக்கு நடுநிலையான என்று பொருள்.

4553 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் தம் வாய்ப்பட எனக்கு அறிவித்ததாவது:

(குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருப மொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து திஹ்யா அல் கல்பீ அவர்கள் கொண்டு வந்து, புஸ்ராவின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக் ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்)தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக் கொண்டி ருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கின்றார்களா? என்று கேட்டார். அதற்கவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். ஆகவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரச வையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். அதற்கு நான், நான்(தான் நெருங்கிய உறவினன்) என்று சென்னேன். ஆகவே, அவரது முன்னிலையில் என்னை அமர்த்தி னர். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினர். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), தம்மை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சென்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல் என்றார். அல்லாஹ்வின் மீது சத்திய மாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் ளமுஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றின நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன். பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள் என்று சென்னார். நான், அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவ ராவார் என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் அவருடைய முன்னோர் களில் அரசர் எவராவது இருந்திருக்கின் றாரா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் அவர் தம்மை நபி என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக் கிறீர்களா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன். அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார். நான், இல்லை; பலவீனமான வர்கள்தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்றேன். அவர், அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றனரா? என்று கேட்டார்.

நான் இல்லை; அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர் என்று சொன்னேன். அவர், அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன்.

அவர், அவருடன் நீங்கள் போர் புரிந்த துண்டா? என்று கேட்டார். நான், உண்டு என்று சொன்னேன். அவர், அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன? என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம் என்று சொன்னேன்.

அவர், அந்த மனிதர் வாக்கு மீறுகின் றாரா? என்று கேட்டார்.நான், இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இதில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

(பிறகு) அவர், இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை நபி என) வாதித்ததுண்டா? என்று கேட்டார். நான், இல்லை என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்க ளிடையே அவருடைய குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்றீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று நான் கூறியிருப்பேன்.

மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமான வர்களா? என்று அவரைப் பின்பற்றுபவர் களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்று கின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூர்களைப் பின்பற்று வோர் ஆவர். நான் உம்மிடம் அவர் தம்மை நபி என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த்துணியாத‌த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன். உம்மிடம் நான் அவரது மார்க்கத்தை ஏற்றுக் கொண் டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டேன். அதற்கு இல்லை என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்து விடும் போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படைய மாட்டார்.) உம்மிடம் நான் அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா? என்று கேட்டேன், நீர் அதிகரித்தே வருகின்றனர் என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான் . அது முழுமையடையும் வரை (அதிகரித்துக் கொண்டே செல்லும்). மேலும் உம்மிடம் நான் அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள்தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித் தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். அவர் வாக்கு மீறுகின்றாரா? என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், அவர் வாக்கு மீறுவதில்லை என்று கூறினீர். இறைத் தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை.

நான் இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன்வைத்ததுண்டா? என்று உம்மிடம் கேட்ட போது நீர் இல்லை என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின் பற்றிச் செல்கின்ற ஒரு மனிதர் இவர் என நான் சொல்லியிருப்பேன் என்று சொன்னார்.

பிறகு ஹெராக்ளியஸ், என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகின் றார்? என்று கேட்டார். நான், தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்க மாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.

ஹெராக்ளியஸ், அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர்தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும் என்று சொன்னார்.

பிறகு ஹெராக்ளியஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)

நேர் வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்க ளான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும் நாம் இணை வைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர் களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், திண்ணமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகின்ற வர்கள்-) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்.

ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்த போது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.

நாங்கள் வெளியே வந்த போது, நான் என் சகாக்களிடம் இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வ-மை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகி றாரே! என்று சொன்னேன். (அன்று முதல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதி கொண்டவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.

ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் (தம் அறிவிப்பில்) கூறியிருப்பதாவது: பிறகு ஹெராக்ளியஸ் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களை தமது மாளிகை ஒன்றில் ஒன்றுகூட்டி அவர்களிடையே அந்திமக் காலத்தில் உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்களது ஆட்சி உங்களிடமே நீடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? (அப்படியானால் இந்த இறுதித் தூதரை நம்புங்கள்) என்று பேசினார். இதைக் கேட்டவுடனேயே காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவது போல வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடி, வாசல் அருகில் சென்றதும், அவை தாளிடப் பட்டிருக்கக் கண்டனர். அப்போது மன்னர் ஹெராக்ளியஸ் அவர்களை என்னிடம் திருப்பிக் கொண்டு வாருங்கள் என அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (அவ்வாறே அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது எவ்வளவு பிடிப்புக் கொண்டுள்ளீர்கள் என்பதை நான் சோதிக்கவே இவ்வாறு செய்தேன். நான் விரும்பியதை இப்போது ஐயமற அறிந்து கொண்டேன் என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைக் குறித்துத் திருப்தியும் அடைந்தனர்.10

பாடம் : 5

நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள். மேலும், நீங்கள் எப்பொருளை தானம் செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான் (எனும் 3:92ஆவது இறைவசனம்).

4554 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா (முஸ்லிம்களான) அன்சாரிகளி லேயே அபூ தல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் அதிகமான பேரீச்சந் தோட்டங்கள் உடையவராய் இருந்தார்கள். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரேயிருந்த பீருஹா (அல்லது பைருஹா) எனும் தோட்டம் தம் சொத்துகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள நல்ல(சுவையான) நீரைப் பருகும் வழக்க முடையவராய் இருந்தார்கள்.

நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடைய மாட்டீர்கள் எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்ட போது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விருமபுகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒரு போதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள் என அல்லாஹ் கூறுகின்றான். என் சொத்து களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனிமேல்,) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். இதற்கான நன்மையையும் (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இது இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர் பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நல்லது. அது (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அழிந்து) போய்விடும் செல்வம் தானே! (அதைத் தர்மம் செய்து, மறுமைக்குச் சேமிப்பாக்கிக் கொள்வது நல்லது தான் .) என்று சொல்லிவிட்டு, நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அ(ந்தத் தோட் டத்)தை உம்முடைய நெருங்கிய உறவினர் களிடையே (தர்மமாக) வழங்குவதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன் என்றார்கள்.

அபூ தல்ஹா (ரலி) அவர்கள், அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டுத் தம் உறவினர்களுக்கும் தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.

ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அது அழிந்துபோய்விடும் செல்வம்தானே! என்பதற்கு பதிலாக) அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம் தானே என்று (நபிகளார் கூறியதாக) இடம் பெற்றுள்ளது.11

யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அது (அழிந்து) போய்விடும் செல்வம்தானே என்று வாசித்துக் காட்டினேன். (அவர்கள் அதை மறுக்கவில்லை.)

4555 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆகவே, அந்த (பைருஹா)த் தோட்டத்தை ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களுக்கும் உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்கும் ளஅபூ தல்ஹா (ரலி) அவர்கள் தர்மமாகன வழங்கி விட்டார்கள். ஆனால், நான்தான் (அவ் விருவரையும் விட) அவருக்கு நெருங்கிய உறவினராய் இருந்தேன். அதிலிருந்து எனக்கு அவர் சிறிதும் கொடுக்கவில்லை.12

பாடம் : 6

(நபியே!) கூறுக: (யூதர்களாகிய) நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள் (எனும் 3:93ஆவது வசனத் தொடர்).

4556 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரிலிருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட் டார்கள். அவர்கள் நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், (உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) ரஜ்ம் (சாகும் வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா? என்று கேட்க, யூதர்கள், (அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காண வில்லை என்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர் களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் ரஜ்ம் தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக் கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தைவிட்டு இழுத்து விட்டு, இது என்ன? என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்த போது, இது ரஜ்முடைய வசனம் என்று சொன்னார்கள். ஆகவே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே கல்லெறி தண்டனை தரப்பட்டது.

அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள் மீது கவிழ்ந்து கொள்வதை நான் பார்த்தேன்.13

பாடம் : 7

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப்பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர்களாவீர் (எனும் 3:110ஆவது வசனத் தொடர்).

4557 அபூஹாஸிம் சுலைமான் அல் அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கென்று தோற்றுவிக்கப் பெற்ற சமூகத்தாரில் மிகச் சிறந்தவர் களாவீர் எனும் (3:110ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் நீங்கள் மக்களில் சிலரை (போர்க் கைதிகளாகச் சிறைபிடித்து) அவர்களின் கழுத்தைச் சங்கி-களில் பிணைத்துக் கொண்டுவருகிறீர்கள். (இந்நிலையிலும் மனம் திருந்தி) முடிவாக அவர்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர். (இவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும் நீங்களே) மக்களிலேயே சிறந்தவர்களாவீர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.14

பாடம் : 8

உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரிய மிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் (எந்நேர மும்) அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (எனும் 3:122ஆவது இறைவசனம்.)

4558 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியமிழக்கத் தொடங்கிய நேரத்தையும் (நினைவு கூருக!) எனும் (3:122 ஆவது) இறைவசனம் (அன்சாரிகளாகிய) எங்கள் விஷயத்திலேயே இறங்கியது. பனூ ஹாரிஸா மற்றும் பனூச-மா குலத்தாரான நாங்கள்தாம் அந்த இரு பிரிவினர். இந்த இறைவசனம் (எங்கள் கோழைத்தனத்தை எடுத்துரைத்தாலும் அது) இறங்காமலிருந் திருக்கக் கூடாதா என்று நாங்கள் விரும்ப மாட்டோம். ஏனெனில், அல்லாஹ் அவ்விரு பிரிவினருக்கும் பாதுகாவலனாக இருந்தான் என்று (அதில்) அல்லாஹ் கூறியிருக்கிறான்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மற்றொரு முறை அறிவிக்கும் போது, இது இறங்காமலிருந்திருந்திருந்தால் அது எனக்கு மகிழ்வைத் தந்திராது என்று சொன்னார்கள்.15

பாடம் : 9

அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (எனும் 3:128ஆவது இறைவசனம்).

4559 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஹுத் போரில் பலத்த காயமுற்ற பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது, சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்த் (அல்லாஹ், தன்னைப் புகழ்வோரின் புகழுரையைச் செவிமடுக்கிறான்; எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்.) என்று சொன்ன பின்பு, இறைவா! இன்னார், இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! என்று (சில எதிரி களுக்கெதிராகப்) பிரார்த்திப்பதை நான் கேட்டிருக்கிறேன். அப்போது அல்லாஹ், அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளினான்.16

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4560 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த் என்று சொன்ன பின்பு, இறைவா! வலீத் பின் வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக!17 இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கு வாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள்.18 அதை சப்தமாகச் சொல்வார்கள். தமது ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்ப தால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (3:128 ஆவது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.19

பாடம் : 10

இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்). இதனால் (அல்லாஹ்) உங்களுக்கு துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான் எனும் (3:153ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உக்ராக்கும் (உங்கள் பின்னால்) எனும் சொல், ஆகிரிக்கும் எனும் சொல்லின் பெண்பாலாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(உஹுதுப் போர் குறித்துப் பேசும் 9:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஹ்தல் ஹுஸ்னயைன் (இவ்விரு நன்மை களில் ஒன்றை) எனும் சொற்றொடர் வெற்றி அல்லது வீர மரணத்தைக் குறிக்கின்றது.

4561 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத் தான் இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டி ருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனும் இந்த (3:153ஆவது) இறைவசனம் குறிப்பிடு கின்றது. அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.20

பாடம் : 11

பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்களுக்கு அருளினான் எனும் (3:154 ஆவது) வசனத் தொடர்.

4562 அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போர் நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்த போது எங்களைச் சிற்றுறக்கம் ஆட் கொண்டது. அதனால் எனது வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.21

 

 

பாடம் : 12

அவர்கள் (எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால், போரில்) தமக்குப்படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்புக்கு இணங்கினர். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு எனும் (3:172ஆவது) இறைவசனம்.22

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கர்ஹ் எனும் சொல்லுக்குப்படுகாயம் என்று பொருள். இஸ்தஜாபூ (இணங்கினர்) எனும் சொல்லுக்கு பதிலளித்தார்கள் என்று பொருள். (இதன் எதிர்கால வினைச் சொல்லான) யஸ்தஜீபு என்பதற்கு, பதிலளிப்பார் என்று பொருள்.

பாடம் : 13

இவர்களிடம் நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக் கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் இவர்கள் கூறினார்கள் எனும் (3:173ஆவது) இறைவசனம்.

4563 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்ட போது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள் என மக்கள் (சிலர்) கூறிய போது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் என்றும் அவர்கள் கூறினார்கள்.23

4564 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது, எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன் (ஹஸ்பியல்லாஹ் வ நிஅமல் வக்கீல்) என்பதே அவர்களின் கடைசி வார்த்தையாக இருந்தது.

 

பாடம் : 14

அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும். அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், நீங்கள் செய்கின்றவற்றை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன் எனும் (3:180ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சயு(த்) தவ்வக்கூன (அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும்) எனும் சொற்றொடர் தவ்வக் துஹு பிதவ்கின் (நான் அவனுக்கு மாலையிட் டேன்) எனும் வாக்கியத்திற்கு நிகரானதாகும்.

4565 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லை யாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாகக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கறுப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றப்படும். அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை -அதாவது அவரது இரு தாடைகளைப்- பிடித்துக் கொண்டு, நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம் என்று சொல்லும் எனக் கூறிவிட்டு, பிறகு, அல்லாஹ் தனது பேருதவியிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் யார் கருமித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் தமக்கு அதனை நல்லதென எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்கேயாகும்.அவர்கள் எதனை வழங்காது வைத்திருந்தார்களோ அது மறுமையில் அவர்களது கழுத்தில் மாலையாக மாட்டப்படும். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரிய தாகும். மேலும் நீங்கள் செய்கின்றவற்றை (யெல்லாம்) அல்லாஹ் நன்கறிபவன் எனும் இந்த (3:180ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.24

பாடம் : 15

(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர் களிடமிருந்தும், இணைவைத்தோரிடமி ருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186ஆவது வசனத் தொடர்).

4566 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபதக் நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத் தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந் தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தி ருந்த போது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, எங்கள் மீது புழுதி கிளப்பாதீர் என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ளநபி (ஸல்) அவர்களிடம்ன மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள் என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம் என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

 பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் பின் உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார் என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந் தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இது தான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம் என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக் கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர் களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர் களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர் களிடமிருந்தும் இணைவைத்தோரிடமி ருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமைகாத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அது தான் உறுதி மிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறை நம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர் களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாம். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர் களை) நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (2:109)

அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக் கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பா ளர்களும், சிலைவணங்கிகளும் (இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள் என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

பாடம் : 16

தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (எனும் 3:188ஆவது இறைவசனம்).

4567 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர் களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடை வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும் போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டு மென்றும் விரும்புவார்கள் அப்போது தான் தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் (3:188ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

4568 அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மதீனா ஆளுநர்) மர்வான் பின் ஹகம்25 தம் காவலரிடம் ராஃபிஉ! நீ இப்னு

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று,

தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத(சாதனைகள் முத-ய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டு மென்று விரும்புகின்ற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப் பின் நாம் அனைவருமே வேதனை செய்யப் படவேண்டிவருமே! என்று (நான் வினவிய தாகக்) கேள் என்று சொன்னார். ளஅவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போதுன உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்து விட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவ-)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப்பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்து விட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதி மொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினை வூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண் டது மிக மோசமானதாகும். தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒரு போதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (3:187, 188)26.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 17

திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) இறைவசனம்.

4569 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் ளஅவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாருமானன மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்த போது (எழுந்து) அமர்ந்து கொண்டு வானத்தை நோக்கியவாறு திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) உளூ (அங்க சுத்தி) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்ன போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) சுப்ஹு தொழுதார்கள்.27

பாடம் : 18

அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர் களாகவும், ஒருக்களித்துப்படுத்தவர் களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (சிந்தித்து விட்டு இவ்வாறு பிரார்த்திக்கின் றார்கள்:) எங்கள் இரட்சகனே! இதை (யெல்லாம்) நீவீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே, நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக! (எனும் 3:191ஆவது இறைவசனம்.)

4570 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் ளஅவர்களும் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாருமானன மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் நிச்சயம் (இன்று) அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன் என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீள வாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் 3ஆவது அத்தியாயமான) ஆலு இம்ரானிலிருந்து கடைசிப் பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்க விடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து உளு (அங்கசுத்தி) செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போலவே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் தமது (வலக்) கரத்தை என் தலை மீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத்திருகி(உஷார் படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு, பிறகு வித்ர் தொழுதார்கள்.28

பாடம் : 19

எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைய வைக்கின்றாயோ, நிச்சயமாக அவனை நீ இழிவுக்குள்ளாக்கிவிட்டாய். மேலும் (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192 ஆவது இறைவசனம்).

4571 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கி னேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் இரு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து உளு (அங்கசுத்தி) செய்தார்கள். தமது உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்தது போன்றே நானும் செய்து விட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத்திருகினார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.பிறகு வித்ர் தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவ ரான பிலால் அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.

பாடம் : 20

எங்கள் இரட்சகனே! உங்கள் இறைவனை நம்புங்கள்- என்று இறை நம்பிக்கைக்கு அழைப்பு விடுத்த ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்று, உறுதியாக நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் எங்களைவிட்டுத் தீமைகளை அகற்றுவாயாக! மேலும் நல்லோருடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக! எனும் (3:193ஆவது இறைவசனம்.)

4572 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கி னேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர் களுடைய வீட்டாரும் அதன் நீள வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் கரத்தால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்க லானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை(3:190-200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப் பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே எழுந்து சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளூவை அவர்கள் செம்மையாகச் செய்து கொண்டு தொழுவதற்காக நின்றார்கள்.

அவர்கள் செய்தது போன்றே நானும் செய்து விட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக் காதைத் திருகலானார்கள்.

(பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழ லானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் 4577 ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் அவர்களும் (எனது) பனூச-மா குலத் தாரிடையே நான் (நோயுற்றுத்) தங்கியிருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) எதையும் விளங்க முடியாமல் இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன். அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடு கின்றான்:

ஓர் ஆணிண் பங்கு இரு பெண்ணின் பங்கிற்குச்சமமானது. (இறந்து போன வருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இருபங்கு அவர்களுக்குரியதாகும். ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்)பாதி அவளுக்குரிய தாகும்.

இறந்து போனவருக்குக் குழந்தைகள் இருப்பின் அவருடைய பெற்றோரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு.

அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்.

அவருக்கு சகோதர சகோதரிகளு மிருந்தால், தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள்.

இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரணசாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான்(சொத்துகள் பங்கீடு செய்யப்பட வேண்டும்).

உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்க ளுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான்.

திண்ணமாக அல்லாஹ்(உண்மை நிலைகள் யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்த வனாகவும் இருக்கின்றான் (ஆகையால், அவன் நிர்ணயித்த பிரகாரமே பாகப் பிரிவினை செய்து கொள்ளுங்கள்) என்னும் (4:11-ஆம்) வசனம் இறங்கியது.

தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் ளதொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டுத்ன தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.29

November 2, 2009, 2:30 PM

65-திருக்குர்ஆன் விளக்கவுரை3

பாடம் : 1

அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதிசெலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக் கொள்ளலாம் (எனும் 4:3 ஆவது வசனத் தொடர்).

4573 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதரின் பராமரிப்பில் அநாதைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளை அவர் மணம் முடித்துக் கொண்டார். அவளுக்குப் பேரீச்ச மரம் ஒன்று (சொந்தமாக) இருந்தது. அந்தப் பேரீச்ச மரத்திற்காகவே அந்தப் பெண்ணை அவர் தம்மிடம் வைத்திருந்தார். மற்றபடி அவளுக்கு அவரது உள்ளத்தில் (இடம்) ஏதுமிருக்கவில்லை. ஆகவே அவர் விஷயத்தில்தான் அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீங்கள் நீதி செலுத்த இயலாது என அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) வசனம் இறங்கிற்று.

அறிவிப்பாளர் (ஹிஷாம் பின் யூசுஃப், அல்லது ஹிஷாம் பின் உர்வா-ரஹ்) கூறுகிறார்:

(இதை அறிவித்த போது) உர்வா (ரஹ்) அவர்கள், அந்தப் பேரீச்ச மரத்திலும் அவரது செல்வத்திலும் அப்பெண் அவருக்குப் பங்காளியாய் இருந்தாள் என்று அறிவித்தார் என்று நான் எண்ணுகிறேன்.2

4574 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன் றாக, நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம் எனும் (4:3ஆவது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:

என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கின்ற- அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக் கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளது மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் - அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகின் றார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.

இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பி லிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர் என்று தொடங்கும் (4:127ஆவது) வசனத்தை அருளினான்.

மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (4:127) உயர்வுக்குரிய அல்லாஹ் மேலும் யாரை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவ தில்லையோ... என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.

அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும் போது அவர்களை மணந்து கொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.3

பாடம் : 2

(அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! அநாதைகளிடம் அவர்களுடைய செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கும் போது அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ் போதுமானவன் (எனும் 4:6ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பிதாரன் எனும் சொல்லுக்கு அவசரமாக என்று பொருள்.

(4:18ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதத்னா எனும் சொல்லுக்குத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்று பொருள். இச்சொல் இதாத் (ஆயத்தம்) எனும் மூலச்சொல்லிலிருந்து அஃப்அல்னா எனும் வாய்பாட்டில் வந்ததாகும்.

4575 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதை களின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! எனும் (4:6ஆவது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இது தான் அதன் பொருள்.)4

பாடம் : 3

பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்து விட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விடுங்கள் (எனும் 4:8ஆவது இறைவசனம்).

4576 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாகப்பிரிவினை செய்து கொள்ளும் போது உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் ஆகியோர் வந்து விட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (சிறிது) அளியுங்கள். மேலும், அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கூறி(அனுப்பி)விடுங்கள் எனும் (4:8ஆவது) வசனம், (சட்டம்) நடை முறையிலுள்ள வசன மாகும்; சட்டம் மாற்றப்பட்ட வசனமன்று.5

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.6

 

பாடம் : 4

அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகின்றான்... (என்று தொடங்கும் 4:11ஆவது வசனம்.)

4577 ஜாபிர்( ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என்) பனூச-மா குலத்தாரி டையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்த போது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்! என்று கேட்டேன். அப்போது தான் அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரி வினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகின்றான் என்று தொடங்கும் (4:11ஆவது) வசனம் இறங்கிற்று.7

பாடம் : 5

(இறந்து போன) உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப் பங்கு உங்களுக் குரியதாகும் (எனும் 4:12ஆவது வசனத் தொடர்).

4578 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது.

அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கி லொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப் பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான்.8

பாடம் : 6

இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4: 19ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) லா தஃளுலூ ஹுன்ன எனும் சொல்லுக்கு அவர்களைப் பலவந்தப்படுத் தாதீர்கள் என்று பொருள்.

(4:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுப் எனும் சொல்லுக்குப் பாவம் என்று பொருள்.

(4:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஊலூ (பேதம் பாராட்டுவது/நீதி தவறுவது) எனும் சொல்லுக்கு (ஓர வஞ்சனையாக) நீங்கள் சாய்ந்து விடுவது என்று பொருள்.

(4:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நிஹ்லா எனும் சொல்லுக்கு மஹ்ர் (மணாளன் மணாளிக்கு வழங்க வேண்டிய விவாகக் கொடை) என்று பொருள்.

4579 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(அறியாமைக் காலத்தில்) ஒரு மனிதர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுகளே அவருடைய மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக் கொள்ளவும் செய்வார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசு களான) அவர்கள்தாம் அவள் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போது தான் இது தொடர்பாக இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண் களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய(மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள் எனும் (4:19ஆவது) வசனம் இறங்கிற்று.

பாடம் : 7

தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக் காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள் ளீர்களோ அவர்களுக்கும் அவர்களது பங்கை அளித்து விடுங்கள். திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான் எனும் (4:33ஆவது) இறைவசனம்.

மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:9

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மவா-ய எனும் சொல்லுக்கு வாரிசுகள் எனும் நேசர்கள் என்று பொருள்.

ஆகதத் அய்மானுக்கும் (நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்கள்) என்பது நேச ஒப்பந்தப்படி அமையும் வாரிசுகளைக் குறிக்கின்றது.

(மவா- என்பதன் ஒருமையான) மவ்லா என்பது தந்தையின் சகோதரர் மகனையும் குறிக்கும்; (அடிமையை) விடுதலைசெய்து, உபகாரம் புரியும் எஜமான்; விடுதலை செய்யப்பட்ட அடிமை; அரசன் ஆகியோரையும் குறிக்கும். மார்க்கத் தோழன் என்ற பொருளும் உண்டு.

4580 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (4:33ஆவது) வசனத்தின் மூலத்தி லுள்ள மவா-ய எனும் சொல்லுக்கு வாரிசுகள் என்று பொருள். இவ்வசனத்தின் விவரமாவது:

முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்த போது (ஆரம்பத்தில்) அன்சாரி (ஒருவர் இறந்து விட்டால் அவரு)க்கு அவருடைய உறவினர்கள் அன்றி (அவருடைய) முஹாஜிர் (நண்பர்) வாரிசாகிவந்தார். நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே (இஸ்லாமிய) சகோதரத்துவத்தை ஏற்படுத்தியிருந்ததே இதற்குக் காரணம். (பின்னர்) தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொரு வருக்கும் ஏற்படுத்தியுள்ளோம் எனும் (4:33ஆவது) வசனம் இறங்கிய போது இந்த நியதி (இறைவனால்) மாற்றப்பட்டுவிட்டது.

பின்னர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் யாருடன் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ அவர்களுக்கு வாரிசுரிமை போய், உதவிபுரிதல், ஒத்துழைப்பு நல்குதல், அறிவுரை பகர்தல் ஆகியவைதாம் உள்ளன. உடன்படிக்கை செய்து கொண்டவருக்காக மரணசாசனம் (வேண்டுமானால்) செய்யலாம்.10

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.11

பாடம் : 8

திண்ணமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான் (எனும் 4:40ஆவது வசனத் தொடர்).

அதாவது அணுவின் எடையளவு கூட (மனிதர்கள் செய்த நன்மைகளுக்கான பிரதிபலனைக் குறைத்தோ, பாவங்களுக்கான தண்டனையைக் கூட்டியோ) அநீதி இழைக்க மாட்டான்.

4581 அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஆம்! (காண்பீர்கள்.) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?என்று கேட்டார்கள். மக்கள், இல்லை என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமு மிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:

மறுமை நாள் ஏற்படும் போது அழைப்பா ளர் ஒருவர் ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த வர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும் என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்த வர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ் வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக் காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக் காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும். அவர்கள், அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந் தோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்படும். மேலும், இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். அதற்கவர்கள் எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக! என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையி லுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போலக் காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம் என்று கூறுவர். அப்போது அவர்களிடம், நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் ( கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டி ருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து

வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்).12 அப்போது எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்? ஒவ்வாரு சமுதாயமும் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவைகளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்ற னரே! என்று கேட்கப்படும். அவர்கள், உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவை களைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர் களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறை வனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், நானே உங்கள் இறைவன் என்பான். அதற்கு அவர்கள் நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவர்.13

பாடம் : 9

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர் களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41ஆவது இறைவசனம்.)

(4:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முக்தால் எனும் சொல்லும், (இதே மூலத்திலிருந்து வந்த) கத்தால் எனும் சொல்லும் (கர்வம் பிடித்தவன் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(4:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நத்மிஸ வுஜூஹன் (முகங்களை மாற்றி விடுவோம்) எனும் சொற்றொடருக்கு அவர் களுடைய பிடரியைப் போல முகங்களையும் (தடவி) சம மட்டமாக மாற்றிவிடுவோம் என்று பொருள்.

(இதன் இறந்தகால வினைச் சொல்லான) தமஸல் கி(த்)தாப என்பதற்கு எழுத்தை அழித்தான் என்று பொருள்.

(4:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள சஈர் (கொழுந்து விட்டெரிகின்ற) எனும் சொல்லுக்கு எரிபொருள் என்று அர்த்தம்.

4582 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள் என்று சொன்னார்கள். நான், தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டி னேன். ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக் கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியி ருக்கும்? எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள், நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.14

பாடம் : 10

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்து விட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்புரவு செய்ய) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களின் முகங்களிலும் கைகளிலும் (அதைத்) தடவிக் கொள் ளுங்கள் எனும் (4:43ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸஈதன் (மண்) எனும் சொல் பூமியின் மேல் பரப்பைக் குறிக்கின்றது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

4:60ஆவது வசனத்தில்-அவர்கள் தாஃகூத்தை (விஷமியை) நிராகரித்து விட வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டிருக்க, அந்த தாஃகூத்திடமே தீர்ப்புக்கேட்க அவர்கள் விரும்புகின்றனர் என்பதில்-உள்ளன தாஃகூத் எனும் சொல் சோதிடனைக் குறிக்கும். (அன்றைய அரபுகளில்) ஜுஹைனா குலத்தாரிடையே ஒருவனும், அஸ்லம் குலத்தாரிடையே ஒருவனும், ஒவ்வொரு குலத்தாரிடையே ஒருவனுமாகப் பல சோதிடர்கள் இருந்தனர். அவர்கள் மீது (குறிசொல்லும்) ஷைத்தான் இறங்குவான். இத்தகைய தாஃகூத்களிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்டுவந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:51ஆவது வசனத்திலுள்ள) ஜிப்த் எனும் சொல் சூனியத்தையும், தாஃகூத் என்பது ஷைத்தானையும் குறிக்கும்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஜிப்த் என்பது அபிசீனிய(ர்களின்) மொழியில் ஷைத்தானைக் குறிக்கும்; தாஃகூத் என்பது சோதிடனைக் குறிக்கும் என்று கூறினார்கள்.

4583 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமி ருந்து) தொலைந்து விட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்து விட்டது. அப்போது அவர்கள் உளூவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளூ செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, உளூ இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்- தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை- அருளினான்.15

பாடம் : 11

இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூதருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக! (எனும் 4:59ஆவது வசனத் தொடர்.)

4584 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோ ருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக எனும் (4:59ஆவது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா பின் கைஸ் பின் அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப் பிரிவினருடன் அனுப்பிய போது இறங்கியது.16

 

பாடம் : 12

இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள் (எனும் 4:65 ஆவது இறைவசனம்).

4585 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஹர்ரா எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ஸுபைரே! (முத-ல் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், அல்லாஹ்வின் தூதரே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்த-பின்) மகன் ஆயிற்றே! (அதனால்தான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கின்றீர்கள்) என்று கூறினார். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ளஸுபைர் (ரலி) அவர்களைப் பார்த்துன, ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும்வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக் காரருக்குத் தண்ணீரை விட்டு விடுங்கள் என்று சொன்னார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபப்படுத்திய போது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட் டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக் குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனின் இல்லை! (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட(சண்டை சச்சரவு முத-ய)வற்றில் உம்மை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்புக் குறித்துத் தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும்கொள்ளாமல் முற்றிலும் அதற்கு இணங்கி நடக்காத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர் களாக மாட்டார்கள் எனும் (4:65ஆவது) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே நான் எண்ணுகிறேன்.17

பாடம் : 13

யார் அல்லாஹ்வுக்கும் அவன் தூருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் (மறுமையில்) இருப்பார்கள். இவர்கள்தாம் சிறந்த தோழர்கள் (எனும் 4:69ஆவது இறைவசனம்).

4586 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறுதியாக) நோயுற்றுவிடுகின்ற எந்த ஓர் இறைத்தூதருக்கும் உலக வாழ்வு - மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப் படாமல் இருந்ததில்லை என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நபி (ஸல்)அவர்கள் எந்த நோயில் (உயிர்) கைப்பற்றப்பட்டார்களோ அந்த நோயின் போது அவர்களின் குரல் கடுமையாகக் (கட்டிக் கொண்டு) கம்மிப் போய்விட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் யார் மீது தன் அருட்கொடை களைப் பொழிந்தானோ அந்த இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், உத்தமர்களுடன் (என்னை சொர்க்கத்தில் சேர்த்தருள்) என்று சொல்லிக் கொண்டிருந் ததை நான் கேட்டேன். (இதிலிருந்து) நபி (ஸல்) அவர்களுக்கும் (அந்த இறுதி) வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.18

பாடம் : 14

(அடக்கி ஒடுக்கப்பட்டு) பலவீனர்களாக்கப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ எங்கள் இறைவனே! அக்கிரமக் காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிடுவாயாக! இன்னும் எங்களுக்குப் பாதுகாவலரையும் உதவியாளரையும் உன்னிடமிருந்து வழங்கு வாயாக! எனப் பிராத்தித்துக் கொண்டிருக் கின்றனர் எனும் (4:75ஆவது) இறைவசனம்.

4587 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தாயாரும் (மக்காவில் இஸ்லாத்தை ஏற்றிருந்த) ஒடுக்கப்பட்ட பலவீனமான பிரிவினரைச் சேர்ந்தவர்களாயிருந்தோம்.19

4588 இப்னு அபீமுலைக்கா (அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர எனும் (4:98ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, (ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம் என்று சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹஸிரத் (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, (அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக் கொண்டன என்று பொருள்.

(4:135ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தல்வூ (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால் என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(4:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முராஃகம் எனும் சொல்லுக்கு ஹிஜ்ரத் செல்லுமிடம் (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த காலவினைச் சொல்லான) ராஃகம்த்து எனும் சொல்லுக்கு நான் என் சமுதாயத்தைத் துறந்து விட்டேன் என்று பொருள்.

(4:103ஆவது வசனத்தின்மூலத்திலுள்ள) மவ்கூத் எனும் சொல்லுக்கு அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை) என்று பொருள்.

பாடம் : 15

உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகி விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (தீய) வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் (எனும் 4:88ஆவது வசனத் தொடர்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்கஸ எனும் சொல்லுக்குப் பிரித்துத் தனித் தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதற அடித்து விட்டான் என்று பொருள்.

ஃபிஅத் எனும் சொல்லுக்குக் குழுவினர் என்று பொருள்.

4589 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 4:88ஆவது இறைவசனம் குறித்துக் கூறியதாவது:

(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர் களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டனர். இவர்கள் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர். ஒரு பிரிவினர், (நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்றுவிடுங்கள் (அல்லாஹ்வின் தூதரே!) என்று கூறினர். மற்றொரு பிரிவினர் (வெளிப் படையில் முஸ்லிம்களாகிய அவர்களைக் கொல்ல) வேண்டாம் என்று கூறினர். அப்போது தான் , உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழு வினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் எனும் (4:88ஆவது) இறைவசனம் இறங்கிற்று.

மேலும், நபி (ஸல்) அவர்கள், மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப் போல் அது தீமையை அகற்றிவிடும் என்று சொன்னார்கள்.20

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகின் றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப் பார்கள் (எனும் 4:83ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதாஊ எனும் சொல்லுக்குப் பரப்பிவிடுவார்கள் என்று பொருள். யஸ்தன்பித்தூன் எனும் சொல்லுக்கு ஆராய்ந்து முடிவு செய்கின்றார்கள் என்று பொருள்.

(4:86ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹசீப் எனும் சொல்லுக்குப் போதுமானவன் என்று பொருள்.

(4:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இனாஸ்எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். மரீத் எனும் சொல்லுக்கு (தீமையில்) பிடிவாதமாக இருப்பவன் என்று பொருள்.

(4:119ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபல்யுபத்திகுன்ன எனும் சொல்லுக்கு அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள் என்று பொருள்.

(4:122ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கீல் எனும் பதமும் கவ்ல் எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(4:155ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள தபஅ எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) துபிஅ எனும் சொல்லுக்கு முத்திரையிடப்பட்டது என்று பொருள்.

பாடம் : 16

ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டு மென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமேயாகும் (எனும் 4:93ஆவது வசனத் தொடர்).

4590 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இது (4:93ஆவது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண் டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், ஓர் இறை நம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கின்றவனுக்குரிய தண்டனை நரகமே யாகும் எனும் இந்த (4:93ஆவது) வசனம் இறங்கியது. இது தான் (இறை நம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடல்லை என்று கூறினார்கள்.21

பாடம் : 17

(தம்மை இறை நம்பிக்கையாளர் என்று உங்களுக்குக் காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறை நம்பிக்கை கொண்ட வன் அல்லன் என்று சொல்லாதீர்கள் (எனும் 4:94ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) சலாம் எனும் சொல்லும் (இன்னும் இரு வகையான ஓதுதல் முறையில் வந்துள்ள) சில்ம், சலம் ஆகிய சொற்களும் (சாந்தி எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

4591 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 4:94ஆவது வசனம் குறித்துக் கூறியதாவது:

ஒரு மனிதர் தனது சிறு ஆட்டு மந்தை(யை மேய்த்துக் கொண்டு அதன்) உடனிருந்தார். அப்போது (ஒரு படைப் பிரிவில் வந்த)

முஸ்லிம்கள் அவரை (வழியில்) கண்டனர். அவர், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். அவரது ஆட்டுமந்தையையும் எடுத்துக் கொண்டனர். அப்போது இது தொடர்பாக (பின்வரும்) வசனத்தை அல்லாஹ் அருளினான். இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை வழியில் (அறப்போருக்காக) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். இவ்வுலகப் பொருளை நீங்கள் அடைய விரும்பி, (தம்மை இறை நம்பிக்கையாளர் என்று காட்ட) உங்களுக்கு சலாம் சொல்பவரிடம், நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன் என்று சொல்லா தீர்கள். (4:94) (இங்கே உலகப் பொருள் என்பது) அந்த ஆட்டு மந்தைதான்.22

அறிவிப்பாளர் அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்த வசனத்தில் சலாம் எனும் வார்த்தையை) சலாம் என்றே ஓதினார்கள். (சலம் என்று உச்சரிக்கவில்லை.)

பாடம் : 18

இறை நம்பிக்கையாளர்களில் -இடையூறு உள்ளவர்கள் தவிரலி அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (எனும் 4:95ஆவது வசனத் தொடர்).

4592 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மர்வான் பின் ஹகமைப் பள்ளி வாச-ல் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொரு ளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எழுதிப் பதிவு செய்வதற்காக) என்னிடம் ஓதிக்காட்டிக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஓதிக் காட்டிக் கொண்டிருக்கும் போது, இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர் புரிந்திருப்பேன் என்று சொன்னார்கள். அவர் கண் பார்வை யற்றவராக இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்கள் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். ஆகவே, என் தொடை நசுங்கிப் போய்விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி (ஸல்) அவர்களுடைய தொடை என் மீது கனத்து (அழுத்தத் தொடங்கி)விட்டது. பிறகு அந்நிலை அகன்றது. அப்போது தான் அல்லாஹ் இடையூறு உள்ளவர்களைத் தவிர எனும் சொற் றொடரை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.23

4593 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளா லும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறைவசனம் இறங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் வந்து தமது ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போது தான் அல்லாஹ் இடையூறு உள்ளவர்களைத் தவிர எனும் சொற்றொடரை அருளினான்.24

4594 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தமது உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் (4:95ஆவது) இறை வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள். (ஸைத் பின் ஸாபித்) அவர்கள், மைக்கூட்டையும் பலகையையும் அல்லது அகலமான எலும்பையும் தம்முடன் கொண்டுவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்த (4:95ஆவது) வசனத்தை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் புறம் இப்னு உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் கண்பார்வையற்றவன் ஆயிற்றே! என்று கேட்டார்கள். அப்போது அதே இடத்தில் இறை நம்பிக்கையாளர் களில் இடையூறு உள்ளவர்கள் தவிர அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் என்ற இவ்வசனம் (4:95 முழுமையாக) இறங்கிற்று.

4595 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறை நம்பிக்கையாளர்களில் அறப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டவர்களும், தம் உயிராலும் பொருளா லும் அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள் எனும் வசனம் (4:95) பத்ருப் போர் பற்றியும், பத்ருக்காகப் புறப்பட்டவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.

 

 

பாடம் : 19

(மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறைமறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, (அவர்களை நோக்கி, மார்க்கக் கடமைகளை நிறைவேற்றமுடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பல வீனர்களாய் இருந்தோம் என பதிலளிப் பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமான தாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து(ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவு வார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிட மாகும் எனும் (4:97ஆவது) இறைவசனம்.

4596 முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.25 அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்:

ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர் களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந் த)னர். ஆகவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர் பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (4:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்றமுடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண் டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது (அவர்களை நோக்கி இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? என வினவுவார்கள். அதற்கு அவர்கள், பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந் தோம் என பதிலளிப்பார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்க வில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என வானவர்கள் வினவுவார்கள். இவர் களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.26

இதை அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களிட மிருந்து ஸைத் பின் சஅத் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 20

ஆனால்,எவ்வித உபாயத்தையும் மேற் கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல் உண்மையிலேயே இயலாதவர் களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! (எனும் 4:98ஆவது வசனம்.)27

4597 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர! எனும் (4:98ஆவது) இறைவசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: இயலாதவர்கள் என அல்லாஹ் அறிவித்தவர்களில் என் தாயார் (உம்முல் ஃபள்ல்) அவர்களும் ஒருவராயி ருந்தார்.28

பாடம் : 21

அத்தகையோரின் பிழைகளை அல்லாஹ் பொறுக்கக் கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும்,மன்னிப்பு வழங்குபவனும் ஆவான் எனும் (4:99ஆவது) இறைவசனம்.

4598 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது கொண்டிருந்த போது, சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தா செய்வதற்கு முன்பாக, இறைவா! (மக்காவில் சிக்கிக் கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர் களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று வாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்கிக் கடுமைப்படுத்து வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.29

பாடம் : 22

(ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங் களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கை யாகவே இருங்கள் எனும் (4:102ஆவது) இறைவசனம்.

4599 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஆயினும்,) மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால்,அல்லது நீங்கள் நோயுற்றவர்களாயிருந்தால் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை எனும் (4:102 ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது, அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் காயமுற்றுக் கிடந்தார்கள். (அப்போது இந்த வசனம் அருளப்பட்டது) என்று சொன்னார்கள்.

பாடம் : 23

(நபியே!) பெண்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் அவர்கள் கோருகின்றனர். நீங்கள் கூறுங்கள்: அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், எந்த அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட(மஹ்ர் போன்ற)வற்றை நீங்கள் கொடுக்காமல், அவர்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றீர்களோ அந்தப் பெண்கள் விஷயத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டுவருகின்ற சட்டமும் (உங்களுக்குத் தீர்ப்பளிக்கின்றது.) எனும் (4:127ஆவது) வசனத் தொடர்.

4600 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு (4:127) விளக்கமளிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒருவர் தம்மிடமுள்ள அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும், வாரிசாகவும் இருந்து வருவார். பேரீச்ச மரம் உள்பட அவரது செல்வத்தில் அவள் பங்காளியாக இருந்துவரும் நிலையில் அப்பெண்ணை அவரே மணமுடித்துக் கொள்ள விரும்புவார். மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து, அவள் (ஏற்கெனவே) பங்காளியாக இருப்பதன் மூலம் அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ) னும் தம் சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் (காப்பாளர்) வெறுத்துவந்தார். எனவே, அவளை (வேறொருவன் மணமுடிக்க விடாமல்) காப்பாளர் தடுத்துவந்தார். அப்போது தான் ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்- மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; (எந்நிலையிலும்) சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும் எனும் (4:128ஆவது) வசனம் இறங்கியது.30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(4:35ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஷிகாக் எனும் சொல்லுக்குப் பரஸ்பரப் பிணக்கு என்று பொருள்.

பாடம் : 24

 மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஷ்ஷுஹ்ஹு எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசை கொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும்.

(4:129ஆவது வசனத்திலுள்ள) கல்மு அல்லகா (அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போல) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடைய வளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும்.

(4:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுஷுஸ் (நல்ல விதமாக நடந்து கொள்ளாமை) எனும் சொல்லுக்குச் சினம்கொள்ளல் என்று பொருள்.

4601 ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஆயிஷா (ரலி) அவர்கள், ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால், கணவன்-மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக் கொரு வர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேது மில்லை எனும் (4:128ஆவது) வசனம் குறித்துக் கூறுகையில், தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்து விட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் எனது (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்) என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (4:128) இறங்கிற்று என்று குறிப்பிட்டார்கள்.31

பாடம் : 25

நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒரு போதும் நீங்கள் காணமாட்டீர்கள் (எனும் 4:145ஆவது வசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அத் தர்க்குல் அஸ்ஃபல் எனும் சொல்லுக்கு நரகத்தின் கீழ்த்தட்டு என்று பொருள்.

(6:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஃபக் (சுரங்கப் பாதை) எனும் சொல்லுக்கு வழி என்று பொருள்.

4602 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு, உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப் (பட்டு சோதிக்கப்)பட்டது என்று சொன்னார்கள். நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே என்று சொல்ல, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் பள்ளி வாச-ன் ஒரு மூலையில் அமர்ந்து கொண் டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எழுந்து நிற்க, அவர்களுடைய தோழர்கள் கலைந்து சென்று விட்டனர். உடனே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் பொடிக் கற்களை என் மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்து கொண்டார்கள். உங்களை விடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தினர் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அல்லாஹ் அவர்களுடைய குற்றங்களை மன்னித்து விட்டான் என்றார்கள்.32

பாடம் : 26

 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததைப் போன்றே திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூப் உடைய வழித் தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம் எனும் (4:163ஆவது) இறைவசனம்.

4603 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இறைத் தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

 

4604 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

 

பாடம் : 27

(நபியே!) கலாலா (-அதாவது மூல வாரிசுகளோ, கிளை வாரிசுகளோ இல்லாத நிலை-)பற்றி உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசா வான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) கலாலா எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ, மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது தகல்லலஹுந் நஸபு (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச் சொல்லின் வேர்ச் சொல்லாகும்.

4605 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களுக்குன இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் பாராஅத் எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் (நபியே!) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34

November 2, 2009, 2:32 PM

65-திருக்குர்ஆன் விளக்கவுரை4

பாடம் : 1

அல்மாயிதா அத்தியாயத்தின் பதவுரை

(5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஹுரும் (இஹ்ராம் கட்டிய வர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஹராம் என்பதாகும்.

(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)

ஃபபிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும் என்பதற்கு அவர்கள் தம் வாக்குறுதியை முறித்து விட்ட காரணத்தால் என்று பொருள்.

(5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்லத்தீ க(த்)தபல்லாஹு எனும் வாக்கியத்திற்கு அல்லாஹ் உங்களுக்காக அமைத்து(வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்) என்று பொருள்.

(5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபூஅ எனும் சொல்லுக்கு நீயே சுமந்து கொண்டு என்று பொருள்.

(5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தாயிரத்துன் எனும் சொல்லுக்கு ஏதேனும் துன்பம் என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஃக்ரய்னா (ஊட்டினோம்) எனும் சொல்லின் வேர்ச் சொல்லான) இஃக்ராஃ என்பதற்குச் சாட்டுதல் என்று பொருள்.

(5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) உஜூரஹுன்ன எனும் சொல்லுக்கு அப்பெண்களுக்குரிய மஹ்ர்(விவாகக் கொடை)களை என்று பொருள்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின் எனும் சொல்லுக்கு அல்அமீன்-நம்பகமான காவலன் என்று பொருள். அதாவது இந்தக் குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது.

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

குர்ஆனிலுள்ள வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற் றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுங்கள் எனும் (5:68) வசனத்தை விட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2

(5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

(5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மன் அஹ்யாஹா (எவன் ஓர் உயிரை வாழ வைக்கின்றானோ...) என்பதற்கு முறையின்றியே தவிர ஓர் உயிரைக் கொலைசெய்வதிலிருந்து விலகிக் கொள்கின்றவன் மக்கள் அனைவரை யுமே வாழவைத்தவன் ஆவான் என்பது நோக்கப் பொருளாகும்.

(5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷிர் அத்தன் வ மின்ஹாஜன் என்பதற்கு பாதை மற்றும் நடைமுறை என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப இன் உஸிர எனும் சொல்லுக்கு வெளிப் பட்டால், - தெரியவந்தால் என்று பொருள்.

(5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அவ்லயானி(அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை (அல்) அவ்லா என்பதாகும்.

பாடம் : 2

இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் எனும் (5:3ஆவது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மஃக்மஸா எனும் சொல்லுக்குப் பசி என்று பொருள்.

4606 தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம் என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ்-9ஆம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.3

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இன்று உங்ளது மார்க்கத்தை உங்க ளுக்காக நான் முழுமையாக்கி விட்டேன் எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர் மானிக்கமுடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4

பாடம் : 3

நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கழிப்பிடத்தி- ருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் தயம்மும் செய்து கொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங்களைப் பதித்து முகங்களிலும், கரங்களிலும் தடவிக் கொள்ளுங்கள் எனும் (5:6ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) தயம்மமூ எனும் சொல்லுக்கு நாடுங்கள் என்று பொருள்.

(5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆம்மீன் எனும் சொல்லுக்கு நாடியவர்க ளாக என்று பொருள். அம்மம்த்து என்பதும் தயம்மம்த்து என்பதும் (நாடினேன் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தி தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஃ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5

4607 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்த போது எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்க வில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்து விட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்து விட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப்படுத்து) இருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதி காலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை.அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்(சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன.) என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பிய போது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.6

4608 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனூ முஸ்த-க் போர் முடிந்து) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்த போது (மதீனாவுக்கருகில் உள்ள) பைதா எனுமி டத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் அங்கே தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, எனது மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, ஒரு கழுத்து மாலைக்காக (பயணத்தைத் தொடரவிடாமல்) மக்களைத் தடுத்து நிறுத்தி விட்டாயே என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் மடிமீது தலைவைத்துப்படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)று இருந்து விட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹுத் தொழுகை (நேரம்) வந்து விட்டது. உளூ (அங்க சுத்தி) செய்வதற்காகத் தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்கவில்லை. அப்போது தான் , இறை நம்பிக்கை கொண்ட வர்களே! தொழுகைக்காகச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக் கொள் ளுங்கள் என்று தொடங்கி தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்று கூறும் (5:6ஆவது) வசனம் இறங்கிற்று. அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள் வளம் பொழிந்துள்ளான், அபூபக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான் என்று சொன்னார்கள்.

பாடம் : 4

(மூசா!) நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் (என்று பனூ இஸ்ராயீல் கூறினர்) எனும் (5:24ஆவது) வசனத் தொடர்.

4609 இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ருப் போரின் போது, அல்லாஹ்வின் தூதரே! பனூ இஸ்ராயீல்கள் மூசா (அலை) அவர்களிடம், நீங்களும் உங்களுடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம் என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்ல மாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம் என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.

இதே ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில்,

மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்ன போது நான் இருந்தேன் என்று தொடங்குகிறது.7

இன்னும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பாடம் : 5

எவர் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான் : அவர்கள் கொல்லப் படவேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களின் மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் (எனும் 5:33ஆவது வசனத் தொடர்).

(இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) அல்லாஹ்வுடன் போரிடுதல் என்பதற்கு, அவனை மறுத்தல் என்பது கருத்தாகும்.

4610 அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (உமய்யா கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து அல்கஸாமா எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அதுபற்றி) மக்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் சொன்னார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந் திருந்த என் பக்கம் திரும்பி, அப்துல்லாஹ் பின் ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அல்லது அபூகிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?என்று கேட்டார்கள். நான், திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதனையும், அல்லது உயிருக்கு பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவனையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவனையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை என்று சொன்னேன். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், என்னிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (அல்கஸாமா மற்றும் உரைனா சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள் என்று சொன்னார்கள்.

நான் சொன்னேன்:

அனஸ் (ரலி) அவர்கள் என்னிடம் கூட (இப்படிச்) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர் களிடம் ஒரு சமுதாயத்தார் (உக்ல் மற்றும் உரைனா குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், இந்த பூமி (மதீனா) எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டோம்) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், இதோ, எங்களின் (தர்மத்திற்குரிய) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்றுடன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந் துங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய் நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின் மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றுவிட்டனர்.

 ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர்புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த) வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா, என்ன?

அப்போது அன்பஸா (ரஹ்) அவர்கள், (வியப்புத் தெரிவிப்பது போல) சுப்ஹானல் லாஹ் - அல்லாஹ் தூயவன் என்று சொன்னார்கள்.

நான், என்னை நீங்கள் சந்தேகப்படு

கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இல்லை) இதை எங்களுக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறிவிட்டு, இந்த ஊர் (ஷாம்) வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர்களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும் வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள் என்று சொன்னார்கள்.8

பாடம் : 6

(குற்றவியல் தண்டனையில்) காயங்களுக் கும் பழிவாங்கல் உண்டு எனும் (5:45ஆவது) வசனத் தொடர்.

4611 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரிலிருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி)-ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன் பல்லை உடைத்து விட்டார். அப்பெண் ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட் டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும் (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்) என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றுக் கொண்டனர். (ருபய்யிஉவை பழி வாங்காமல் மன்னித்து விட்டனர்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடு வார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான் என்று சொன்னார்கள்.9

பாடம் : 7

(எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற(வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் (எனும் 5:67ஆவது வசனத் தொடர்).

4612 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற(வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ (எம்) தூதரே! உங்கள் இறை வனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! என்று கூறுகிறான்.10

 

 

 

பாடம் : 8

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்கு வதில்லை எனும் (5:89ஆவது) வசனத் தொடர்.

4613 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை எனும் (5:89ஆவது) இறை வசனம் லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாக சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.

4614 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ளஅபூபக்ர் (ரலி) அவர்கள்ன சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர் பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெ டுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன் என்று சொன்னார்கள்.11

 

பாடம் : 9

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள் எனும் (5:87ஆவது) வசனத் தொடர்.

4615 கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண் டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்யவேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்து கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள். என்று கூறிவிட்டுப் பிறகு, இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி(ஹரா மாக்கி)க் கொள்ளாதீர்கள் எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.12

பாடம் : 10

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும் எனும் (5:90ஆவது) வசனத் தொடர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்அஸ்லாம் என்பது (அறியாமைக் கால மக்கள்) தங்கள் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்தி வந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13

நுஸுப் என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

அல்அஸ்லாம் என்பதன் ஒருமையான அஸ்ஸலம் என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும்.

இஸ்திக்ஸாம் (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப்போட்டு, வேண்டாம் எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், செய் எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும்.

அம்புகளில் (செய்யலாம், செய்ய வேண்டாம்; செய்தால் நல்லது, செய்யா விட்டால் கேடு நேரிடும் என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறி பார்த்து வந்தார்கள். இதிலிருந்து ஃபஅல்(த்)து எனும் வாய்பாட்டில் கஸம்து எனும் கடந்த கால வினையும் குஸூம் எனும் வேர்ச் சொல்லும் வரும்.

4616 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது பானத்தைத் தடைசெய்யும் இறை வசனம் இறங்கிய காலகட்டத்தில் ஐந்து வகையான மதுபானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14

 

 

4617 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் ஃபளீக் என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் ளநபி (ஸல்) அவர்கள் காலத்தில்ன எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்)அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வந்து, உங்களுக்குச் செய்தி எட்டியதா? என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், என்ன அது? என்று கேட்டனர். அவர், மது தடை செய்யப்பட்டுவிட்டது என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள் என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.

4618 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் சிலர், உஹுதுப் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15

 

4619 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களின் உரைமேடையிலிருந்தபடி, (இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) இறங்கிவிட்டது. திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற் கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மது தான் என்று கூறினார்கள்.16

 

 

 

பாடம் : 11

இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது. (ஆனால், இனி தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து) அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்ப வர்களாகவும், நற்செயல்கள் புரிகின்றவர் களாகவும், இன்னும் (எந்த எந்தப் பொருள் களைவிட்டுத் தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து) விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச் சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்ப வர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் (இத்தகைய) நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறை வசனம்).

4620 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்ததாவது:

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் இறங்கிற்று. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட் டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார். இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா) எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்து விட்டுத் திரும்பி வந்து), இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கிறார் என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், நீ போய், இதைக் கொட்டிவிடு! என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், (உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே! என்று கூறினர். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17

பாடம் : 12

இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப் பட்டால் அவை உங்களுக்கு மனவருத் தத்தை ஏற்படுத்தும். எனும் (5:101ஆவது) இறைவசனம்.

4621 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக் கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், என் தந்தை யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இன்னார் என்று சொன்னார்கள். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும் எனும் இந்த (5:101ஆவது) இறை வசனம் இறங்கிற்று.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

 

4622 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் ளநபி (ஸல்) அவர்களிடம்ன, என் தந்தை யார்? என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய் விட்ட இன்னொருவர் என் ஒட்டகம் எங்கே? என்று கேட்டார். அப்போது தான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட் டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின் றான். (5:101)

பாடம் : 13

(கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்கு களான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கை களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர் (எனும் 5:103ஆவது இறைவசனம்).

(5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ இஃத் காலல்லாஹ் எனும் சொற்றொட ரில் உள்ள கால (சொன்னான்) எனும் (இறந்த கால வினைச்) சொல்லுக்குச் சொல்வான் என்று (எதிர்கால வினையின்) பொருளாகும்.

இந்த வசனத்திலள்ள இஃத் எனும் சொல் சொல்லிடை இணைப்புக் குறி (ஸிலா) ஆகும்.

(5:112ஆவது வசனத்திலுள்ள வினை யாலணையும் பெயரான) அல்மாயிதா எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொருத்தவரை விருந்தாக்கப்படும் உணவு எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். ஈஷத்துன் ராளியா (திருப்தியான வாழ்க்கை), தத்லீக் கத்துல்பாயினா (இறுதிசெய்யப்பட்ட விவாகரத்து) ஆகிய சொற்றொடர்களைப் போல.

(இதன்படி அல்மாயிதா என்பதன்) சொற்பொருள் விருந்தாளிக்கு அளிக்கப்படும் நல்ல உணவு என்பதாகும்.

(இஷ்திகாக் எனும் சொல் திரிபு வேறுபாட்டில் இச்சொல்லை ஃபஅல, யஃப்இலு எனும் வாய்பாட்டில்) மாத, யமீது (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முத்தவஃப்பீக்க எனும் சொல்லுக்கு உம்மை இறக்கச் செய்வோம் என்பது கருத்தாகும்.18

4623 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பஹீரா என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்க மாட்டார்கள்.

சாயிபா என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும் என்ற வேண்டுத-ல்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டுவந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீ ரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்க மாட்டார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக சாயிபா (ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்துத்) திரியவிட்டவர் அவர்தாம்.19

வஸீலா என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டியிடுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டு வந்தனர். இரண்டு(ஈற்று)க்கு மத்தியில் ஆண்குட்டியிடாமல் ஒன்றையடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதனால் (இதனைத் தொடர்ந்து வரக்கூடியது எனும் பொருளில்) வஸீலா என்று அழைத்தனர்.

ஹாம் என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல்கொள்ளச் செய்த (பொ-) ஒட்டகமாகும். இவ்வாறு சூல்கொள்ளச் செய்த பின் அந்த (பொ-) ஒட்டகத்தை (அறியாமைக்கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்பட வில்லை. இதனை ஹாமீ(தன் முதுகைப் பாதுகாத்துக் கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.

இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்சொன்ன விளக்கமும் ஹதீஸும் வந்துள்ளன.

4624 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்று கொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து)த் திரியவிட்டவர் அவர் தாம்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

பாடம் : 14

(மர்யமின் மைந்தர் ஈசா கூறினார்:) மேலும், நான் அவர்களுடன் இருந்தவரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! நீயோ அனைத்தையும் கண்காணிப்பனாக இருக்கின்றாய் (எனும் 5:117ஆவது வசனத் தொடர்).

4625 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப் படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முத-ல் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம் எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.

பிறகு, அறிந்து கொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தாம்.

அறிந்து கொள்ளுங்கள்: என் சமுதாயத் தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன். அதற்கு இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்ன வெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது என்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் ளஈசா (அலை) அவர்கள்ன சொன்னதைப் போன்று, நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! என்று பதிலளிப்பேன். அதற்கு, இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று கூறப்படும்.20

பாடம் : 15

(இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவு டையவனுமாய் இருக்கின்றாய் (என்றும் மர்யமின் மைந்தர் ஈசா கூறுவார்) எனும் (5:118ஆவது) இறைவசனம்.

4626 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப் படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத் (திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ளஈசா (அலை) அவர்கள்ன சொன்னதைப் போல், நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந் தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண் காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித் தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனு மாய் இருக்கின்றாய் (5:117,118) என்று சொல்வேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

November 2, 2009, 2:33 PM

65-திருக்குர்ஆன் விளக்கவுரை 05 065

பாடம் : 1

மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும் 6:59ஆவது வசனத் தொடர்).

4627 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) "திண்ணமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப்பற்றிய ஞானம் அல்லாஹ் விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்கன்) கரு வறைகல் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6