56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்8

பாடம் : 176

இஸ்லாமிய அரசின் கீழுள்ள

பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும்.

3053 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா)? என்று கேட்டு விட்டு, அவர்களுடைய கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள்:

வியாழக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்க ளுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள் என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டுக் கொண்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்று விட்டார்கள் என்று கூறினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர் களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை)164 மேலும், அவர்கள் தமது மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளி யேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்.

...மூன்றாவது கட்டளையை நான் மறந்து விட்டேன்...

யஅகூப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் முகீரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், மக்காவும், மதீனாவும், யமாமாவும், யமனும் (அரபு தீபகற்பத்தில் அடங்கும்) என்று பதிலளித்தார்கள்.

மேலும் யஅகூப் (ரஹ்) கூறுகிறார்: (மக்கா-மதீனா இடையே உள்ள) அல்-அர்ஜ் என்ற இடம் திஹாமாவின் முதற் கட்டமாகும்.

பாடம் : 177

தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக் கொள்வது.

3054 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் கெட்டியான

பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை வாங்கி, பெரு நாளின் போதும் தூதுக் குழுக்கள் வருகை தரும் போதும் இதனால் (உங்களை) அலங்கரித் துக் கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும் ...அல்லது (மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்...... சொன்னார்கள். பிறகு, உமர்

(ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய வரை (சிறிது நேரம்) தங்கியிருந்தார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்கள் பூவேலைப்பாடு செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற் பேறும் இல்லாதவருடைய ஆடையாகும் அல்லது ......அல்லது - (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்...... - கூறினீர்கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக் கிறீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் விற்று விடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதனையாவது இதைக் கொண்டு நிறை வேற்றிக் கொள்வீர்கள் (என்பதற்காக இதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்) என்று கூறினார்கள்.165

பாடம் : 178

சிறுவனுக்கு இஸ்லாத்தை எடுத்து ரைப்பது எப்படி?

3055 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர் களின் ஒரு குழுவினருடன் நபியவர் களோடு (தான் இறைத் தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள்.166 பனீ மகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கி விட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்று நீ சாட்சி கூறுகின்றாயா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து விட்டு,நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகின்றீர்களா? என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறினார்கள். (பின்னர்) நபி (ஸல்) அவர்கள், (உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன என்றான். நபி (ஸல்) அவர்கள், உனக்கு இப்பிரச் சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறிவிட்டு, நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன் . (அது என்ன என்று சொல்)என்று சொன்னார்கள். இப்னு ஸய்யாத், அது துக் என்று கூறினான். (அதாவது துகான் என்பதை துக் என அரைகுறையாகச் சொன்னான்.)167 உடனே நபி (ஸல்) அவர்கள், தூர விலகிப் போ! நீ உன் எல்லையை தாண்டி விட முடியாது என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளியுங்கள். இவனது கழுத்தை நான் சீவி விடுகிறேன் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை என்று சொன்னார்கள்.168

3056 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டு விட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர் வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக் கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ஸாஃபியே!...-இது இப்னு ஸய்யாதின் பெயராகும்-... என்றழைத் தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி (ஸல்) அவர்கள், அவள் அவனை அப்படியே விட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான் என்று சொன்னார்கள்.169

3057 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

.....பிறகு170 நபி (ஸல்) அவர்கள் மக்க ளிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்:

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

பாடம் : 179

நபி (ஸல்) அவர்கள் யூதரிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள் என்று கூறியது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.171

பாடம் : 180

எதிரி நாட்டிலிருக்கும் சிலர், அங்கு தமக்குச் செல்வமும் நிலங்களும் இருக்கும் நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டை இஸ்லாமிய அரசு கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் அது அந்தச் சிலருக்கே உரியதாகும்.

3058 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடைய ஹஜ்ஜின் போது, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அபூதா-பின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள் ளாரா?172 என்று கேட்டு விட்டுப் பிறகு, குறைஷிகள் இறைநிராகரிப்பில் நிலைத்திருக்கப் போவதாக சத்தியம் செய்த இடமான முஹஸ்ஸப் என்கிற பனூ கினானா பள்ளத்தாக்கில் நாளை நாம் தங்கவிருக்கின்றோம்என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷிகளிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களுக்குப் புக-டம் அளிக்கவும் மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்திருந்ததையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.173

3059 உமர் (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம் (ரஹ்) கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு ஹுனை என்றழைக்கப்படும் தமது அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ் வினால்) ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தை களையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் உஸ்மான் பின் அஃப்பான் ஆகியோரின் கால்நடை களைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடை களும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தமது) பேரீச்சந் தோட்டங் களையும் விளைநிலங்களையும் பயன் படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்து, விசுவாசி களின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?என்று கேட்பார்கள். ஆகவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலத்திலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட் டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர் களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

பாடம் : 181

(அறப் போருக்குச் செல்ல முன்வரும்) மக்களை தலைவர் எழுதிப் பதிவு செய்வது.

3060 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப் பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.174 நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பெயர் களை எழுதினோம். அப்போது நாங்கள், நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா? என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டுக் கொண்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக் குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 (மொத்தம்) ஐநூறு பேர்களை நாங்கள் கண்டோம்என்று ஹுதைஃபா (ரலி) மற்றோர் அறிவிப்பில் கூறுகிறார்கள்.

அறுநூறு பேரிலிருந்து எழுநூறு பேர் வரை என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னதாக அபூ முஆவியா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

3061 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள் வதாக (ராணுவ வீரர்கள் பட்டிய-ல்) எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்ய

விருக்கிறாள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.175

பாடம் : 182

பாவியான மனிதனின் வாயிலாகவும் இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் வலுவூட்டுகின்றான்.

3062 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், இவர் நரகவாசி களில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று குறிப்பிட் டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்து விட்டார் என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், அவர் நரகத்திற்கே செல்வார் என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்த போது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள். பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, முஸ்-மான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான் என்று பொது அறிவிப்புச் செய்தார்கள்.176

பாடம் : 183

ஒரு போரில் (தளபதி எவரும் இல்லாத போது) பகைவர்களைக் குறித்த அச்சம் ஒருவருக்கு ஏற்பட்டால் நியமிக்கப் படாமல் தானாகவே அவர் படைத் தளபதியாகலாம்.

3063 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரின் போது177 போர்க் கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்த படியே நேர்முக வர்ணணையாக விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில், இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் ஹாரிஸா எடுத்துக் கொண்டார். அவர் கொல்லப்பட்டு விட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதா-ப் எடுத்துக் கொண்டார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்துக் கொண்டு விட்டார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு, கா-த் பின் வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டு விட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்து விட்டான் என்று கூறி விட்டு, (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சி யளிக்காது என்றோ, (இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது என்றோ சொன்னார்கள்.178 மேலும், இதைச் சொல்லும் போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.179

பாடம் : 184

படையனுப்பி உதவுதல்.

3064 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ -ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர்.180 மேலும், தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படை யனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள் (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், பீரு மஊனா181 என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ -ஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள் என்பதே அந்த வசனம்.

பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.182

பாடம் : 185

பகைவர்களை வென்று அவர்களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவது.

3065 அபூ தல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தாரை வெற்றி கொண்டால் அவர்

களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவார்கள்.

இதே போன்று முஆத் (ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 186

கனீமத் - போர்ச் செல்வத்தைப் போரின் போதும், பிரயாணத்திலும் பங்கிடுவது.

ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது ஓர் ஆடும் ஓர் ஒட்டகமும் எங்களுக்குக் கிடைத்தன. நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள்.183

3066 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைத் தாம் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து (புறப்பட்டுப் போய்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள்.184

பாடம் : 187

இணைவைப்பவர்கள் முஸ்-மின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல, அதையே அவர் பிறகு பெற்றுக் கொண்டால்...

3067 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்தி விட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக் கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டு விட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி ரோமர்(பைஸாந் தியர்)களுடன் சேர்ந்து கொண்டான். பைஸாந்தியர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட போது அந்த அடிமையை

கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

3068 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பி யோடி பைஸாந்தியர்களுடன் சேர்ந்து கொண்டான். கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்களை வெற்றி கொண்ட போது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களுடைய குதிரை யொன்று விரண்டோடி பைஸாந்தியர் களிடம் சிக்கிக் கொண்டது. பைஸாந்திய நாட்டை கா-த் பின் வலீத் (ரலி)

அவர்கள் வெற்றி கொண்ட போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

3069 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்த போது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக கா-த் பின் வலீத்

அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந்தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் எடுத்துக் கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்ட போது கா-த் பின் வ-த் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்து விட்டார்கள்.

பாடம் : 188

பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது.

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளன வையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (30:22)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

தூதர்கள் அனைவரையும் அவரவ ரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம். (14:4)185

3070 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின் போது) நான் நபி (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கி யுள்ளேன்; ஆகவே, தாங்களும் இன் னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அகழ் தோண்டு பவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள் என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.186

3071 உம்மு கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்என்று சொன்னார்கள். நான் ((நபி (ஸல்) அவர்களின் இரு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குழந்தை தானே!) அவளை (விளையாட) விடுவீராக! என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. பிறகும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள், அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு கா-த் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய சனா (நன்றாயிருக் கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்என்றும் கூறுகின்றார்கள்.187

3072 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களி

லிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில்,

 கிஹ் கிஹ்-சீச்சீ! (என்று சொல்லி விட்டு) நாம் தருமப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.188

பாடம் : 189

(போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது (பெரும் பாவமாகும்).

அல்லாஹ் கூறுகிறான்:

எவரேனும் மோசடி செய்தால் மோசடி செய்த பொருளுடன் மறுமை நாளில் அவர் வருவார்.(3:161)

3073 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டி ருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று கூறி விடுவேன் என்று நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.189

பாடம் : 190

(போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே).

(மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த கிர்கிரா என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்த போது) நபி (ஸல்) அவர்கள் அவரது பொருள்களை எரித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறவில்லை. இது தான் (எரித்தார்கள் என்று கூறப்படாத இந்த அறிவிப்பு தான் எரித்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பை விட) சரியானதாகும்.190

3074 அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக கிர்கிரா என்ற ழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்து விட்டார். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நரகத்தில் நுழைவார் என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித் தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.191

(என் ஆசிரியர்) இப்னு சலாம் (ரஹ்) அவர்கள் கிர்கிரா வை கர்கரா என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள் என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய (நான்) கூறுகிறேன்.

பாடம் : 191

போரில் கிடைத்த ஒட்டகங்களையும் ஆடுகளையும் (பங்கிடுவதற்கு முன்னால்) அறுப்பது வெறுக்கத் தக்கது.

3075 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. சில ஒட்டகங்களும் சில ஆடுகளும் (போர்ச் செல்வமாக) எங்களுக்குக் கிடைத் தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங் களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. பிறகு (அவற்றை) நபி (ஸல்) அவர்கள் பங்கிட் டார்கள். அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் ஓடி விட்டது மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. அந்த ஒட்டகத்தை அவர்கள் விரட்டிப் பிடிக்க முயன்றார்கள். அது அவர்களைக் களைப்படையச் செய்து விட்டது. ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், காட்டு மிருகங்களில் கட்டுக் கடங்காதவை இருப்பது போல் இந்த விலங்குகளும் கட்டுக்கடங்காதவை யாகும். உங்களிடமிருந்து விரண்டோடி விடுபவற்றை இவ்வாறே செய்யுங்கள். (அம்பெய்து தடுத்து நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். நான், எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். ஆகவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்க லாமா?என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லையும் நகத்தையும் தவிர! இதைப் பற்றி (இந்த இரண்டினாலும் அறுக்கப்பட்டதை ஏன் உண்ணக் கூடாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர் களின் கத்திகளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.192

பாடம் : 192

வெற்றிகள் குறித்து நற்செய்தி சொல்வது.

3076 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யமன் நாட்டு கஅபா என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது (குதிரை) வீரர் களுடன் புறப்பட்டேன். அவர்கள் சிறந்த குதிரைப் படை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ஆகவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களுடைய விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள் இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்து விட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டு விட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கின்றேன் என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படையின ருக்கும் பரக்கத்(எனும் அருள் வளத்)தை அளிக்கும்படி பல முறை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.193

பாடம் : 193

நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக் கப்படும் அன்பளிப்பு.

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்ட போது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக்

(ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.194

பாடம் : 194

(மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது.

3077 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப் போர் புரியப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.195

3078 & 3079 முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சகோதரர் முஜா-த் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, இவர் (என் சகோதரர்) முஜா-த்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதிமொழியளிக்(க வந்திருக்)கிறார் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்குவேன் என்று கூறினார்கள்.196

3080 அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர் களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்த-ஃபாவில்) ஸபீர் மலையருகே தங்கியிருந்தார்கள்.197 அவர்கள் எங்க ளிடம், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் கடமை நீங்கி விட்டது என்று சொன்னார்கள்.

பாடம் : 195

இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற சமுதாயப் பெண்கள் (அரச

துரோகக் குற்றமிழைக்கும் போது) அல்லது முஸ்-மான பெண்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அவர்களின் முடியை, மற்றும் அவர்களின் ஆடையை அவிழ்த்துச் சோதிக்க வேண்டிய (பணி) நிர்பந்தம் (அரசு அதிகாரியான) ஒருவருக்கு ஏற்பட்டால், அவ்வாறு செய்ய அனுமதியுண்டு.

3081 சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரான அபூ அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அதிய்யா (ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்:

உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு ரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று நான் அறிவேன்.

(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டிருக்கிறேன்:

என்னையும் ஸுபைர் (ரலி) அவர் களையும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி, நீங்கள் இன்ன ரவ்ளா என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கின்றார் என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று, கடிதம் (எங்கே)? என்று (அப் பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், அவர் என்னிடம் கொடுக்க வில்லை என்று கூறினாள். நாங்கள், நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா? என்று கேட்டோம். உடனே, அவள் தன் நீண்ட கூந்தல் தொட்டுக் கொண்டிருக்கும் இடுப்பிலிருந்து அதை வெளியே எடுத்தாள். மடியிலிருந்து (கடிதம் கிடைத்த) உடனே நபி (ஸல்) அவர்கள், ஹாதிப் அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாதிப் அவர்கள் (வந்து), (அல்லாஹ்வின் தூதரே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நிராகரிக்கவு

மில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்கவுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர் களுடைய மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. ஆகவே, அவர்களிடம் நான் எனக்கு ஓர் ஆதரவை உருவாக்கிக் கொள்ள விரும்பினேன் என்று கூறினார்கள். அவர்களுடைய இந்த வாக்குமூலத்தை நபி (ஸல்) அவர்கள் உண்மையானதென்று ஏற்றுக் கொண் டார்கள். ஆனால், உமர் அவர்கள், என்னை அவரது கழுத்தைக் கொய் தெறிய அனுமதியுங்கள். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகி விட்டார் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன தெரியும்? அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் தூய எண்ணத்தை அறிந்து கொண்டு (அவர்களை நோக்கி), நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டிருக் கலாம் எனச் சொன்னார்கள்.198

நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லைக் கேட்டிருந்தது தான் அலீ (ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கின்றது.

(இவ்வாறு அபூ அப்திர் ரஹ்மான் கூறினார்.)

பாடம் : 196

அறப்போர் வீரர்களை வரவேற்பது.

3082 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர்

(ரலி) அவர்களிடம், நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர் கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்

டார்கள். அதற்கு அவர்கள், ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள்; உங்களை விட்டு விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

3083 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (சிறுவர்களாயிருந்த போது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற் பதற்காக வதா மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.199

பாடம் : 197

புனிதப் போரிலிருந்து திரும்பும் போது அறப்போர் வீரர் என்ன சொல்ல வேண்டும்?

3084 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (புனிதப் போரி

லிருந்து) திரும்பிச் செல்லும் போது மூன்று முறை அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறிவிட்டு, இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கின்றோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டி விட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்து விட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்க டித்து விட்டான் என்று கூறினார்கள்.200

3085 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பிய போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தமது துணை வியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை

(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள். உடனே, அபூ தல்ஹா

(ரலி) அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள்,

(முத-ல்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள் மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களுடைய வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக் கொண்டார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கி யவுடன் நபி (ஸல்) அவர்கள், பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக் கின்றோம் என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டி ருந்தார்கள்.

3086 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூ தல்ஹா (ரலி) அவர் களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர் களுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத் தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவி யாரும் கீழே விழுந்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மேலும், அனஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்:

அபூ தல்ஹா அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கு வானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள் மீது அத்துணியைப் போட் டார்கள். உடனே, அப் பெண்மணி (ஸஃபிய்யா (ரலி) அவர்கள்) எழுந்து கொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களுடைய வாகனத்தைச் சரி செய்து தந்தவுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக் கின்றோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பாடம் : 198

ஒருவர் பிரயாணத்திலிருந்து திரும்பிய வுடன் தொழுவது.

3087 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். நாங்கள் (பிரயாணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்பி வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், பள்ளிவாச-ல் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக! என்று கூறினார்கள்.201

3088 கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்திலிருந்து ளுஹா (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாச-ல் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.202

பாடம் : 199

பிரயாணத்திலிருந்து திரும்பிய பின் உணவு அருந்துவது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன்) தமக்கு வரவேற்புத் தந்து, முத-ல் தங்க இடம் கொடுத்து விருந்துபசாரம் செய்ப வருக்காக (வழமையாக நோற்கும் உபரி) நோன்பை (நோற்காமல்) விட்டு விடுவார்கள்.

3089 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனா விற்கு அருகிலுள்ள) ஸிரார் என்னு மிடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தர விட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண் டார்கள். மதீனாவுக்கு வந்த போது பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் துகள் தொழும்படி எனக்கு உத்தர விட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள்.

3090 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக! என்று (என்னிடம்) கூறினார்கள்.

ஸிரார் என்பது மதீனாவின் ஓரத்திலுள்ள ஓரிடமாகும்.

November 2, 2009, 9:46 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்7

பாடம் : 151

இறைமறுப்பாளர்களிடம் சிக்கிக் கொண்ட (முஸ்லிம்) போர்க் கைதி தன்னைச் சிறைபிடித்தவர்களிட மிருந்து தப்பிக்க அவர்களை ஏமாற்றவோ, கொன்று விடவோ அனுமதியுண்டா?

இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.130

பாடம் : 152

இணை வைப்பவன் ஒரு முஸ்-மை எரித்து விட்டால் (அதற்கு பதிலாக) அவனை எரிக்கலாமா?

3018 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உக்ல் குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. ஆகவே அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப் பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் உக்ல் குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை ( கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகளின் ஓரங் களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராஎனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப் படவில்லை.

அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போரிட் டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால் தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132

பாடம் : 153

3019 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத் துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங் களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 154

வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்.

3020 ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீஙகள் விடுவிக்க மாட்டீர்களா?என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தா ரிடையே யமன் நாட்டு கஅபா என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது.133 நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தனை செய்தார்கள். ஆகவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர் களிடம், உங்களை சத்திய மார்க்கத் துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெ-ந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டு விட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கின்றேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

3021 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.134

பாடம் : 155

இணைவைப்பவர் தூங்கிக் கொண்டி ருக்கும் போது அவரைக் கொல்வது.

3022 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉ விடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள்.135 அவர்களில் ஒருவர் சென்று அவர்களுடைய கோட்டைக்குள் நுழைந்தார். அவர் கூறுகிறார்: நான் அவர்களுடைய வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்து விட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைக் கதவை இரவில் மூடி விட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூராஃபிஉவிடம் சென்று, அபூ ராஃபிஉவே!என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்ச-ட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, அபூராஃபிஉவே! என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், உனக்கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும் என்று சொன்னான். நான், உனக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டேன். அவன், என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கி விட்டான் என்று கூறினான். உடனே, நான், அவனது வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனது வயிற்றுக் குள் சென்று) அவனது எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளி யேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களுடைய ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, (அவனது மரணத்தையறிந்து அவனது வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூறினேன். ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ(உடைய மரணத்து)க்காக அவனது வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தை விட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.

3023 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் அவனது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.

பாடம் : 156

எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள் என்னும் நபிமொழி.

3024 உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்ட போது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன்.

அதில் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க் களத்தில் சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க் களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

3025பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, எதிரி களைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப் படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும்,

 சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பிறகு, இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவு வாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.136

மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரியை (போர்க்களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள் என்று சொன்னார்கள் என்றிருந்தது என சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

3026 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 157

போர்என்பது சூழ்ச்சியாகும்.

3027 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவோரிடையே) பங்கிடப்பட்டு விடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3028 (தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:)

மேலும், நபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்கள்.

3029 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் போரை சூழ்ச்சிஎன்று குறிப்பிட்டார்கள்.

3030 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர் என்பது சூழ்ச்சியாகும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 158

போரில் பொய் சொல்வது.

3031 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப் பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ் வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்து விட்டான்என்று கேட்டார்கள்.1 முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்பு கிறீர்களா? அல்லாஹ்வின்

3031 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப் பவர்) யார்? (என்று கேட்டு விட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்து விட்டான்என்று சொன்னார்கள்.137 முஹம்மத் பின் மஸ்லமா

(ரலி) அவர்கள், நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா

(ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று,இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்து விட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார் என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் ச-ப் படைவீர்கள் என்று கூறினான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள்,நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்) என்று (ச-ப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்று விட்டார்கள்.138

பாடம் : 159

அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.

3032 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வது யார்? என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்பு கிறீர்களா? என்று நபி (ஸல்) அவர் களிடம் கேட்க, அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்து விட்டேன் என்று பதிலளித்தார்கள்.139

பாடம் : 160

இவனால் தீங்கு நேரும் என்று அஞ்சப்படும் மனிதனிடம் எச்சரிக்கை உணர்வுடனும், தந்திரத்துடனும் நடந்து கொள்வது.

3033 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்த போது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணு முணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வை யைப் போர்த்திக் கொண்டு படுத்திருந் தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து விட்டாள். உடனே, ஸாஃபியே! இதோ முஹம்மத்! என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து விட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டி ருந்தால் அவன் (உண்மையை) வெளிப் படையாகப் பேசியிருப்பான் என்று சொன்னார்கள்.140

பாடம் : 161

போரில் ரஜ்ஸ் எனும் (ஒரு யாப்பு வகைப்) பாடலைப் பாடுதல் மற்றும் அகழ் தோண்டும் போது (பாடிக் கொண்டே) குரலை உயர்த்துதல்.

இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.141

இது பற்றியே சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக் கிறார்கள்.142

3034 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின் போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது...மேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடியுடைய வர்களாக இருந்தார்கள்.... அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களுடைய பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:

இறைவா! நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்க வும் மாட்டோம். ஆகவே, எங்கள் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும் போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்கள் மீது வரம்பு மீறி அநீதியிழைத்து விட்டார்கள். அவர்கள் எங்களைச் சோதிக்க விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.143

இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 162

குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்.

3035 ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இஸ்லாத்தைத் தழுவியதி

லிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடா தென்று) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்த வர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

3036 என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டு பவராகவும் நேர்வழியில் செலுத்தப்பெற்ற வராகவும் ஆக்கு என்று பிரார்த்தனை செய்தார்கள்.144

பாடம் : 163

(ஈச்சம்) பாயை எரித்து அதனால் காயத்திற்கு சிகிச்சையளிப்பதும், ஒரு பெண் தன் தந்தையின் முகத்திலிருந்து (வழியும்) இரத்தத்தைக் கழுவுவதும், (அதற்காகத்) தண்ணீரைக் கேடயத்தில் அள்ளிச் சுமந்து வருவதும்.

3037 அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய காயத்திற்கு எதனால் சிகிச்சை யளிக்கப்பட்டது? என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், அதைப் பற்றி என்னைவிட அதிகமாக அறிந்த வர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மேலும், ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய முகத்திலிருந்து இரத்தத் தைக் கழுவி விட்டார்கள். (ஈச்சம்) பாய் ஒன்று எடுத்து வரப்பட்டு, எரிக்கப்பட்டு அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதருடைய காயத்திற்கு(மருந்திட்டு)க் கட்டு போடப்பட்டது என்று சொன்னார்கள்.

பாடம் : 164

போரின் போது சச்சரவு செய்து கொள்வதும் கருத்து வேறுபாடு கொண்டு தகராறு செய்து கொள்வதும் வெறுக்கத் தக்கது என்பதும், தன் தலைவருக்கு மாறு செய்பவரின் தண்டனையும்.

 அல்லாஹ் கூறுகிறான்:

ஒருவரோடொருவர் (பூசல் கொண்டு) சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். (அதனால்) நீங்கள் அச்சமும் பலவீனமும் கொண்டு விடுவீர்கள். உங்கள் வ-மை (பறி) போய் விடும். (8:46)

இங்கே வ-மை என்பது போர் வ-மையைக் குறிக்கிறது என்று கதாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

3038 அபூ மூசா அல் அஷ்அரீ

(ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத் துரையுங்கள்; சிரமமானதை எடுத்

துரைக்காதீர்கள். மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள் என்று (அறிவுரை) கூறினார்கள்.

3039 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 உஹுதுப் போரின் போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். (நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இந்த இடத்தை விட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க்களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துக் கொண்டு செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப் பும் வரை உங்களுடைய இடத்தை விட்டு நகராதீர்கள் என்று அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்து விட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களின் சகாக்கள், போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று (உரக்கக்) கூறலாயினர். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட் களை எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்ற போது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்று விட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அவர்களைப் போர்க் களத்திற்குத் திரும்பி வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்துக் கொண்டிருந்த போது இது நடந்தது. அப்போது, நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை. எதிரிகள் எங்களில் எழுபது பேரைக் கொன்று விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் பத்ருப் போரின் போது இணைவைப்பவர்களில் (மொத்தம்) நூற்றி நாற்பது பேரை பாதிப்புக் குள்ளாக்கி விட்டிருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்று விட்டி ருந்தார்கள். ஆகவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), (உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கின்றாரா? என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்து விட்டார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா? என்று மூன்று முறை கேட்டார். பிறகு, கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா? என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, இவர் களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர் என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர்

(ரலி) அவர்கள், தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது என்று சொன்னார்கள். (உடனே) அபூசுஃப்யான், இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது என்று சொல்லிவிட்டு பிறகு, ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது, ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது என்று கவிதை பாடலானார்.145 நபி (ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் என்ன (பதில்) சொல்வது? என்று வினவ, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன் என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூசுஃப்யான், எங்களுக்கு உஸ்ஸா (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே என்று கவிதை பாடினார். உடனே நபி (ஸல்) அவர்கள், இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். தோழர்கள், நாங்கள் என்ன (பதில்) சொல்வது? அல்லாஹ்வின் தூதரே! என்று வினவ, நபி (ஸல்) அவர்கள்,

 அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே! என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள்.146

பாடம் : 165

இரவு நேரத்தில் (படையினரும் மக்களும் எதிரிப் படை வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானால்...

3040 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்) குணமுடையவர்களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர் களாகவும் மக்களிலேயே அதிக வீர முடையவர்களாகவும் இருந்தார்கள். (ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள். (விஷயம் என்ன என்றறிய வெளியே வந்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வாளைத் தொங்க விட்டவர்களாக, அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டார்கள். அப்போது, பயப்படாதீர்கள். பீதி யடையாதீர்கள் என்று (மக்களைப் பார்த்து) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம் என்று சொன்னார்கள்.

பாடம் : 166

எதிரியைக் கண்டவர், யா ஸபாஹா! (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழச் செய்யும் விதத்தில் உரக்கக் குர

லெழுப்பி அழைப்பது.

3041 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவிலிருந்து ஃகாபாவை147 நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன். நான் ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்த போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய அடிமை யொருவன் என்னைச் சந்தித்தான். நான், அடப் பாவமே! உனக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டேன். அவன், நபி (ஸல்) அவர்களுடைய (பால் தரும்) ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டு விட்டன என்று கூறினான். நான், அவற்றை யார் எடுத்துச் சென்றது? என்று கேட்டேன். அதற்கவன், கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார் என்று பதில் சொன்னான். உடனே நான் மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயிருந்த அனை வருக்கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு, யா ஸபாஹா! (ஆபத்து!) யா ஸபாஹா! (ஆபத்து!) என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளை யடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள் என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்து விட்டேன். பிறகு திரும்பிச் சென்ற போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர் கூட குடிக்க விடாமல் அவர் களை நான் (அம்பெய்து) அவசரமாக ஓட வைத்து விட்டேன். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து வரப் படையனுப்புங்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள்,அக்வஃ உடைய மகனே! நீ அவர்களைத் தோற்கடித்து விட்டாய். ஆகவே, போனால் போகட்டும், விட்டு விடு. அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்து விட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.148

பாடம் : 167

(எதிரியின் மீது அம்பெய்தபடி) இதை வாங்கிக் கொள். நான் இன்னாரின் மகன் என்று கூறுவது.

சலமா பின் அக்வஃ (ரலி) கூறினார்கள்:

 இதை வாங்கிக் கொள்க! நான் அக்வஃ உடைய மகன்.149

3042 அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், அபூ உமாராவே! ஹுனைன் போரின் போது நீங்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டீர்களா? என்று கேட்டார். நான் கேட்டுக் கொண்டிருக்க, பராஉ

(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பொருத்தவரை அவர்கள் அன்று பின்வாங்கிச் செல்ல வில்லை. அபூசுஃப்யான் பின் ஹாரிஸ் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்ட போது, அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, நான் இறைத்தூதர் தான். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்த-பின் மகன்என்று (பாடியபடி) கூறினார்கள். அன்று நபி (ஸல்) அவர்களை விடத் துணிச்சலுடையவர் எவரும் மக்க ளிடையே காணப்படவில்லை என்று கூறினார்கள்.150

பாடம் : 168

எதிரிகள் ஒருவரது தீர்ப்பை ஏற்றுக் கொள்ள சம்மதித்தால்.. (தலைவர் அனுமதிக்கும் பட்சத்தில் அது செல்லும்.)

3043 அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ....சஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் தான் (ஓரிடத்தில்) இருந்தார்கள்.... அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் என்று (மக்களிடம்) கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள் என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வ-மை கொண்டவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப் பளிக்கின்றேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கின்றீர்கள் என்றார்கள்.151

பாடம் : 169

சிறைக் கைதியைக் கட்டிப் போட்டுக் கொலை செய்வது.

3044 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்ட போது தலையில் இரும்புத் தொப்பி அணிந்த வண்ணம் மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றான் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொல்லுங்கள் என்று உத்தர விட்டார்கள்.152

பாடம் : 170

ஒருவர் தன்னைக் கைது செய்யும்படி எதிரியிடம் சரணடையலாமா?

அவ்வாறு சரணடைய விரும்பாத வரும், எதிரிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்கஅத்துகள் தொழுதவரும்.

3045 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப் படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் பின் கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் பின் சாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள்.153 அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள ஹத்ஆ எனுமிடத்திற்கு வந்த போது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ -ஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப் படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு) விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே, இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம் என்று கூறினர். எனவே, அவர்களுடைய கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம் (ரலி) அவர்களும் அவர்களுடைய சகாக்களும் கண்ட போது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புக-டம் தேடி) ஒதுங்கி நின்று கொண்டனர். அவர்களை பனூ -ஹ்யான் குலத்தினர் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கின்றோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம் என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்த வனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறங்க மாட்டேன் என்று கூறி விட்டு, இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு என்று பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்கள்மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களும் மற்றுமொருவரும் ஆவர்.154 இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர் களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், இது முதலாவது நம்பிக்கை துரோகம். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு (நல்ல) ஒரு பாடமாக அமைந்துள்ளனர் என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச்சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்து விட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்று விட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் பின் ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். ஆகவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.

உபைதுல்லாஹ் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹாரிஸின் மகள்155 என்னிடம் கூறினார்:

குபைப் அவர்களைக் கொல் வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்று கூடிய போது, குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர் கையி லெடுத்துக் கொண்டார். அவன் அவரிடம் சென்ற போது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை நான் கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே, நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படு கின்றாயா? நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒரு போதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தமது கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரது கை இரும்புச் சங்கி-களால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.

....மேலும், ஹாரிஸின் மகள், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான் என்று கூறி வந்தார்.... (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)

(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்:)

அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் (எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து ஹில் (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும்) பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற போது அவர்களிடம் குபைப் அவர்கள், என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள் என்று கூறினார்கள். (தொழுது முடித்த) பிறகு, நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன் என்று கூறி விட்டு, இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு (ஒருவர் விடாமல்) பழிவாங்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். மேலும், நான் முஸ்-மாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தி யைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப் புகளின் மீதுகூட (தன்) அருள் வளத்தைப் பொழிவான் என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்-முக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் பின் ஸாபித் அவர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலை குறித்து தன் தூதருக்குத் தெரிவித்து) விட்டான். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு நேர்ந்த கதியையும் தெரிவித்தார்கள். குறைஷிக் குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர் தான் என்று) அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரது அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும்படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின் போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்கு (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. ஆகவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.156

பாடம் : 171

(எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவிப்பது

இது பற்றி அபூமூசா அஷ்அரீ

(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.157

3046 அபூ மூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்த வனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள் என்று கூறினார்கள்.

3047 அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம், உங்க ளிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளி

லிருந்து (வேறு) ஏதும் இருக்கின்றதா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கின்ற விளக்கத்தையும் இந்தத் தாளில் இருப்ப தையும் தவிர என்று பதிலளித்தார்கள். நான்,இந்தத் தாளில் என்ன இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப் பது, மற்றும் எந்த முஸ்-மையும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காகக் கொல்லக் கூடாது (என்பது)என்று பதிலளித்தார்கள்.158

பாடம் : 172

இணைவைப்பவர்களிடம் பிணைத் தொகை பெறுவது.

3048 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை (வாங்காமல்) விட்டுக் கொடுத்து (இலவசமாக அவர்களை விடுதலை செய்து) விட அனுமதி கொடுங்கள் என்று கேட்டனர்.

நபி (ஸல்) அவர்கள், பிணைத் தொகையிலிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக்கூட (வாங்காமல்) விட்டு விடாதீர்கள் என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.159

3049 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரை னிலிருந்து (பொது) நிதி கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்ட போது) எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கின்றேன்; (என் சகோதரர்) அகீலுக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கின்றேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், எடுத்துக் கொள்வீராக! என்று கூறி (நிதியை) அவரது ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.160

3050 முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ஜுபைர் பின் முத்இம்

(ரலி) அவர்கள் பத்ருப் போர்க் கைதி களின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் தூர் அத்தியாயத்தை ஓதக் கேட்டேன் என்று (என் தந்தை) கூறினார்கள்.160

பாடம் : 173

எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவன் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்து விட்டால்....

3051 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்த போது அவர்களிடம் இணைவைப்பவர்களி டையேயிருந்து உளவாளி ஒருவன் வந்தான்; நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடம் பேசியபடி அமர்ந்து கொண்டான்; பிறகு, திரும்பிச் சென்று விட்டான். நபி (ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), அவனைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.161 நான் அவனை (தேடிப் பிடித்துக்) கொன்று விட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனது உடைமைகளை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) உபரியாக நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

பாடம் : 174

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தவர்களின் பாதுகாப்பிற்காகப் போரிட வேண்டும்; அவர்களை அடிமைகளாக நடத்தக் கூடாது.

3052 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எனக்குப் பின் வருகின்ற புதிய)

கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்: அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள(முஸ்-மல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களுடைய சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்கள் மீது சுமத்தக் கூடாது.162

பாடம் : 175

தூதுக் குழுவினருக்குப் பரிசுகள் வழங்குதல்.163

November 2, 2009, 9:45 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்6

பாடம் : 126

புனிதப் போரின் போதும் ஹஜ்ஜின் போதும் ஒருவருக்குப் பின்னால் (அவரது வாகனத்தில்) அமர்ந்து செல்வது.

2986 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (வாகனத்தில் அவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது மக்கள் (நபித் தோழர்கள்) ஹஜ், உம்ரா இரண்டுக்குமே உரக்க தல்பியா கூறிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 127

கழுதையின் மீது ஒருவரைத் தமக்குப் பின்னே உட்கார வைத்துக் கொள்வது.

2987 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்தார்கள். கழுதையின் சேண இருக்கையின் மீதிருந்த பூம்பட்டு விரிப்பொன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.

2988 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, தம் வாகனத்தின் மீது உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் காவல் பொறுப்பில் இருந்த உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களுடைய வாகனம் இறுதியில் பள்ளிவாச-ல் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உஸாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோ

டொருவர் போட்டியிட்டனர். நான் தான் (அதனுள்) முத-ல் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்களை வாச-ன் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே, பிலால் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்? என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், எத்தனை ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்? என்று கேட்க மறந்து விட்டேன்.109

பாடம் : 128

ஒருவர் ஏறி அமர உதவியாக வாகனத்தைப் பிடித்துக் கொள்வது முதலான நற்செயல்கள்.

2989 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன் றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.110

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 129

எதிரியின் நாட்டிற்கு திருக்குர்ஆன் பிரதிகளுடன் பிரயாணம் செய்வது விரும்பத் தக்கதல்ல.

இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்படித் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பு வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களும் அவர் களுடைய தோழர்களும் திருக்குர்ஆனை அறிந்திருக்கும் நிலையில் எதிரியின் நாட்டில் பிரயாணம் செய்துள்ளனர்.

2990 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுடன் (திருக்குர் ஆனின் பிரதியுடன்) எதிரியின் நாட்டிற்குப் பிரயாணம் செய்வதைத் தடை செய்தார்கள்.111

பாடம் : 130

போரின் போது தக்பீர்112 சொல்வது.

2991 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக் குப்) புறப்பட்டுவிட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், முஹம்மதும் (அவருடைய) ஐம்பிரிவு படையினரும் வந்துள்ளனர். முஹம்மதும் (அவரது) ஐம்பிரிவு படையினரும் வந்துள்ளனர் என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளையும்

உயர்த்தி, அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகின்ற அவர்களுடைய காலை நேரம் மிகக் கெட்டதாகிவிடும் என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், அல்லாஹ் வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக் கிறார்கள் என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டு விட்டன.113

பாடம் : 131

தக்பீர் சொல்லும் போது குரலை உயர்த்திச் சொல்வது விரும்பத் தக்கதல்ல.

2992 அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை என்றும் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப் படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லா தவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது என்று கூறினார்கள்.

பாடம் : 132

பள்ளத்தாக்கில் இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்று சொல்வது.

2993 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மேட்டில்) ஏறும் போது அல்லாஹு அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன் என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும் போது சுப்ஹானல்லாஹ்-அல்லாஹ் குறைகளி லிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன் என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.

பாடம் : 133

மேட்டில் ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவது.

2994 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மேட்டில்) ஏறும் போது அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறுவோம்.

2995 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ.. அல்லது புனிதப் போரிலிருந்தோ திரும்பும் போது, ஒரு மலைப்பாதையில் அல்லது ஒரு கெட்டியான நிலத்தில் மேடான பகுதியில் ஏறிச் செல்லும் போதெல்லாம் மூன்று முறை, அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம் பணிந்தவர் களாகவும், அவனைப் புகழ்ந்தவர் களாகவும் நாங்கள் திரும்புகின்றோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டான்; தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான்; தன்னந் தனியாக நின்று குலங்கள் அனைத்தையும் தோற்கடித்து விட்டான் என்று கூறினார்கள்.

 

பாடம் : 134

ஊரிலிருக்கும் போது ஒருவர் செய்து வந்த நற்செயல்களுக்குக் கிடைத்தது போன்ற (அதே) நற்பலன் அவர் பிரயாணத்தில் இருக்கும் போதும் (பாவம் எதுவும் செய்யவில்லை யென்றால்) அவருக்கு எழுதப்படும்.

2996 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும் போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும் போது அல்லது பிரயாணத்தில் இருக்கும் போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.

இதை அறிவித்த அபூ புர்தா (ரஹ்) அவர்கள், இதைப் பலதடவை (என் தந்தை) அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றி ருக்கிறேன் என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் பின் அபீ கப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

பாடம் : 135

(இரவில்) தனியாகப் பயணம் செல்லலாமா?

2997 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது (இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருவது யார்? என்று மக்களை) அழைத்தார்கள். ஸுபைர் (பின் அவ்வாம்) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தி யேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைர் ஆவார் என்று கூறினார்கள்.114

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், மூலத்தில் இடம் பெற்றுள்ள ஹவாரீ என்பது உதவி புரிபவரைக் குறிக்கும் என்று கூறினார்கள்.

2998 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங் களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 136

பயணத்தில் (இருந்து) விரைவாக (வீடு திரும்பிச்) செல்வது.

நபி (ஸல்) அவர்கள், நான் மதீனாவுக்கு (அவசரமாக) விரைந்து சென்று கொண்டிருக்கின்றேன். எவர் என்னுடன் விரைவாக வர விரும்பு கின்றாரோ அவர் விரைந்து வரட்டும் என்று கூறினார்கள்.115

இதை அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2999 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜத்துல் வதாவின் போது (அரஃபாவிலிருந்து திரும்பி வருகையில்) நபி (ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சாதாரண வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் வேக வேகமாகச் செல்வார்கள் என்று பதிலளித்து விட்டு, வேகமாக என்பது சாதாரண வேகத்தை விட அதிகமாக உள்ள வேகத்தைக் குறிக்கும் என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.116

அறிவிப்பாளர் யஹ்யா அல் கத்தான் (ரஹ்) அவர்கள், எனக்கு இதை அறிவித்த உர்வா (ரஹ்) அவர்கள், நான் உஸாமா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள். ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்து விட்டேன் என்று கூறினார்கள்.

3000 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து அபீ உபைத் (ரலி) அவர்கள் கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது. உடனே, அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள். கீழ் வானில் தெரியும் செம்மை மறைந்து விட்ட பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும் போது மக்ரிபைப் பிற்படுத்தி, மக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.117

3001 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையின் ஒரு பங்காகும். அது உங்களை உறங்க விடாமலும், உண்ண விடாமலும், பருக விடாமலும் தடுத்து விடும். ஆகவே, உங்களில் ஒருவர் (ஒரு வேலையாகப் பயணம் புறப்பட்டுச் சென்று) தன் தேவையை முடித்துக் கொண்டு விட்டால் அவர் தன் வீட்டாரிடம் விரைவாக (திரும்பிச்) சென்று விடட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.118

பாடம் : 137

ஒருவரைப் புனிதப் போருக்காக குதிரையில் ஏற்றியனுப்பிய பிறகு குதிரை விற்கப்படுவதைக் கண்டால்...

3002 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (ஒருவரை) அல்லாஹ்வின் பாதையில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள். பிறகு, அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை வாங்க விரும்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா? என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள்.

3003 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். தன்னிடம் இருந்த அந்த குதிரையை அவர் விற்றார்.... அல்லது வீணாக்க இருந்தார்....அதை நான் வாங்கிக் கொள்ள விரும்பினேன். அதை அவர் ம-வான ஒரு விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணி னேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று ஆலோசனை) கேட்டேன். அவர்கள், அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறு பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் என்று கூறினார்கள்.119

பாடம் : 138

தாய் தந்தையரின் அனுமதியுடன் அறப் போர் புரிவது.

3004 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும் தந்தையும் உயிருடனிருக் கின்றார்களா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக் கின்றனர்) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ் விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.

பாடம் : 139

ஒட்டகத்தின் கழுத்தில் மணி போன்றவற்றைத் தொங்க விடுவது.

3005 அபூ பஷீர் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் (ரஹ்) அவர்கள், அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூ பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறு கிறார்கள்.

பாடம் : 140

ஒருவர் (அறப் போருக்குச் செல்ல) தன் பெயரைப் பதிவு செய்து கொண்ட பின் அவரது மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டால் அல்லது ( போரில் கலந்து கொள்ள முடியாதபடி அவருக்கு) வேறு ஏதாவது (நியாயமான) காரணம் இருந்தால் அவர் போரில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதியளிக் கப்படுமா?

3006 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய் என்று கூறினார்கள்.120

பாடம் : 141

ஒற்றர் (வேவு பார்த்துத் தகவல் தருபவர்)

அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:1)

3007 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும், நீங்கள் ரவ்ளத்து காக் என்னுமிடம்121 வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில்122 ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து

எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளா எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), கடிதத்தை வெளியே எடு என்று கூறினோம். அவள், என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று கூறினாள். நாங்கள், ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம் என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப் போரிடையேயுள்ள பிரமுகர்கள் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது? என்று கேட்டார்கள். ஹாத்திப்

(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதை யாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மை பேசினார் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டி ருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது! என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (வியந்து) கூறினார்கள்.

பாடம் : 142

(போர்க்) கைதிகளுக்கு ஆடை அணிவிப்பது.

3008 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின் போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்

(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் பின் உபை(இறந்த பின்பு அவனு)க்கு நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள்.

அப்துல்லாஹ் பின் உபை, நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள் என்று அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 143

எவருடைய கரங்களில் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்கின்றாரோ அவரு டைய சிறப்பு.

3009 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது,நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ் வையும் அவனது தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கிறார்கள் என்று சொன்னார்கள். மக்கள், நபி (ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்? என்று தமக்குள் (இன்னாரிடம் கொடுப்பார்கள் என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ் லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) அலீ எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அலீ அவர்களுக்குக் கண் வ- என்று சொல்லப்பட்டது. ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வ- நீங்கிட) துஆ செய்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வ-யே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அவர்கள் நம்மைப் போன்று (இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன் என்று அலீ அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், (அலீயே!) நிதானத் துடன் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ் லாத்தை ஏற்பதால்) அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.123

பாடம் : 144

சங்கி-களால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள்.

3010 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சங்கி-களால் பிணைக்கப்பட்டவர் களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக்124 கண்டு அல்லாஹ் வியப்படைவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 145

வேதம் வழங்கப்பட்ட இரு சமுதாயத் தவர்(களான யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்)களிடையேயிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்களின் சிறப்பு.

3011 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்:

1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறக் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும் கொண்ட மனிதர். இவருக்கு (அதற்காக) இரண்டு நற் பலன்கள் கிடைக்கும்.

2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டி ருந்த அவர், பிறகு நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டார் எனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.

அறிவிப்பாளர் ஸா-ஹ் பின் ஹய் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(தம்மிடம் அடிமைப் பெண் குறித்து விளக்கம் கேட்டவரிடம்) ஷஅபீ (ரஹ்) அவர்கள், எதையும் பகரமாகப் பெறாமலேயே இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கின்றேன். இதை விட எளிய விஷயங்களை அறிந்து கொள்ள சிலர் மதீனாவரைகூட சென்று கொண் டிருந்தார்கள் என்று கூறினார்கள்.125

பாடம் : 146

எதிரி நாட்டினரின் குழந்தைகளும் பிற மக்களும் (போரில் சிக்கிச்) சேத

மடையும் (வாய்ப்பிருக்கும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?

3012 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்வாஎன்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது,

 இணைவைப்போரான எதிரி நாட்டி னரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.126 மேலும், நபி (ஸல்) அவர்கள், (பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை என்று கூற நான் கேட்டிருக்கின்றேன்.

3013 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் பின் ஜஸ்ஸமா

(ரலி) அவர்கள், அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம் என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் தீனார் (ரஹ்) அவர்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வாயிலாக, அக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர் களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்ட போது, அந்தக் குழந்தைகளும் அவர் களைச் சேர்ந்தவர்களே என்று தான் கூறினார்கள்.

இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) தெரிவிக்கிறார்கள்.

பாடம் : 147

போரில் குழந்தைகளைக் கொல்வது.

3014 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண் ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

பாடம் : 148

போரில் பெண்களைக் கொல்வது.

3015 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக் கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.

பாடம் : 149

அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால் எவரையும் வேதனை செய்யக் கூடாது.

3016 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களை ஒரு குழுவில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள். பிறகு, நாங்கள் புறப்பட முனைந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பினால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள்.127

3017 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் ஒரு கூட்டத் தாரை எரித்து விட்டார்கள்.128 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள்,நானாக இருந்திருந்தால் அவர் களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், எவர் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள் என்று சொன்னது போல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன் என்று சொன்னார்கள்.

பாடம் : 150

அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களை நீங்கள் முற்றிலுமாக ஒடுக்கி விட்ட பின்னால் கைதிகளை இறுக்கமாகக் கட்டி விடுங்கள். அதன் பிறகு, (அவர்கள் மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம். (47:4)

இது பற்றி சுமாமா (ரலி) அவர்கள் குறித்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.129 மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் எதிரிகளை முற்றிலுமாகத் தோற்கடிக்காத வரை அவர்களைச் சிறைப்பிடித்துப் போர்க் கைதிகளாக வைத்துக் கொள்வது எந்த இறைத் தூதருக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலகப் பொருட்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களையே விரும்புகிறான். (8:67)

November 2, 2009, 9:44 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்5

பாடம் : 101

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அழைப்புக் கொடுப்பதும், அவர்களுக் கெதிராக எந்த அடிப்படையில் போர் புரியப்படும்? என்பதும்,

நபி (ஸல்) அவர்கள், பாரசீக மன்னன் குஸ்ரூ(என்ற கிஸ்ரா)வுக்கும் ரோமச் சக்கரவர்த்தி சீசருக்கும் கடிதம் எழுதியதும், போருக்கு முன் இஸ்லாமிய அழைப்புக் கொடுப்பதும்.

2938 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பிய பொழுது, அவர்கள் (அரசின்) முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள்... (இப்போதும்) நான் அவர்களுடைய கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பது போன் றுள்ளது... அதில், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுஎன்று நபி (ஸல்) அவர்கள் பொறித்திருந்தார்கள்.

2939 அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கடிதத்தை பாரசீக மன்னர் குஸ்ரூவுக்கு (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் வாயிலாக) அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனுடைய ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் குஸ்ரூவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் படி (அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா

(ரலி) அவர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதைப் பாரசீக மன்னன் குஸ்ரூ படித்த போது, (கோபப்பட்டு) அதைக் கிழித்து விட்டான்.

(ஆகவே,) அவர்கள் துண்டு துண்டாக்கப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள் என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று அறிவிப் பாளர் ஒருவர் கூறுகின்றார்.82

பாடம் : 102

இஸ்லாத்தையும் நபித்துவத்தையும் ஏற்கும்படியும், அல்லாஹ்வை விடுத்து சிலர், சிலரை தெய்வங்களாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்படியும் மக் களை நபி (ஸல்) அவர்கள் அழைத்தது.

அல்லாஹ் கூறுகிறான்:

ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும் தூதுத்துவத்தையும் ஞானத்தையும் அளித்திருக்க, அவற்றைப் பெற்ற பின்பு, நீங்கள் அல்லாஹ்வை விடுத்து என்னையே வணங்குவோராகி விடுங்கள் என்று மக்களிடம் கூற அவருக்கு அனுமதியில்லை. மாறாக, நீங்கள் வேதத்தை ஓதிக் கொண்டும் அதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்த காரணத்தால் இறைவனையே சார்ந்து வாழ்வோராக ஆகிவிடுங்கள் என்றே அவர் கூறுவார். (3:79)

2940 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோம சக்கரவர்த்தி சீசருக்கு இஸ்லாத்திற்கு வரும்படி அழைப்புக் கொடுத்து கடிதம் எழுதினார்கள். திஹ்யா அல் கல்பீ என்னும் நபித் தோழரிடம் தம் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். ரோம சக்கரவர்த்தி சீசரிடம் கொடுப்பதற்காக புஸ்ராவின் அரசனிடம் அதைக் கொடுத்து விடும்படி அத் தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். பாரசீகப் படைகளின் மீது அல்லாஹ் சீசருக்கு வெற்றியை அளித்த போது, அவர் ஹிம்ஸ் பகுதியிலிருந்து ஈ-யாவை (புனித நகரமான ஜெரூசலத்தை) நோக்கி, அல்லாஹ் அளித்த வெற்றிப் பரிசுக்கான நன்றியைச் செலுத்தும் வகையில் சென்றார். சீசரிடம் அல்லாஹ்வின் தூதருடைய கடிதம் வந்த நேரத்தில் அவர் அதைப் படித்த போது,எனக்காக இங்கு இந்த மனிதரின் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையேனும் தேடிக் (கண்டு பிடித்துக்) கொண்டு வாருங்கள். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அவர்களிடம் நான் கேட்பேன் என்று கூறினார்.

2941 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ சுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் எனக்குப் பின்வருமாறு அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் குறைஷிக் குல இறைமறுப் பாளர்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தம் அம-ல் இருந்த) கால கட்டத்தில் வியாபாரிகளாக வந்த குறைஷிகளில் சிலரிடையே நானும் ஷாம் நாட்டில் இருந்தேன். சீசருடைய தூதர் எங்களை ஷாமின் ஒரு பகுதியில் கண்டார். என்னையும் என் தோழர் களையும் அழைத்துச் சென்றார். நாங்கள் (அனைவரும்) ஈ-யாவை அடைந்தோம். நாங்கள் சீசரிடம் கொண்டு செல்லப் பட்டோம். அவர் தன் அரசவையில் கிரீடம் அணிந்தவராய் அமர்ந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிலும் ரோம நாட்டு ஆட்சியாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். தன் மொழி பெயர்ப் பாளரிடம் சீசர், தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வ-யுறுத்திக் கொண்டி ருக்கும் இந்த மனிதருக்கு இவர்களில் நெருங்கிய உறவினர் யார் என்று நீ அவர்களிடம் கேள் என்று கூறினார். (அவ்வாறே அவர் கேட்ட போது,) நான், இவர்களில் அவருக்கு நான் தான் நெருங்கிய உறவினன் என்று சொன் னேன். உடனே அவர், உமக்கும் அவருக்கு மிடையில் என்ன உறவு? என்று கேட்டார். நான், அவர் என் தந்தையின் சகோதரர் மகன் என்று கூறினேன். அந்த நேரத்தில் (எங்கள்) பயணக் குழுவில் (நபி யவர்களின் முப்பாட்டனார்) அப்து மனாஃபின் மக்களில் என்னைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை. உடனே சீசர், அவரை என்னருகில் கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு, என் தோழர்களை என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் அவ்வாறே என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கப்பட்டார்கள். பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், தன்னை நபி (இறைத் தூதர்) என்று

வ-யுறுத்திக் கூறும் இந்த மனிதரைக் குறித்து இவரிடம் நான் (விபரங்கள்) கேட்கப் போகிறேன் என்றும், இவர் பொய் சொன்னால் அதைப் பொய் என்று (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல் என்றும் சொன்னார். .....அல்லாஹ்வின் மீதாணையாக! என் தோழர்கள் என்னைக் குறித்து நான் பொய் சொன்னதாகத் தெரிவித்து விடுவார்களே என்னும் வெட்கம் மட்டும் எனக்கில்லாதி ருந்திருந்தால் நான் (முஹம்மத் (ஸல்)) அவர்களைப் பற்றி சீசர் என்னிடம் கேட்ட போது, அவரிடம் (அவர்களைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் தந்து) பொய் சொல்லியிருப்பேன். ஆனால், என்னைப் பற்றி நான் பொய் கூறியதாக அவர்கள் தெரிவித்து விடுவார்களே என்று நான் வெட்கப்பட்டேன். ஆகவே தான் (முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி) உண்மையைச் சொன்னேன்...... பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது என்று இவரிடம் கேள் என்று சொன்னார். நான், அவர் எங்களிடையே உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவராவார் என்று கூறினேன். அதற்கு அவர், உங்களில் எவரேனும் இதற்கு முன் (நான் நபி-இறைத் தூதர் என்னும்) இந்த வாதத்தை முன்வைத்திருக்கின்றாரா? என்று கேட்டார். நான், இல்லை என்று பதிலளித்தேன். அவர் இந்தப் பிரசாரத் தைச் செய்வதற்கு முன், (ஏதேனும் ஒரு விஷயத்தில்) பொய்யுரைத்ததாக நீங்கள் ஐயப்பட்டதுண்டா? என்று சீசர் கேட்க, நான் இல்லை என்றேன். சீசர், அவரது முன்னோர்களில் அரசர் எவராவது (வாழ்ந்து) சென்றிருக்கிறாரா? என்று கேட்டார். நான், இல்லை என்றேன். அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார். நான், அவர்களில் பலவீனர்கள்தான் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று கூறி னேன். அவர், அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கின்றார் களா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா? என்று கேட்டார். நான், அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர் என்று கூறினேன். பிறகு (அவரது மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு) தன் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் மதம் மாறிச் செல்வதுண்டா? என்று கேட்டார். நான், இல்லை என்றேன். அவர், அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா? என்று கேட்க, நான், இல்லை. ஆனால், நாங்கள் இப்போது அவருடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அவர் வாக்கு மீறி விடுவாரென்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று பதிலளித்தேன். ...இதைத் தவிர என்னை என் தோழர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களே என்று அஞ்சா மல் அவரைக் குறைசொல்லக் கூடிய வார்த்தை வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.... பிறகு அவர், நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டார். நான், உண்டு என்றேன். அதற்கு அவர், உங்க ளுக்கிடையிலான போர்(களின் முடிவு)கள் எவ்வாறிருந்தன? என்று கேட்டார். நான், அவை (அவற்றின் வெற்றியும் தோல்வியும்) எங்களிடையே சுழல்முறையில் மாறிமாறி வருகின்றன. ஒருமுறை அவர் எங்களை வெற்றி கொள்வார்; மறுமுறை அவரை நாங்கள் வெற்றி கொள்வோம் என்று பதிலளித்தேன். சீசர், என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடு கின்றார்? என்று கேட்டார். நான், அல்லாஹ்வை மட்டுமே நாங்கள் வணங்கி வர வேண்டுமென்றும் அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது என்றும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகின்றார். எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாது என்று எங்களைத் தடுக்கின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும் தான தருமம் செய்யும்படியும் கற்பைப் பேணி வரும்படியும் ஒப்பந்தத்தை நிறை வேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கபட்ட அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகத் திருப்பித் தரும்படியும்83 எங்களுக்குக் கட்டளையிடுகின்றார் என்று கூறினேன். நான் இதை சீசரிடம் சொன்ன போது அவர் தன் மொழி பெயர்ப்பா ளரிடம் கூறினார்: அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம், உங்களிடையே அவரது குலம் எப்படிப்பட்டது? என்று கேட்டேன். அவர் உயர்குலத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே, இறைத் தூதர்கள் தம் சமூகத்தில் நற்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவர். நான், இவருக்கு முன்னர் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா? என்று கேட்டேன். இல்லை என்று நீர் பதிலளித்தீர். இவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன்

வைத்திருந்ததாக நீர் சொல்லியிருந்தால், தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றச் சொல்கின்ற ஒரு மனிதர் இவர் என்று நான் சொல்லியிருப்பேன். அவர் இந்த வாதத்தை முன் வைப்பதற்கு முன்பு, அவர் பொய் சொன்னதாக நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், இல்லை என்று பதிலளித்தீர். (அதிலிருந்து) மக்களிடம் பொய் சொல்ல(த் துணியாத‌ அவர், அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல(த் துணிய) மாட்டார் என்று புரிந்து கொண்டேன். அவரது முன்னோர்களிடையே அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், இல்லை என்றீர். அவரது முன்னோர் களிடையே அரசர் எவரும் இருந்திருப் பாராயின், தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும்) அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று நான் கூறியிருப்பேன். மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்று கின்றார்களா? மக்களிடையேயுள்ள பலவீனர்கள் பின்பற்றுகிறார்களா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். அவர்கள் தாம் (எப்போதும்) இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின் றனரா? குறைந்து கொண்டே வருகின்றனரா? என்று நான் கேட்டேன். அதற்கு நீர், அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்து கொண்டே செல்லும்.) அவரது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளி யேறிச் செல்வதுண்டா? என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், இல்லை என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையதே. அதன் எழில், இதயங்களில் கலக்கும் போது அதைக் குறித்து எவருமே அதிருப்தி யடைய மாட்டார். அவர் வாக்கு மீறுவாரா? என்று நான் உம்மைக் கேட்டதற்கு நீர், இல்லை என்று பதிலளித்தீர். இறைத் தூதர்கள் இத்தகைய வர்களே. அவர்கள் வாக்கு மீறுவதில்லை. மேலும், நான், நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர், போர் புரிந்ததுண்டு என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் (முடிவுகளான வெற்றியும் தோல்வியும்) மாறி மாறி (சுழன்று) வந்து கொண்டிருக்கும் என்றும், ஒருமுறை உங்களுக்கு வெற்றி கிடைத்தால் மறு முறை அவருக்கு வெற்றி கிடைக்கும் என்றும் பதிலளித்தீர். இப்படித் தான் இறைத் தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். உங்களுக்கு அவர் என்ன கட்டளையிடுகின்றார்? என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், அல்லாஹ்வை வணங்கும்படியும் அவனுக்கு எதனையும் இணையாக்காமல் இருக்கும்படியும் கட்டளையிடுகிறார் என்றும் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்தவற்றை நீங்கள் வணங்க வேண்டா மென்று உங்களைத் தடுக்கிறார் என்றும், தொழுகையை(நிலை நிறுத்தும்படி)யும் வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும்படியும் ஒப்பந்தங்களைச் சரிவர நிறைவேற்றும்படியும் அடைக் கலப் பொருளைப் பாதுகாப்பாகச் திருப்பித் தரும்படியும் அவர் உங்களுக் குக் கட்டளையிடுகின்றார் என்றும் பதிலளித்தீர். எந்த இறைத்தூதர் வர விருப்பதாக நான் அறிந்திருந்தேனோ அவருடைய பண்புகள் இவை தாம். ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் அறிந்திருக்கவில்லை. நீர் சொல்வது உண்மையாயிருப்பின், எனது இவ்விரு பாதங்கள் பதிந்துள்ள இந்த இடத்திற்கு விரைவில் அவர் அதிபதி யாவார். நான் அவரைச் சென்றடைய முடிந்தால் நிச்சயம் நானே வ-யச் சென்று அவரைச் சந்திப்பேன். அவரிடத்தில் நான் இருந்திருப்பேனாயின் அவரது கால்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினார். பிறகு, சீசர் அல்லாஹ்வின் தூதருடைய கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டதும்) அது அவருக்குப் படித்துக் காட்டப்பட்டது.

அதில் பின்வருமாறு கூறப்பட்டி ருந்தது:

அளவற்ற அருளாளன், கருணை யன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்....இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்.)

நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும். நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்கும்படி அழைக்கின்றேன். இஸ் லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் (நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக) உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரு மடங்காகத் தருவான். நீங்கள் புறக் கணித்தால், உங்கள் குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்க ளையே சேரும்.

வேதம் வழங்கப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு கொள்கையின் பக்கம் வாருங்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் நாம் வணங்க மாட்டோம். எதனையும் (எவரையும்) அவனுக்கு இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டு விட்டு நம்மில் ஒருவர், மற்றவரைக் கடவுள்களாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் (என்பதே அந்தக் கொள்கை.)

அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், நாங்கள் முஸ்லிம்கள்(அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள் என்று (அவர் களிடம்) கூறிவிடுங்கள். (3:64)

சீசர் தன் கூற்றைச் சொல்லிமுடித்தவுடன் அவரைச் சுற்றிலுமிருந்த ரோம நாட்டு (பைஸாந்திய) ஆட்சியாளர் களின் குரல்கள் உயர்ந்து அவர்களுடைய கூச்சல் அதிகரித்தது. அதனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நான் அறிய முடியாமல் போய்விட்டது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. நாங்கள் (சீசரின் அவையிலிருந்து) வெளியேற்றப் பட்டோம். என் தோழர்களுடன் வெளியே வந்து அவர்களுடன் தனிமையில் (பேசியபடி) இருந்த போது நான், இப்னு அபீகப்ஷா84 (முஹம்மது)வின் விவகாரம் வ-மை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் மன்னனான இவனே அவருக்கு அஞ்சுகின்றானே என்று கூறினேன். (அன்றிலிருந்து) இறைவன் மீதாணையாக! நான் அடங்கிப் போனேன். இவரது மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதியாக எண்ணியவனாகவே இருந்து வந்தேன். அதற்குள், இஸ்லாத்தை நான் வெறுத்த போதிலும் அல்லாஹ் என் உள்ளத்தில் அதைப் புகுத்தி விட்டான்.85

2942 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கின்றானோ அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன் என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ எங்கே? என்று கேட்டார்கள். அவருக்குக் கண்வ- என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தமது) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வ- எதுவுமே இல்லா திருந்ததைப் போல் குணமாகி விட்டது. உடனே, அலீ (ரலி) அவர்கள், நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர் களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.

2943 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.

2944 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் புனிதப் போர் புரியச் சென்றால்.... (என்று தொடங்கும் ஹதீஸ்86)

2945 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார் களாயின் காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்.... அவ்வாறே காலை யானதும் யூதர்கள் தம் மண்வெட்டி களையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். நபி (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்த போது, முஹம்மதும் (அவரது) படையும் (வந்துள்ளனர்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட (வர்களான அந்தச் சமுதாயத்த) வர்களுக்கு அது மிகக் கெட்ட காலை யாகும்என்று கூறினார்கள்.

2946 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வணக்கத்திற்குரியவன் (இறைவனான) அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று கூறுகின்ற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட் டுள்ளேன். எவர், லாஇலாஹ இல்லல் லாஹ்- வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்று கூறுகிறாரோ அவர் தன் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்; (அவரது உயிர் உடைமையைப் பறித்திட வேறு) நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவருடைய மற்ற செயல்களுக்குக்) கணக்கு வாங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே நபிமொழியை உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக் கிறார்கள்.

பாடம் : 103

புனிதப் போருக்குச் செல்ல நாடி வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்.

2947 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு(தலைமை தாங்கி)ச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்.

தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் விவரித்த போது இதை அவர்கள் கூற நான் கேட்டேன் என்று - கஅப் (ரலி) அவர்கள் முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த - அவர் களின் மகன் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2948 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு(த் தலைமை யேற்று)ச் செல்ல நாடினால் பெரும் பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயி-ல் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் (பாலைவன) வனாந்தரப் பகுதியைக் கடந்துசெல்வதையும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தம் எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப் படையாக உணர்த்திவிட்டார்கள்.

முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பிய (தபூக்) திசையை அவர்களுக் குத் தெரிவித்தும் விட்டார்கள்.

2949 அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை கஅப் பின் மாலிக்

(ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக் கிழமையன்று தான் புறப்படுவார்கள் என்று கூறி வந்தார்கள்.

2950 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்று தான் புறப்பட் டார்கள். வியாழக்கிழமையன்று (பயணம்) புறப்படுவதை அவர்கள் விரும்பி வந்தார்கள்.

பாடம் : 104

லுஹர் தொழுகைக்குப் பிறகு பயணம் புறப்படுவது.

2951 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தமது ஹஜ்ஜின் போது) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்துகளாகவும் அஸர் தொழுகையை துல் ஹுலைஃபா என்னுமிடத்தில் இரண்டு ரக்அத்து களாகவும் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் (தல்பியாவை) உரக்கக் கூறுவதை நான் செவியுற்றேன்.87

பாடம் : 105

மாதக் கடைசியில் பயணம்

புறப்படுவது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜுக்காக) மதீனாவிலிருந்து துல்

க அதா மாதம் முடிவடைய ஐந்து நாட்கள் எஞ்சியிருந்த போது புறப்பட்டு, துல் ஹஜ் ஜின் நான்கு நாட்கள் கழிந்த போது மக்கா நகருக்கு வந்தார்கள்.88

2952 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் துல் கஅதா மாதத்தில் ஐந்து நாட்கள் எஞ்சியிருந்த போது (துல் கஅதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் கஅபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வா வுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, நஹ்ருடைய (துல்ஹஜ் 10ம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டது. நான், இது என்ன? என்று கேட்டேன். மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் மனைவியரின் சார்பாக (தியாகப் பிராணியை) அறுத்து பலியிட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.89

பாடம் : 106

ரமளான் மாதத்தில் பயணம் புறப்படுவது.

2953 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) ரமளான் மாதத்தில் பயணம் புறப்பட்டார்கள். அப்போது நோன்பு நோற்றிருந்தார்கள். கதீத் என்னுமிடம் வந்த பின் நோன்பை விட்டு விட்டார்கள்.90

பாடம் : 107

விடை பெறுவதும் வழியனுப்புவதும்

2954 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் - என்று குறைஷிகளில் இருவரைப் பெயர் குறிப்பிட்டு- அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள் என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் பயணம் புறப்பட முனைந்த போது நபி (ஸல்) அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளப் போனோம். அப்போது அவர்கள், நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப் பால் எரித்து விடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதால், நீங்கள் அவ்விருவரையும் கண்டால் (நெருப்பால் எரிக்க வேண்

டாம்;) கொன்று விடுங்கள் என்று கூறினார்கள்.91

பாடம் : 108

தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது.

2955 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ் வுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 109

தலைவருக்குக் கீழிருந்து போரிடுவதும், அவர் மூலம் பாதுகாப்புப் பெறுவதும்.

2956 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உலகில்) கடைசியானவர் களான நாமே (மறுமையில்) முந்தியவர்கள் என்று கூற நான் கேட்டேன்.92

2957 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந் தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக் கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்.

பாடம் : 110

போரில் பின்வாங்கி ஓடக் கூடாது என்று உறுதிமொழி வாங்குவது.

சிலர்,போரில் மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக உறுதி மொழி வாங்குவது என்றும் அறிவித்

துள்ளனர்.

ஏனெனில், (நபியே!) நம்பிக்கையாளர்கள் உங்களிடம் (குறிப்பிட்ட) மரத்திற்குக் கீழே உறுதிமொழியளித்த போது அவர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தி கொண்டான் (48:18) என்று இறைவன் (பொதுவாகவே) கூறு கின்றான்.93

2958 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஹுதைபிய்யா உடன் படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி (ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொண்டோமோ அந்த மரம் இது தான் என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்விடமிருந்து (அவனது) கருணை பொழிந்த இடமாக இருந்தது.

அறிவிப்பாளர் ஜுவைரிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இப்னு உமர் (ரலி) அவர்களிட மிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் நாங்கள், எதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார்கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதற்காகவா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், இல்லை. ஆனால், (நிலைகுலைந்து போகாமல்) பொறுமையாக இருக்கும்படி தான் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

2959 அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹர்ராபோரின்94 போது என்னி டம் ஒருவர் வந்து, அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள், மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள் என்று கூறினார். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு(ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவ ரிடமும் இதற்காக நான் உறுதி மொழியளிக்க மாட்டேன்என்று கூறினேன்.

2960 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன் என்று) நபி (ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழ-ல் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்த போது நபி (ஸல்) அவர்கள், அக்வஃ உடைய மகனே! (சலமாவே!) நீ உறுதிமொழியளிக்க வில்லையா?என்று கேட்டார்கள். நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட் டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மீண்டும் (அளிப்பீராக!) என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழி யளித்தேன்.

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடம்) நான், அபூ முஸ்-மே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழி யளித்தோம் என்று பதிலளித்தார்கள்.

2961 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்திருக்கின்றோம் என்று பாடிய வண்ணம் (அகழ் தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. ஆகவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கின்ற மதீனாவாசி களான) அன்சாரிகளையும் (மக்கா வாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக! என்று (பாட-லேயே) பதிலளித்தார்கள்.

2962 & 2963 முஜாஷிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சகோதரரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், ஹிஜ்ரத் செய்ய (மார்க்கத்திற்காகத் தாயகம் துறக்க) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்து விட்டது (இஸ்லாம் மேலோங்கி விட்டதால் இனி அது தேவையில்லை) என்று பதிலளித்தார்கள். நான், (இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தைச் செயல்படுத்துவதற்காகவும் (இறைவழியில்) அறப்போர் புரிவதற்காகவும் (உறுதிமொழி வாங்கு வேன்) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 111

மக்களால் செய்ய முடிந்ததையே தலைவர் கட்டளையிட வேண்டும்.

2964 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

இன்று என்னிடம் ஒரு மனிதர் வந்து, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகின்றார் எனில் அவர் என்ன செய்வது? என்று கேட்டார். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தர விடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.) உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக் கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய(தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும். எவனைத் தவிர வணக்கத்திற் குரியவர் வேறெவரும் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று) விட்ட ஒரு குட்டை

யாகவே நான் கருதுகின்றேன் என்று கூறினேன்.

பாடம் : 112

நபி (ஸல்) அவர்கள் முற்பக-ல் போரிட வில்லையென்றால் சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை போரைத் தள்ளிப் போட்டு விடுவார்கள்.

2965 உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாகவும் அவர் களுடைய எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க் களத்தில் சந்தித்த நாட்களில் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

2966 பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப் படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

பாடம் : 113

(போரிலிருந்து திரும்பிச் செல்லவோ, போரில் கலந்து கொள்ளாமலிருக்கவோ) ஒருவர் தலைவரிடம் அனுமதி கேட்பது.

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வையும் அவனது திருத் தூதரையும் (மனப்பூர்வமாக) நம்பி, ஒரு பொதுப்பணிக்காக இறைத்தூதருடன் இருக்கும் போது அவரிடம் அனுமதி பெறாத வரை (அவரைப் பிரிந்து) செல்லா மலிருப்பவர்களே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள். நபியே! உங்களிடம் அனுமதி கேட்பவர்கள் தாம், அல்லாஹ் வையும் அவனுடைய தூதரையும் உண்மையாக ஏற்றுக் கொண்டவர்கள். எனவே, அவர்கள் தமது தேவை எதற்காவது உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களில் நீங்கள் விரும்பிய வருக்கு அனுமதியளியுங்கள்! மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் கோருங்கள்! நிச்சயமாக, அல்லாஹ் மிகவும் மன்னிக்கக் கூடிய வனாகவும் கிருபை நிறைந்தவனாகவும் இருக்கின்றான். (24:62)

2967 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான், களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க் கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை (வழியில்) வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், உன் ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான், அது களைப்படைந்து விட்டது என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக துஆ செய்தார்கள். உடனே அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக் கொண்டு செல்லத் தொடங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், உன் ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறாய்? என்று கேட்டார்கள். நான், நல்ல நிலையில் காண்கிறேன். அது தங்களுடைய பரக்கத்தைப் பெற்றுக் கொண்டு விட்டது என்று சொன்னேன். உடனே அவர்கள், நீ அதை எனக்கு விற்று விடுகிறாயா? என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், சரி (விற்று விடுகிறேன்) என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், அப்படியாயின் அதை எனக்கு விற்று விடு என்று கூற, நான் அதன் மீது சவாரி செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனுமதிக்கவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்று விட்டேன். நான் அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி யளித்தார்கள். ஆகவே, நான் மற்ற மக்களை விட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்து விட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து பின் கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்று விட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண் டாயா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள்...அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள்.95 ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவ முள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன் என்று பதிலளித்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்த போது காலையில் ஒட்டகத்துடன் அவர்கள் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

(மதீனா வரை சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நமது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அறிஞர் முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

பாடம் : 114

திருமணமான புதிதில் புனிதப் போருக்குச் செல்வது.

இது குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.96

பாடம் : 115

(மனைவியுடன்) வீடு கூடிய பின்பு புனிதப் போருக்குச் செல்ல முனைதல்.

இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.97

பாடம் : 116

(எதிரிகளின் படையெடுப்புப் பற்றி மக்கள்) பீதிக்குள்ளாகும் போது (அவர்களை அமைதிப்படுத்தவும் அவர்களுக்குப் பாதுகாப்புத் தரவும்) தலைவர் விரைந்து செல்லுதல்.

2968 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விபரமறிந்து வரப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், (பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேக மாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம் என்று கூறினார்கள்.98

பாடம் : 117

பீதி நிறைந்த நேரத்தில் (வாகனத்தில்) விரைந்து செல்வதும், அதை உதைத்துப் பாய்ந்தோடச் செய்வதும்.

2969 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக் கூடிய குதிரை ஒன்றில் ஏறிக் கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப் பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் பாய்ந்து (வாகனங்களில்) ஏறிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், பீதியடையாதீர்கள். (பீதி யடையும்படி யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக உள்ளது என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிந்ததில்லை.

பாடம் : 118

பீதி நிறைந்த நேரத்தில் தனியாகப் புறப்படுதல்.99

பாடம் : 119

இறைவழியில் (தன் சார்பாகப்) போரிடுவதற்காக ஒருவருக்குக் கூலிகொடுப்பதும் பயண மூட்டைகளைச் சுமக்கும் வாகனங்களைக் கொடுத் தனுப்புவதும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், நான் புனிதப் போருக்குச் செல்ல விரும்புகிறேன் என்று கூறினேன். அவர்கள், நான் என் செல்வத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து உனக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினார்கள். நான்,அல்லாஹ் எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றான் (அதுவே, எனக்குப் போதும்) என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், உனது செல்வம் உனக்குரியது. நான் இந்த வகையில் என் செல்வத்(தில் ஒரு பாகத்)தைச் செலவிடவேண்டுமென்று விரும்புகிறேன் என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள்,மக்கள் சிலர் இந்த (பைத்துல் மால்-அரசுக் கருவூலத்தின்) செல்வத்திலிருந்து அறப்போர் புரிவதற்காக (உதவித் தொகையை) எடுத்துக் கொண்டு பிறகு அறப்போர் புரிவதில்லை. இத்தகையவர் பெற்ற பணத்தை, அவருடைய செல்வத்திலிருந்து நாம் எடுத்துக் கொள்ள நமக்கு (முழு) உரிமையுண்டு என்று கூறினார்கள்.

தாவூஸ் (ரஹ்) அவர்களும் முஜாஹித் (ரஹ்) அவர்களும், உன்னிடம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப்) புறப்பட உதவும் செல்வம் ஏதும் கொடுக்கப்பட்டால் அதை நீ விரும்பியபடி (போருக்குப்) பயன்படுத்திக் கொள். அதை உன் வீட்டாரிடமும் நீ கொடுக்கலாம் என்று (மார்க்கத் தீர்ப்பு) கூறினர்.

2970 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தேன். (அவர் பயணம் செய்ய ஒரு குதிரையை இலவசமாகத் தந்துதவினேன்.) பிறகு அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி (ஸல்) அவர்களிடம், நான் அதை வாங்கட்டுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள் என்று கூறினார்கள்.100

இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2971 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தார்கள். பிறகு, அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்என்று கூறி விட்டார்கள்.

2972 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால் நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட் டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மனவேதனை யளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்பு கிறேன்.101

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 120

(அறப்போரில் உதவி புரிய அமர்த்தப்பட்ட) கூலியாள்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களும் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களும் (அறப்போரில் உதவும்) கூலியாளுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து பங்கு தரப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதிய்யா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் ஒரு குதிரையை அதற்கு (போரில் கிடைக்கும் செல்வத்திலிருந்து) தரப்படும் பங்கில் பாதியைத் தந்து விடுவதாகக் கூறி (வாடகைக்கு) எடுத்தார்கள். அந்தக் குதிரைக்கு நானூறு தீனார் பங்கு கிடைத்தது. இரு நூறு தீனார்களைத் தாம் எடுத்துக் கொண்டு குதிரையின் உரிமையாளருக்கு இருநூறு தீனார்களைக் கொடுத்தார்கள்.

2973 யஃலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப் போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல் களிலேயே உறுதியானதாக என் மனத்தில் நான் கருதுகின்றேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்து விட்டார். கடி பட்டவர் தனது கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவிக் கொண்டார் அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கி விட்டார். பல் பிடுங்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்குத் தொடுத்தார்.) அதற்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, நீ ஒட்டகம் மெல்வது போல் மென்று கொண்டிருக்க, அவர் தன் கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப் பாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

பாடம் : 121

நபி (ஸல்) அவர்களின் கொடி.

2974 சஅலபா பின் அபீ மாலிக் அல் குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கொடியை எடுத்துச் செல்பவராயிருந்த கைஸ் பின் சஅத் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பிய போது தலைவாரிக் கொண்டார்கள்.

2975 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வ- ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத் துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ, அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார் என்றோ அல்லது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ சொல்லி விட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க் காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

2976 நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸுபைர் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜூன் என்னுமிடத்தைச் சுட்டிக் காட்டி), நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்குதான் கொடியை நடச் சொன்னார்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 122

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாத காலப் பயணத் தொலை வுக்கு(ள் இருக்கும் நிராகரிப்பாளர் களின் உள்ளங்களில் என்னைக் குறித்த) அச்ச உணர்வை விதைத்து அல்லாஹ் எனக்கு உதவி புரிந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:

(சத்தியத்தை) நிராகரித்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், (இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும்) எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் தரவில்லையோ அவற்றை அவனுடன் அவர்கள் இணையாக்கி விட்டார்கள். (3:151)

ஜாபிர் (ரலி) அவர்கள் (இதுபற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித் துள்ளார்கள்.102

2977 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள் களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன்.103 (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டு, நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நீங்கள் அந்தக் கரூவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக் கிறீர்கள் என்று சொன்னார்கள்.

2978 அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஈ-யா (ஜெரூசலம்) நகரில் இருந்த போது ரோம (பைஸாந்தியப்) பேரரசர் ஹெராக்ளியஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர்களிடையே) கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அதிகரித்து விட்டது. குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப் பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், அபூகப்ஷாவின் மகனுடைய (முஹம்மதுடைய) அந்தஸ்து உயர்ந்து விட்டிருக்கின்றது. மஞ்சள் நிறத்தவரின் (கிழக்கு ஐரோப்பியர்களின்) அதிபர் (கூட) அவருக்கு அஞ்சுகிறார் என்று கூறினேன்.104

பாடம் : 123

புனிதப் போர் புரியச் செல்பவருக்குப் பயண உணவை எடுத்துச் செல்லுதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் ஹஜ்ஜுக்காக (உணவு போன்ற) பயணச் சாதனங்களைச் கொண்டு செல்லுங்கள். எனினும், (அத்தகைய) பயணச் சாதனங்களில் மிக மேலானது இறை(யச்ச) உணர்வுதான். (2:197)

2979 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முனைந்த போது, அவர்களுடைய பயண உணவை நான் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களுடைய பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறினேன். அதற்கு அபூபக்ர்

(ரலி) அவர்கள், அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் (தண்ணீருக்கான) தோல்பையையும் மற்றொன்றினால் பயண உணவையும் கட்டு என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால் தான் எனக்கு இரட்டைக் கச்சுக்காரர் என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டது.

2980 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் மதீனா நகருக்குச் செல்லும் போது குர்பானி (தியாகப் பிராணியின்) இறைச்சிகளைப் பயண உணவாக எடுத்துச் செல்வோம்.

2981 சுவைத் பின் நுஃமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் ஸஹ்பா எனுமிடத்தில் - இதுவும்

கைபர் பகுதிக்கு உட்பட்டதே- இருந்த போது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்குக் மாவு மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம்.105

2982 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களுடைய பயண உணவுகள் தீர்ந்து போய் வறுமை வாய்ப்பட்டார்கள்; ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். மக்களை (அவர்கள் திரும்பிச் செல்லும் போது வழியில்) உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். மக்கள் உமர்

(ரலி) அவர்களுக்கு விபரத்தைத் தெரிவிக்கவே உமர் (ரலி) அவர்கள், உங்கள் ஒட்டகங்கள் (அறுத்து உண்ணப்பட்டுப்) போன பிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி? என்று கேட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் ஒட்டகங் களை அறுத்து உண்ட பின்பு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி? என்று கேட் டார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்கள் பயணச் சாதக் கட்டுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டுவரும்படி மக்களிடையே கூவி அழையுங்கள் என்று கூறிவிட்டு (அவையெல்லாம் கொண்டு வரப்பட்ட வுடன்) அவற்றில் இறைவனின் பரக்கத் (எனும் அருள்வளத்)திற்காக துஆ செய்தார்கள். பிறகு, மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி அழைத்தார்கள். மக்கள் தங்கள் (கைகளால்) திருப்தியடையும் வரை அள்ளிக் கொண்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன் என்று சொன்னார்கள்.106

பாடம் : 124

பயண உணவை (வாகனத்தின் மீது வைத்து எடுத்துச் செல்ல முடியாத போது) தோள்களின் மீது வைத்து எடுத்துச் செல்வது.

2983 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரிகளில் சுமந்து கொண்டு (புனிதப் போருக்காகப்) புறப்பட்டோம். எங்கள் பயண உணவு (நாளாக, ஆகக்) குறையலாயிற்று. எந்த அளவிற்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம் ....இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்த போது ஒரு மனிதர், அபூ அப்தில்லாஹ்வே! (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்? என்று கேட்டார்.... நாங்கள் பயண உணவை இழந்த போது மிகவும் கவலையடைந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்த போது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கண்டோம். கடல் அதை (கரையில்) எறிந்து விட்டிருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாட்கள் நாங்கள் விரும்பியவாறு உண்டோம்.107

பாடம் : 125

ஒரு பெண், (வாகனத்தில்) தன் சகோதரனுக்குப் பின்னால் அமர்ந்து செல்வது.

2984 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்ற போது நான், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் தோழர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜை விட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!என்று (ஏக்கத்துடன்) கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீ (உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தனக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட் டும்என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை தன்யீம் என்னுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்கள். நான் (உம்ராவை நிறைவேற்றி விட்டுத் திரும்பி) வரும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்திருந்தார்கள்.108

2985 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு,தன்யீம் என்னு மிடத்திலிருந்து அவர்களை உம்ரா செய்ய அழைத்துச் செல்லும்படி நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

November 2, 2009, 9:42 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்4

பாடம் : 75

(புனிதப் போருக்காக) கடல் பயணம் செய்தல்.

2894 & 2895 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டில் மதிய ஓய்வு எடுத்தார்கள்; (உறக்கத்திலிருந்து) சிரித்தபடியே விழித்துக் கொண்டார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கின் றீர்கள்? என்று கேட்டார்கள். என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் அரசர்கள் கட்டில்களில் அமர்ந்திருப் பதைப் போல் கடல் பயணம் செய்வதை (கனவில்) கண்டு நான் வியந்தேன். (அதனால் தான் சிரிக்கின்றேன்) என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய் யுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று கூறினார்கள். மீண்டும் உறங்கி, சிரித்தபடியே விழித் தெழுந்தார்கள். (முன்பு உறங்கியதைப் போலவே உறங்கி விழித்தெழுந்து) முன்பு கூறியதைப் போலவே இரண்டு அல்லது மூன்றுமுறை கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் என்று கூற, நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (புனிதப் போருக்காகப் பயணம் செய்யும்) முதல் (படைக்) குழுவினரில் ஒருவராவீர்கள் என்று கூறினார்கள். பிறகு உம்மு ஹராம் (ரலி) அவர்களை உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். பின்னர், அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு (கடல் பயணம் செய்து) புனிதப் போருக்குச் சென்றார்கள். திரும்பி வரும் போது உம்மு ஹராம்

(ரலி) அவர்கள் ஏறி அமர்வதற்காக வாகனம் (கோவேறுக் கழுதை) ஒன்று அருகில் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் (அதிலிருந்து தவறிக்) கீழே விழுந்து அவர்களுடைய கழுத்து முறிந்து விட்டது. (அதனால் அவர்கள் இறந்து விட்டார்கள்.)

பாடம் : 76

போரின் போது பலவீனர்கள் மற்றும் நல்லவர்களின் காரணத்தால் உதவி பெறுவது.

 அபூ சுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ரோமப் பேரரசர்) சீசர், நான் உங்களிடம், அந்த நபியை மக்களில் உயர்வகுப்பினர் (வசதி வாய்ப்பும் அதிகாரமும் பெற்றுள்ள மேல்தட்டு மக்கள்) பின்பற்றுகிறார்களா? பலவீனர் களான (ஒடுக்கப்பட்ட) மக்கள் பின்பற்று கின்றார்களா? என்று கேட்டதற்கு, பலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள் தான் (அவர்களைப் பின்பற்றுகிறார்கள்) என்று பதிலளித்தீர். (எப்போதும்) அவர்கள் தாம் இறைத் தூதர்களைப் பின்பற்றக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்.53

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2896 முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள், (தம்முடைய வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், உங்களிடையே யுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகின்றது என்று கூறினார்கள்.

2897 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கின்ற ஒரு காலம் வரும். அப்போது, நபி (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கின்றார்களா? என்று கேட்கப்படும். அதற்கு, ஆம் (இருக்கின்றார்கள்) என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக் கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, நபி (ஸல்) அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் உங்க ளிடையே இருக்கின்றார்களா? என்று கேட்கப்படும். அதற்கு, ஆம் (இருக்கின்றார்கள்) என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றி யளிக்கப்படும். பிறகு இன்னுமொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் புனிதப் போருக்காகச் செல்வார்கள்.) அப்போது, நபித்தோழர்களின் தோழருடன் தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா? என்று கேட்கப்படும். அதற்கு, ஆம் (இருக் கின்றார்கள்) என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.

இதை அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 77

ஒருவரைக் குறித்து இன்னார் ஷஹீத் (இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர்) என்று சொல்லக் கூடாது.

தன் பாதையில் அறப்போர் புரிபவர் யார் என்பதை அல்லாஹ்வே நன் கறிந்தவன். தன் பாதையில் காயமடைபவர் யார் என்பதையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

2898 சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண் டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்து விட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி அவர் நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப் படைந்தனர். நான் (மக்களிடம்), உங்க ளுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப் பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்பு களுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னார்கள்.

பாடம் : 78

அம்பெய்யும் கலையைக் கற்றுக் கொள்ளும்படி தூண்டுதல்.

 அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வ-மையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படை யையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாக, நீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர் களையும் பீதிக்குள்ளாக்கலாம். (8:60)

2899 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இஸ்மாயீ-ன் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன் என்று கூறினார்கள். உடனே, இரு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக் கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்? என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கின் றேன். நீங்கள் அம்பெய்யுங்கள் என்று கூறினார்கள்.

2900 அபூ உஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின் போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்ற போது நபி (ஸல்) அவர்கள், (குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 79

ஈட்டி, வேல் போன்றவற்றால் (வீர விளையாட்டுக்கள்) விளையாடுவது.

2901 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தி யோப்பியர்கள்) நபி (ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளை யாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உமரே! அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், இந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது என்று வந்துள்ளது.55

பாடம் : 80

கேடயமும் மற்றவரின் கேடயத்தால் தன்னைத் தற்காத்துக் கொள்வதும்.

2902 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ தல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் தம்மை ஒரே கேடயத்தைக் கொண்டே தற்காத்துக் கொள்வார்கள்.56 அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நன்கு அம்பெய்யக் கூடியவர் களாக இருந்தார்கள். அவர்கள் அம் பெய்தால் நபி (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, அவர்களுடைய அம்பின் இலக்கைப் பார்ப்பார்கள்.

2903 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர் களுடைய தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களுடைய (முன்வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டுவிட்ட போது, அலீ (ரலி) அவர்கள் (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி (ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்திவிட, இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

2904 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை யாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை.57 ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்துவந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான)ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.

2905 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. சஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பண மாகட்டும் என்று கூறியதை நான் கேட்டேன்.

பாடம் : 81

தோல் கேடயம்

2906 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ்58 போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக் கொண்டார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்க வில்லை.) அப்போது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைக் கருவியா? என்று கடிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, அவர்களை (பாட) விடுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பி விட்ட போது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறி விட்டார்கள்.59

2907 மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்று ஈத் (பெரு நாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளை யாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், நீ இவர்களுடைய (வீர விளையாட்டைப்) பார்க்க விரும்பு கிறாயா? என்று கேட்டிருக்க வேண்டும். நான், ஆம் என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர் களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்துக் கொண்டார்கள். அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பி யர்களே!) விளையாட்டைத் தொட ருங்கள் என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து)

ச-ப்புற்று விட்ட போது, போதுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், ஆம், போதும் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அப்படியானால் நீ போ! என்று கூறினார்கள்.60

பாடம் : 82

வாட்களைத் தொங்க விடும் தோல்வார் களும் கழுத்தில் வாளைத் தொங்க விடுவதும்.

2908 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர் களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், பயப்படாதீர்கள். பயப் படாதீர்கள் என்று கூறிக் கொண் டிருந்தார்கள். பிறகு, நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம் என்று கூறினார்கள். அல்லது, இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது என்று கூறினார்கள்.

பாடம் : 83

வாட்களை அலங்கரிப்பது.

2909 அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு சமுதாயத்தினர் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர் களுடைய வாட்கள் தங்கத்தாலோ வெள்ளியாலோ அலங்கரிக்கப்பட்டிருக்க வில்லை. அவர்களுடைய (வாட்களின்) ஆபரணங்களெல்லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல் முனையில் சுற்றி வைக்கப்படும்) பச்சைத் தோல், ஈயம் மற்றும் இரும்பு ஆகியன தாம்.

பாடம் : 84

பிரயாணத்தில் மதிய ஓய்வின் போது வாளை மரத்தில் தொங்க விடுவது.

2910 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன்.61 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர் களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்த போது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்து விட்டது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்த போது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்? என்று கேட்டார். நான் அல்லாஹ் என்று (மூன்றுமுறை) கூறினேன் என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும்கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

பாடம் : 85

தலைக் கவசம் அணிவது.

2911 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி உஹுதுப் போரின் போது என்னிடம் கேட்கப்பட்டது. நான், நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத் தப்பட்டது. அவர்களுடைய (முன் வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டது. (அவர்களுடைய) தலைக் கவசம் அவர்களுடைய தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்த போது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்று விட்டது என்று கூறினேன்.62

பாடம் : 86

(தலைவர்களின்) மரணத்தின் போது ஆயுதங்களை உடைப்பது (மற்றும் வாகனப் பிராணியை அறுப்பது) சரியல்ல!63

2912 அம்ரு பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறக்கும் போது தமது ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் அவர்கள் விட்டுச் செல்ல வில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தருமமாக ஆக்கிவிட்டிருந்தார்கள்.64

பாடம் : 87

மதிய ஓய்வின் போது தலைவரைப் பிரிந்து மரத்தின் நிழ-ல் மக்கள் தங்குவது.

2913 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு புனிதப் போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்த போது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்தது. மக்கள் அந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்க விட்டார்கள். பிறகு தூங்கி விட்டார்கள். பிறகு கண்விழித்த போது நபியவர் களுக்கே தெரியாமல் அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். (அவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள், இந்த மனிதர் என் வாளை உருவிக் கொண்டு, உன்னை (என்னிடமிருந்து) பாதுகாப்பவர் யார்? என்று கேட்டார். நான், அல்லாஹ் என்று பதிலளித்தேன். உடனே, வாளை உறையில் போட்டுக் கொண்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரை தண்டிக்கவில்லை.65

பாடம் : 88

ஈட்டியின் சிறப்பு பற்றி.....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2914 அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப் போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டு என் சகாக்களிடம் எனது சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்து விட்டார்கள். எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி அவர்களிடம் கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு நானே அதை எடுத்துக் கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்று விட்டேன். நபித் தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் இறைச்சியை உண்டார்கள். மற்றும் சிலர் உண்ண மறுத்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அடைந்த பொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும் என்று பதிலளித்தார்கள்.66

மற்றோர் அறிவிப்பில், அதன் இறைச்சியில் மீதம் ஏதும் உங்களிடம் உண்டா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று காணப்படுகிறது.

பாடம் : 89

நபி (ஸல்) அவர்களுடைய கவச உடை மற்றும் போரின் போது அவர்கள் அணிந்த சட்டை.

கா-த், தமது கவச உடைகளை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.67

2915 நபி (ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகின்றேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்

லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்) என்று (முஸ்

லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு, போதும், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும் என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (54:45,46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில், பத்ருப் போரின் போது என்னும் வாசகம் அதிகப் படியாக இடம் பெற்றுள்ளது.

2916 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 தமது போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், இரும்புக் கவசம் என்றும் இன்னோர் அறிவிப்பில், இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

2917 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

(தருமம் செய்யாத) கஞ்சனுக்கும் தருமம் செய்பவனுக்கும் உவமை, இரும்பு அங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களுடைய கைகள் அவர் களின் கழுத்தெலும்புகளோடு ஒட்டியிருக்கும். (அந்த அளவிற்கு அவை இறுக்கமானவை.) தருமம் செய்பவர் தருமம் செய்ய நாடும் போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விசாலமாகி விடுகின்றது. எந்த அளவிற் கென்றால் அவர் (நடந்து செல்லும் போது அது நீண்டு) அவரது பாதச் சுவட்டை அது அழித்து விடுகின்றது. (அதாவது, தருமம் அவரது குற்றங்குறைகளை மறைத்து விடுகின்றது.)கஞ்சன் தருமம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனது இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகின்றது; அவனை (தன் பாரத் தால்) அழுத்துகின்றது. அவனது இரு கைகளும் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.68

(இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

 (இதை அறிவித்த போது) நபி (ஸல்) அவர்கள், கஞ்சன் அந்த அங்கியை விசாலமாக்க முயற்சி செய்வான். ஆனால், அது விசாலமாகாது என்று (பலமுறை) சொன்னார்கள்.

பாடம் : 90

பிரயாணத்திலும் போரிலும் அங்கி அணிதல்.

2918 முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மலஜலம் கழிக்கும்) தேவையை நிறை வேற்றிக் கொள்ளச் சென்றார்கள். பிறகு திரும்பி வந்த போது, நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்று, (வரும் வழியில்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு அங்கியொன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள் (நான் கொண்டு சென்ற தண்ணீரில்) வாய் கொப்பளித்து, மூக்கில் நீர் செலுத்தினார்கள். தம் முகத்தைக் கழுவிக் கொண்டார்கள். அங்கியின் கைப் பகுதிகள் வழியாக தமது கைகளை வெளியே எடுக்கலானார்கள். அப் பகுதிகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. ஆகவே, கீழ்ப் பகுதி வழியாக இரு

கைகளையும் வெளியே எடுத்தார்கள். பிறகு அவற்றைக் கழுவினார்கள்; தம் தலையைத் துடைத்துக் கொண்டார்கள்; தமது காலுறைகளின் மீதும் துடைத்துக் கொண்டார்கள்.69

பாடம் : 91

போரின் போது பட்டாடை அணிவது.

2919 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

2920 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி) அவர்களும் ஸுபைர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (தம் உட-ல் சிரங்குண்டாக்கிய) ஒட்டுண்ணி களைக் குறித்து முறையிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விரு வருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார்கள். எனவே, ஒரு புனிதப் போரில் அவ்விருவரும் பட்டாடை அணிந்திருப்பதை நான் கண்டேன்.

2921 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்

(ரலி) அவர்களுக்கும் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.

2922 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 அவ்விருவருக்கும் இருந்த சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி (ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்- அல்லது சலுகை கொடுக்கப்பட்டது.

பாடம் : 92

கத்தியைப் பயன்படுத்துதல்.

2923 அம்ரு பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பவர்களாக நபி (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். பிறகு, தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) உளூச் செய்யவில்லை.

மற்றோர் அறிவிப்பில், தொழு கைக்கு அழைக்கப்பட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் கத்தியைக் கீழே போட்டு விட்டார்கள்என்று அதிகப்படியாக வந்துள்ளது.70

பாடம் : 93

ரோமர்களுடன் போரிடுதல் பற்றி......

2924 உமைர் பின் அஸ்வத் அல் அன்ஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் கடற்கரையில் தமது கட்டிடம் ஒன்றில் (தமது மனைவி) உம்மு ஹராம்

(ரலி) அவர்களுடன் தங்கியிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் எம்மிடம் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தினரில் முத-ல் கட-ல் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள்.71 இதைச் செவியுற்ற நான் , அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களில் ஒருத்தியா? என்று கேட்டேன். நபி (ஸல்)

அவர்கள், நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ் டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூ-ன்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.72 அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 94

யூதர்களுடன் போரிடுதல்.

2925 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர் களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக் கென்றால் அவர்களில் ஒருவர் கல்-ன் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு என்று கூறும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2926 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்-ன் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், முஸ்-மே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கின்றான். அவனை நீ கொன்று விடு என்று கூறும்.73

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 95

துருக்கியர்களுடன் போர் புரிதல்.

2927 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முடியாலான செருப்புகளை அணிகின்ற ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரிவது இறுதி நாளின் அடையாளங் களில் ஒன்றாகும்.74

இதை அம்ரு பின் தக்-ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2928 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 96

முடியாலான செருப்பை அணிபவர் களுடன் போர் புரிவது.

2929 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

முடியாலான செருப்புகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்தே மற்றொரு வழியாக அறிவிக்கப்படுகின்ற ஓர் அறிவிப்பில், (தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் என்னும் வாசகத்திற்கு முன்னால்)....சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட என்னும் சொற்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன.

பாடம் : 97

தோல்வியின் போது தன் தோழர்களை அணிவகுத்து நிற்கச் செய்து, தன் வாகனத்திலிருந்து இறங்கி அல்லாஹ் விடம் உதவி கோருவது.

2930 அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின் போது பின்வாங்கி ஓடினீர்களா? என்று கேட்க, அதற்கு அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்ல வில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வா-பர்களும் ஆயுத பலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களுடைய எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் குறி தவறாமல் அம்புகளை எய்தார்கள். ஆகவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூசுஃப்யான் பின் ஹாரிஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்கள் ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (செய்தியறிந்ததும் அதை விட்டு) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் இறைத்தூதர் தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்த-பின் (மகனின்) மகன் ஆவேன் என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.75

பாடம் : 98

இணைவைப்போருக்குத் தோல்வியும் நில நடுக்கமும் ஏற்படும்படி அவர் களுக்கெதிராகப் பிரார்த்திப்பது.

2931 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.

2932 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஸுப்ஹுத் தொழுகையில்) குனூத் ஓதும் போது, இறைவா! சலமா பின் ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று வாயாக!76 இறைவா! உன் (தண்டனைப்) பிடியை முளர் குலத்தாரின் மீது

(இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!77

யூசுஃப் (அலை) அவர்களின் காலத்து (எகிப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போல் அவர்களுக்கும் சில வருடங்களை (தண்டனையாக) அளிப்பாயாக! என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.

2933 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின் போது இணை வைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த் தனை புரிந்தார்கள். அப்போது, இறைவா! திருக்குர்ஆனை அருள் பவனே! விரைவாகக் கணக்கு வாங்கு பவனே! இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தார்களைத் தோற்கடிப் பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற் குள்ளாக்குவாயாக! என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.

2934 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழ-ல் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி (ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள், இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹிஷாமின் மகன் அபூஜஹ்லையும் உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உபை பின் கலஃப் மற்றும் உக்பா பின் அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு) என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்ட வர்களாக(எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.78

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன் என்று கூறு கிறார்கள்.79

அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், அறிவிப் பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள், உமய்யா அல்லது உபை என்று (ஐந்தாமவனின் பெயரை) சந்தேகத்துடன் குறிப்பிடுகின்றார். ஆயினும், (அந்த ஐந்தாமவனின் பெயர்) உமய்யா என்பதே சரியானதாகும்.80

2935 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) அஸ்ஸாமு அலைக்க (உங்கள் மீது மரணம் உண்டாகட்டும்) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?) என்று கேட்டார்கள். நான், அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள்,நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், வ அலைக்கும்-(உங்கள் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்) என்று கூறியதை நீ கேட்கவில்லையா? என்று சொன்னார்கள்.

பாடம் : 99

ஒரு முஸ்லிம், வேதக்காரர்களை இஸ்லாத்திற்கு அழைப்பதோ, திருக்குர் ஆனை அவர்களுக்குக் கற்றுத் தருவதோ செல்லுமா?

2936 அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரோமாபுரியின் சக்கரவர்த்தி) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல் போவதின்) பாவம் உம்மைச் சேரும் என்று கூறியிருந்தார்கள்.81

பாடம் : 100

இணைவைப்பவர்களின் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காக அவர்களுக்கு நேர்வழி கிடைக்கப் பிரார்த்திப்பது.

2937 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

துûஃபல் பின் அம்ரு அத்தவ்ஸீ

(ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) தவ்ஸ் குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தி யுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, தவ்ஸ் குலத்தார் அழியட்டும் என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர் வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

November 2, 2009, 9:41 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்3

பாடம் : 51

(போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு கிடைக்கும் பங்கு.

2863 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து குதிரைக்கு இரு பங்குகளையும் (அதல் லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

மாலிக் (ரஹ்) அவர்கள், அரபு குதிரைகளுக்கும் பிற நாட்டு (ஐரோப்பிய குதிரைகளான) துருக்கிய குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங் களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அல்லாஹ், குதிரை களையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) படைத்தான் (16:8) என்று கூறுகிறான். மேலும், ஒரு குதிரையை விட அதிகமான வற்றுக்குப் பங்கு தரக் கூடாது என்று கூறினார்கள்.

பாடம் : 52

பிறருடைய வாகனத்தைப் போரில் ஓட்டிச் செல்வது.

2864 அபூ இஸ்ஹாக் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் பராஉ பின் ஆஸிப்

(ரலி) அவர்களிடம், நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு விட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர் களா(மே, உண்மை தானா)? என்று கேட்டார். அதற்கு அவர்கள், (ஆம், உண்மைதான்.) ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்த போது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். ஆகவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதரோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி (ஸல்) அவர்களை தமது பைளா என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூசுப்யான் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நான் இறைத் தூதராவேன். இது பொய் யல்ல. நான் அப்துல் முத்த-பின் (மகனின்) மகனாவேன் என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 53

வாகனப் பிராணியின் அங்கவடி.35

2865 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது காலை அங்கவடியில் நுழைத்து, தமது ஒட்டகம் நிலைக்கு வந்து விடும் போது துல் ஹுலைஃபா பள்ளிவாச-லிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து) தல்பியா கூறுவார்கள்.36

பாடம் : 54

சேணம் பூட்டப்படாத குதிரையில் சவாரி செய்தல்.

2866 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சேணம் பூட்டப் படாத, திறந்த மேனி கொண்ட ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தபடி, அவர்களின் கழுத்தில் வாளொன்று தொங்கிக் கொண்டிருக்க, மதீனா வாசிகளை நோக்கி வந்தார்கள்.37

பாடம் : 55

மந்தமாக நடக்கின்ற குதிரை.

2867 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் ஒருமுறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் குணமுடைய ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்த போது, உங்களுடைய இந்த குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் நாம் கண்டோம் என்று கூறினார்கள். அதற்குப் பிறகு அந்த குதிரை வேறெந்த குதிரையும் அதை (வெல்ல முடியாத அளவிற்கு பந்தயத்தில்) முந்த முடியாததாக மாறிவிட்டது.

பாடம் : 56

குதிரைப் பந்தயம்.

2868 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மெ-ய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரை களை ஹஃப்யா எனுமிடத்திலிருந்து சனிய்யத்துல் வதா எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெ-ய வைக்கப்படாத (பயிற்சி யளிக்கப்படாத) குதிரைகளை சனிய்யத் துல் வதாவிலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.38

அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ (ரஹ்) அவர்கள், ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

பாடம் : 57

பந்தயத்திற்காகக் குதிரையை மெ-ய வைப்பது.

2869 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெ-ய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் சனிய்யத்துல் வதாவிலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது.

நானும் இத்தகைய குதிரைகளுக்

கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.

பாடம் : 58

மெ-ய வைக்கப்பட்ட குதிரை களுக்கான பந்தய தூரம்.

2870 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெ-ய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ஹஃப்யா விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை சனிய்யத்துல் வதாவாக இருந்தது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் (அறிவிப்பாளர்) மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், அவ் விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலை விருந்தது? என்று கேட்டேன். அவர், ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிருந்தது என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்.

தொடர்ந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மெ-ய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரை களுக்கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை சனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளி வாசலாக இருந்தது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உமர் (ரலி) அவர்களும் (தம் குதிரையுடன்) பந்தயத்தில் கலந்து கொண்டார்கள்.

நான் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களிடம், அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது? என்று கேட்க, சுமார் ஒரு மைல் என்று அவர்கள் பதிலளித்தார்கள் என அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்கள்.

பாடம் : 59

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம்.

நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை (தம் ஒட்டகமான) கஸ்வாவின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக் கொண்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை என்று சொன்னார்கள் என மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.39

2871 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் அள்பா என்று அழைக்கப்பட்டு வந்தது.40

2872 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அள்பா என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத(அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட் பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபி (ஸல்) அவர்கள், உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து சாபித் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ஹம்மாத் (ரஹ்) அவர்களும், அவர் களிடமிருந்து மூசா (ரஹ்) அவர்களும் நீண்டதாக அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 60

கழுதைகளின் மீது (சவாரி செய்து) போருக்குச் செல்வது.41

பாடம் : 61

நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை

இதை அனஸ் (ரலி) அவர்கள் தம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.42

நபி (ஸல்) அவர்களுக்கு அய்லாவின் அரசர் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையொன்றை அன்பளிப்பாகத் தந்தார் என்று அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.43

2873 அம்ரு பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் மரணத்தின் போது) தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தமது ஆயுதத்தையும், தருமமாக விட்டுச் சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் விட்டுச் செல்லவில்லை.44

2874 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர், அபூ உமாராவே! ஹுனைன் போரின் போது நீங்கள் பின்வாங்கிச் சென்று விட்டீர் களே? என்று கேட்டார். நான், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஆனால், அவசர புத்தி கொண்ட மக்கள் தான் பின்வாங்கிச் சென்றார்கள். ஆகவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார்கள். அபூசுஃப் யான் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டி ருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் உண்மையான இறைதூதரே. இதில் பொய் எதுவும் இல்லை. நான் அப்துல் முத்த-பின் (மகனின்) மகனாவேன் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 62

பெண்களின் அறப் போர்.

2875 இறை நம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப் போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், (பெண்களாகிய) உங்கள் ஜிஹாத் ஹஜ் செய்வது தான் என்று கூறினார்கள்.45

2876 இறை நம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர் களுடைய மனைவிமார்கள் அறப் போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதி யளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கவர்கள், ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த ஜிஹாத் ஆகும் என்று கூறினார்கள்.

பாடம் : 63

கட-ல் (பயணம் செய்து) பெண் அறப் போரில் ஈடுபடுவது.

2877 & 2878 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் (போர்புரிவதற்காகக்) கட-ல் பயணம் செய்வார்கள். அவர்களுடைய நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும் என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஹராம்

(ரலி) அவர்கள், என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்து விட்டு பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போலவே, ஏன் சிரிக் கிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களிடம், என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (கடல் பயணம் செய்து அறப் போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள். பிற்பாடு செல்பவர்களில் ஒருவராக இருக்க மாட்டீர்கள் என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் சாமித் (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு கரழா பின் அப்தி அம்ரு என்பவரின் மகளுடன் (அறப் போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்ட போது தம் வாகனப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளி விட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்து விட்டார்கள்.46

பாடம் : 64

அறப்போருக்குச் செல்லும் பொழுது ஒருவர் தமது மனைவியரில் ஒருவரை மட்டும் (குலுக்கல் முறையில் தேர்வு செய்து) அழைத்துக் கொண்டு மற்றவர் களை விட்டு விட்டுச் செல்வது.

2879 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு எவரது பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஒரு புனிதப் போருக்குச் சென்ற போது (அவர்களின் மனைவிமார் களாகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது பெயர் வரவே, நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிடமிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற) ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந்தது.47

பாடம் : 65

பெண்கள், ஆண்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வது.

2880 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது மக்கள் நபி (ஸல்) அவர்களை விட்டு விட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்ற போது நான் ஆயிஷா பின்த்து அபீபக்ர் (ரலி) அவர்களையும் உம்மு சுலைம்

(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் கா-யானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீர் ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களுடைய கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.

தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று என்பதற்கு பதிலாக, தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறியுள்ளார்.

பாடம் : 66

புனிதப் போரில் பெண்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை மக்களிடம் சுமந்து செல்வது.

2881 சஅலபா பின் அபீ மாலிக்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களி டையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி மீதமாயிற்று. அதைக் கண்டு, அவர்களிட மிருந்த சிலர், இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! இதை உங்களிட மிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய மகளுக்குக் கொடுங்கள் என்று கூறினார்கள் - அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்.-உமர் (ரலி) அவர்கள், உம்மு சலீத் (ரலி) அவர்கள் தாம் இதற்கு மிகவும் அருகதையுடையவர்கள். உம்மு சலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார் என்று கூறிவிட்டு, அவர் உஹுதுப் போரின் போது எங்களுக்காக (இஸ்லாமிய வீரர்களுக்காக) தோல் பைகளைச் சுமந்து நீர் புகட்டுபவராய் இருந்தார் என்று கூறினார்கள்.

பாடம் : 67

புனிதப் போரில் காயமுற்றவர்களுக்குப் பெண்கள் மருந்திடுவது.

2882 ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற் றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.

பாடம் : 68

காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பெண்கள் எடுத்து வருதல்.

2883 ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வோம்; அப்போது (போரில் காயமுற்ற) மக்க ளுக்கு நீர் புகட்டுவோம்; அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம்; கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் திரும்பக் கொண்டு வருவோம்.

பாடம் : 69

உட-ல் இருந்து அம்பைப் பிடுங்கி எடுப்பது.

2884 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர் அபூ ஆமிர் (ரலி) அவர்களின் முழங்காலருகில் அம்பு துளைத்து (அதிலேயே தங்கி) விட்டிருந்தது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), இந்த அம்பைப் பிடுங்கி விடு என்று கூறினார்கள். நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இறைவா! உபைத் அபூ ஆமிருக்கு மன்னிப்பளி என்று பிரார்த்தித்தார்கள்.48

பாடம் : 70

அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரியும் வேளையில் காவல் காப்பது.

2885 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபின், முத-ல் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, என் தோழர் களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், யாரது? என்று கேட்டார்கள். வந்தவர், நான் தான் சஅத் பின் அபீவக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

2886 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொற்காசு, வெள்ளிக் காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தி யடைவான்; செல்வம் வழங்கப்படா விட்டால் அதிருப்தியடைவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2887 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தி யடைவான்; செல்வம் வழங்கப்படா விட்டால் கோபமடைவான். அவன் துர்பாக்கியவானாகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்து விட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும். அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடி வாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)

பாடம் : 71

புனிதப் போரில் பணிவிடை செய்வதின் சிறப்பு.

2888 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள். (வேண்டாம் என நான் மறுத்த போது) அன்சாரிகள் ஓர் உயர்ந்த காரியத்தைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்; ஆகவே, அவர்களில் எவரை நான் கண்டாலும் (அவர்களுக்குப் பணி விடைகள் செய்து) அவர்களை கண்ணியப்படுத்தாமல் இருப்பதில்லை என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.49

2889 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உஹுது மலை தென்பட்டதும், இது எத்தகைய மலையென்றால் இது நம்மை நேசிக்கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம் என்று கூறினார்கள். பின்னர், மதீனாவை நோக்கித் தம் கரத்தால் சைகை செய்து, இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித் ததைப் போன்று, நான் (இந்த) இரு மலைகளுக்கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், முத்து களிலும் எங்களுக்கு பரக்கத்தைக் கொடு என்று பிரார்த்தித்தார்கள்.50

2890 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று)தம் ஆடையால் தமக்குத் தாமே நிழ-ட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டு விட்டவர்கள் வாக னங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்கள்.51

பாடம் : 72

பயணத்தில் அடுத்தவரின் பொருள் களைச் சுமப்பவரின் சிறப்பு.

2891 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் (உட-லுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.52

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 73

அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவதின் சிறப்பு.

அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப் பிடியுங்கள். பரஸ்பரம் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந் நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (3:200)

2892 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்ப வற்றை விடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில், ஒரு சாட்டையை வைக்குமளவிற்குள்ள இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். ஓர் அடியான் அல்லாஹ்வின் பாதையில் செல்கின்ற மாலை நேரம் அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும்.

இதை சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 74

பணிவிடை புரிவதற்காக சிறுவனை அழைத்துக் கொண்டு புனிதப் போருக்குச் செல்வது.

2893 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) அவர்களிடம், உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்; நான் கைபருக்குப் புறப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஆகவே, அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னை (தம் வாகனத்தின்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது அவர்கள், இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று துஆ செய்வதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் (கமூஸ்) கோட்டையின் வெற்றியை அளித்த போது, ஸஃபிய்யா பின்த்து ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்போது (நடந்த போரில்) ஸஃபிய்யாவின் கணவர் கொல்லப்பட்டிருந்தார். அவர் புதுமணப் பெண்ணாகவும் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா வைத் தமக்காக (விரும்பித்) தேர்ந்தெடுத் துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள், சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தை அடைந் தவுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவருடன் (உறவு கொண்டு) வீடு கூடினார்கள். பிறகு, சிறிய தோல் விரிப்பு ஒன்றில் (பேரீச்சம் பழம், நெய், பாலாடை ஆகியவற்றைக் கலந்து) ஹைஸ் என்ற உணவைத் தயாரித்தார்கள். பிறகு, உன்னைச் சுற்றிலுமிருப்பவர்களுக்கு (மண விருந்துக்கு வரும்படி) அறிவி என்று உத்தரவிட்டார்கள். அது ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக அமைந்தது. பின்னர் நாங்கள் மதீனாவுக்குப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் தம்மைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியதை நான் பார்த்தேன். பிறகு, தமது ஒட்டகத்தின் அருகே அமர்ந்து தமது முழங்காலை வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களுடைய முழங்கா-ன் மீது தமது காலை வைத்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (ஒட்டகத்தில்) ஏறினார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கிய போது நபி (ஸல்) அவர்கள் உஹுது மலையைப் பார்த்து, இது நம்மை நேசிக்கின்ற மலை; நாமும் இதை நேசிக்கின்றோம் என்று கூறினார்கள். பிறகு மதீனாவின் பக்கம் பார்த்து, இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமாக அறிவித்ததைப் போன்று இந்த இரு மலைகளுக்கிடையிலுள்ள நிலப்பகுதியை (மதீனாவை) புனிதமானதாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனா வாசிகளின் முத்து, அவர்களுடைய ஸாவு ஆகிய வற்றில் பரக்கத்தை அளிப்பாயாக! என்று துஆ செய்தார்கள்.

November 2, 2009, 9:19 AM

56-அறப்போரும் அதன் வழிமுறைகளும்2

பாடம் : 26

அறப்போரில் தான் பட்ட துன்பங்களை ஒருவர் எடுத்துரைக்கலாம்.

இதை ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ உஸ்மான் நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2824 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தல்ஹா பின் உபைதில்லாஹ்

(ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோருடன் தோழமை கொண்டி ருந்தேன். அவர்களில் ஒருவரும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நபி மொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்டதில்லை. ஆனால், தல்ஹா (ரலி) அவர்கள் உஹுதுப் போரின் நாள் குறித்து அறிவித்ததை நான் கேட்டிருக்கின்றேன்.

பாடம் : 27

போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமையான அளவு எது என்பதும், அதற்காக நாட்டம் கொள்வதும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் கனமானவர்களாயிருந்தாலும் சரி; இலேசானவர்களாகயிருந்தாலும் சரி21 (அறப்போருக்குப்) புறப்படுங்கள்; உங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். உடனடி லாபம் (போர்ச் செல்வம்) கிடைப்பதாக இருந்து, இலேசான பயணமாகவும் இருந்திருப்பின் (நபியே!) உங்களை அவர்கள் பின்பற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் பயணம் தூரமாகி (சிரமமாகி) விட்டது. (9:41,42)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் பூமியிலேயே ஒட்டிக் கொண்டு கிடக்கின் றீர்களே! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி கொண்டு விட்டீர்களா? (அப்படியாயின்) உலக வாழ்வின் இன்பங்கள் யாவும் மறுமை வாழ்க்கைக்கு முன்பாக அற்பமானவையே (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). (9:38)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பல குழுவினர்களாகப் புறப்படுங்கள் (4:71) என்பதற்கு, (தனித் தனியாகிப் பிரிந்து செல்லும்) பல படையணிகளாகப் புறப்படுங்கள் என்று பொருள் எனக் கூறினார்கள்.

2825 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், (மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது; ஆனால், அறப் போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப் போருக்காகப் புறப்படும்படி (உங்கள் தலைவரின் தரப்பிலிருந்து) கோரப் பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்கள்.22

பாடம் : 28

இறைமறுப்பாளர் ஒரு முஸ்-மைக் கொன்ற பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, மார்க்கத்தில் உறுதியுடன் இருந்து, பிறகு கொல்லப்பட்டு விடுதல்.

2826 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடு கின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடு கின்றான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகின்றார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

2827 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள் என்று நான் கேட்டேன். அப்போது சயீத் பின் ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), இவருக்குப் பங்கு கொடுக்கா தீர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். உடனே நான், இவர் (நுஃமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர் என்று கூறினேன். அதற்கு சயீத் பின் ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), என்ன ஆச்சரியம்! (தனது தவ்ஸ் குலத்தார் வசிக்கின்ற) ளஃன் என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்-மைக் கொன்று விட்டதற்காக என்னைக் குறை சொல் கின்றதே! அவரை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை என்று கூறினார்.23

அறிவிப்பாளர்களில் ஒருவர், நபி (ஸல்) அவர்கள் அபானுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்க வில்லையா என்று எனக்குத் தெரியாது எனக் கூறுகிறார்.

பாடம் : 29

நோன்பை விட புனிதப் போருக்கு முத-டம் கொடுப்பது.

2828 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்து கொண்ட காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்று விட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.

பாடம் : 30

இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகை உயிர்த் தியாகங்கள் உண்டு.

2829 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:

1) பிளேக் நோயால் இறந்தவர்

2) வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதி களால் இறந்தவர் 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர் 4) (வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் 5) அல்ல