தேச விரோத மனநோய் முற்றியதால் பாதிப்புக்குள்ளான ஹெச்.ராஜா!

தேச விரோத மனநோய் முற்றியதால்

பாதிப்புக்குள்ளான ஹெச்.ராஜா!

  • சொந்தக்கருத்து தமிழிசை விளக்கம்!

மனநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையான மனநோய் தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளாவார்கள்; அந்த வகையில் தேச விரோத மனநோய் என்ற படுபயங்கரமானமனநோய்க்கு ஆளாகியுள்ளார் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

ஆம்! அதென்ன தேச விரோத மனநோய் என்று கேட்கின்றீர்களா?

யாரைப்பார்த்தாலும் நீ தேச விரோதி; நீ தேச விரோதி; அவன் தேசத்துரோகி; இவன் தேசத்தை கருவறுக்கும் தீய சக்தி என்று சொல்லும் ஒருவித மனநோய்க்கு அவர் ஆளாகியுள்ளார்.

இந்த மனநோய் அவரை பீடித்ததன் விளைவாக சமீப காலமாக யாரைப்பார்த்தாலும் அவர்களை தேச விரோதிகள் என்று சொல்லி வருகின்றார்.

மெரீனாவில் போராடிய அனைவரும் தேச விரோதிகள் என்று உளறினார்; தற்போது நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தேச விரோதிகள் என்று சொல்லி வருகின்றார்.

இவரது வீட்டில் உள்ளவர்களைப் பார்த்தால் கூட அவர்களும் தேசத்துரோகிகளாக இவரது கண்ணுக்கு தெரிவார்களா எனத்தெரியவில்லை.

இதே மனநோய் அந்த கட்சியில் உள்ள மற்றுமொரு முக்கிய தலைவராக உள்ள இல.கணேசன் என்பவருக்கும் வந்துள்ளதாகத் தெரிகின்றது; இது ஹெச்.ராஜாவிடமிருந்து தொற்றியதாகவே பலரும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இல.கணேசன் என்பவரோ நெடுவாசல் போராட்டத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கு போராடும் அனைவரும் நாட்டு நலனுக்காக, மக்களுக்காக போராடுபவர்கள் அல்ல. இவர்களின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருபக்கம் நெடுவாசலில் போராடுபவர்களெல்லாம் தேச விரோதிகள் என ஹெச்.ராஜா சொல்ல, மறுபக்கம் இது குறித்து தீவிரவாதிகளின் தொடர்பு நெடுவாசலில் போராடுபவர்களுக்கு உண்டா என்ற ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என்று இல.கணேசன் சொல்ல, கடந்த வாரம் ஹெச்.ராஜா என்பவர் நெடுவாசலில் போராட்டம் நடந்த இடத்திற்கு போராட்டக் காரர்களை சந்திப்பதற்காகச் சென்றார்; அவரை போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதன் மூலம் இவர் மனநோயாளிதான் என்பது உறுதியானது;

யாரையெல்லாம் தீவிரவாதிகள்; தேச விரோதிகள் என்று இவர் சொன்னாரோ அவர்களை சந்திக்கச் சென்றது ஏன்? என்பதை அவர் விளக்குவாரா?

ஹெச்.ராஜாவின் இந்த மனநோய் முற்றிய நிலை குறித்து பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் அளித்த விளக்கம் சரியாகப் பொருந்திப் போய் உள்ளது.

அப்படி என்ன தமிழிசை விளக்கமளித்தார் என்று கேட்கின்றீர்களா?

''பாஜக எப்படியாவது குட்டிக்கரணம் அடித்து, தமிழகத்தில் கட்சியை உறுதியாக காலூன்ற வைக்கும். திமுகவை விட பாஜக நன்றாக குட்டிக்கரணம் அடிக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.

தமிழிசை அவர்களே!

நன்றாக குட்டிக்கரணம் அடிக்கின்றீர்கள்.

உண்மைதான்;

குட்டிக்கரணம் அடிப்பதில் உங்களோடு யாரும் போட்டி போட முடியாது;

காலையில்  போராட்டக்காரர்களை தீவிரவாதி என்கின்றீர்கள்?

மாலையில் அவர்களை ஆதரிக்கின்றீர்கள்.

அடுத்த நாள் அவர்கள் நக்சலைட்டுகள் என்கிறீர்கள்?

அடுத்த நாள் அந்த இடத்திற்கே சென்று ஆதரவு தெரிவிக்கின்றீர்கள்.

போராட்டக்காரர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்கின்றீர்கள்;

அடுத்த நாள் போராட்டக்காரர்களின் பின்னணி  குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கின்றீர்கள்.

இதைவிட குட்டிக்கரணம் போட்டு வேறு யாராலும் கட்சியை வளர்க்க முடியாது.

கடைசியில் இது எனது சொந்த கருத்து என்று சொல்லி தமிழிசை தப்பிவிடக்கூடாது;

ஏனென்றால் ஹெச்.ராஜாவிற்கு தேச விரோத மனநோய் இருப்பது போல, தமிழிசை அவர்களுக்கு யார் எது சொன்னது பற்றிக் கேட்டாலும் அது அவரது சொந்தக்கருத்து என்று சொல்லும், “சொந்தக் கருத்து மனநோய்” உள்ளது.

அதனால் தான் நமக்கு அந்த பயம்.

எது எப்படியோ மனநோய் நல்லதல்ல; உடனடியாக ஹெச்.ராஜா அவர்களை நல்ல மனநல மருத்துவரிடம் கொண்டு போய் காட்டுவது மட்டுமல்லாமல். ஒட்டுமொத்த பாஜகவினரையும் மனநல மருத்துவர்களிடம் காட்டி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டாயம்.

குறிப்பு: சமீபத்தில் ஹெச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களைப் பார்த்து அவர் தேச விரோதி என்று திட்டியுள்ளார். தேச விரோத மனநோய் முற்றியதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

நன்றி: உணர்வு வார இதழ்தேச விரோதிகள்பாஜகஹெச்.ராஜாதமிழிசைகாவி பயங்கரவாதம்காவி தேச துரோகம்உணர்வு கட்டுரைகள்

Published on: March 30, 2017, 7:49 PM Views: 7212

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top