99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை

இன்றைக்கு யூதர்கள் வறுமையில் இல்லையே! வறுமை விதிக்கப்பட்டதாக இவ்வசனம் (3:112) கூறுகிறதே என்று சிலர் நினைக்கலாம். அதற்கு இவ்வசனத் திலேயே பதில் உள்ளது.

மற்றவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து தம்மைக் காத்துக் கொள்ளும் போது இந்த நிலை அவர்களுக்கு ஏற்படாது என்பது தான் அந்தப் பதில்.

ஹிட்லரால் கொன்று குவிக்கப்படும் வரை அவர்களுக்கு இழிவு தான் இருந் தது. முஸ்லிம்களாலும், பின்னர் கிறித்தவர்களாலும், பின்னர் நாஜிக்களாலும் ஏராளமான இழிவுகளைச் சுமந்தனர்.

"இயேசு தவறான முறையில் பிறந்தவர்'' என்பது இவர்களின் கொள்கை. அந்த இயேசுவை இறை மகன் என்று ஏற்றுள்ள பிரிட்டனுடன் செய்து கொண்ட உடன்படிக்கை மூலமும், அதன் பின்னர் அமெரிக்காவின் ஒத்துழைப்பு மூலமும் தான் வறுமையற்ற நிலையில் உள்ளனர்.

எனவே இந்தப் பிரகடனம் ஒரு காலத்திலும் பொய்யாகவில்லை. அதே நேரத்தில் இந்த இழிவு அனைத்து யூதர்களுக்கும் உரியது அல்ல என்பதை அடுத்த வசனத்தில் காணலாம்.

திருக்குர்ஆன் 5:14 வசனத்தில் யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்குமிடையே கியாமத் நாள் வரை பகைமையை ஏற்படுத்தியதாகவும், 5:64 வசனத்தில் யூதர்களுக்கிடையே கியாமத் நாள் வரை பகைமை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இன்று அவர்களிடையே பகைமை காணப்படவில்லையே என்று சிலருக்குத் தோன்றலாம். ஆயினும் இவ்வசனங்களில் கியாமத் நாள் வரை அவர்களுக்கிடையே பகைமை நிலவும் என்று கூறப்பட்டாலும் 3:112 வசனத்தில் அவர்கள் மனிதர்களோடு செய்து கொள்ளும் உடன்படிக்கையால் இது போன்ற இழிவிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக் கிடையே பகைமை இல்லாதிருப்பது குர்ஆனின் அறிவிப்புக்கு எதிரானது என்று கருத முடியாது.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:61, 3:112, 5:14, 5:64)

10.07.2009. 10:28




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
124 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி