96. விரும்பியோ, விரும்பாமலோ...

96. விரும்பியோ, விரும்பாமலோ...

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் இறைவனுக்கு அடிபணிகின்றன என்று கூறாமல் விரும்பியோ, விரும்பாமலோ அடிபணிகின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். (3:81, 13:15, 41:11)

மனிதர்கள், ஜின்களில் பெரும் பாலோர் இறைவனுக்கு அடி பணியாத நிலையில் அனைத்தும் அடி பணிவதாக இறைவன் கூறுவது ஏன்?

"அடி பணிதல்'' என்பது இந்த இடத்தில் எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் இச்சந்தேகம் விலகி விடும்.

ஒவ்வொரு பொருளையும் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றும் வகையில் இறைவன் படைத்துள்ளான். அப்பணிக்கு அவை பயன்படுகின்றன என்பது தான் இதன் பொருள்.

மனிதனின் ஒவ்வொரு உறுப்புக்களும் அவை எதற்காகப் படைக்கப்பட்ட னவோ அந்தப் பணியைச் செய்கின்றன.

மனிதனுக்கு உணவாகப் பயன்படும் வகையில் சில உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். அந்த உயிரினங்களுக்கு உயிரை விடுவது பிடிக்காவிட்டாலும் இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுகின்றன.

24 மணி நேரமும் இடை விடாது உழைக்கும் உறுப்புக்கள் மனிதனுக்குள் இருக்கின்றன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பணி சிரமமாக இருந்தாலும் அப்பணியை அவை செய்து வருகின்றன.

இந்த அடிபணிதலைத் தான் இவ்வசனம் கூறுகிறது. வணக்க வழிபாடுகளை இவ்வசனம் குறிக்காது. ஏனெனில், இறைவனுக்கு வணக்க வழிபாடு செய்யாத கோடிக்கணக்கான மனிதர்களும், ஜின்களும் இருக்கின்றனர். (பார்க்க: திருக்குர்ஆன் 5:32, 5:49, 7:179, 22:18, 57:16)

எனவே அனைத்தும் வணக்க வழிபாடுகள் செய்கின்றன என்று பொருள் கொள்ள முடியாது. மனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோர் இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்யவில்லை என்று இறைவன் குறிப்பிடுவதே நாம் இவ்வாறு பொருள் செய்யக் காரணமாகும்.

10.07.2009. 10:24




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
121 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி