88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர்.

குர்ஆனுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிக் கட்டளை யிட்டிருப்பார்கள் எனவும் கேட்கின்றனர். இது தவறாகும்.

இவர்கள் கூறுவது போல் தங்க நகைகள் அணிவது பற்றி இவ்வசனத்தில் கூறப்படவே இல்லை. தங்கம் மற்றும் வெள்ளிக் குவியல்களைத் திரட்டி வைத்துக் கொள்வது பற்றியே இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளிக் குவியல்களைத் திரட்டக் கூடாது என்று கூறினால் தான் அது இவ்வசனத்திற்கு முரண் எனக் கூற முடியும்.

தங்கம், வெள்ளிக் குவியல்கள் அழகாக்கப்பட்டுள்ளன என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு வாதத்துக்காக நகைகளையே இது குறிக்கிறது என்று வைத்துக் கொண் டாலும் அழகாக்கப்பட்டுள்ளது என்ற சொல் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்தைத் தராது.

"அழகாக்கப்பட்டுள்ளது'' என்ற சொல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தில் குர்ஆனில் பயன்படுத்தப்படவில்லை.

மனிதனுக்கு அழகாகத் தோன்றும் நல்லவை, கெட்டவை அனைத்துக்கும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

(பார்க்க: திருக்குர்ஆன் 6:43, 6:108, 6:122, 6:137, 8:48, 9:37, 10:12, 13:33, 16:63, 27:4, 27:24, 29:38, 35:8, 40:37, 47:14, 48:12)

எனவே கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது என்ற சொல் அனுமதிக்கப்பட்டதைக் குறிக்காது என்பதை அறியாதவர்கள் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

10.07.2009. 10:11




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
115 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி