84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

இவ்வசனத்தில் (3:130) "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு "சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது'' என்று சிலர் வாதிடுகின்றனர்.

இது குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதமாகும்.

2:278 வசனத்தில் "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான்.

"வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறாமல், "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்'' என்று பொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய அளவிலான வட்டியும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.

2:279 வசனத்தில் "வட்டியிலிருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமே சொந்தம்'' எனக் கூறப்படுகிறது. "மூலதனமும் சிறிய அளவிலான வட்டியும் சொந்தம்'' என்று கூறப்படவில்லை. மாறாக வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

அப்படியானால் "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்'' என்று 3:130 வசனம் கூறுவது ஏன்?

பொதுவாக வட்டியின் தன்மையே இது தான். வியாபாரத்துக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இது தான்.

அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டே செல்லும். இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வாங்கிய கடனை விட பல மடங்கு வட்டி அதிகமாகியிருப்பதைக் காணலாம்.

ஒரு பொருளை நாம் இலாபம் வைத்து விற்பனை செய்தால் அந்த ஒரு தடவை மட்டுமே அப்பொருள் மூலம் இலாபம் அடைகிறோம். ஆனால் ஒரு தொகையை வட்டிக்குக் கொடுத்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல தடவை இலாபம் அடைகிறோம்.

இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்ற கருத்தை இது தராது.

10.07.2009. 10:04




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
124 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி