80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக

80. மட்டமான பொருளைப் பிறருக்குக் கொடுக்கலாமா?

திருக்குர்ஆனின் 2:267, 3:92 ஆகிய இவ்வசனங்களை உரிய விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தர்மம் செய்யும் பொருட்களில் பெருமளவுப் பொருட்கள் நமக்கு வேண்டாதவையாகவே உள்ளன. மற்றவர்கள் அது போன்ற பொருட்களைக் கொடுத்தால் அதை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோம். இது போன்ற பொருட்களை தர்மம் செய்வதை இவ்வசனங்கள் தடுப்பது போல் அமைந்துள்ளது.

இப்படிப் புரிந்து கொண்டால் நாம் பயன்படுத்திய பொருட்கள், மிஞ்சிய உணவுப் பொருட்கள் போன்றவற்றை மற்றவருக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யும் நிலை ஏற்படும்.

ஆனால் இதன் பொருள் அதுவல்ல. மாறாக நமது நிலையில் இருந்து பார்த்தால் நாம் பெற்றுக் கொள்ளாத சில பொருட்களை தர்மம் பெறுபவனது நிலையில் நாம் இருந்தால் பெற்றுக் கொள்வோம். இது போன்ற பொருட்களை நாம் தர்மம் செய்யலாம்.

தர்மம் பெறுபவனின் நிலையில் நாம் இருந்தால் எதை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோமோ அது போன்ற பொருட்களைத் தான் தர்மம் செய்யக் கூடாது. நாம் போட்ட சட்டையை ஒருவருக்குக் கொடுக்கிறோம். நாம் அவரைப் போன்ற வறிய நிலையில் இருந்தால் அதைப் பெற்றுக் கொள்வோம்.

நாம் உபயோகப்படுத்திய சில உள்ளாடைகளைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவரது நிலையில் நாம் இருந்தாலும் அது போன்ற பொருட்களைப் பெற்றுக் கொள்ள மாட்டோம். இவ்வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

10.07.2009. 09:55




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
102 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி