70. மஹரை விட்டுக் கொடுத்தல்

70. மஹரை விட்டுக் கொடுத்தல்

திருமணம் செய்து மனைவியைத் தீண்டுவதற்கு முன் விவாக ரத்துச் செய்தால் பாதி மஹர் கொடுப்பது அவசியம் என்றாலும் "முழு மஹரையும், ஏன் அதையும் விட அதிகமாகவே தருகிறேன்'' என்று ஆண்கள் விட்டுக் கொடுக்கலாம்.

"நீங்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்தது'' என்ற வாசகம் ஆண்களைக் குறிக்கும் வாசகமாகும். (அரபு மொழியில் முன்னிலையிலும் ஆண் பால் பெண் பாலுக்கு தனிச் சொற்கள் உள்ளன. இங்கே ஆண் பால் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது). எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்று ஆர்வமூட்டப்படுகிறது.

"நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்'' என்பது ஆண்களுக்கு இருக்கும் உயர்வையே குறிக்கிறது. எனவே ஆண்கள் விட்டுக் கொடுப்பதே சிறந்ததாகும் என்பதே இதன் கருத்து.

இரு பாலரையும் இது குறிப்பதாக பெரும்பாலோர் விளக்கம் கூறியிருந் தாலும் இலக்கண அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் அது தவறாகும். ஆண்கள் தான் இதில் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் (2:237) அறிவுரையாகும்.

10.07.2009. 09:34




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
90 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி