64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 வசனத்தில் கூறப்படும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சிலர் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யும் எண்ணமின்றி வாய் தவறி "அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' எனக் கூறி விடுவதுண்டு. சத்தியம் செய்யும் எண்ணமில்லாமல் அந்தச் சொல்லைக் கூறியதற்காக அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.

பிறரை ஏமாற்றுவதற்காகவோ, தம்மைக் காக்கும் கேடயமாகவோ "அல்லாஹ்வின் மீது சத்தியமாக'' என்று கூறுவதை இவ்வசனம் (2:225) அனுமதிப்பதாகக் கருதக் கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்வது குற்றம் என வேறு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க: திருக்குர்ஆன் 2:224, 3:77, 16:91, 16:92, 16:94, 58:16, 63:2)

வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றவோ, தங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வருவதைத் தவிர்ப்பதற் காகவோ அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துவோர் மேற்கண்ட வசனங்களைப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அவனை சாட்சியாக்கிப் பேசும் போது பொய் சொல்வதும், அல்லாஹ்வின் பெயரால் அளித்த வாக்கை நிறை வேற்றாமல் இருப்பதும் கடும் குற்றமாகும்.

10.07.2009. 09:02




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
88 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி