448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

 448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்? 

ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது. கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவோரை அல்லாஹ் இறுதி நாள் வரை மேல்நிலையில் வைப்பான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் ஈஸா நபி உயர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே பவுல் என்பவரால் ஈஸா நபியின் மார்க்கம் மாற்றப்பட்டு விட்டது. ஈஸா நபி போதித்த ஒரு கடவுள் கொள்கை மாற்றப்பட்டு முக்கடவுள் கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டது. ஈஸா நபிக்குச் சம்மந்தம் இந்தக் கொள்கையில் இருப்பவர்கள் ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களாக ஆக மாட்டார்கள். 

ஈஸா நபி எந்தக் கொள்கையை இவ்வுலகில் போதனை செய்தார்களோ அந்தக் கொள்கையைத் தான் முஹம்மது நபியும் சொன்னார்கள். இஸ்லாம் தான் ஈஸா நபி போதித்த கொள்கையாகும். இஸ்லாத்தைப் பின்பற்றும் மக்கள் தான் ஈஸா நபியின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றுகின்றனர்.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: August 9, 2012, 5:08 PM Views: 586

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top