409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதன

409. அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா?

அநியாயம் செய்தவர்களை மட்டு மின்றி, மற்றவர்களையும் இறைவனுடைய தண்டனை தாக்கும் என்று இவ்வசனம் (8:25) கூறுகின்றது.
அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
இந்தச் சந்தேகத்தைத் திருக்குர்ஆன் 7:163-167 வசனங்கள் நீக்குகின்றன.
சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்ட சமுதாயத் தினர், மூன்று பிரிவுகளாகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் தடையை மீறி சனிக் கிழமையில் மீன் பிடித்தனர். மற்றொரு பிரிவினர் இறைவனின் தடையை மீறக் கூடாது எனக் கூறி இயன்ற வரை அவர்களைத் தடுக்க முயன்றனர். மூன்றாவது பிரிவினர் தடையை மீறி மீன் பிடிக்காவிட்டாலும் மீன் பிடிக்கச் சென்ற வர்களைத் தடுக்கவில்லை. மேலும் யார் அவர்களைத் தடுத்தார்களோ அவர் களுக்கு முட்டுக்கட்டையும் போட்டனர்.
சனிக்கிழமை மீன் பிடித்துத் தடையை மீறியவர்களை இறைவன் தண்டித்த போது, தீமையைத் தடுக்காமல் இருந்த மூன்றாவது பிரிவினரையும் தண்டித்தான். தீமையைத் தடுத்தவர்களை மட்டுமே காப்பாற்றினான்.
அநியாயம் செய்தவர்கள் மட்டுமின்றி, அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பவர்களும் தண்டனைக்குரிய வர்கள் என்ற கருத்தைத் தான் இவ்வசனம் (8:25) கூறுகின்றது.

11.07.2009. 07:08




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
98 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி