40. இரு வேறு விமர்சனங்கள்

40. இரு வேறு விமர்சனங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் ஜெருஸலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுதார்கள். இது யூதர்களுக்கும் கிப்லாவாக இருந்தது.

இதை இரண்டு சாரார் இரு வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.

"இவர் இப்ராஹீம் நபியின் மார்க்கத் தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார். ஆனால் இப்ராஹீமின் கிப்லாவை ஏன் விட்டு விட்டார்?'' என்று மக்காவில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஏனெனில் இப்ராஹீம் நபியின் கிப்லாவாக கஅபா இருந்தது.

"'இவர் நமது யூத மார்க்கம் தவறானது எனக் கூறுகிறார். அதே சமயம் நமது கிப்லா மட்டும் இனிக்கிறதோ?'' என்று யூதர்கள் விமர்சனம் செய்தனர்.

கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இரு சாராரும் விமர்சனம் செய்ய முடியாது. யாருடைய மார்க்கத்தில் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களோ அவரது கிப்லாவையே முன்னோக்குவதால் இது பொருத்தமானது என்பதை நியாய உணர்வு படைத்தோர் ஒப்புக் கொள்வார்கள்.

ஆனால் காரணமே இல்லாமல் விமர்சனம் செய்வோரின் விமர்சனத்தை இது தடுத்து நிறுத்தாது. அதனால் தான் "அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்கள் விமர்சிக்கக் கூடாது என்பதற்காக மாற்றப்பட்டது'' எனக் கூறப்படுகிறது. (திருக்குர்ஆன் 2:150)

10.07.2009. 07:43




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
95 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி