382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

இவ்வசனத்தில் (48:29) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களுடன் கடுமையானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரையும் பொதுவாகக் குறிப்பிடுவதாக இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் சொல்லொனாத துன்பத்திற்கு உள்ளாக்கியவர்களைக் குறித்தே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய வசனங்களை வாசிக்கும் போது இதைப் புரிந்து கொள்ளலாம்.

இது பற்றி மேலும் விபரம் அறிய 89வது குறிப்பைக் காண்க!

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: 11.07.2009. 20:26 Views: 539

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top