372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந
372. மறைவான விஷயம் நூஹ் நபிக்குத் தெரிந்ததா?
இவ்வசனத்தில் (71:27) "இவர்களை விட்டு வைத்தால் மக்களை வழி கெடுப்பார்கள்; பாவியைத் தான் பெறறெடுப்பார்கள்'' என்று நூஹ் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
எதிர் காலத்தில் அந்த மக்கள் என்ன செய்வார்கள்? எப்படி நடப்பார்கள் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இதை நூஹ் நபி எப்படிச் சொல்லியிருக்க முடியும்? என்ற சந்தேகம் எழலாம்.
11:36 வசனத்தில் உமது சமுதாயத்தில் ஒருவரும் இனிமேல் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைவனால் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் அடிப்படையிலேயே நூஹ் நபி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
To read this explanation in English click here.
(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 12, 2009, 5:17 AM Views: 552

