367. அச்சம் தீர வழி
367. அச்சம் தீர வழி
இவ்வசனங்களில் (28:31, 32) மூன்று அற்புதங்களைக் கூறிவிட்டு "இவ்விரண்டும் அற்புதங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
அச்சம் ஏற்படும் போது கைகளை ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்பது மூஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது என்பதால் தான் இரண்டு அற்புதங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அச்சம் ஏற்படும் போது இதயம் கடுமையாக வேலை செய்யும். படபடப்பு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளாமல் பறவை போல கைகளை ஒடுக்கி தொய்வாக வைத்துக் கொண்டால் இதயத்திற்கு அதிக இடம் கிடைக்கின்றது. நெருக்கடி இன்றி அது வேலை செய்யும். படபடப்பு குறைந்து அச்சம் விலகும்.
அது மட்டுமின்றி கைகளை ஒடுக்கிக் கொள்ளும் போது யாரோ நம்மை அரவணைப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு மேலும் சகஜ நிலைக்கு நம்மைக் கொண்டு வரும்.
இந்த மாபெரும் அறிவியல் உண்மையைத் தான் இவ்வசனம் கூறுகிறது.
To read this explanation in English click here.
(10 வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)
Published on: July 12, 2009, 5:11 AM Views: 578

