364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருண

364. களங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி அவர்களின் மனைவியின் மீது சுமத்தப்பட்ட களங்கமாகும்.
இவ்வாறு அவதூறு கூறியவர்களில் மிஸ்தஹ் என்பார் முக்கியப் பங்கு வகித்தார். அவருக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் உதவிகள் செய்து வந்தனர்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டது அவதூறு தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின் 'இனி மேல் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன்' என்று அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தார்கள். தமது மகள் மீது களங்கம் சுமத்தியவர்களுக்கு உதவ அவர்களின் உள்ளம் இடம் தரவில்லை. (பார்க்க: புகாரி 2661, 4141, 4750, 6679).
நபிகள் நாயகம் (ஸல்) இறைத் தூதராக இல்லாமல் சாதாரண மனிதராக இருந்தி ருந்தால் இதை வரவேற்றிருப்பார்கள். தமது மனைவியின் மீது களங்கம் சுமத்தியவருக்குத் தொடர்ந்து உதவிகள் செய்ய அவர்களின் உள்ளம் இடம் தந்திருக்காது.
ஆனால் இவ்வசனத்தில் (24:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளுமான ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தியவர்களுக்குச் செய்து வந்த உதவிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்திருந்தாலும் அதை அமுல் படுத்த வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
குர்ஆன் நிச்சயமாக இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

11.07.2009. 19:37




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
85 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி