353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்

353. பெரு வெடிப்புக்குப் பின் புகை மூட்டம்

இவ்வசனத்தில் (41:11) வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது 21:30 வசனத்தில் கூறப்படும் நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்டதாகும். அதாவது, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சிறு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. திடீரென அது வெடித்துச் சிதறியதால் அதன் துகள்கள் புகை மண்டலமாகப் பிரபஞ்சம் முழுவதும் பரவியது. பின்னர், அந்தத் துகள்கள் ஆங்காங்கே ஒன்று திரண்டு சூரியனாகவும், இதர கோள்களாகவும், துணைக் கோள்களாகவும், விண்மீன்களாகவும் உருவாயின.

பெரு வெடிப்புக் கொள்கை என இன்றைய அறிவியல் உலகில் கூறப்படும் கோட்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறுகின்றது.

21:30 வசனத்தில் வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்து அதை நாமே பிளந்தெடுத்தோம் என்றும், இந்த 41:11 வசனத்தில், அதன் பின்னர் ஏற்பட்ட புகை மண்டலமும் அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் இன்றைய விஞ்ஞானிகள் கூறுவது போலவே திருக்குர்ஆன் கூறி, தன்னைத் தானே இறைவேதம் என நிரூபிக்கின்றது.

இது தொடர்பான 287வது குறிப்பையும் காண்க!

To read this explanation in English click here.

(10வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

Published on: July 12, 2009, 4:43 AM Views: 545

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top