339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக் கதை

339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக் கதைகள்

இந்த வசனத்திற்கு (38:44) பல்வேறு கதைகளை விளக்கவுரையாக எழுதி வைத்துள்ளனர்.
அய்யூப் நபி அவர்கள் தமது மனைவியை நூறு கசையடி அடிப்பதாக சத்தியம் செய்தார்கள் எனவும், அந்தச் சத்தியத்தை நிறைவேற்றும் முகமாக நூறு கிளைகளுடைய புல்லை எடுத்து அதனால் ஒரு முறை அடித்து சத்தியத்தை முழுமைப்படுத்துமாறு இறைவன் கூறுகிறான் என்றும் கதை அளந்துள்ளனர்.
அய்யூப் நபியவர்கள் இப்படிச் சத்தியம் செய்தார்கள் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை. இந்த வார்த்தையிலாவது இவ்வாறு கருதுவதற்கு இடமிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
இவ்வசனத்தில் மனைவியை அடிப்பீராக' என்று சொல்லப்படவில்லை. அடிப்பீராக என்று மட்டுமே கூறப் பட்டுள்ளது. ஒரு கைப்பிடிப் புல்லை எடுக்கும் போது அதில் நூறு கிளைகள் இருக்குமாறு எடுப்பீராக! என்றும் கூறப்படவில்லை.
நூறு முறை அடிப்பதாகச் சத்தியம் செய்தாலும் கூட அது போன்ற சத்தியங்களை நிறைவேற்றத் தேவை யில்லை என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் கற்பனைக் கதைகளின் அடிப்படையில் இதற்கு விளக்கமும் கூறியுள்ளனர்.
இந்த வசனத்தையும், இதற்கு முன்னுள்ள வசனங்களையும் சேர்த்துக் கவனிக்கும் போது அய்யூப் நபி அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் அவர்களுக்கு குணம் அளிப்பதற்காகச் சில ஏற்பாடுகளை அல்லாஹ் செய்கிறான். 'அய்யூப் நபி அவர்கள் தமது காலால் உதைத்து, குளிப்பதற்கும், குடிப்பதற்கும், தண்ணீரை உற்பத்தி செய்கிறார்கள். அந்தத் தண்ணீரைக் குடித்து, அதில் குளித்ததன் மூலம் அவர்கள் குணமடை கிறார்கள்' என்று கூறி விட்டு அந்தத் தொடரில் தான் 'ஒரு கைப்பிடி புல்லை எடுத்து அடிப்பீராக' என்று கூறுகிறான்.
எனவே அவருடைய நோய் தீர்ப்பதற்காக இறைவன் உற்பத்தி செய்த புல்லில் இருந்து ஒரு பிடியை எடுத்து அவர் தன் மீது அடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர மனைவியை அடிக்க வேண்டும் என்று கூறவில்லை.
சத்தியத்தை முறிக்காதீர் என்று ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். அவர் ஏதோவொரு நேர்ச்சை செய்திருக் கிறார்; சத்தியம் செய்திருக்கிறார். நோயாளி யாக இருந்ததால் செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாமல் இருந்திருக்கிறார். இப்போது குணமடைந்திருப்பதால் அதனை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கூறுகிறான். இரண்டும் தனித் தனிச் செய்திகள். ஒன்று அவர் குணமடைவதற்காகக் கூறப்படுகின்ற பரிகாரம்.
இன்னொன்று அவர் நோய் வாய்ப்பட்ட நேரத்தில் செய்த சத்தியத்தை நிறைவேற்ற வேண்டும் என நினைவுபடுத்துதல்.
இது தான் இந்த வார்த்தையிலிருந்து விளங்குகின்ற கருத்தாகும்.
இவ்வசனத்தில் அவரைப் பொறுமை யாளராகக் கண்டோம் என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். மனைவியை அடிப்பதாகச் சத்தியம் செய்த கட்டுக் கதையோ அவரைப் பொறுமை யற்றவராகச் சித்தரிக்கிறது.

11.07.2009. 18:50




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
33 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி